• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kathai Ondru Aarambam epi 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
8.கதை ஒன்று ஆரம்பம்



விழியனின் டைரி



என் மெயிலில் நான் சொல்லி இருந்தபடி அண்டர்கிரவுண்ட் கார் பார்கிங்கில் என்னை சந்திந்தாள். அவளிடம் பொறுமையாக , என் நிலைப்பாட்டை விளக்கினேன். எல்லாவற்றையும் கேட்டவள்,



“என்ன இப்ப , உங்க அம்மா கிட்ட நான் சம்மதம் வாங்குறேன் போதுமா?”



விதண்டாவாதம் செய்கிறவளிடம் என்ன பேச?

“நான் உன்னை அப்படி நினைக்கலைன்னு தான் இவ்வளவு நேரம் சொல்லிகிட்டு இருக்கேன்! உனக்கு அதை புரிஞ்சிக்க முடியலையா?”

“அது எப்படி நினைக்காம இருப்பே?! என்னை கல்யாணம் பண்ணிக்கோ, நினைக்க வைக்கிறேன்!”

“நான் சொன்னா கேட்க மாட்டியா?” மென்மையாய் அவளை கேட்க, உச்சி குளிர்ந்து போனாள்.

“நீ சொன்னா எதுனாலும் கேட்பேன் , இந்த விஷயத்தை தவிர!”

“சரி அப்ப இவங்க சொல்றதை கேளு” ஒரு பில்லர் பின் நின்றிருந்த அவளின் தந்தையை அழைக்க வெளி வந்தவர், முறைத்த முறைப்பில் நடுநடுங்கி போனாள்!

நான் அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்க்க, விட்டார் நாலு அறை.

அறை வாங்கியவள் அழுதபடியிருக்க,

“தம்பி நீங்க சொன்னப்ப நான் நம்பலை,இப்ப கண்கூடாப் பார்த்துட்டேன்.”

அமைதியாகிவிட்டார். வார்த்தை இல்லை..எத்தனை அவமானம் தன் வளர்ப்பில்!

“வரேன் தம்பி!” என்றபடி திரும்பி பாராமல் அவளை கைபற்றி அழைத்து சென்றார். ‘என்னை ஏமாற்றிவிட்டாயே’ என்பது போல் ஒரு பார்வை பார்த்தபடி அவர் பின்னோடு போனாள்.

—————————————





அன்றிரவு அவர்கள் வீட்டில் தங்கியிருந்த மதி அடுத்த நாள் எங்கேயும் வெளியே போகலாம் என்று திட்டம் போட,



“எனக்கு இன்னும் கொஞ்சம் செடி வாங்கணும்”என்றாள் வெண்பா



“அப்போ ஈசிஆர் போகலாமே! நிறைய நர்சரி இருக்கு அங்கே! பீச்சும் பக்கத்தில் இருக்கு .கூட்டமே இருக்காது ஜாலியா இருக்கும்!” என்றாள் மதி.

“நீ செடியை பாரு, நான் என் ஆளை பார்க்குறேன்!” என்றும் சேர்த்துக் கொண்டாள்.

விழியனுடன் இருக்க வேண்டுமாம் அவளுக்கு!

வெண்பாவுக்கு அவளின் வழிசலை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்கள் திட்டத்தை அத்தையிடம் சொல்ல, ரேணுகாவுக்கும் ஆர்வமாகி விட்டது. அதனால் திட்டமிட்டவாறு ஈசிஆர் சென்றனர் அனைவரும்.

கடலில் இறங்கவும் மதியின் ஆட்டம் ஜாஸ்தியானது! கடல் அலைகளில் கால் நனைக்கிறேன் என்று போனவள் குளிக்காத குறை தான். வெண்பாவை சேர்த்து நனைத்துவிட்டாள். ரேணுகா கீழே அமருவது சிரமம் என்று காருக்கு திரும்பி விட, விழியன் மட்டும் பெண்களுக்கு பாதுகாப்பாய் அங்கேயே நின்றான்.

விழியனுடன் போட்டோ எடுக்கிறேன் என்று அழுச்சாட்டியம் செய்த மதி, வெண்பாவின் மூலம் அதை சாதித்தும் விட்டாள். தோழியின் செயல்களில் வெண்பாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்ததை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டான் விழியனும். இந்த ஓவர் பில்டப் அவனுக்கே பாதகமாய் முடியும் என்பது தெரியவில்லை , பாவம்!

கடலில் ஆட்டத்தை முடித்துக் கொண்டு அனைவரும் காரில் ஏறும் பொழுது, முன் பக்கம் ஏற வந்தவளை, “வெண்பா நீ கொஞ்சம் பின்னே உட்காறேன், மதி நர்ஸரிக்கு வழி சொல்லுறேன்னு சொன்னா!” என்றான் வேண்டுமென்றே!அவன் பேச்சை கேட்டு அவர்களின் குறுக்கே புகுந்தாள் மதி!

சும்மாவே காத்துக் கொண்டிருப்பவளுக்கு இவன் சொன்னது போதாதா?வெண்பாவை தள்ளிக் கொண்டு முன் சீட்டில் அமர்ந்தாள்!

மகன் அப்படிச் சொன்னதில் வெண்பாவின் முகம் வாடிவிட்டதை, காரில் இருந்த ரேணுகா கவனிக்கத் தவறவில்லை.இவர்களின் உட்கட்சி பூசல் தெரியாமல் மகன் மீது தான் தவறு என்று முடிவு கட்டிவிட்டாள் அவள்!

நர்ஸரியில் நுழைந்ததும் ,இதுவரை நடந்த எல்லாவற்றையும் மறந்துப் போனாள் வெண்பா. மதி அழைத்துச் சென்ற இடமெல்லாம் அத்தனை பெரிய பெரிய தோட்டம்! எந்த செடியை எடுப்பது எதை விடுவது என்றே தெரியவில்லை! விலையும் ஏகத்துக்கு குறைவாய் இருக்க, வாங்கிக் குவித்துவிட்டாள்.

அதற்கான தொட்டிகளும் சைஸ் வாரியாக வாங்கியாயிற்று! வண்டியின் பின்பக்கம் நிறைந்து டிரைவர் சீட்டைத் தவிர எல்ல சீட்டின் கால் பக்கமும் புது தொட்டிகளும் செடியும்!

“தெரியாம உன்னை இங்க கூப்பிட்டு வந்துட்டேன் ! இப்படியா அள்ளுவே?” மதி சலித்துக்கொண்டாள். அவள் மடியில் கூட ஒரு புது தொட்டி இருந்தது தான் அதற்கு காரணம்!

வீட்டுக்கு வந்ததும் எல்லாவற்றையும் மாடிக்கு ஏத்துவது வேறு தனி வேலை. ரேணுகாவை தவிர்த்து மற்ற அனைவரும் அதை செய்தனர்!

“என்னை வீட்டுக்கு வான்னு இனிமே கூப்பிட்டா வந்துடவே மாட்டேன் டீ ராசாத்தி!” மதி புகார் வாசித்தபடி தோழிக்கு உதவினாள்!

ரேணுகா எவரிடமும் பேசாமல் தான் கண்ட விஷயங்களின் யோசனையில் இரவு வேலைகளில் மூழ்கி விட்டாள்.

‘இந்த திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டுமே’என்பதே அவள் எண்ணமாக இருந்தது!

ஒரு குளியலை முடித்து ஒத்தாசைக்கு அங்கு வந்த மருமகளிடம்,

“வெண்பா, அந்த ஆல்பம் எடுத்துட்டு வந்து மதிகிட்ட காட்டு!” என்க, “என்ன ஆல்பம் அத்தை?” என்றாள் இவளும்.

“என்னம்மா, விழியனுக்கும் உனக்கும் நடந்த நிச்சயதார்த்த ஆல்பம் தான்”

அவர்கள் பின்னால் நின்றிருந்த மதியின் இதயம் வெடித்துச் சிதறியது!

‘என்னது ஏற்கெனவே நிச்சியம் ஆயிட்டா!’ மதியின் முழிப்பை பார்த்த ரேணுகா, “என்னம்மா மதி அப்படியே சிலையா இருக்கே!”

“வெண்பாவிற்கு நிச்சயம் ஆனது எனக்கு தெரியாது மா!” என்றாள் மதி அப்பாவியாய்!

‘அதான் இத்தனை ஆட்டமா, அப்பவே நினைச்சேன்’நினைத்துக் கொண்டாள் ரேணுகா!

மோவாயில் கை வைத்து, “என்ன வெண்பா, இத்தனை க்ளோஸா இருக்கே, இதைக் கூட சொல்லலையா! என்ன மா நீ!”

தோழியின் முகத்தை பார்த்தவளுக்கு,’ஐய்யோ அத்தை கொஞ்சம் சும்மா இருங்களேன்!’ மதியின் முகமாறுதலை பார்க்க கவலையாய் இருந்தது வெண்பாவுக்கு! அவளுக்குத் தன்னிலையை விளக்கமாய் சொல்ல வேண்டும்!

“நானே சொல்லனும்னு இருந்தேன், நீங்க பட்டுன்னு போட்டு உடைச்சீட்டிங்க!” தோழியிடம் திரும்பி,

“வாடி என் ரூமுக்கு” வர இஷ்டமில்லாதவளை வலுகட்டாயமாய் இழுத்துக் கொண்டு போனாள்!

அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டவள், “மதி என்னைப் பாரேன்! நிச்சயம் ஆனது உண்மை தான் ஆனா எனக்கு அவனை பிடிக்கல!” மதி சமாதானமாகவில்லை!

“உண்மை மதி, என்னை நம்பு! அப்படி இருந்திருந்தா நான் ஏன்டி உன்னை அப்ளை பண்ண சொன்னேன்!”

ஏதோ படிப்பு சம்மந்தமான கோர்சில் சேர சொன்னது போல சொன்னாள்.

மதி கோபமாகவே இருக்க, இவள் அவளை தாஜா செய்து கொண்டேயிருக்க அவர்கள் அறைக் கதவு தட்டப்பட்டது!

ரேணுகா தான்! வெண்பா எடுக்காமல் வந்துவிட்ட நிச்சய ஆல்பமை,”சொல்றதை செய்யமாட்டியே! அப்படியே விழியனை போலயே இரு.உங்க ரெண்டு பேரை வச்சிகிட்டு!” சலித்தபடி தந்துவிட்டு போனாள்.

கதவை சாத்தும் முன்னரே மதி அவளின் கையில் இருந்த ஆல்பத்தை வாங்கி பார்க்க ஆரம்பித்துவிட்டாள்..முகத்தில் எண்ணக் கலவைகள்! வெண்பாவுக்கு கொஞ்சம் பாவமாக கூட இருந்தது!

மதி நிதானமாய் பார்த்து முடித்துவிட்டு, “ஆமா நீ இந்த போட்டோஸ்ல சந்தோசமாவே இல்லை”

“பார்த்தியா! நான் தான் சொன்னேனே! என்னை நம்பு மதி!”

மதியும் ஆசை மிகுதியில் வெண்பா சொன்னதை நம்பத்தான் செய்தாள். அடுத்த நாள் நடக்க போவது தெரியாதே!



அடுத்த நாள் தனது இல்லம் திரும்ப வேண்டும் என்றிருந்த மதிக்கு அங்கிருந்து போகவே மனமில்லை. விழியனிடம் தான் நினைத்ததை சொல்லிவிட எண்ணியிருந்தாள்.

“வெண்பா! எங்க அம்மாவுக்கு உன் செடியிலிருந்து ஒரு சின்ன பதியன் தா டீ” என்று ஒரு பொய்க் காரணத்தைக் கூறி மாடிக்கு அழைத்துச் சென்றாள் தோழியை!

விழியன் அங்கு வரமாட்டானா என்ற இவள் எதிர்பார்ப்புக்கு இணங்க அவனும் வந்தான். வந்தவனிடம் மதி,

“விழியன் எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு” என்றுவிட்டாள் பட்டென்று!

எப்படி பாவிப்பது என்றே தெரியவில்லை அவனுக்கு! வெண்பாவுக்கும் இவர்களுக்கு நடுவில் நிறபதா வேண்டாமா என்ற நிலை!

அங்கு நின்றிருந்த மதியையும் வெண்பாவையும் மாறி மாறிப் பார்த்தவன், “சாரி மதி...ஐயம் அல்ரெடி என்கேஜ்ட்.”

“எனக்குத் தெரியும்!” அவள் சொன்னதில் அவனுக்கு அதிர்ச்சி! தெரிந்துமா இப்படி!

“ஆனா வெண்பாவுக்கு இதில் இஷ்டம் இல்லையாம்!” சர்வ சாதாரணமாய் மதி சொல்ல,அதில் சினம் ஏறிவிட்டது அவனுக்கு! சற்று நேரம் அமைதியாக இருந்தவன்!

“உங்க மனசை எந்த விதத்துலயாவது கலைச்சிருந்தா , ஐயம் சாரி மதி. என்னால வெண்பாவைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது!” உறுதியாய் சொல்லிவிட்டு அவர்களிடமிருந்து திரும்பியவன், “வெண்பா உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்! என் ரூமுக்கு வா!” . போய்விட்டான்!

அவன் தன்னை நிராகரித்துவிட்டான் என்பதில் அழ ஆரம்பித்த மதியைத் தட்டிக் கொடுத்தாள் வெண்பா.

“அவன் சொல்லுறதை பெரிசா எடுத்துக்காத மதி! அவனைக் கட்டிக்க எனக்கு இஷ்டம் இல்லை டீ!”

‘உனக்கு இஷ்டமில்லைன்ன அதுக்காக என்னை ஏன் டீ மாட்டி விட்ட!’

அதற்குள் அவன் வெண்பாவை அழைத்திட, அழும் தன் தோழியின் முதுகில் தட்டி விட்டு அவனின் அறைக்கு தயக்கமாய்ச் சென்றாள்!

இவள் அறைக்குள் வரவும், “என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல? உன்னை கேட்டு தானே நிச்சயம் பண்ணோம்? இப்போ பிடிக்கலைன்னு சொன்னா?”

பதிலில்லை அவளிடம்!

“எனக்கு வேற ஆள் பார்த்து தரச் சொல்லி நான் கேட்டேனா..? தேவையில்லாம பேசி ஒரு பொண்ணு மனசுல ஆசைய வேற தூண்டி விட்டிருக்க தெரியுமா?”

யாருக்கோ சொல்கிறான் என்பதை போல் திமிராய் நின்றிருந்தவளை நெருங்கியவன்,

“உனக்கு ஏன் டீ என்னைப் பிடிக்கலை! அப்படி என்ன பெரிய தப்பு செய்துட்டேன்? சின்ன வயசுல உன் இஷ்டமில்லாம உன் கன்னத்துல இப்படி ஒரு முத்தம் கொடுத்தேன் அது தப்பா!”

சொன்னவன் அதையே டெமோவாய் செய்து காட்ட, அரண்டுவிட்டாள் அவள்!

அவனிடமிருந்து பின்னடைந்தவளை மேலும் நெருங்கினான். தன் கிட்டே வந்தவன் நெஞ்சில் கைகளை வைத்து தள்ள முயன்றாள்.அவள் கைகளைப் தன் நெஞ்சோடு சேர்த்து பற்றிக் கொண்ட விழியன்,

“இந்த ஜென்மத்தில் நீ தான் என் பொண்டாட்டி, புரிஞ்சுதா? எத்தனை வருஷமா உன்னை நினைச்சிட்டு இருக்கேன் தெரியுமா? இனி யாரையும் எனக்கு செட் பண்ணி விடணும்னு பார்த்தே, நான் மனுஷனா இருக்க மாட்டேன்!”

அவள் கைகளை அவனிடமிருந்து பிரிக்கப் போராட. “இப்ப நீ செஞ்சதுக்கான தண்டனை,கொடுத்தே ஆகணுமே!” என்றவன் சட்டென்று அவளை தன்னுடன் இணைத்து, அவளது அதரங்களை, தன்னுடையதினால் சிறைச் செய்தான்!

அவள் திமிறியும் அவன் விடவேயில்லை! வெண்பா தனக்கானவள் என்ற எண்ணம் அவனுக்கு. ஆனால் ஏற்கனவே இப்படி ஒரு தவறுக்காக தான் அவள் ஒதுங்கி போய் கொண்டிருக்கிறாள் என்பதை தெரிந்துமே,செய்தான்!

செய்த வேலை முடித்து நிமிர்ந்து பார்க்க, வெண்பாவின் கண்களில் கண்ணீர். அவனை அது சிறிதும் பாதிக்கவில்லை. தனது கைகுட்டையை எடுத்தவன் அவளது உதட்டிலிருந்த உதிரத்தை துடைக்க எத்தனிக்க, அவன் செய்கையில் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் வெண்பா.

சற்று நேரம் அவளை பார்த்திருந்தான்…கண்களில் கண்ணீர் வலிய நின்றிருந்தாள்..கை அவனிடமிருந்து விடுபடப் போராடிக் கொண்டிருந்தது. சட்டென்று அதை விட்டவன் அவள் உதட்டில் தன் கைகுட்டையை வைத்து,“இதை வச்சிக்கோ, இல்லைனா எப்படி இந்த காயமாச்சுன்னு எல்லாரும் கேட்பாங்க!”
 




anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
அவள் கைகளில் தன் கைகுட்டையை திணிக்க முறைத்தபடி அறையை விட்டு வெளிவந்தவளை சந்தித்தாள் அறை வாசலில் நின்றிருந்த மதி! இருவரின் சம்பாஷனைகளை கேட்டுவிட்டாள். அவன் தெளிவாய் தான் இருந்திருக்கிறான்.. குட்டையை குழப்பியது வெண்பா தான் என்பது உறுதியாயிற்று!

வெண்பா அவளை நெருங்க, அவளை காண பிடிக்காததை போல் மடமடவென்று படி இறங்கி சென்றுவிட்டாள்.அங்கு வந்த விழியனிடம் , “விழியன் நீ மாறவே மாட்டியா? நீ செஞ்ச காரியத்தில் எங்க ப்ரெண்ட்ஷிப் கெட்டு போச்சு பாரு” என்று தன் கோப முகத்தை வெண்பா காட்ட,

“என்ன சொன்னே? கேட்கலை ! கிட்ட வந்து சொல்லு பார்ப்போம்” என்று மேலும் சீண்டினான் அவன்!

செய்வதையெல்லாம் செய்துவிட்டு நல்லவன் போல் அன்று மதியை அவனே வீட்டில் கொண்டு போய் விட்டான், ரேணுகாவையும் உடன் அழைத்துக் கொண்டு!

வெண்பா தோழி சென்றதும் அறைக்குள் அடைந்தவள் தான். எவர் முகத்தையும் பார்க்க விரும்பவில்லை!

அடுத்த இரண்டு நாள் மதி ஆபிஸ் வரவில்லை.இவள் போன் செய்ய எடுக்கவுமில்லை…ரதி கூட இவளிடம் தான் மதி வராததை பற்றிக் கேட்டாள்,

“எனக்கும் தெரியலை” என்று சொன்னதை நம்ப முடியாமல் பார்த்து சென்றாள்.

விழியன் வெண்பாவுக்கு பத்தாவது முறையாய் அவளுக்கு போன் செய்தான்!

பல முறை கட் செய்தாலும் மறுபடியும் அழைத்து தொல்லைப்படுத்த பேசித் தொலைக்கலாம் என்று எடுத்தவளிடம்,

“புருஷன் கூப்பிட்டா உடனே எடுக்க வேண்டாமா என் கன்னுக்குட்டி?”

பதில் சொல்லமாட்டேன் என்றிருந்தவளிடம்,

“என் மதி டார்லிங் இன்னைக்கு ஆபிஸ் வந்தாளா?”

எத்தனை கொழுப்பு!

அவ டார்லிங் நான் கன்னுக்குட்டியா?

நீ எருமை மாடு டா!

“வரலை!”

“ஆமா வரமாட்டேன்னு நேத்து எனக்கு வாட்ஸப்ல மெசேஜ் பண்ணுனா! நைட் நீ நம்ம ரூமுக்கு வந்தா சொல்லலாம்னு நினைச்சேன்,ஆனா நீ வரவேயில்லை…ஏன் ?”

‘நான் போன் பண்ணுனா எடுக்கலை, அவனுக்கு மட்டும் மெசேஜா!’

துரோகி!

“வச்சிடவா!” என எரிச்சலாய் கேட்டவளிடம் எப்போதும் போல் நிதானமாய்,

“வெண்பா நீ மதி வீட்டுக்கு போ. நான் அங்க வந்து உன்னைக்

கூப்பிட்டுக்குறேன்” என்றான் திடீரென!

“என்னால உங்க ப்ரெண்ட்ஷிப் கெட்டு போக வேணாம்.போய் அவளை சமாதானப்படுத்து”

‘சரிங்க நாட்டு ஆமை’

அவனை பிடிக்கவில்லை என்றாலும் அவன் இப்போது சொன்னது பிடித்தது. அதன் படி செய்தாள்!
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
“உண்மை மதி, என்னை நம்பு! அப்படி இருந்திருந்தா நான் ஏன்டி உன்னை அப்ளை பண்ண சொன்னேன்!”

ஏதோ படிப்பு சம்மந்தமான கோர்சில் சேர சொன்னது போல சொன்னாள்.
:p:p:p:pvizhiyan nilama romba pavam sis:D:D:Drenuka amma nichayathartha album koduthalum rendum mathi& venba thelivuthen:):):)
என்னால உங்க ப்ரெண்ட்ஷிப் கெட்டு போக வேணாம்.போய் அவளை சமாதானப்படுத்து”

‘சரிங்க நாட்டு ஆமை’
:D:D:Dnattamai... nattu aamai aayitana......... lighta poramai irukku venba madamku ivanga prachnaiyila mathi pillaya korthu vitrianga.......... interesting ud sis:love::love::love::love:(y)(y)
 




Sameera

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,949
Reaction score
2,014
Location
Chennai
Venba this is not fair....unaku pidikalanna madhi ya kothu vittu hurt pannuviya??
 




vanathi

நாட்டாமை
Joined
Feb 7, 2018
Messages
21
Reaction score
138
Location
thiruvallur
என்னமா இப்படி பண்றீங்களே மா..
விழியன் செய்வது சரி இல்லை..
விழியா நீ திருமணத்திற்கு பிறகு முழி பிதிங்கி விழிப்பது உ றுதி..
பெண் சம்மதம் இல்லாமல் முத்தம் கொடுப்பது நல்லது இல்ல..
அது என்ன பா எல்லா ரைடரும்
இதழ் முத்தம் கொடுப்பது போல எழுது வது..


அனி sago ud super..
 




Chitra ganesan

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,322
Reaction score
2,540
Vizhiyanai pidikkavillai enbathai aval than thathaidam solli irukkalaam.athai vittu mathiyin manathil aasaiyai thundivittathu romba thappu.ithil marupadiyum avanaiye kutram solkiral.mathiyin mana nilai ivalukku puriyavillaiye.kalyanam,kathal ellame vilaiyattaka poivittatha ivalukku.
 




anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
:p:p:p:pvizhiyan nilama romba pavam sis:D:D:Drenuka amma nichayathartha album koduthalum rendum mathi& venba thelivuthen:):):)

:D:D:Dnattamai... nattu aamai aayitana......... lighta poramai irukku venba madamku ivanga prachnaiyila mathi pillaya korthu vitrianga.......... interesting ud sis:love::love::love::love:(y)(y)
nandri ma..keep supporting
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top