• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Enge Enadhu Kavithai - 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
sdgmVDeigjjgh.jpgIMG_20181226_232138.png
காலை விடிந்தது முதல் வெண்ணிலாவின் வீடே அன்று அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது.


வெண்ணிலாவைச் சூழ அவளது ஒட்டுமொத்தக் குடும்பத்தினரும் நின்று கேள்வியாகக் கேட்டுக் கொண்டிருக்க வெண்ணிலாவோ அமைதியாக தலை குனிந்த வண்ணம் மேகசின் படிப்பதில் மூழ்கி இருந்தாள்.


ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை எல்லாம் மறைந்து போக வெற்றி வெண்ணிலாவின் கையில் இருந்த மேகசினை பறிக்க சலிப்போடு அவனை நிமிர்ந்து வெண்ணிலா எதுவும் பேசாமல் எழுந்து கொள்ள அழகர் அவள் முன்னால் வந்து நின்றார்.


வெண்ணிலா அவரைப் பார்த்துக் கொண்டே
“இப்போ எதுக்கு எல்லோரும் என்னை ஏதோ கொலை பண்ண குற்றவாளியைப் பார்க்குற மாதிரி பார்க்குறீங்க???” என்று கேட்கவும்


“நீ என்ன பண்ணனு உனக்குத் தெரியாதா????” என்று வெற்றி கோபமாக கேட்டான்.


சிரித்துக் கொண்டே அவனருகில் வந்த வெண்ணிலா
“ஏன் இந்த விஷயம் ஆல்ரெடி நான் அறிவிச்சது தானே…இப்போ வந்து புதுசா கேட்குறீங்க….போய் வேலை இருந்தா அதை பாருங்க போங்க” என்று கூறினாலும் அவள் குரலில் இருந்த கலக்கம் மற்றவர்களுக்கு புரியாமல் இல்லை.


“நிலாம்மா நீ யோசிச்சு தான் இதெல்லாம் பண்ணுறியா??? இது உன் வாழ்க்கை விளையாட்டு இல்லமா….ப்ளீஸ் நிலா இப்போ கூட உன் முடிவை நீ மாத்திக்கலாம் கொஞ்சம் யோசிமா…” என்று அழகர் கூறவும்


சிறிது நேரம் யோசிப்பதைப் போல பாவனை செய்தவள்
“நான் நல்லா யோசிச்சுப் பார்த்துட்டேன்பா….நான் சூர்யாவை டிவோர்ஸ் பண்ணப் போறது உறுதிதான்…..நீங்க என்னதான் சொன்னாலும் நான் மாறப் போறது இல்ல…” என்று கூற


“நிலா…..” என்று கோபமாக சத்தமிட்டான் வெற்றி.


வெற்றியின் சத்தத்தில் நிலா மட்டுமின்றி சூழ நின்ற அனைவருமே திடுக்கிட்டு போயினர்.


கோபமாக பேசினாலாவது வெண்ணிலா சிறிது மனம் மாறலாம் என்று எண்ணிக் கொண்ட வெற்றி எப்படியாவது வெண்ணிலாவிற்கு அவள் ஆழ் மனதில் உள்ள எண்ணங்களை தடவை எழுப்ப வேண்டும் என்று நினைத்து கொண்டு கோபமாக அவள் முன்னால் வந்து நின்றான்.


“நீ உன் முடிவில் உறுதியாக இருந்தா இப்போ எங்க முடிவையும் கேட்டுக்கோ….பெரியவங்க பேச்சை மதிக்காம நீ உன் இஷ்டப்படி தான் இருப்பேன்னு பிடிவாதமா இருந்தா உனக்கு இந்த வீட்டில் இனி இடம் இல்ல…நீ உன் இஷ்டப்படி என்ன வேணா பண்ணு…ஆனா அதை இங்க வைச்சு பண்ணதே…எல்லோரோட சந்தோஷத்தையும் இல்லாமல் ஆக்கி தான் உனக்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்னா நீ தாராளமாக என்ன வேணா பண்ணிக்கோ....இப்போ நீ இங்க இருந்து போகலாம்” என்று வெற்றி கூறவும்


“வெற்றி….”
என்று அனைவரும் அதிர்ச்சியாகி நின்றனர்.


“வெற்றி கொஞ்சம் பொறுமையாக இருப்பா….நீயும் அவளுக்கு மேலே பேசிட்டு இருக்கியே…எதுவாக இருந்தாலும் பேசலாம்....அதை விட்டுட்டு வீட்டை விட்டு வெளியே போக சொல்றதெல்லாம் சரி இல்லை வெற்றி....என்ன இருந்தாலும் அவ உன் தங்கச்சி....” என்று ஆண்டாள் வெற்றியை சமாதானப் படுத்த முயல அவனோ வெண்ணிலாவை முறைத்துக் கொண்டு நின்றான்.


“தங்கச்சிங்குற ஒரே காரணத்துக்காக தான் இவ்வளவு பொறுமையாக இருக்கேன்....இல்லேனா இங்க நடக்குறதே வேற.....நாம எல்லாரும் என்னதான் காட்டுக் கத்து கத்தினாலும் அவ புத்திக்கு ஏறாதுமா….நான் புடிச்ச முயலுக்கு மூணு கால் தான்னு நிப்பா….இப்படியே பேசிட்டே நின்னா சரி வராது..” என்ற வெற்றி வெண்ணிலாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு செல்ல


“லூசாட்டம் நடந்துக்காம கையை விடு வெற்றி….” என்று நிலா தன் கையை விடுவித்து கொள்ள எவ்வளவு முயன்றும் அவள் கூறியதை அவன் காதில் வாங்கவே இல்லை.


"எப்படியாவது உன் மனசுல இருக்குற உண்மையான எண்ணங்களை உனக்கு புரிய வைச்சே ஆகணும் நிலா....ஐ யம் ஸாரி...." என்று மனதிற்குள் வெண்ணிலாவிடம் மன்னிப்பு கேட்டவனாக அவள் கை பற்றி இழுத்து சென்றான் வெற்றி.


வெண்ணிலாவை வாசல் பக்கமாக வெற்றி இழுத்து செல்ல அவனின் பின்னால் ஆண்டாள், அழகர் மற்றும் அபிநயா
"அவளை விடு வெற்றி....." என்று சத்தமிட்ட வண்ணம் ஓட்டமும் நடையுமாக பின் தொடர்ந்து வந்தனர்.


வெண்ணிலா வெற்றியின் முன்னால் வந்து தன்னால் முடிந்த மட்டும் பலம் கொண்டு வெற்றியின் கையில் இருந்து தன் கையை உருவிக் கொள்ள சமநிலை தடுமாறி வெண்ணிலா பின்னோக்கி வீழ்ந்தாள்.


"நிலா....." என்று எல்லோரும் அதிர்ச்சியில் சத்தமிட அவளை கீழே விழாமல் தாங்கிப் பிடித்தவாறு வந்து நின்றான் சூர்யா.


"சூர்யா....." என்று அதிர்ச்சியாக வெண்ணிலா அவனைப் பார்க்க அவளை தூக்கி நிறுத்தி தன் தோளோடு சேர்த்து அணைத்தவாறு வெற்றியை நோக்கி வந்தான் சூர்யா.


"என்ன பண்ணிட்டு இருக்க வெற்றி நீ??? என்னதான் பிரச்சினை இருந்தாலும் இப்படியா நடந்துப்பாங்க??? அவ தான் சரியாக முடிவெடுக்கலனா நீயும் அதே தப்பை பண்ணுறியே வெற்றி...." என்று சூர்யா கேட்கவும் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான் வெற்றி.


வெண்ணிலா அவன் அணைப்பில் இருந்து விலகி நிற்கவும் அவள் புறம் திரும்பிய சூர்யா
"உனக்கு என் கிட்ட இருந்து என்ன வேணும்??? டிவோர்ஸ் தானே....சரி...." என்று கூறியவன் தன் கையில் இருந்த டிவோர்ஸ் பேப்பரில் கையெழுத்து இட அனைவரும் அதிர்ச்சியடைந்து போய் அவனைப் பார்த்து கொண்டிருந்தனர்.


"சூர்யா என்னடா பண்ற நீ???" என்று அபிநயா கேட்கவும் அவளை பார்த்து விரக்தியாக ஒரு புன்னகை சிந்தியவன் வெண்ணிலாவிடம் அந்த பேப்பரை நீட்டினான்.


வெண்ணிலா திகைத்துப் போய் அவனைப் பார்த்து வண்ணம் நிற்க அவள் கையில் அந்த பேப்பரை திணித்தவன்
"நான் வரேன் அபி, வெற்றி.....ஸாரி அத்தை....ஸாரி மாமா.....உங்க எல்லோரையும் நான் கஷ்டப்படுத்தி இருந்தா தயவு செய்து என்னை மன்னிச்சுக்கோங்க....." என்று விட்டு சென்று விட அந்த இடமே நிசப்தத்தில் உறைந்து போய் இருந்தது.


ஆண்டாள் வாயை மூடிக்கொண்டு அமைதியாக கண்ணீர் வடிக்க அழகர் அவரை அழைத்து கொண்டு தங்கள் அறைக்குள் நுழைந்து கொண்டார்.


வெற்றி வெண்ணிலாவின் அருகில் வந்து
"நீ நினைச்சதை சாதிச்சுட்ட....ஆனா இப்போ கூட நீ தோற்று போய் தான் நிற்குற....சந்தோஷமாக இரும்மா....நான் உன்னை வீட்டை விட்டு அனுப்பப் போறேன்னு சொன்னது கூட உன் மனசுல இருக்குற விஷயங்களை உனக்கு புரிய வைக்கணும்னு தான்....ஆனா இப்போ எல்லாம் முடிஞ்சு போச்சு...." என்று விட்டு சென்று விட அபிநயா யாருக்கு துணையாக பேசுவது எனப் புரியாமல் தவித்துக் கொண்டு நின்றாள்.


வெண்ணிலாவின் அருகில் வந்து அவள் தோள் மீது அபிநயா கை வைக்க அவள் மேல் சாய்ந்து கதறி அழுதாள் வெண்ணிலா.


"ஏன் எல்லோரும் என்னையே தப்பு சொல்றீங்க??? என் மனசுல என்ன இருக்குன்னு யாராவது கொஞ்சமாவது கேட்டீங்களா??? ஆளாளுக்கு பேசிட்டே போறாங்க....நான் சூர்யாவை கோபப்படுத்திப் பார்க்கணும்னு தான் இவ்வளவு பண்ணேன்....ஆனா டிவோர்ஸ் பேப்பரில் சூர்யா சைன் போடுவான்னு நான் நினைக்கல அபி....வழக்கம் போல வந்து திட்டிட்டுப் போவான்னு தான் நினைச்சேன்....ஆனா அவன் நான் வேணாம்னே முடிவெடுத்துட்டான்....என்ன பண்ணுறதுனே தெரியல அபி....நான் தான் எல்லா தப்பும் பண்ணுறேனா....சூர்யா பண்ணுறது எல்லாமே சரியா??? " என்று சிறு குழந்தை போல அழுது கொண்டிருந்த வெண்ணிலாவை பார்த்து அபிநயாவிற்கு என்ன சொல்வது என்று புரியவில்லை.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
"அம்மா..." என்று அழைத்துக் கொண்டு வைபவ் வீட்டிற்குள் வரவும் அவசரமாக எழுந்து தன் கண்களைத் துடைத்துக் கொண்டு தன்னறையை நோக்கிச் சென்றாள் வெண்ணிலா.


வைபவ் ஓடி வந்து அபிநயாவின் முன்னால் நிற்க தற்காலிகமாக தன் சிந்தனையிலிருந்து விடுபட்ட அபிநயா வைபவை பார்த்து புன்னகைத்தாள்.


“தாத்தா, பாட்டி எல்லாம் எங்கம்மா???” என்று வைபவ் கேட்கவும்


“அவங்க ரூம்ல ரெஸ்ட் எடுத்துட்டு இருக்காங்க…நீ போய் கை,கால் எல்லாம் கழுவிட்டு வா….சுடச்சுட டிபன் சாப்பிடலாம்…” என்று அபிநயா கூற


“ஓகே மா….டன்....” என்று விட்டு வைபவ் அவர்களது அறையை நோக்கிச் சென்றான்.


அபிநயாவின் கைகள் வேலை செய்வதில் மூழ்கி இருந்தாலும் மனம் முழுவதும் சூர்யா மற்றும் வெண்ணிலாவைப் பற்றியே சுற்றி வந்தது.


“இவங்க இரண்டு பேரும் ஒருத்தொருக்கொருத்தர் மனசு நிறைய ஆசையை வைச்சுட்டு காட்டிக்காம தங்களையே ஏமாத்திட்டு இருக்காங்களே…..எப்போதான் இவங்க இரண்டு பேரும் வளரப் போறாங்களோ தெரியல…கண்டிப்பாக அவசரப்பட்டு நிலா டிவோர்ஸ் பேப்பரில் சைன் போட்டுருவா….ஏதாவது பண்ணி இரண்டு பேரையும் சேர்த்து வைச்சே ஆகணுமே….” என்று யோசித்துக் கொண்டு நிற்கையில்


“அம்மா டிபன்….” என்றவாறு வந்து நின்றான் வைபவ்.


வீட்டிற்கு திரும்பச் செல்லலாம் என்று நினைத்த சூர்யா தற்போது இருக்கும் மனநிலையில் வீட்டிற்கு செல்ல முடியாது எனத் தோணவே ஆபிஸ் நோக்கிச் சென்றான்.


மனம் முழுவதும் சோர்ந்து போய் இருக்க சோர்வாக தன் கேபினுக்குள் நுழைந்து கொண்டான்.


காலையில் டிவோர்ஸ் பேப்பரை பார்த்தது முதல் சூர்யா மனதளவில் உடைந்து போய் இருந்தான்.


வெண்ணிலா இது நாள் வரை தன்னைக் கோபப்படுத்திப் பார்க்கவே இவ்வாறெல்லாம் நடந்து கொள்கிறாள் என்று நினைத்துக் கொண்டிருந்த சூர்யாவின் எண்ணங்கள் எல்லாம் இன்று ஒட்டுமொத்தமாக தவிடு பொடியாகி இருந்தது.


“ஐசும்மா…நீ கூட என்னை ஏமாத்திட்டுப் போகப் போறியா???” என்று அவனது மனம் ஊமையாக அழுதது.


“ஐசுகிட்ட கண்டிப்பாக நான் பேசியே ஆகணும்….” என்று முடிவெடுத்தவனாக எழுந்த சூர்யா வெண்ணிலாவின் வீட்டை நோக்கிப் புறப்பட்டான்.


வெகு நாட்களுக்குப் பிறகு அங்கு செல்வதனால் சிறிது தயக்கமாக இருந்தாலும் இனியும் தாமதிக்கக்கூடாது என முடிவெடுத்தவனாக வீட்டினுள் நழைந்தான் சூர்யா.


ஆனால் அங்கே வெற்றியின் கோபமான பேச்சைக் கேட்டு வாசலிலேயே சூர்யா தயங்கி நின்றான்.


நிலைமை விபரீதமாக செல்வதை உணர்ந்த சூர்யா அவசரமாக உள்ளே நுழையவும் வெண்ணிலா வந்து அவன் மேல் விழவும் சரியாக இருந்தது.


அதற்கு மேல் தானும் கோபமாக பேசினால் வெண்ணிலா வருத்தம் கொள்வாள் என்று எண்ணிய சூர்யா
“வெண்ணிலா கேட்டது இந்த டிவோர்ஸ் தானே….அவள் விருப்பப்படியே நடக்கட்டும்...அவளுக்காகவது ஆசைப்பட்டது கிடைக்கட்டும்....” என்று முடிவெடுத்து விட்டு அவள் முன்னாலேயே அந்த பேப்பரில் கையெழுத்து இட்டு கொடுத்து விட்டு சிறிது கூட மன நிம்மதியின்றி அங்கிருந்து வெளியேறினான்.


தன் கேபினில் கண் மூடி அமர்ந்திருந்த சூர்யாவின் முன்னால் வந்து நின்ற ராபர்ட் அவனது சோர்ந்து போயிருந்த தோற்றத்தை பார்த்து எதுவும் பேசாமல் அமைதியாக வெளியேறி சென்றான்.


வெண்ணிலாவோ அவளது அறையில் சூர்யா தந்து விட்டு சென்ற அந்த பேப்பரையே வெறித்துப் பார்த்து கொண்டிருந்தாள்.


"நான் நினைச்சதை நடத்திட்டேன்....ஆனால் ஏன் என்னால சந்தோஷமாக இருக்க முடியல....அபி கிட்ட வேற என்னென்னவோ சொல்லிட்டேன்....அவங்க என்ன நினைச்சாங்களோ தெரியல....." என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் அந்த பேப்பரில் இருந்த சூர்யாவின் கையெழுத்தை கண் இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தாள்.


கண்களில் நீர் கோர்க்க அதில் இருந்த சூர்யாவின் பெயரை வருடிக் கொடுத்தவள் அருகில் மேஜை மேல் இருந்த பேனையை எடுத்து நடுங்கும் விரல்களோடு அந்த டிவோர்ஸ் பேப்பரில் கையெழுத்து இட்டவள் அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் வாய் விட்டு கதறி அழுதாள்.


வெண்ணிலாவை தேடி வந்த அபிநயா அவளது அழுகை சத்தம் கேட்டு வேகமாக அவளருகில் ஓடி வந்தாள்.


"நிலா என்னடா இதெல்லாம்????" என்று அபிநயா கேட்கவும்


நிமிர்ந்து அவளைப் பார்த்த வெண்ணிலா
"நான் சைன் பண்ணிட்டேன் அபி....சைன் பண்ணிட்டேன்....." என்று விட்டு மீண்டும் தன் முகத்தை மூடிக்கொண்டு அழ


"அட மக்குப் பெண்ணே......" என்று அவளை பரிதாபமாக பார்த்தாள் வெண்ணிலா.


"மனசுல ஆசை இருக்கும் போது வீணா வறட்டு பிடிவாதம் பிடிச்சுக்கிட்டு இப்படி தன்னையே வருத்திக்குறாளே.....கண்டிப்பாக ஏதாவது பண்ணியே ஆகணும்...." என்று முடிவெடுத்து கொண்ட அபிநயா வெண்ணிலாவின் முகத்தை நிமிர்த்தி அவள் கண்களை துடைத்து விட்டாள்.


"இப்போ என்ன ஆச்சு??? உனக்கு இஷ்டம் இல்லேனா இந்த பேப்பரை வக்கீல் கிட்ட கொடுக்காதே.....நீயும், சூர்யாவும் மனசு விட்டு பேசுங்க....எல்லாம் சரியாகிவிடும்....." என்று அபிநயா கூறவும்


தலை குனிந்து கொண்ட வெண்ணிலா
"இல்ல அண்ணி....அவரே என்னை வேண்டாம்னு சைன் பண்ணிட்டாரே...விட்டுடலாம் அண்ணி.....நான் இதை வக்கீல் கிட்ட கொடுத்துட்டு வந்துடுறேன்....." என்று விட்டு எழுந்து கொள்ள


"ஐயோ நிலா....கொஞ்சம் நான் சொல்றதைக் கேளுமா...." என்று அபிநயா கூற அவளை திரும்பி பார்த்தாள் வெண்ணிலா.


"முதல்ல நீ உன்னை புரிஞ்சுக்க நிலா.....காலையில் கண்டிப்பாக டிவோர்ஸ் பண்ண போறேன்னு சொன்னவ இப்போ சைன் வைச்சதுக்கே இப்படி கிடந்து கஷ்டப்படுற....உன் மனசுல என்ன இருக்குன்னு இன்னுமா உனக்கு புரியல????" என்று அபிநயா கேட்க


இல்லை என்பது போல தலை அசைத்தவள்
"இதோட எல்லாம் சரியாக மாறிடும் அண்ணி...." என்று விட்டு அறையில் இருந்து வெளியேறி சென்றாள்.


"நிலா.....நிலா....." என்று அபிநயா அழைத்தும் திரும்பாமல் வீட்டை விட்டு வெளியே வந்த வெண்ணிலா தன் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.


"இவ எப்போதான் அவ மனசுல இருக்குறதை வெளிப்படையாக ஏத்துப்பா???? ஐயோ ராமா.....எனக்கு இப்போவே கண்ணைக் கட்டுதே....." என்று சலித்து கொண்ட அபிநயா வெற்றியை தேடி சென்றாள்.


காரில் சென்று கொண்டிருந்த வெண்ணிலா பல்வேறு சிந்தனைகளில் மூழ்கி போயிருந்தாள்.


எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்தே யோசிக்கிறேன்
அதை தவனை முறையில் நேசிக்கிறேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறேன்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்தே யோசிக்கிறேன்
அதை தவனை முறையில் நேசிக்கிறேன்


கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன்
கேட்பதை அவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே அவன்
ஊதும் ரகசியம் புரியவில்லை
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்


புல்லாங்குழலே பூங்குழலே
நீயும் நானும் ஒரு ஜாதி
புல்லாங்குழலே பூங்குழலே
நீயும் நானும் ஒரு ஜாதி


உள்ளே உறங்கும் ஏக்கத்திலே
உனக்கும் எனக்கும் சரிபாதி


கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்


இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான்
என்றோ என்றோ இறந்திருப்பேன்


எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்


உறக்கம் இல்லா முன்னிரவில் என்
உள் மனதில் ஒரு மாறுதலா
உறக்கம் இல்லா முன்னிரவில் என்
உள் மனதில் ஒரு மாறுதலா


இரக்கம் இல்லா இரவுகளில் இது
எவனோ அனுப்பும் ஆறுதலா


எந்தன் சோகம் தீர்வதற்கு
இதுபோல் மருந்து பெரிதில்லையே
அந்தக் குழலைப்போல் அழுவதற்கு
அத்தனை கண்கள் எனக்கில்லையே

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

"நான் தான் டிவோர்ஸ் வேணும்னு அப்ளை பண்ணேன்....இப்போ டிவோர்ஸ் கிடைக்கப் போகுது....அப்புறம் ஏன் எனக்கு கவலையாக இருக்கு??? நிலா கூல்.....யார் சொல்றதையும் கேட்காதே.....உன் மனசுல தோணுறத பண்ணு...." என்று தனக்குத்தானே கூறி கொண்டவள் வக்கீல் ஆபீஸின் முன்னால் தன் காரை நிறுத்தி விட்டு வக்கீலைக் காண சென்றாள்........
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top