• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kathai Ondru Aarambam epi 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
2.கதை ஒன்று ஆரம்பம்


இன்பத்திற்கும் துன்பத்திற்கும் மனமே காரணம். அவற்றை உண்டாக்குவது மனமே. உள் மனதின் பிரதிபலிப்பு எவருக்கும் முக்கியம்.. அது ஒழுக்கமானதாக இருக்க வேண்டும் என்பதற்கே சான்றோர் பல அறிவுரைகளை நமக்கு விட்டு சென்றனர்! அப்படி கடைப்பிடித்து உண்டாக்கி விடும் நிலைக்கு என்றுமே நாம் மட்டும் பொறுப்பு!

ஆனால் அவள் அப்படி நினைக்கவில்லை. தன் துன்பத்திற்கு விழியன் மட்டுமே காரணம் என்ற எண்ணத்திலிருந்தாள்.மனத்தில் வேரூன்றிய எண்ணங்கள் நம் குணத்தையும் பழக்க வழக்கங்களையும் தீர்மானிக்கின்றன. மாற வேண்டும் என்றிருப்பவன் மாத்திரமே மாறுவான்..

அவள் மாறவேண்டும் என்று நினைக்கவில்லை.தான் நினைத்ததை அடைந்தே தீர வேண்டும் என்று எண்ணியிருந்தாள்.. அதற்கான காரியங்களில் இறங்கி விட்டாள்!

வெண்பா, ’பா யார் ரா அந்த பொண்ணு’
அவளை பார்ப்பவர்கள் அநேகமாய் சொல்வது!

அத்தனை அழகானவளாய் இருந்தும் , அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற குறளுக்கு ஏற்ப நடந்து கொள்பவள். எல்லாம் வெளியில் மட்டும் என்பது விழியனுக்கு தாமதமாகவே புரிந்தது ! அவளை பற்றி நினைக்கவும் பழைய நியாபகங்கள் விழியனை சூழ ஆரம்பித்தது!

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த விழியன் விடுமுறைக்காக அவன் மாமன் வீட்டுக்கு வந்திருந்தான், தனக்கு இருக்கும் ஒரே உறவான தாயுடன். வந்ததிலிருந்தே அந்த வீட்டில் அவளை தேடுகிறான், ஆனால் காணவில்லை.

இவனும் வீட்டின் பின்பக்கம் வரை சென்று அங்குள்ள செடிகளின் வளர்ச்சியை ஆராய்வதை போல் அவள் எங்கேனும் இருக்கிறாளா என்று அலசி பார்த்தான். கண்ணில் படவேயில்லை!

ஏமாற்றமாய் மறுபடி வீட்டினுள் சென்றால் , மாமன் இவன் தாயிடம் விசாரணையை முடித்து, இவனை பார்த்ததும் இவனிடம் படிப்பை பத்தியும் அடுத்து என்ன செய்ய போகிறான் என்பதையும் துறுவி துறுவிக் கேட்க ஆரம்பித்தார் .


கேட்கத் தானே செய்வார்! அவனுக்கு கல்லூரி கட்டணம் கட்டுவதே அவர் தானே..! தன் தந்தையை தன் பதினொன்றாம்
வகுப்பில் ஒரு விபத்தில் தவறவிட்டான் விழியன். எந்தவித பிரச்சனையும் இன்றி அழகாய் இன்பமாய் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு குடும்பம் எவனோ செய்துவிட்ட சென்ற விபத்தினால் பரிதவித்து போனது! அவன் அன்னை இல்லத்தரசி. அப்படியிருக்க இந்த சமுதாயத்தில் எப்படி காலம் தள்ளியிருக்க முடியும்? சொந்த வீட்டை மட்டுமே அவன் தந்தை அவர்களுக்கு விட்டுச் சென்றிருந்தார்! அதை மட்டும் வைத்து கொண்டு என்ன செய்ய ? பணமில்லாதவனை ஒரு சின்ன ஜந்து கூட இந்த உலகில் மதியாதே!

வாழ்க்கை வெறுத்துப் போயிருக்க கூடும் !ஆனால் அப்படி எந்த துன்பமும் அவர்களுக்கு நேராதவாறு அவர்களை தாங்கிக் கொண்டவர் அவனின் தாய்மாமன், சபாபதி தான்.

ஒவ்வொரு வீட்டில் மாமன் நல்லவராய் இருப்பார், அவர் மனைவி பொல்லாதவளாக இருப்பாள். ஆனால் விழியனின் தாய், ரேணுகாவுக்கு இந்த வகையில் மட்டும் அதிர்ஷ்டம் ! அண்ணன் அண்ணி இருவருமே, அவளுக்கு தோள் கொடுப்பவர்களாக அமைந்து போயினர். இத்தனைக்கும் சபாபதிக்கு இரண்டு பெண்களும், ஒரு மகனும். அவர் வீட்டிலும் ஒற்றை சம்பளம் தான்..

ஆனால் மனிதர் சமாளித்தார்.. தங்கையிடம் எந்த சாக்கு போக்கும் சொல்லாது, கிடைக்கின்ற வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சர்கார் சம்பளம் என்றாலும் , தனியார் துறைக்கும் தன் விடுமுறை நாட்களில் கன்சல்டிங் செய்து கொடுத்தார்! ஊரில் அவர்களுக்கென்று இருந்த நிலங்களில் பாதி ஒத்திக்கு விட்டும் , மீதி பாதியில் சேமிப்பு கிடங்குகள் கட்டி வாடகைக்கு விட்டும் அதிலும் கொஞ்சம் வருமானம் பார்த்தார்! ரேணுகாவின் நகைகளை அவள் பெயருக்கே அடைமானம் வைத்து அதன் மூலம் வந்த பணத்தில் சென்னை வீட்டை பல போர்ஷன்களாய் பிரித்து வாடகைக்கு விட வைத்தார்.. குருவி சேர்ப்பது போல் சேர்த்து ஒருவாராய் சமாளித்தாயிற்று.இன்னும் ஒரு வருடத்தில் விழியன் வேலைக்கு போய்விடுவான்!

விழியன் இதை பற்றி அறிந்திருக்கவில்லை..அவன் படிப்பில் இப்போது படு தீவிரமாய் இருந்தான்..படித்தால் மட்டுமே அவ்ர்களின் நிலையில் இருந்து சற்று முன்னேற முடியும் என்பதை நன்றாகவே உணர்ந்திருந்தான்! படிப்பு முடித்தவுடன் எப்படியும் வேலைக்கு போய் தன் மாமனுக்கு பட்ட கடன்களை அடைத்து விடவேண்டும் என்ற எண்ணத்திலும் இருந்தான்..

“அண்ணே நீங்க செஞ்ச உதவியை என் வாழ்நாளைக்கு மறக்க மாட்டேன் , நீங்க மட்டும் இல்லைன்ன என் மகன் வாழ்க்கை என்ன ஆகியிருக்கும்? நினைக்கவே நெஞ்சு பதறுது!”

“ரேணுகா, அதை எல்லாம் விடு மா. என் கடமையை தான் செஞ்சியிருக்கேன்..படிப்புக்கு செலவு பண்ண கொடுத்து வச்சியிருக்கணும் மா!”

நெகிழ்ந்து போயினர், தாயும் மகனும்..
இரு நாட்களுக்காக வந்தவர்கள் தாங்கள் வந்த பணி முடிந்து , அன்று மாலை சென்னை திரும்புவதற்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்.

‘இந்த முறை நான் வந்ததே வேஸ்ட், பார்க்க வேண்டியா ஆளை பார்க்கவே முடியலை.ச்சே’ அவள் எங்கே என்று எவரிடமும் கேட்க முடியவில்லை.. அவர்களின் பேச்சில் தெரிந்து கொள்ளலாம் என்று விட்டவனுக்கு , அது தெரியாமலே போய்விட்டது.


நொந்தபடி அவன் பெட்டியை எடுத்துக் கொண்டு வாசலில் வந்து வைக்க, ஆட்டோவில் வந்திறங்கினாள் அவன் இரண்டு நாட்களாய் பார்க்க தவமிருந்த அவனின் தேவதை!

இவனை பார்த்தவள், ஒன்றுமே செய்யாது வீட்டினுள் ஓடி விட, இவனுக்கோ ஐய்யோடா என்றிருந்தது..
‘இவளை என்னைக்கு நான் சரி கட்டி, என்னைக்கு..!’

அவள் தரிசனத்துக்கு இவனும் அவள் இருந்த இடம் செல்ல , தன் அத்தையை கட்டிக் கொண்டிருந்தாள் வெண்பா.
“ஏன் அத்தை சொல்லாம வந்தீங்க? நீங்க வருவீங்கன்னு தெரிஞ்சிருந்தா இந்த கேம்புக்கு போயிருக்கவே மாட்டேன்..”

“என் ராசாத்தி” அவளை நெட்டி முறித்த ரேணுகா,
“தீடிர்னு அண்ணன் போன் செய்தாரா, அதான் மா வந்துட்டோம்.. நீ வாயேன் என் கூட சென்னைக்கு!”
“இல்ல அத்தை ஸ்கூல் இருக்கு” என்றாள் ஓரக்கண்ணால் அவனை ஒரு முறை பார்த்து.

‘நீ ஏன் அங்க வர மாட்டேன்னு எனக்கு தெரியும் டீ’
‘இன்னொரு முறை உன் கிட்ட வந்து மாட்டவே மாட்டேன் டா’
அவனும் அவளும் கண்களால் பேசிக் கொண்டது பெரியவர்களுக்கு கேட்குமா?!


அவள் அன்று பார்த்த பார்வை இப்போது நினைத்தாலும் சிலிர்த்தது! அன்னையிடம் பேசிவிட்டு கையில் போனை வைத்திருந்தவன், கிளம்பாமல் அவளை பற்றி நினைத்துக் கொண்டு அப்படியே நிற்க
உள்ளுக்குள் இருந்த மிஸ்டர் மனசாட்சி குரல் கொடுத்தது! அதன்பிறகே ஊருக்கு கிளம்ப ஆயுத்தமானான்..




விழியனின் டைரி

நான் மதனிடம் விட்டு பிடிப்போம் என்று சொன்னதில் அவன் என்னை ஆச்சரியமாக பார்த்தான்.

“நீ விட்டு பிடிச்ச லட்சணம் தான் டா இது, அடுத்து என்ன வேணாலும் செய்வா!”

மதன் சொன்னது நூறு சதவிதம் உண்மை!

அவள் செய்த செயல்களை பார்த்து அவள் பணக்கார வீட்டு திமிர் பிடித்த பெண்ணாக அவளை யாரும் எண்ணிவிட வேண்டாம்.

தென் தமிழ்நாட்டில் வளர்ந்த ஒரு மிடில் கிளாஸ் பெண். ஐடி கம்பெனிக்கு இந்த யுகத்திலும் துப்பட்டாவை இரண்டு பக்கம் பின் செய்து வரும் பெண்களில் அவளும் ஒருத்தி!

அவளை அப்பிராணி என்று தப்பாக எண்ணிய அப்பிராணி நானே!
yarumma antha nallava.....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top