• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Karuppu rojakkal ...(part-14)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sri Sathya

நாட்டாமை
Joined
Mar 17, 2018
Messages
65
Reaction score
569
Location
Chennai
கருப்பு ரோஜாக்கள் (part_14)
மகேஷ் சில் அண்ட் ஹாட் ரெஸ்டாரன்டை அடைவதற்குள் அவன் இதயத்துடிப்பு பன்மடங்கு உயர்ந்திருந்தது!
ரெஸ்டாரண்டுக்குள் நுழைந்த மகேஷ் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஒரு இருக்கையில் அமர்ந்தான்!
காலை பத்து மணி என்பதால் அந்த ரெஸ்டாரண்டில் கூட்டம் அவ்வளவாய் இல்லை...
கல்லூரியை கட் அடித்துவிட்டு வந்திருந்த ஒரு ஜோடி ஒரு ஆரஞ்ச் குளிர் பானத்தில் இரண்டு குழாய்களை வைத்து உறிஞ்சிக் கொண்டிருந்தனர் தன் எதிர்காலத்தையும் சேர்த்து...
"ஹாய் மகேஷ்... "குரல் கேட்டு நிமிர்ந்தான் மகேஷ்!
அங்கே ஐம்பது வயதில் ஓர் ஆண் நின்றிருந்தான்...
குடித்து குடித்து வெந்து போன குடலை அவன் கண்கள் சிவப்பாய் மாற்றிக் காட்டியது!
பெயருக்கு கூட சீப்பை பாத்திராத தலைமுடியில் வெண்மை புரட்சி மெல்ல தலை தூக்கியிருந்தது!
மகேசின் பதிலுக்கு காத்திருக்காமல் அவன் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தான் மகேஷ்!
"யார் சார் நீங்க??? உங்களுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் இருக்கு???
ஏன் நாங்க தங்கியிருந்த ரூம்ல ஒருத்தனை கொலை பண்ணிட்டு இப்போ எங்களை நிம்மதியில்லாம தவிக்க விடுறீங்க??? "
" மகேஷ் நீங்க கேட்ட கேள்விக்கெல்லாம் என்கிட்ட பதில் இருக்கு அதை நான் சொல்றேன் அதுக்கு முன்னாடி நான் உன்கிட்டே ஒரே ஒரு கேள்விக் கேட்கணும்... "
" என்... என்ன??? "
" இப்போ உன்கூட வந்திருக்காளே அவ யாரு??? "
" அது... அவ.... என் ஒய்ப்... "
" அவ பேரு??? "
" ம... மகா.... "
" மகேஷ் என்கிட்டயே பொய் சொல்றீங்க பார்த்தீங்களா...
அவ பேரு ரூபா... அவ ஒரு விபச்சாரி... அவளுக்கு ஆக்சிடன்ட் ஆகி பழசெல்லாம் மறந்து போச்சி... அவ அழகுல மயங்குன நீங்க அவளை அனுபவிக்க முடிவு பண்ணி அவளை சென்னைக்கு கூட்டிகிட்டு போறிங்க... சரியா சொன்னேனா மிஸ்டர் மகேஷ்... "
மகேசிற்கு அந்த ஏசி அறையிலும் வியர்த்துக் கொட்டியது!
" இல்ல... இல்ல... இல்ல... இதுல பாதி உண்மை பாதி பொய்... " கத்தியை விட்டான் மகேஷ்!
" மகேஷ் உணர்ச்சி வசப்படாதீங்க இங்க எல்லாரும் நம்மையே பாக்குறாங்க... கொஞ்சம் அமைதியா பேசுங்க... இதுல எது உண்மை எது பொய்னு சொல்றிங்க நீங்க??? "
" அவ மகா இல்லை ரூபாதான்... அவ என் மனைவியில்லை நீங்க சொன்னாப்போல விபச்சாரிதான்... ஆனா இதெல்லாம் நான் அவளை பார்க்குறதுக்கு முன்னால... ஆனா இப்போ அவ என் மனைவி மகா... அவ உடம்புக்கு ஆசைப்பட்டிருந்தா அதை நான் எப்பவோ அடைந்திருப்பேன்...
அவ என் உயிருல கலந்து நிக்குறா... அவ எனக்கு வேணும்... நீங்க சொன்னாப்போல இல்ல.. என் உயிரா நான் சாகற வரை என் கூட அவ வேணும்... "
" மகேஷ் இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல... நாட்ல பொண்ணுங்களா இல்ல... இப்படி ஒரு விபச்சாரி மேல ஆசைப்படுறீங்களே... "
" ப்ளீஸ் இன்னொரு முறை அவளை விபச்சாரினு சொல்லாதிங்க ப்ளீஸ்... "என்று கையெடுத்துக் கும்பிட்ட மகேசின் கண்களில் நீர் ஆறாய் ஓடியது!
" அழாதீங்க மகேஷ்... நீங்க அவளை ஏத்துக்கிட்டாலும் இந்த சமூகம் அவளை பழைய மாதிரி தானே பார்க்கும்....
"
"சார் இந்த சமூகத்தை பத்தியெல்லாம் எனக்கு கவலையில்லை சார்...
இந்த சமூகம் எங்க கூட இருக்கப் போறது இன்னும் இருபதே நிமிடம் தான் சார்... நான் அவளை இந்த கோயம்பத்தூர் நிழலே படாம காலத்துக்கும் என் மகாவா பார்த்துப்பேன் சார்... "
" எதுக்காக கொலை பண்ணேன்னு வந்ததும் கேட்டீங்களே அதுக்கு விடை இதுதான் மகேஷ்... "
" எனக்கு புரியல சார்... இதுக்கும் அந்த கொலைக்கும் சம்மந்தம் இருக்கு...
ரூபாவுக்கு அடிப்பட்டு ஹாஸ்பிட்டல்ல இருக்கானு தெரிஞ்சி நான் அவளை பார்க்க ஹாஸ்பிட்டலுக்கு வந்தேன்...
அங்க நீங்க அவ மேல காட்டின உண்மையாக பாசத்தை அவ வாழ்நாள்ல இதுவரை அனுபவிச்சதில்லை...
பத்து ரூபா கட்டை காட்டினா சிரிப்பா...
நூறு ரூபா நோட்டை காட்டினா படுப்பா...
ஆனா அவ சந்தோசமா இருந்தது அந்த ஹாஸ்பிட்டல்ல தான்!
அவளுக்கு அமையப்போற இந்த நல்ல வாழ்க்கைய கெடுக்க மனசு வராம நான் திரும்பி வந்துட்டேன்!
நீங்க வெளியே போயிருந்த நேரம் நீங்க தங்கியிருந்த ஹோட்டல் ஓனரோட மச்சான் எனக்கு போன் பண்ணான்... ரூபாவோட கஸ்டமர்ல அவனும் ஒருத்தன்.... ரூபா இங்கதான் ஒரு பையன் கூட ஓரு வாரமா தங்கியிருக்கா ஒரு வாரத்துக்கு புக் பண்ணிட்டான் போல. இப்போ அவன் வெளியே போயிருக்கான் இப்போ ரூபா தனியாதான் இருக்கா பொண்டாட்டி வேர பசங்களுக்கு லீவ்னு ஊருக்கு போயிருக்கா இப்போ ரூபா வேணும் எனக்குனு கேட்டான்!
நான் எவ்ளோ சொல்லியும் அவன் கேட்கல அதான் நான் ஹோட்டல் ரிசப்ஷனுக்கு போன் பண்ணி உங்களுக்கு ஆக்சிடன்ட் ஆகிடுச்சினு சொல்லி ரூபாவை முதல்ல வெளியே போக வெச்சேன்!
அவ வெளியே போனதும் நான் ஹோட்டலுக்கு போனேன் அதுக்குள்ள அவன் நீங்க தங்கியிருந்த ரூமுக்கு போய்ட்டான்... நான் அவன்கிட்ட எவ்வளவோ சொல்லி பார்த்தேன் கேட்கல... பேச்சு முத்திப்போய் அவனை விட்டா ரூபா வாழ்க்கைய கெடுத்துடுவான்னு பயந்து பக்கத்துல இருந்த சுவத்துல அவன் தலையை இடிச்சி கொன்னேன்!
நீங்க வரதுக்குள்ள பாடியோட போய் எதாச்சும் காரணம் சொல்லி சரண்டர் ஆகலாம்னு நினைச்சேன் அதுக்குள்ள நீங்க வந்துட்டிங்க... நான் கட்டிலுக்கு அடியில ஒளிஞ்சிக்கிட்டேன்!
நீங்க திரும்பி வரதுக்குள்ள பாடியை அங்க இருந்து தூக்கிட்டு சுத்தம் பண்ணிட்டு வந்துட்டன்... இப்போ கூட இதை உங்ககிட்ட சொல்ல வேணாம்னுதான் நினைச்சேன் ஆனா இந்த கொலை உங்க வாழ்க்கையில நிம்மதியை கொடுக்காதுனு தெரிஞ்சிதான் இப்போ உங்ககிட்ட சொல்லிகிட்டு இருக்கேன்!
இப்போ நான் நிம்மதியா போய் போலிஸ்ல சரண்டராவேன்! "
அவர் சொல்லி முடிக்க மகேசின் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியபடி அவரை கையெடுத்துக் கும்பிட்டான் மகேஷ்!
" நீங்க கவலைப்படாம போங்க மகேஷ் இது நான் பண்ண பாவத்துக்கு பிராயசித்தமா நினைச்சுக்குறேன் "
" சார் நீங்க யாரு???
எதுக்காக எங்களுக்காக இவ்வளவும் பண்ணீங்க?
மகா உங்களுக்கு யாரு??? "
" மகேஷ் சத்தியமா மகாவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...
நான் ரூபாவை பெத்த பாவி... " என்று சொல்லி அவர் நடக்க...
மகேஷ்...
" சார்..... சார்..... மா.... மாமா... "என்று கூப்பிட கூப்பிட அவர் வேகமாய் நடந்து சென்று மறைந்தார்!
(தொடரும்)
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
vanthavar roopa appava..... ippidi oru twist......... nice epi sago mahesh aval manathai nesikiran nice
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top