• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

episode 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

kasthuri

மண்டலாதிபதி
Joined
Jul 6, 2018
Messages
200
Reaction score
332
Age
26
Location
chennai
~5
தேனாய் ஓடும் அருவி ..... இயற்கை அரணாய் அமைந்த மலையும்..... திரு முருகன் இருப்பிடம் கொண்ட திருமலை கோவிலின் தரிசனம் பல மயில் தூரம் வரை பரவும்.... மயில்கள் யாவும் வயலின் வரப்பில் நின்று நெற்பயிர்களை கொற்றி தின்றாலும் முருகனின் வரவை எண்ணி வேண்டிக்கொள்ளும் கிராம மக்களும்.. உற்றாரையும் உறவினராய் கொள்ளும் பரந்த மனம் படைத்த நல்ல மனிதர்கள் இருக்க... மழை அவர்களின் மனதிற்கேற்ப கொட்டும் ஊர் தான் குற்றாலம்.. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்...

குற்றாலத்தின் குளுமையும் அருமையும் அவள் அருகில் இருந்தும் அதில் நாட்டமில்லாதவள்....கையில் கண்ணாடி கப்பில் இஞ்சி டீ வைத்துக்கொண்டு மொட்டை மாடியில் நின்று அருவியினை அவள் பார்க்கும் போது இருக்கும் மன அமைதி அன்று அவளிடம் இல்லை..

அழுது ஒய்ந்தவள் அவனை மறக்க அவனின் நினைவுகளை தொலைக்கும் ஒரே இடம் அவள் தந்தையின் மடியே.. உணர்ந்தவள் ஓடினாள் ...

அருவியில் இருந்து கண்ணை எடுத்தவள் கையில் இருந்த கப்பை பார்த்தாள்..

“துருவ்..எனக்கு கொஞ்சம் மிச்சம் வச்சிட்டு டீ குடி டா..”

“முடியாது லட்டு மா ...இஞ்சி டீ புல்லா எனக்கு மட்டும் தான்..”

“உனக்கு இஞ்சி டீ புடிக்கும்னா நீ கான்டீன்ல போய் கேளு ,. இது என்னோட ஷேர் “

ஒரு கப் டீ காக சண்டை போட்டு கேண்டீனை சுற்றி சுற்றி வரும் நினைவுகள் கண் முன் படமாய் ஓடியது...

“பிரிந்து மூன்று வருடம் மேல் ஆகியும் உன்னை என்னால மனசுல இருந்து அழிக்க முடியல துருவ்.. யூ லீவ்ட் இன் மை லைப் .. அண்ட் யூ ஓன்ட் மை லைப்.. இட்ஸ் நாட் தட் ஈஸி டூ மூவ் ஆன்... பட் ஐயம் ஜஸ்ட் ட்ரயின்ங்... “

“இந்த இஞ்சி டீ கசப்பிலும் நீ தான் தேரிற..உன்ன போல..உன் நினைவுகள் போல.... உன்ன என்னால எப்போ மறக்க முடியும்னு தெரில ..”

“எனக்கும் ஒரு லைப் இருக்குனு நீ சொல்லி நான் புரிஞ்சிக்க வேணாம் டா.. ஐ நோ..”அவளின் ஈகோ தலை தூக்க

அவனை மறக்க எண்ணி எண்ணி தோற்றுப்போய் அவனின் நினைவுகளில் நீந்திக்கொண்டிருந்த சாஷினி நினைவிற்கு வந்தது அவள் தமையன் சிவாவின் அழைப்பு..

“அம்மா கால் பண்ணுனாங்கா...என்ன ஆச்சு பாப்பா..சொல்லாம கொல்லாம வந்துருக்க..வந்தும் அழுதியமே..என்ன மா..”

“அண்ணா.. “ ஓடி சென்று கட்டி தழுவி அழுதாள்..”சரி பாப்பா..அழாம என்னாசுனு சொல்லு..”

“அண்ணா சென்னைல அவன பாத்தேன்.. அவனுக்காக நான் என்னோட லவ்வ விட்டு வந்தேன்.. எதற்ச்சிய பாத்து பேசுனேன்.. ஏன் மறுபடி லைப்ல வரனு கேட்ட அப்போ என்ன பண்ணனு தெரியல நா .. ஹாஸ்பிட்டல ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு வந்துட்டேன் நா..”ஒரே மூச்சாய் பேசி முடித்தவள் அழுகையை தொடர்ந்தாள்..

காதலின் தாக்கத்தில் இருந்தவள் அவனின் அவளுக்கான வார்த்தையை......... அவள் அவளின் மனப்போக்கிற்கு ஏத்தார் போல கற்பனை செய்துக்கொள்ள...இருவரையும் சேர்த்து வைக்க நினைத்த விதியும் சற்று விலக ஆரம்பித்தது.....

அவளின் முதுகை அன்பாய் தடவி கொடுத்தவன்...”பாப்பா...நாம நினைக்கிற மாதிரி..எல்லாரும் நம்மல புரிஞ்சிக்க மாட்டாங்க..அவனுக்கு புரிஞ்சிருந்தாலும்..அவன் வாழ்க்கையோட மாற்றத்துல உனக்கு அவன் இடம் வைக்கல..நீயும் அதுக்கு ஆசை படல..அத நீ புரிஞ்சிக்கணும்.. நீ உன்ன மட்டும் பத்தி யோசிக்கிற நேரம் வந்துருச்சு..”

கண்களை துடைத்தவள்..”புரிது நா.. என்னால அவன் நினைவுகள தூக்கி எரிய முடில..ஒவ்வொரு விஷயத்துலையும் அவன் இருக்கான்.. வெறுத்து அழுதாலும் அவன் தான் தெரிறான்.. உடஞ்சி உடஞ்சி சோர்ந்துடேன் நா..’

இருவரும் அமைதி ஆகா..கையில் வைத்திருந்த காபியை ஒரு சிப் குடித்தவள்...ஒரு முடிவிற்கு வந்தவள் போல்..”இது வரைக்கும் அவனுக்கு புடிச்ச எந்த விஷயத்தையும் நான் விடல.. அவன மறக்க ஒரே வழி தான் நா எனக்கு புடிச்ச மாதிரி இருக்க போறேன் குடிக்கிற காபில இருந்து போடுற சப்பல் வரை..எனக்காக வாழ போறேன்..”

அவளால் முடியுமா என்று யோசித்த சிவா..”சரி பாப்பா..இவ்ளோ பண்ணிட்ட இதும் ட்ரை பண்ணு.. என்ன நடந்தாலும் நான் இருக்கேன் மா..”... நிதாநித்தவன்...”சாப்டியா பாப்பா..”அவளின் சோர்வான முகத்தை பார்த்தவன் .....

“நீ சப்டுருக்க மாட்ட..”அவள் கையை பிடித்த வண்ணம்.. கிட்சனை நோக்கி சென்றான்....

சிவாவின் சமையல் சாஷினிக்கு புடித்த ஒன்று.. அவளை டைனிங் டேபிளில் அமர வைத்து அவன் தோசையை ஊற்றி விட்டு அவளை பார்த்தான்..”எவ்ளோ சொன்னேன் பாப்பா ஏன் பேச்சு கேக்காம அவன லவ் பண்ணுன..அவனுக்காக விட்டுட்டு வந்த..உனக்கும் வலிக்குதுனு புரிய இவ்ளோ நாள் ஆச்சு பாப்பா.. நீ இப்டி ஆகா கூடாதுன்னு தான் நான் அப்போவே வேணாம்னு சொன்னேன்....” மனதில் புழுங்கினான்....


சுட்ட தோசையை எடுத்து வந்து சாப்பிட வைத்தான்..சாஷினி வீட்டிற்கு வந்தாள் யாரவது ஊட்டி விட்டே ஆகவேண்டும்.. அவளா எடுத்து சாப்பிட்டால் அன்று ஊர் காணாத மழை தான்...

தோசையை புட்டு ஊட்டி விட்டான் ...சாபிட்டு முடிந்ததும் எழுந்தவளை நிறுத்தினான்...’அம்மா கேட்டா ஏதும் சொல்ல வேணாம்..இது நாமகுள்ள இருக்கட்டும்..”தோழானாய் மாறிய தமையனை அன்பாய் பார்த்தவள்...

“நீ அவ்ளோ சொன்ன நா தான் கேக்கல...சாரி நா.. “கண்ணீர் சிந்தினாள்..

“போதும் பாப்பா ..நீ அழுதது...உனக்கான நேரம் வந்துருச்சு..நிம்மதியா உனக்கு புடிச்ச மாதிரி இரு கொஞ்ச நாள்.. ஹாஸ்பிடல் போகலாம் பொறுமையா..புரிதுல மா..”நெற்றியில் பாசமாய் இதழ் பதித்தவன் அவன் அறைக்கு சென்றான்...

சிவா டிவிஎஸ் கம்பெனியில் மேனேஜர் ...சென்னையில் நல்ல வேலை கிடைத்தும் சொந்த மண் விட்டு செல்ல விரும்பாதவன்..பெற்றவர்கள் சொல்லுக்கு தப்பாமல் நடப்பவன்..பால் நிற தேகம் அனைவரையும் வசீகரிக்கும் தோற்றம் தான் ..ஆனால் காதலில் நம்பிக்கை இல்லாதவன்..தாங்கைக்கு தோழனாகவும் சில
சமயம் எதிரியாக சண்டையும் பிடிப்பான்..

அன்று அவளுக்கு துணையாக இருப்பாதாக எண்ணியவன் ஆவலுடன் அடிகடி நேரம் ஒதுக்க ஆரம்பித்தான்.... அவளும் கவலை மறந்து நார்மல் ஆகா நினைக்கையில் அவள் அம்மா தொடங்கினாள் புது கதையை....

கேள்வியை அவள் இருக்க..... பதில் இன்றி தவித்தாள்...

நாட்கள் ஓடியது...துருவின் பழைய கறைகள் வலிகள் அவனை விட்டு விலகுவதாய் தோன்றியது அவனுக்கு..அவனை வருந்த விட கூடாது என்ற நினைப்பில் அவனை சுற்றி காவ்யாவும் க்ரிஷும் மாறி மாறி சுற்றினார்...

இருவரின் வாழ்க்கையும் இரு முடிவில்லா இரு திசைகளில் செல்ல தொடங்கியது...
கணவாய் அவள் செல்ல.. நினைவாய் யார் வருவார்?....

துருவின் தந்தையும் இன்று துபாய் கிளம்புவதால் அவர் போகும் வரை இங்கு தான் இருக்க வேண்டும் என்று கண்டிப்பான பாசத்தின் உத்தரவு இட்டார்.. அதை மீற நினைக்காமல் சம்மதித்தாள்...
தேவியும் பத்மநாபனும் பொருட்கள் வாங்க அங்காடி சென்று விட்டதால்.. வீட்டில் இருந்த க்ரிஷ் காவ்யா தொல்லை தாங்காமல்.. கேரம் விளையாடிக் கொண்டிருந்தனர்.......

துருவ் போன் பேச வெளியே சென்று வரும் சில நிமிடங்களில் க்ரிஷும் காவ்யாவும் சண்டை களத்தில் இறங்கினர்..

க்ரிஷ் அவளின் தலை முடி இழுக்க இவளோ அவனை செல்லமாக கிள்ள பொய் வலியில் நடித்தவன் மீண்டும் அடிக்க.. பெட்டில் இருந்த தலையனையை எடுத்து மாறி மாறி அடித்து கொண்டிருந்தனர்...
டிவியில் டாம் அண்ட் ஜெர்ரி பார்ப்பது போல் இருந்தது துருவிற்கு....

“க்ரிஷ் காவ்யாவ அடிக்காத.. அண்ணி டா.. “

“அண்ணி நீ தான் என்ன அடிச்ச .. என்ன திட்டுற போ உன்கூட நான் சண்டை..” மழலையாய் கொஞ்சியவனை வாரி எடுத்த துருவ் “செல்லக்குட்டி கோச்சிக்க கூடாது..இந்த காவ்யா தான் பேட் கேர்ள் ..நாம அவகிட்ட பேசவேணாம் சரியா,...”

“நீ ஏமாத்துற.. அண்ணி பாரு உன்ன பேட் கேர்ள்னு சொல்லுறான்..நீ இவன கல்யாணம் பண்ணிக்காத..”என்றவன் அவன் கையில் இருந்து குதித்து காவ்யாவின் கழுத்தை கட்டிகொண்டான்..

“அட பாவிங்களா உங்கள தனியா விட்டு போனது தப்பா போச்சே... இரு உங்கள..”என்றவன் தலையணையை தூக்க.. க்ரிஷ் ஓடியே விட்டான்.. “அண்ணி ஓடிரு அவன் அடிப்பான்..”பக்கத்து அறைக்குள் சென்று கதவை சாத்திகொண்டான் க்ரிஷ்,...

ஓட முயன்ற காவ்யாவை.. ஒரே இழுவையில் இழுத்தவன் தன்னுள் அடக்கினான்...”விடு மாமா.. குட்டி இருக்கான்.. “அவனிடம் திமிர நினைத்தவள் தோற்றே போனாள்..

“அவன் தான் பிரச்சனையா...இரு..”அவளை அழைத்துக்கொண்டு க்ரிஷ் பூட்டிக்கொண்ட அறையின் வாசலில் நின்று”க்ரிஷ் கதவ திற..தப்பிக்க முடியாது. .”

அவளின் காதோரமும் அதையே கிசுகிசுத்தான்..”முடியாது டா அண்ணா.. க்ரிஷ் குட்டி தூங்கிட்டான் போ டா..”உள்ளிருந்து சத்தம் கொடுத்தான்..”நீ வர வரைக்கும் அண்ணா வெளிய தான் நிப்பேன்..”என்றவன் காவ்யாவை பின்னிருந்து அணைத்துகொண்டான்...

காதோரம் பட்ட அவன் மூச்சிகாற்றில் திணறி தான் போனாள்...”விடு மாமா..” வெட்கத்தில் கிரங்கியவள் இன்னும் மயக்கத்தை தர....

“”விடவே மாட்டேன் டி ..இப்டியே இருந்துட்டா போதும்னு தோணுது பப்புக்குட்டி...”
மௌனமாய் சிரித்தால்..”என்ன டி தூங்கிட்டியா.. சத்தமே இல்ல.. “என்றவன் காதோரம் முத்தமிட்டான்....
மெய் சிலிரிக்க உடலை அசைதவள் அவனிடமிருந்து திமிறி அவனிடம் இருந்து தப்பித்தாள்..

“என்ன ஆச்சு டி ..இன்னிக்கி வெக்கம் அதிகமா ஆகுது...”

“அதுலாம் ஒண்ணுமில்ல..” க்ரிஷ் இருந்த அறையை தட்டியவள்.. கதவு திறந்தே இருந்ததை கவனித்தால்.. உள்ளே கட்டிலில் ஓராமாய் தூங்கி விட்டான்.. அவனை தூக்கி சரியாக தூங்க வைத்து அறையை சாத்திவிட்டு வந்தவள்..

அமைதியாய் அவன் அருகில் அமர்ந்தவள்.. அவன் கை கோர்த்தவள் அமைதியே நிலை என்ற நிலையில் இருந்தாள்..காரணம்.. நாளையின் நிலை என்ன.. இவனை தன்னால் சமாளிக்க முடியுமா.. என்ற கேள்வியில் சிக்கியவள் பேசும் சக்தியை இழந்தாள்..

இருவரும் அமைதியாய் இருக்க..அவன் மனதிலும் அதே குழம்பம் தான் போல்..அவளே பேச ஆரம்பிக்க..எதை பற்றி கேட்க வேண்டாம் என்று எண்ணியவள் அதையே கேட்டாள்...

“மாமா நாளிக்கி ஏதும் வேலை இருக்குதா....”

“ஏன் எதுக்கு கேக்குற திடிர்னு..”

“கேட்டதுக்கு பதில் சொல்லு மாமா...”

“உனக்கு தெரியும்ல நாளிக்கி என்ன நாள்னு ... அப்றோம் என்ன டி..” அவள் அருகில் அமைதியாய் அமர்ந்தான்...

அமைதியே அவள் பதிலாக போக அவள் மடியில் படுத்து கொண்டான்... சிறிது நேரத்தில் கண் அசந்தான்..அவனை தலையணையில் படுக்க செய்து வீட்டு வேளைகளில் இறங்கினால்...

ஒரு மணி நேரம் பின் தேவியும் பத்மநாபனும் வந்தனர்...“வாங்க பா.... எல்லாம் வாங்கியாச்சா...மா..”

“ஆமா மா...அப்பா கிளம்புரத்துக்கு எல்லாம் எடுத்து வச்சாச்சா...நா ஏதும் பண்ணனுமா?.. “ வாங்கி வந்த பொருட்களை பிரித்தவாறு கேட்டாள்..

“இல்ல மா.. ஆனா ஒரு விஷயம் தான் கஷ்டமா இருக்கு.. நாளிக்கி லட்சுமி இறந்த நாள்.. என்னால இங்க இருக்க முடியாத நிலைமை..நாளிக்கி துருவ்வ நீ தான் மா பாத்துக்கணும்..”

“சரி பா.. நான் பாத்துக்கிறேன்..நீங்க கவலை படமா கிளம்புங்க...”நாளின் நிலையை எண்ணியவள் மாத்தில் அவளவு பதற்றம் அதற்க்கு காரணம் அவன் தான்... வயது இருபத்தி ஐந்து ஆனாலும் அம்மாவின் அன்பில் சிக்கியவனை மீட்க முடியாத ஒன்றாய் இருந்தது அவளுக்கு.. எதுவும் சொல்ல முடியாத நிலை..எதையும் செய்ய முடியாத நிலை..

கனவுகள் தொடரும்............................................................................
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,568
Reaction score
7,787
Location
Coimbatore
துருவ் யாருட உன் காதலி குழப்பமாகவே இருக்கிறது
 




Nadarajan

முதலமைச்சர்
Joined
Apr 28, 2018
Messages
5,558
Reaction score
6,007
Location
Tamilnadu
துருவ் விரும்புவது சாஷினியா?? காவ்யாவா???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top