• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kathai Ondru Aarambam epi 24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
24


வெண்பா தன் டிராலியை தள்ளிக் கொண்டு வர வரவே காத்துக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் நடுவே விழியனை அவள் கண்கள் தேடியது.பார்த்தவரையில் எங்குமே அவன் தென்படவில்லை! மதன் மட்டும் வந்திருந்தான்.இவளிடம் வாங்க என்றதோடு மனைவி மதிவதனியுடன் பிஸியாக பேச ஆரம்பித்து விட்டான். வெண்பாவிடம் ‘ஏர்போர்ட் வருகிறேன்’ என்றிருந்த விழியனை காணவில்லை. ஒரு வழியாய் மதன், மதி , வெண்பா வெளியில் வந்து டேக்ஸிக்கு வெயிட் செய்ய எங்கிருந்தோ ஓடி அவர்களிடம் வந்தான் விழியன்!

வெண்பாவை நேசமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு தோளோடு அணைத்துக் கொண்டவன்,
“நல்லாயிருக்கியா வெண்பா , ஏன் முகம் சோர்ந்து போய் இருக்கு” என்க,
“நீங்க லேட்டா வந்த கோவமா இருக்கும் விழியன் !” இத்தனை நேரமும் தோழி பட்ட அவஸ்தையை கண்கூடாக பார்த்த மதி அவனிடம் சொல்லிவிட்டு,
“ஏய் இங்க இருக்க போறதே மூணு வாரம் , கோவத்தில் அதையும் வேஸ்ட் பண்ணிடாதே டீ” என்று வெண்பாவின் தோளை தட்டி விட்டாள்.
வெவ்வேறு டாக்ஸ்யில் பயணமானார்கள் இரு ஜோடிகளும் .அவள் கையை இறுக்கமாக பிடித்திருந்தவனின் தோளில் லாவகமாய் சாய்ந்து கொண்டாள் இவளும்! என்னதான் போனிலும் , வீடியோ கால்களிலும் பேசியிருந்தாலும், நேரில் இத்தனை மாதங்களுக்கு பிறகு பார்ப்பது சுகம் தானே!

வீடு வந்து சேர்ந்து கதவடைத்தவன் அவளை நகர விடாது கட்டிக் கொண்டான்! பல நாள் பிரிவை இன்றே சரிசெய்துவிடுவது போல் அத்தனை முத்த மழையில் மனைவியை திக்குமுக்காட வைத்தான்!!
“விடுங்க விழியன்! லேட்டா வந்திட்டு, ரொம்ப தான்!”
“அதான் வந்தாச்சே, அப்புறமென்ன? மெலிஞ்சி போயிட்டியா வெண்பா?”
அவளை கட்டிக்கொண்டிருந்தவன், இப்போது இடுப்பை அளந்தான்.
“அதெல்லாம் இல்லை, எனக்கு குளிக்கணும். என்னை விடுங்க முதலில்”
“குளிக்கணுமா, வா” அவளை ஒரு குழந்தையை தூக்குவதை போல் தூக்கி கொண்டு போனான், அந்த குளியலறை வரை…கதவருகில் இறக்கி விட்டவன்,
“நான் வேணா உதவிக்கு வரவா…”அசடு வழிந்தவன் முன் சிரித்துவிடுவோமோ என்று தோன்றியது அவளுக்கு…
“ஒண்ணும் வேணாம்.நீங்க போய் பெட்டியிலிருந்து சாமான் எல்லாம் எடுங்க. அத்தை உங்களுக்கு பால்கோவா செஞ்சி தந்திருக்காங்க”
“எனக்கு காரச்சேவு தான் டீ பிடிக்கும்” அவள் கன்னத்தை கிள்ளியவன் கையில் கிள்ளியவள், விரைந்து கதவை அடைத்துக் கொண்டாள்.

சாரதி மறுபடியும் போனில் அழைத்தார்.
“என்னப்பா அட்ரஸ் அனுப்புறேன்னு சொல்லிட்டு மறந்துட்டியா?”
என்னவென்று அவரிடம் சொல்லமுடியும்? முகவரி அனுப்பி வைத்தான், நடப்பது நடக்கட்டும் என்பது போல்!

அவர் கேட்பதற்கு எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் பதில் சொல்லிவிட வேண்டும்! இனியும் ரதியை நம் வழியில் கொண்டு வருவது என்பது இயலாத காரியம். பலவற்றை சிந்தித்தபடி நடைபயின்று கொண்டிருந்தவன் வீட்டின் அழைப்பு மணி அடித்தது.அவர் தான் என்று போய் கதவு திறந்தான், ஆனால் அவன் எதிரில் நின்றது ரதி!

ஆச்சரியத்தில் அவளை பார்த்தவன் அப்படியே நிற்க,
“ கொஞ்சம் வழிவிடு பிரகாஷ் “ என்றபடி உள்ளே நுழைந்தாள்.கையுடன் கொண்டு வந்திருந்த பெரிய பையிலிருந்து மற்றுமொரு ஜோடி செருப்பை வாசலில் போட்டாள்.பிரகாஷ் அவள் செய்கையை பார்த்தபடி நிற்க , தன் சின்ன சின்ன சாமான்களை வீடு முழுவதற்கும் பரப்பினாள் சீப்பு , பிரஷ் , ஹேண்ட்பேக் , துப்பட்டா எல்லாம் ஒவ்வொரு இடத்தில் வைத்தவள் கிட்சனினுள் நுழைய தலையே சுற்றிவிட்டது அவளுக்கு!

அவள் பாட்டுக்கு வீட்டினுள் வந்தாள், என்ன தான் செய்கிறாள், என்றபடி அவள் பின்னோடு வந்தவன் அவள் அதிர்ந்த பார்வையை பார்த்தபடி நின்றான். நிலைமை என்னவென்று அறிந்திருந்தான்!

‘முழு நேரம் ஆபிஸில் வேலையே கதின்னு இருப்பவன் , வீட்டை வச்சியிருக்கான் பாரு’அந்த சமையலறை லட்சணத்தை பார்த்து நொந்து போனாள் ரதி. ஆனால் ஆரம்பித்த வேலையை முழுதாய் முடிக்க வேண்டுமே. அந்த ஆள் வந்து பார்த்தாள் நான் தான் இப்படி வைத்திருக்கிறேன் என்று நினைத்து தொலைப்பார்..

நொந்தபடி அதனை சுத்தம் செய்ய ஆரம்பித்த வேளையில் , அவனும் உதவிக்கு வந்தான். இருவருமாய் எந்த பேச்சும் இராது அந்த சமையலறையை சுத்தம் செய்ய , சற்று நேரத்துக்கெல்லாம் சாரதி வந்துவிட்டார்! பிரகாஷுடன் இணைந்து வாசல் வரை சென்று வரவேற்றாள்.
“வாங்க மாமா! நல்லா இருக்கீங்களா?”

வந்தவர் வீட்டினுள் நுழைந்ததிலிருந்து நோட்டம் விட்டபடி வந்து சோபாவில் அமர்ந்தார். அவரை யோசிக்க விட கூடாது! இன்னும் கொஞ்சம் ஊன்றி கவனித்தாரானால் விரைவில் உண்மை நிலையை கண்டுபிடித்து விடுவார். உண்மை தான் ! சாரதிக்கு ரதியின் செய்கை அத்தனையும் நடிப்பு என்பதை கண்டு கொண்டார். அது அவளை அந்த வீட்டில் பார்த்ததினால் மட்டும் இல்லை! அவளிடம் தன் கவனத்தை கொண்டிருப்பது போல் காட்டினாலும், அவர் எண்ணத்தில் இருந்ததெல்லாம் வேறு!


நீ தான் ரொம்ப திறமையானவன்னு உனக்கு நினைப்பா ரதி? உனக்கு அப்பன்னு ஒருத்தன் இருந்தான்.அவன் உன்னை விட திறமையானவன். அவனுக்கு பிரண்டுன்னு நான் ஒருத்தன் இருக்கேன் இப்ப! யார்கிட்ட ! யாரு கிட்ட வச்சியிருக்க உன் குறுக்கு வேலை எல்லாத்தையும்?
இங்கு வரும் முன்பே பிரகாஷ் சொன்னதில் நம்பிக்கை இல்லாமல் ஹாஸ்டலுக்கு போன் செய்து விசாரித்து விட்டார். ரதியின் கார்டியன் என்பதால் வார்டனிடம் நேரிடையாக பேச முடிந்தது! அவள் இன்னமும் அங்கு தான் இருக்கிறாள் என்பதை அறிந்தும் கொண்டார்.

பிரகாஷ் என்ன தான் சொல்கிறான் என்று சோதிக்க அவனிடம் இதை பற்றி கேட்க ,அவன் அவர்களுக்குள் எல்லாம் இயல்பாய் இருப்பது போல் நாடகம் ஆடினான். ஒன்றாக இருப்பதாக சொன்னான்! ரதியை பற்றி தெரிந்தது தானே. நேரில் போய் கையும் களவுமாய் பிடிப்போம் என்று இவர் இங்கு வர,இந்த சேட்டை செய்வது இருவரும் என்று கண்டு கொண்டார்! இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டதான் இப்போது வந்ததே! அவள் இங்கிருக்க மாட்டாள் என்று நினைத்து வந்தவருக்கு அவள் இங்கிருப்பது முதல் ஆச்சரியம்!

ஆனால் இது எல்லாமே திட்டம் என்பதை உடனேயே புரிந்தவர் , ரதியை போலவே எதுவும் நடக்காததை போல் பார்த்துக் கொண்டார்! பிராஷிடம் பொதுவாக பேசிக்கொண்டிருந்தவர் , ரதி சமைத்துக் கொடுத்த உணவை சாப்பிட்டு முடித்தவுடன் கிளம்ப ஆயுத்தமானவர். போகிற போக்கில்,
“ஹாஸ்டல் காலி பண்ணிட்டியா ரதி?”
“ம்ம்…ஆமா மாமா…அப்பவே”
“அப்படியா? அந்த வார்டன் ரொம்ப நல்ல மாதிரி . அவங்களை நேரில் பார்த்து சொல்லணும்.நாளைக்கு அதுதான் என் முதல் வேலை!” என்றபடி போக , பிரகாஷும் ரதியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.அழகு சுந்தரி எல்லாவற்றையும் சொல்லிவிடுவாளே!

இரவு வெகுநேரம் வரையிலும் ரதி அங்கிருந்து கிளம்புவது போல் தெரியவில்லை.பிரகாஷும் அதை பற்றி எதுவும் கேட்காமல் தன் ஆபிஸ் பணியில் மூழ்கியிருந்தான். அவளாகவே,
“சாரதி மாமா நாளைக்கு அங்க வந்து விசாரிப்பார் போல் தெரியுது, நான் அங்க இப்ப போக முடியாது பிரகாஷ்”
இத்தனை நேரமும் ஒரு பேச்சுவார்த்தையும் இல்லை. இப்போது தன் காரியத்திற்காக வாயைத் திறந்தாள்.
அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பது அவனுக்கும் புரிந்தது! அமைதியை அவன் தொடர அவள் தொடர்ந்தாள்.
“இன்னிக்கு மட்டும் இங்க தங்கிகட்டுமா பிரகாஷ், எனக்கு வேற எங்கையும் போய் இருக்க முடியாது! நாளைக்கே வேற ஹாஸ்டல் பார்த்து போயிடுறேன்…”
இப்போது தன் லாப்டாப்பில் இருந்து நிமிர்ந்தவன்,அவளை அர்த்தமாய் ஒரு பார்வை பார்த்து,
“நீ லீகலி என்னோட வைஃப் ரதி. அதை அடிக்கடி நான் உனக்கு நியாபக படுத்த வேண்டியிருக்கு!”

தலை குனிந்து கொண்டாள். இந்த வாக்கியம் பிடிக்கவில்லை.அவன் வீட்டில் வைத்து இந்த பேச்சை தொடர அவளுக்கு இஷ்டமுமில்லை. அன்று போல் அவனிடம் கோவப்படாமல், நிதானமாய்,
“பிரகாஷ் நான் மறுபடியும் சொல்றேன். உன் வாழ்க்கையை என் கிட்ட வீணாக்காதே. வேற யாரையும் கல்யாணம் செய்துக்…”
“நீ ஹாலில் படுத்துக்கோ, குட் நைட் ரதி”
அவளின் பேச்சு தனக்கு பிடித்தமில்லை என்பது போல் அவ்விடத்தில் இருந்து எழுந்து சென்றுவிட்டான். சற்று நேரத்தில் அவளுக்கு தலையணையும் போர்வையும் மட்டும் போடப்பட்டது, அவள் அமர்ந்திருந்த சோபாவின் மேல்…ரதிக்கு பிரகாஷிடம் இப்படி எல்லாம் நடக்காமல் இருந்திருக்கலாம் என்றிருந்தது தான். ஆனால் சூழ்நிலை அப்படி! என்ன செய்ய முடியும்!
 




anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
அடுத்த நாள் சபாபதி அவள் நினைத்தது போல் ஹாஸ்டல் சென்று அவள் தங்கியிருந்த அறையை காலி செய்ய ஏனையவற்றை செய்தார். சற்று நேரத்தில் ரதிக்கு போனும் வந்தது அவரிடமிருந்து.
“என்னமா ரதி, நீ இன்னும் ரூம் திருப்பித் தரலையாமே! வார்டன் சொல்றாங்க. ஏன் மா?”
இந்த ஆளுக்கு வேற வேலையே இல்லை.
“ஆமா மாமா, சீக்கிரம் காலி செய்திடுறேன்”
அவளுக்கு சாரதியிடம் பயமா இல்லை மரியாதையா என்னவென்று சொல்லமுடியவில்லை. ஆனால் அவருக்கு சில விஷயங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டாள் நல்லது என்ற குள்ளநரித்தனம் நிறையவே செய்தாள். பிராகஷை தனியாக சமாளிப்பது அவளுக்கு எளிது. ஆனால் இந்த இருவர் கூட்டணி சேர்ந்தால் தன்னால் முடியாதோ என்ற சந்தேகம்…

இதை எல்லாம் மனதில் கொண்டே அவரிடம் அடங்கி போவது. பிரகாஷாய் போய் வாழ முடியாது என்று சொல்வது வேறு, ஆனால் இன்னொரு முறை நாமே போய் இவரிடம் இதனை பற்றிய எந்த பேச்சும் வைத்துக் கொள்ள கூடாது என்பதில் தெளிவாய் இருந்தாள் ரதிமீனா.அவர் யோசனையை கலைத்தது அவர் குரல்.

“நான் அட்வான்ஸ் எல்லாம் திரும்ப வாங்கிட்டேன் ரதி. உன் அக்கவுண்டில் போட்டிடுறேன், நீ சாமானையெல்லாம் வந்து எடுத்துக்கோ!” இடைவெளி விட்டவர்,
“இல்லை நானே கொண்டு வந்து வைக்கட்டுமா?” என்க, தலையில் அடித்து கொண்டாள்.
“மாமா உங்க கன்சல்டேஷனுக்காக எத்தனை பேர் ஹாஸ்பிட்டலில் காத்திருப்பாங்க? இதையெல்லாம் நான் பார்த்துக்குறேன், நீங்க ஊருக்கு கிளம்புற வழியை பாருங்க!”


நீண்ட நாட்களுக்கு பிறகு அத்தனை சமாதானமாய் அந்த பெண் அவரிடம் பேச, மனதில் சிரித்துக் கொண்டார். நீ யாருன்னு எனக்கு தெரியும் ரதி! சாரதி சொன்னதை போல் அவளின் அறையை காலி செய்து கொண்டு வந்து பிதரகாஷின் வீட்டில் வைத்துவிட்டுதான் கோவை சென்றார்.

அது ஞாயிறு என்பதால் அவனும் வீட்டில் தானிருந்தான். ரதி போனில் பல ஹாஸ்டல்களை தொடர்பு கொண்டு கேட்க , ஒன்றிலும் வாடகைக்கு அறைகள் இல்லை என்றே பதில் வந்தது போலும்!
பிரகாஷ் நடக்கும் கூத்தை எல்லாம் வேடிக்கை பார்த்தபடி இருக்க, அவனுக்கு அவள் பேச்சின் மூலம் எல்லாமே புரிந்தது!
“ரதி என்னை திரும்ப திரும்ப சொல்ல வைக்காதே நீ தாராளமா இந்த வீட்டில் தங்கிக்கோ! என்னால் உனக்கு எந்த தொந்திரவும் வராது!இத்தனை தூரம் சொல்ற என்னை நீ கொஞ்சமாவது நம்பலாம்”
அன்றே இதை சொன்னான் தான் , ஆனால் ரதிக்கு சிறிதும் அதில் உடன்பாடு இல்லை! இப்போதும் மறுப்பாய் எதையோ சொல்ல ஆரம்பிக்க,
“ஜஸ்ட் டோண்ட் ஆர்கியூ ! இந்த விஷயத்திலாவது நான் சொல்றதை கேளு” என்றபடி இரண்டு அறைகள் இருந்த அந்த வீட்டில் அவளது சாமான்களை ஒரு அறையில் கொண்டு வைத்தான்! அந்த அறை காலியாக இருந்தது. படுப்பது கூட கட்டாந்தரை என்னும் ரீதியில்!
“உனக்கு படுக்க கட்டில் வேணும்னா வாங்கிடலாம் ரதி”அவளுக்காக அவன் யோசித்து சொல்ல,
“இல்லை பிரகாஷ் ஐயம் ஃபைன் வித் திஸ். இன்னும் கொஞ்ச நாள் தானே!” ஏதாவது இடம் கிடைத்தால் போய்விடவேண்டும் என்ற மனதில் எண்ணி சொன்னாள். அவன் முகம் போன போக்கை அவள் பார்க்கவில்லை.
அதை பார்த்திருந்தால் அவன் மனதின் வலி அவளுக்கு கொஞ்சமாவது தெரிந்திருக்கும்!
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
பிரகாஷ் பாவம் இப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்து இன்னும் என்னவெல்லாம் கஷ்டபடுகிறான்.
 




Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
Hi mam

நன்றாக இருந்தது இப்பகுதி.

நன்றி
 




Chitra ganesan

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,322
Reaction score
2,540
Nice.thimir udambu muluvathum thimir rathikku.intha mathiri pennai ellam appadiye nattathil vittu vida vendum .appothaan valkaiyin arumai puriyum.
 




kayalvizhi.ravi.10

மண்டலாதிபதி
Joined
Jan 20, 2018
Messages
489
Reaction score
589
Location
pondicherry
ரதியின் தந்தை ஆசையை அவரது நண்பர் நிறைவேற்ற பார்க்கிறார். வெண்பா விழியனின் அன்பில் நனைகிறாள், விழியன் ரதியை பற்றி சொல்வனா!
 




Saranya

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,524
Reaction score
1,341
Location
Coimbatore
Epadi ellam plan panra intha radhi.. Radhi yai prakash than thiruthi kondu vara vendum.. Viliyan venba scenes are nice..
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
arumaiyana epi sis:love::love::love::love::love::love:oru vazhiya prakash veetuku vanthachu nice(y)(y)(y)(y)sarathi asathal......... alanthu vaithu irukaar athiya nice:):):):)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top