You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


Karuppu rojakkal (part-12)

Sri Sathya

Active member
#1
"ஹலோ... ஹலோ... " தரையில் சரிந்த மகேசின் மொபைலில் மகாவின் குரல் சன்னமாய் கேட்க மகேஷ் அதை எடுத்து தன் காதோடு உறவாடவிட்டான்!
" மகா... நீ இப்போ எங்க இருக்க...??? "
" காவேரி ஹாஸ்பிட்டல் ரிசப்சன்லதான் மகேஷ்... "
" ஓகே பைன் மகா நீ அங்கேயே இரு நான் வர்றேன் "
" மகேஷ் என்ன நடக்குது மகேஷ்..
யாரோ உங்களுக்கு ஆக்சிடன்ட் ஆகிடுச்சினு பொய்யான தகவலை ஏன் சொல்லனும் எனக்கு... "
" மகா நம்ம தங்கியிருக்குற ரூம்ல.... "
" என்ன மகேஷ்... ரூம்ல என்ன??? "
" ரூம் பாத்ரூம்ல ஒரு பிணம் இருக்கு... "
மகா அதிர்ந்துப்போனாள்!
" என்.... என்ன சொல்றீங்க மகேஷ் நம்ம ரூம்ல பிணமா??? "
மகா அதிர்ச்சியில் சற்றே சத்தமாகவே கேட்டுவிட... அதுவரை ஆனந்த விகடனில் அமலாபாலின் விவாகரத்து செய்தியை ரசித்துப் படித்துக் கொண்டிருந்த ரிசப்ஷனிஸ்ட் நிமிர்ந்து மகாவை பார்த்தாள்!
சுதாகரித்துக் கொண்ட மகா...
" மகேஷ் சீக்கிரம் வாங்க .. எனக்கு கை காலெல்லாம் உதறுது... தனியா என்னால வர முடியாது... "
" நான் வர்றேன் மகா நீ அங்கேயே இரு... "
" சரி சீக்கிரம் வந்துடுங்க மகேஷ்.. "என்று சொல்லிவிட்டு ரிசீவரை அதன் துணையுடன் இணைத்தாள் மகா!
" ரொம்ப தேங்க்ஸ் மேடம்... "ரிசப்ஷனில் அமர்ந்திருந்தவளுக்கு மகா நன்றி சொல்ல அவள் லிப்ஸ்டிக் உதட்டால் வார்த்தைகளை உதிர்த்தாள்...
" it's ok madam... "
அடுத்த 15 நிமிடங்களில் மகேஷ் வந்து சேர்ந்தான்!
" என்னாச்சி மகேஷ்... நம்மள சுத்தி என்ன நடக்குது??? "
" எனக்கு ஒண்ணுமே புரியல மகா...
நான் வெளியே போய்ட்டு ரூமுக்கு வந்தேன்... வந்து பார்த்தா உன்னை காணோம் பாத்ரூம்ல தண்ணி சொட்டுற சத்தம் கேட்டுச்சி மகா மகானு குரல் கொடுத்தேன் பதிலே இல்லை... ரொம்ப நேரம் வெயிட் பண்ணியும் கதவை தொறக்காததால சந்தேகப்பட்டு போய் கதவை தள்ளினா அங்க... அங்க... ஒருத்தன் செத்துக் கிடக்கிறான் மகா...
நீதான் அவனை.... " மேற்கொண்டு பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைத்தது மகேசிற்கு!
" சத்தியமா நான் கொலை பண்ணல மகேஷ்... " மகா மகேசின் கையை கெட்டியாய் பிடித்துக் கொண்டாள்!
" தெரியும் மகா... "
" யார் கொன்னுருப்பாங்க மகேஷ்??? "
" அதான் எனக்கும் தெரியல மகா... ஆனா இந்த கொலை கேசுல நம்ம சிக்க வைக்க ப்ளான் பண்ணிருக்காங்கன
ு மட்டும் க்ளியரா தெரியுது! "
" இப்போ என்ன பண்ண போறோம் மகேஷ்??? "
" அதான் எனக்கும் தெரியல மகா... கண்ண கட்டி காட்ல விட்டாப் போல இருக்கு... "
" மகேஷ் நாம சென்னைக்குப் போய்டலாமா??? "
" பிணத்தை நாம தங்கியிருந்த ரூம்ல விட்டுட்டு நாம சென்னைக்குப் போய்ட்டா போலிஸ் நம்மள சும்மா விடுவாங்கனு நினைக்கிறயா மகா...
ஹோட்டல்ல என்னோட டீடெய்ல் எல்லாம் ரிஜிஸ்டர்ல பக்காவா இருக்கு...
சந்தேகத்துக்கே இடமில்லாம நாமதான் கொலை பண்ணோம்னு போலிஸ் முடிவுக்கு வந்துடுவாங்க... "
" இப்போ என்ன பண்றது மகேஷ்???"
"ஏதாச்சும் பண்ணியாகனும் மகா... அதுவும் விடியறதுக்குள்ள பண்ணியாகனும்... "
" என்ன பண்ணப் போறோம் மகேஷ்??? "மகா அழத் தொடங்கினாள்!
" மகா நீ அழாதே ப்ளீஸ் ஏதாச்சும் பண்ணுவோம்...
தற்சமயம் நாம வேற ஹோட்டல்ல ரூம் எடுப்போம் உன்னை அங்க விட்டுட்டு நான் மட்டும் அங்கப் போறேன்... பாடிய எப்படியாச்சும் டிஸ்போஸ் பண்ணிட்டு காலைல வந்து உன்னை கூட்டிகிட்டு சென்னை போய்டுறேன் மகா! "
" இல்ல மகேஷ் நானும் உன்கூட வர்றேன்... நம்மள சிக்க வைக்கணும்னு யாராச்சும் இப்படி செஞ்சிருந்தா அவன் இந்நேரம் போலிஸ்க்கு நிச்சயம் தகவல் கொடுத்திருப்பான் ...
நாம ஏன் போலிஸ் ஸ்டேசனுக்குப் போய் நடந்த விசயத்தை சொல்லிடக் கூடாது மகேஷ்??? "
போலிஸ்கிட்ட நடந்த விசயத்தை சொல்லிடனும்னு மகேசிற்கு தோனாமல் இல்லை... போலிஸ்க்கு போனா அவங்க நம்புவாங்களா என்பது கேள்விக்குறிதான்...
அதுவும் இல்லாமல் போலிசுக்குப் போனா தான் மகா இல்லை ரூபாதான்னு தெரிய வரும்...
மகா இதை எப்படித் தாங்கிக் கொள்வாள்...
"என்ன மகேஷ் நான் சொல்லிக்கிட்டே இருக்கேன் நீங்க எதுவும் பேச மாட்றீங்க??? " மகாவின் குரல் மகேசின் சிந்தனையை கலைத்தது!
" இல்ல மகா போலிஸ் நம்ப சொல்றதை நம்ப மாட்டாங்க மகா... எது நடக்குதோ நடக்கத்தும் நான் உன்னை வேற ஹோட்டல்ல விட்டுட்டு நான் அங்க போறேன் கிளம்பு... "
" இல்லை மகேஷ் நான்தான் கொலை பண்ணேன் நான் இப்பவே போய் போலிஸ்கிட்ட சொல்லி சரண்டராகப் போறேன்... "
மகேஷ் அதிர்ச்சியடைந்தான்!
" மகா..... "
" வேற என்ன பண்ண சொல்ற மகேஷ் என்னை காதலிச்ச பாவத்துக்கு எல்லா பிரச்சனையும் நீயே சுமந்துக்கனு சொல்லிட்டு வேடிக்கைப் பார்க்க எனக்கு மனசில்லை...
செய்யாத கொலைக்காக நான் பழியை ஏத்துக்கிட்டு ஜெயிலுக்குப் போறேன்! "
" பைத்தியம் போல பேசாதேடி... சரி நீயும் வா நாம ரெண்டு பேரும் அங்கப் போய் பாடியை விடியறதுக்குள்ள டிஸ்போஸ் பண்ணிட்டு காலைல சென்னைக்கு கிளம்பிடலாம்!
மகேசும் மகாவும் ஹோட்டலை அடையும்போது மணி இரண்டை தொட்டிருந்தது!
ஹோட்டல் வாசலில் போலிஸ் ஜீப் நிற்பதைக் கண்டு திடுக்கிட்டனர்!
மகேசும் மகாவும் சிறிது நேரம் மறைவான இடத்தில் அமர்ந்திருக்க அடுத்த பத்து நிமிடங்களில் போலிஸ் ஜீப் கர்ஜித்துக் கொண்டு கிளம்பிச் சென்றது!
மகேஷ் ரிசப்ஷனில் போய்...
"என்ன சார் போலிஸ் வந்துட்டு போகுது??? "
" அதையேன் சார் கேட்குறிங்க...
ப்ராத்தல் ரெய்டுனு சொல்லிகிட்டு வருவானுங்க... இந்த நேரத்துல போய் ஒவ்வொரு ரூம் கதவா தட்டி விசாரிச்சா கஸ்டமர்ஸ் மறுபடி நம்ம ஹோட்டலுக்கு வர மாட்டாங்கனு பயந்து முதல்ல பணம் கொடுக்க ஆரம்பித்தோம்...
இப்போ அதையே வாடிக்கையாக்கிட
்டாங்க... மாசத்துல ஒரு கணிசமான அமவுண்ட் இவனுங்களுக்கே போகுது சார்... "
மகேஷ் நிம்மதியில் பெரு மூச்சு விட்டான்!
மகேஷ் மகாவை அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்றான்!
வரும்போதே ஓர் கோயில் வாசலில் இருந்த தேங்காய் மூட்டை கட்டும் சாக்குப் பையை எடுத்து வந்திருந்தான்.. அதை கையில் எடுத்துக் கொண்டு...
" மகா நீ இங்கேயே இரு நான் போய் பிணத்தை சாக்குப் பையில கட்டிட்டு கூப்பிடறேன் ஹோட்டல் 14 வது மாடிக்கு எப்படியாச்சும் இந்த சாக்குப் பையை தூக்கிட்டுப் போய் மாடியில இருந்து பிணத்தை மட்டும் கீழே போடுவோம்... தற்கொலை பண்ணிக்கிட்டான்னு தான் போலிஸ் நினைக்கும்... "காதலுக்காக மகேசின் மூளை கன்னாபின்னாவென்று யோசித்தது!
" ம்ம்ம் சரி மகேஷ்... "
மகேஷ் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு குளியலறை கதவை திறக்க அங்கே பிணம் இருந்த சுவடே தெரியாமல் காணாமல் போயிருந்தது!
(தொடரும்)
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top