Karuppu rojakkal (part-7)

Sri Sathya

Active member
#1
கருப்பு ரோஜாக்கள் (part_7)
மகா தாலிக்கயிறு வாங்கிவர சொன்னவுடன் மகேஷ் செய்வதறியாது நின்றான்!
"என்னங்க... உங்களைத்தான்... "
" ம்ம்ம் சொல்லு மகா... "
" நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கேன் நீங்க அமைதியாயிருந்தா எப்படி! "
" மகா நான் உங்கிட்ட சில விசயங்க பேசணும்... ஆனா அதுக்கு சரியான நேரம் இது இல்ல மகா... "
" என்னங்க சொல்றீங்க... எனக்கு நீங்கதானே எல்லாத்தையும் சொல்லி புரிய வைக்கணும்...
நான் யார்???
நமக்கு யாரெல்லாம் இருக்காங்க???
இதையெல்லாம் நினைச்சி நினைச்சி என் மண்டையே வெடிச்சிடும் போல இருக்குங்க... "
" ப்ளீஸ் மகா நீ எதையும் நினைச்சி குழப்பிக்காதே... அது நீ இப்போ இருக்குற நிலைமைக்கு நல்லதில்லை!
நேரம் வரட்டும் எல்லாத்தையும் உனக்கு நான் சொல்லிப் புரிய வைக்கிறேன்! "
மகா கலக்கமாய் மகேசை பார்க்க மகாவின் கண்களை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்தான் மகேஷ்!
*********************************************
***************************************
" மகேஷ் எப்போடா வீட்டுக்கு வருவ... " கமலம்மா போனில் விசாரித்தாள்!
" இன்னும் மூணு நாளைக்கு வேலை இருக்கும்னு நினைக்குறேன்மா... முடிஞ்சதும் வந்துடறேன் "
" மாமா போன் பண்ணார்டா வர 13ம் தேதி நாள் நல்லாயிருக்காம் அன்னைக்கு நிச்சயம் பண்ணிட்டாரு கேட்டார்...
உனக்கு அந்தநாள் ஓகே தானே!
மகேஷ் திரும்பி காலண்டரை பார்க்க அது 2 என காட்ட இன்னும் பத்துநாள் இருப்பதை நினைத்து நிம்மதியடைந்தான் மகேஷ்!
"என்னடா அமைதியாயிருக்க... "
" கொஞ்சம் வேலை இருக்குமா நான் அப்புறம் கூப்பிடறேன் " என சொல்லி பதிலுக்கு காத்திருக்காமல் போனை கட் செய்தான் மகேஷ்!
'என்ன இவன் பிடி கொடுத்து பேசமாட்டேங்குறான்... என்னவோ சரியா படலியே" கமலம்மா மனதில் சின்னதாய் சங்கடம் வந்து குடியேறியது!
*********************************************
**************************************
மூன்று நாட்கள் உருண்டோடியது!
"மகேஷ் சார் நாளைக்கு உங்க மனைவிக்கு டிஸ்சார்ஜ்...
காலையில டிஸ்சார்ஜ் சம்மரி வந்துடும் நீங்க டாக்டரை கன்சல்ட் பண்ணிட்டு போகலாம் " நர்ஸ் சொல்ல சொல்ல இனம் புரியாத பயம் வந்து மகேசை தொற்றிக்கொண்டது!
இந்த மூன்று நாட்களிலாவது அவளைத்தேடி யாராவது வருவார்கள் என நினைத்து ஏமாந்தது தான் மிச்சம்!
இவகிட்ட உண்மையை சொல்லிவிடலாமா???
இவள் எப்படி எடுத்துக் கொள்வாள்???
மகேசின் சிந்தனைகள் அவனை உறங்க விடாமல் தடுத்தது!
மறுநாள் மகேசிற்காக காத்திருக்காமல் வழக்கம்போல் மலர்ந்தது!
மகாவின் முகம் முழுக்க மலர்ச்சி குடிகொண்டிருந்தது!
தன் வீட்டை பார்க்கப் போகிறோம் என்ற உணர்வு அவளுக்குள் பல எதிர்பார்ப்புக்களை உண்டாக்கியது!
டிஸ்சார்ஜ் சம்மரி தயாராகிவிட மகேஷ் மகாவை அழைத்துக் கொண்டு டாக்டரின் அறைக்குள் சென்றான்!
டாக்டர் கிருஷ்.MBBS. MD பெயர்ப்பலகை அவர் மேஜை மேல் அவரை அறிமுகப்படுத்தி கொண்டிருந்தது!
"வாங்க மகேஷ்... கடவுள் கருணையாலத்தான் உங்க மனைவி உயிர் பிழைச்சிருக்காங்கனு சொல்லலாம்...
இப்போ அவங்க குழந்தை மாதிரி அவங்க பழைய வாழ்க்கைக்கு திரும்ப சில நாட்கள் ஆகலாம் அதுவரை அவங்களை குழந்தை மாதிரி பார்த்துக்க உங்களால மட்டும்தான் முடியும்...
இங்க இருந்தவரை நீங்க அவங்களை எப்படி கவனிச்சிக்கிட்டிங்கனு எங்களுக்கு தெரியும் அந்த விசயத்துல மகா கொடுத்து வெச்சவங்க... "
மகா மகேசின் கரங்களை அழுத்தமாய் பிடித்துக் கொண்டாள்!
முதல்முறையாக காதலில் ஸ்பரிசம் மகேஷை தழுவியது!
டாக்டர் தொடர்ந்தார்...
" நெக்ஸ்ட் வீக் நம்ம ஹாஸ்பிட்டல்ல ஒரு கேம் ஆர்கனைஸ் பண்ணிருக்கோம்... வேர்ல்ட் லெவல் கேம்ப் அது... பெரிய பெரிய டாக்டர்ஸ் எல்லாம் கலந்துக்குறாங்க...
நீங்க உங்க மனைவியை கூட்டிகிட்டு வாங்க... பழைய நியாபகங்கள் வர வைக்க முடியுமானு அவங்ககிட்ட ஒரு ஒபினியன் கேட்டுடலாம்...
ஆல் த பெஸ்ட் மகா! "
மகா அவரை கையெடுத்து கும்பிட்டாள்!
மருத்துவமனையிலிருந்து மகாவுடன் வெளிவந்த மகேஷ் போகும் இடம் அறியாமல் நின்றவன்
அந்த வழியே சென்ற டாக்சியை அழைத்து ஏறிக்கொண்டான்!
" எங்க சார் போகணும்??? "
" ஹோட்டல் ராயல் பிரிசிடன்ஸி "
மகா மகேசை குழப்பமாய் பார்த்தாள்!
அரைமணி நேர பயணத்தில் ஹோட்டல் ராயல் பிரிசிடன்ஸி வர மகாவும் மகேசும் இறங்கிக் கொண்டனர்!
ஹோட்டல் ராயல் பிரிசிடன்ஸி மாளிகைப்போல் காட்சியளித்தது!
உள்ளே சென்று ரூம் புக் பண்ணிக்கொண்டு அறைக்கு செல்ல முயன்றவர்களை வரவேற்பு கேபினில் அமர்ந்திருந்த நாற்பது வயதை நெருங்கிக் கொண்டிருந்தவன் கேவலமாய் பார்த்ததை மகா கவணிக்க தவறவில்லை!
"என்னங்க ஹோட்டல்க்கு கூட்டி வந்திருக்கிங்க? நம்ம வீட்டுக்கு போகலையா???
அந்த வரவேற்பு கேபின்ல இருக்கவன் ஒருமாதிரி பார்த்தால் கழுத்துல தாலிக் கூட இல்லை "
"............"
மகேஷ் எதுவும் பேசாமல் ரூம் சாவியை துவாரத்தில் நுழைத்து திருப்ப கதவு விலகி ஒருவித ஏசியின் மனம் அவர்களை ஆட்கொண்டது!
"உங்களத்தான் கேக்குறேன் இங்க ஏன் வந்திருக்கோம் நமக்கு வீடு இல்லையா??? " கத்தியை விட்டாள் மகா!
" மகா நீ.... நீங்க.... என்.... மனைவி.... இல்லை! "
மகேசின் உதடுகள் உதிர்ந்த சொல்லில் காய்ந்து உதிர்ந்த மலரைப்போல் மயங்கி விழுந்தாள் மகா!
(தொடரும்)
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top