• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kaadhalaam Paingili Reviwe by Mano Ramesh

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

A

Anna Sweety

Guest
உலக அரசியலை பேசறத விட உள்ளூர் அரசியல் பேசறது கஷ்டம் நம்ம ஊருல. ஆனா “காதல் பின்னது உலகு”ல உலக அரசியல் பேசி “காதலாம் பைங்கிளில” மிக முக்கியமான உள்ளூர் அரசியலையும் பேசியிருக்காங்க எழுத்தாளர்.

அரசியல்னா ஆட்சியும் ஆட்சியாளர்களும் இல்ல, இந்த சமூகத்துல நடக்கிற அரசியல், அது தப்புன்னு ஒரு சின்ன குற்ற உணர்வு கூட இல்லாம சகமனிதன ஒருத்தனுக்கு கீழ இன்னொருத்தன்னு நம்ப வெக்கற குரூர அரசியல் – ஜாதியம்.

என் ரிவியூ ஆரம்பத்தை வெச்சு எதோ தீவிர இலக்கியம்னு நினச்சுறாதீங்க, கதை ஒரு பொழுதுபோக்கு கதைக்கு தேவையான அனைத்து அம்சங்களோட இருக்கும், என்ன கூட கொஞ்சம் ஆழமா இந்தியாவின் தீராத வியாதிய பத்தியும் இருக்கும்.

வாழ்க்கையில பலவிதமான இடர்பாடுகள் தாண்டி கல்யாணம் பண்ணி அவங்க தனிப்பட்ட முறையில் சம்மந்தமே படாதே ஜாதிய பழக்கங்களால பிரிஞ்சுபோகயிருக்க ரெண்டு பேரை வாழ்க்கையில அன்பால குறும்பால நிரம்பியிருக்க ரெண்டு பேர் எப்படி சேர்த்து வெக்கறாங்கறது தான் கதை.

பிரிஞ்ச ரெண்டு ஹீரோ ஹீரோயின், சேர்த்து வைக்க வேற ரெண்டு ஹீரோ ஹீரோயின். இப்படி யோசிச்சா எவளோ சாதாரணமா தெரியற கதை, அந்த நாலு பேருக்கு எது வாழ்க்கை பின்னணியா இருக்குங்கறதுல தான் இந்த கதை தவிர்க்க கூடாத கதையா மாறிடுது.

இந்த கதையில எனக்கு ரொம்ப பிடிச்சது அந்த அந்த சூழ்நிலைக்கு எப்படி ரியாக்ட் பண்ணுவாங்களோ அப்படிப்பட்ட கதாபாத்திரவார்ப்புக்கள் தான். விசாகனோட தீடீர் முடிவுகள் வாணியோட ஆலோசிச்சு முடிவெடுக்கும் திறமை, மீரட்டோட தீவிரத்தன்மை, கிருபாவோட adventurous, அன்பு பராட்டற குணம்னு. இதெல்லாம் இவங்கிட்ட இருக்கவும் தான், இந்த கதையோட்டம் சரியா போய் சேர்ந்து இருக்கு.

ரவளி- சதானா , வர்ஷன் ஃப்ரெண்ட் இவங்க எல்லாரோட upgraded version. என்ன வில்லத்தனம், பிள்ளைகளுக்கு கட்டுப்பாடு மட்டும் இஷ்டத்துக்கு போட்டு அவங்க அடிப்படை தன்மை என்னவா இருக்குன்னே பெத்தவங்க கவனிக்காதப்போ இப்படியான பிள்ளைங்கதான் உருவாகும்.

இந்தியா முழுக்க இருக்க பலதரப்பட்ட ஜாதிய பாகுபாடுகளை முடிஞ்சவரை ரொம்ப மென்மையாவே வெளிச்சப்படுத்தியிருக்கீங்க. தமிழ்நாட்டுல எல்லா மக்களும் ஜாதி பாக்கற ஒரு விஷயம் கல்யாணம் அதையும் ரொம்ப சரியா காமிச்சு அப்படி ஒரு சூழ்நிலையிலையும் பெண் தனித்து சிந்திக்கும் குடும்பம் பிழைச்சு சரியான பாதைக்கு போய்டும்னு காட்டின விதம் எனக்கு ரொம்ப பிடிச்சது.

மீரட்டோட பின்புலம்லாம் கண்டிப்பா இதைவிட எளிமையா ஒரு குடும்ப நாவல்ல சொல்ல முடியுமான்னு தெரியல.

அசைவ உணவு , சைவ உணவு விளக்கம் அதுவும் அப்படியே. இதெல்லாம் இப்படி ஒரு அழகான குடும்ப கதை மூலமா படிக்கறவங்க மனசுல பதியறது நம்ம நாடு இருக்க நிலைமைல ரொம்ப தேவைன்னு நான் நினைக்கிறேன்.

மீரட் பத்தின இடம், வாணி விசாகன் கல்யாணம், பதேரி பஞ்சாயதெல்லாம் படிக்கிற பசங்களுக்கு நம்மள சுத்தியிருக்க, நமக்கே சம்மந்தமே இல்லன்னு நினைச்சாலும் புல்லுரிவியா புரையோடிபோயிருக்க ஜாதிய படிநிலை எப்படியிருக்குன்னு புரியும்.

வாணிய ரவளி வீட்ல அவங்க அப்பா நடத்தற விதம் புரியறப்போ அவங்க அவங்க வீட்ல, இல்ல வேற எதாவது இடத்துல இப்படி யாரையாச்சும் யாராவது நடத்தறப்போ இது தப்புன்னு ஒரு தலைமுறைக்கு புரியும்னு நம்பறேன். இந்த மாற்றம்லாம் அறிவுல பதிய வெக்க இந்த அழகான ரெண்டு ஜோடிகளை வெச்சு ரொம்ப அழகான கதைய குடுத்து இருக்கீங்க.

ரொம்ப சீரியஸ்ஸாவே போறமோ, ஆனாலும் இதெல்லாம் எழுத வேற கதை கிடைக்காதே.

இந்த விஷயத்தை தாண்டி கதையில நெறய விஷயங்கள் இருக்கு. எனக்கு என்னமோ அதிக ரொமான்ஸ் உள்ள உங்க கதை இதுவா இருக்கலாம்னு தோணுது. (நோ வெப்பன்ஸ் மக்களே)

அந்த ரெண்டு பேர் ரொமான்ஸ் பண்ணதவிட இந்த ரெண்டு வாலு ஜோடி பண்ண அலப்பறைகளை தனியா எழுதலாம்.

மீரட் அக்கால ஆரம்பிச்சு பபிதா வரை சின்ன சின்ன இடங்களை நிரம்பினவங்களும் ரொம்ப அழகான மனிதர்கள்.

நிவந்த் அஞ்சனி ஏன்னே எனக்கு தெரியல ஆனாலும் சிறுகதை ஜோடில ரொம்ப ஸ்பெஷல், அவங்கள மறுபடியும் கண்ணுல காட்டினதுக்கு நன்றிகள்.

அப்பறம் சமதளத்துல தெரியற நிலா, அணைக்கட்டு, சிஸில் என்று கேமரா மேன் டைரக்ட் பண்ற படம் போல லொகேஷன் கூட்டிட்டு போனதுக்கும் நன்றிகள்.

வாணி – விசாகன் & மீரட் – கிருபா அவங்கள சுத்தியிருந்த இருக்க அழகான மனுசங்க எல்லாரோடவும் கதை முடிஞ்சு, இந்த சமூகத்தில் இருக்க முக்கிய பிரச்சனையும் வாணி ஸ்பீச்ல எழுதி இந்த கதையோட மொத்த நோக்கத்தையும் கிளைமாக்ஸ்லையும் பதிவு பண்ணினது ரொம்ப பிடிச்சது.

நன்றிகள் காதலாம் பைங்கிளிகளுக்கும் அவங்க பதிவு பண்ண சமூக மாற்றத்துக்கும்.
-மனோ ரமேஷ்
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Awesome review Mano ??? unga review padichavanga kandippa intha kadaiya padikkanum endru ninaippanga.... enakke marubadiyum padikka asai varuthu.... ethanai murai padichalum pudhusa padikira feel because of Anna writing .... I wish Anna should win this Thedal 2018 .... fingers crossed
 




ManoRamesh

புதிய முகம்
Joined
Jan 19, 2018
Messages
10
Reaction score
2
Location
Chennai
yes . Naanum athan ninaikaren. Vegu jana makkala intha kathai poi seranumnum ninaikaren.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top