• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Episode 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

kasthuri

மண்டலாதிபதி
Joined
Jul 6, 2018
Messages
200
Reaction score
332
Age
26
Location
chennai
2
துருவ் ஹாஸ்பிடல் வந்திருந்த சமயத்தில் கார்த்திக் சத்யாவை காணச் செல்ல இருந்தான்.வேலையை முடித்துவிட்டு அவசர அவசரமாய் கிளம்பியவனை தடுத்தது சசியின் குரல்.

“என்ன டா வேலையை முடிச்சதும் நீயும் அவனும் சொல்லாமக்கொள்ளாம ஓடுறிங்க “என்றான் சசி.

“இல்லை நா.துருவ் அம்மா வ பாக்க ஹாஸ்பிடல் போயிருகான்.ரெகுலர் செக் அப் தான் நா.”என்று படபடவென பொரிந்து தள்ளினான் கார்த்திக்.

“அப்போ நீ உன் ஆள பாக்க போற அதான.”விஷமமாய் கண்சிமிட்டி கேட்டவனிடம் என்ன சொல்லலாம் என யோசித்தவன் “ஆமா அண்ணா. நான் என் ஆள பாக்கபோறேன் நீங்க ட்ரைன்க்கு கரி அள்ளி போடபோறீங்க அதான நா``”?என்று கூறி கண் சிமிடியவன் தனக்கும் காமெடி வரும் என்பதை சுட்டிகாட்டினான்.
“எப்பா தம்பி அண்ணன் சரண்டர் “என்று இரு கைகளையும் காதில் வைத்து ஒரு காலை பின் வைத்து குனிந்து நின்றான்.” பின்பு இருவரும் சிரிப்பில் இணைந்து கொள்ள “போ போ பா காத்து வரட்டும் “என்று கூறிவிட்டு அலுவலகம் உள்ளே சென்றான் சசி .


பின்பு சிறிது நேரம் யோசித்துவிட்டு தனது ராசாளியை எடுத்து கிளம்பினான்.
#மெரினா பீச்.
இன்று சனி கிழமை என்பதால் மெரீனாவில் கூட்டம் அலைமோதியது.எங்கு பார்த்தாலும் கடைகளும் கூட்டமுமாய் இருந்தது.பெற்றவர்களை ஏமாற்றி ஊர் சுற்றும் பல காதலர்கள் கூடும் இடமாக விளங்கியது மெரினா.(நோ அபன்ஸ் மக்களே)


அந்த கூடத்தில் தன்னவளை தேடினான்.மெயின் ரோட்டிற்கு அருகில் உள்ள ஐஸ் கிரீம் பர்லரில் அமைதியாய் அமர்ந்திருந்தாள் சத்யா.

“ஹே சத்யா வந்து ரொம்ப நேரம் ஆச்சா”தான் லேட் என்பதை உணர்ந்து தன்னை மண்ணிப்பாலா என்று ஏங்கும் பார்வையை வீசினான்.

“இல்லை கார்த்திக் இப்பதான் வந்தேன்,சாரி கார்த்திக் நான் என்ன பத்தி மட்டும் யோசிச்ருகேனு புரிது.நான் எங்க வீட்ல சொல்லி புரியவைக்கிறேன் கார்த்திக்.துருவ் கிட்ட பேசுன பிறகு தான் புரிது நான் பண்ணினது தப்புன்னு. ..நான் உன்ன ரொம்ப லவ் பண்ணுறேன் கார்த்திக் .நான் கோவமா பேசுனத மனசுல வச்சிக்காத டா ப்ளீஸ்”.என்ன சொல்வதென்று தெரியாமல் எதோ உளறினால் சத்யா.
நண்பனின் வார்த்தையில் சத்யாவிடம் இவ்ளளவு மாற்றமா என்று யோசித்து மெய்மறந்தான் .


சிறிது நேரம் மௌனம் காத்த இருவரும் கண்களில் காதலை பருகினர். முதலில் சுரணை பெற்ற கார்த்திக் சத்யாவின் கையை பிடித்தான்.
காதல் ஜோடிகளுக்கு உதவ கடவுளாக அனுப்பியவர்கள் போல .. அவர்களின் கோபத்தை உணர்ந்த ...அவன் பின்னால் இருந்த இரு ஆடவர்கள் திடீரென கிட்டார் எடுத்து

அடியே அழகே என் அழகே அடியே
பேசாம நூறு நூறா கூறு போடாத
வலியே வலியே என் ஒளியே ஒலியே
நான் ஒன்னும் பூதமில்லை தூரம் ஓடாத
காதோடு நீ எரிச்ச வார்த்தை வந்து கீறுதே
ஆனாலும் நீ தெளிச்ச காதல் உள்ள ஊறுதே
வாயாடிப் பேயா என் தூக்கம் தூக்கிப் போற

கை பிடித்தவன் அவளின் வலது கரத்தை ஏந்தி


“உன் காதலுக்கு அடிமை ஆனேன் ஆனா உன் நம்பிக்கையை மிஸ் பண்ணுன உணர்வு வந்துருச்சு.... நம்ம காதலுக்கு சாட்சிய என்னால செய்ய முடிஞ்ச ஒரே விஷயம் இதுதான்..” என்றவன் முதலில் ஒரு பூங்கொத்தை அவளிடம் நீட்டினான்.
கண்களில் நீர் சொட்ட அவன் காதலில் திளைத்த சத்யா அதை பெற்றுகொண்டாள் .பேச வார்த்தை ஏதும் இன்றி தவித்தவளின் உணர்வை புரிந்தவன்...


“உன் அழக பாத்து நான் உன்ன லவ் பண்ணல.உன்ன புடிச்சிச்சு..உன் மனசு புடிச்சிச்சு..என்ன மிரட்டி மிரட்டி தொரத்துன உன் அடாவடி காதல் எனக்கு புடிச்சிச்சு என்ன பத்தி மட்டும் யோசிக்கிற உன் காதல் புடிச்சிச்சு.. அதுக்குமேல நீ ஏன் மேல வச்ச அன்பு மட்டும் தான் நான் வாழவே வச்சிருக்கு.உன்ன நான் நிறையவே கஷ்டபடுத்திட்டேன்.இனிமே ஏதும் பண்ணமாட்டேனு சொல்லணும்னு எனக்கும் ஆசை தான்..” என்று நிதானித்தவன் “அக்செப்ட் மை அபோலோஜி டார்லிங்” என்று கூறி ஒற்றை டைசி பூவை நீட்டினான்..அது அவளுக்கு பிடித்தமான பூ என்பதால் அதை முகம் மலர்ந்து வாங்கி கொண்டவள்...

அவ்வளவு நேரம் கட்டு படுத்தி வைத்திருந்த கண்ணீர் அவளின் கண்களை பிரிந்தன.
தன் வலக்கரம் நீட்டியவனுக்கு கையை கொடுத்தால்... தன் வாழ்கையையே அற்பனிக்றேன் என்பதை சொல்லாமல் சொன்னது அவளது விழிகள்......
அங்கிருந்த அணைவரும் கைகள் தட்டி அரவம் செய்ய இணைந்த இரு ஜோடிகளும் கட்டிகொண்டன ஒருவரையொருவர்.


இங்க இவ்வளோ லவ் சீன் போய்ட்டு இருக்கு ஆனா அங்க....????? ஹஸ்பிட்டல நம்ம ஹீரோ என்ன பன்னுரருனு பாப்போம் வாங்க.
#ஹாஸ்பிடல்;
மனதை கொள்ளையடித்த இரு பெண்களை பார்த்த துருவ் உணர்ச்சி ஏதுமின்றி நின்றான்.


ஒரு ஆறு வருடங்கள் கழித்து சாஷினியை பார்த்தான்.
அதே அழகு அவனை பதினேழு வயதில் காதலில் விழச்செய்த அதே கண்கள்.எதையும் கூறும் கண்கள் ஏனோ இன்று எதுவும் சொல்லவில்லையே..இறகை போல மிருதுவான கன்னம் இன்னும் பொலிவடைந்ததே.பொய் கூற நினைக்கும் இதழும் என்னிடம் மட்டும் கூறிய உண்மைகள் பல ஆனால் இன்றைய நிலை வேறே. லைட் ப்ளூ கலர் குர்தியில் மிக ரம்யமாய் இருந்தால்..

தலை கோதும் விதம் மாறியதே..
ஆடை அணியும் விதம் மாறியதே
பேசும் பேச்சு மாறியதே
மாறாதது என்னவோ இரண்டு தான்
உன் கண்கள் ஒன்று

என்னை பாக்கும் விதம் மற்றுமொன்று..

வெறும் இரு நிமிடங்களே அமைதியாய் எடை போட்டான்..

“ஹாய் லட்டு மா ஹொவ் ஆர் யூ? “என்றவன் தன அருகில் காவ்யா இருப்பதை மறந்து பின்பு அவளை பார்த்து தன சொன்னதை உணர்ந்தவன் நாக்கை கடித்துக்கொண்டான்.

அதை பார்த்தும் பார்காத சாஷினி மெல்லிய புன்னகை உதிர்தவள் ”ஐஅம் குட் துருவ்”
.தேவி அம்மாவிற்கு எல்லா டெஸ்டும் எடுத்து முடிந்தது.. அதுவரை காவ்யாவை மறந்த நம் ஹீரோ “காவ்யா கிளம்பலாமா “ என்றான்.


பதில் பேச சக்தியற்று இருந்தவள் தலையை மட்டும் அசைத்தாள். மூவரும் சாஷினியிடம் விடைபெற்று வீட்டிற்கு கிளம்பினர்.கார் வந்ததும் வாசல் வரை வந்து வழி அனுப்பிய சாஷினியை கண்டதும் பல குழபங்கள் உதயமாயிற்று துருவின் மனதில்.

வீட்டிற்கு வந்ததும் தேவி அம்மாவிடம் விடைபெற்று தன்னறை சென்றவன் அமைதியை அமர்ந்தான்.

அப்போது தான் தன் நண்பனை சந்தித்துவிட்டு வந்த பத்மநாபன் துருவின் முகம் சரி இல்லை என்பதை உணர்ந்தார்.

“வாமா காவ்யா ,ஹாஸ்பிடல்ல ஏதும் சொன்னாங்களா “மாத்திரையை பார்த்தவண்ணம் கேட்டார் பத்மநாபன்.

“இல்ல அப்பா எல்லாமே கரெக்டா தான் இருக்குதுனு சொல்லிட்டாங்க ,ஒழுங்கா டேபிலெட் போட்டஒண்ணுமில்லன்னு சொன்னங்க அப்பா”என்றால் காவ்யா.

“சரி மா மாத்திரைகளை பிரித்து சாப்பிடும் நேரத்தை தேவிகிட்ட சொல்லிடு மா..”எல்லாம் முடித்துவிட்டு துருவை பார்க்கச் சென்றால்.
அவள் போவதை பார்த்த பத்மநாபன் “ஏன் புள்ளைக்கு ஏத்த பொண்ணு தான்.அவன் அம்மாவை போல நல்லா பாத்துப்பா”என மனதுக்குள் மகிழ்ச்சி அடைந்து கொண்டார்.


அதை உணர்ந்துகொண்ட தேவி “போதும் போதும் மருமகள பாத்து கண்ணு வைக்காதிங்க”நமக்கு பொன்னு இல்லன்னு வருதபடவே வேணாம்ங்க “கூறிவிட்டு சமையல் அறை சென்றால் தேவி .

துருவ் அறை திறந்தே இருந்தது .தன்னை எதிர்பார்த்துக் கொண்டிருப்பான் என நினைத்து உள்ளே சென்றாள் காவ்யா .அவனின் குழப்பம் அவன் முகத்திலேயே தெரிந்ததால் அவன் அருகில் ஆரவம் செய்யாமல் அமர்ந்தாள் காவ்யா.
அறையில் சில மணிநேரம் மௌனம் நிரம்பியது.திடீரென எழுந்தவன் அவள் முன் மண்டியிட்டு அவள் முகம் நோக்கினான் சிறிது நேரம். பின்பு என்ன செய்வதென்று அறியாதவன் அவள் இடுப்பை சுற்றி அவள் மடியில் படுத்து அழத்தொடங்கினான்.
அம்மாவை பிரிந்த போது அழுதான் அதற்கு பின் அழுகிறான் என்றால் இது தான் முதல் முறை.
பாசமாய் தலை கோதியவள் “குழப்பமா இருக்குறிய துருவ்” என்றால் காவ்யா அவன் அழுகையை நிறுத்த.

வார்த்தையில் உறுதி அடைந்தவன் எழுந்து அமர்தான் அவள் அருகில்.அவள் கையை கோர்த்தவண்ணம் “ஆமா காவ்யா,ஏன் சாஷினிய நான் மறுபடி பாக்கணும்..இந்த கடவுள் என்ன தான் பண்ண நினைக்குறாரு..அவ காதல்ல இருந்து வெளிய வர எவ்ளோ கஷ்ட பட்டேன்னு உனக்கு தெரியும்ல மா..”கண்கள் கலங்க சிறு பிள்ளையை போல் பேசினான்....


அவனின் நிலை புரிந்தவள் “இப்போ என்ன பண்ணலாம் துருவ் ,அவளை தனிய மீட் பண்ணு,ஏதும் கேக்கணும்னா ப்ரீயா பேசு அப்றோம் எல்லாம் சரி ஆயிடும் மாமா “
தன் லட்சுமி அம்மாவை போல தன்னை புரிந்து கொள்பவள் இவளும் தான் என்பதை மறுமுறை நிரூபணம் செய்தாள் காவ்யா.


அவன் அமைதி அவளுக்கு என்னவோ போல் இருந்தது .அதுவரை சுவரை பார்த்து பேசியவள் அவன் தோளை பிடித்து திருப்பினாள் அவளை நோக்கி.

“மாமா ,காவ்யா இவ்ளோ நல்லவலானு யோசிக்கிற புரிது “என்றவளை தலை அசைப்பில் இல்லை என்றவனின் உதடில் கைவைத்து பேச வேண்டாம் என்றாள்.

“ நான் உன்ன லவ் பண்றேன் நீ இப்டி குழம்பி போய் அமைதியாய் மூட் ஆப்பா இருக்கிறது எனக்கு புடிக்காது.என்ன பொறுத்தவரை நீ எப்போமே சந்தோஷமா இருக்கனும்.நீ என்ன விட்டு போகமாட்டனு எனக்கு தெரியும்..ஏதும் யோசிச்சு குழப்பிக்காத டா ..நீ போயிட்டு வா” தன்னை விட அவனை அதிகமாக நம்புகிறாள் என்பதை உணர்த்தினாள் காவ்யா.

“நீ மட்டும் அன்னிக்கி இல்லைணா இந்த துருவ் இல்லை ..எந்த பொன்னும் செய்ய நினைக்காத ஒரு விஷயம் பண்ணுற ..உனக்கு துரோகம் பண்ண யாருக்கும் மனசு வராது டி. நீ கிடைக்கிறதுக்கு நான் ரொம்ப குடுத்து வச்சிருக்கணும் காவ்யா .”என்றவன் அவளை காதலால் அணைத்தான்..காதலின் சுழற்சியில் சிக்கிய இருவரும் தன்னிலை மறந்தனர்..

பிரிய மாட்டோம் என்பதற்கு அறிகுறியாய் இதழ் ஒன்றியதுஅதனுடன் மனமும் ஒன்றியது.

இருவரின் பரஸ்பரத்தை பிரித்தது கதவை தட்டும் ஒலி..

கதவை திறந்த காவ்யா “டேய் க்ரிஷ் குட்டி ஸ்கூல் முடிஞ்சிச்சா”என்று கேட்டவாறு அவனை கைகளில் எடுத்து முத்தமிட்டாள்.

“வந்துட்டேன் காவ்யா ,சாக்கி எங்க?”என மழழையை கேட்டவனிடம் இல்லை என்று எப்டி சொல்வதென்று தெரியாமல் முழித்தவளை காப்பற்றினான் துருவ்.


“இன்னிக்கி உனக்கு சாக்கி இல்ல”உள்ளிருந்து குரல் கொடுத்தான் துருவ்.

“உன்கிட்ட கேக்கல டா அண்ணா நீ சும்மா இரு “செல்லமாய் அதட்டினான் க்ரிஷ் குட்டி.
“நீ காவ்யாவ அண்ணினு கூப்டா உனக்கு ஐஸ்கிரீம் வங்கி தறேன்..உனக்கு புடிச்ச பட்டர் ஸ்காட்ச்” ஆப்ஷன் குடுத்தான் துருவ்


ஐஸ் கிரீம் என்றவுடன் அனைத்தையும் செய்யும் குழந்தை தானே எல்லோரும் ..வயதை பார்க்க கூடாது ஐஸ் கிரீம்னு வந்துடா கால்ல கூட விழலாம்..சரிதானே மக்களே !
அதுவரை லஞ்ச் பேகைகையில் வைத்திருந்தவன் அதை அப்படியே போட்டுட்டு


“காவ்யா அண்ணி காவ்யா அண்ணி வாங்க ஐஸ் சாப்டலாம் வா வா “என்றான் அவள் கழுத்தைக் கட்டி கொண்டு..

அதுவரை அசதரனமாய் இருந்த துருவ் அவன் செய்கையில் மெய் மறந்து சிரிக்க தொடங்கினான் அவனுடன் கவ்யாவும் தேவியும் பத்மநாபனும் சேர்ந்தனர்.ஒன்றும் புரியாத க்ரிஷும் சிரிப்பில் கலந்துகொண்டான்.
 




kasthuri

மண்டலாதிபதி
Joined
Jul 6, 2018
Messages
200
Reaction score
332
Age
26
Location
chennai
பின் அனைவரும் ஒரு பெரிய ரெஸ்டாரன்ட் சென்றனர்..திருப்தியாய் உணவு உண்டனர் .துருவின் தந்தை சவுதியில் வேலை செய்வதால் ஆண்டுக்கு ஒருமுறை தான் வருவார் அதுவும் இரண்டு வாரம் தான்.தன் தந்தையின் பிரிவை உணரக்கூடாது என்பதால் கிரிஷ் மேல் அவ்ளோ அன்பு அனைவர்க்கும்.

பத்மநாபன் கிளம்ப இன்னும் இரண்டு நாட்களே இருந்தன.அவர் இருந்த ஒரு வாரமும் துருவிடம் பேச நேரம் இல்லாததால் இன்று இரவு பேசியே அகனும் என்பதை மனதில் வைத்து விட்டு”துருவ் கண்ணா இன்னிக்கி நைட் ஏதும் வேலை இருக்குதா பா “என்றார்

அவர் தன்னிடம் எதோ சொல்ல நினைக்றார் என்பதை உணர்ந்தவன்” இல்ல பா வேலை இல்ல இன்னிக்கி நாம பேசலாம் பா”என்றான் அவர் கூறும் முன்”சரி பா”என்று மெல்லிய புன்னகை பரவவிட்டார். அனைவரும் கிளம்பினர்.காவ்யாவை வீட்டில் விட்டுவிட்டு ஏரியா நண்பர்களை காணச்சென்றான்.

“வா டா நல்லவனே ,நீ மட்டும் தான் வேலை பாக்குற மாதிரி தான் பண்ற நாங்கலாம் வரோம்ல நீ என்னடா பண்ணிட்டு இருந்த ரெண்டுநாளா “என்று கேட்டான் சஞ்சய்.

வேலை நேரம் போக அவனின் நேரம் இவர்களுடன் தான்.,

“என்ன மச்சான் ,எங்கிட்ட சொல்லாம காவ்யாவ கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டிய”என்றான் அருண் ..அனைவரும் சிரிக்க தொடங்கினர்.

“டேய் டேய் ஏன் டா இன்னிக்கி நான் தான் கிடைச்சேன உங்களுக்கு.இல்ல டா ரெண்டுநாள வேலை அதிகமாச்சு ,நாம்ம சஞ்சய் கடைக்கே ரெண்டுநாளா போகல டா.”என்றான் நம் ஹீரோ.

“சரி டா விடு,சும்மா கலாச்சோம் டா”என்று அவனை மன்னித்த நல்ல உள்ளங்கள்.. அ முதல் அக்கு வரை அலசி ஆராய்ந்தனர்.. ஏதோ அரசியல்வாதிகள் போல...

ஒரு ஒருமணி நேரம் பின் வீடு திரும்பினான்..
மணி ஏழு ஆகிவிட்டால் க்ரிஷ் சாப்பிட்டே ஆகனும் இல்லன வீடு ரெண்டு ஆகிடும்.அன்று மணி ஏழை கடந்துவிட்டது.நம் குட்டி க்ரிஷ் அப்போதான் ஆரம்பித்தான் அதற்குள் துருவ் வந்துவிட்டன...
இருவரும் விளையாட சண்டை போட மணி எட்டு ஆனது.சுட சுட சப்பாத்தியும் கிழங்கு குருமாவும் செய்து வைத்தார் தேவி அம்மா .ருசிக்க ருசிக்க அனைவரும் உணவை முடித்தனர்.


துருவை அழைத்துக்கொண்டு மாடிக்கு சென்றார் பத்மநாபன்.பிப்ரவரி மாதம் என்பதால் குளிரும் வெக்கையும் சேர்ந்தே இருந்தது.ஆர்வமாய் இருக்கும் ராஜீவ் காந்தி சாலை கரப்பாக்கமும் அன்று அடங்கியது.தன் இரண்டு மாடி வீட்டின் மாடியில் இருந்தவாறுஇயற்கையை ரசிகலான் துருவ்.
என்ன பேச போகிறார் என்பதை அறியாததால் அமைதி காத்தான் அவர் தொடங்கும் வரை.


“துருவ் இதுவரைக்கும் நீயும் சரி நானும் சரி வெளிப்படையாய் பேசிக்கல,உன் அம்மாகிட்டஇருந்த அளவு என்கூட நீ க்ளோசா இல்ல அதுக்கு காரணமும் நான் தான்னு எனக்கு தெரியும் ,அது உன்னோட நல்லத்துக்காக தான் நான் பண்ணுனேன் ஆனா அதுவே என்ன வெறுக்க வைக்கும் னு எதிர்பாக்கல தம்பி “தன் மனதை இறக்கி வைத்தார் பத்மநாபன்.

“நீங்க சொல்றது உங்களுக்கு சரி பா ,ஆனா ஏன் அம்மா இடத்துல என்னால யாரையும் வைக்க முடில,நா என்ன பண்றது பா. பதின்னஞ்சு வருஷம் ஆச்சு இன்னும் அம்மா இருகாங்கனு நான் நினச்சிட்டு இருக்கேன்.ஒருநாள் கூட அவங்க நினைப்பு இல்லாம இருந்தது இல்ல.எனக்கு இது பழகிருச்சு புடிச்ருக்கு பா “அவனும் கொட்டினான் தன் குமுறலை .

“சரி துருவ் லட்சுமி நியாபகம் எனக்கும் இல்லாம இல்ல,இந்த ஸ்டேடஸ்ல நாம இருக்கோம்னா அதுக்கு அவதான் காரணம்.ஆனா கொஞ்சம் பிரக்டிகல யோசி துருவ் .தேவி நம்ம வீட்டுக்கு வந்து வருஷம் பன்னிரண்டு ஆச்சு.ஆனா இன்னைக்கு வர நீ அவளநம்ம பாமிலில ஒருத்திய நீ நினைக்கமாட்டுக்க.இது கூட தேவி சொல்ல நானே பாத்து கேக்குறேன்.”என்ற பத்மநாபன் “வேற ஏதும் பிரச்சன இருக்குதா பா சொல்லு”

“இல்ல பா எந்த பிரச்சனையும் இல்ல.நீங்க சொன்னது புரிது .ஆனா கொஞ்ச நாள் ஆகும் பா நா அவங்ககிட்ட பேச “

“பன்னிரண்டு வர்ஷம் ஆச்சு டா... உனக்கு இன்னும் எவ்ளோ நேரம் வேணும் னு நினைக்கிற...”சற்று கோபமாக அவர் கேட்க...

”என்ன பா என்கிட்ட இருந்து எதிர் பாக்ரிங்க..என் மேலா அதிகமா பாசம் வச்சவங்க தான் என்ன விட்டு போறாங்க.. அதான் உங்கள விட்டு தூரமா இருக்கேன்..காவ்யாவ விட்டு என்னால தூரமா போக முடிலபா..நான் என்ன தான் பண்றது.. அதான் தேவி அம்மாவ தூரமா வச்ருகேன்..அவங்கள புடிக்காம இல்ல பா...”அமைதியானான் சிறு மணி துளிகளுக்கு...

பிறகு இருவரும் மௌனமாய் இருந்தனர்.துருவின் மனதில் பல விஷயம் ஓடிகொண்டிருந்தது.சிறிது நேரம் நின்ற இருவரும் கீழே வந்தனர்.முகத்தில் திருப்தியுடன் வந்தவர் அவர் அறை நோக்கி விரைந்தார்.

தன் அறைக்கு சென்ற துருவ் க்ரிஷ் தூங்கிவிட்டதை கவனித்தவன் அவன் அருகில் அமர்ந்து தலை கோதினான்.அவன் சிந்தனையில் வலம்வந்தது நான்கு பெண்கள்.

“ரெண்டு பேரு என்ன தனிய விட்டுட்டு போனவங்க இன்னும் ரெண்டு பேரு எனக்காக இருக்குறாங்க.ஏன் நான் எப்போமே இருக்கிறதா விட்டுட்டு இல்லாததா பத்திமட்டும் யோசிக்றேன்”என்றான் தனக்குள்.

பின்பு மெதுவாய் கண்ணயர்ந்தான்....

எந்த இடறும் இன்றி அழகாய் உதித்தது சூரியன்.ஞாயிற்றுக்கிழமை என்பதால் துருவும் க்ரிஷும் போட்டிபோட்டு தூங்கிகொண்டிருந்தன.
மணி எட்டை கடக்கும் போதே கண் முழித்த துருவ் க்ரிஷை தொந்தரவு செய்யாமல் பூனைப்போல் காலைகடன்களை முடித்தவன் டைனிங் டேபிளில் அமர்ந்தான்.
செய்தி தாளை வாசித்த வண்ணம் இருந்தவனுக்கு காபி கொடுத்தார் தேவி.


“தம்பி ஒரு பத்து நிமிஷம் தோசை சுடுறேன்”என்று கூறிவிட்டு உள்ளே செல்ல இருந்தவளை தேக்கியது அவன் குரல்.

“அப்பா இன்னும் துங்குராங்களா “என்றான்”இல்ல பா காவ்யா அப்பா ஊருல இருந்து வராரு,அவர கூட்டிட்டு வார போயிருக்காரு,பாப்புகுட்டி உனக்கு போன் பண்ணுச்சாம் நீ எடுக்கலயாம் பா”

அப்போதுதான் தனது கைபேசியை எடுத்தான் பத்து மிஸ்டு கால் இருந்தது.”சரி நான் போன் பண்ணிபாக்குறேன் “என்றான் துருவ் அவன் பேசி முடிப்பதற்குள் தோசையுடன் வந்தார் தேவி.

சாப்பிட்டு முடிக்கவும் காவ்யா அப்பா பாலாவும் பத்மநாபனும் வருவதற்கு சரியாக இருந்தது.”என்ன பா துருவ் எப்பிடி இருக்க, சண்டே நல்ல தூக்கம் போல “என்று கூறிவிட்டு சிரித்தார்..

“சாரி பா,கொஞ்சம் தூங்கிட்டேன்,போனும் சைலென்ட்ல இருந்துச்சு “என்றான் மன்னிப்பு கேட்கும் பாவனையோடு.

“பரவாஇல்ல தம்பி, காவ்யாவ கூட்டிட்டு வரியா பா,இன்னிக்கி நைட் கிளம்பனும்”என்றார் பாலா.”ஏன் பாலா நாளிக்கி போகலாம்”என்றார் பத்மநாபன் தன நண்பனிடம்.

“நீயே நாளிக்கிகிளம்புற ஆளு..நாளிக்கி போய் ஒரு டீல் முடிக்கணும் டா இல்லன நான் ஏன் போக போறேன்.”
காவ்யா அவளோட பிரிண்ட்ஸ் கூட ஒரு பிளாட்ல இருக்கா.அவனுடன் வந்த காவ்யா தன் தந்தையை கண்டதும் ஓடி சென்று அணைத்துக்கொண்டாள்.சிறிது நேரம் அவர்கள் இருவர் பேச தேவி அனைவருக்கும் டிபன் தயார் செய்து கொடுத்தார்.


“துருவ் நூன் வெளிய போய் சாப்பிடலாம் புக் பண்ணிடு பா “என்றார் பத்மநாபன்.
சரி என்பதற்கு தலை அசைத்தவன்,இன்று சாஷினியை பாக்கலாம் என்று நினைத்தது முடியாது போல் இருக்குதே என்று மனதில் நினைத்துக்கொண்டிருக்க “மாமா ,என்ன உன் எக்ஸ் பக்கபோறிய”என்றால் நக்கலாய்.


நக்கல் செய்தவளை மண்டையில் கொட்டிவிட்டு “அமைதியா இரு டி,இல்லன வேற எதுனா பண்ணிடுவேன் “என்றான் கண்சிமிட்டி கொண்டு.

“உன் மாமா இருகிற அப்போ என்ன வேணுனாலும் பண்ணுவியா லூசு..”என்று சிரித்தவள் அதிர்ந்தாள் அவன் செய்கையில்...
காதோரமாய் பேச வந்தவன் முத்தம் கொடுத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.பெரியவர்கள் பேசி கொண்டிருக்க பன்னிரண்டு மணிக்கே கண் விழ்த்த க்ரிஷ் குட்டி”அண்ணா இங்க வா”கத்தினான்..


அவன் குரலில் அனைவரும் அமைதியாக துருவ் மட்டும் உள்ளே சென்றான்..”நீங்க பேசுங்க நா பாத்துகிறேன்”என்றான் எழுந்த தேவியிடம்.
உள்ளே செல்லும் போது காவ்யாவும் பின்னே வந்தாள்.வந்தவள் அவன் கதவை திறந்து உள்ளே சென்றதும் பூனைபோல் வந்து அவனை


பின்னிருந்து அணைத்து முதுகில் முத்தமிட்டாள்...
“கொடுத்த திருப்பி கொடுத்துரனும் மாமா “என்று கூறி க்ரிஷை நெருங்கியவளை என்ன செய்வதென்று தெரியாமல் சிரித்தான்..


“குட்டிமா என்னாச்சு கனவுல கத்துனியா,அப்போ கூட உன் அண்ணா மட்டும் தானா”என்றவள் துருவை பார்த்து பொய்யாய் முறைத்தாள்.

“உனக்கு பொறமை டி,க்ரிஷ் கண்ணா எழுந்துரு சாப்டுவோம்”
மெல்ல உடல் இழுத்து விட்டு கண்ணை திறந்தவன் அண்ணனை பார்த்து புன்னகிதான்”டேய் நானும் இருக்கேன் டா”என்றாள்மற்றொரு பக்கத்தில் இருந்து.


காவ்யாவை பார்த்ததும் எழுந்து “குட் மார்னிங் அண்ணி “என்றான்
அவன் கன்னத்தில் முத்தமிட்டு அவனை பாத்ருமில் தள்ளினர் இருவரும்.


“மாமா நீ வெளிய போனும்ன போயிட்டு வா,நா அப்பாகிட்ட சொல்றேன்”

“நானும் அதான் யோசிச்சேன் செல்லம்....”என்று நிதானித்தவன் சுற்றி முற்றி பார்த்து” ,தனிய இருக்கோம் கொஞ்சம் கண்டுக்க கூடாத? “ஏக்கமாய் நின்றான்.

“கல்யாணம் பண்ணிக்கோ உன்ன தனியவே விடமாட்டேன்”என்று ஓட நினைத்தவளை கை பிடித்து நிறுத்தினான்.

“அப்டிலாம் விட்டுட முடியாது மா”நெருங்கினான் அவளை.வெட்கப்பட்டு நின்றவளை பார்த்துக்கொண்டே இருக்க தோன்றியது அவனுக்கு “ஏன் டி நீ இவ்ளோ அழகா இருக்குற உன்ன விட்டு போனும்னு யாருக்கும் மனசு வராது,அப்பாகிட பேசி சீக்கிரம மாமா கிட்ட வந்துடு”

அவள் வெட்கத்தால் நிறைந்து நிற்க.. அவள் காதோரம் சென்றவன்.”காவ்யா மா.. எனக்கு சாஷினி நியாபகம் வந்தாலும் .. மணலை அடிச்சிட்டு போற ஆத்து வெள்ளம் மாதிரி உன் காதல் என்ன அடிச்சிட்டு போயிருது டி.. உன் காதல் இல்லன நான் எப்பயோ பைத்தியம் ஆயிருப்பேன் டி..”என்றவன் அவளை இறுக கட்டிக்கொண்டான்..

“என்ன இன்னிக்கி லவ் இவ்ளோ கொட்டுது போதும் போ நா வெளிய போனும்”தள்ள முயன்று தோற்றாள்.
தப்பித்தே ஆக வேண்டுமே என்று நினைத்தவள்”ஹான் வரேன் மா
“என்றாள் உடனே தள்ளியவனின் கன்னத்தில் இதழ் பதித்து ஓடிவிட்டால்..


”கண்டிப்பா மாட்டுவ டி “:என்றான் விஷமமாய்”அத அப்போ பாத்துக்கலாம் ட மாமா”கூறிவிட்டு ஹால்க்கு ஓடியேவிட்டால்.

அவள் அப்பாவிடம் சொல்லிவிட்டு அவனை போக சொன்னாள் சாஷினியை பார்க்க.மனம் ஏற்கவில்லை.ஆனால் தன்னை விட்டு போகமாட்டான் என்னும் தைரியமே இதை செய்ய வைத்தது.
சாஷினிக்கு அழைப்பு விடுத்தவன் டவர் பார்க்கிற்கு வர சொன்னான்


டவர் பார்க்;

அவன் அங்கு காத்திருக்க ஒரு சிகப்பு வண்ண காரில் வந்திறங்கினாள்.
கிரீன் கலர் சாரியில் வந்தவளை பார்த்துக்கொண்டே இருந்தான்.

என்ன பேசவேண்டும் என்பதும் மறந்தது மனமும் காற்றில் ஆடியது.கட்டுக்குள் கொண்டுவந்தது காவ்யாவின் காதல்.சுயநினைவு அடைந்தவன் தெளிவானான்.


இருவரும் ஒருவரியோருவர் பார்த்துகொண்டனர்.ஸ்கேன் செய்ய இருவரும் யோசிக்கவில்லை..தங்கு தடையின்றி கண்கள் அளவெடுத்தன.
பேச நினைக்கையில் யார் தொடங்குவது என்ற ஒன்று வந்தது.மனம் எங்கு ஒன்றுவது என்று அலைந்தது...
..............................................................................

யோசனையில் கனவுகள் தொடர்ந்தது.......
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top