• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Karuppu rojakkal ...(part-3)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sri Sathya

நாட்டாமை
Joined
Mar 17, 2018
Messages
65
Reaction score
569
Location
Chennai
கருப்பு ரோஜாக்கள் (part_3)
"ஹலோ ஜெய் நான் மகேஷ் பேசறேன்... "
" சொல்லு மச்சி... இன்னுமா கோயம்பத்தூர்ல வேலை முடியல...
"
"வேலையெல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுச்சி மச்சி... உடனடியா எனக்கொரு ஐந்து லட்சம் தேவைப்படுதுடா... "
" அஞ்சி லட்சமா... ஏன் என்னாச்சிடா??? "
நடந்த அத்தனையும் சொல்லி முடித்தான் மகேஷ்!
" மகேஷ் நான் ஒண்ணு சொல்லவா??? "
" ம்ம்ம்... சொல்லுடா... "
" மச்சி நீ பண்ணிகிட்டிருக்கறது பைத்தியக்காரத்தனம் டா... யாருனே தெரியாத ஒருத்திக்கு நீ அஞ்சி லட்சம் செலவு பண்ணனுமா யோசிச்சி பாரு...
நீ ஒண்ணு பண்ணு மச்சி அந்த ஹாஸ்பிட்டல்ல இருந்து கிளம்பி சென்னைக்கு வந்துடு... நீ அவளை இடிச்சதோட விட்டுட்டு வராம ஹாஸ்பிட்டல் வரை கொண்டு போய் சேர்த்ததே பெரிய விசயம்... இடிச்ச பாவத்துக்கு அது போதும்டா...
நீ கிளம்பி வந்துடு அவ சொந்தக்காரங்க யாராச்சும் கண்டிப்பா இந்நேரம் அவளை தேடிகிட்டிருப்ப
ாங்க...
அவங்களுக்கு விசயம் தெரிஞ்சி வந்து அவளை காப்பாத்திப்பாங்கடா... "
" ஜெய் இது பாவம் இல்லையாடா??? "
" மச்சி நீ தெரிஞ்சே செஞ்சிருந்தா பாவம்டா... தெரியாம இடிச்சதுக்கு என்ன பண்ணனுமோ அதை நீ பண்ணிட்ட போதும் மச்சி.... ரோட்ல கார்ல போகும்போது குறுக்குல நாயோ, நரியோ ஓடி வந்து வண்டில மாட்டிக்கிட்டா பாவம்னு உச் கொட்டிட்டு கிளம்பி போய் நம்ம வேலையை பார்க்குறதில்லையா அப்படித்தான் மச்சி இதுவும்....
நீ கிளம்பி வந்துடு... "
" மச்சி மனசு கேட்கலடா... "
" அஞ்சி இலட்சம்றது சின்ன அமவுண்ட் இல்ல மச்சி அதை நீ புரிஞ்சிக்க... "
" சரி மச்சி நான் கிளம்பி வர்றேன்! "
*********************************************
***************************************
" வாங்கண்ணா... "மகேசின் தாய் அவள் அண்ணன் கணேசனை வரவேற்றாள்!
கணேசனுக்கு வயது நிச்சயம் ஐம்பதை கடந்திருக்கும் என்பதை அவர் கதோரத்து நரை முடிகள் உணர்த்தியது!
" என்னண்ணே ஓரு போன் கூட பண்ணாம திடீர்னு வந்து நிக்குற... "
" ஏம்மா என் தங்கச்சி வீட்டுக்கு நான் போன் பண்ணிட்டுப் வரணுமா??? "
" அய்யோ நான் அப்படி சொல்லலணே... நான் வம்பு பண்ணி கூப்பிட்டாலும் வரமாட்டியே இப்போ வந்திருக்கியே அதான் கேட்டேன்ணே! "
" விசயம்தான்மா வந்திருக்கேன்...
நம்ம மலருக்கு கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன் அதான் உன்கிட்ட ஒருவார்த்தை கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்...
நீ என்னமா சொல்ற... மலரை உன் வீட்டு மருமகளா ஏத்துக்க உனக்கு விருப்பமா?
உன் மனசுல எது இருந்தாலும் பட்டுனு சொல்லிடுமா... "
" அண்ணே இதுல நான் சொல்ல என்ன இருக்குணே... மலர் நம்ம மகேசுக்குத்தான்னு ஏற்கனவே முடிவு பண்ண ஓண்ணுதானே... "
" ரொம்ப சந்தோசம்மா... மாப்பிள்ளைய கூப்பிட்டினா ஒரு வார்த்தை கேட்டுடலாம்... "
" மகேஷ் வேலை விசயமா கோயம்புத்தூர் வரை போய்ருக்கான்ணே... வந்ததும் நான் விசயத்தை சொல்லிடுறேன் நீ சந்தோசமா நிச்சயத்துக்கு நாள் பாருண்ணே! "
" ரொம்ப சந்தோசம்மா... ஆத்தா இல்லாத பொண்ணு தெரியாத இடத்துல கட்டிக்கொடுத்தா கஷ்டப்படுவாளேனு ஒரு பயம் மனசு ஓரமா ரொம்ப நாளா இருந்துச்சி இப்போ அந்த பாரம் போய்டுச்சிமா... "
" சரிண்ணே நீ போய் குளிச்சிட்டு வா சாப்பிடலாம்... "
கணேசன் மனம் முழுக்க சந்தோசத்தில் தோளில் துண்டை போட்டு குளியலறை நோக்கி நடந்தார்!
*************************************************, **************************,
மகேஷ் மெல்ல மருத்துவமனையை விட்டு வெளியேற நினைத்து மருத்துவமனை வராண்டாவில் நடந்தான்!
'ஐய்யோ எங்களை தவிக்க விட்டுட்டு போய்ட்டியேமா.... பணம் இல்லாதவனுக்குதான் அந்த கடவுள் நோயை கொடுக்குறான் பாவி... ' கதறல் சத்தம் கேட்கவே நின்றான் மகேஷ்!
அங்கே இருந்தவரிடம் போய் விசாரித்தான்!
"என்னாச்சிங்க...? "
" அதையேன் சார் கேட்கிறீங்க... வீட்டுக்கு ஒரே பொண்ணு சார்...லேசா நெஞ்சுவலினு இங்க வந்தாங்க...
ஹார்ட்ல ப்ளாக் இருக்கு உடனே ஆபரேசன் பண்ணனும் மூணு லட்சம் செலவாகும்னு சொன்னாங்க இவங்களும் எங்க எங்கலாமோ பணத்துக்கு முயற்சி பண்ணாங்க... அன்றாடங்காய்ச்சிங்கள நம்பி மூவாயிரம் கொடுக்கவே தயங்குவாங்க இதுல மூன்று லட்சம் யார் சார் கொடுப்பாங்க...
பாவி மக போய் சேர்ந்துட்டா...
இப்போலாம் மனிதனோட ஆயுளை கூட பணம்தான் சார் முடிவு பண்ணுது... "
மகேஷ் சிலையாய் நின்றான்!
" மகேஷ்.... " நர்ஸ்ன் குரல் மகேசை சுய நினைவிற்கு கொண்டு வந்தது!
" மகேஷ் உங்க மனைவியோட நிலைமை ரொம்ப மோசமாயிருக்கு... நீங்க இன்னும் பணத்தை கட்டல... பணம் புரட்ட முடியலனா உங்க மனைவியை வேற ஏதாச்சும் ஹாஸ்பிட்டல் க்கு கூட்டிப்போக சொன்னார் டாக்டர்! "
மகேஷ் செய்வதறியாது நின்றவன் தன் மொபைல் போன் எடுத்து...
" ஜெய் ஆபிஸ்ல என் மேரேஜ் சேவிங்ல இருக்க பணத்தை உடனே என் பர்சனல் அக்கவுண்ட் க்கு டிரான்ஸ்பர் பண்ண சொல்லு... நான் MD கிட்ட பேசிக்குறேன்! "
பதிலுக்கு காத்திருக்காமல் இணைப்பை துண்டித்தான் மகேஷ்!
_(தொடரும்)
 




Joined
Feb 7, 2018
Messages
94
Reaction score
228
Location
Chennai
Hi சத்யா,

அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலை தூண்டுகிறது உங்கள் கதை. மகேஷ் நம்பனின் அறிவுரை சரியானது தான். யார் என்றே தெரியாதவருக்கு முதல் உதவி செய்தாயிற்று. ஆனால் மகேஷின் மனசாட்சி இடம் கொடுக்கவில்லயோ.
என்ன பா மகேஷ் நீ மனைவி என்று சொல்லி ஒரு பெண்ணிற்கு சிகிச்சை அளிக்க உதவும் வேலையில் நிஜமாகவே உனக்கு மனைவியை தேடுகிறார் உன் அன்னை. அடுத்து என்ன நடக்கும் என்று பார்ப்போம்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top