• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Ennai Ko(Ve)llum Vennilavei -34

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
ஹாய் ஹலோ...

மக்களே அடுத்த அத்தியாயம் போட்டாச்சு..படிச்சிட்டு வாங்கோ...உங்கள் ஆதரவுக்கு எப்போதையும் போல எக்கச்சக்க நன்றிகள்

மீ வெய்ட்டிங்....

இப்படிக்கு
உங்கள் குயந்தபுள்ள
 
Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
~34~

முத்தத்தில் திளைத்திருந்த இருவருமே, தட்டப்பட்ட கதவின் ஓசையில் எதிர் எதிர்த் திசைக்கு ஓட, அடுத்தடுத்து விடாமல் தட்டிய கதவினைத் திறந்தாள் மதியழகி..

கதவு திறந்ததும், “மதி வாசல் தெளிக்கலையா..?? விளக்குப் பொருத்தலையா..?” என அடுக்கடுக்காய் கட்டளையிட்ட வேணியை வெட்டவா குத்தவா என்று பார்த்து வைத்தவள்..

“இந்தா போறேன்...போறேன்..” என்றவள் சத்தம் வராமல் மாமியாரைத் தாளித்து கீழே இறங்க, அவள் அகன்றதும் அறைக்குள் பார்வையை சுழலவிட்டவருக்கு கட்டிலுக்கு அருகே காலைப் பிடித்து அமர்ந்திருக்கும் ஆதிக் விடையாய் கிடைத்தான்..

“இவன் என்ன வயித்த பிடிக்காம காலை பிடிச்சிருக்கான்..?” மனதிற்குள்ளே கேள்வி கேட்டு கொண்டவர்..

“ஆதி கண்ணா..” என ஒட்டுமொத்த பாசத்தையும் குரலில் தேக்கி வேணி அழைக்க

ஏற்கெனவே அவர் கதவைத் தட்டியதில் கோபத்தில் இருந்தவன், “என்ன..?” என்று புருவத்தை உயர்த்தி முறைக்க, அவனது முறைப்பிற்கு பதிலாய் ஈயென சிரித்து வைத்தவர்..

“என்ன டா காலையிலயே காலப் பிடிச்சிட்டு உட்கார்த்திருக்க..?” என்றவரிடம்

“காலையில காலப் பிடிச்சிட்டு இப்படி உட்காருதேன்னு வடபழனி முருகனுக்கு நேர்ந்துக்கிட்டேன் அதான்..” சலிப்பாய் சொன்னவன், ஓடிவந்த வேகத்தில் இடித்துக் கொண்ட காலை நீவிவிட

“எப்போ டா வேண்டுன..?” இப்போதும் விடாமல் கேள்வி கேட்கும் அன்னையிடம்

“ம்ம்...சிவ பூஜையில வரக் கரடி மாதிரி நீ வந்து நிக்கனும்னு வேண்டிக்கிட்டேன் அதே மாதிரி நீயும் வந்து நின்னுட்ட..அதான்…” என்றவன் தனக்குத் தானே புலம்பிக் கொண்டு பாத்ரூமிற்குள் சென்றுவிட்டான்..

“ஒருவேள இன்னும் நம்ம பையனுக்கு ரெட் சிக்னல் விளலையோ? அதைத் தான் இப்படிச் சொல்றானோ..??” என்றவருக்கு எங்கிருந்து புரியப் போகிறது அவனது கவலை வேறு என..

ஒருவழியாய் வாசல் தெளித்து ஆறு கோடு இழுத்து ஒற்றை நட்சத்திரத்தை வரைய அரை மணி நேரம் ஆகியிருக்க, கடிகாரத்தில் மணியைப் பார்த்து ஓடியாடி எப்படியோ விளக்கையும் பொருத்தி முடித்தவள் ஹாலில் உள்ள சேரில் அமரும் போது ராஜ், ஆதிக்கை எழுப்பப் படிக்கட்டில் ஏறிக் கொண்டிருந்தான்…

“ராஜ்…” என்றவள் அழைக்கும் சத்தம் அறையின் கதவைப் பூட்டிக் கொண்டிருந்த ஆதிக்கும் கேட்க, அவன் நிற்பதைக் கவனிக்காத மதி,

“என்ன அண்ணி..?” திரும்பி நின்று கேட்கும் கொழுந்தனிடம்..

“ராஜ்...உங்க அண்ணா நைட் ஃபுல்லா தூங்கல..ரொம்ப டையர்டா இருக்காங்க..அதனால…” என்றவளின் தயக்கத்தில் உள்ளுக்குள்ளே சிரித்தவன்

“சரி அண்ணி..நான் டிஸ்ட்டர்ப் பண்ணல…” என ராஜ் கீழிறங்க

அறையை விட்டு வெளியே வந்த தர்மர், “என்ன டா..ஆதிக் எங்க..?” என்றவரிடம் மதி சொன்னதைச் சொல்லி இழித்து வைக்க, மதியின் அக்கறைக்கு தலையில் அடித்து கொண்ட ஆதிக், “மானத்தை வாங்காம விடமாட்டா போலயே..” வாய் திறந்து திட்டியவன், வேகமாய் கீழிறங்கி வந்தான்..

ஆதிக் வந்த அரவம் கேட்டு திரும்பி பார்த்த மூவரில், ராஜ், “அண்ணா..நீங்க வேணும்னா ரெஸ்ட் எடுங்க..” எனக் கண் சிமிட்டி சொல்ல, இளசுகளின் பேச்சுக்கு வழிவிட்ட தர்மர் வாசலில் செய்திதாளுடன் அமர்ந்துவிட்டார்..

தர்மர் நகர்ந்ததும், ராஜைப் பார்த்து முறைத்தவன் மதியை பார்க்க, அவ்வளவு நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு காலையில் நடந்த கூத்து ஒருவித மயக்கத்தைக் கொடுக்க செவ்வானமாய் மாறிய முகத்தை மறைக்க,கிட்சனுக்குள் ஓடி மறைந்தாள்…

அவள் வெட்கப்பட்டு ஓடியதைக் கண்ட ராஜ், பலமாய் சிரிக்க, அவளின் ஓட்டத்தை ரசித்துப் பார்த்த ஆதிக், “ராஜ்..இங்க நடந்த எதையும்..?” என்ற கேள்விக்கு..

“இங்க நடந்த எதையும் நான் பார்க்கல...கேட்கல..” என்றவனின் சிரிப்பில் இணைந்து கொண்ட ஆதிக் தனது ஜாக்கிங்கை தொடர்ந்தான்…

காலை வேலையென வேணி சொன்ன அனைத்தையும் முகம் சுழிக்காமல் செய்தவளுக்கு உடல் சோர்வையும் பொருட்படுத்தாமல், அலுவலுக்கு சென்றுவிட்ட ஆதிக்கை நினைத்தாள் கவலையாக இருந்தது..

மதிய இடைவேளையில் ஆதிக்கு அழைப்பு விடுக்க அவளது அழைப்பு எடுக்கப்படாமலே துண்டிக்கப்பட்டதும் ராஜுக்கு அழைத்து என்னவென கேட்க, “அண்ணி ஒரு முக்கியமான ப்ராஜெக்ட்ல அண்ணா பிஸி..” என்றவனுக்கும் வேலை இருக்கும் போல, போனை வைத்துவிட்டான்..

இரவு பத்து மணி வரைக்கும் அழைப்பு விடுத்துக் கொண்டேயிருந்தவள், முதல் நாள் சரியாக உறங்காததால் உறங்கிவிட, நள்ளிரவிற்கு மேல் அறைக்குத் திரும்பியவனும் அவளது நெற்றியில் முத்தம் வைத்து உறங்கிவிட்டான்..

சில நேரங்களில் அன்று அவளுடன் இருந்த நெருக்கம் அவனுக்குத் தேவையாய் இருந்தாலும், உறங்குபவளை எழுப்ப மனம் இல்லாதவன் மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ள பழகியிருந்தான்…

மதி இந்தியா வந்து அன்றோடு ஒரு மாதம் முடிந்திருந்தது, காலையில் இருந்து இரவு வரை வேணியுடன் நேரத்தைச் செலவிட்டு வீட்டை ஓரளவிற்கு நிர்வகிக்க கற்றுக் கொண்டாள்..வேணிக்கும் அவள் மீதிருந்த கோபம் கொஞ்சம் மட்டுப்பட்டிருந்தாலும் அவள் தரும் காபியை மட்டும் குடிக்கவே மாட்டார்…

சில சமயங்களில் அவளைக் கறித்து கொட்டாதவர், அவள் அமைதியாய் ஏதேனும் யோசித்து தனிமையை நாடினாள் மட்டும் திட்டுவார்...செய்த தப்புக்கு ஒரு நாள் இரண்டு நாள் எனத் திட்டு வாங்கலாம் மாதக் காலமாவாய் திட்டு வாங்குவது…

அன்று மாலை வேலையை முடித்தவள், தோட்டத்தில் தஞ்சம் புகுந்து கொள்ள, அவளது சோர்ந்த முகத்தைக் காண சகிக்காத வேணி அவளிடம் வம்பிழுக்கும் பொருட்டு,

“என்ன மதி..? அடுத்து எப்படி பெட்டியை கட்டலாம்னு யோசிக்கிறியா..?” எனக் கேட்டு வைக்க, தினமும் திட்டும் வேணியின் மீது கொலைவெறியில் இருந்தவள்,

அக்கம் பக்கம் சுற்றிப் பார்த்துவிட்டு அவரை நெருங்கி, “ஏய் கிழவி..” என்றழைக்க, அவளது அழைப்பில் திடுக்கிட்டவர்

“என்னைப் பார்த்தா கிழவி மாதிரியா இருக்கு..” என்க

“ப்ச்ச்..இங்க பாரு..நானும் போனா போவுது ஆதிக்கோட அம்மாவாச்சேன்னு அமைதியா இருந்தா நீ என்னை இருக்க விடமாட்ட போலயிருக்கு…உனக்கு அடுத்து காபியை போட்டுற வேண்டியது தான்…” ஒற்றை விரல் நீட்டி எச்சரிக்கும் மருமகளை முறைத்தவர்,

“ஹி ஹி..உன் காபியைத் தான் நான் குடிக்க மாட்டேனே..” என்க

“ஓஹ் குடிக்க மாட்டியா சரிவிடு...இன்னைக்கு ஆதிக் வரட்டும் உன் நெஞ்சு வலி நாடகத்தை அரங்கேற்றம் பண்ணிடுறேன்..” என்றவள் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க, அவளது மிரட்டலில், “இவளுக்கு எப்படி தெரியும்..?” அதிர்ந்து நின்றவர், எக்கி அவளது கைப்பிடித்து நிறுத்தினார்..

வேணி கையைப் பிடித்து இழுத்ததும், “என்ன மாமியாரே..?” என்று புருவம் உயர்த்தி கேட்கும் மதியைப் பார்த்து சிரித்தவர்,

“ம்க்கும்...உனக்கு எப்படி..?”

“ஆமா...நீங்க விடுற ப்ராட கண்டுப் பிடிக்க சிபிசீஐடில இருந்தா வருவாங்க…?” இடக்காய் சொன்னவள்,

“வேணியம்மா...நெஞ்சு வலி வந்துச்சாம் ஆஸ்பத்திரில வச்சாங்களாம் ஆப்ரேஷன் பண்ணனும்னு சொன்னாங்களாம்..ஆனா மாசம் ஒண்ணு ஆகப்போவுது இன்னும் பண்ணலையாம்..சரி மாத்திரையாச்சும் போடுறீங்களா பார்த்தா அதுவும் இல்லையாம்…” என்றவள் மார்பின் குறுக்கே கைகளைக் கட்டி கேட்க,

சரியாக கேட்கும் மதியிடம் அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தவர், “அது மாத்திரை எனக்கு அலர்ஜி அதான்..” மேலும் பொய்யுரைக்கும் மாமியாரை தடுத்தவள்,

“எங்க கல்யாணத்தப்போ உங்கள ஆஸ்பிட்டலுக்கு பார்க்க வந்தப்போவே நீங்க பெட்டுல ஒளிச்சி வச்சிருந்த க்ளோப் ஜாமுன் என் கண்ணுல பட்டுச்சு...அப்போவே உங்க மேல எனக்கு சந்தேகம் தான்..” என்றவளுடன் இதற்கு மேல் மாரடிக்க முடியாது என்பதை உணர்ந்தவர்,
 
Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
“மதி கண்ணா ப்ளீஸ் டா..சொல்லிடாத..” எனக் கெஞ்ச

“என்னை இனி திட்டுவீங்களா..?”

“மாட்டேன் மாட்டேன்…” என்றவரின் கன்னத்தை தொட்டு முத்தம் வைத்தவள்..

“ஆனா நீங்க இப்படி நடிக்க போய் மட்டும் தான் எங்க கல்யாணம் அப்புறம் நான் இந்தியா வந்தது எல்லாமே நடந்தது..சோ…” என்றவள் மறுமுறையும் கன்னம் கிள்ளி முத்த, அவளின் செய்கையில் சிரித்தவர்,

“என் பையனும் கண்டுபிடிச்சிருப்பானோ..?” தனது அதிமுக்கிய சந்தேகத்தை கேட்கும் மாமியாரைக் குறுக்கிட்டவள்..

“உங்க பையன் உங்கள மாதிரி கொஞ்சம் தத்தி தான்...அம்மா பாசத்துல அவருக்கு புத்தி மலுங்கிட்டு போல…” தன்னிடமே தனக்கும் தன் மகனுக்கும் புத்தி கம்மியெனச் சொல்லும் மருமகளின் தலையில் வலிக்காமல் ஒரு அடி வைத்தவர்..

“மதி..என் பையனை உனக்குப் பிடிச்சிருக்கா..?” தவறான சமயத்தில் சரியான கேள்விக் கேட்கும் மாமியாரிடம்

“பிடிக்கலன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க..?” என்றவளைப் பாவமாய் பார்த்தவர்

“மதி, என் பையனுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு..அதான் உனக்கும் பிடிக்கும் தானே..?” அவரின் பேச்சில் வியப்படைந்த மதி

“உங்க பையனுக்கு என்னைப் பிடிக்கும்னு எப்படிச் சொல்லுறீங்க..?” என்றவளை நிதானமாய் பார்த்தவர்

“என் பையனைப் பத்தி எனக்குத் தெரியும்..நீயும் ஒரு நாள் புரிஞ்சுப்ப..இப்போவே உங்களை சேர்ந்து வாழ சொல்லல, ஆனா எப்பவுமே பிரிஞ்சு நின்னுடக்கூடாதுன்னு தான் சொல்றோம்..சீக்கிரமே பேரன பெத்துக் கொடு ஆத்தா..” வேணியின் கடைசி வரியில் கன்னம் சிவந்தவள்..

“கவலையே வேண்டாம் அத்தை..இன்னும் பத்தே மாசத்துல உங்களுக்கு ஒரு பேத்தி ஒரு பேரன் கன்பார்ம்..” என்றவள் சொன்ன வேகத்தில் அறைக்குத் திரும்பிவிட்டாள்…

அவளின் பதிலில் சிரித்துக்கொண்ட வேணிக்கு அவளின் பிடித்தமும் புரிந்துவிட மனநிறைவோடு பூஜையறையில் விளக்கேற்றினார்..

இவர்கள் இருவரும் பேசிக் கொள்வதை ஜன்னல் வழியே கவனித்த தர்மருக்கு, இந்தப் புதுக் கூட்டணி வெற்றியடைந்தாள் இனி வீட்டில் அனைவரின் பாடும் திண்டாட்டம் தான் என்ற பயம் மட்டுமே..

என்றும் இல்லா திருநாளாய் அன்று இரவு எட்டு மணிக்கே வீட்டுக்கு வந்த ஆதிக், மதியும் வேணியும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, “மதி ஒரு முக்கியாமன பார்ட்டி இருக்கு..கிளம்பி வாயேன்..” என்றழைக்க

அவனுடன் முதன் முதலாய் வெளியே செல்லப் போகிறோம் என்பதில் குதித்து சந்தோசமாய் கிளம்ப போனவளைத் தடுத்த வேணி, “மதி சேலைக் கட்டிக்கோ..” என்றார்..

அவரிடம் சரியெனத் தலையசைத்த மதி, அறைக்குத் திரும்பி அலமாரியில் சேலையைத் தேட அன்னையிடம் பேசிவிட்டு அறைக்கு வந்தவன் கேட்ட முதல் கேள்வியே, “மதி இன்னைக்கு குளிச்சியா..?” என்பது தான்..

“ஏன்..?” என்றவளின் குரலில் இருந்த மாறுபாட்டில் சிரித்தவன்

“இல்ல..எனக்கும் உன் நாத்தம் பழகிட்டு பட் பார்ட்டிக்கு வரவங்க பாவம் இல்லையா..?” என்றவனை எரித்துவிடுவது போல பார்த்தவள்..

“ரொம்ப தான்…” சிலிர்த்துக் கொண்டு, அங்கேயே உடை மாற்ற முற்பட்டாள்..

“அடிங்க..நான் இங்க ஒருத்தன் இருக்கேன் உனக்கு கொஞ்சமாச்சும் கூச்சம் இருக்கா டி..” என்றவன் விளையாட்டு போல கேட்டு, அறையை விட்டு வெளியேறப் போக

கையில் இருந்த சேலையை கட்டிலில் போட்ட மதி, “ஆதி, ஐ வான்னா கிஸ் யூ..” என்றவளின் விழிகள் அவனது விழியைத் தான் பார்த்திருந்தது..

அவளது பேச்சில் வாயடைத்துப் போனவன், “பார்ட்டிக்கு நேரமாச்சு மதி..கிளம்பு,..” என்பதை மட்டும் சொல்லி நகர, மதிக்கு அவனது விலகல் ஒருவித வலியைக் கொடுக்க, சேலைக் கட்ட மனமில்லாமல் சில நிமிடம் கட்டிலில் அமர்ந்தவளின் கண்கள் கண்ணீரை நிறுத்த மறுத்தது..

அவளே வாய்விட்டு கேட்கும் அளவிற்கு நடந்துக் கொண்ட தனது மடத்தனத்தை நொந்தவனுக்கு அவள் கேட்டும் தான் கொடுக்க முடியாத இந்நேரத்தை அறவே வெறுத்தான்..

அவள் கேட்ட அந்நிமிடம் அவனுக்கும் அவள் தேவையாய் தானிருந்தாள், ஆனால் இன்னும் அரை மணி நேரத்தில் போக வேண்டிய பார்ட்டி மிக முக்கியமான ஒன்று என்பதால் மட்டுமே அவன் அவளை விலகி வந்தது..

“எல்லாம் இன்று ஒரு நாள் மட்டும் தானே” என அவன் நினைத்திருக்க விதி வேறு விதமாய் மதியைக் குழப்பியது..

ஆதி மதியுடன் இணைவான்..
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஆதிரா டியர்
 
Jovi

மண்டலாதிபதி
Joined
Apr 4, 2018
Messages
156
Reaction score
259
Location
Uk

So sad☹☹
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அடேய், அறிவு கெட்ட
ஆதிக் பையா?
எங்க மதிக்குட்டி கேட்டும்
கொடுக்காமல் போறியே?
பேடு பெல்லோ, ஆதிக்
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top