• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Evano Oruvan epi 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
வணக்கம் மக்களே , இன்னும் இரண்டு வாரம் கொஞ்சம் பிசி.அடுத்த எபி எப்போ போடுவேன்னு எனக்கே தெரியலை. இந்த எபி படிச்சிட்டு அப்படியே போகாம கொஞ்சம் கமெண்ட் போடுவீங்களாம்.
நன்றி

எவனோ ஒருவன்-9

கண்ணன் அற்புதாவின் திருமணம் முடிந்த அந்த இரவில் தாரிணிக்கு தூக்கமில்லை.அன்று காலையில் நடந்த விஷயங்களே மனதில் ஓடிக் கொண்டிருந்தது.தன் சொந்தக்காரர்கள் எல்லாம் சரணுடன் இவளை பார்த்த பின் இருவருக்கிமிடையில் இருந்த பிரச்சனை முடிந்துவிட்டது என எண்ணி இவளிடமே அதைக் கேட்டும் தெளிவுபடுத்திக் கொண்டனர்.

“நீ இப்படி தனியா வந்து இருக்கிறதில் எத்தனை மனக் கஷ்டம் தெரியுமா தாரிணி, உன்னை பெத்தவங்களுக்கு மட்டுமில்லை எங்களுக்கும் தான்.இப்பவாவது நிதர்சனத்தை புரிஞ்சிகிட்டு உன் புருஷன் கூட சேர்ந்திட்டியே,நல்லா இருடியம்மா” என்றாள் இவளின் பெரியம்மா.

தாரிணி அன்றிருந்த பதட்டத்தில் அதற்கெல்லாம் என்ன பதில் சொல்ல என்பது தெரியவில்லை.புன்னகையுடன் தலையாட்டி அந்த இடத்திலிருந்து தப்பித்துக் கொண்டாள். திருமணத்தில் அந்த கூட்டத்தில் சரண் செய்த அழுச்சாட்டியங்கள் எல்லாம் இப்போதும் நியாபகத்தில் வந்து தொலைத்தது.

“சரண் இவ்ளோ பேர் இருக்கும் போது நீங்க என்ன செய்றீங்க?நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்,கன்னத்தில் ஒண்ணு வச்சிடுவேன்.”
“முத்தமா?கொடுக்கணும்னு முடிவாயிடிச்சு அதை ஏன் கன்னத்தில் தந்து வீணாக்குற”
பதிலுக்கு சொன்னவன் மகனுடன் கடல் அலைகளில் விளையாட போயிருந்தான்.
அவள் அத்தனை மிரட்டியும் அதன் பிறகும் அவன் அடங்கவில்லை.போட்டோவில் குடும்பத்துடன் நிற்கும் சாக்கில் அவள் தோளில் கை போட்டான்.இவள் அதனை எடுத்து விட அது அவள் இடைக்கு தாவியிருந்தது.

அவன் கையில் கிள்ளி விட்ட பிறகு கொஞ்சம் அடங்கியவன்,மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பித்தான்.
‘வேணாம் டா, நான் அழுதுறுவேன்.நானும் எவ்ளோ நேரம் தான் தைரியமா நடிக்கிறது’ தாரிணியின் மனம் அழுதது அவளுக்கு மட்டுமே கேட்டது.

இப்போதும் இந்த இரவில் தனிமையில் அதெல்லாம் நியாபகம் வர இனி என்னவென்பது புலப்படவில்லை. பக்கத்தில் தன்னை கட்டிக் கொண்டு படுத்திருந்த மகனின் கேசத்தை வருடித் கொடுத்தாள்.

இனியும் சரணுடனான இந்த பொய்யான உறவை தொடரத்தான் வேண்டுமா?மித்து தந்தையை விட்டுவிட்டு இனியும் முன்பிருந்ததை போல் தன்னுடன் இருப்பானா?என்ன தான் செய்வது?மனம் கண்டதையும் சிந்தித்து கொண்டிருக்க,சரணின் குறட்டை சத்தம் பக்கத்து அறையிலிருந்து கேட்டது.
‘இவன் மட்டும் நிம்மதியாக உறங்குவதா!விடக்கூடாது’

அவன் இருந்த பக்கம் வந்தவள்,அந்த அறையிலிருந்த விளக்குகளை எறியவைத்தாள்.சரண் கண் முழிக்கிறானா என்று அவனை பார்த்துக் கொண்டு நிற்க அவளை ஏமாற்றாமல் விரைவில் அவனும் எழுந்தான்.

“தாரிணி கொஞ்சம் லைட் அணையேன்,நான் தூங்கணும்”
“எப்போ நீங்க இங்கிருந்து போறீங்க?”
“எங்க போகணும்?”
“அது உங்க இஷ்டம்,ஆனா நான் இருக்கிற இடத்தில் நீங்க இனி இருக்க கூடாது”
“ஏனோ”
“ஏன்ன,நமக்கு தான் ஒத்து வரலைன்னு தனியா வந்துட்டேனே, நீங்க இனி உங்களுக்கான வாழ்க்கையை மட்டும் பாருங்க”
“அதை தான் இப்ப செஞ்சிட்டு இருக்கேன்…”

எழுந்து விளக்கை அணைக்க வந்தவனின் கைபற்றி தடுத்தாள்.
“கையை எடு தாரிணி.பேசுற நேரமாடி இது?மணி ஒன்னரை! மனுசனை தூங்க விடு”
அப்போதும் தன் பிடியை தளர்த்தாமல் இருந்தவளிடம் அபாயகரமாய் நெருங்கினான். தாரிணிக்கு இப்போது முச்சு விடக் கூட மறந்து போனது.
“கையை விடலைன்ன இனி நடக்கப் போற எதுக்கும் நான் பொறுப்பு கிடையாது தாரிணி, சொல்லிட்டேன்”
அவளை இடித்துக் கொண்டு நின்றவன் மென்குரலில் மிரட்டல் விடுத்ததையடுத்து, சட்டென்று அவன் கையை விட்டவள்,நாலே எட்டில் தன் கட்டிலில் போய் படுத்துவிட்டாள்.

‘இத்தனை பூஞ்சை மனமா உனக்கு,அப்புறம் ஏன் இந்த வெட்டி விளம்பரம்?இன்னும் ஏன் முழிச்சிட்டு இருக்கே,தூங்கித் தொலை டி’
மனசாட்சியின் அதட்டலில் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு பிறகு கண்ணயர்ந்தாள்.

என்னென்னவோ சத்தங்கள் கேட்டு அவளை இம்சை செய்தது.மிக்ஸி,மித்து,கதவை பூட்டும் ஓசை.எதற்கும் அவளால் கண்ணைத் திறந்து பார்க்கக் கூட முடியவில்லை.நீண்ட நேரமாய் தொடர்ந்த அந்த நித்திரையில் அவள் கண் முன்னே வந்தான் அவன்,சரண்.கனவில் அவள் முகத்துக்கு வெகு அருகில் இருந்தான்.ஏனோ அவன் மீது இப்போது கோபம் வரவில்லை.

திருமணமான புதிதில் அவளை எப்போதும் பார்க்கும் அதே காதல் பார்வை பார்த்தான். அழகாய் சிரித்தான்.தாரிணி அவனை கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளை நெருங்கியவன்,அவளின் நெற்றியில் இதழ் பதித்தான்.தாரிணிக்கு மிகவும் பிடித்த,அவளின் சரண் எப்போதும் செய்யும் செய்கை அது.விலகப் போனவனின் கழுத்தை இப்போது இவள் இறுக கட்டிக் கொண்டாள்.அவன் அவள் கையை பிரித்து விட முயல,
‘நான் சொல்றதை தான் நீங்க செய்யணும் சரண்.என்னை எதிர்த்து எதுவும் செய்யக் கூடாது’
‘சரி டி என் பொண்டாட்டி’
கனவில் பேசும் அவனின் குரல் காதில் விழுவது விசித்திரமாய் இருந்தது அவளுக்கு.கண் திறந்து பார்த்திருந்தால் அது கனவில்லை என்பது தெளிந்திருக்கும்.ஆனால் அவளுக்கு அந்த இனிய நினைவை கலைக்க மனமில்லை.
நினைவு, அவளுக்கு மட்டும் கனவு போல் தொடர்ந்து, இருவருக்குமான இனிய தாம்பத்தியம் நிகழ்ந்தது. தாரிணி அவள் வசமில்லை!சந்தோஷமாய் ஆரம்பித்த அந்த அன்பு பரிமாற்றம் கண்ணீரில் முடிந்தது.அவனைக் கட்டிக் கொண்டவள்,
“ஐ மிஸ்ட் யூ ஸோ மச் சரண்”
முகம் முழுக்க அவன் தந்த முத்தங்களை வாங்கிக் கொண்டாள்.அவன் கைவளைவில் இருந்தவள்
மறுபடியும் ஆழ்ந்த நித்திரைக்குள் இழுத்துச் செல்லப்பட்டாள்.

தாரிணி கொஞ்சமே கொஞ்சமாய் கண் முழித்து பார்த்தபோது மணி மதியம் ஒன்று.கண்களை இன்னமும் முழுவதுமாய் திறக்க முடியவில்லை அவளால்.‘மித்து’ அவன் நியாபகம் வரவும் எழ முயன்றவளின் கை அவள் பக்கம் இருந்தவன் மேல்.அது சரண்!
அவனை அணைத்தபடி இத்தனை நேரமும் படுத்திருந்திருக்கிறாள். உடம்பெல்லாம் மின்சாரம் பாய்ந்தது போல் விருட்டென்று எழுந்தவள்,
கட்டிலில் அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தாள்.
நடந்தது அத்தனையும் கனவா இல்லை நினைவா என்பது புரியவில்லை.
அவளுக்கு இப்போது தலை சுற்றுவது போலிருந்தது!அந்த இடத்தை விட்டு அகன்றாள்.அவளின் செய்கையெல்லாம் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தவனின் உதடுகளில் ஒரு புன்முறுவல்.
-----
சரணை முதலில் பார்ப்பவர்கள் அவனை பொண்டாட்டி தாசன் என்ற முடிவுக்கே வந்துவிடுவர்.அந்த அளவுக்கு தாரிணியை தாங்கிக் கொண்டிருந்தான்.அவள் வைத்தது தான் சட்டம் அவர்களுக்கிடையில்.

அவன் விட்டுக் கொடுத்ததன் விளைவாய் அவர்களுக்கு இனிய இல்லறம் அமைந்து போனது. வெளிநாட்டு வாழ்க்கை அவனுக்குமே புதிது.கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பலவும் வரிசை கட்டி நின்று கொண்டிருந்தது.

வேகமாய் பல விஷயங்கள் நடந்தேறியது.அவன் எந்த கம்பெனி மூலமாக அமெரிக்கா வந்திருந்தானோ அதிலிருந்து மாறி ஒரு புது இடத்தில் சேர்ந்துவிட்டான்.
முன்பை விட அதிக சம்பளமும் உயர்ந்த பதவியும்.அவன் வாழ்க்கையில் வரப்போகும் வில்லங்கமும் கண்ணுக்கு தெரியாமல் அவன் கூட சேர்ந்துக் கொண்டது.

தாரிணி மிகவும் நேர்த்தியாய் தன் காய்களை நகர்த்தி தன் திருமண வாழ்வை தான் நினைத்தபடி மட்டுமே கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தாள். அற்புதாவின், கண்ணனின் விஷயத்தில் அவள் கற்றுக் கொண்ட பாடம் அது.

ஆனால் எல்லா பாடமும் எல்லார் வாழ்க்கைக்கும் ஒரே மாதிரி பொருந்தி வராதே.அதை தாரிணி அனுபவப் பட்டும் இன்று வரையிலும் தெரிந்துக் கொள்ளவில்லை.சரண் அவள் சொல்படி கேட்டு நடந்து கொண்டிருக்க அதனை ரசித்து அனுபவித்த அவள் மனம்,கணவனுக்கும் மனைவியிடம் அப்படி ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் என்பதை ஏனோ மறந்து போனது.

“நீங்க ரொம்பவே மாறி போயிட்டீங்க சரண்.ஆபிஸிலிருந்து சீக்கிரம் வீட்டுக்கு வாங்கன்ன வரதில்லை.எல்லா வேலையும் என்னையே செய்ய சொல்றீங்க,இது சரியில்லை.”
“அடிப்பாவி,சனி ஞாயிறில் ஓவர்டைமில் செஞ்சித் தரேன்.இத்தனை பேராசை ஆகாதுடி உனக்கு!”

இதற்கிடையில் ஜானகி,தாரிணியின் பாட்டி உடல்நிலை சரியில்லாமல் இறந்து போக,ஊருக்கு வர முடியவில்லை தாரிணியால்!அதற்கு தேவையில்லாமல் அவனை கடிந்துக் கொண்டாள்.
“என் மேல் கோவப்பட்டா நான் என்ன தான் டி செய்வேன்!இந்த டைமில் டிராவல் செய்ய வேண்டாம்னு டாக்டர் தானே சொன்னார்!”
குழந்தை போல் அழுதுக் கொண்டிருந்தவளை தேற்றி தேற்றி களைத்துப் போனான்.அவனின் பொறுமையும் காற்றில் பறக்க ஆரம்பித்து அப்போது தான்!
பிடிவாதத்திலும், அதிகாரத்திலும் போனது தாரிணியின் பிரசவ காலம்.
“டெலிவரிக்கு நான் ஊருக்கு போயே தீருவேன்.என்னால இந்த ஊரிலிருந்து தனியா அவஸ்தை பட முடியாது சரண்!”
“புரியாம பேசாதே தாரிணி , இங்கேயே பேபி பிறந்தா யூஎஸ் சிட்டிசென்ஷிப் கிடைச்சிடும்.அதை விட்டிட்டு ஊருக்கு போறேன்னு சொல்றே!”
“யாருக்கு வேணும் இந்த சிட்டிசென்ஷிப்? இந்தியா தான் இனி எதிர்காலம்.சும்மா அமெரிக்கா அமெரிக்கான்னு பழைய கதையெல்லாம் பேசாதீங்க சரண்”
“அடிப்பாவி.அமெரிக்கா வரப் போறேன்னு தானே என்னை கல்யாணம் செஞ்சுகிட்ட,என்னை பார்த்து சொல்லு”
“ஹாங்...அது போன வருஷம், இது இந்த வருஷம்”
“பிழைக்க தெரிஞ்சவ டி,குட்டி நீயும் உங்க அம்மா மாதிரி நல்லா விவரமா வரணும் என்ன”
மேடிட்ட வயிற்றுப் பக்கம் குனிந்து உள்ளே இருந்த பிள்ளையிடம் சொன்னான்.
சூழ்நிலையை சகஜமாக்க அவன் முயன்றாலும்,நான் பிடித்த முயலுக்கு மூணு கால் தான் என்பது தாரிணி பிடியாய் இருந்தது.

“என்னால இங்கே முடியலை சரண்.அம்மாவும் வர மாட்றாங்க.நான் ஊருக்கு போகணும்”
அவள் முடிவே இறுதியாகி போனது, என்றும் போல்.ஊருக்கு வந்துவிட்டவளை குழந்தை பிறந்த பின்பே அவன் பார்க்க முடிந்தது.ஏதோ இப்படி நடந்து கொண்டிருந்த பல விஷயங்களால் அவர்களுக்குள் ஒரு இடைவெளி அதிகமானது. இந்த புதுவரவை தவிர நடப்பது எதுவும் சரியில்லை என்று சரணுக்கு தோன்ற ஆரம்பித்தது.










 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
தாரணி போல சில பேர் தான் நினைத்த படி தான் இருக்க வேண்டும் என்று வாழ்கையை சிக்கலாக்கிகொள்கிறார்கள் வாழ்க்கையில் அனுபவம் மாதிரியா மிக பெரிய ஆசான் வேறு எதுவும் இல்லை. தாரணி புரிந்துகொண்டு மீதி வாழ்க்கையை கடக்கிறாலா இல்லை தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று இருக்கிறாலா என்று .
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top