• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Ennai Ko(Ve)llum Vennilavei - 33

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
வணக்கம் வந்தனம் நமஸ்தே நமஸ்கார்...

காலை வணக்கம் மக்களே...

உங்களது கருத்துக்கள் படித்து எப்போதையும் போல மீ ஹாப்பி ஹாப்பி ஹாப்பியோ ஹாப்பி... அந்த சந்தோசத்தை அப்படியே உங்க கிட்ட பகிர்ந்துக்க அடுத்த அத்தியாயம் போடுறேன் மக்காஸ்..

போன அத்தியாயத்திற்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்...உங்க எல்லோருடைய கருத்துக்களுக்கும் லைக் போட்டேன் பட் பதில் கொடுக்கல தப்பா நினைக்காதீங்க மக்காஸ்...

கதை முடிந்ததும் அப்படியே பொறுமையா உட்கார்ந்து உங்க கூட கதை பேசலாம்னு இருக்கேன்...

உண்மையா மக்கா நாங்க எழுதும் போது பார்க்காத ஒரு கோணத்தை உங்க கருத்துக்கள் மூலமா தான் பார்க்க முடியுது அதனால மட்டும் உங்க கிட்ட இரண்டு வார்த்தையில் சொல்லாம உங்களுக்கு என்ன தோணுதோ அதைச் சொல்லுங்கன்னு சொல்றேன்..

அப்புறம் என்னைவிட சின்ன பெண் சிலபேர் இங்கே இருப்பதாய் தவறான வதந்திகளை பரப்புவோருக்கு மதியின் வழியில் தண்டனைக் கொடுக்கப்படும் என்பதை உறுதியாகச் சொல்லிக் கொள்(ல்)கிறேன் மக்காஸ்...

போய் மதி ஆதியைப் பார்த்துட்டு ஓடி வாங்க..மீ வெய்ட்டிங்..

இப்படிக்கு
உங்க குயந்த புள்ள
 




Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli


~33~

ஆதிக் உண்டு முடித்து கட்டிலின் ஒருபுறத்தில் படுத்துக் கொள்ள, பாத்திரங்களை டீபாயின் ஒரு ஓரத்தில் எடுத்து வைத்தவளுக்குத் தூக்கம் தூரப் போயிருந்தது..

தனது கால் மாட்டில் நின்று எதையோ தீவிரமாய் யோசிக்கும் மதியைக் கண்டவன், “ஏன் டி இல்லாத மூளைக்கு வேலைக் கொடுக்க..?” என இலகுவாய் வினவ,

மூளை இல்லை எனச் சொல்லும் ஆதிக்கை முறைத்தவள், “வாய் அடங்குதா பாரேன்..” சன்னமாய் முணுமுணுத்தவள் அங்கிருந்த சாய்விருக்கையில் அமர்ந்துவிட்டாள்..

பல நிமிடங்களை மௌனம் வாரி அணைத்துக் கொள்ள, அவளது தீவிர சிந்தனையைக் கவனித்தவன், தனது குரலை கனைத்து, “என்ன மதி நாளைக்கே திரும்ப கலீபோர்னியா போய்டலாம்னு யோசிச்சிட்டு இருக்கியா..?” எனச் சரியாக கேட்டு அவளது பிபியை எகிற வைத்தான் ஆதிக் வர்மன்..

அவன் கேட்டக் கேள்விக்கு அவள் கொடுத்த உச்சபட்ச அதிர்ச்சியில் இருந்தே அவனுக்குப் புரிந்தது இதைத் தான் யோசித்துக் கொண்டிருக்கிறாள் என...எங்கே போய்விடுவாளோ? என்று அதிர்ந்த மனதை அடக்கியவன்..

“மதி, இங்க இருந்து அதாவது இந்த வீட்டுல இருந்தோ என்னைவிட்டோ இனி ஒருதரம் போனா அப்படியே போய்ட வேண்டியது தான்...பிகாஸ் முட்டாள் தனமா நீ பண்ணிட்டு இருக்கிறதுக்கெல்லாம் இனி நான் அனுபவிக்கனும்னு எந்த அவசியமும் இல்லை..சோ தாராளமா இங்க இருந்து போகும் முன்ன எனக்கு சில டாக்குமென்ட்ஸ் சைன் பண்ணி கொடுத்துட்டு போ..” என்றவனின் கூற்று புரியாமல் விழித்தவள்..

“எதுக்கு சைன்..?” என மட்டும் கேட்க

“ஆமா...கல்யாணமாகி ஏழு மாசம் ஆச்சு..இப்போ வரைக்கும் ஒண்ணும் இல்ல..இதுல நீ மறுபடியும் ஓடிப்போய் எத்தனை வருஷம் கழிச்சு வருவியோ அதுவரை கன்னி கழியாம இருப்பாங்களா..?” அவனது பேச்சில் இலேசாகச் சிவந்த முகத்தை இருள் மறைத்துக் கொள்ள..

“ஆதி, கன்னி கழியாம’னா என்ன? எனக்கு புரியல..?” அவளது சந்தேகத்தில் தலையில் அடித்துக் கொண்டவன்

“இதுவே தெரியலையா..? போச்சு போ உனக்கு ஆரம்பத்துல இருந்தே பாடம் நடத்தனும் போல...ஆமா நீ படிப்ஸ்ல எப்படி..?” எனக் கேட்க

“ஹி ஹி..அதெல்லாம் இப்போ எதுக்கு மாமா..நாம வேற ஏதாச்சும் பேசலாமே…” அவளின் சமாளிப்பில் இதழ் வளையச் சிரித்தவன்

“ஏன் டி...படிக்கவே மாட்டியா..?”

“படிப்பேன்..ஆனா உன் அளவுக்கு இல்ல..” என்றவள் முட்டை கட்டி அமர்ந்து கொண்டாள்..

“ம்ம்ம்….சரி..சொல்லு நாளைக்கு எப்போ போற..?” ‘இவனுக்கு என்ன இவ்வளவு அவசரம்?’கேள்வியை மனதில் கேட்டு

“என்னை எதுக்கு இப்போ விரட்டுறதுலையே குறியா இருக்க..? நான் போனாலும் உன்கிட்ட சொல்லிட்டு போக மாட்டேன்...” என்றவள் சிறுபிள்ளையாய் முகத்தைத் திருப்பி அமர்ந்து கொண்டாள்..

அவளது செய்கையை ரசித்தவன், “நீ மறுபடியும் ஓடிப்போனா லீனாவ இங்க தங்க வைக்கலாம்னு நினைச்சேன்…” என்றவன் சொல்லி முடிக்கவில்லை, அவனது அருகே வேகமாய் வந்தவள்,

“ஓஹ் உனக்கு இந்த ஆசை வேற இருக்கா..அந்த கோனாவை நாளைக்கு என்ன பண்ணுறேன்னு பாரு..?” தனக்கு அருகே நின்று சபதம் எடுத்து கொண்டிருப்பவளின் கையை எட்டிப் பிடித்து இழுத்து கட்டிலில் படுக்க வைத்தவன்

“இப்போ தூங்கு...மிச்ச சண்டையை காலையில் பார்த்து கொள்ளலாம்..” அவளுக்கு மட்டுமே கேட்குமாறு சொன்னவன், தனது கைவளைவிற்குள் அவளை வைத்துக் கொண்டு தூங்க,

“ஆதிக், எனக்கு இப்படி தூங்குனா தூக்கம் வராது..” என்றவள் சொன்னதும் கண் திறந்துபார்த்தவன்..

“இனி நீ எப்பவும் இப்படி தான் தூங்கனும் சோ பழகிக்கோ..” என்றவன் வாக்காய் படுத்து கொள்ள, அடுத்த சில நிமிடங்களிலே சீரான சுவாசத்தில் தூங்கியிருந்தாள் மதியழகி..

மதியழகி தூங்கியதும் தன் கைவளைவில் இருந்தவளைத் தலையணைக்கு இடம் மாற்றியவன், பால்கனிக்குச் சென்று அமர்ந்துவிட்டான்..

அவளிடம் கோபமாக பேசிவிட்டு பக்கத்து அறைக்குச் சென்றவனின் பல மணி நேர யோசனையின் முடிவில் ஒன்று மட்டும் அவனுக்குத் தெளிவாய் புரிந்தது மதியை விட்டு அவனால் விலக முடியாது என... அவளை மன்னித்துவிட்டோமா என யோசித்தவனுக்கு விடைக் கிடைக்கவில்லை என்றாலும் அவளைவிட முடியாது என்பதில் மட்டும் தெளிவாய் இருந்தான்..

மதிக்கு தன்னைப் பிடிக்கும் எனத் தெரிந்து வைத்திருப்பவனால், ஒரு கணவனாய் தன்னைப் பிடிக்குமா என்ற கேள்விக்கான விடையும் அவனிடம் இல்லை...மனைவி என்பதைத் தாண்டி ஏதோ ஒரு ஈர்ப்பு அவளிடம் அவனுக்கு இருந்தது தான் உண்மை..

அவள் இல்லாத அந்த ஆறு மாதத்தில் அவன் அவள்மீது கொண்டிருந்த சினத்தை யோசித்தவனுக்கு, அவள் வந்த இரண்டு நாட்களில் காணாமல் போன கோபத்தை நினைத்தவனுக்குக் கூட ஆச்சர்யமாகத் தான் இருந்தது..

பலமுறை யோசித்து பின் முடிவாய், “வாழ்க்கையை அதன் போக்கில் அவளுடன் வாழ வேண்டும்” என்பதை உருப்போட்டுக் கொண்டவன், மதியைத் தேடி வரும் போது தான் அவள் தூக்கத்தில் உளறியது..

பால்கனியில் அமர்ந்து மதியை சந்தித்த நாளில் இருந்து அவள் பேசிய அனைத்தையும், ஏன் நேற்று தன் கைவளைவுக்குள் கண் மூடி நின்றவளின் சம்மதத்தில் இருந்தே அவனுக்குப் புரிந்தது அவள் இனி இங்கிருந்து போக மாட்டாள் என்பது..

பல சிந்தனைகள் சில தீர்வுகளின் முடிவில் ஆதியின் தூக்கம் பால்கனியில் தொடர, அதிகாலை ஐந்தரை மணிக்கு அறைத் தட்டும் சத்தம் கேட்டு அடித்துப் பிடித்து எழுந்தான்…

வெளியே வேணி, மதியை அழைக்கும் சத்தம் கேட்க, கட்டிலில் தலையணையை கட்டிப்பிடித்துத் தூங்கும் மதியைத் தட்டியெழுப்பியவன், “வெளிய அம்மா கூப்பிடுறாங்க பாரு..” என்றான்..

அவர் எதற்கு அழைக்கிறார் எனத் தெரிந்து கொண்டவள், காலையிலேயே திருட்டுப் பார்வை பார்த்து வைக்க, “அம்மா இந்தா வரா..”அன்னைக்கு உள்ளிருந்தே பதில் கொடுத்தவன்

“என்ன டி பண்ணி வச்சிருக்க..?” தலையை தேய்த்துக் கொண்டே கேட்கும் ஆதிக்கிடம்

“நான் ஒண்ணுமே பண்ணலையே…” என்க

“அப்புறம் எதுக்கு இந்தா முழி முழிக்குற..?” என்றவனிடம் எப்படி சொல்வாள் அவள் வாரத்தில் ஒருமுறை தான் தலைக்குக் குளிப்பாள் என்ற உண்மையை..
 




Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
பதிலேதும் சொல்லாமல் நிற்பவளை முறைத்தவன், “ஏன் டி வாயில என்ன வச்சிருக்க..சொல்லி தான் தொலையேன்…” என்க

அவனது அதட்டலில் திடுக்கிட்டு, “ஆதி, நான் சொல்லுவேன் அப்புறம் நீ என்னை எதுவும் சொல்லக் கூடாது…” அவளின் பேரம் பேசுதலில் புருவம் சுருக்கியவன்

“எங்க அம்மாவுக்கு வேற ஏதாச்சும் கலந்து கொடுத்துட்டியா..?” அதிர்ச்சியாய் அவன் வினவ..

“உங்க அம்மா தான் சிக்க மாட்டுக்கே..அதெல்லாம் இல்ல…” என்றவள் யோசிக்க

“நேத்து நான் குடிச்சத மட்டும் எங்க அம்மா குடிச்சிருந்தா என்ன ஆகிருக்கும்…?” சின்ன கோபத்தில் கேட்டபவனைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டவள்,

“நீ லூசு தான் ஆதி...உங்க அம்மாவா இருந்தா முதல் சிப்’லயே துப்பிட்டு வேற காபி போட்டு குடிச்சிருப்பாங்க...நீதான் ஏதோ பெரிய இவன் மாதிரி முழுசையும் குடிச்சி பாத்ரூமை நாறடிச்சுட்ட…” ஒற்றைக் கையை இடுப்பில் வைத்து மறுகைக் கொண்டு தலையில் அடித்தவளின் பிடதியில் அடித்தவன்

“ஏன் டி சொல்ல மாட்ட...உன்னை போட்டுக் கொடுக்காம விட்டேன் பாரு..எனக்கு இன்னமும் வேணும்..”என்றவனுக்கு அயர்வாய் இருந்தது போல கட்டிலில் சாய்ந்து அமர்ந்துவிட, இப்போதும் கையைப் பிசைந்து நின்றாளே தவிர வேணி அழைப்பதற்கான காரணத்தை மட்டும் சொல்லவேயில்லை..

“சரி டி நீ சொல்லுற மாதிரி விளக்கு பொருத்துறதுக்கும் இப்படி முழிச்சிட்டு நிக்குறதுக்கு என்ன சம்பந்தம்னு தெரில..நான் தூங்குறேன்..நீ எங்க அம்மாவையே சமாளிச்சிக்கோ..” அவன் கண்களை மூடி தூங்குவதைப் போல பாவனைச் செய்ய, தனது அலைபேசியில் இருந்து அன்னைக்கு அழைப்புவிடுத்தவள், தன்னைக்கே கேட்காத டோனில் ஏதோ பேசி பின் அலைபேசியை அவனிடம் கொடுத்தாள்…

அவளிடமிருந்து போனை வாங்கியவன் லைனில் குழலி இருப்பதைக் கண்டு, “சொல்லுங்க அத்தை..நல்லாயிருக்கீங்களா..?” நலம் விசாரித்து பின்

“சொல்லுங்க அத்தை..” என விஷயத்துக்கு வர, அதற்குள் மதி பாத்ரூமிற்குள் சென்றிருந்தாள்..

“தம்பி, மதி உங்க கிட்டயாயிருக்கா..?”

“இல்லையே அத்தை..பாத்ரூம் போயிட்டா..ஏன்..?” அவனது பதிலுக்கு குழலி ஒரு பெருமூச்சை விடுத்து

“அந்தக் கொடுமைய ஏன் கேட்குறீங்க...அவா பார்க்க என்னை மாதிரி ஆனா குணத்துல அப்படியே உங்க மாமா மாதிரி தம்பி..”

“சரி..அதை எதுக்கு அத்தை இப்போ சொல்றீங்க…”

“இல்ல தம்பி, ரெண்டுக்குமே குளிக்க சோம்பேறித்தனம்..” சொல்லிமுடித்து குழலி அமைதியாகிவிட

“என்ன அத்தை சொன்னீங்க கேட்கல…” என்றவனுக்கு கேட்டது சரியா என்ற குழப்பம் மிஞ்சியிருக்க

“ஆமா தம்பி, உங்களுக்கு கேட்டது சரிதான்..இதுங்க ரெண்டுக்குமே தினமும் குளிக்கிறதுல என்ன பிரச்சனைனே தெரில...ஹாஸ்ப்பிட்டல் கூட கூட்டிப் போய் காமிச்சாச்சு..” என்றவர்..

வாரத்தில் ஒரு நாள் சண்டை போட்டு குளிக்க வைக்கும் அவரது வீரத்தைச் சொல்ல, வந்த சிரிப்பை அடக்கி போனை வைத்தவன் இப்போது வெடித்து சிரித்திருந்தான்..

உடல் சோர்வையும் ஒதுக்கி வைத்து, பாத்ரூம் கதவைத் தட்ட, அவனது சிரிப்பு சத்தம் கேட்டு அங்கே பதுங்கியிருந்தவளுக்கு இப்போது கதவ திறந்தா நக்கல் பண்ணுவானே என்ற தயக்கம் இருந்த போதும் வேறு வழியில்லாமல் கதவைத் திறந்தாள்..

“ஹா ஹா...ஹே பொண்டாட்டி…” அவனது சிரிப்பினூடே அழைத்த அழைப்பை ரசித்தவள், அமைதியாய் நிற்க,

“ஹே டம்மி பீஸு...ஹா ஹா..இதுக்கு தான் இந்த அலப்பறையா..?” என்றவனை முறைத்தவள்

“வேணாம் ஆதிக்...சிரிக்காத..” என்றவள் பாத்ரூம் வாசலிலே நிற்க,

“என்னது வேணாம்..காலையில ரூம்ல ஒரு பேட் ஸ்மெல் வரும் போதே நினைச்சேன்..ஹா ஹா..உங்க அப்பாவும் குளிக்க மாட்டாராமே...அத்தை எப்படி டி இருந்தாங்க பாவம் தான்…” பேச்சுக் கொடுத்துக் கொண்டே ஒவ்வொரு அடியாய் அவன் முன்னேற, அவனின் முன்னேறுதலில் பின்னேறினாள் மதியழகி..

“ஹே ரொம்ப பண்ணாத ஆதிக்..எனக்கு ஃபீவர் அதான் குளிக்கல..” என்றவள் இப்போது பாத்ரூம் சுவரில் மோதி நின்றாள்..

அவள் மோதி நின்றதும் ஸவரின் வால்வைத் திறந்து விட்டவன் பக்கத்தில் இருந்த தண்ணீர் பக்கெட்டை மொத்தமாய் தூக்கி அவள் மீது ஊற்றியவன், அவன் மீது தண்ணீர் படாதவாறு தள்ளி நின்று கொண்டான்..

மொத்தமாய் நனைந்தபின் முகத்தை கைகளால் துடைத்தவள், மூச்சை வேகமாய் இழுத்து விட, இவ்வளவு நேரம் விளையாட்டாய் பேசியவனுக்கு இப்போது நனைந்த இரவு உடையில் தெரிந்த அங்கங்களும், மூச்சை வேகமாய் இழுத்து விடுவதால் மேல் ஏறி இறங்கும் மார்பென அவனை உசுபேத்தி விட்டது..

கண்கள் பருகும் அங்கங்களுக்குத் தடை விதித்தவன், வேகமாய் அவ்விடத்தைவிட்டு அகன்று, “சீக்கிரம் வா மதி..” என்பதை மட்டும் உரைத்து பால்கனியில் தஞ்சம் புகுந்தான்..

அவன் விட்டுச் சென்ற பத்து நிமிடத்திலே குளித்து முடித்தவளுக்கு உடையில்லாதது நினைவுக்கு வர, அங்கிருந்த பூத்துவாலையை உடலில் சுற்றியவள், ஆதியிடம் உடை எடுத்துக் கேட்கலாம் எனத் தலையை மட்டும் வெளியே நீட்ட, யாருமில்லாத அறை அவளை வரவேற்றது..

“பாவி..பாவி இப்படி பண்ணிட்டானே..” அவன் ஜாகிங் சென்றுவிட்டான் என நினைத்து வாய்விட்டுத் திட்டியவள், ஆதிக்கின் கப்போர்ட்டில் அடுக்கி வைத்த தனது உடைமைகளில் ட்ரெஸை எடுக்க, இவளது சத்தம் கேட்டு அறைக்குள் திரும்பியவனுக்கு மதி நின்ற கோலம் திகைப்பை மட்டுமே வாரியிறைத்தது..

அவன் அதிர்ந்து நிற்க, உடையை எடுத்துக் கொண்டு திரும்பியவள் தன்பின்னே நிற்கும் ஆதியைத் தான் நிற்கும் கோலம் மறந்து முறைத்தவள், தங்தங்கென அவனுக்கு அருகே சென்று, “ஏன் ஆதி..இப்படி ஜில் தண்ணீல நிக்க வச்சுட்ட..?” என்றவளின் கேள்விக்கு பதில் வேண்டி அவன் முகம் பார்த்து நிற்க

ஆனால் அவனது பார்வையோ கழுத்தில் இருந்து மார்புக் குழியில் உருண்டு மறைந்த நீர்துளிகளிலே நிலைத்திருந்தது..

அவனது பார்வை போகும் இடத்தை கவனியாதவள், “நான் இங்க கேட்டுட்டே இருக்கேன் நீ எங்க பார்த்துட்டேயிருக்க..?”கோபம் போலும்கேட்டவள் அவன் பார்வை சென்ற திக்கை குனிந்து பார்க்க, இப்போது உரைத்தது தான் நிற்கும் நிலை…

கைகளில் இருந்த உடையை மார்போடு அணைத்தவள், அவனுக்கு முதுகைக் காட்டித் திரும்ப, அவளது விலகலை கை நீட்டி தடுத்தவன், பின்னிருந்து அவளை அணைக்க, சூடான அவனது தேகம் கொடுத்த கதகதப்பில் வேர்த்து போனது மதியழகிக்கு…

“விடு ஆதிக் அத்தை கூப்பிடுறாங்க..” என்றவளின் சத்தம் அவளது வாயிலே கரைந்து போக, மெதுவாய் தன்னை நோக்கித் திருப்பியவன் அவளது இடையில் ஒரு கையையும், ஈரம் சொட்டும் கூந்தலில் மறுகரத்தையும் வைத்தான்…

அவனது மென்மையான தொடுகையில் மெல்லிய உணர்வுகள் கிளர்ந்தெழ சிலையெனச் சமைந்தாள் மதியழகி..

அவளிடம் எதிர்ப்பில்லாமல் போனதும், இன்னும் அவளை நெருங்கியவன் அவளது கைகளில் இருந்த உடையைக் கட்டிலில் வாங்கிப் போட்டு காற்றில் மிதிந்தவளது கரங்களை தன்னைச் சுற்றிப் போட்டுக் கொண்டான்…

நெற்றி, இமைகள், மூக்கு என ஆள் காட்டி விரலால் தொட்டுப் பார்த்தவனின் விரல் நுனி இதழில் வட்டமிட, “அழகி…” என்றவனின் குரலில் இருந்த மயக்கத்தில் வைத்தக் கண் வாங்காமல் பார்த்திருந்தாள் மதியழகி…

அவளது பெரிய நயனங்களில் பார்வையைக் கலக்கவிட்டவன், விழி மொழியில் கண்களை மூடச் சொல்லி தொடரவா? எனக் கேட்டு வைக்க, வெட்கமும் தயக்கமும் பிடிவாதமும் போட்டி போட்டு வெளிப்படுத்திய கண்களுக்கு நேரதிராய் அழைப்பு விடுத்து மெல்லத் திறந்தது அவளது இதழ்கள்…

அவளது சம்மதம் புரிந்தவன் மீண்டும், அவளிடம் விழிகளை மூடச் சொல்ல, “முடியாது என்பதைப் போல சண்டித்தனம் செய்த அவளது பார்வையை உள்வாங்கியவன், நான் மூட வைக்கிறேன் என்று மறுவார்த்தை பேசியவனின் இதழ் எடுத்த அமுதத்தில் தானாய் அவள் விழிமூடி கைகள் அவனது முடியைக் நெரித்தது..

நிமிடம் மொத்தமும் முத்தத்தில் கரைய, இடையில் இருந்த கைகள் கொஞ்சம் மேலேறி அவளை உணரத் துடிக்க அவனது கைகளுக்கு கடிவாளமிடத் திறனில்லாமல் உருகிக் குலைந்தாள் மதி…

முத்தத்தில் குளிக்க வைத்தவன், அடுத்த கவியை படைக்க முற்படும் முன் அறைந்து தட்டப்பட்ட கதவின் சத்தத்தில் அடித்துப் பிடித்து விலகி நின்றனர் ஆதியும் மதியும்…

ஆதி மதியுடன் இணைவான்..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஆதிரா டியர்
 




Last edited:

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Ahaaa madhi???weekly once dhan kulippiya.. hahahaha...haiyo mudila..idhuve periya punishment dhan veetla ellarukum ...thaniya plan ellam podadha...
Aadhik romba romantic boy aittan...veni ma vera neram kaalam theriyama koopadraanga
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top