Episode 21

Rate this Episode with options

  • Need to be improved

    Votes: 0 0.0%

  • Total voters
    57
#92
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா
அந்த நதியின் கரையை நான் கேட்டேன் அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன்
வான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை


இறுதியில் உன்னைக் கண்டேன் இருதயப் பூவில் கண்டேன்
என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா

எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா

இறுதி வரிகளை பாடும் பொழுது அவளின் குரலில் இருந்த கண்ணீரை உணர்ந்தவன் இயல்பாக பற்றுவதை போல மைக்கை வாங்கி அவன் பாட ஆரம்பித்தான்.

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில்
என்ன தரப் போகிறாய்
கிள்ளுவதைக் கிள்ளி விட்டு

ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்

ஒவ்வொரு வரிகளையும் அவளை பார்த்தவாறே பாடியவனின் பார்வையில் இருந்த பொருள் என்ன என்பதை அரசியால் புரிந்து கொள்ள முடியவில்லை. ‘நான் காட்டிய சோகத்திற்கு அர்த்தம் இருக்கிறது.ஆனால் இவனுடைய பாட்டின் மூலம் இவன் சொல்ல வருவது என்ன?காதல் இவனுக்கு சிறகு என்று பொருள் கொண்டால் இவன் சிலுவை என்று எதை சொல்கிறான்.’ என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போதே அவளிடம் மீண்டும் மைக்கை நீட்ட வேறு வழியின்றி வாங்கினாள்.

‘பாடு ‘ என்று கண்களால் அவன் ஜாடை வேறு செய்ய அதற்கு மேலும் பொறுப்பாளா அவள்.

அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே உன்
ஆனந்த மோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்

அலைபாயுதே கண்ணாஅவள் எதற்காக இந்தப் பாடலை பாடுகிறாள் என்பதை புரிந்து கொண்டதற்கு அடையாளமாக அவன் இமை மூடித் திறக்க அவளின் பாடல் அத்தோடு நின்று போனது. ‘உனக்கு எல்லாமும் தெரியும்? ஆனால் ஒன்றும் செய்ய மாட்டாய்? அப்படித்தானே?’ என்று பார்வையால் அவனை குற்றம் சாட்ட அதை வழக்கம் போல கண்டு கொள்ளாமல் நகர்ந்து அவளின் தோளின் மீது கையை போட்டு நெருங்கி நின்று கொண்டான்.ஆத்திரமாக அவனை முறைக்கத் தொடங்கியவள் சுற்றிலும் கேட்ட கைத்தட்டல் ஒலியில் தன்னை மீட்டுக் கொண்டாள்.

“இரண்டு பேரும் அருமையா பாடுனீங்க” என்று சுற்றி இருந்தவர்களின் பாராட்டை பெற்றுக் கொண்டவளின் காதிற்கு அதற்குப் பிறகு ஆங்கிலம் பெயரளவிற்கு மட்டுமே ஒலித்ததில் கொஞ்சம் ஆசுவாசமானாள்.மற்றவர்கள் அவர்களை விட்டு நகரும் எண்ணத்தில் இருப்பது போல தெரியாததால் அவளை அழைத்துக் கொண்டு பஃபே முறைப்படி விருந்து தயார் ஆகி இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றவன் அவளுக்கு பிடித்த உணவுகளை ஒவ்வொன்றாக கேட்டு அவளின் தட்டுகளில் நிரப்பிக் கொடுத்தான்.

இருவரும் அப்படியே தோட்டத்திற்கு செல்ல அங்கிருந்த மேசையில் அமர்ந்து உணவுகளை உண்ணத் தொடங்கினார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் நிமிர்ந்து பார்க்கவில்லை.பேசிக் கொள்ளவும் இல்லை.ஏதோ ஒருவித மௌனம் அவர்களை சூழ்ந்து இருக்க இருவருக்கும் ஏனோ அதை கலைக்க மனம் வரவில்லை.இருவரின் கவனமும் உணவில் மட்டும் இருப்பதை போல இருந்தாலும் உண்மை நிலவரம் அதுவல்ல என்பது அவர்கள் இருவருக்குமே புரிந்து தான் இருந்தது.

ஏதோ யோசனையில் இருந்த விக்ரமாதித்யன் சட்டென்று வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தான். ‘என்ன விஷயம்’ என்று கண்களாலேயே அவள் கேட்க ஒருவாறு சிரித்து முடித்தவுடன் அவளுக்கு விளக்கலானான்.

“அது ஒண்ணும் இல்லை...இப்போ உள்ளே சும்மா பேச்சுக்கு தமிழ்ல பேசினா எனக்கு பிடிக்கும்னு ஒரு வார்த்தை சொன்னேன் இல்லையா? இங்கே கிளம்பி வரும் போது ஒரு பொண்ணு, இன்னொரு பொண்ணுகிட்டே சீரியசான குரல்ல சொல்லிக்கிட்டு இருந்தா , “ சீக்கிரமே முப்பது நாளில் தமிழ் கற்பது எப்படின்னு புக் வாங்கி படிக்கணும்னு சொல்லிக்கிட்டு இருந்தா...அதை நினைச்சுத் தான் சிரிச்சேன்” என்று சொல்லவும் அவளின் சிரிப்பு அவளையும் தொற்றிக் கொண்டது.

“அதுக்கு காரணம் நீங்க தானே...நாளையில் இருந்து எல்லாரும் உங்ககிட்டே தமிழ் புலவர் மாதிரி பேசப் போறாங்க... அதை எப்படி சமாளிப்பீங்க?”என்று கூறிவிட்டு கிண்கிணியென சிரித்தாள் பொழிலரசி.

இருவர் மனதிலும் இருந்த ஏதோ ஒன்று தகர்ந்ததை போல இருவரின் மனநிலையும் காற்றை போல இலகுவாக மாறி இருந்தது.அவர்களின் தனிமையை கெடுப்பது போலவும்,அங்கிருந்த அமைதியான சூழலுக்கு சற்றும் பொருந்தாத வண்ணம் கலீரென்று ஒரு பெண்ணின் சிரிப்பொலி கேட்க,அசூசையான பார்வையுடன் இருவரும் யார் என்பதை பார்க்க சுற்றிலும் பார்வையிட்டனர்.

சற்று தொலைவில் இருந்த டேபிளில் அமர்ந்து இருந்தது விஜயேந்திரனும், மேனகாவும் என்பது அவர்களின் குரல் மூலமாகவும்,உடலின் வரிவடிவின் மூலம் தெரிந்து கொண்ட அரசி மேற்கொண்டு எதுவும் பேசாமல் மீண்டும் சாப்பிட ஆரம்பித்தாள்.

கணவனின் தட்டில் உணவு வகைகள் அப்படியே இருக்கவும் நிமிர்ந்து அவனின் முகத்தை பார்த்தவள் திகைத்துத் தான் போனாள்.செந்தணலை வாறிப் பூசிக் கொண்டது போல இருளில் கூட முகம் ஆத்திரத்தில் ஜொலித்ததை அவளால் உணர முடிந்தது.இதை இப்படியே விடக் கூடாது என்று எண்ணியவள் கணவனிடம் பேச ஆரம்பித்தாள். ‘ஒருவேளை தான் சொன்னால் அதை கேட்டு கணவன் அவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறதோ’ என்ற எண்ணத்தில் தான் அவள் பேசத் தொடங்கியதே.

“இரண்டு பேருக்கும் ரொம்ப நல்ல ஜோடிப்பொருத்தம் இல்லையா?”

“ம்ச்...எனக்கு ஒண்ணும் அப்படி தோணலை...”அவனின் விட்டேற்றியான குரலில் இருந்து அவளால் எதையும் கணிக்க முடியவில்லை.

“இப்படி சொன்னா என்ன அர்த்தம்”

“எனக்கு இந்த பேச்சு பிடிக்கலைனு அர்த்தம்...வேற ஏதாவது பேசுன்னு அர்த்தம்”அழுத்தமான அவனின் பேச்சு அவனின் பிடித்மின்மையை வெளிப்படுத்த கொஞ்சம் தயங்கினாலும் மீண்டும் அதே பேச்சை பேசவும் செய்தாள்.

“மேனகா நல்ல பொண்ணு”

“ஆமா உனக்கு ரொம்ப தெரியும்...”

“நிச்சயமா...அவங்க ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் உயிரா இருக்காங்க...”

“அதுக்கு இப்ப என்ன செய்யலாம்னு சொல்ற...”அவன் குரலில் ஒட்டாத தன்மை வந்து இருந்தது.

“அவங்களுக்கு கல்யாணம்...”

“அது நடக்கவே நடக்காது”

“இது தப்பு...காதலிக்கிறவங்கள பிரிக்கிறது ரொம்ப பெரிய பாவம்...”

“இருந்துட்டு போகட்டும்.அதனால் எனக்கு ஒண்ணும் நஷ்டம் இல்லை...”அசட்டையான தோள் குலுக்கல் மட்டுமே அவனிடம் இருந்தது.

“ஏன்...இதனால் உங்களுக்கு என்ன நஷ்டம்?”

“நீ தான் ரொம்ப பெரிய புத்திசாலி ஆச்சே...கண்ணை நல்லா திறந்து வச்சு பார்.உனக்கே அது தெரியும்...”

“ம்ச்...” என்று சலித்துக் கொண்டவள் பாதி சாப்பாட்டில் எழுந்து விட்டாள்.

“இப்போ எதுக்கு எழுந்திரிக்கிற...உட்கார்ந்து முழுசா சாப்பிடு அப்புறம் போகலாம்.”

“அதுதான் சிஐடி வேலை கொடுத்து இருக்கீங்களே அதை செய்யப் போறேன்... என்று சலிப்பாக சொன்னவள் கார் பார்க்கிங்கை நோக்கி சென்றாள்.

“அதுக்கு எதுக்கு அந்தப் பக்கம் போற...”

“எனக்கு கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்.நீச்சல் குளத்திற்கு போறேன்”

“சரி போ” என்றதற்கு மேலே வேறு வார்த்தை பேசாமல் சாப்பாட்டில் கவனமானான் ஆதித்யன்.

‘சரியான கல்நெஞ்சக்காரன்.கொஞ்சம் கூட என் மீது அக்கறையே இல்லை இவனுக்கு.அப்படி இருந்து இருந்தால் இப்படி சலனமே இல்லாமல் இருப்பானா?நான் சொன்ன பிறகாவது எனக்காக அவர்களை சேர்த்து வைக்கிறேன் என்று சொல்லி இருந்தால் எவ்வளவு சந்தோசப் பட்டு இருப்பேன்.’ என்று யோசித்தபடியே நடந்தவள் அங்கிருந்த நீச்சல் குளத்தை அடைவதற்காக கார் பார்க்கிங்கை கடந்து சென்று கொண்டு இருந்தாள்.

அப்படி அவள் கடக்கவும் அங்கே ‘டமார்’ என்ற பெரும் சத்தத்துடன் ஏதோ வெடிக்கவும் சரியாக இருந்தது.

சாப்பிட்டுக் கொண்டே இருந்த ஆதித்யன் மற்ற அனைத்தையும் மறந்து விட்டு ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போய் ஆடாமல் அசையாமல் நின்று விட்டான்.அவன் கையில் இருந்த முள் கரண்டி தவறி தரையில் விழுந்தது.

“அம்மா” என்ற அரசியின் வீறிடலை கேட்டவுடன் காற்றை கிழித்துக் கொண்டு அந்த இடத்தை நோக்கி ஓடினான்.

“பொழில்ல்ல்”

காதலாகும்...
:mad::mad::mad::mad:
 

Latest profile posts

banumathi jayaraman wrote on Shanthiraj's profile.
My heartiest birthday wishes to you, Shanthiraj Madam
banumathi jayaraman wrote on seethavelu's profile.
My heartiest birthday wishes to you, சீதாவேலு டியர்
Hi friends, vne readers ungalukaka nanum oru voice msg potrukan, kelunga
banumathi jayaraman wrote on Deebapriya's profile.
My heartiest birthday wishes to you, Deebapriya Madam
banumathi jayaraman wrote on Bramma17's profile.
My heartiest birthday wishes to you, Bramma17 Sir
Enathu punnagaiyin mugavari innakku post podala frds.. nalaikku post podukiren..
sorry friends

Latest Episodes