episode 12 (1)

kasthuri

Author
Author
#1
~12

தாயின் பிரிவின் சோகத்தில் இருந்து மீள கொஞ்ச நாள் ஆனாலும் தன்னை சமாளித்துக்கொண்டான் .. காவ்யா அவ்வபோது முடிந்தவரை அவனை தனிமையில் விடாமல் பார்த்துக்கொண்டால்...நாட்கள் ஓட ஓட தன்னை கட்டு படுத்தும் உணர்சிகளிலிருந்து வெளி வர முயன்றான் ..

வாழ்கையில் நிரந்தரமானது ஏதும் இல்லை என்பதை உணர அவனுக்கு இருபத்தி ஏழு ஆண்டுகள் ஆனது... ஆனால் சிலருக்கு அது உலகத்தை பிரியும் வரை புரிவதில்லை...

துருவ் சாஷினி இருவரின் காதலை உணரும் நொடியில் அவர்கள் பிரிவை எதிர்பார்க்கவில்லை..இருவர் பிரிந்த பின்பு கிடைக்க இருக்கும் வாழ்கையை எதிர்பார்க்கவில்லை...

எம்பெருமான் யாருக்கு யார் என்று எழுதி வைத்திரிக்கிறார் என்பது தெரியாதது தானே வாழ்கை.. அதே போல் இந்த கணம் தொடங்குகிறது இரு இனிய காதல் கதை..

காவ்யாவின் தந்தை துருவின் வீட்டிற்க்கு வந்தார்.. காவ்யாவும் அங்கேயே இருந்ததால் அவருக்கு வசதியாக போனது.. கிரிஷின் தாய் தேவியிடம் திருமணம் பற்றி பேச வந்தார்..

“அப்பா..என்ன திடிர்ன்னு .. வந்த அப்றோம் கால் பண்ணி வந்த்ருக்கேன்னு சொல்ற பழக்கம்..” தந்தை மகளின் செல்ல சண்டைகளை ரசித்துக்கொண்டிருந்தார் தேவி..

“அதுக்கு பேரு சஸ்பென்ஸ் மா.. “செல்லமாய் வளர்த்த மகளை கொஞ்சினார்..

“விடிஞ்ச உடனே பாச மழை தான்.. பாருங்க நாங்கலாம் நனஞ்ஜிட்டோம்” துருவ் அறையிலிருந்து வெளியே வந்தான்..

“கண்ணு வைக்காத மாமா..”காவ்யா கூற.. அனைவரும் சிரித்தனர்

“வாங்க பா.. கீதாமா எப்டி இருகாங்க..”துருவ் கேட்க..

“நல்லா இருக்கா தம்பி.. அவளும் வரேன்னு சொன்னா..நான் தான் கூட்டிட்டு வரல..அடுத்த வாரம் வருவா..”

“சரி ப்பா..சொல்லாம வந்துருகிங்க்லே என்ன முக்கியமான வேலையா..”காவ்யா கேட்க..

“ஆமா மா..”என்றார்..

“அப்டி என்ன வேலை பா..”துருவ் கேட்க..

“தம்பி.. பாப்பாக்கு சீக்கரம் கல்யாணம் பண்ணி வச்சிட்டா ..நாங்க கொஞ்சம் நிம்மதி ஆயிடுவோம்.. அப்றோம் நானும் கீதாவும் கோவில் கோவிலா சுத்துவோம்.. அப்பா கிட்ட பேசணும்.. தங்கச்சி நீ தான் சொல்லி புரியவைக்கணும் மா..”என்றவர் துருவையும் தேவியையும் மாறி மாறி பார்த்துக்கூறினார்...

“இல்ல அண்ணா ..அவரு அங்க இப்ப தான் போயிருக்காரு.. இப்பவே லீவ் போட்டு வர முடியாது..நானும் இத பத்தி நேத்து பேசுனேன்... அவரு இல்லாம நிச்சயம் பண்ணிக்க சொல்லுறாரு .. அதான் யோசிக்றேன்.. அவங்க இருந்தா தான் நல்லா இருக்கும்..ஒருத்தர விட்டுட்டு நாம எப்படி எல்லாம் பண்ணுறது..”

“அதுவும் நியாயம் தான்..”யோசித்துக்கொண்டே அவரும் ஒப்புக்கொண்டார்..

“இப்ப லீவ் வாங்கி வந்துட்டா கல்யாணத்துக்கு தனியா வர முடியாது.. வந்தா எல்லாத்தையும் ஒரேடைம்ல முடிக்கணும்னு சொன்னாரு..”பத்மநாபன் கூறியதையும் அப்டியே தேவி கூறினார்..

காவ்யாவும் துருவும் நீங்களே எதாச்சும் முடிவுக்கு வாங்க என்பதுபோல அமைதியாக இருந்தனர்..

ஒரு முடிவுக்கு வந்த காவ்யாவின் தந்தை “சரி மா.. பத்மநாபன் கிட்ட நெக்ஸ்ட் மன்த் லீவ் போட்டு வர சொல்லு.. பஸ்ட் எங்கேஜ்மென்ட் வச்சிட்டு டூ வீக்ஸ்ல மேரேஜ் வச்சிக்கலாம்...

அனைவரும் ஒப்புகொள்ள வந்த வேலை முடிந்தது என்பதால் சாப்பிட்டுவிட்டு தன் கிளைன்டை பார்க்க சென்ற விட்டார்..

“துருவ் காவ்யா மா.. ரெண்டு பேரும் எதுமே சொல்லாம இருக்கீங்க..என்ன ஓகே தான..??”

“இல்ல மா.. திடீர் திடீர் முடிவு எடுக்ரிங்க.. சரி எதாச்சும் முடிவுக்கு வந்துருவிங்கனு தான் நாங்க அமைதியா இருந்தோம்..”துருவிர்க்கும் சேர்த்து காவ்யாவே பேசினாள்...

“சரி மா.. ஆபீஸ் கிளம்பலையா ரெண்டு பேரும்..”

“கிளப்றோம் மா.. “துருவ் கூற ..தேவி மட்டும் அல்ல காவ்யாவே அதிர்ச்சி அடைந்தாள்..அம்மா என்று மனதாரா அவன் அழைத்ததே இல்லை.. வேறு யாராவது இருந்தாள் அவர்கள் ஏதும் கேட்க கூடாது என்பதற்காகவே அழைப்பான்..

கண்களில் நீர் பொங்கினாலும் கட்டு படுத்திக்கொண்ட தேவி “சரி பா..லஞ்ச் எடுத்துட்டு வரேன் ..”கிட்செனுள் சென்றார் தேவி..

“மாமா..அம்மான்னு சொன்ன டா..”

“ஆமா காவ்யா..அவங்க எனக்கு அம்மா தான “வேறு ஏதும் சொல்லவில்லை இருவரும் ரெட்யாகி வர தேவியும் லஞ்ச் எடுத்து கொடுத்தாள்..

“சரி மா.. போயிட்டு வரோம்” என்று கூறிய காவ்யா கிளம்ப..தேவி வாசலுக்கு வந்தார்..பைக்கை ஸ்டார்ட் செய்தவன் தேவியை பார்த்த “போயிட்டு வரேன் மா..”என்று சிரித்த முகத்தோடு கூறினான்..

காவ்யாவிற்கும் புரியவில்லை.. தேவி லட்சுமியின் போட்டோ முன் நின்று..”நன்றி கா.. இந்த ஒரு வார்த்தை அவன் மனசுல இருந்து வரணும்னு நான் எவ்ளோ நாள் வெயிட் பண்ணேன்னு உங்களுக்கே தெரியும்..எனக்கு ஏன் பையன் கிடச்சிட்டான்..எனக்கு அது போதும்..நீங்க எப்டி அவன பாத்துகிட்டிங்கலோ அப்டியே நானும் இதுவரைக்கும் பண்ணிருக்கேன்... ஆனா இன்னைக்கு தான் எனக்கு திருப்தி கிடைச்சிருக்கு..அவனுக்கு புடிச்சது எல்லாம் செஞ்சு கொடுக்க போறேன் க்கா..”நாள் முழுதுவதும் தேவிக்கு ஆனந்தமாகவே கழிந்தது..

முதலில் ஆபீஸ் சென்ற காவ்யா ..கார்த்திக்கிற்கு அழைத்தாள்.. அனைத்தையும் கூறினாள்..அவனே வியந்தான்..பேசி முடிக்க அவனும் வந்து சேர்ந்தான்..

“இவனுக்கு என்ன ஆச்சு..சரி பொறுமையா கேட்போம்..”மனதில் நினைத்தவன்..

“வா மச்சான்.. “

“என்ன டா..ரொம்ப தீவிரமா போன் பேசிட்டு இருந்த ..யாரு டா..”கேட்டுகொண்டே அவன் கேபினில் அமர்ந்தான்..

“அது ஒன்னும் இல்ல டா..வா வேலையை பாப்போம் ..”

வேளையில் கவனம் செலுத்த சிறிது நேரம் அவன் மனம் எங்கோ போய்விட்டது ..
 

Sponsored

Advertisements

Top