• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Evano Oruvan epi 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
அவனுடன் அந்த வீட்டில் இருப்பது என்னவோ மூச்சு முட்டுவதை போலிருந்தது.தன்னை எப்படியெல்லாம் உதாசினப் படுத்தியிருக்கிறான்? இன்றானால் மாற்றி பேசுகிறான்.பொண்டாட்டியும் பிள்ளையும் வேண்டுமாம்.

‘உனக்கு பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?”
அதை தான்...ச்சே,என் மனசை தான் உடைச்சி போட்டுடிட்டியே டா பாவி.

இதே சிந்தனையில் அற்புதாவின் ஹாஸ்டலுக்கு தான் போய்க் கொண்டிருந்தாள்.இன்று அவளை எப்படியாவது அழைத்துக் கொண்டு விளையாட போகலாம் என்ற எண்ணத்தில்.

அவள் அறைக்குள் நுழைந்தவள், கட்டிலில் ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்த தன் தோழியின் எதிரில் அமர்ந்துக் கொண்டு அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘இனிமேலாவது நீ சந்தோஷமா இருக்கணும் அற்பு, நீ அனுபவிச்ச கஷ்டம் எல்லாம் போதும்’
அவள் மனம் தோழிக்காக ஆண்டவனை வேண்டியது.
“தள்ளி உட்காருங்க தாரிணிக்கா.முகத்தை இத்தனை பக்கத்தில் வச்சியிருந்தா பார்த்து பயந்திட போறாங்க!”

அற்புதாவின் அறைத் தோழி நித்யா தான் அது.
“நீ இன்னும் இங்கே என்ன செய்றே?மெஸ்ஸில் இன்னிக்கு மேகி நூடுல்ஸாம், ஒரே கூட்டமா இருந்தது. அனேகமா இப்ப முடிஞ்சு கூட போயிருக்கும்”
“மேகியா?எங்க மெஸ்லயா?”
“அட ஆமாம் புள்ள,இப்ப தான் பார்த்திட்டு வந்தேன்.நம்பலைன்ன விடு”
“நான் இப்பவே போறேன்” அவள் போனதும்,
“அற்பு ,அற்பு” அவளை எழுப்பி விட முயன்றாள்,
“நித்யா, தூங்க விடு.நான் இன்னிக்கு லீவ்”தூக்கத்தில் உளறிய அற்புதாவின் மேல் இரக்கமே இல்லாமல் தண்ணியை ஊற்றினாள்.
அறக்க பறக்க எழுந்தவள்,விழித்தது தாரிணியின் முகத்தில் தான்.
“யார் நீ, இங்க என்ன பண்றே?”
“வாடி விளையாட போலாம்”
“ஹலோ விளையாடுற வயசா உனக்கு!வெளியே போ, நீ யாருன்னே எனக்கு தெரியாது”
“இதெல்லாம் என் டையலாக், நீ பேசாதே சகிக்கலை,கிளம்பு” என்றபடி அவளை குளியறைக்குள் தள்ள,நித்யா திரும்பியிருந்தாள்.

“ஏன் கா உங்களுக்கு இப்படி ஒரு கெட்ட எண்ணம், உங்க ஊரில் அதுக்கு பேர் மேகியா”
“ஹ ஹ...நான் சொன்னா உனக்கு யோசனை வேண்டாம்? உங்களுக்கெல்லாம் மேகி செஞ்சி போட்டு ஹாஸ்டல் நடத்துற என் நண்பி போண்டி ஆகவா?”
அவர்கள் பக்கம் வந்த அற்புதாவிடம் நித்யா,
“பாரு அற்பு, சேமியா உப்புமாவை மேகின்னு சொல்லி என்னை ஏமாத்திட்டாங்க”
“எத்தனை தடவை அவ கிட்ட ஏமாந்து போவே நித்யா?அவளுக்கு அடுத்தவங்க மனசை உடைக்க சொல்லியா தரணும்?”
“ஓ...நீ சொன்னதுக்கு நான் ஓரமா போய் அழணுமா? கிளம்புடீ, நேரமாகுது!”
அப்படி இப்படி என்று சரி கட்டி அவளை இழுத்துக் கொண்டு வந்துவிட்டாள்.

இருவரும் தங்களுக்கு இருந்த வருத்தம்,வேதனை எல்லாவற்றையும் ஓரங்கட்டி வைத்து முழு வீச்சில் விளையாட்டில் இறங்கினர்.அது முடியவும் அவளை அப்படியே ஆர்யாஸ் உணவகத்துக்கு இழுத்துக் கொண்டு போனாள் தாரிணி.

“இப்ப சொல்லு,அண்ணன் என்ன சொன்னான்?”
“ஆமா, நான் மட்டுமே உனக்கு எப்போதும் எல்லாத்தையும் சொல்லிடுறேன்”
“அட இதுக்கு மேல உன் கிட்ட கெஞ்ச முடியாது.இப்ப சொல்றியா,இல்லையா?”

பதில் சொல்லாமல் இருந்தவளை முறைத்தபடி சர்வரை அழைத்தாள் தாரிணி,
“இவங்களுக்கு பில் தனி”அவன் சரி என்று விலக,
“தாரிணி விளையாடாதே, நான் பர்சை கூட கொண்டு வரலை, ஒழுங்கா நீயே காசு கொடுத்திடு”
வரமாட்டேன் என்றவளை அழைத்துக் கொண்டு வந்து ஏகப்பட்ட உணவு வகைகளை ஆர்டர் செய்திருந்தாள். விளையாடிய களைப்பில் அற்புதாவும் எதையும் யோசிக்கவில்லை!
“பில் கட்டலைன்ன மாவெல்லாம்
ஆட்ட சொல்ல மாட்டாங்க அற்புதா...நான் வரேன்”
இருக்கையிலிருந்து எழுந்தவளை,
“என் மானத்தை வாங்காதே.நீயே பணத்தை கட்டித் தொலை தாரிணி”
அந்த நொடி தோழியின் கோபம் கூட அவளுக்கு சிரிப்பை உண்டாக்கியது.மறுபடி அவள் இடத்தில் அமர்ந்தவள்,
“சரி இப்ப சொல்லுவியாம்”
‘ஏருமைமாடே’ முணுமுணுத்தவள் சொல்ல ஆரம்பித்தாள்.

கண்ணன் தன்னை மறுமணம் செய்து கொள்ள விரும்பியதையும், அதனால் தனக்கு ஏற்பட்ட குழப்பத்தையும் சொன்னாள்.
“இதில் என்ன குழப்பம் அற்பு உனக்கு?”
“ம்ம்ச்,அது சொன்னா உனக்கு புரியாது.விடு தாரிணி”
“நான் சொன்னா ஒத்துப்பியா தெரியலை,இருந்தாலும் சொல்றேன்.நீயும் அவனும் நிறைய கஷ்டத்தை அனுபவிச்சாச்சு.மீதி உள்ள வாழ்க்கையாவது சந்தோஷமா வாழுங்க டி.கண்ணன் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவுக்கு வந்திருப்பான்.ப்ளீஸ் கோ அஹெட் அற்புதா”
யோசனையிலிருந்தாள்!
“நாளைக்கு என் பழைய வாழ்க்கையை பத்தி அவரோ யாரோ ஏதாவது சொல்லிட்டா என்னால தாங்க முடியாது தாரிணி”
“அவன் அப்படி செய்வானா? உனக்கே தெரியாதா?அவனை நீ எந்த அளவுக்கு நினைச்சிருக்கேன்னு எனக்கு தெரியும் அற்புதா.யோசிக்காதே”

அன்று மட்டுமில்லாமல் அடுத்து வந்த பல நாட்களில் அவளை பேசி பேசியே சரிகட்டி இருந்தாள் தாரிணி.
“சீக்கிரமா அவன் கிட்ட உன் சம்மதத்தை சொல்லிடு அற்புதா”
“இன்னும் கொஞ்சம் யோசிக்கணும் தாரிணி”
“யம்மா தாயே மறுபடியும் முதலில் இருந்தா?நீ சொல்றியா இல்லை…”
“சரி,இன்னிக்கு சொல்றேன்”
“ஓகே நாளைக்கு ‘கம்போஸ்ட் பின்’ செட்டப் செய்ய ஆளுங்க வருவாங்க.நீயும் வந்திடு.என்னால் தனியா சமாளிக்க முடியாது”
“சரி தாரிணி”
“அவன்ட பேசிட்டு மெசேஜ் அனுப்பிடு எனக்கு.கிளம்புறேன் பை”

வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்து ஒரே தலைவலி.சமையலை ஆரம்பித்த நொடியில் மித்ரன் பள்ளியிலிருந்து திரும்பியிருந்தான்.
“அப்பா எங்கே?”
அவன் இப்போதெல்லாம் காலை போய் இரவே திரும்புவது.அதுவும் மித்து தூங்கிய பிறகு! அவள் சொன்ன வார்த்தைக்காக இருக்குமோ!

“வெளியே போயிருக்காங்க குட்டி,இப்ப வந்திடுவாங்க!”
“எனக்கு அப்பா வேணும்! இப்போவே!”
அவளுக்கு நல்ல நேரத்தில் அவன் அழுதாலே தலைவலி வரும், இப்போது இன்னும் கூடிப் போனது.
“மித்து,அப்பா வருவாங்க.அழாம உன் ஹோம்வர்க் செய்வியாம்.உனக்கு பாஸ்டா செய்றேன் பாரு”

இப்படியெல்லாம் சொன்னால் கேட்கும் குழந்தைகள் கதைகளில் கூட குறைச்சலே! அவன் கேட்காமல் ஆடிய ஆட்டத்தில், ஆத்திரம் பொங்க நன்றாக இரண்டு அடி கொடுத்து விட்டாள்.
“அம்மா சொன்னா கேட்கணும், போய் பாடத்தை எடு டா,போ”
அழுதுக்கொண்டே போன பிள்ளை, பாட புத்தகத்தை எடுத்து எழுத ஆரம்பித்தது,அதை பார்த்தபடியிருந்தவள் அசதியில் அப்படியே உறங்கி போனாள்.
----
அற்புதாவின் பெற்றோர் அவளிடம் சில புகைப்படங்களை தந்து,
“தரகர் கொண்டு வந்த ஜாதகத்தில் இதெல்லாம் எடுத்து வச்சியிருக்கோம்.உனக்கு இதில் எந்த பையனை பிடிச்சிருக்குன்னு சொல்லு மா, பேசி முடிச்சிடலாம்”

வாங்கியதை பார்க்காமலேயே மேசை மீது வைத்தவள்,
“என் மனசுக்கு பிடிச்சவர் இதில் இல்லை பா”
ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டவர்கள்,
“யாரையும் விரும்புறியா? பையன் யாருன்னு சொல்லு, அவங்க வீட்டில் பேசி பார்க்குறோம்”

மகளை அடக்கி ஆள நினைப்பவர்கள் இல்லை தான், அது அவளுக்கும் தெரியும் ஆனாலும் கண்ணனை ஒத்துக் கொள்வார்களா?தயங்கியபடி,
“தாரிணியோட அண்ணன் கண்ணன் பா”

நீண்டதொரு அமைதி.கத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் பழக்கமில்லை அவர்கள் குடும்பத்தில்! இந்த அமைதியே ஒருவித பயத்தை தரும் அவளுக்கு.
“அவன் ஏற்கனவே விவாகரத்தான பையன் தானே மா?இதுக்கு நாங்க எப்படி சம்மதிக்க முடியும் அற்புதா?உன் வாழ்க்கையை வச்சு தான் எங்க எதிர்காலமே இருக்கு”

“அப்பா அவர் ரொம்ப நல்லவர், என்னை…”
“முடியாது அற்புதா.இதுக்கு எங்க சம்மதத்தை எதிர்பார்க்காதே”
பேச்சு முடிந்துவிட்டது என்பது போல் கலைந்து
போய்விட்டனர்.
அற்புதாவுக்கு பெற்றவர்களின் மனதை புண்படுத்த வேண்டாம் என்ற எண்ணமிருந்தாலும், கண்ணனை விடுத்து வேறு எவரையும் திருமணம் செய்யும் நினைப்பு துளியும் இல்லை.அவனிடம் இதை பேசிவிட வேண்டும்.

தாரிணி அழைத்திருந்தாள்,
“அற்புதா இப்ப வீட்டுக்கு வா டி, அம்மா அப்பா ஒரு கல்யாணத்துக்கு போயாச்சு. அவன் ஆபிஸ் கிளம்பிட்டு இருக்கான்!சீக்கிரம் வா”

தாரிணி முன்னறையில் பூனை நடை போட்டபடி,ஹாலில் கண்ணன் அற்புதாவின் உரையாடலை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“இது சரி வராது அற்புதா.நீ உன்னை பெத்தவங்க பேச்சை கேட்கிறது தான் நல்லது!”
“கண்ணன்,உங்களை நேசிக்கிறேன்,என்னால உங்களை மறக்க முடியாது.ப்ளீஸ்”
“புரியாம பேசாதே! எனக்கு நீ மட்டுமில்லை,யாரையும் கல்யாணம் செய்துக்கிற எண்ணமில்லை.உன் வாழ்க்கையை நல்ல வழியில் கொண்டு போக பாரு அற்புதா”
வெளியேற போனான்.
“கண்ணா…”அவன் கையை பற்றியிருந்தாள்.
“வாட் இஸ் திஸ் அற்புதா? கையை விடு! இங்கிருந்து கிளம்பு முதல்ல”
அவள் அவன் சொன்னதை செய்யவில்லை என்றதும், பூஜாவின் நினைப்பே வந்தது அவனுக்கு! அதே பிடிவாதம்! அத்திரத்தில் அவன் கையை உதற,அந்த வேகத்தில் கீழே விழுந்தாள் அவள்.
“தாரிணி,தாரிணி”
அவனின் அழைப்புக்கு ஓடி வந்தவளை.
“என்ன வேலை டி இது?கண்டவளை வீட்டுக்குள் விட்டிருக்கியே,உனக்கு அறிவில்லை?முதலில் இவளை வெளியே அனுப்பு.”

கார் சாவியை எடுத்தவன் அழுதுக் கொண்டிருந்தவளை திரும்பியும் பாராமல் வேகமாய் வெளியேறி விட்டான்.தாரிணி செய்வதறியாது அழுது கொண்டிருந்தவளின் கையை ஆதரவாய் பற்றியிருந்தாள்.

அதன் பின் அவனிடம் பேசிவிடும் தைரியம் கூட இல்லாதவளாய் போனாள் அற்புதா. தாரிணி அவளுக்காக பரிந்து பேசியதால் அவளுக்கும் கண்ணனுக்கும் அடிக்கடி சண்டை மூண்டது!சாந்தியும் இந்த விஷயமறிந்து மகனிடம் பேசி பார்க்க, ஒரேடியாய் முடியாது என்றுவிட்டான்.
“தாரிணியை இப்படி ஒரு பையனுக்கு நாம கட்டி வைப்போமா மா?”
பதிலில்லை சாந்தியிடம்!
“நமக்கு ஒரு நியாயம்,அந்த பொண்ணுக்கு மட்டும் வேறையா?என்னால முடியாது.இதை பத்தி இனி பேசுனீங்க, நான் இந்த வீட்டை விட்டு வேற எங்கையாவது போயிடுவேன்”
அவனின் கட்டளையால் அந்த பேச்சை அத்தோடு விட்டனர்.

‘வருவது தானே வரும்
வருவதுதானே வரும்’
அடுத்த இரண்டு மாதத்தில் அற்புதா திருமணமாகி சேலம் சென்றுவிட்டாள்!











 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,515
Reaction score
7,708
Location
Coimbatore
ஏன் கண்ணன் இத்தனை கோபம்
அற்புதா கல்யாணம் ஆகிவிட்டதே
அதில் ஏதாவது குளறுபடி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top