• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

episode 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

kasthuri

மண்டலாதிபதி
Joined
Jul 6, 2018
Messages
200
Reaction score
332
Age
26
Location
chennai
~3
முதல் சந்திப்பின் நினைவுகள் அவர்களின் காதலில் முதல் அத்தியாயமாய் அமைந்தது..ஏறக்குறைய ஐந்து வருடங்கள் பின் சந்தித்த அந்த கண்கள் நினைவுப்படுத்தியது.. முதல் சந்திப்பின் கதையை தான்..

கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது .. வார்த்தைகள் மறைந்தது .. காலங்கள் காற்றில் பறந்தது...

காதலின் அத்தியாயம்:

காதலில் விழவேண்டும் என்று யாரும் எதிர் பார்ப்பதில்லை.. விழுந்த பலர் அதிலிருந்து தப்பவே வழி செய்கின்றனர்...காதல் என்ற ஒன்று தேவையா என்றே சிலர் குழப்பி கொள்கின்றனர்..சில சமயங்களில் காதலர்கள் சூழ்நிலையால் பிரியலாம்..ஆனால் காதல் என்ற ஒன்று பிரியாது.. எத்தனை காதல் மனதில் பூத்தாலும்.. முதல் காதல் கொடுக்கும் வழியும் சுகமும் எந்த உறவும் தருவதில்லை...
இன்பத்தை தரும் காதல் துன்பத்தை தர என்றும் சளைத்ததில்லை..


கண்டவுடன் காதலில் விழச்செய்வது வெளி தோற்றம் மட்டுமில்லை.. பார்க்கும் அந்த நொடியில் தன்னவன் செய்யும் செயல்களும் அந்த பொறுப்பை ஏற்கின்றனர்..

துருவை பல முறை பார்த்திருக்கிறாள் என்றாலும் அவள் மனதில் எந்தவிதமான உணர்வும் வந்ததில்லை..காரணம் காதலை நம்பும் சாஷினி காதலர்களை நம்புவது இல்லை..

காதலை பற்றி பள்ளியில் பேசாத நண்பர்கள் குழு இல்லை..சாஷினியின் தோழிகள் காதலை மிகைப்படுத்திக் கூறும் போதெல்லாம் அவள் சொல்வது ஒன்று தான்...

“இங்க பாருங்க டி.. லவ் வந்தா நல்லாதான் இருக்கும்..ஆனா பிரச்சனைனு வந்தா ஒன்னு பொண்ணு ஓடிருது..இல்லன அந்த பையன் ஓடிடுவான்..இதான் காதல் இப்ப உள்ள காலகட்டத்துல..எது வந்தாலும் சமாளிக்கலாம்னு நினைக்கிறவங்க ரொம்ப கம்மி மா..”

அவள் இப்டி கூறும் போதெல்லாம் சஞ்சு பிரியா அவளுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பார்கள்...

“சாஷினி.. நீ இப்டிதான் டி சொல்லுவா.. லவ் பண்ணாதவங்க ஆயிரம் அட்வைஸ் சொல்லுவாங்க... ஒருநாள் இல்ல ஒருநாள் நீயும் இப்டி தான் பொலம்ப போற..அப்போ நாங்க பாத்துகிறோம் டா செல்லகுட்டி..”

இதுவும் உண்மை தானே.. காதலை இதுவரை உணராதவர்கள் கூற்றில் எப்பொழுதும் ஒரு பக்க நியாயமே இருக்கும்.. இப்டி பண்ணிருந்தா நல்லா இருக்கும்.. அப்டி பேசிருகலாம்..ஆயிரம் சொல்லாம்..ஆனால் உண்மை என்றுமே கசக்க தான் செய்யும் அல்லவே..

லவ் இஸ் மேஜிகல்... அந்த உணர்வு யார எப்போ ஊடுருவும்னு சொல்ல முடியாது... குபிட் தம்பி எப்போ யார்மேல அம்பு விடுவாருனே நமக்கு தெரியாது.. ஆனா அம்பு விட்ட விட்டது தான.. பாப்போம் நம்ம சாஷினி மனசுல விட்ட அம்பு என்ன பண்ணுதுன்னு..

ஜூலை 4

அன்று சனிக்கிழமை என்பதால் அனைவரும் கலர் கலராக வலம் வந்தனர்.. அன்று
ஆடிடோரியம் முழுவதும் மாணவர்களாக நிறைந்து இருக்க.. ஸ்கூல் ரெப் செலெக்ஷன் நடந்தது.. அதில் துருவும் பெயர் கொடுத்திருக்க சாஷினியும் கொடுத்திருந்தாள் மேலும் பலர் கொடுத்திருந்தனர்....

சாஷினிக்கு அதில் விருப்பம் இல்லை என்றாலும் சஞ்சுவின் தொல்லையால் பெயர் கொடுத்திருந்தாள்...

பள்ளி முதல்வர் ஆசிரியர்கள் கலந்து இரு பெயர்களை வெளியிட்டார்.. அங்க தான் நம்ம குபிட் தம்பி அம்பு விட ரெடி ஆனாரு... பஸ்ட் நேம் “துருவ் பத்மநாபன் ..கம் டு தி ஸ்டேஜ் “ஒருவர் அழைக்க ..கரகோஷங்களோடு மேடை ஏறி பதவி ஏற்றுகொண்டான்..

“நெக்ஸ்ட் தி அசிஸ்டன்ட் ரெப் இஸ் அவர் சாஷினி முத்து...”அவளும் மேடை ஏறி பதவி ஏற்றுகொண்டாள்..

சொல்லபோனால் அன்று தான் சாஷினி துருவை ஒழுங்காக கவனித்தாள்.. ஒரு ஈர்ப்பு அவனிடம் ஏற்பட்டது அவளுக்கு.. அவள் மனதில்இது ஒரு இன்பாக்சுவேஷன் என்று தன்னை ஏமாற்றி கொண்டாலும்.. அவள் மனதின் ஓரத்தில் காதல் பூ பூத்தது..
அவள் கண்ணசைவில் அவள் எண்ணத்தை புரிந்துகொண்டது இருவர்.. ஒன்று கார்த்திக் மற்றொருவர் சஞ்சனா..


“என்ன இவ லுக்கே சரி இல்ல..சரி கவனிச்சிபோம்...இப்டியா அவன முழுங்கற மாதிரி பாக்குறது..”மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் சஞ்சு..
கார்த்திக்கும் அதையே நினைத்துகொண்டான்..


இப்டியே நாட்கள் ஓட.. அவர்கள் அடிக்கடி சந்திக்க நேர்ந்தது...சில சமயம் தானாக அமையும் சில சமயம் அவர்களே அமைத்துக்கொண்டனர்..

பொதுப்படையாக பேச பத்து நிமிடம் என்றால் அவர்களை பற்றி பேச ஒரு மணி நேரம்..அவன் பேசும் பாதி வார்த்தைகளில் அவன் அம்மா பற்றி தான் ..

“நமக்கு பிடித்தவர்களுக்கு நெருக்கம் ஆனவர்கள் நாமக்கும் நெருக்கம் தானே” அவள் மனதுக்குள் லேசாக மணி அடித்தது... அதை அவள் சஞ்சுவிடமும் கூற அவளோ சிரிப்பை கட்டு படுத்திக்கொள்ள முடியாமல் சிரித்தாள்..

“என்ன டி இப்டி சிரிக்கிற..”

“செல்லம் உங்களுக்குள்ள இருக்கிறது பிரிண்ட்ஷிப் மாதிரி இல்லையே... ட்ரைன் எங்கேயோ போகுற மாதிரி இருக்கு.. “

“சீ சீ..தப்பா பேசாத.. அவன் அவ்ளோ ஈஸியா யார்கிட்டயும் ஓபன் அப் ஆகமாட்டான்.. அவன் அம்மாவ ரொம்ப மிஸ் பண்ணுறான் டி..அவன் சொல்லி சொல்லி அவனோட அம்மா எனக்கு புடிச்சிருச்சு..”

“உன் மாமியார உனக்கு புடிக்காம இருக்குமா செல்லோ..”அவள் அடிக்க வருவாள் என்பதை அறிந்தவள் ஓட ஆரம்பிக்க.. சாஷினி துரத்த..திடிரென அவள் எதிரே துருவ் வர .. அவள் பிரீஸ் ஆனாள்..காரணம் அவள் அறியவில்லை..மனம் படப்படவென அடிக்க தொடங்கியது..இதயம் வாய் வலி வெளியே வந்துவிடும் போல் இருந்தது அவளுக்கு..முதல் முறை நட்பை தாண்டி ஒன்றை உணர்ந்தாள் அவன் கண்ணில்..

அவளை கண்டவன் மெல்லிய சிரிப்பை வீச.. அவள் மெய்மறந்து உயிரற்ற ஜடமாய் நின்றாள்.. அவன் செல்லும் வரை அவனையே பார்த்துக்கொண்டிருந்தாலள் உலகத்தை மறந்தவளாக..

அனைத்தையும் ஓரமாக நின்று கவனித்துக்கொண்டாள் சஞ்சு..
மாதங்கள் ஓட.. ஸ்கூல் டூர் ஏற்பாடு நடக்க தொடங்கியது.. இவர்கள் இருவருமே அதில் மும்பரமாக இறங்க.. மனதில் இருக்கிற பாரத்தை இறக்கி வைக்க அவளுக்கு தோணியது..


“சஞ்சு..நா அவன லவ் பண்றனான்னு எனக்கே தெரில டி.. ஆனா அவன் கூட இருக்கணும்னு தோணுது எப்பயும் ..”

அவள் எங்கோ பார்த்து பேச.. அவள் கன்னத்தை ஏந்தியவள்..”இங்க பாரு சாஷினி .. உன் மனசுல இருக்கிறத இந்த டூர் ல சொல்லிடு..”

அவளுக்கும் சரியென பட..தலைகால் புரியாமல் ஆடினாள்..
டூர் போகிற நாளும் வந்தது..அவள் மனத்தில் போராடி கொண்டிருந்தாள் என்ன பேச வேண்டும் எப்படி சொல்வது ... என்ன பதில் சொல்லுவான்..பல கேள்விகள் ஆனால் பதில் அவன் ஒருவன் தான் என்பதை அவள் அறிவாள்..


அனைவரும் வந்துகொண்டே இருக்க..அவனை காணவில்லை.. அவள் மனம் படபடவென அடிக்க ஆரபித்தது.. அவனை முதல் முறை பார்த்த போது ஏற்பட்ட உணர்வு ஏதோ சரி இல்லை என அவளுக்கு தோன.. சஞ்சுவை நச்சரிக்க ஆரம்பித்தாள்..

“இரு டி.. அவனோட ஒட்டி பிறக்காத சகோ வரான் அவன்கிட்ட கேப்போம்..”
அவளும் தலையாட்ட...இருவரும் வேகமாய் கார்த்திக் அருகே சென்றனர்..
இருவரின் வேகத்தில் கார்த்திக் தடுமாறினான்,.. அய்யோ மச்சான் இல்ல.. இவங்க ஏன் இங்க வராங்க.. பெண்கள் என்றாலே ஒதுங்கும் வர்க்கம் கார்த்திக்.. அதானால் அவன் மனதில் ஏற்பட்ட பயம் ஏற்க தக்கது தானே மக்களே....


“கார்த்திக்.. துருவ் ஏன் வரல...”சஞ்சு கேட்க..

“ஆமால..அவன் அப்போவே கிளபிட்டேன்னு சொன்னான்.. இந்நேரம் வந்துருக்கணுமே “அவன் யோசிக்க..சாஷினி மனம் எதை யோசிக்க கூடாதோ அதையெல்லாம் யோசித்தது..

அவள் முகம் கண்ட இருவரும் அவளை எப்படி சமாளிப்பது என்று குழம்பி கொண்டிருக்க..கார்த்திக்கிற்கு அழைப்பு வந்தது.. ஆம் துருவ் தான் அழைத்திருந்தான்..

சாஷினி கண்களில் நீர் தேங்கி நின்றது.. எந்நேரமும் ஆணை உடைக்கப்படலாம் என்பது போல் நின்றாள்..

சஞ்சுவின் சமாதனம் அவளுக்கு போதவில்லை..அவள் நாடியது துருவின் கண்களை தான்...

அழைப்பு வர..அவர்களை விட்டு விலகியவன்.

“மச்சான் ஏண்டா இன்னும் வரல..நீ வரலன்னு அவ அழுறா டா..”

“என்ன டா..எனக்கு ஏதும் கேக்கல.. மச்சான்.. பேசு டா..”
அவன் பேசுவது இவனுக்கு கேட்டாலும்.. துருவிர்க்கு ஒழுங்காக கேட்கவில்லை ..
அரைகுறையாக விழுந்தது..


“யாரு டா..அழுறா..வெளிய வந்து பேசு டா..”துருவ் கத்த..

“டேய் .. ஏன் டா..கத்துற..சாஷினி அழுறா..”இவ்வளவு தான் அவன் கேட்டான்..

“மச்சான்..”துருவின் வார்த்தைகள் தடைப்பட்டது..
கார்த்திக் மீண்டும் அழைக்க தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார் என்பது மட்டுமே அவனுக்கு கேட்டது..


இப்போலாம் எல்லார் கையிலயும் ஒரு ஆண்ட்ராய்ட் வைத்துக்கொண்டு சுற்றுகின்றனர்.. ஆனால் லெட்டர் மூலம் காதல் பகிர்ந்துக்கொண்ட காலம் நாம் நினைத்தாலும் திரும்பாது.. ஒரு நிமிடம் பதில் சொல்லாமல் இருந்தாலும் சச்சரவு ஏற்பட.. அன்றைய நாட்களில் ஒரு மாதம் காத்திருப்பர் ஒரு லெட்டர் வர..
துருவின் கைபேசி துண்டிக்கப்பட..செய்வது அறியாமல் விழி பிதுங்கினான் கார்த்திக்..


அவனுக்கு புரியவில்லை என்ன நடந்தது என்பது.. சாஷினியிடம் என்ன சொல்லி சமாளிப்பது என்பது அவனுக்கு தெரியவில்லை....


........................................கனவுகள் தொடரும்..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top