Episode 16(1)

kasthuri

Author
Author
#1
~16
கை தேர்ந்த டயபெட்டோலோஜிஸ்ட் என்பதால் மட்டுமல்ல..அவள் கல்லூரி விடுமுறை முழுவதும் களிப்பது அந்த மருத்துவமனையில் தான்.. முத்துவின் பாலிய நண்பர் தான் சீப் டாக்டர் என்பதால் சாஷினிக்கு என்றும் அங்கு செல்வாக்கு என்பதை விட அவளின் சிகிச்சை முறைக்கே தனி செல்வாக்கு..
மீரா டையபெடிக் சென்டர் ...அவளை டயபெட்டோலஜி எடுக்க தூண்டியதே அந்த மருத்துவமனை தான்.. இன்னொரு முக்கிய காரணம் சீப் டாக்டர் ஹுசைன் .. தாய் பயோலஜி டீச்சராக இருந்தும் அவள் ஹுசைன் வீட்டிற்கு செல்லுவாள்..அவரும் முதலில் சென்னையில் ஒரு பிரபலமான மருத்துவமனையில் பணியாற்றினார் ..
அவரின் வார்த்தை ஒவ்வொன்றும் அவள் உன்னிப்பாய் கவனிக்கும் முறை அவருக்கும் பிடித்து போக அவளை செல்ல பிள்ளையாக ஏத்துகொண்டவர் அவளின் வார்த்தையாலே இந்த மருத்துவமனையை நிறுவினார்.. ஒரே ஊர் காரங்க என்ற எண்ணமும் ..தன் ஊர் மக்கள் சிகிச்சைக்காக இவ்வளவு தூரம் வர கூடாது என எண்ணியவர்..பார்த்துகொண்டிருந்த வேலையிலிருந்து நின்று.. மீரா டயபெடிக் சென்டர் நிறுவினார்..
காஸ்ட்ட்ரிக் பைபாஸ் சர்ஜெரியை வெற்றிகரமாக செய்து முடித்து வந்தவள் அவன் இன்னும் அதே இடத்தில சிலையென நின்று கொண்டு ஏதோ சீரியஸ்சாக பேசிக்கொண்டிருந்தான்.. அவள் வந்ததையும் பார்க்கவில்லை அவன்... போன் பேசி முடித்ததும் திரும்பியவன்.. ஒரு கள்ள சிரிப்பை வீச அவள் அவனுள் ஒன்றுவதை போல தோன்றியது சாஷினிக்கு...
அவளின் பேசியை அவளிடம் கொடுத்தவன்.. “ப்ரீனா வெளிய போலாமா.. “
என்றும் கட்டளையாய் வரும் அவனின் வார்த்தைகள் சற்று சுருதி இழந்து இருப்பதை உணர்ந்தாள்..
“போலாம் ..நீங்க எதுல வந்திங்க..”
“உன் பைக்க உன்னோட அண்ணா எடுத்துட்டு போய்ட்டான் .. வா நாம போகலாம்..”
“நாம என்ன கேட்டோம் இவன் என்ன சொல்றான்..”மூளையை கசக்கி கொண்டிருக்க..
“டாக்டர் அம்மா..நீங்க என்ன கேட்டிங்கன்னு புரிஞ்சிச்சு..உன் பைக்க நான் தான் மச்சான்ன எடுத்துட்டு போக சொன்னேன்.. நாம இப்போ என் பைக்ல போறோம் புரிஞ்சதா மகராணி...??”
மூச்சி விடாமல் எல்.கே.ஜி. பாப்பா போல சொல்லி முடித்தான் .. அவள் மெல்லிய சிரிப்பை படர விட.. அதுவே அவனுக்கு போதுமென தோன்ற பைக்கை எடுக்க பார்கிங் சென்றான்..
அவளும் கிளம்பி வெளிவர சரியாய் இருந்தது..
அவனின் தோல் பற்றி ஏறி அமர்ந்துக்கொண்டவள் கையை எடுத்துவிடுவாள் என்று எண்ணியவனை சாந்தபடுத்த அவள் கையை வைத்தாளா இல்லை சீட்டின் உயரம் சற்று அதிகமாய் இருந்ததால் பயத்தில் வைத்தாளா என்று இருவருக்கும் தெரியவில்லை.. இருவரும் தங்களை சமாளித்துகொள்ளும் பதிலை மனதிற்கு புகட்டினர்..
தென்காசியிலிருந்து ஒரு ஒருமணி நேரம் பயணிக்கும் தூரத்தை அரைமணி நேரத்தில் வந்தடைந்தான்.. பாபநாசம் ..குற்றாலத்திற்கு அடுத்து அவள் அதிகம் நேசிக்கும் இடம் பாபநாசம் தான்.. அங்குள்ள குட்டி குட்டி அருவிகளும்.. குளிர்ந்த காற்றும் அவளை வெகுவாய் கவரும் சக்திக்கொண்டது ..
கொஞ்ச தூரம் மலைகளில் சுற்றி சென்றவன் ஒரு பெரிய கேட் முன் பைக்கை நிறுத்தி அழுத்தி ஹாரன் செய்தான்.. குட்டியாய் கருப்பாய் வெள்ளை மீசையுடன் சட்டையில்லாமல் ஒரு பெரிய குச்சியை கையில் ஏந்தி ஒரு பெரியவர் எங்கிருந்தோ ஓடி வந்தார்..
“என்ன காளியப்பா எவ்ளோ நேரம் நிக்கிறது..”
அவர் சிறிது சங்கோஜப்பட..”மன்னிச்சிருங்க தம்பி முயல் குட்டி ஒன்னு வெளிய ஓடிருச்சு அத புடிக்க போய்டேன்..”
“அவர ஏன் திட்டுறிங்க..அவரு வேலை தான பாத்துட்டு இருந்தாரு..நீங்க கதவ தொறங்க தாத்தா..”
“அம்மாடி..என்ன நீங்க காளியப்பனே கூப்டுங்க.. வேலைகாறேன் தான தாயி..”
“வயசு இருக்குதுல தாத்தா.. நான் இப்டி தான் இனி கூப்டுவேன் “என்று பிடிவாதமாய் அவள் கூற..அனைத்தையும் அமைதியாய் ரசித்துக்கொண்டிருந்தான் அவன்..கதவை திறக்க அவர் போக.. இவளும் இறங்கி விட்டாள்.. அவனிடம் ஒரு வார்த்தை கேட்கவில்லை..
“தாத்தா ..இங்கேயும் முயல்குட்டி இருக்குதா..”வாஞ்சையாய் அவள் கேள்வி கேட்டுகொண்டே அவருடன் அங்கு நடந்து போக..கூட்டி வந்தவன் தனியாக நிற்பதை பார்த்தவளுக்கு சிரிப்பதை தவிர வேறு ஏதும் தோன்றவில்லை..
“உங்கள மறந்துட்டேனே..நீங்க உள்ள உக்காந்து டிவி பாருங்க..நாங்க முயல் குட்டிய பார்த்துட்டு வரோம்..”என்று அவன் பதிலுக்கும் காத்திராமல் வண்ணமயிலாக அவளும் ஓடினாள்..
அவள் அங்கேயே இருந்துவிட்டதாள் ..கையில் இரண்டு கப்பை ஏந்தி அவளருகில் வந்தான்..
“சாஷினி..”அவளின் பெயரின் இனிமையை முதல் முறை உணர்வது போல அழைத்தான்..ஆனால் அவளோ முயல்குட்டியோ கதி என்பது போல கையில் கப்பை வாங்கி அதனை கொஞ்சி கொண்டிருந்தாள்...
“அருண் தம்பி.. சாப்பாடு என்ன செய்யணும்னு பாக்கியம் கேட்குது..”
“என்னது உங்க பேரு அருண்னா??”அவளும் கேள்வியை கேட்க அவளை கண்டுகொள்ளதவன்..
காளியப்பனை நோக்கி..”நாட்டுக்கோழி குழம்பும் ..சிக்கன் தக்காளி தொக்கு வைக்க சொல்லுங்க..”
ஒரு அதிர்ச்சியில் அவனை பார்த்தாள்..அவள் அருகில் அவனும் அமர்ந்தான்...அவளை கூட்டிக்கொண்டு வரும்போது அணிந்திருந்த உடை அவன் அணிந்திருக்கவில்லை ..ஒரு கிரே டி ஷர்ட்டும் ட்ராக் பேண்டும் அணிந்திருந்தான்..தன்னை மேலிருந்து கீழ் வரை ஆராட்சி செய்தவளை பார்த்தவன் மெலிய சிரிப்பை காண்பித்து..
“நான் முக்கால்வாசி நேரம் இங்க தான் இருப்பேன்..இது நம்ம கெஸ்ட் ஹவுஸ் .. டிரஸ்லாம் இங்க இருக்குது..”
அவள் கேள்வி ஏதும் கேட்கவில்லை..ஆனால் பதில் கிடைக்கிறது..அவளுக்கு அது ஆச்சர்யத்தின் ஆச்சர்யமாய் அமைந்தது..
“ஷாக்க்க கொற ஷாக்க்க கொற “அவன் நக்கல் தெறிக்கும் தொனியில் கூற அவளும் சுதகரித்துக்கொண்டால்...
“ஆமா எப்டி எனக்கு புடிச்ச டிஸ் சொன்னிங்க..அதுவும் டொமாட்டோ ஆனியன் சிக்கன் கிரேவி ..ப்பா..நினச்சாலே சாப்டனும்னு தோணுது..”அவளின் முக பாவனைகளை பார்த்து ரசித்தவன் கனவில் சஞ்சர்ப்பது போல அமர்ந்திருந்தான்..
“ஆமா உங்க பேரு அருண்னா”கேள்வி கணைகளை இன்டெர்மிஷன் இன்றி அனுப்பிக்கொண்டே இருந்தாள்..அவனும் அசராமல் பதில் சொல்லி கொண்டே இருந்தான்..
“இல்ல..”
“அப்பறோம் ஏன் அவரு உங்கள அப்டி கூப்டாரு..”
“ஏன் பேரு அவரு வாய்ல வரத்து..அதான் வர பேருலாம் சொல்லிக்கூப்டுவாறு ..”காபி சிப் செய்தவன் அவளை கூர்ந்து நோக்கினான்..
முயல்குட்டியை விட்டவள் கப்பை எடுத்துக்கொண்டாள்..
“அந்த பக்கம் அழகா இருக்கும்..நடக்கலாமா சாஷினி..”அன்பு பொங்கும் குரலில் அவன் தனது பெயரை சொல்ல சொல்ல இவளின் மனம் அவளுக்கு தெரியாமல் அவன் பக்கம் ஒன்ற தொடங்கியது...
பேசாமல் இருவரும் நடக்க..சாஷினிக்கு மண்டை வெடித்து விடும் போல இருந்தது..
“உங்க பேரு என்னனு சொல்லுங்களேன் ..”
அவன் முன் சென்று ஒரு இருக்கையில் அமர.. அவன் அருகிலே சென்று அமர்ந்து அவனை பார்த்துக்கொண்டே இருந்தால் பதில் சொல்வான் என்ற எண்ணத்தில்..
“இன்னைகாச்சும் கேக்கணும்னு தோனுச்சே..ஆமா ஏன் இத்தனை நாள் கேட்கல..”
“யார்கிட்ட கேக்க சொல்றிங்க..அம்மா என்னனா எந்நேரமும் உங்க புராணம் தான்.. தம்பி தம்பின்னு .. உங்க வீட்டுக்கு வந்த அப்போவும் யாருமே பேரு சொல்ல... தாத்தா சொன்ன பேரும் இல்லன்னு சொல்றிங்க... அதான் ஆர்வத்துல தல வெடிக்ற போல ஆச்சு..”
“அடடே.. எவ்வளோ பெரிய விளக்கம்..நாம தான் இத்தனை டைம் மீட் பண்ணோமே ..கேட்ருகலாம்ல..”அவன் கிண்டலடிக்க ..
“ரொம்ப கலாய்க்ரிங்க வர வர..பாவம்னு அமைதியா இருக்கேன்..அப்றோம் அப்போ கேக்கணும்னு தோனல..”காப்பியை குடித்து ஓரமாய் கப்பை வைத்தவள்..”பேச்ச மத்தாதிங்க ..உங்க பேரு என்ன..”
“மேடம் வெறும் பேரு தான்..அதுல ஏன் இவ்ளோ ஆர்வம்..சொல்றேன்..”அவன் சொல்ல இவள் ஒவ்வொரு எழுத்தாய் உச்சரித்தாள்..அவனுக்கே அவன் பெயர் பிடித்து போனது அவளின் வாயால் கேட்கும் பொழுது....
“ஆ .ர்.ய.ன்.. ர.கு.ரா.ம்”
“என்னமா பேரு நல்லா இருக்கா..மனபாடம் பண்ணிட்டு இருக்க..”
அப்போது தான் புரிந்தது அவளுக்கு அவனின் பெயரை சொல்லிகொண்டிருந்தது”ஈ..ஈ..”பற்களை காட்டி சமாளித்துக்கொண்டாள்..
“ஜாக்கரதை சாஷினி எல்லாத்தையும் நோட் பண்றான்..”மனதிற்கு அறிவுரை கூறியவள் வாய்க்கு கூற மறந்து விட்டாள்
“பேரும் நல்லா தான் இருக்கு..”கூறியவள் தூரம் இருந்த சிறு ஓடையை பார்த்தாள்..
“பேரும்ன்னு சொல்ற..வேற எத சேத்து சொல்றிங்க சாஷினி மேடம்..”
“மேடம் லாம் வேணாம்.. “அந்த ஓடையை அவள் கண்டு போக நினைப்பதை உணர்ந்தவன்..அவள் எழுந்ததும் கையை பிடித்து தடுத்தான்..
அவள் என்ன என்பது போல பார்க்க..சட்டென கையை விட்டான்..”சாரி சாஷினி..சம்டைம்ஸ் ஐ கான்ட் கண்ட்ரோல் மைசெல்ப் வென் யு ஆர் நியர் மீ..பட் ஐ க்நொவ் தி லிமிட்.. நோ வொர்ரி பேபி.”.என்றவன் செல்லமாய் கன்னத்தில் தட்டி அந்த ஓடை அருகே சென்று..அங்கு போடப்பட்ட பளிங்கு கற்களில் அமர்ந்துகொண்டு காலை நீரில் அமிழ்து அமர்ந்தான்...
அவளும் அதே போல அமர்ந்துகொண்டாள்..
“நான் உங்களையும் உங்க பேரையும் சேத்து சொன்னேன்..”
பதில் இல்லை ஒரு மெல்லிய சிரிப்பு இருந்தது..அதுவே போதும் என அவள் மனம் அமைதி அடைந்தது..
“எத்தன நாள் இந்த இடத்துல தனியா உக்காந்து உன்ன நினைச்சிபாத்திருக்கேன் தெரியுமா சாஷினி..”எதோ கனவில் பேசுவதை போல அவன் பேச அவனின் முகத்தை கூர்ந்து கவனித்தாள்..
“உன்ன பாத்து ரசிச்ச மாதிரி எந்த பொன்னையும் ரசிச்சது இல்ல.. உனக்காக நான் எதுவும் மாத்திக்க தேவையே இல்லன்னு புரிஞ்சிகிட்டேன்..”சொல்லியவன் அவளின் கண்களை சந்தித்தான்..”உனக்கும் எனக்கும் அவ்ளோ பெரிய வித்யாசம் இல்ல சாஷினி..எனக்கு புடிச்ச எல்லா விஷயமும் உனக்கு புடிச்ருக்கு.. இந்த வீடு உனக்கு புடிச்சிருக்கா சொல்லு..உண்மையா என்ன தோணுதோ அத சொல்லு... ட்ரை டு பி பிரான்க் சாஷினி..”
அவள் சிறிது மௌனமானாள் .. அவனும் நேரம் எடுக்கட்டும் என்று அமைதி காத்தான்.. அந்த அமைதியே பேசியது ஆயிரம் ஆயிரம் வார்த்தைகளை..
“எனக்கு இந்த மாதிரி அழகான அமைதியான இடம் ரொம்ப புடிக்கும்.. சென்னை எப்போமே நாய்சி.. அப்றோம் இங்க இருக்ற வீடும் ரோடு சைடு.. எங்க தோப்பு எனக்கு ரொம்ப புடிக்கும்..அதுக்கு அடுத்து எனக்கு புடிச்சது இந்த வீடு தான்..”
“இந்த தனிமை.காத்து.. எல்லாம் குடுக்ற சுகத்தை எந்த எ.சி. ரூமும் தராது..”கையை ஓடையில் நனைத்துகொண்டே பேசினாள்..
“இது தான் நம்ம வீடு சாஷினி ..இங்க உன்கூட எப்டி வாழணும்னு ஆசைபட்றேனோ அப்டி வாழனும்”..அவள் கையை தன் கையேடு பிணைத்துக்கொண்டான்.. “ரொம்ப காக்க வைக்காத .. ப்ளீஸ்.. “இது கொஞ்சலா கெஞ்சலா என்ற குழப்பத்தில் இருந்தாள்.. “உனக்கு ஏதும் சொல்லனும்னா சொல்லு..”
அவள் அமைதியே பதிலாய் கொடுத்தாள்..அவன் அடிகடி அவளை பார்த்த வண்ணம் இருந்தான்.. அவளோ தன்னையே சுய பரிசோதனை செய்துக்கொண்டிருந்தால்..
அதற்குள் எதோ அழைப்பு வந்ததாக காளியப்பன் கூற அவன் எழுந்து சென்றான்.. இவள் அங்கு இருக்கும் பறவைகளையும் மயில்களையும் பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தாள்..இங்கேயே இருந்து விடலாம் என்று கூட தோணியது அவளுக்கு..அது அவனின் அருகாமையைவிரும்பும் மனம் என்பதை அவளுக்கு புரியவில்லையே..மெல்ல எழுந்து அவள் வீட்டினுள் சென்றால்..
வந்ததும் வெளியே நின்று விட..வீட்டின் அழகை பார்த்தவளுக்கு பிரமிப்பு தாளவில்லை .. முன்னறை மிக ரம்மியமாய் இருந்தது... லைட் ப்ளூ கலர் பெண்ட் சுவரில் ஆங்கங்கு நேவி ப்ளு டிசைன் .. அதற்க்கு எத்தார்போல ஆங்காங்கே சிரிய வரைபடம்.. ஒரு பெரிய சோபா அதன் அருகில் ஒரு குட்டி டீபாய் டேபிள் ..
ஓரத்தில் மாடி இருக்க அதில் ஏறியவள் முதல் அறையில் அவன் இருந்து பேசுவதை பார்த்தாள்.. அதனால் அடுத்த அறைக்கு சென்றால் .. அந்த அறையை விட்டு வெளியேற யாருக்கும் மனம் வராது என்பது அவளுக்கு புரிந்தது..
 

Sponsored

Latest Episodes

Advertisements

New threads

Top