• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Evano Oruvan 14-Final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

seethavelu

இணை அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
956
Reaction score
934
Location
vellore
சகோதரி அனிசிவாவுக்கு,
உங்களின் குறுநாவல், “எவனோ ஒருவன்” பற்றி சிலவரிகள். இந்த நாவல் ரொம்ப பிடித்து இருந்தது சகோ. நல்ல நாவல்.
குடும்பத்தில் விட்டுக்கொடுக்கமால் பிரிந்த மனைவியை, விட்டுக்கொடுத்து சேர்ந்த கணவன் என்ற கருக்கொண்ட இந்த குறுநாவல், அருமை சகோ. நாவல் ரொம்ப இயல்பாக செல்கிறது, அதேநேரம் உங்களின் டச்சும் இருக்கு. சடன், சடன் என வரும் புன்னகையுடன் நாவல் படித்தேன் சகோ.
நாவலில் டக் என்று கடந்து போகும் வேலையாட்களின் பாத்திரப்படைப்புகள் அருமை. என் முதலாளியிடம் பேசதா உன்னிடம், நானும் பேச மாட்டேன். நீ அவரின் மகளாக இருந்தாலும் கூட என நினைக்கும் டிரைவர். உன்னை போன்ற ஆள்களை வைத்து தொழில் தொடங்கியதுக்கு, அதை செய்யாமல் இருந்து இருக்கலாம் என நினைக்க வைக்கும் தோட்டக்காரன். அவள் நர்ஸ் வேலைக்கு புதிது, ஆகையால் மென்மையாக கேட்டால் என நீங்கள் கலய்க்கும் நர்ஸ் என கவனம் பெறுக்கிறர்கள்.
இவள் தான் ஹீரோயின் என நினைக்க வைத்த அற்புதாவின் சைக்கோ கணவனை பற்றி சொல்லமால் சொல்லிய விதம் அருமை. கண்ணனுடன் அவளை சேர்த்தது அழகு. சரணின் காதல், அவனின் வெளிநாட்டு வேலையின் அவதி, கடைசியில் தாரிணியே தாயகம் என சரண்டர் ஆவது வரை அழகு சகோ. பவதாரிணியை அடம் போல் சித்தரித்து இருந்தாலும், அவளின் அவள் பக்க நியாயங்களும் சரியே. {பயபுள்ள நம்மள மாதிரியே, சோத்தை கண்டதும் ரோஷத்தை விட்டுவிடுகிறது. சிக்கனை தொட்டதும், அண்ணனையே துவாசம் பன்னுகிறது.}. பின்லேடி சாந்தி, அப்பாவுக்கு ஜல்ரா போடும் குட்டி மித்ரன், நட்பை தவறாக புரிந்துக்கொண்ட சர்வேஷ், பிள்ளைகளை ஓதுக்கிய ஜானகி, வாழ்க்கை புரிந்து கொள்ளாத பூஜா, வயசா இருக்கு என்று ஒரு வரியில் வாழ்க்கையை புரியவைக்கும் ரத்தினவேல் என பாத்திரங்கள் அருமை சகோ.
உங்களின் டச் என்று சொன்னேனே, அதனை சில சொற்களில் சொல்லிய விதம் அருமை சகோ. உன்னுடன் வாழ வந்துயிருக்கேன் எனும் போது, அதற்கான வேலிடிட்டி டேட் முடிந்து விட்டது என முடித்தவிதம் / நம்ம ஊரில் வேஷம் போட மனுஷங்களுக்கு சொல்லியா தரனும் / உன் வாழ்க்கையை வைத்து தான் எங்களின் எதிர்காலம் இருக்கு எனும் போது பெண்ணை பெற்ற பெற்றோர் நிலை / பெண்கள் வெறுக்கும் ஜிம் பாடி அவனிடம் இல்லை, உங்கள் குலதெய்வம் என்ன என்று கேட்டு, அவனிடம் தன் சம்மதத்தை சொல்லமால் சொல்லிய விதம் நக்கல் கூடிய அழகு சகோ. / நான் வேப்பங்கொட்டை, எங்கேயும் வளருவேன் என அற்புதா சொல்வது, பெண்களுக்கு அழ்கருத்து சகோ.
சாந்தி – தாரிணியின் உரையாடல்கள் வெகு அருமை சகோ. அந்த அடி, பின் கலங்குவது என சாந்தி அம்மா, ஹீரோயினையே ஓரம் கட்டிவிடுகிறர். உன் பிரெண்ட், பிரெண்ட் என மகளை ஒட்டுவது சூப்பர்.
குடும்பத்தில் பேசி தீர்க்க வேண்டியதை, பேசியே பெரிதாக்கி கொள்ளமால், விட்டு கொடுத்து வாழவேண்டும் என சொல்லிய உங்களின் குறுநாவலுக்கு என் வாழ்த்துகள் சகோதரி.
thangalin vimarsanam vegu arumai :)
 




Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
அருமையான கதை
கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ
????
 




Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
மிகவும் அருமையான கதை...
வாழ்க்கையில் ஒரு பெண் எப்படி விட்டுக் கொடுத்து வாழவேண்டும் என்பதற்கு தாரணியின் கதை ஒரு உதாரணம்.
அதே போல மனைவியிடம் அடங்கிப் போவதால் எந்த ஒரு ஆணும் குறைந்து போவதில்லை என்பதை சரணும் நிருபித்து விட்டான்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top