• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

episode 13(2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

kasthuri

மண்டலாதிபதி
Joined
Jul 6, 2018
Messages
200
Reaction score
332
Age
26
Location
chennai
அவளும் சிறிது சங்கடப்பட்டாலும் தன்னை திடபடுத்திக்கொண்டாள்.. அமைதியே பயணம் ஆனது..ஒரு வீட்டின் முன் நின்றது..அங்கு அவள் தந்தையின் காரும் நிற்பதை பார்த்தவள் ..”அப்பா இங்க இருக்காங்களா..யாரு வீடு இது..இங்க ஏன் வந்தோம்..”கேள்வி கனிகளை அள்ளி வீச..

“ஐயோ நிறுத்துங்க மகாரணி ..இது நம்ம வீடு..நீங்க மிச்சம் வாழ்கைய வாழ போற வீடு.. எப்டி இருக்குனு பார்த்து சொல்லுங்க “ அவன் சொல்வதை காதில் கேட்டாலும் அவள் கண்கள் வேறு பக்கம் சென்றது..

காரை விட்டு இறங்கியவள் கொஞ்ச தூரம் தள்ளி இருந்த முயல் கூண்டிற்கு சென்றாள்.. அவளுக்கு முயல் என்றால் அத்தனை பிரியம்.. ஆனால் கிருதிகாவிர்க்கு பசுவை தவிர வேறு ஏதும் வீட்டில் இருக்க கூடாது..

அதனருகில் சென்றவள் அதனை தொட்டு பார்த்துக்கொண்டிருந்தாள்.. “கைல எடுத்துக்கவா..” அவள் கண்களில் அத்தனை ஆர்வம்.. “எல்லாம் உனக்கு தான்..விளையாடனும்னா விளையாடு ..குழம்பு வச்சி சாப்டனும்ன சாப்டு.. யாரும் கேட்க மாட்டாங்க...சரியா..”

அதில் நான்கு குட்டி முயல்கள் இருந்தன.. ஒன்று ஒன்றாய் கையில் எடுத்து அதனுடன் செல்லம் கொஞ்சி பேசிக்கொண்டிருந்தாள் அவனும் சலிக்காமல் அவள் அருகில் நின்று அவளை ரசித்துக்கொண்டிருந்தான்..

“இந்த குட்டி பேரு டாம்..இது ஜெர்ரி ..இவங்க சண்ட போட்டுட்டே இருக்காங்க..இது பேரு ஜாக் ..இது .....உங்கள மாதிரி இருக்கு.உங்க பேரு வச்சிக்கவா..”அவனை பார்த்து நக்கலாய் கேட்க.. “அடியே...என்ன... கொஞ்சம் மரியாதை கொடு மா..”

அதற்குள் கிருத்திகா வந்துவிட்டார்..”தம்பி அவகிட்ட அந்த முயல் குட்டிய காமிப்பிங்கள .. இனி அவ உள்ள வந்த மாதிரி தான்.. “

“நீ போ மா.. அவரு வெயிட் பண்ணுவாரு..”தைரியமாய் கூறியவள் ..அவனை பார்த்து..”வெயிட் பண்ணுவிங்க தான...”கேள்வியாய் நின்றாள்..

“மகாராணியின் உத்தரவு...”தலை தாழ்த்தி சொல்ல இருவரும் சிரித்தனர்.. இவர்கள் சிரிக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்தனர் ரகுராம் மரகதம் தம்பதியர் அவர்களுடன் சாஷினியின் தந்தை முத்து..

“சாஷினி மா..”அந்த சத்தத்தில் திரும்பியவள் தன் வருங்கால மாமியார் கூப்பிடுவதை பார்த்தாள் ..அந்த முயல் குட்டிகளை அவசரமாக உள்ளே விட்டு கதவை மூடி எழுந்தவள் விடு விடுவென நடந்து மரகதம் அருகில் சென்றாள்

“ஆன்டி..”என்றவள் மரியாதைக்கு இருவர் காலிலும் விழுந்து எழுந்தாள்...
“நல்லா இரு மா...”இருவரும் மனதார வாழ்த்த வீட்டிற்க்குள் அழைத்து சென்றனர்...


“கல்யாணம் ஆனா தான் புகுந்த வீட்டுக்கு வரணும்னு இல்ல... இது உனக்கு இன்னொரு வீடு எப்போவேனாலும் வரலாம் போகலாம் .. “ரகுராம் பெர்மிஷன் வழங்க அவளும் “சரி அங்கிள் ..”என்றால் ..

“அங்கிள்னு கூப்டாத மாமான்னு கூப்டுமா..இல்ல உனக்கு எப்டி தோணுதோ அப்டியே கூப்டு..”

“சரி ப்பா..”என்றால் அனைவருக்கும் திருப்தியாய் இருந்தது..

கல்யாணம் என்று என்ற பேச்சுக்காகதான் கூடியது இந்த குடும்பம்..அதை அவளும் அறியவில்லை.. தோழனின் வீட்டிற்க்கு வந்ததுபோல் அவளும் சந்தோஷமாய் பேசி சிரித்துக்கொண்டிருந்தால்...

நாம் நினைப்பது நடந்துவிட்டாள் அது வாழ்க்கை அல்லவே..திருபங்களும் குழிகளும் மேடும் பள்ளமும் நிறைந்தது தானே வாழ்க்கை

..........................................

காவ்யாவின் தந்தை பாலா பேசி சென்ற கொஞ்ச நாளில் அவரின் மனைவி கீதா வீட்டிற்க்கு வந்தார்..

“வாங்க கீதா மா..”தேவி உள்ளே அழைக்க...

“எப்டி இருக்கீங்க அண்ணி ..பசங்க எப்ப வருவாங்க..”

“நல்லா இருக்கேன் மா.. அவங்க வர ரெண்டு மணி நேரம் இருக்கு மா..க்ரிஷ் வந்துடான் தூங்குறான் உள்ள ..நீங்க வீட்டுக்கு வரவே கூடாதுன்னு இருந்துட்டிங்க போல..”

“அப்டிலாம் இல்ல மா..நேரமே இல்ல.. அது இதுன்னு டெய்லி ஒரு வேலை..”

இவர்கள் அப்டியே பழங்கால கதைகளை பேசிக்கொண்டிருக்க துருவ்
காவ்யா
வீட்டிற்க்கு வந்தனர்..

”அம்மா...”என்று ஓடி கட்டிகொண்டாள் காவ்யா.. .”இப்பவே என்ன பாக்க வரமாட்டுக்க ..கல்யாணம் பண்ணி வச்சிட்டா புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் என்ன மறந்துருவிங்க போல..”

“நல்லா இருகிங்களா கீதாம்மா .. ஏன் மா வீட்டுக்கு வரல ரொம்ப நாளா..”

“கொஞ்ச வேலை ஆச்சு பா.. நானும் கிளம்புவேன் எங்கேயாச்சும் வேலை வந்துருது...அதான் மா.. போய் பிரெஷ் அப் ஆயிட்டு வாங்க ..இன்னைக்கு கீதாவோட ஸ்பெஷல் ரவா பாயசம்...”

இருவரையும் அனுப்பி வைத்து பாயசம் சிறுது நேரத்தில் ரெடி செய்து கீதாவும் தேவியும் அனைவருக்கும் கொடுத்தனர்..க்ரிஷும் எழுந்திவிட வீடே கலகலப்பானது...

“அண்ணி .. அண்ணா கிட்ட பேசியாச்சா ..என்ன சொன்னாரு..பாப்பாக்கு நல்ல டைம் இப்போ... இப்ப கல்யாணம் வச்சா ஒரு வர்ஷதுக்குல்ல ஒன்னோ ரெண்டோ பெத்துகொடுப்பாங்க ...”

“பேசுனேன் மா.. நெக்ஸ்ட் மன்த் எண்டு வரேன்னு சொன்னாரு...அதுக்கப்றோம் நெறைய நல்ல முகூர்த்தமும் இருக்குது..நமக்கு எத்த மாதிரி பாத்து வாசிக்கலாம்னு சொன்னாரு..”

“சரி அண்ணி.. நிச்சயம்க்கு மட்டும் அண்ணா வரதுக்கு முன்னாடி எல்லாம் ரெடி பண்ணிட்டு அண்ணா வந்த அடுத்த நாள் நிச்சயம் வசிக்கலாம் என்ன சொல்றிங்க..”

“முடிவெடுத்துட்டு தான் வந்துருக்க மா..”காவ்யா கேட்க...

“பின்ன பசங்க கல்யாணம் தான் எங்களுக்கு எல்லாமே..உனக்கு எல்லாம் ஓகே தான துருவ்..”

“துருவ் என்ன சொல்லிட போறான்..”காவ்யா அவனை வம்பில்லுக்க..

“அடியே கட்டிக்க போற..இன்னும் என்ன மரியாதை இல்லாதா பேச்சு..ஒழுங்கா பேசு இனிமே..”ஸ்ட்ரிக்ட் ஆபிசர் போல கீதா பேச ..

அவள் காதருகே சென்ற துருவ்.”அம்மா முன்னாடி மட்டும் மரியாதை கொடு போதும் செல்லம்..”என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் அவன் கூற ..”என் செல்லம் டா மாமா நீ ..”அவனை மெதுவாக முட்டினாள்...

தனக்கென்ன புது வாழ்கை ...புது அத்தியாயம் .. புது கடமைகள் .. புது உலகம் வர போவதை எண்ணினான்..

நம் வாழ்க்கையில் நடப்பது பிரமன் எழுதி நாம் நடத்தும் நாடகமே.. இன்பமும் துன்பமும் இருந்தாள் தான் உயிரோடு இருக்க காரணம் அமையும்... இசிஜி போல் ஏறி இறங்கினால் மட்டுமே உயிரோடு இருப்பாய்.. சமக்கோடு ஆகிவிட்டால் மண்ணுலகம் தாண்டி விண்ணுலகை அடைய வேண்டியது தான்.....

அனைவரும் ஒத்துக்கொண்டும் ஒருவளின் மனம் ஒன்றாத ஒரு காதல்..

எல்லாம் ஒன்றியம் காலம் ஒன்றாமல் தள்ளிபோகும் ஒரு உறவு...

இருமனம் சேர்ந்தும் பிரிக்கும் குடும்பமும் சமுதாயம்...

..........................கனவுகள் தொடரும்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top