• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kanavil Vantha Kalvane...! - 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 6

காலையில் வழக்கத்திற்கும் மாறாக வேலைக்கு சீக்கிரம் வந்த நிலா சீட்டில் அமர்ந்த பின்னும் அவளின் கண்கள் வாசலிலேயே நிலைத்து நின்றது...

அவளின் கண்களில் தேடல் இருந்தது.. ‘அவன் வருகிறானா..?!’ என்று கண்கள் இங்கும் அங்கும் அலைபாய.. அவளின் மனம் அவனுக்காக தவித்தது..

‘ஒரு வேலை அவனுக்கு உடம்புக்கு சரியில்லையே..? நேற்று நன்றாகத்தானே இருந்தான்.. ஏன் இன்னும் வரவில்லை..?’ என்று தனக்குத்தானே கேள்விக் கேட்டுக் கொண்டு வாயிலைப் பார்த்தவண்ணம் வேலையைப் பார்த்தாள் நிலா..

ஆனால் அவள் ஒன்றை மறந்து விட்டாள்.. வழக்கத்திற்கும் மாறாக தான் சீக்கிரம் வந்ததை மறந்துவிட்டால் போல..?!

‘அவன் வரமாட்டான்’ என்று உறுதியாக நினைத்தவள் தனது வேலையில் கவனத்தை செலுத்தினாள் நிலா..

அவள் வருவாள் என்று இதுவரை பார்த்துவிட்டு வரமாட்டாள் என்று நினைத்தவன் ஆபீஸிற்குள் நுழைய, அங்கு அமர்ந்து வேலைப் பார்த்துக் கொண்டிருந்த நிலாவைப் பார்த்து ஒரு நிமிடம் நிம்மதியாக உணர்ந்தவன்..

மறுநிமிடமே, ‘ராச்சசி இங்கு வந்து உட்காந்திருக்கிறாள் பாரு.. என்னை அலைய விடுவதில் அலாதியான நிம்மதி.. அவ்வளவு சந்தோசம் இவளுக்கு..’ என்று மனதில் அவளைத் தாளித்தான் முகிலன்..

தனது முழு கவனத்தையும் செலுத்திய நிலா, முகிலனின் வரவைக் கவனிக்கவே இல்லை.. ‘ஒருத்தன் இன்னும் ஆபிசிற்கு வழியில்லையே என்ன ஆச்சோ..? என்ற தவிப்பு சிறிதும் இருக்கிறதா பாரு..? நல்ல செதுக்கி வைத்த சிலைபோல அமர்ந்திருக்கிறாள்..’ அதற்கும் சேர்த்து திட்டிக் கொண்டிருந்தான் முகிலன்..

ஆனால் அவனது பார்வையைக் கூட உணராமல் இருந்தாள் நிலா.. சிறிது நேரத்தில் வேலையை முடித்தவள்.. அன்று வேலைக்கு லீவ் சொல்லிவிட்டு நிமிர்ந்துப் பார்க்காமல் சென்றுவிட்டாள்..

‘என்ன வந்து ஒருமணிநேரம் கூட இல்லை.. அதற்குள் லீவ் சொல்லிவிட்டு எங்கே செல்கிறாள்..?’ என்ற யோசனையுடன் டூ ஹௌர்ஸ் பர்மிஷன் போட்டுவிட்டு அவளைப் பின்தொடர்ந்தான் முகிலன்..

அவள் நேராக ஒரு ரெஸ்டாரண்டிற்கு சென்றாள்.. ரெஸ்டாரண்ட் உள்ளே சென்றவள் ஆடார் கொடுத்துவிட்டு, செல்லை எடுத்து இரயில் டிக்கெட் புக் செய்தாள்..

இரயில் டிக்கெட் பதிவு செய்துவிட்டு நிமிர்ந்தவள், தனது எதிரே அமர்ந்திருந்தவனைப் பார்த்து உடனே முகம் மலர்ந்தது.. ஆனால் அதை நொடிப்பொழுதில் மறைத்துக்கொண்டு கண்டுக்காதது போல அமர்ந்திருந்தாள் நிலா..

ரெஸ்டாரண்ட் உள்ளே வந்ததிலிருந்து அவளின் அசைவுகளைக் கவனித்த முகிலன், “நிலா..?!” என்று அழைக்க.. அதற்கெனவே காத்திருந்த நிலா, “இங்கும் வந்து விட்டீர்களா..? உனக்கு என்னதான் வேண்டும் முகிலன்..?” என்றாள் அவள்

“உன்னைப் பார்க்க ஒன்றும் வரவில்லை.. இங்கே தேவியின் தரிசனம் பார்க்க வந்தேன்..” என்றான் முகிலன்..

“என்னது..?! ரெஸ்டாரண்டில் தேவியின் தரிசனமா..?!” என்றாள் நிலா திகைப்புடன்..

“இதோ பாலாவே வந்துவிட்டாள்..” என்று கூறியவன், “ஹாய் பாலா..” என்றான் முகிலன்..

அவனின் அழைப்பைப் பார்த்து அவன் பார்வை சென்ற திசையை நோக்கிய நிலா, அங்கே தேவிபாலா வருவதைப் பார்த்தவள் கோபம் வந்தது.. நிலவிற்கு வந்த கோபத்திற்கு அவனை கன்னம் கன்னமாக அறைய வேண்டும் போல இருந்தது..

அவளின் கோபத்தைப் பார்த்த முகிலன், ‘நான் எப்படி தவித்து இருப்பேன்.. நீ கொஞ்சமாவது என்னை நிமிர்ந்துப் பார்த்திருப்பா..?’ என்று நினைத்தவன்..

அவன் பார்வையின் பொருளை புரித்துக் கொண்ட நிலா, ‘உன்னை நினைக்காமல் இருந்ததால் தான் அதிசயம்..’ என்று அவனின் பார்வைக்கு பதில் கொடுத்தாள் மனதில்..!

அதற்குள் அவனின் அருகில் வந்த தேவிபாலா, “ஹாய் முகிலன்.. மெயிலில் உங்களின் போட்டோ பார்த்தேன்..” என்று அவனின் அருகில் அமர்ந்தாள்..

அதை கவனித்த நிலவின் முகம் வாடியது.. அவள் அமைதியாக இருப்பதைப் பார்த்து முகிலனுக்குதான் மனம் வலித்தது.. மேலும் அவளின் முகம் வாடுவதைப் பார்த்து எழுந்து சென்று விடலாமா என்று கூட தோன்றியது..

அந்தநேரம் நிலாவின் செல் அடிக்க, அதை எடுத்தவள், “ஹலோ கவி! வாட் எ சப்ரைஸ்.. நீயே கால் பண்ணிருக்க..?” என்று தன்னை சமாளித்துக்கொண்டு பேசினாள் நிலா.. என்னதான் அவள் சமாளித்தாலும் அவளின் குரலில் சிறிது தடுமாற்றம் இருக்கவே செய்தது.. ஆனால் எதிரே இருந்த இருவரையும் மறந்தாள் நிலா..

அவளின் குரலில் இருந்த மாறுதலைக் கண்டுக் கொண்ட கவிமலர், “நிலா என்னடி குரல் ஒரு மாதிரியாக இருக்கிறது..?” என்று கேட்க,

“நான் உன்னிடம் திருக்குறள் சொல்லவில்லையே கவி.. அப்புறம் எப்படி குறள் மாதிரியாக இருப்பதாக கூறுகிறாய்..?” என்று சிரித்தாள் நிலா..

“பெரிய கவிஞர் என்று நினைப்பு..? கவியிடமே உனது கவியைக் காட்டுகிறாய்..? நான் திருக்குறளை சொல்லவில்லை..” என்றாள் கவிமலர்..

“அப்புறம்..?” என்றாள் நிலா குழப்பமாகவே கேட்டாள்..

“உன்னோட சொந்த குரலில் என்ன மாற்றம் என்று கேட்டேன்..” என்றாள் கவிமலர்..

“எல்லாம் மாறிப்போனது..” என்றாள் நிலா இருப்பொருள் பட கூறினாள்.. முகிலன் புருவம் உயர்த்திப் பார்த்ததை, நிலா கண்டுக்கொள்ளவே இல்லை..

“குரல் மாறிவிட்டதா..? இல்லை திருக்குறளே மறந்து விட்டதா..?” என்று கேலி செய்தாள் கவிமலர்..

“ஒரு ‘ர’ மாற்றினால் இத்தனை பிரச்சனை வருகிறது.. எனது குரல் நன்றாக இருக்கிறது.. திருக்குறளும் மறக்கவில்லை.. நீ எதற்கு போன் செய்தாய்..? அதை சொல்லு முதலில்..?” என்றாள் நிலா புன்னகையுடன்...!

“நீ ஏன் எனக்கு போன் செய்யவில்லை..?” என்று குறைப்பட்டாள் கவிமலர்..

“என்னடா தினமும் நாம் மட்டும் போன் செய்கிறோம்.. இவள் நமக்கு அழைப்பதே இல்லை.. ஒருவேளை நாம் ரொம்ப தொந்தரவு செய்கிறோமோ..? என்று நினைத்தேன்..” என்றாள் நிலா கேலியாகவே..!

“நிலா நீ என்னை தொந்தரவு செய்வதாக நான் சொன்னேனா..?” என்று வருத்ததுடன் கூறினாள் கவிமலர்..

“நீ அப்படி சொல்லவில்லை.. நான் அப்படி நினைத்துக் கொண்டேன் போதுமா..! இனிமேல் அப்படி நினைக்க மாட்டேன்..” என்று சிரித்தவள்..

“நீ ஆடிட்டர் ஆபீஸ் போகவில்லையா..?” என்றாள் நிலா..

“குறுக்கு விசாரணை செய்கிறாய்..?” என்று சிரித்தவள்.. “இந்த விசாரணையை நான் செய்ய வேண்டும் நிலா செல்லம்.. நீ ஆபீஸ் போகவில்லையா..?” என்று கேட்டாள் கவிமலர்..

“இல்லடா.. போகவே இல்லை.. அப்பா போன் செய்தார்.. உடனே மும்பை கிளம்பி வரச்சொல்லி ஆடார்..” என்று சிரித்தவள், “டிக்கெட் புக் பண்ணிவிட்டேன்.. எனக்கு ப்ரஜெக்ட் வொர்க் முடிந்தது.. நாளைக்கு அங்கே இருப்பேன்..” என்றாள் நிலா.. ஆனால் அவள் அங்கே என்றதை இருவரும் தவறாகப் புரிந்துக் கொண்டனர்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அது வேறு யாரும் அல்ல, எதிரே அமர்ந்திருந்த முகிலன் அவள் மும்பை செல்கிறாளா..? என்று நினைக்க, கவிமலர் மும்பை செல்கிறாள் என்று நினைத்தாள்..

“சம் திங் ராங்.. என்ன தீடிரென..?” என்றாள் கவிமலர்..

“இங்கு எல்லாம் ராங்காதான் நடக்கிறது..” என்றவள் யோசனையுடன், “சரி கவி நான் நாளைக்கு அழைக்கிறேன்..” என்று சொல்லிவிட்டு போனை வைத்தவள் சிரித்துவிட்டு அமர்ந்தாள்..

எதிரே அமர்ந்திருந்த இருவரையும் மறந்து, அவள் உணவை சாப்பிடுவிட்டு எழுந்து சென்றாள்.. முகிலன் – தேவிபாலா இருவரையும் அவள் திரும்பிப்பார்க்கவே இல்லை..

ஆனால் முகிலனின் பார்வை தன்னைத் தொடர்வதைக் கவனித்தாலும், திரும்பிப்பார்க்காமல் செல்ல, அவனின் பார்வையைக் கவனித்த தேவியின் புருவம் உயர்ந்தது..

“முகிலன் அவங்க உங்களுக்கு தெரிந்தவங்களா..?” என்று வினாவினாள்..

“சாரி பாலா..! இந்த பதிலை சொல்லத்தான் உன்னை அழைத் தேன்.. என்னைத் தவறாக என்ன வேண்டாம்.. நான் அவளைத் தான் விரும்புகிறேன்.. அவள் பெயர் நிலா.. என்னை விரும்புகிறாள்..” என்று சொல்ல தேவிக்கு வியப்புடன் பார்த்தாள்..

“இப்பொழுது உண்மையைச் சொன்னதற்கு ரொம்ப தேங்க்ஸ் முகிலன்..!” என்று தேவி வேகமாக கூற, இறுக்கம் தளர்ந்து சிரித்துவிட்டான் முகிலன்..

“நான் எப்பொழுது இந்த பதிலைச் சொல்வேன் என்று ரொம்ப எதிர்பார்த்தீங்க போல..?!” என்று கேட்டான் அவன்

“எனக்கு திருமணத்திற்கு சம்மதம் சொல்ல சுத்தமாக இஷ்டம் கிடையாது.. ஆனால் அம்மாவின் சொல்லுக்காக உங்களைப் பார்க்க வந்தேன்.. நான் சொல்ல நினைத்த சாரி நீங்க சொன்னதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி..” என்று சிரித்தவள், “ஆல் தி பெஸ்ட் முகிலன்..” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றாள் அவள்

இங்கே முகிலன் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்க, வெளியே சென்ற தேவிபாலா.. நிலாவை இடைமறித்து, “யூ ஆர் ஸோ லக்கி..!” என்று கூறினாள் அவள்..

வெளியே வந்தவளின் மனத்தைக் குளிரவைப்பது போல கூறிய தேவிபாலாவைப் பார்த்துப் புன்னகைத்த நிலா, “ஐ எம் நிலா..” என்று அறிமுகப்படுத்திக் கொள்ள, “எனக்கு தெரியும் நிலா உங்களின் அவர் சொன்னார்..” என்று சிரிக்கவே நிலவும் புன்னகைத்தாள்..

அவள் தன்னை அறிமுகம் செய்ய நினைக்கையில், “எனக்கும் உங்களின் பெயர் தெரியும் என்னுடைய முகிலன் சொன்னார்.. தேவியின் தரிசனம் காண வந்தேன் என்று என்னைக் கடுப்பாக்கினார்.. நானும் எனது பங்கிற்கு மும்பை செல்வதாக கடுப்பேத்திவிட்டு வந்துவிட்டேன்..” என்று சிரித்தாள் நிலா..

“ஒரு வார்த்தை பேசாமல் இருந்ததைப் பார்த்து நானே அளவாகத்தான் பேசுவார்கள் என்று நினைத்தது கொஞ்சம் ஏமாந்து போனது எனது தவறோ என்று என்னும்படி வைத்துவிட்டீர்கள்..” என்று சிரித்தாள் தேவிபாலா..

“மும்பையில் அப்பா – அம்மா எப்படி இருக்கிறார்கள்..?” என்று விசாரிக்க, “எந்த அப்பா-அம்மா..? யாருடைய அப்பா-அம்மா..?”என்று புன்னகையுடன் கேட்டாள் நிலா..

அதைக்கேட்டு அதிர்ந்த தேவிபாலா, “என்ன நிலா விளையாடுகிறாயா..? உன்னுடைய அப்பா-அம்மா எங்கே என்று கேட்டேன்..?” என்று கேட்டாள்

நிலா ஒரு புன்னகையுடன், “என்னிடமிருந்து சிரிப்பைப் பறிக்க நினைத்த இறைவன் என்னுடைய அப்பா அம்மா இருவரையும் அவருடன் அழைத்துக் கொண்டார்.. இருபது வருடங்களுக்கு முன்னவே..” என்றாள் அவள்..

அவள் சொல்வதைக் கேட்டு தேவிபாலாவை விடவும் அதிகமாக அதிர்ந்தது முகிலனே..!

தேவி கிளம்பியவுடன் தலையைப்பிடித்து அமர்ந்த முகிலன், நிலா எதை மனதில் வைத்துக்கொண்டு தன்னை விட்டு விலகிச் செல்கிறாள் என்று புரியாமல் தவித்தவன், எழுந்து வெளியே வர, தேவியிடம் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து நின்றான்..

எந்த உண்மையை அவனிடம் சொல்லாமல் அவனை விட்டு பிரிந்தாளோ, அந்த உண்மையை அவளது வாயிலாக கேட்க நேர்ந்ததுதான் விதியின் விளையாட்டு போல..?!

அவனின் இதயம் ஒரு நிமிடம் துடித்தது.. ஆனால் இதை எதையும் அறியாமல் பேசிக்கொண்டிருந்தாள் நிலா, “என்னுடைய சொந்த ஊர் சென்னைதான்..” என்று பொய் சொன்னாள்

“அப்பா அம்மா இருவரும் இறந்துவிட, என்னை அனாதை ஆசரமம் ஒன்றில் சேர்த்தனர்.. அங்கே வந்த சிவானந்தம் என்பவர், என்னை படிக்க வைக்க நினைத்து அவரது பொறுப்பில் என்னை படிக்க வைத்தார்..” என்றவள் அதற்கு மேல் சொல்ல நினைக்கையில் முகிலன் வரவைக் கவனித்த நிலா நிறுத்தினாள்..

முகிலன் வருவதைப் பார்த்து நிலா நிறுத்தியவுடன், “சாரி நிலா.. உங்களின் அப்பா, அம்மா இருவரையும் நினைவு படுத்தி உங்களின் மனதைப் புண்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்..” என்று கூறியவள்..

“எனக்கு டைம் இல்லை நிலா, எனவே நான் கிளம்புகிறேன்..” என்று நிலவிடம் விடைபெற்று சென்றாள் தேவிபாலா..

அவனின் விழிகள் அவளின் மேல் நிலைத்து நின்றுவிட, கால்கள் மட்டும் மூளை இட்ட கட்டளைக்கு இணங்கி, அவள் நிற்கும் திசையை நோக்கிச் சென்றது..

அவளின் அருகில் சென்றவன், “ஆல் தி பெஸ்ட் நிலா.. நல்ல படியாக மும்பை போய்ட்டு வா.. ஆனால் மறக்காமல் வந்துவிடு..” என்று மட்டும் கூறினான் அவளைக் கடந்து சென்று தனது பைக்கை எடுத்துக்கொண்டு செல்ல,

நிலாவிற்கு அவனை சீண்டிப்பார்க்கும் எண்ணம் வந்தது, “முகில் நான் வரவே மாட்டேன்...” என்று சொல்ல பைக்கை நிறுத்தியவன்,

“என் கண் முன்னே வரவே வராதே..” என்று கூறிவிட்டு செல்ல அவன் சென்ற திசையைப் பார்த்து, ‘வரவே மாட்டேன்..!’ என்று சிரித்தாள் நிலா

அவன் தன்னைப் பற்றி சிந்தனையில் இருக்கிறான்.. அதனால் நடந்ததை அறிய ஒரு பர்சன்ட் கூட வாய்ப்பே இல்லை என்று நினைத்தவள் கிளம்பிச் சென்றாள்..

ஆனால் முகிலனுக்கு நிம்மதி இல்லை.. அவனின் மனம் நிம்மதியாக இருக்க விடவே இல்லை, அலுவலகத்தின் முன்னே வண்டியை நிறுத்திவிட்டு இறங்கினான்..

அவள் செல்வதற்கு தேவையானவற்றை எடுத்துவைத்துக் கொண்டுக் கிளம்பிச் சென்றாள்.. எக்மோர் இரயில் நிலையத்திற்கு..!

அவளின் நினைவில் நின்றது முழுக்க முழுக்க முகிலனின் நினைவுகளே..!

அவனும் அவளின் நினைப்புடனே வேலையைத் தொடங்கினான் முகிலன்..! ‘இருவரின் மனதில் காதல் இருக்கிறது, அவளின் மனதில் காயம் இருக்கிறது.. அதை மாற்ற வேண்டும்’ என்று அலைபேசியை அன்னைக்கு அழைத்து நடந்தவற்றைக் கூறினான்..

தேவகியும் அடுத்து என்ன செய்வது என்ற யோசனையுடன், “சரிடா நீ நாளை.. இல்ல இல்ல நாளை மறுநாள் கிளம்பி திருப்பூர் வா..” என்று கூறினார்

“சரிம்மா...!” என்று வேலையத் தொடர்ந்தான் முகிலன் மகி
ழ்ச்சியாக வேலையைத் தொடர்ந்தான்...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
நிலா முகிலன் ஊடல் காதல் எல்லாம் அருமை தேவிபாலா கொஞ்சம் வந்தாலும் சூப்பர் கவிமலர் வாய்சிலும் கலக்கறா
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
Superb ud sis
Mugilan and nila superb
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top