• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Evano oruvan epi 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
அந்த காலை மிக ரம்மியமாய் அரம்பித்தது தாரிணிக்கு.இவள் எழும் போது வீட்டில் யாருமில்லை.சரண் மித்துவை பள்ளியில் விடப் போயிருந்தான்.

அற்புதாவின் திருமணம் நடந்து இன்றுடன் இரண்டு மாதங்கள் முடிந்திருந்தது. அற்புதாவின் நிலை எப்படியோ,தன் நிலையில் பல மாற்றங்களை உணர்ந்திருந்தாள் தாரிணி.

சரண் அவளது ‘மித்ரன் பார்ம்ஸ்’ஐ ஒட்டியுள்ள வயலை விலைக்கு வாங்கிவிட்டானாம். அவளுக்கு விஷயம் தெரிந்ததே அற்புதா மூலம்.இவனை கூடிய விரைவில் அனுப்பிவிடலாம் என்று நினைப்பு இப்போது வீணாகி போயிருந்தது.

தந்தையின் வரவுக்கு பின் காரில் மட்டுமே போகிறான் அவர்கள் வீட்டு இளவரசன்.சரண் சொல்லியும் அவன் கேட்பதாக இல்லை.

ஒரு காபியை கலந்து தனக்கென எடுத்துக் கொண்டவள்,தன் வீட்டுத் தோட்டத்தில் நடைபயில ஆரம்பித்தாள். தாமரை செடியை வைத்திருந்த தொட்டியில் மொட்டுக்களும்,பூவுமாய் பார்ப்பதற்கு அத்தனை அழகாய் இருந்தது.

கம்போஸ்ட் போட்ட ஒரு சில நாட்களிலேயே மல்லி செடி நிறைய மொட்டு விட்டிருந்தது.
‘என்னவோ இன்னிக்கி எல்லாம் சந்தோஷமான விஷயமாவே கண்ணில் படுதே’

வெளியே போய்விட்டு திரும்பியவன் கையில் ஏதோ பெரிய பார்சல்.தாமரை தொட்டிக்கு அருகில் சென்று அதை வைக்க அது ஒரு விநாயகர் சிலை!அவன் அந்த இடத்தை விட்டு அகன்றதும்,அதனை சுற்றி வருவது தாரிணியின் முறையாகி போனது.

விரைவில் தயாராகி வெளியில் வந்தவன்,
“இன்னிக்கி வேலைக்கு போகலையா?”
அவன் வைத்திருந்த பிள்ளையாருக்கு செம்பருத்திப்பூ மாலை கட்டி முடித்திருந்தாள்.
“இன்னிக்கி நான் லீவ்”
“ஓ...சரி நான் கிளம்புறேன்”

இவள் அதே இடத்தில் அமர்ந்து தன் ரசனையை தொடர,போனில் அழைத்தாள் அற்புதா.
“என்ன டி அதிசயம், எனக்கெல்லாம் போன் செய்றே?”
“தாரிணி எனக்கு உன்னை விட்டா யாரு டி இருக்கா?”
“பார்றா...அப்புறம்”
“நீ தான் என்னை பெறாத தாய்…”
“ரைமிங்கா சொல்லணும்னு ஏதாவது சொல்லிட போறேன், டயலாக்கை நிறுத்திட்டு என்ன விஷயம்னு சொல்லு அற்பு”
“என் கூட வானவில் ஹாஸ்பிட்டல் வரைக்கும் வருவியா?”

அது அவர்கள் ஊரில் புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவமனை.
“அற்பு...”சந்தோஷத்தில் பேச்சு வரவில்லை அவளுக்கு.
“கண்ணன் ஊரில் இல்லை.உன்னை கூட கூட்டிட்டு போய் பார்க்க சொன்னார்”
“சரி நீ ரெடியா இரு, நான் வரேன்...”

அற்புதா கொஞ்சம் பதட்டமாய் காத்திருந்தாள்.அவர்களிடம் வந்த நர்ஸ் புதிதாய் பணியில் சேர்ந்தவள் போல!
மிகவும் சாந்தமாய் சின்ன பிள்ளைகளுக்கு விளக்குவதாக நினைத்து,
“நான் கேட்குறதில் எதெல்லாம் உங்களுக்கு இப்ப இருக்குன்னு சொல்லுங்க மேம்!நாள் தள்ளி போயிருக்கா?சாப்பிட பிடிக்குதா?வாமிடிங், அதிகமான அசதி, அடிக்கடி தூக்கம்,இதில் என்னென்ன இருக்கு?உங்க லாஸ்ட் டேட் சொல்லுங்க”

அற்புதா ஒவ்வொன்றாய் பதில் சொல்லிக் கொண்டு வர,தாரிணி அந்த கடைசி கேள்விக்கான பதிலை தனக்குள் யோசிக்க ஆரம்பித்தாள்.அதை சாதாரணமாய் ஒதுக்கிவிட தோன்றவில்லை! நெஞ்சு தடதடக்க ஆரம்பித்தது.

‘கடவுளே அப்படி எதுவும் இருக்க கூடாது’
பொறுமை அறவே இல்லாமல்,அற்புதா பரிசோதனைக்கு சென்றுவிட்ட இடைவெளியில் இவளும் தனக்கானவற்றை சோதிக்க, அது அவளுக்கு மட்டும் மிகப் பெரிய சோதனையாய் போனது.

“எங்கே காணாமல் போன தாரிணி?எத்தனை தடவை போன் செய்றேன்!ஏன் டி ஒரு மாதிரியா இருக்கே?”
பழைய இடத்திற்கு இவள் திரும்ப அற்புதா கேட்டாள்.
“ஹாங் ஒண்ணுமில்லையே…உனக்கு டாக்டரை பார்க்கலாமா?”
“நான் தனியாவே பார்த்திட்டேன்!நல்லா வந்தே எனக்கு துணைக்கு!”
“சாரி மா,என்ன சொன்னாங்க சொல்லு.”
“நாம நினைச்சது தான் தாரிணி!கண்ணன் கிட்ட சொன்னேன், அவருக்கும் ரொம்ப சந்தோஷம்”
அவள் முகத்தில் வெட்கப் புன்னகை!

அதை ரசிக்கும் எண்ணம் கூட இல்லை தாரிணிக்கு...தன் நிலை தான் இனி என்ன!
யோசனையுடன் வீடுவரை வந்தாயிற்று!அற்புதா வற்புறுத்தி அழைத்ததால் அந்த வீட்டினுள் சென்றாள்.

அற்புதா சொன்ன விஷயத்தை கேட்டு பூரித்து போனாள் சாந்தி!அவர்களுடன் தாரிணியையும் சாப்பிட அழைத்தாள்.சாந்தி வழக்கம் போல் ‘அற்புதா உன் பிரண்ட்’ புராணத்தை பாட ஏற்கனவே இருந்த எரிச்சலில் மேலும் எரிச்சலாகியிருந்தாள் தாரிணி.
“நான் கிளம்புறேன் அற்புதா. மித்து வந்திடுவான்!”
“இன்னும் கொஞ்ச நேரம் இரு தாரிணி.அசதியா தெரியுறே பாரு”
அவளிருந்த மனநிலையில் கஷ்டப்பட்டு நேரத்தை கடத்தினாள் தாரிணி!

“நீயும் சீக்கிரம் இரண்டாவது பிள்ளை பெத்துக்கோ தாரிணி.நான் அற்புதாவோட சேர்த்து உன்னையும் நல்லா பார்த்துக்குறேன்”
அவள் அன்னை சாந்தி உருக்கமாய் சொல்ல,அதற்கு உருக வேண்டும் என்று ஆசை பட்ட மனதை கட்டுப்படுத்தி, சாந்தியை முறைக்க ஆரம்பித்தாள்.
-----
வெளிநாட்டு வாழ்க்கையை ஓர் வரியில் சொல்வதென்றால், இக்கரைக்கு அக்கரை பச்சை!உள்ளூர் வாழ்க்கைக்கு அங்குள்ளவர் எந்தளவிற்கு எங்குவர் என்பதை அதனை அனுபவிப்பவர்கள் மட்டுமே அறிவர்.

தாரிணியின் குணத்துக்கு இப்படி தன் சொந்தங்கள் யாரும் அருகில் இல்லாத தனிமையில் நாட்களை கடத்துவது என்பது இயலாத காரியம்.அதன் பலமுக வெளிப்பாடு தான் இந்த சண்டைகளும் குழப்பங்களும்!நித்தமும் சரணை நிம்மதியில்லாமல் செய்துக் கொண்டிருந்தாள்.

குளிர்க்காலம் ஆரம்பமாகியிருந்தது.எல்லா பக்கமும் வெள்ளை போர்வை விரித்தார் போன்றதொரு பனிப்பொழிவு.பார்க்க அழகாய் இருந்தாலும்,சும்மாவே அந்த ஊரை வெறுக்கும் தாரிணிக்கு இந்த காலத்தை அறவே பிடிக்காது.அதிகம் வெளியே போகாமல் மித்துவை பார்த்துக் கொள்வாள்.

அவள் வெறுத்துக் கொண்டிருந்த அந்தக் காலத்தை அதன் பின் அவள் அனுபவிக்க முடியாதபடி ஆனது.மித்ரனுக்கு ஃப்ளூ காய்ச்சல்!
“சரண் எனக்கு ரொம்ப பயமா இருக்கு,நீங்க இன்னிக்கு மட்டும் வீட்டில் இருங்களேன்.ஏதும் எமெர்ஜென்சின நான் தனியா என்ன செய்வேன்?”
அவன் தூங்கும் பிள்ளையை தொட்டுப் பார்த்து,
“நேத்துவிட எவ்வளவோ பரவாயில்லை. இன்னிக்கு நான் கண்டிப்பா ஆபிஸ் போயே ஆகணும்.கொஞ்சம் சமாளிச்சிக்கோ தாரிணி”
அவன் பணிவாய் சொன்னது கூட அவளுக்கு ஆத்திரம்!
“ப்ளீஸ் சரண்”
“என்னது இது சின்ன பிள்ளை மாதிரி!எதாவதுன்ன போன் செய்மா, உடனே வந்திடுறேன்”
எந்தக் காலத்தில் நீ போனை எடுத்திருக்கே ராசா!?
அவன் சென்றுவிட்டான். இவள் எந்த வேலையும் செய்யாமல் மகனை பார்த்துக் கொண்டு அன்று முழுவதும் அவன் பக்கத்திலிருந்தாள்.

மித்து பக்கம் இவளும் தூங்கியிருக்க ஏதோ ஒரு உள்ளுணர்வில் எழுந்து பார்த்தவளுக்கு தட்டாமலை சுற்றிவிட்டது.கை கால்கள் இழுத்துக் கொண்டு மித்ரன் போராடிக் கொண்டிருந்தான்.
“மித்து மித்து”
என்ன செய்வது என்று அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.சரணுக்கு அழைக்க அவன் போனை எடுக்கவில்லை.
அங்குள்ள ஆம்புலென்ஸ் சேவையை அழைத்து நிலவரத்தை சொல்ல, அது வந்து சேர்வதற்குள் மயக்கமாகியிருந்தான் பிள்ளை.
அவனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து இவள் பலமுறை அழைத்தும் சரண் போனை எடுத்தானில்லை. அந்த நாள் மாலை வரையிலும் சரணை இவளால் பிடிக்க முடியவில்லை.பிள்ளையின் நிலை வேறு அவளை பாடாய்படுத்த தேற்றுவதற்கு சரணுமின்றி உடைந்து போனாள்.
மித்துவுக்கு வந்திருந்தது ‘செய்ஷர்’! காய்ச்சல் அதிகமானதால் வந்திருக்கிறது என்று கூறிய மருத்துவர்கள் குட்டியை அங்கேயே உள் நோயாளியாக சேர்த்திருந்தனர்.
இவளையும் அவனுடன் அதிகம் இருக்க விடவில்லை.தனியே இருந்தவளின் எண்ணம் எல்லாம் இப்போது சரணின் பக்கம்.
‘இப்படி ஒருவன் இருப்பானா?’
இத்தனை நேரமும் பிள்ளைக்கு என்னவென்று அறிந்துக் கொள்ளும் எண்ணமில்லாமல்!
அவன் செய்தது தீண்ட தகாத செயல் போல் அத்தனை ஆத்திரத்தை மனதில் வளர்த்து வைத்திருந்தாள்.
அவளது போனும் சார்ஜ் இல்லாமல் தன் உயிரை விட்டிருந்தது. கண்ணமர்ந்து இருந்தவளின் பக்கம் மூச்சிரைக்க வந்தமர்ந்தான் சரண்.

அவனை பார்த்ததும் இருந்த கோபம் எல்லாம் மாயமாய் மறைந்து குழந்தை போல் அவன் தோள் சாய்ந்து அழ ஆரம்பித்துவிட்டாள்.
“எனக்கு ரொம்ப பயமா இருந்தது சரண்.இந்த ஊரே எங்களுக்கு வேண்டாம்”
பதிலுக்கு எதுவும் சொல்லாமல் தோளை தட்டிக் கொடுத்தான். பெரிய ஆர்ப்பாட்டத்தை எதிர்பார்த்திருந்தவனுக்கு அவளின் அழுகை ஆச்சரியமாயிருந்தது.

சுனாமி ஆரம்பிக்கையில் கரையில் உள்ள நீர் எல்லாம் முதலில் உள்வாங்கி, எல்லமுமாய் சேர்ந்து மொத்தமாய் திரும்ப அடித்து ஊரை வீழ்த்த வருமே, அதே போல் ஒரு பேரிடர் தன் வாழ்க்கையில் நடக்க போகிறது என்பதை அறியாதவனாய் இருந்தான் சரண்.

மித்து டிஸ்சார்ஜ் ஆகி வந்த சில நாட்களிலேயே அவன் படிக்கும் ப்ளே ஸ்கூலில் ஒரு சேட்டைகார சீன மாணவன் அவன் கையை கடித்துவைத்ததில் பிள்ளைக்கு பெரிய காயம்.

பள்ளியிலிருந்து அழைப்பு வந்ததும் தாரிணியை அழைத்து கொண்டு அவன் அங்கே போக அவளால் பெரிய ரகளை ஆகிப்போனது.
“எனக்கு வந்த ஆத்திரத்தில் அந்த பொடியனை என்ன செய்திருப்பேன் தெரியுமா, நீங்க தான் என்னை இருக்க விடாம இழுத்திட்டு வந்துடீங்க சரண்”
“என்ன பேசுறே நீ! அதான் அவங்க அந்த பையனை வெளியே அனுப்ப போறோம்னு சொல்லிட்டாங்களே.இன்னும் என்ன டி”
“மித்துக்கு எப்படி ஆகிடிச்சு பாருங்க!”
மித்து அழுதழுது காரில் அவனது சீட்டில் தூங்கிப் போயிருந்தான்.
“டாக்டர் வேற ஊசியை போட்டு அவனை பாடாய்படுத்திட்டார்”
ஒரு மணிநேரமாய் மகனை பற்றிய புலம்பலில் இருந்தாள் அவள்.

“சரி மா விட்று.சின்ன பிள்ளைகளுக்கு இந்த மாதிரி விஷயமெல்லாம் நடக்கத் தான் செய்யும்.அதுக்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்”
அவ்வளவுதான்!
அவளின் ‘டெக்டானிக் பிளேட்ஸ்’ பிளவுபட ஆரம்பித்தது.
“என்ன சரண் இப்படி ஈசியா சொல்றீங்க! என் மனவேதனை உங்களுக்கு கொஞ்சமாவது புரியுதா? மித்து மேல் உங்களுக்கு கொஞ்சம் கூட பாசமே இல்லை!
அன்னைக்கும் இப்படி தான் போன் தொலைஞ்சி போச்சு, நீ எங்கே இருக்கேன்னு தெரியலைன்னு என் கிட்ட கதை விட்டீங்க! உங்களை இந்த அமெரிக்கா ரொம்ப மாத்திசிடுச்சு.பாசமில்லாத மனுஷனா!”
வண்டியை அவர்கள் வீட்டு பார்க்கிங்கில் விட்டிருந்தான். இவளுக்கு இன்று முழுவதும் பல விஷயங்களில் விளக்கமளித்து அவனும் சோர்ந்து போயிருந்த நேரமது.
இப்போதும் பதில் பேச தோன்றாது தூங்கும் பிள்ளையை தூக்கிக் கொண்டவன் இவளை உதாசினப்படுத்திவிட்டு வீட்டினுள் செல்ல, இன்னமும் பற்றிக் கொண்டு வந்தது அவளுக்கு.
“ நான் கேட்டுகிட்டே இருக்கேன்.பதில் சொல்லுங்க சரண்”
அவன் பின்னோடு வந்தவள் விடாமல் கேட்க,
“இந்த சின்னத்தனமான பேச்சுக்கு என் கிட்ட பதிலில்லை தாரிணி.என்னை கொஞ்ச நேரம் நிம்மதியா விடு”

சும்மாவே மகனை பார்த்துக் கொள்கிறேன் என்று சமையலுக்கு மட்டம் போடுபவள் அன்று அவன் கோபத்தை சாக்காக எடுத்துக் கொண்டாள்.அவனுக்கு சாப்பிட எதுவும் தரவில்லை!

அதற்காக இருவருக்கும் ஆரம்பித்த வாக்குவாதத்தின் முடிவில்,
“மனுஷன் சம்பாதிக்கிறதே நல்லா சாப்பிட தான், வர வர அதை கூட செய்ய மாட்றே! உன் மனசில் என்ன நினைச்சிட்டு இருக்கே தாரிணி! நானும் எத்தனை நாள் தான் பொறுத்து போவேன்?”
பயங்கர கோபம் அவனுக்கு...
“சரி கொஞ்சம் இருங்க இப்ப செஞ்சி தரேன்”
“ஒண்ணும் தேவையில்லை! உன் கிட்ட கெஞ்சி வாங்க எனக்கு அவசியமும் இல்லை. இதுவும் உன் கடமை தான்,மித்துவை பார்த்துக்குறது மட்டுமில்லை”
ஆத்திரமாய் தன் அறைக்குள் சென்றவன்,கதவை மூடுமுன்,
“என் கூட இருந்தா ஒழுங்கா இரு!இல்லைன்ன ஊருக்கு போயிடு! உங்க அண்ணனை மாதிரி நீயும் உங்க வீட்டோட இருந்துக்கோ!என் நிம்மதியை கெடுக்காதே!”
அவன் போய் பல நொடிகள் கடந்தும் அங்கேயே சிலையாய் நின்றாள்.










 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top