• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

episode 8(2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

kasthuri

மண்டலாதிபதி
Joined
Jul 6, 2018
Messages
200
Reaction score
332
Age
26
Location
chennai
நாளை துருவின் பிறந்தநாள்.. இருவரையும் பேச வைக்க வேறு வழி இல்லை என்பதை உணர்ந்த சஞ்சனா கார்த்திக் இருவரையும் செலப்ரேஷன் என்ற பெயரில் முடிந்து விட நினைத்தனர்.. அவர்கள் எண்ணம் சக்சஸ் ஆனது தான்..சஞ்சனா சாஷினிக்கு அழைத்தால்..

“சாஷினி துருவ் பர்த்டேக்கு டவர் பார்க்ல வச்சி கேக் கட் பண்ணலாம்னு கார்த்திக் சொன்னான்.எல்லாரும் வராங்க..நீயும் வா டி.. “சஞ்சனா கூற சற்று யோசித்தவள்..

“வரேன் டி..,சரி அம்மா கூப்டறாங்க நாளைக்கு பாக்கலாம்..”

போனை கட் செய்தவள் மனம் ஆயிரம் கேள்விகளை எழுப்பியது.. அவன் பேசுவான.. காதலை உணருவான..என்ன கொடுப்பது அவனுக்கு..இவ்வாறு யோசித்துக்கொண்டே இருந்தவள் தன் தாய் அழைப்பதை கூட காதில் வாங்காமல் தரைய பார்த்துக்கொண்டிருந்தாள்..

“பாப்பா..”பக்கத்தில் வந்து அழைத்ததும் சுரணை பெற்றவளாய் “என்ன மா..இப்டி கத்துறிங்க..”

“அடியே.. எவ்ளோ நேரமா கூப்டறது..அப்டி என்ன உலகத்த மறக்குற யோசனை டி உனக்கு..”

“என்னுடைய உலகத்தை பற்றி தான் மா னு சொல்ல ஆசை தான்.. ஆனால் கை ல இருக்கிற சப்பாத்திக்கட்டை வேலைய காமிச்சிரும்..”மனதில் நினைத்து சிரித்துக்கொண்டவள் ..

“ஒன்னும் இல்ல மா..நாளைக்கு பிரிண்ட் பர்த்டே.. வர சொன்னங்க..”

“போய்ட்டு வா டி.. நான் போகவேனம்னு சொல்லையே ”

“ஆஹான்..நீ சொல்லி தான் பாரேன் மா..”இடுப்பில் கை வைத்துக்கொண்டு அவள் நக்கலாய் கேட்க..

“அடங்காதவ டி.. சொன்ன கேட்ருவியா என்ன.. பண்ணனும் நினச்சா பண்ணிடற அழுத்தக்காரி தான நீ...”

“உனக்கு தெறித்து மத்தவங்களுக்கு தெரிலையே..”

“என்ன டி சொன்ன..”

“சாரி மா. மைன்ட் வாய்ஸ்ன்னு நினைச்சி கொஞ்சம் சத்தமா சொல்லிட்டேன்..”

“அடிங்க....சரி என்ன யோசிச்சிட்டு இருந்த ..அத சொல்லு..விட்ட பேச்சை மாத்திருவ..”

“விடமாட்டியே..அவனுக்கு என்ன கிபிட் கொடுக்கலாம்ன்னு தான் மா..”

“அவனுக்கு என்ன புடிக்குமோ அத கொடு..”

“அவனுக்கு அவன் அம்மா மட்டும் தான் புடிக்கும்.. ஆனா அவங்க இல்லையே...”

“ஏன் டி ... என்னாச்சி..”

“அம்மா அதுலாம் பெரிய கதை அப்புறோம் சொல்றேன்.... நீ பேச்ச மாத்துற குந்தாணி.. “ அவள் செல்லமாய் தன் தாயின் கன்னத்தை கிள்ள..

“வலிக்குது டி..விடு.. அவங்க அம்மா போட்டோ இருக்குதா..”

“இருக்கு மா..ஒரு போட்டோ காமிச்சான்..நான் அத சுட்டுட்டேன்.. அழகா இருபாங்க..”

“ம்மா.. என்னக்கு புரிஞ்சிபோச்சு..ஐடியா கிடசிச்சே,... செல்லகுட்டிமா நீ..”

எல்லாம் தயார் செய்து கொண்டாள் நாளைய நாள் பற்றி..

துருவிர்க்கு அவள் வருவதும் தெரியாது.. கார்த்திக்கின் நச்சரிப்புகாவே வருவதாக ஒப்புக்கொண்டான்..

எல்லா இரவும் தாயின் நினைவுகளில் தவித்தவன் அன்று தான் முதல் முறை தன்னிடம் தாய்மையை காட்டியவளை நினைத்தான்..நினைத்தவன் உறங்கியே விட்டான்..

நவம்பர் 12;;

வீட்டில் யாரிடமும் பேச மாட்டான் என்றாலும் ..அவனுக்கு வேண்டியதை தேவியும் செய்ய தவறவில்லை பத்மநாபனும் தான்..

புது டிரஸ் அணிந்தவன்.. தன் தாயை முதலில் நினைத்தான்..

“ம்மா..நீ இருந்துருக்கலாம் ம்மா.. எல்லாரும் இருந்தும் தனியா இருக்கேன்..”

சற்று கலங்கியவன்...கார்த்திக் வருவதை பார்த்து நிதானம் ஆனான்..

அவன் பத்மநாபன் தேவியுடன் பேசி விட்டு வந்தான்..

“மச்சான் சூப்பரா இருக்கு டா..”

“அட போடா.. “

“நீ வெக்க படரத பாக்க ஒரு கூட்டமே வரும் டா..ஏன் செல்லம் ...”

“டேய் அடங்கு..போலாம் வா..”

இருவரும் கார்த்திக்கின் வீட்டிற்க்கு சென்றனர்..தன் தாய் பிரிந்த நாள் முதல் அவன் கார்த்திக்கின் வீட்டையே அடைக்கலமாய் கொண்டான் தூங்க மட்டுமே தன் வீட்டிற்க்கு செல்லுவான்..

நாலு சுவர்கள் மட்டும் வீடல்ல.. நல்ல உறவுகள் தான் வாழ்கை..தன்னை நேசிக்கும் உறவுகளிள்ளதவனே அதை உணர்ந்தவன் ..

“அனி குட்டி..இந்தாங்க..”அவளுக்க வங்கி வந்த சாக்லேட் பெட்டியை கொடுத்தான்..

“தேங்க்ஸ் அண்ணா...ஹாப்பி பொறந்த நாள் நா..”,மழலையாய் அவள் கூற அவளை அணைத்துக்கொண்டான்...

“சரி வா நாம எதாச்சும் பண்ணலாம் “என்ற வாறு அவனின் அறைக்கு சென்றான்..

அவனே பேசட்டும் என்று அமைதியாய் இருந்தான் கார்த்திக்..

“மச்சான்..”

“என்ன டா..”எப்பா ஆரம்பிச்சிட்டான்...நீ பேசு டா செல்லாகுட்டி.. உள்ளே குதுகளித்தாலும் வெளிய அமைதி புறாவாய் இருந்தான் கார்த்திக்..

“மச்சான்..எனக்கும் சாஷினிய புடிக்கும் டா.. ஆனா அது லவ்வான்னு தெரில ..அவ கூட இருக்கணும்னு தோணும் ..பேசிட்டே இருக்கணும்னு தோணும்..அவள பாக்கணும்.. பாத்துட்டேஇருக்கனும் டா..ரெண்டு வாரம் அவ பேசாம இருந்தது அவ்ளோ கஷ்டமா இருந்துச்சு டா.”

“எப்பா சாமி இப்பயாச்சும் உனக்கு புத்தி வந்துசே”..மனதில் நினைத்தவன்...”நீ அவகிட்ட இதெல்லாம் சொல்லு அவ சொல்லுவா இது என்னனு..ஏன் உசுர வாங்காத..கிளம்புவோமா..”

“சரி டா.. அவ வராலா..”

வாய் பொத்தி சிரித்தவன்...”நீ பேசலல சோ அவல கூப்டல.. “ அவன் சொல்லி முடிக்கவும் யோசிக்க கூட டைம் எடுக்காமல் “அப்போ நானும் வரல..”

“அடேய் உங்க அலைபர தாங்கல..மூடிட்டு வா.. அந்த சஞ்சனா நீ வரலன்னு தெரிஞ்சா..உன்ன கடிச்சி துப்பிருவா..”

“ஐயோ அது ஆபத்தான மிருகம் ஆச்சே.. போய்டலாம்.. ஏன் செல்லகுட்டிய நான் ஸ்கூல்ல சமாளிச்சிகிறேன்...”

“அது சரி..”

டவர் பார்க்.;

அங்கு யாருமே இல்லாததா பார்த்தவன்..”டேய் என்ன ஏமாத்துரிய..”

“இரு டா.. தேடிட்டு வரேன்.. “வேறு திசையில் செல்ல..

சஞ்சனாவை பார்த்தவன்.. அவள் அருகில் சென்றவன்..”ரெடி யா.. சாஷினி எங்க..”

“கேக் வச்சிட்டு இருக்கா..”

அனைவரும்சென்றனர்.. துருவ் அருகில்.. அவன் கண்கள் தேடியது தன்னவளை.. பொறுமையாய் கையில் ஒரு பேக்குடன் வந்தாள்..கேக் வெட்டி விளையாடி முடித்ததும்.. எல்லோரும் தனி தனியாய் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்..

சாஷினி சஞ்சனா ஒரு இருக்கையில் அமர.. அதை ..அவளை நாடி அவன் மனம் சென்றது அதோடு கால்களும்..

இருவருக்கும் தனிமையை கொடுத்து சஞ்சனா விலக..ஒரு புன்னகையால் அவளுக்கு விடை கொடுத்தான்..

யார் ஆரம்பிக்க என்ற போர்க்களம் நடந்தது..

அவள் வாங்கிய கிப்டை கொடுத்தால்..

திறந்தவனின் கண்களில் தடையின்றி நீர் வந்தது.. தன தாயின் படத்தை வரைந்திருந்தது..ஒரு அழகான ப்ரேமில் அடைக்கப்பட்டிருந்தது..

தன்னை கட்டு படுத்திக்கொள்ள முடியாதவன் அவள் கைகளை ஏந்தி தன் கண்ணுக்கு அருகே கொண்டு சென்றவன்.. அழுகை மேலும் அதிகரிக்கவே செய்தது..

“துருவ் அழாத டா..”

“சாரி டி.. நீ வச்சிருந்த லவ்வ நான் கொஞ்சம் கூட மீன் பண்ணல.. உன்னையும் கஷ்ட படுத்தி நானும் கஷ்டப்படுறேன்..எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும் டி..”

“தெரியும் டா..நீ அழாத..”கண்ணை துடைத்தவள் அமைதியானாள்..அவனை பேச வைபதர்க்கு..

“சாஷினி..ஏன் அம்மா தான் என்கூட இல்ல..நீ இருப்பல..என்ன பாதில விட்டு போக மாட்ட ல.. நீ வேணும் டி.ஏன் லைப் புல்லா.. “

“போகமாட்டேன் டா..நீயா போக சொல்ற வரைக்கும்..”

“ஐ லவ் யூ லட்டு மா..”அவள் கூற.. மெய் மறந்து தான் போனான் தன் தாயின் பாசத்தில்..

“நீ லவ்க்கு ஓகே சொன்ன ஒன்னு உனக்கு கொடுக்கணும் வச்சிருந்தேன் டா..”

“நானும் டி..”விஷமமாய் அவன் கூற “டேய்.. பிராடு..”

“எப்ப பாரு அதே நினப்பு டி..உனக்கு..பேட்கேர்ள்..”சற்று தள்ளி உக்கர்ந்துகொண்டான்..

“சொல்லுவா டா..சொல்லுவா.. போ நான் போறேன்..”எழுந்துக்க போனவளை கையால் பிடித்து தடுத்தான்,..

எத்தனையோ முறை அவன் கையை பிடித்திருந்தாலும் இந்த தருணம் அவளை வெட்கப்பட செய்தது.. முகம் சிவக்க ... இதழ் விரிய.. அவள் மீண்டும் அமர்ந்தாள்...

“பாராஹ் ...பொண்ணுக்கு வெட்கம்லாம் வருது..”

அவள் முகத்தை மூடி கொண்டு..”சீ போடா..”

அதற்குள் அவன் கையில் வைத்திருந்த குட்டி பெட்டியை எடுத்தான்..அழகான மோதிரம்.. வேலைபாடுகள் இல்லாமல் ..சிம்பிள் அண்ட் எலகன்ட்டா இருந்தது.. அவளுக்காவே செய்தது போல..

அவள் முகத்தில் இருந்து கையை பிரித்து எடுத்தவன்...

“ஐ லவ் யூனு சொல்றத விட. இனிமே உனக்காக எல்லாம்மா நான் இருப்பேன்.. சண்ட போடு... திட்டு.. டக்குனு சண்டை மறந்துரனும்.. அப்போ தான் நாம நமால இருப்போம்..ஓகே மை லட்டு பாப்பா...”

“ஒய்..”அவளின் கையை விட்டு கண்ணை பார்த்தான்..

“லவ் யூ அல்வேஸ் லட்டு மா..உன்ன விட்டு என்னால எங்கேயும் போக முடியாது டா..போகவும் விருப்பம் இல்ல.”

இதை ஓராமாய் நின்று கவனித்துக்கொண்டிருந்த கார்த்திக்கும் சஞ்சனவும்.. சிரித்தனர்..

“பாரேன்..எப்டி அடிசிகிட்டாங்க.. இப்போ எப்டி இருகுதுங்கனு..”சஞ்சனா சொல்ல..

“ஏதோ நல்ல இருந்து நம்ம உயிரை வாங்காம இருந்தா போதும்...”இருவரும் சிரிக்க ..

சாஷினி துருவ் இருவரும் எழுந்து அவர்கள் அருகே வந்தனர்..

“என்ன டா..சத்தம்..”

“ஒன்னும் இல்ல மச்சான்..நாங்க வந்த வேலை முடிஞ்சிடுச்சு.. அதான் கிளம்பலாம்னு இருக்கோம் டா..”

“சரி மாமா ..நீ கிளம்பு..”மாமாவை சற்று அழுத்திக்கூற.”மாமாவா ..டேய்..சொல்லுவா.. வேற என்னா..”அடிக்க கை ஒங்க.. இருவரும் கட்டிகொண்டனர்...

சஞ்சனாவும் சாஷினியும் அதை கண்களில் படம் எடுத்துகொன்டனர்..”எப்பயும் இதே மாதிரி இருங்க..”சாஷினி அதை வாயால் கூறவும் செய்தாள்..

சட்டென இடி சத்தம். திட்க்கிட்டால்..சாஷினி..”அம்மா... “என்று கதறவும் செய்தாள்...

கிருத்திக ஓடி வர..”பாப்பா..ஒன்னும் இல்ல மா..இடி தான்..”திருநீரை அவள் நெற்றியில் தீட்டினார்..

அப்போதுதான் உணர்ந்தாள் அது கனவென்று...

கனவுகளாய் காதல் மறைந்தது...நினைவுகளும் அவளை வதைத்தது ...............

கனவுகள் தொடரும்................................
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கஸ்தூரி டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top