• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Kaadhale thunai 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
காதல் 3

அன்று ஞாயி்றுக்கிழமை காலையில் ஆதிக் பரபரப்பாக கிளம்பிக் கொண்டு இருந்தான். காரணம், பிரீத்தியை அழைத்து செல்ல அவள் தந்தை சரி என்று நேற்று கூறவும், இதோ கிளம்பி அவன் அறையில் இருந்து வெளியே வந்தான்.

அவன் அன்னை அவனை சாப்பிட அழைக்க, அவன் தன் தந்தையுடன் டைனிங் டேபிள் முன் அமர்ந்தான். பாட்டியை காணாமல், அவன் அன்னையிடம் விசாரித்தான்.

“அவங்க ஏதோ முக்கியமான வேலை இருக்கு அப்படினு சொல்லி, காலையில் கிளம்பி போய்ட்டாங்க ஆதிக்” என்று கூறினார்.

“ஓ! சரி மா எனக்கும் ஒரு முக்கியமான வேலை இன்னைக்கு இருக்கு, போய்ட்டு வந்திடுறேன்” என்று கூறி தன் காரை எடுத்துக் கொண்டு, பிரீத்தி வீட்டிற்கு வண்டியை விட்டான்.

பிரீத்தியின் தந்தை அவனை வாசல் வரை வந்து வரவேற்க, ஒரு புன்னகையுடன் அவரை நலம் விசாரித்த படி உள்ளே நுழைந்தவன் அதிர்ந்தான்.

அங்கே அவனின் பாட்டி, மிக சுவாரசியமாக பிரீத்தியுடன் பேசிக் கொண்டு இருந்தார்.

“பாட்டி! நீங்க எதோ முக்கியமான விஷயமா வெளியே போனீங்க அப்படினு அம்மா சொன்னாங்க. இங்க என்ன பாட்டி பண்ணுறீங்க, நீங்க?” என்று உள்ளே எரிச்சல் இருந்தாலும் வெளியே சிரித்த முகத்துடன் கேட்டான்.

“அட என்னடா ஆதிக்! உங்க அப்பா ஏதும் முக்கியமான விஷயம் சொன்னானா என்ன? இவ்வளவு தூரம், உன் மாமனார் வீட்டுக்கு வந்து இருக்க” என்று தெரிந்தும், தெரியாமல் கேட்டார்.

“பாட்டி! அவங்க என்னை வெளியே அழைச்சிட்டு போக, அப்பா கிட்ட பெர்மிஷன் கேட்டு இருந்தாங்க. நேத்து அப்பா சரின்னு சொல்லவும், உடனே வந்துட்டாங்க, அப்படிதானங்க” என்று பிரீத்தி அவனிடமே பந்தை போடவும், வெளியே சிரித்தாலும், உள்ளே பல்லை கடித்தான்.

“சொல்லுறேனு தப்பா எடுத்துக்காதீங்க, இன்னும் ஒரு பதினஞ்சு நாள் ல கல்யாணத்தை வச்சுட்டு, இப்போ வெளியே போறது நல்லது இல்லை”.

“வெளியே நம்ம சொந்தக்காரங்க, எந்த நேரத்துல என்ன பேசுவாங்கன்னு தெரியாது. அவங்க வாய்ல நாமளே, இந்தாங்க அவலை மென்னுங்க அப்படினு சொல்லுற மாதிரி ஆகிடும்”.

“ அதனால, வெளியே எங்கேயும் போக வேண்டாம், வேணும்னா இங்கேயே பேசிக்கட்டும் ரெண்டு பேரும்” என்று பாட்டி நிதர்சனத்தை எடுத்து கூறவும், அவர்களும் இந்த கோணத்தில் யோசிக்கவில்லை என்று கூறி, மாபிள்ளையிடம் மன்னிப்பு வேண்டினர்.

“ பரவாலை! நான் போன் ல பேசிக்குறேன். பாட்டி! நீங்க வந்த வேலை ஜோரா முடிஞ்சதுனா, வரீங்களா சேர்ந்தே வீட்டுக்கு போவோம்” என்று கஷ்டபட்டு கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்ட ஆதிக்கை பார்த்து, பிரீத்திக்கு சிரிப்பு வந்தது.

அதை அவள் கஷ்டபட்டு தனக்குள் அடக்கவும், அதை கண்டுகொண்ட ஆதிக், அவளை யாருமரியாமல் முறைத்தான். அவளோ, பதிலுக்கு பழிப்பு காட்டினாள் அவனுக்கு.

பாட்டியும், எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு அவனோடு காரில் ஏறி அமர்ந்தார். வண்டி சிறிது தூரம் சென்ற பிறகு, அவன் பாட்டியை முறைத்தான்.

“என்னடா முறைப்பு? நாளைக்கு நீங்க சேர்ந்து போறதை, இல்லை நீங்க வெளியிடத்தில் பார்துகிட்டதை யாரவது ஒரு ஆள் பார்த்தாலும், அதை எப்படி கண் காத்து மூக்கு வச்சு பேசலாம் அப்படின்னு தான் நினைப்பாங்க”.

“எதுனாலும் போன் ல பேசு, இனி அவ ஆபிஸ் பக்கம் கூட போக கூடாது நீ பார்த்துக்கோ” என்றவரை பார்த்து, அவனால் முறைக்க மட்டுமே முடிந்தது.

நேராக பாட்டியை வீட்டில் இறக்கிவிட்டு, இவன் நேராக சென்றது அவன் ஆபிஸ்க்கு தான். அவனின் காபின் சென்று கதவை அடைத்தவன், உடனே ப்ரீத்திக்கு தான் கால் செய்தான்.

அவள் எடுத்து பேசவும், உடனே பொரிய தொடங்கி விட்டான். அவளும் அவன் கத்தட்டும் என்று, அமைதியாக இருந்தாளே தவிர ஒரு வார்த்தை பேசவில்லை.

“என்ன வேணும் உங்களுக்கு? இப்போ நான் இந்த பிராஜக்ட் எடுத்தது உங்களுக்கு பிடிக்கல. அதனால, என்னை அந்த பிராஜக்ட் ல இருந்து விலக சொல்லி , உங்களுக்கு அதை கொடுக்க சொல்லுறீங்க அதானே” என்று தெள்ளத் தெளிவாக அவனிடம் கேட்டாள் பிரீத்தி.

“ம்ம்..அதான் உனக்கே தெரியுது தானே, அப்புறம் என்ன நீயே கொடுத்திடு, யாருக்கும் தெரியாம” என்று அவன் கூறவும், இந்த பக்கம் அவள் மௌனம் சாதித்தாள்.

“ஹே! லைன் ல இருக்கியா?” என்று பொறுக்க முடியாமல் கத்தினான்.

“உங்க கிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கல! தெரியாம உங்களை போய் ரோல் மாடலா நினைசேன்னு என்னை நினைச்சா, ஐ ஃபீல் ஷேம் ஆப் இட்”.

“அந்த பிராஜக்ட் என்னோட உழைப்பு, அதை நான் தர மாட்டேன். அட் தி சேம் டைம், இந்த கல்யாணத்தை நிறுத்த போறேன். இப்படி ஒரு பெர்சன், என் லைஃப் ல இருக்கவே வேண்டாம்” என்று கூறிவிட்டு போனை அணைத்தாள்.

அவளால் தாங்கேவே முடியவில்லை, எப்படி இவன் இப்படி இருக்கிறான் என்று. அப்பொழுது, வெளியே ஒரு முகம், உள்ளே வேறு முகமா? என்று எண்ணி குழம்பி போனாள்.

இங்கே ஆதிக், புன்னகை முகமாக சேரில் அமர்ந்து இருந்தான். அவன் என்ன நினைக்கிறான், ஏன் இதை செய்தான் என்று அவன் மட்டுமே அறிந்த ரகசியம்.
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அபிஷேகப்பட்டியில், ஆதி கபடி ஆடிக் கொண்டு இருந்தாள் சிறுவர்களோடு. அவளுக்கு பிடித்த விளையாட்டு இது, அதுவும் சிறுவர்களோடு அவள் சிறு பிள்ளையாகவே மாறி போவாள்.

அப்பொழுது அங்கே வந்த அஜய், அவள் ஆடிக் கொண்டு இருப்பதை பார்த்து சிரித்தான். அவளை வம்பு வளர்க்க, ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் அவன் விடுவானா? களத்தில் குதித்து விட்டான்.

“கேசரி! என்ன கபடி விளையாடுறியா?” என்று அவன் கேட்கவும், பதிலுக்கு அவள் நக்கலாக இல்லை தாயகட்டு விளையாடுதேன் என்றாள்.

“சரி! நானும் கபடி விளையாட வரேன், பெட் வச்சுக்கலாம் என்ன” என்றவன் அவளை பார்த்து கண் சிமிட்டினான்.

“நண்டு! இடத்தை காலி பண்ணுல, சும்மா என்னை வம்பு வளர்க்க வருவியால எப்போவும்” என்று விரல் நீட்டி மிரட்டி அவனை சதா ஸ்டைலில், போ யா போ என்றாள்.

“தோற்று போவோம் அப்படினு உனக்கு பயம், நான் கபடி பிளேயர் மா” என்று அவளை உசுப்பேற்றி விடவும் அவளும் அதில் சிலிர்த்து விட்டாள்.

“வா டா வா, உன்னை ஓட ஓட விரட்டுறேன்” என்று மனதில் கறுவிக் கொண்டு, அவனுக்கு விதிமுறைகளை கூற தொடங்கினாள்.

“நண்டு! அப்போ இதேன் விளையாட்டு முறை” என்று அவள் வகுத்த விதிமுறைகளை கூறவும், அவன் அதிர்ந்து விட்டான்.

“கேசரி! இது ஒன்னும் விளையாட்டு முறை இல்லை, கேம் ருல்ஸ் எல்லாம் மாத்துற” என்று அவளுக்கு தெரியவில்லை என்று அதை பற்றி விளக்கி கூற எத்தனித்தான்.

“எலேய் நண்டு! அது தெரியும்ல எங்களுக்கு, என் முறைதேன் இங்க , விளையாட சரின்னா வா” என்று அழுத்தமாக அவள் கூறவும், அவன் சற்று யோசித்தான்.

“பார்டா! இவ என் தோள் வரை கூட இல்லை, ஆனா இம்புட்டு சிலிர்துகிட்டு இருக்கா. மவளே, ரூல்ஸ் போடுறியா ரூல்ஸ் இரு டி உனக்கு மாமன் ஆப்பு வைக்கிறேன்” என்று எண்ணிக் கொண்டு களத்தில் இறங்கினான்.

“கேசரி! முதல பெட் என்ன? நான் ஜெய்ச்சா நான் சொல்லுறது நீ கேட்கணும், நீ ஜெய்ச்சா நான் நீ சொல்லுறது கேட்பேன். இந்த டீல் உனக்கு ஓகே வா, இல்லையா?” என்று கேட்டான் அஜய் ஆட தயாராகும் முன்.

அவளும் சரி என்றாள், எப்படியும் ஜெய்த்து விடுவோம் என்ற நம்பிக்கையில். பாவம் அவளுக்கு தெரியவில்லை, அவன் கபடி சாம்பியன் என்றும், அவன் ஒன்றை முடிவு செய்து விட்டால் அதை நடத்தி காட்டிடுவான் என்று தெரியவில்லை.

அந்த பக்கம் நான்கு பேர், இந்த பக்கம் நான்கு பேர் இருக்க. இரு பக்கமும் மூன்று சிறுவர்கள், அவர்களை தலைமை தாங்கும் பொறுப்பு பெரியவர்களுக்கு.

“டேய் பசங்களா! நாம தான் ஜெய்க்கணும், என்னை ஜெய்க்க வச்சா, உங்க அம்புட்டு பேரையும் அழகா போட்டோ பிடிச்சு எடுத்து தாரேன் சரியா” என்று அஜய் அவர்களிடம் பேரம் பேசிக் கொண்டு இருந்தான்.

அதில் ஒரு சிறுவன் ஆசையாக சரி என்று கூற வரும் பொழுது, மற்றொரு சிறுவன் அவனை தடுத்து முறைத்தான்.

“டேய்! அக்கா சொல்லி விட்டதை மறந்துட்டியால. இந்த அண்ணா, இன்னும் கொஞ்ச நாள் தான் இங்கின இருக்குமாம், அப்புறம் வெளிநாடு போய்டும்”.

“சும்மா ஜெய்க்க வைக்க அத்தனை ஆசை காட்டும், அதை நம்பாதீங்க அப்படின்னு அக்கா சொல்லுச்சுல” என்று நியாபகப்படுத்தவும் உடனே அவன் பின் வாங்கினான்.

போட்டி ஆரம்பமாகவும், அஜயின் டீமில் இருந்த சிறுவர்கள் தோற்று வெளியேறவும், தானே களத்தில் இனி இறங்கி ஜெய்த்தால் தான் உண்டு, என்று அவனுக்கு விளங்கி விட்டது.

இந்த பக்கம் அவளும், மற்ற சிறுவர்களும் அவனை தோற்க யுக்திகளை கையாள நினைக்க, அவனோ சர்வ சாதாரணமாக அந்த மூன்று சிறுவர்களையும், வெளியேற செய்தான்.

“ஆத்தி! ஆதி இவனை தப்பா எடை போட்டுட்ட போலல, சரி இவனை வேற மாதிரிதேன் தோற்க வைக்க முடியும்” என்று எண்ணிக் கொண்டு அவளை இவன் நெருங்கும் பொழுது, இவள் சட்டென்று பயம் கொள்ளுவது போல் செய்து, அவன் தடுமாறும் சமயம் இவள் தப்பித்து விடுவாள்.

இப்படி சென்று கொண்டு இருந்த ஆட்டத்தில், ஒரு கட்டத்தில் அவனுக்கு மூச்சு வாங்கவும், உடனே சுதாரித்தான். அவளின் திட்டமும் புரியவும், இனி இவளை விட கூடாது என்று எண்ணி, அடுத்து அவள் சுதாரிக்கும் முன் அவன் அவளை தூக்கி வெளியே விட்டான்.

அவனின் இந்த செயலை எதிர்பாராதவள், ஒரு நிமிடம் தடுமாறி தான் போனாள். அதில் அவனும் தடுமாறினாலும், அதை எல்லாம் முகத்தில் காட்டாமல் ஹுரே ஜெய்த்து விட்டேன் என்று கத்தி ஆர்பரித்தான்.

“இது போங்காட்டம், நாங்க ஒத்துகிட மாட்டோம்ல” என்று சண்டை பிடித்தாள்.

“அடி பின்னிடுவென்! ரூல்ஸ் எல்லாம் மாத்தி நீ விளையாடிட்டு, இதுல நான் போங்காட்டாம் ஆடுறேனா. ஒழுங்கா எல்லோரும், இப்போ இந்த நிமிஷத்துல இருந்து என் பேச்சை கேட்கணும்” என்று கூறியதோடு நில்லாமல், யாரையும் அங்கு இருந்து நகர விடவில்லை அவன்.

“ஆதி பிள்ளை! நீ எப்படியாவது இங்க இருந்து ஒடிடு ல. இல்லை, இவன் கண்ணுல விரல் விட்டு ஆட்டிபுடுவான்” என்று மனம் எச்சரிக்கை செய்ய, அவன் கண்ணில் மண்ணை தூவி விட்டு, அங்கு இருந்து ஓட்டம் பிடித்தாள்.

அவனோ, கொகுக்கு ஒன்றே மதி போல அவளை மட்டுமே குறி வைத்து துரத்தினான். அதற்குள் அங்கு இருந்த மற்ற வாண்டுகள், தங்கள் அக்காவை காப்பாற்ற அவனை பிடிக்க துரத்திக் கொண்டு வந்தனர்.

இதுவரை ஊருக்கு சற்றே தள்ளி உள்ள ஆற்று பக்கம் விளையாடியவர்கள், இப்பொழுது ஊருக்கு உள்ளே ஓட தொடங்கவும், எல்லோரின் கண்ணும் இவர்கள் மீது தான்.

அப்பொழுது இதை பார்த்த, அஜய்யின் தந்தை முகம் கோபத்தில் சிவந்தது. அதே கோபத்துடன் வீட்டிற்கு சென்றவர், மகன் வருவதற்காக காத்துக் கொண்டு இருந்தார்.

தொடரும்..
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
Hi makkale,

Ini regular ud poduven .. just only kaathal மட்டுமே மையமாக கொண்டு எழுதிய கதை .. relax பண்ணிக்க.. ஏனெனில் அடுத்து எழுத போகும் கதை சற்று கனமானது.

அதிலும் காதல், மோதல் வரும் ஆனால் subject கொஞ்சம் கனம் பொருந்தியது. ஓவர் அழுகாச்சி எல்லாம் இல்லாம, கொஞ்சம் குறைச்சு கொடுக்க try seiren ok VA .

Anbudan
Uma Deepak..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top