• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

MahalingaM

மண்டலாதிபதி
Joined
Mar 15, 2018
Messages
104
Reaction score
144
Location
Anthiyur
"அட ஐயப்பா ..அடம் புடிச்சு உன்னப் பாக்க வந்த பாவத்துக்கு அந்தப் புள்ளைக்கு இப்படியொரு சோதனையவா நீ குடுக்கணும்?"

கடந்த காலத்துக்குப் போயி ஆழ்ந்து கதை சொல்லிட்டிருந்த சக்தியும்,குஷியா கேட்டுக்கிட்டிருந்த கந்தசாமி மாமனும் குறுக்க வந்த அந்தக் கமெண்டுக்குத் திரும்பிப் பாக்க.. அருக்காணி அத்தை! ரூமுக்கு வெளிய கதவுக் கிட்ட உக்காந்து கதை கேட்டுக்கிட்டிருந்தவங்களால இந்தக் கட்டத்துல பேசாம இருக்க முடியாம அதச் சொல்ல..திரும்பிப் பாத்த சக்தி சொன்னான்..

"உள்ள வந்து சௌகரியமா உக்காரலாமே அத்தை.. எதுக்கு அங்க உக்காந்து கேக்கணும்?"

அத்தை பதில் சொல்றதுக்கு முன்ன கந்தசாமி கிண்டலாச் சொன்னார்..

"விடுங்க மாப்ள.. இந்தப் பொம்பளைங்களுக்கு ஏக்கரா கணக்குல வீடிருந்தாலும் வாசப் படி தான் சொர்க்கம்.. கடங்காரி மாதிரி அங்க உக்காந்து நாயம் பேசலைன்னா அவங்க மண்ட வெடிச்சுடும்"

அருக்காணி அத்தை சிரிச்சுக்கிட்டே சொன்னாங்க இப்படி..

"ஆமாங்க மாமா.. கடங்காரி தான்.. பொன்னோ பொருளோ,காசு பணத்தையோ குடுத்த கடங்காரி இல்ல..மொத்த வாழ்க்கையவும் அர்ப்பணிச்ச கடங்காரி.. அப்பனுக்காக,கூடப் பொறந்த பொறப்புகளுக்காக, தலையக் கவுந்து தாலிய வாங்கிய பின்னால கட்டின புருசனுக்காக..அவரு கூடப் படுத்துப் பெத்த குழந்தைகளுக்காக..அந்தக் குழந்தைங்க பெத்த குழந்தைங்களுக்காக..காலைல வேலைக்குப் போனவங்கள இன்னுங் காணலியேன்னு திங்காம கொள்ளாம காத்திருக்கற கடங்காரி..பாக்கப் போனா பொம்பளைங்க வாழ்க்கைல பாதி காலம் காத்திருக்கறதுலயே கடந்து போயிடுது.. சுருக்கமாச் சொன்னா..பொம்பளையோட இன்னொரு பேரு.. ..குடும்பத்துக்காக ..நல்லத எதிர் பாத்து...

காத்திருக்கறவ... "

சக்தி அசந்து போனான்..அத்தை இவ்வளவு அருமையா பேசுவாங்களா?நறுக்குத் தெறிச்ச மாதிரி ஒண்ணு, ரெண்டு வார்த்தையத் தான் அவங்க பேசி அவன் கேட்டிருக்கான்.. இந்த மாதிரி கேட்டதில்ல.. உண்மைலயே மாமனும் அத்தையும் ஆதர்ச தம்பதிங்க தான்..அப்படிப் பட்டவங்களோட இருந்து வாழறதுக்கு குடுத்து வச்சிருக்கணும்..இந்த ரீதில போயிட்டிருந்த அவன் சிந்தனையக் கலைச்சது மாமன் குரல்...

"அப்படியேன் காத்திருக்கணும்.. வெளிய போனவனுக்கு வீடு வரத் தெரியாதா?ஒரு அஞ்சு நிமிசம் லேட்டானா எடுத்துக் கட்டிக் கற்பனை பண்ணி பெரிசு பண்றதே உங்க ஜாதிக்குப் பொழப்பா போச்சு.."

"அதென்னவோ நெசந் தானுங்க மாமா..அதுக்குக் காரணம் அவ உலகம் ரொம்பச் சின்னது.. குடும்பம் மட்டுமே உள்ள அடங்கின நக்கிணியூண்டு உலகம்.. ஆனா,அதப் பத்தின கற்பனையும்,எதிர் பார்ப்பும் ரொம்பப் பெருசு.. இந்த உலகத்த விட..ஏன்?அண்ட சராசரங்கள விட பெருசுன்னும் சொல்லலாம்"

"அதத் தான் ஏன்னு கேக்கறேன்.. எங்களுக்கு மட்டும் குடும்பம் பத்தின கவலை கெடையாதா?உங்கள விட அதிகமாவே இருக்கு.. ஆனா,நாங்க அப்படி அலட்டிக்கறதில்லையே?"

அத்தை உடனே இதுக்குப் பதில் சொல்லாம தலை குனிஞ்சு யோசிக்கவும் மாமன் தொடையத் தட்டி ஆர்ப்பாட்டமாச் சிரிச்சுச் சொன்னார்..

"என்ன அருக்கு டார்லிங்..பேச்சு,மூச்சையே காணமே.. வாயடைச்சுப் போச்சா?"

அத்தை இதுக்கும் உடனே பதில் சொல்லாம மாமனத் தலை நிமிந்து பாத்து சின்னதாச் சிரிக்க.. மாமனுக்கு உற்சாகம் உச்சத்துக்குப் போச்சு..

"ஹலோ மேடம்.. "னு கூப்பிட்டு எந்திரிச்சு துண்ட உதறி உருமாலையாத் தலைல கட்டிக்கிட்டு பாட ஆரம்பிச்சுட்டார்..

"என் கேள்விக்கென்ன பதில்..
உன் பார்வைக்கென்ன பொருள்..
என்ன்ன் கேள்விக்கென்ன பதில்ல்ல்..
உன் மௌனம் என்ன மொழி..."

அத்தை புன்னகையப் பெருசாக்கிச் சொன்னாங்க..

"போதும் நிறுத்துங்க..பாட்டக் கொல பண்ணாதீங்க"

"அப்படீன்னா எங் கேள்விக்கு பதிலச் சொல்லு.. இல்லாட்டி அப்படித் தான் பாடுவேன்.. என்ன்ன் கேள்விக்..."

மாமன் மறுபடியும் எட்டுக் கட்டைல ராககத்த இழுக்க அத்தை அவசரமாச் சொன்னாங்க..

"ஐயோ ராமா.. பதில் இல்லாம இல்ல.."

"அப்பச் சொல்ல வேண்டியது தானே?"

"அதான் அப்புறமா சொல்றேன்னு.."

"இந்தக் கதை தான வேண்டாங்கறது.. பதில் தெரியலேன்னா தெரியலேன்னு உண்மைய ஒத்துக்கிட்டுப் போயேன்.."

"தெரியாம இல்லீங்க மாமா..சக்தி தம்பி இருக்கேன்னு பாத்தேன்.."

இவ்வளவு நேரமும் இதுல தலையிடாம வேடிக்கை பாத்து ரசிச்சுக்கிட்டிருந்த சக்தி அவசரமாச் சொன்னான்..

"அதான் அப்புறமாச் சொல்றேன்னு சொல்றாங்க இல்ல.. விடுங்க மாமா"

ஆட்டம்,பாட்டத்த நிறுத்திட்டு மாமன் தலைத் துண்ட அவுத்து முகத்தத் தொடைச்சுக்கிட்டே அவனுக்கு எதுக்க உக்காந்து சொன்னார்..

"அப்படியென்ன மாப்ள உங்களுக்குத் தெரியாத ரகசியம் எங்களுக்குள்ள..?அவ என்ன பதில் சொல்வான்னு எனக்குத் தெரியும் ..இனி அதையெல்லாம் கேட்டு எனக்கு ஆகப் போறது எதுவுமே இல்லீங்க மாப்ள.. நீங்க தான் அவசியம் அதக் கேக்கணும்...."

இந்த எடத்துல பேச்ச நிறுத்திட்டு அத்தை பக்கம் திரும்பி மென்மையாச் சொன்னார்..

"இத பாரு அருக்காணி.. மாப்ளைய நீ பெத்த புள்ளையா பாவிக்கறது உண்மைன்னா தயங்காம அதுக்கான பதில நீ இப்ப சொல்லியே ஆகணும்"

அதுக்கப்புறம் நடந்தது தான் அற்புதம்.. எத்தனையோ வருசங்களுக்கப்புறம் கூட சக்தி அத நெனைச்சு ஆச்சரியப் பட்டு நெகிழ்ந்திருக்கான்..மாமன் அப்படிச் சொன்னது தான் தாமதம்..அத்தை ஏதோ ஆவேசம் வந்த மாதிரி பேச ஆரம்பிச்சுட்டாங்க..

"பொண்ணுங்க உலகம் சின்னது..அதுக்குள்ள குடும்பம் மட்டுமே இருக்கும்ங்கறதால அவ கற்பனையும் கனவுகளும் அதத் சுத்தியே இருக்கும்.. உலகம் சிறிசுங்கறதால கற்பனைக் கனவுச் சுத்தல் அதிகமா இருக்கும்..ஆண்டவன் அவளப் படைச்ச விதம் அப்படி.."

"இதுக்கெதுக்கு ஆண்டவன இழுக்கற அருக்கு..?"

"அப்ப இயற்கைன்னு வச்சுக்கலாமா?பேரு எதுவா இருந்தா என்னங்க மாமா?விசயம் இது தான்.. படைப்புலயே ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் பெருசா வித்தியாசமிருக்கு.."

மாமன் குறுக்க பூந்து நக்கலா ஏதோ சொல்ல வந்த போது பார்வைலயே சக்தி அவர அடக்கிட்டு 'நீங்க சொல்லுங்க'ங்கற மாதிரி அத்தையப் பாக்க அவங்க இதப் பத்தி எந்தக் கவனமும் இல்லாம பேசினாங்க..
ஆஹா மாமானும் அத்தையும் வந்த்தால இன்னமும் விருவிருப்பா போகுதுங்க மாமா
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
ஆஹா மாமானும் அத்தையும் வந்த்தால இன்னமும் விருவிருப்பா போகுதுங்க மாமா
மனு,சக்திய விட மாமன்,அத்தைய ரசிக்கறவங்க தான் இங்க அதிகம் போல மாப்ள..
 




Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
எங்க உன் ரவுடி பார்ட்னர்?இதெல்லாம் நல்லதுக்கில்லடா.. சொல்லிடு..
உங்க ரெண்டு பேருக்கும் இன்னும் வாய்க்கால் தகராறு இன்னும் முடியலையா டாடி
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
உங்க ரெண்டு பேருக்கும் இன்னும் வாய்க்கால் தகராறு இன்னும் முடியலையா டாடி
நாளைக்குள்ள வரலேன்னா கொழுந்தி பதவில இருந்து டிஸ்மிஸ் பண்ணிடுவேன்னு சொல்லிடும்மா..
 




Saru

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
2,198
Reaction score
1,923
Location
Hosur
Arpudamana padivu Anna..
Athayammma allitanga super super
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode

MahalingaM

மண்டலாதிபதி
Joined
Mar 15, 2018
Messages
104
Reaction score
144
Location
Anthiyur
மனு,சக்திய விட மாமன்,அத்தைய ரசிக்கறவங்க தான் இங்க அதிகம் போல மாப்ள..
ஆமாங்க மாமா
 




MahalingaM

மண்டலாதிபதி
Joined
Mar 15, 2018
Messages
104
Reaction score
144
Location
Anthiyur
மாமா இந்த கறி கோழி, நாட்டு கோழி மாதிரி தாங்க இந்த பாலும். இப்ப லாம் பால் அதிகமாக கிடைக்குதுங்கறதுக்காக ஜெர்சி,சிந்து (ஹைப்ரேட்) இன மாடுகளை வளர்க்கிறாங்க ஆனா நாட்டு மாடு வளர்ப்பு குறைந்துறுச்சுங்க. இந்த இரண்டுக்கும் சின்ன வித்தியாசம் என்னனாங்க நாட்டு மாட்டு கன்று பிறந்த்திலிருத்து அது கன்று ஈன்ற நான்கு வருடம் ஆகும் அதாவது அது பருவத்திற்கு வருவதற்கே குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் ஆவுமுங்க அதிலிருந்து கன்று ஈன்ற 10 மாதங்கள் கிட்டத்தட்ட 4 வருடங்கள் ஆகுதுங்க. அதே ஜெர்சி இனக் கன்று பிறந்த்திலிருந்து 10 -14 மாதத்திற்குள் பருவத்திற்கு வந்து 2 ஆண்டில் கன்று ஈன்று விடுகிறது. அது மட்டும் இல்லாமல் நாட்டு மாடு மழை வெயில் உழவு வண்டி என அனைத்து ம் தாங்க இழுக்க கூடிய சக்தி கொண்டுள்ளது. ஹைப்ரேட் இனம் அவ்வாறு இல்லை. இந்த பாலை குடிக்கும் போது நமது ஆரோக்கியம் அப்படித்தான் இருக்கும். பெண் குழந்தை களும் சீக்கிறம் பருவத்திற்கு வந்து விடுகிறார்கள் .
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
மாமா இந்த கறி கோழி, நாட்டு கோழி மாதிரி தாங்க இந்த பாலும். இப்ப லாம் பால் அதிகமாக கிடைக்குதுங்கறதுக்காக ஜெர்சி,சிந்து (ஹைப்ரேட்) இன மாடுகளை வளர்க்கிறாங்க ஆனா நாட்டு மாடு வளர்ப்பு குறைந்துறுச்சுங்க. இந்த இரண்டுக்கும் சின்ன வித்தியாசம் என்னனாங்க நாட்டு மாட்டு கன்று பிறந்த்திலிருத்து அது கன்று ஈன்ற நான்கு வருடம் ஆகும் அதாவது அது பருவத்திற்கு வருவதற்கே குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் ஆவுமுங்க அதிலிருந்து கன்று ஈன்ற 10 மாதங்கள் கிட்டத்தட்ட 4 வருடங்கள் ஆகுதுங்க. அதே ஜெர்சி இனக் கன்று பிறந்த்திலிருந்து 10 -14 மாதத்திற்குள் பருவத்திற்கு வந்து 2 ஆண்டில் கன்று ஈன்று விடுகிறது. அது மட்டும் இல்லாமல் நாட்டு மாடு மழை வெயில் உழவு வண்டி என அனைத்து ம் தாங்க இழுக்க கூடிய சக்தி கொண்டுள்ளது. ஹைப்ரேட் இனம் அவ்வாறு இல்லை. இந்த பாலை குடிக்கும் போது நமது ஆரோக்கியம் அப்படித்தான் இருக்கும். பெண் குழந்தை களும் சீக்கிறம் பருவத்திற்கு வந்து விடுகிறார்கள் .
மாடுங்களப் பத்தி சில விசயங்கள் வேணும் மாப்ஸ்.. கூப்பிடுங்க..
நன்றிங்க
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top