• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Evano Oruvan epi 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
எவனோ ஒருவன்-3

தன் அறைக்கதவை சாத்திவிட்டு,மறுபடியும் அதே எண்ணிற்கு அழைத்தாள்.
“ஹலோ, நான் அற்புதா பேசுறேன்.சாரி சிக்னல் பிராப்ளம்,இப்ப சொல்லுங்க”
“ ஒரு முக்கியமான விஷயம், அதான் கூப்பிட்டேன்...நாளைக்கு உன்னை பார்க்க முடியுமா?”
‘எதுக்கு?’
எண்ணிய நொடி வாய் கேட்டுவிட்டிருந்தது!
“நேரில் பேசலாமே”
“ நாளைக்கு முடியாது ந..ங்க,காலேஜ் இருக்கு.சாயங்காலம் ஒரு வொர்க்‌ஷாப் போகணும்”
“ஓ...அப்போ இன்னொரு நாள் பார்க்கலாம்”அவன் குரலில் ஏமாற்றமோ?
தாரிணியை பற்றி இவளிடம் எதுவும் கேள்வியில்லை.இவர்கள் இருவரும் ஆடும் இந்த கண்ணாமூச்சி எத்தனை நாள் என்று தெளிவில்லை அற்புதாவுக்கு!

மகன் எழுவதற்குள் அவசர அவசரமாய் அவனுடைய சாப்பாட்டு வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தாள்.
“தாரிணி எனக்கு ஒரு டவல் தாயேன்”
சொட்ட சொட்ட நனைந்திருந்தான்.அவன் நின்ற இடமெல்லாம் நீர் குளம்.அவனை முறைத்தவள் அலமாறியிலிருந்து டவல் எடுத்துத் தந்தாள்.
“வேணுமின்னே நான் எதுவும் செய்யலை தாரிணி!”
எதை சொல்கிறான் !

மகனை எழுப்பலாம் என்று போக இருவரும் குளியலறையில் ஆட்டமாய் ஆட்டம்.மகனை குளிக்க வைத்துக் கொண்டிருந்தான். அதில் நனைந்தவன் தான் போல!
“மா என்னை இனி டெய்லி அப்பாவே குளிப்பாட்டி விடுவாங்க, ஓகே!”
பொய்யான புன்னகையை மகனுக்கு தந்தவள், அவ்விடம் விட்டு வந்து தானும் தயாராகி நின்றாள்.
“அப்பா நீங்களும் வாங்க பா, சேர்ந்து சாப்பிடலாம்!”

சரண் இவளை பார்க்க, மகனும் தன்னையே பார்த்துக் கொண்டிருந்ததை உணர்ந்தவள், “சாப்பிடுங்க” என்றபடி அவனுக்கும் பரிமாறினாள்.

ஸ்கூலுக்கு அப்பாவோடு தான் போவேன் என்று மித்ரன் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து சாதித்ததால்,சரணின் ‘மினி கூப்பர்’ காரில் பயணித்துக் கொண்டிருந்தனர் மூவரும்.
காரை பற்றி ஏகப்பட்ட கேள்வி கேட்டான் அவர்களின் புத்திரன்!

“அப்பா நான் வரும் போது வீட்டில் இருக்கணும், பிராமிஸ்”தந்தையை கட்டிக் கொண்டு அவனுக்கு மட்டுமாய் ஒரு டாட்டாவை காட்டி பள்ளிக்குள் விரைந்தவனை நிறுத்தி,
“மித்து குட்டி, அம்மாக்கு” சரணின் சிபாரிசில் அவள் பிள்ளை தனக்கு செய்ததை தாரிணியால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை!

பள்ளியை விட்டு சற்று தூரம் வரவும்,
“கொஞ்சம் வண்டியை நிறுத்துங்க சரண்”
அது நிற்கவும் சட்டென்று இறங்கிக் கொண்டாள்.
“எனக்கு என் வழி தெரியும். நான் தனியாவே போயிப்பேன்”
வேக நடை போட்டு அவனை திரும்பியும் பாராமல் போய்விட்டாள். இறங்கி அவள் பின்னோடு ஓடி வந்தவன்,
“வீட்டு சாவி கொடுத்திட்டு போ தாரிணி”
அவன் சொன்னதை காதில் வாங்காமல் ஒரு ஆட்டோவில் ஏறி விரைந்துவிட்டாள்.போகிறவளை பார்த்துக் கொண்டு நின்றான்,
‘மைல்ஸ் டு கோ’ என்ற எண்ணத்தில்!

வீட்டுக்கு திரும்பியிருந்தாள். இன்று ஏகப்பட்ட வேலைகள் அவளுக்காக காத்துக் கொண்டிருந்தன!மிக மிக வேகமாய் தன் காரை எடுத்துக் கொண்டு விரைந்தாள்.

அவள் நடத்திக் கொண்டிருந்தது ஒரு விவசாய பண்ணை. சரணுடன் வாழ முடியாது என்று பிரிந்து வந்தவளுக்கு கையில் வேலை எதுவும் கிடையாது. பெற்றவர்களை நம்பி வந்தவளுக்கு இந்த ‘பிரிந்து வாழும்’முடிவால் அவர்களின் ஆதரவும் இல்லை.

அவர்களிடம் பல விதத்தில் சொல்லி பார்த்தும் இவள் சொல்லுக்கு இணங்காததால், அவர்கள் மீது கோர்ட்டில் கேஸ் போடுவேன் என்று மிரட்டி அதன் விளைவாய் சில சொத்துக்களை தனக்கென வாங்கி கொண்டாள்.மகன் விஷயத்தில் ஏற்கனவே நொந்து போயிருந்தவர்கள் தாரிணியால் மேலும் துன்பப்பட்டனர்… சாந்தியின் உடல்நிலை குறைய ஆரம்பித்தது அப்போது தான்.

பெற்றவர்களின் உறவை கெடுத்துக் கொண்டு கிடைத்த சொத்து தான் இந்த நிலம்!ஊரிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில், நாங்குநேரி கிராமத்தில் அமைந்திருந்தது.இரத்தினவேல் ஆசை ஆசையாக இவள் பெயரில் வாங்கியது!

தன் கஷ்டம் மட்டுமே பெரிதாக எண்ணி அவர்களின் மனதை நோகடித்திருந்தாள் தாரிணி. அந்த உண்மை பல நேரங்களில் சுட்டாலும், ‘நோ அதர் வே’ என்று தனக்குத் தானே சப்பைக் கட்டு கட்டிக் கொண்டிருக்கிறாள்.

“தாரிணி,கண்ணன் என்னை மீட் பண்ணனுமாம்.இங்கே தான் வர சொல்லியிருக்கேன்.நீயும் கூட இரு டி”
அன்று மாலை அங்கு வந்த அற்புதா சொல்ல,
“அது யாருன்னே எனக்கு தெரியாது, நீயே பேசிக்கோ!இன்னிக்கு ஒரு புது கிளையண்டை வர சொல்லியிருக்கேன் எனக்கு அந்த வேலை இருக்கு!”
போய்விட்டாள்.
அவள் நடத்திக் கொண்டிருந்தது ஒரு இண்டோர் விவசாய் பண்ணை. முழுவதுமாக பெரிய பெரிய பாலிதின் தாள்களும், பிளாஸ்டிக் கம்புகளைக் கொண்டும் உருவாக்கிய கூடாரங்களால் அவை.நீரின் தேவையை சற்று குறைக்கவும்,அதிக வெப்பத்திலிருந்து செடிகளை தற்காக்கவும், இப்படி கிரீன் ஹவுஸ் முறையில் செயல்படுத்தியிருந்தாள். பார்க்க எளிமையாய் தோன்றினாலும் இதன் அடிப்படை கட்டமைப்புகள் பெரிய செலவை இழுத்துவிட்டிருந்தது அவளுக்கு!

தாரிணியின் படிப்புக்கும் இப்போது செய்து கொண்டிருப்பதற்கும் சிறிதும் சம்மந்தம் இல்லையென்றாலும் இதில் அவளுக்கு ஆர்வம் அதிகம்.

அற்புதாவின் இழப்புகளுக்கு பிறகு அவளையும் இதில் ஒரு பார்ட்னராய் சேர்த்துக் கொண்டாள்.அற்புதா ஒரு கல்லூரியில் இளநிலை பேராசிரியர் பணியில் இருப்பதால் நேரம் கிடைக்கையில் மட்டுமே இங்கே விஜயம் செய்வாள்.

சொன்னபடி அங்கு வந்திருந்தான் கண்ணன்.அவனை தன் காபினில் சந்தித்த அற்புதா அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் இருந்தாள். தலைகுனிந்து தன்னெதிரே அமர்ந்திருந்தவளை, கண்ணன் பார்த்த பார்வையே அவன் மனதை அவன் தங்கை தாரிணிக்கு புரிய வைத்தது.
தன் அறையில் வேலையாய் இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் இவர்களின் பக்கமும் ஒரு கண் இருந்தது. அவர்கள் இருவர் அறைகளுக்கும் இடையிலிருந்த கண்ணாடி தடுப்பு அதை சாத்தியமாக்கியது.
“நீ நல்லா யோசிச்சு ஒரு முடிவெடு அற்புதா.நான் இப்ப கிளம்புறேன்.”
கண்ணன் வெளிவருகிறான் என்றதும் அவனை சந்திக்க விரும்பாமல் தோட்டத்து பக்கம் விரைந்துவிட்டாள் தாரிணி.

அவனுக்கு தங்கையின் பிடிவாதம் தெரியும் எனபதால்,எதிர்பார்ப்பில்லாமல் கிளம்பியும் விட்டான்.

அடுத்த நாள் டெலிவரிக்கு தயாராகும் ஆரஞ்சு நிற குடைமிளகாயை பார்வையிட்டுக் கொண்டிருந்த தோழியை நெருங்கியவள்,
“அண்ணன் எதுக்கு டி வந்தான்? என்ன பேசினான்?”
பதில் சொல்லாமல் நடந்து கொண்டிருந்த அற்புதாவின் கைபற்றி நிறுத்த, அழுதுவிடுவேன் என்பது போலிருந்தாள்.
“நீ வருத்தப்படுற அளவுக்கு என்ன டி சொன்னான்”
எதுவும் சொல்லாதிருந்தவளை தன் தோளோடு அணைத்துக் கொண்டு,
“ சாயந்திரம் வீட்டுக்கு வா அற்பு,இதைப் பத்தி பேசலாம்.மித்துவை அம்மா இன்னிக்கு கூப்பிட்டு போயிடுவாங்க,நான் ஃப்ரீ தான்”

சரியென்று அவள் தலையசைக்கவும் நிம்மதி. நத்தை கூட்டுக்குள் போவதை போல் அவளை இனியும் விட முடியாது. சீக்கிரமே இவளுக்கு ஒரு தீர்வு வேண்டும்.

சுட சுட கட்லட்டுகளை செய்து ஹாட்பாக்கில் அடுக்கிக் கொண்டிருந்தாள். மணி இரவு ஏழு என்பதைக் காட்ட ஏழு முறை ஒலி எழுப்பி நின்றது.
‘எங்கே போனா?வர வர நான் சொன்னா எதுவும் கேட்குறதில்லை.இன்னிக்கு வரட்டும் அவளை வச்சிக்கிறேன்!”
அண்ணன் என்ன கேட்டிருப்பான் என்பது யூகித்திருந்தாலும் அற்புதா அழுதது குழப்பமாக இருந்தது.கதவு தட்டும் சத்தம் கேட்டது. அற்புதா என்று முடிவெடுத்து கதவை திறக்க,மறுபடியும் அவன்,அந்த சரண்.

‘என் உசுரை வாங்குறான்’
“என்ன வேணும்?”
பதில் சொல்லாமல் உள்ளே வர முயன்றவனை விடாமல் வழி மறித்து நின்றுக் கொண்டே,
“நீங்க தேடி வந்த ஆள் இங்கே இல்லை, நீங்க இப்ப போலாம்”
“நான் பார்க்க மட்டும் வரலை தாரிணி உங்க கூட வாழ வந்திருக்கேன்”

“அதுக்கான வேலிடிட்டி டேட் முடிஞ்சு போச்சு, நீங்க போயிட்டு அடுத்த ஜென்மத்தில் டிரை பணணுங்க!”
கதவை அடைக்க முயல அற்புதாவின் கார் வந்து நின்றது.
‘போச்சுடா, நல்ல நேரம் பார்த்து வந்தா!’
-----
“கண்ணா, இங்கே என்ன டா பண்றே?”
அவன் முன் பரத்தி வைத்திருந்த மது வகைகளை பார்த்துக் கேட்டாள் தாரிணி.அவளுக்கு தெரிந்து அவள் தமையன் குடிப்பதில்லை!
அவர்கள் வீட்டு மொட்டை மாடிக்கும் மேலே இருந்த மாடி அது.தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டிருக்கும் அந்த இடத்தில் கைப்பிடி சுவர் கூட கிடையாது! ஏணி வைத்து தான் இங்கு வர முடியும்!படிக்கிறேன் என்று பெயர் பண்ணிக் கொண்டு தாரிணி பாதி நேரம் இங்கு தான் இருப்பாள்!
தன் அன்னைக்கு தெரியாமல் அங்கொரு குருவி கூடு, வெள்ளை எலி கூண்டு,சில கள்ளி செடிகள் எல்லாம் வைத்திருந்தாள்.
பறவைக்கு உணவு வைக்க தினமும் மாலை ஆறு மணிக்கு அவள் இங்கு ஆஜர்.அப்படி வந்த நேரத்தில் தான் இவனை இந்த கோலத்தில் கண்டது.
அவள் கேள்விக்கு பதில் சொல்லவில்லை அவன்.பார்த்துவிட்டாளே என்பது போல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.
“டேய் அண்ணா,என்ன டா செய்றே?அப்பாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா? கருமம் இதெல்லாம் உனக்கு எதுக்கு டா!”
அவன் பக்கம் குனிந்து அவன் தோளை தட்டி சொன்ன தங்கையை,
“உன் வேலையை பார்த்திட்டு போடி.எனக்கு இங்கையாவது நிம்மதி வேணும்.கொஞ்ச நேரம் என்னை தனியா விடு தாரிணி”
“நிம்மதிக்கும் இதுக்கும் என்ன டா சம்மந்தம்?”
“நீ சின்ன பொண்ணு, உனக்கு இதெல்லாம் புரியாது”
“அம்மாவும் நீயும் எப்பவும் இப்படியே சொல்லுங்க!”
அவ்விடத்தை விட்டு கிளம்புமுன்,
“அண்ணா ஒண்ணு சொல்றேன் கேளு,சின்ன பொண்ணோட வார்த்தைன்னு நினைக்காதே.பூஜா அண்ணி உனக்கு வேண்டாம். என்னைக்கும் உங்க இரண்டு பேர் குணத்துக்கும் ஒத்துப் போகாது. அவளுக்காக நீ உன் மீதி வாழ்க்கையை வீணாக்காதே!”
அவன் தன் தங்கையை இமைக்காமல் பார்க்க,
“எனக்கு எல்லாம் தெரியும்! நல்லவன் டா நீயி.அவளால் சீரழிஞ்சு போகாதே. தைரியமா ஏதாவது முடிவெடு.அப்பா இப்ப வீட்டில் இருக்கார்.நீ குடிச்சிட்டு இப்படியே கீழ வந்து தொலைக்காதே. இங்கேயே படுத்திடு”
அவன் அன்றிரவு அவனுடைய இல்லம் திரும்பாதது பெரும் பிரச்சனையாக்கப் பட்டது பூஜாவால்.சாந்தி தான் மகனை தன் வீட்டில் பிடித்து வைத்துக் கொண்டார் என்று தன் தந்தை மூலம் பஞ்சாயத்தை கூட்டி அனைவரின் நிம்மதியையும் கெடுத்து விட்டாள்.
கோபித்துக் கொண்டு அவள் தந்தை வீட்டுக்கு போனவளை கண்ணன் திரும்பியும் பார்க்கவில்லை. இரத்தினவேல் சொன்னதற்கும் ஒரேடியாய் முடியாது என்று விட்டான்.

அவன் வந்து தன்னை அழைத்துக் கொள்வான் என்று எதிர்பார்த்து ஏமாந்த பூஜா,மாமனார் வீட்டுக்கு வந்து அனைவரையும் தரக்குறைவாய் பேசியதோடு மட்டுமில்லாமல் வரதட்சணை கொடுமை என்று பொய் புகாரிட்டு அவர்கள் குடும்பத்துக்கு அவப் பெயரை உண்டு செய்துவிட்டாள்.
இரத்தினவேலுக்கு அவர் சம்மந்தியின், மருமகளின் செயலில் நிம்மதி,மானம், மரியாதை எல்லாம் போனது தான் மிச்சம்.தன் மகனை ஒரு பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டதை மிக தாமதமாக உணர்ந்தார்!




 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top