• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Evano Oruvan 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
Vanakkam makkale,
இன்னிக்கி நேரம் இருந்ததால் ஒரு எபி போட்டிருக்கேன்.படிச்சு பாருங்க.கட்டாயம் உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க.இதுவரை லைக் கமெண்ட் செய்த எல்லாருக்கும் நன்றி.நன்றி

-அனிசிவா


எவனோ ஒருவன் -7

அன்று அற்புதா கண்ணனின் திருமண விஷயம் பேசுவதற்கு மாலை ஆறு மணிக்கு மேல் அவள் வீட்டிற்கு வருவதாக சொல்லியிருந்தனர்.அதற்காக இன்று தோட்டத்தில் வேலைகளை அவசரமாக முடித்துக் கொண்டிருந்தாள்.அற்புதாவை நேராக வீட்டுக்கே வரச் சொல்லியாயிற்று.

காய்ப்பு முடிந்த பின்னால் வீணாக இருந்த சிவப்பு நிற வெண்டை செடிகளை அகற்றி கொண்டிருந்தனர்.
அவற்றை அப்படியே அந்த ‘கம்போஸ்ட் பின்னில்’ போட்டால் அது மக்கி பலன் தர நாள் எடுக்கும் என்பதால்,வேலு அதனை சிறு துண்டுகளாக வெட்டிக் கொண்டிருந்தான், வாய்க்குள் முணுமுணுத்தபடி!

இவள் அந்த இடத்தில் பொறுப்பாய் நிற்க வில்லையென்றால் அப்படியே தூக்கி உள்ளே போட்டுவிடலாம் என்ற அவனின் எண்ணம் அன்று பலிக்கவில்லை.தாரிணி அங்கிருந்து இம்மியும் நகரவில்லை!அவன் திமிரான செய்கையெல்லாம் பார்த்துக் கொண்டு தானிருந்தாள்.
‘இப்படி இவங்களை வைத்து வேலை வாங்குவதை விட சும்மா இருக்கலாம்’என்ற எண்ணம் தாரிணிக்கு நூறாவது முறையாய் இன்றும் தோன்றியது.
ஒரு வழியாய் அவசரப்படுத்தி அந்த வேலைகளை முடிக்கும் நேரம் அங்கு வந்தான் சர்வேஷ்.
‘வந்தியா!வா...இவங்களுக்கு முதலில் முடிச்சிட்டு அப்புறம் உன் கணக்கை முடிக்க வரேன்.’
எதுவும் பேசாமல் அவனை காக்க வைத்துக் கொண்டே பணியாளர்களின் அந்த நாளின் ஊதியத்தை தர ஆரம்பித்தாள்.

“வேலு,உனக்கு நான் சொல்ற வேலையை செய்ய இஷ்டமில்லைன்ன இனி இங்க வர வேண்டாம்!ராம் நீ உன் தம்பியை நாளையிலிருந்து கூப்பிட்டு வா!”
வேலு அவளை முறைத்துவிட்டு வெளியேறிவிட்டான்.

“அடுத்த வாரம்,ஆர்கிட் பூ வளர்ப்பு முறையை சொல்லித் தர ஆளுங்க வருவாங்க!இரண்டு மணி நேரம் மீட்டிங் இருக்கும்,அதுக்கும் உங்களுக்கு சம்பளம் உண்டு.வரும் வாரத்தில் வேலைக்கு வர விருப்பமுள்ளவங்க கட்டாயம் இதில் பங்குபெறணும்”
அவர்கள் சென்றதும் தன் அறைக்கு வந்தவள் மின்விசிறியை போட்டுவிட்டு அமர்ந்தாள். சர்வேஷும் வந்து எதிர் இருக்கையில் அமர்ந்தான்.
‘இன்னும் இரண்டு மணி நேரத்தில் வீட்டில் இருக்கணும்,இந்த வில்லங்கம் பிடிச்சவன் இப்ப எதுக்கு வந்தான்’
அவளின் கால்கள் ஓய்வுக்காக கெஞ்சியது.அமர்ந்திருந்த நிலையிலும் வலித்தது.அவள் எதுவும் பேசாமல் அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகளை குறிப்பெடுத்துக் கொண்டிருக்க,
“தாரிணி ஐயம் ஸாரி,உனக்கு இஷ்டமில்லாததை நான் செஞ்சியிருக்க கூடாது”

சொன்னவனை நேர் பார்வை பார்த்து முறைக்க ஆரம்பித்தாள்.
“ஆனா நான் அன்றைக்கு சொன்னது எல்லாம் நிஜம் தாரிணி.உன்னை கல்யாணம் பண்ணிக்க இன்னமும் விருப்பப்படுறேன்!”

தன் இருக்கையிலிருந்து எழுந்து வந்தவள், அவனின் இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி அடித்தாள்.மூன்றாம் முறையும் அடிக்க வந்தவளின் கையை அவன் பற்ற,அவள் முறைப்பில் பற்றியிருந்ததை விட்டான்.
“அடிக்காதே தாரிணி...வலிக்கிது!”
“உன்னை அன்னைக்கே கவனிச்சி அனுப்பியிருக்கணும்.சர்வேஷ் உனக்கு என்ன டா ஆச்சு?நீ என் நண்பன்,உனக்கு அது நியாபகமிருக்கா?”

அவளை நிமிர்ந்து பார்த்தவன்,மறுபடி பார்வையை திருப்பிக் கொண்டான்.
“எல்லாரும் உன்னை தப்பா பேசினாலும்,என் மனசுக்கு நீ நல்லவன்னு பட்டதால் தான் இத்தனை நாளும் உன் கிட்ட பழகிட்டிருக்கேன்”

“நீ இப்படி தனியா இருக்கிறது எனக்கு கஷ்டமா இருக்கு தாரிணி”
“அது என் பிரச்சனை.அதை எப்படி சரி செய்யணும்னு நானோ சரணோ தான் யோசிக்கணும்,நீ இல்லை.என் பிரைவேட் லைஃப்பில் தலையிடாதே!”
அவன் எழுந்துவிட்டான்.

“தப்பான எண்ணத்தில் எதையும் நான் செய்யலை தாரிணி,உனக்கு என் அன்பை புரிய வைக்க…”
அவன் பேச்சை கைகாட்டி தடுத்தவள்,
“உன் எண்ணம் எப்படியோ ஆனா உன் செயல் ரொம்ப தப்பு சர்வேஷ்”
“நான் போறேன்” எழுந்தவனிடம்,
“சீக்கிரம் ஒரு கல்யாணத்தை செஞ்சிக்கோ.உனக்கே உனக்குன்னு ஒருத்தி வந்தா தான் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இருக்கும்.இப்படி காட்டாறு மாறி கண்ட திசையிலும் போக மாட்டே”

அடிப்பட்டவன் போல் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியேறினான்!
அவனை தொடர்ந்து அவளும் கிளம்பி தன் வாகனத்துக்கு வர,முன்பக்க டயர் பஞ்சர்!
நேரங்கெட்ட நேரத்தில் இதுவேற!

நொந்தபடி எதிர்பக்கம் இருந்த பஸ் ஸ்டாப்புக்கு நடக்க ஆரம்பித்தவளின் பக்கம் வந்து நின்றது அந்த கார்,சரணுடைய கார்.
‘இங்கணையே சுத்துறான்,இவனுக்கு பொழப்பே கிடையாதா?’
கண்டுகொள்ளாமல் இவள் மேலும் நடக்க,காரை குறுக்கே விட்டான்!
“டைம் ஆகிருச்சு தாரிணி, மித்து வந்திடுவான்.என் கூட வாயேன் சீக்கிரம் போயிடலாம்”
ஆபத்துக்கு பாவமில்லை,அவன் வாகனத்தில் ஏறிக் கொண்டாள்.அங்கே அனைவரும் ஏற்கனவே வந்துவிட்டனர்.தம்பதிகளாய் வீட்டினுள் வந்த இவ்விருவரையும் ஆர்வமாய் பார்த்தார் சாந்தி!
———
அவனை பல நாட்களாய் கவனிக்கிறாள்.இவள் அலுவலகத்துக்கு நடந்து செல்லும் நேரத்தில் அவனும் சரியாய் இவள் போகும் பாதையில் வருவான்…

ஆள் பார்க்க நன்றாய் தான் இருந்தான்.அவளை போலவே அதே மாநிறத்தில்,களையாய் இருந்தான்.அவனிடம் முக்கியமான இரண்டு விஷயங்கள் அவளுக்கு ஓகே.முகத்தில் அழகாய் ஒரு மீசை இருந்தது,அவள் வெறுக்கும் ‘ஜிம் பாடி’ அவனுக்கு இல்லை!
‘தாரிணி ரொம்ப கெட்டு போயிட்டே புள்ள’

இருவரின் கண்கள் மட்டும் பேசிக் கொண்டிருக்க,அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவன் சரண் தான்.

“தாரிணி உனக்கு விசிட்டர்”
அவள் பக்கம் குனிந்த அந்த ஆபிஸ் பெண்,
“யாரு பா அது,செமையா இருக்காரு!”
“செமையா?அப்போ எனக்கு நிச்சயம் தெரியாத ஆளா தான் இருக்கும்!பெயரை கேட்கலையா நீ?கேட்டிறாதே!உன்னையெல்லாம் வேலைக்கு வச்ச என் மாமாவை சொல்லணும்”
அவள் தலையில் தட்டி விட்டு விசிட்டர் அறைக்கு சென்றாள்!

அங்கே அவன் தான்.
‘ஆபிஸுக்கே வந்துட்டியா!’
அவனை நெருங்கியவள்,
“எஸ் யார் நீங்க”
“ஏங்க என்ன மறந்திட்டீங்களா...தாரிணி”

அவனை அன்று தான் புதிதாய் பார்ப்பது போல் யோசனையுடன் பார்த்தாள்.அத்தனையும் நடிப்பு,அது அவனுக்கும் புரிய,
“நான் சரண்ங்க…உங்க சைட்டு”
“சைட்டா! மிஸ்டர் நீங்க தப்பான ஆள் கிட்ட பேசிட்டு இருக்கீங்க”

திருமணத்தின் மீது அவளுக்கு ஒரு வித வெறுப்பு இருந்தது.தன் தமையனின்,அற்புதாவின் வாழ்க்கை எல்லாம் ஆரம்பித்த வேகத்தில் முடிந்திருந்தததி பார்த்து.கொஞ்ச நாளாய் அவனை பார்ப்பதை கூட தவிர்க்க ஆரம்பித்திருந்தாள்.

இப்போது அவன் அவளிடத்தில் வந்து நிற்கையில்,
‘ஏதோ சைட் அடிச்சோமா போனோமான்னு இல்லாம இது என்ன இவனோட ஒரே வம்பா போச்சு!’

“என்ன விஷயமா என்னை பார்க்க வந்தீங்க?”
“உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணுங்க”
“சாரி,தெரியாதவங்க கூட பேசி பழக்கமில்ல”
“தாரிணி ப்ளீஸ்,பேசியே ஆகணும்.என் பிரச்சனைக்கு நீங்க தான் ஒரு நல்ல வழி சொல்லணும்”

அவனை பார்த்துக் கொண்டே யோசிக்க ஆரம்பித்தாள்.
‘சே பாவமா கேட்குறான்.பேச தானே...போவோம்’
“ஆபிஸ் எதிரில் உள்ள காஃபி ஷாப்பில் வெயிட் பண்ணுங்க,வரேன்”
போய்விட்டாள்.அவள் வருவாளா என்று ஒரு டேபிளில் காத்திருக்க ஆரம்பித்தான் சரண்!

பெர்மிஷன் போட்டுவிட்டு போகும் வழியில் அற்புதா அழைத்தாள்.அற்புதாவுக்கு தனியே இருப்பது பல இன்னல்களை உண்டு செய்கிறதாம்.
பெற்றவர்கள் இல்லை,பாதியில் முடிந்து போன அவள் திருமண வாழ்க்கை எல்லாம் அவளை சுற்றி பல மனித நரிகளை சுற்ற வைத்து விட்டிருந்தது.
“தாரிணி எனக்கு இனி இந்த வீட்டில் தனியா இருக்க வேண்டாம்னு இருக்கு டி”
“அங்க இருக்கலைன்ன எங்கே போவே அற்பு?”
தோழியிடம் தன் பிரச்சனையை மேலோட்டமாக சொல்ல,
“எந்த நாய் டி உன் கிட்ட அப்படி செஞ்சது, சொல்லு உண்டு இல்லைன்னு செய்றேன்”
“அதெல்லாம் வேண்டாம்.துஷ்டரை கண்டால் தூர விலகணும்னு முடிவெடுத்திருக்கேன்.உன் ஃபிரண்ட் ஹாஸ்டலில் எனக்கு ஒரு தனி ரூம் வாங்கி தருவியா நீ? என் காலேஜுக்கு அது தான் பக்கம்”

இவளிடம் சரியென்றவள் தன் தோழிக்கு போன் செய்து,
“அற்புதான்னு என் நண்பி சொல்லியிருக்கேன்ல, அவளுக்கு ஒரு ரூம் வேணும்.அவ சிங்கிள் ரூம் கேட்பா தராதே.அவ கூட இருக்கிறதுக்கு யாராவது நல்ல பொண்ணா பார்த்து போட்டு விடு.எந்த பிரச்சனையும் இல்லாம அவளை கொஞ்சம் பத்திரமா பார்த்துக்கோ மா”
கண்ணனையும் அழைத்து அற்புதாவின் வீட்டை வாடகைக்கு விட ஏற்பாடு செய்தாள்.

தாமதமாகவே அவன் சொன்ன இடத்திற்கு வந்தாள்.அவனை பார்த்த நொடி அவளது சுவாசம் சீரானது.மனநிலையில் ஒரு மாற்றம். பிரச்சனைகளை ஓரங்கட்டி வைத்து விட்டு அவனுடன் நடக்க போகும் நேர்காணலுக்கு தயாரானாள்.
அவளை பார்த்ததும் அவன் முகத்திலும் ஒரு புன்னகை.ஆர்வக் கோளாறில் அவள் கேட்காமலேயே,

“என் சொந்த ஊர் செங்கல்பட்டுங்க.அம்மா அப்பா கிடையாது.இங்க பக்கத்தில் உள்ள *** சாஃப்ட்வேர் கம்பெனியில் நாலு வருஷமா வேலை பார்க்கிறேன்.உங்களை எனக்கு பிடிச்சிருக்குங்க.உங்களை கல்யாணம் செய்துக்க ஆசை படுறேன்”

கண்களை பார்த்து நேராக சொன்னான்.
“எனக்கு இந்த சினிமாவில் வர மாதிரி எல்லாம் பிரபோஸ் பண்ண தெரியாதுங்க.அதான் நேராவே கேட்குறேன்.நாம கல்யாணம் செய்துக்கலாமா...”
அப்படி ஒரு ஏக்கப் பார்வை பார்த்தான்.

“ஓ ஹோ...அப்புறம்”
“நல்ல சம்பளம்,சொந்தமா பிளாட் இருக்கு, லோன் தாங்க.எனக்கு சொந்தம்னு சொல்லிக்க சித்தப்பா மட்டும் தான் இருக்கார்.ஊரில் விவசாயம் செய்றார்.”

“என்னை பத்தி என்ன தெரியும் உங்களுக்கு?”
“நீங்க சொன்னா தெரிஞ்சிப்பேன்”
முகம் கொள்ளா புன்னகையுடன் பேசிக் கொண்டே போனான்.
இடையிட்டவள்,

“உங்க சேலரி எவ்ளோ? புரூஃவோட வேணும்.உங்க மெடிக்கல் செர்டிபிகேட் வேணும்.”
அதிர்ச்சியாய் இருந்தாலும் ‘பூம் பூம்’ மாடு போல் தலையாட்டினான்.

“இதெல்லாம் முதலில் ரெடி பண்ணுங்க.இப்ப நான் கிளம்புறேன்”
அவள் குடித்த காபிக்கான தொகையை டேபிளில் வைத்தவள்,போகிற போக்கில்,
“உங்க குலதெய்வம் என்ன?”
அவன் அவளை இன்னமும் அதிர்ச்சியாய் பார்க்க,
“என்னால் மதம் எல்லாம் மாற முடியாது”
அவன் பதில் சொல்லாமல் அவளை பார்த்து அம்சமாய் சிரித்தான்.
‘ஐயய்யோ ஆர்வக் கோளாரில் உன் சம்மதத்தை காட்டிட்டியே தாரிணி’
மானசீகமாய் தலையில் அடித்துக் கொண்டு அவனை திரும்பியும் பாராமல் கிளம்பியிருந்தாள்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top