• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Karigaiyin kanavu -10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bhagyasivakumar

மண்டலாதிபதி
Author
Joined
Jul 29, 2019
Messages
171
Reaction score
335
Location
Tamilnad
அவர் வேறுயாருமல்ல கலையின் வருங்கால கணவன் ரவிக்குமார்.. அவரை கண்ட மறுநொடி ஏதோ சினிமாவில் எதர்ச்சையாக சந்திக்கும் கதாநாயகியை போல திருதிருவென விழிக்க அவளுடைய இமைக்கும் விழிகளை கண்கொட்டாமல் பார்க்கும் கதாநாயகன் போல ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

"அ..அங்க பாருங்க யாரோ உங்களை கூப்பிடுறாங்க" என்று அவளது கவனத்தை திசை திருப்பியவன் அவள் கண்ணத்தில் நச்சென்ற முதல் முத்தம் பதிக்க அதை சற்றும் எதிர்பாராதவள்.

"ரவி..என்ன இதெல்லாம் "என்றபடி பார்வையை அங்கும் இங்கும் பாயவிட அவனோ "இதெல்லாம் கல்யாணம் பிறகு குடுக்கலாமென்று தான் இருந்தேன் ஆனால் என்னவோ தெரியவில்லை இந்த சிவப்பு நிற சுடிதாரில் உங்களை பார்க்கிறப்ப.." என்று பேச்சில் சிறு அச்சமும் கலந்தவனாக "தப்புனா சாரி கலை இனிமே இப்படி நடந்துக்க மாட்டேன்"என்று கூற அவளோ பதிலளிக்க இயலாதவளாய் மௌனத்தையே பதிலாக தந்து அவன் முத்தமிட்ட அந்த கண்ணத்தை ஒரு முறை தொட்டு பார்த்து என்ன தோன்றியதோ அவளுக்கு,சட்டென புன்முறுவலிட அதை கண்ட ரவிக்குமார் தனது அழகிய மீசையை முறுக்கினான்.

இதற்கிடையில் நம் தமிழ்ச்செல்வி குறுக்கிட்டாள் "கலை இந்த புடவை" என்றபடி ரவியை திரும்பி பார்க்க "என்னங்க மிஸ்டர் ரவிக்குமார் இந்த பக்கம்" என்று கேட்க..

"எல்லாம் உங்களையும் உங்கள் தங்கச்சியையும் பார்க்கலானு தான்" என்று கூற அவளோ "இது என்னங்க கூத்து? என் தங்கச்சியை பார்க்க வந்தேனு சொல்றதுல ஒரு நியாயம் இருக்கு,ஆனால் என்னை எதுக்கு பார்க்கணும்"? என்று வினவினாள்.

"அது வந்து உங்கள் கிட்ட மன்னிப்பு கேட்கலாமே அப்படினு தான்" என்று முகத்தை பாவமாக வைத்துக்கொள்ள அவளோ சட்டென்று நகைத்துவிட்டு "ஏங்க ஏதோ ஸ்கூல் பிள்ளைங்க மாதிரி மன்னிப்பு அது இதுவென்று கேட்குறீங்க"என்று கூற

சில நொடி கண்கலங்கியபடி "சாரி தமிழ் உங்களை பெண்பார்க்க வந்தப்போ உங்களை தான் பார்க்க வந்திருக்கிறோம் என்று கூட தெரியாமல் உங்கள் தங்கை கலையரசியை பிடித்துப்போக உங்களை நானும் என் குடும்பமும் காயபடுத்திட்டோம்,எல்லாம் தரகர் பண்ண வேலை..நீங்களும் தங்கையும் சேர்ந்து இருக்கிற புகைப்படம் காட்டிட்டு போனதால வந்த விளைவு இது."

"ஓ..தரகரோட தப்பு மட்டுமில்லை,நாங்களும் போட்டோ கொடுக்கிறதுக்கு முன்பு யோசித்து கொடுத்திருக்கனும்" என்று அவளும் நொந்து கொள்ள...

"சரி சரி இந்த ஃபீலிங்க்ஸ் எல்லாம் ஒதுக்கி வையுங்கள். வாங்க மூனுபேரும் மேல் மாடியில் கேண்டினில் ஒரு கப் காபி சாப்பிடலாம் என்று கலை சொல்லவே இருவரும் இயல்பு நிலைக்கு வந்தனர்"

காபி பருகியவாறு மூவரும் ஒருவருக்கொருவர் தங்களது உணர்வுகளை பகிர்ந்து கொள்ள..ரவியின் இயல்பான போக்கு கலையரசியிற்கு மிகவும் பிடித்துபோனது.

"அக்கா அப்போ நம்ப கிளம்பலாம்"என்றபடி கலை தமிழுடன் தன் வீட்டை நோக்கி பயணிக்க "இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் தான் என்ன.."என்ற பாடலின் வரி ரவிக்குமாரின் செவிகளில் அவனையறியாமல் ஒலிக்க துவங்கியது.

வீட்டிற்கு வந்தவுடன் முகத்தை கழுவும் போது கலையரசி தன் கன்னத்தை ஒருமுறை தொட்டு பார்க்க மீண்டும் முத்ததிற்காக ஏங்குவது போல் தோன்ற "சை என் புத்தி ஏன் இப்படி போகுது" என்று தன்னை தானே திட்டிக்கொண்டு முகத்தை டவள் கொண்டு துடைக்கலானாள்.
"சரி டி கலை அப்போ நான் எங்க வீட்டுக்கு கிளம்புறன்"என்றாள் தமிச்செல்வி.

"அக்கா நீ இன்னும் ஒரு நாள் இங்கேயே இரு ப்ளீஸ்"

"ஏன் மேடமுக்கு போர் அடிக்குமோ"என்று நகைக்க..

"ஏன் நீ இல்லாமல் அமுதன் மாமாவுக்கும் போர் அடிக்குமோ" என்று அவளும் குசும்புடன் கேட்க "அடிப்பாவி கடைசியில் என் புருஷனை வம்புக்கு இழுக்குறியே" என்று அவளது காதை பிடித்து திருக.."ஸ்ஸ்..ஆ வலிக்குது" என்று வலிப்பது போல் நடிக்க தமிழ்ச்செல்வி யின் கைப்பேசி அழைத்தது..

எதிர்முனையில் அமுதன்.."ஓய் என்ன மேடம் அங்கேயே செட்டில் ஆயிடலானு முடிவில் இருக்கியா"என்று நக்கலடிக்க..
"அய்யோ நீங்க வேற ஷாப்பிங் எல்லாம் முடிஞ்சது அதான் நம்ப வீட்டுக்கு வரலாமேனு கிளம்பிட்டு இருந்தேன்"என்று கூற அவனோ ஒரு சிறிய புன்னகையுடன் "ஒன்றும் அவசியமில்லை உன்னை நானே திங்கள் கிழமை வந்து அழைச்சிட்டு போறேன்,அதுவரைக்கும் அங்கேயே இரு" என்று கூற..

"என்னங்க சொல்றீங்க"? என்று மெல்லிய குரலில் கேட்க அவனோ "ஆமாம் திங்கள் கிழமை வரை உங்கள் வீட்டில் இரு. உன்னை எப்படி இருந்தாலும் சேனலுக்கு கூட்டிட்டு போகனும்.. அதான் அப்படியே வந்து நானே பிக்கப் பண்ணிக்கிறன்"

"சேனலுக்கு எதுக்கு"?

"ம்ம்ம்.. என் ஆசை பொண்டாட்டியை வசனம் ரைட்டரா ஆக்கலாமேனு தான். ஏதோ கதை எல்லாம் எழுதுற, அதான் இந்த புருஷனாலா முடிந்த ஒரு சின்ன உதவி"என்று சிரிக்க..

"என்னங்க சொல்றீங்க எனக்கு வசனம் எழுத வாய்ப்பு கிடைச்சிருக்கா? நம்பவே முடியவில்லை. ஆமாம் உங்களுக்கு எப்படி தெரியும் நான் கதை எழுதுவேன் என்று" என்று வியப்பாக கேட்க அவனோ "நீ சொல்லவில்லை என்றாலும் எல்லாம் நான் புரிந்து கொண்டேனடி கண்மணியே" என்று சொல்லிவிட்டு கைப்பேசி வைக்க.. அவளோ சேனலில் கிடைக்கும் வாய்ப்பை நினைத்து வியந்து போக அந்த "என் கணவன்" புத்தகத்தை ஏதோ பொழுதுபோக்கு காரணமாக எழுத அதுவே அவளுடைய வெற்றிக்கு காரணமாக அமைந்ததை நினைத்து அவள் மகிழ்ச்சி கொள்ள.மேலும் மகிழ்ச்சியூட்டும் விதமாக தங்கை கலையரசியுடன் இன்னும் இரண்டு நாள் பொழுதை போக்க வாய்ப்பு கிடைக்க..இந்த அழகான தருணத்தை அனுஅனுவாக ரசிக்க துவங்கினாள்.

"என் பெரிய மகள் வீட்டில் தங்கி ரொம்ப நாள் ஆகுது,கறி எடுத்து போடுறன் குழம்பு வை" என்று தந்தை கூற...

"சரிங்க என்றபடி தமிழின் தாய்" சிரிக்க..

"ஐ..ஜாலி திங்கள் கிழமை வரை அக்கா இங்க தான் இருக்க போறா"என்று கலை மகிழ்ச்சி கொள்ள... தமிழின் தாய் வீட்டில் இவள் தங்குவதையே ஏதோ திருவிழா போல் கொண்டாடி மகிழ்ந்தனர். இதற்கே இப்படி என்றால் இன்னும் தமிழ் கர்ப்பம் அடைந்தால் அவ்வளவு தான் குடும்பமே சேர்ந்து பெரிய வெற்றி விழாவே கொண்டாடி விடுவார்கள் போலும்.

தொடரும்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பாக்யாசிவக்குமார் டியர்
 




Chanmaa

இணை அமைச்சர்
Joined
Dec 26, 2019
Messages
740
Reaction score
684
அருமையான பதிவு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top