• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kathalaakik kasinthu....: Aththiyaayam 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 9:

கீதா தனக்கு திருமணமாகி கணவன் உயிரோடு இருக்கிறான் என்று சொல்லிச் சென்றதிலிருந்து சேகரின் மனம் ஒரு நிலையில் இல்லை. கீதாவின் மேல் அவன் வைத்திருந்த மதிப்பு மரியாதை எல்லாமே சுக்கு சுக்காக உடைந்து போனது. மாலினியிடம் இதைச் சொல்லி சொல்லிப் பொருமினான்.

"அவங்களுக்கு ஏற்கனவே கல்யாணமாயிடிச்சுன்னா எதுக்கு எங்கிட்ட இப்படி பழகணும்? எதுக்கு என் தங்கச்சி மனசுல ஒரு ஆசையை உண்டாக்கணும்? சே! இன்னொருத்தன் மனைவியை நான் காதலிச்சுருக்கேன்னு நெனச்சாலே எனக்கு என்னவோ மாதிரி இருக்குங்க மாலினி மேடம்" என்று புலம்பினான்.

சொல்லவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல் தவித்தாள் மாலினி. அவளுக்கு கீதாவின் கதை முழுக்கத் தெரியும் என்றாலும் அதனைத்தான் சொல்லக் கூடாது என்பது தீர்மானமானமான முடிவு.

"சேகர் சார்! நீங்க கீதாவை தப்பா நினைக்காதீங்க! அவ சந்தர்ப்ப சூழ்நிலை தெரியாம அவளை குறை சொல்லாதீங்க! அவ ரொம்பப் பாவம்! அத்தனை தான் என்னால சொல்ல முடியும்"

"ஹூம்! நீங்க எல்லாருமே ஒரே டைப்பு! என்னோட நிம்மதியையும் சந்தோஷத்தையும் குலைச்சிட்டு அவங்க நிம்மதியா வேலை பார்க்குறாங்க! கயல் அழுதுக்கிட்டே இருக்கா! நானாவது வயசுல பெரியவன் சமாளிச்சுக்குவேன். என் தங்கச்சி என்ன பாவம் செஞ்சா? அவளையும் இப்ப பார்க்க வரதே இல்ல! சே! கீதா இவ்வளவு மோசமானவங்கன்னு நான் நினைக்கவே இல்ல மாலினி மேடம்" என்றான்.

மௌனமாக இருந்தாள் மாலினி. சேகரை என்ன சொல்லித் தேர்றுவது எனத் தெரியவில்லை. சற்று நேரம் பொறுத்து அவளது மேஜையின் இண்டெர்காம் ஒலிக்க எடுத்துப் பேசினாள். சேகர் தான்.

"மேடம்! உங்களுக்கும் உங்க ஃபிரெண்டுக்கும் ஒரு குட் நியூஸ்"

"சொல்லுங்க சார்"

"நானும் என் தங்கச்சியும் இந்த ஊரை விட்டே போயிரலாம்னு முடிவு செஞ்சிட்டோம். எனக்கு திருச்சியில வேற வேலைக்கு அப்ளை செஞ்சிருக்கேன். திங்கட்கிழமை இண்டெர்வியூ! ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் பஸ்ல போகப் போறேன். அவங்களை நிம்மதியா இருக்கச் சொல்லுங்க! இனி அவங்க வாழ்க்கையில நானோ என் தங்கச்சியோ வரவே மாட்டோம்" என்று குரல் கலங்க சொல்லி விட்டு ஃபோனை வைத்தான்.

வெலவெலவென்று வந்தது மாலினிக்கு. சேகர் இத்தனை சீக்கிரம் இப்படி ஒரு முடிவுக்குப் போவான் என அவள் நினைக்கவே இல்லை. சேகரால் கீதாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும் என நம்பினாள். எந்தத்துணையும் இல்லாத அவளுக்கு ஒரு குடும்பம் கிடைக்கும் கீதா சந்தோஷமாக வாழ்வாள் என கனவு கண்டாள். ஆனால் இப்போதோ நிலைமை முற்றி விட்டது. இனியும் கீதா தன்னைப்பற்றி முழுமையாக சேகரிடம் சொல்லவில்லை என்றால் விளைவுகள் விபரீதமாகலாம். இப்போதே கீதாவிடம் பேச வேண்டும் என தீர்மானித்துக்கொண்டு செயலில் இறங்கினாள். முதலில் கீதாவை சீட்டுக்கே சென்று பார்த்தாள். அவளுக்கு மட்டுமே கேட்கும் வண்ணம் பேசினாள்.

"நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ எனக்குத் தெரியாது! இன்னும் ஒரு மணி நேரத்துல நீ உங்க வீட்டுல இருக்கணும். நான் அரை நாள் லீவு போட்டுட்டு வரேன். உங்கிட்ட நிறையப் பேசணும்" என்றாள்.

ஏதோ கேட்க வாயெடுத்த கீதாவைக் கண்களைக் காட்டி அடக்கினாள். இரு பெண்களும் அரை நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு டூவீலரில் விரைந்தனர். கீதாவின் வீட்டை அடைந்து கதவுகளைத் திறந்து உட்காரும் முன்னரே பேசினாள் மாலினி.

"நீ உன் மனசுல என்ன தாண்டி நெனச்சுக்கிட்டு இருக்க? வாழ்நாள் பூரா இப்படியே இருக்கலாம்னா?" என்றாள் கோபமாக.

"முதல்ல உட்காரு மாலு! எதுக்கு இப்படிக் கோவமாப் பேசுற? நான் எந்தத் தப்பும் செய்யலியே?"

உட்கார்ந்து கொண்டாள் மாலினி. கையைப்பிடித்து கீதாவையும் அமர வைத்தாள்.

"நீ எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கே தெரியுமா? உன்னை அண்ணி அண்ணின்னு கூப்பிட்டு அன்பு காட்டினாளே ஒரு சின்னப்பொண்ணு அவ மனசை நீ புண்படுத்தியிருக்கே? இது தப்பில்லையா?"

மௌனமாக அமர்ந்திருந்தாள் கீதா. அவள் மனம் அழுதது.

"அன்னைக்கு திடீர்னு சேகர் சார்ட்ட என்னவோ பெரிய அரிச்சந்திரன் தங்கச்சி மாதிரி எனக்குக் கல்யாணமாயிடிச்சு புருஷன் இருக்காருன்னு சொல்லிட்டு வந்துட்ட! ஆனா என்ன சூழ்நிலை அதை சொன்னியா? இப்ப சேகர் உன்னை எவ்வளவு கேவலமா நெனச்சிருக்காருன்னு உனக்குத் தெரியுமா?"

இதற்கும் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தாள் கீதா.

"நீ அன்னைக்கு அப்படி சொன்னதோட விளைவு என்ன தெரியுமா? சேகர் சாரும் அவர் தங்கச்சியும் ஊரை விட்டே போகப் போறாங்க! உன்னால அவரு திருச்சியில இருக்குற அவர் அத்தை மகளைக் கல்யாணம் செஞ்சுக்கலாம்னு முடிவு எடுத்தாலும் ஆச்சரியமில்ல! ஏண்டி இப்படி அவர் வாழ்க்கையை நாசமாக்குற? அவரும் அவர் தங்கச்சியும் உங்கிட்ட அன்பைத்தவிர வேற என்ன எதிர்பார்த்தாங்க? எதுக்கு இப்படி ஒரு தண்டனை அவங்களுக்குக் குடுக்குற?" என்றாள் கோபமாக.

அதற்கு மேல் பேசாமல் இருக்க கீதாவால் முடியவில்லை.

"என்னை என்ன செய்யச் சொல்ற மாலு? என்னால எப்படி சேகரைக் கல்யாணம் செய்துக்க முடியும்?"

"அப்ப ஏண்டி நெருங்கிப் பழகுன?"

விக்கி விக்கி அழுதாள் கீதா.

"நீயும் என்னை தப்பா புரிஞ்சுக்கிட்டியா மாலு? கயலோட அன்பும் சேகரோட அன்பும் என் மனசுக்கு ரொம்ப இதமா இருந்தது! அதை அனுபவிக்கலாம்னு நான் ஆசைப்பட்டேன். அவ்வளவு தான். அதுக்கு உரிமை கொண்டாட நான் நினைக்கலியே? திடீர்னு அவரு இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுவாருன்னு நான் நினைக்கல்ல" என்றாள் அழுதபடி.

தானும் தரையில் இறங்கி கீதாவின் அருகில் அமர்ந்தாள். அவளது முகத்தை நிமிர்த்திக் கண்களை ஊடுருவினாள்.

"நீ பொய் சொல்ற கீதா! அக்கா அக்கான்னு கூப்பிட்டுக்கிட்டு இருந்த கயல் உன்னை அண்ணின்னு கூப்பிட்டப்ப நீ ஏன் அதை தடுக்கல்ல? உங்கிட்ட சேகர் சார் எவ்வளவு அன்பா இருந்தாரு. அப்ப கூட உன்னால ஊகிக்க முடியல்லன்னு சொன்னா நீ பொண்ணே இல்ல! போற வரைக்கும் போகட்டுமே பார்த்துக்கலாம்னு நீ விட்டுட்டே! ஆனா நீ விளையாடினது ரெண்டு பேரோட வாழ்க்கையில கீதா! அதை உணருறியா நீ?" என்றாள் மாலினி குற்றம் சொல்லும் குரலில்.

"என்னையே குத்தம் சொல்லு! நான் மட்டும் அவங்க கிட்ட காசு பணமா எதிர்பார்த்தேன்? அவங்க அன்பைத்தானே?"

"அன்புல பல வகை இருக்கு கீதா! உன் மனசாட்சியில கையை வெச்சு சொல்லு! சேகரை நீ உங்க அண்ணன் மாதிரி பார்த்தேன்னு சொல்ல முடியுமா உன்னால? அப்ப என்ன இருந்தது உன் மனசுல?"

முகத்தைப் புதைத்துக்கொண்டு அழுதாள் கீதா.

"என்னைக் கொல்லாதே மாலு! நான் எப்பவோ செஞ்ச தப்புக்கு இன்னி வரைக்கும் தண்டனை அனுபவிச்சுக்கிட்டு இருக்கேன். எனக்கும் மனசு இருக்கு. எனக்கும் வாழணும்குற ஆசை இருக்கு. ஆனா எதுவுமே நடக்காதுன்னு தெரியும். ஆனா ஆனா .."

"இந்தப்பாரு ஒரு ஆனாவும் இல்ல! இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல்லடி! சேகர் கிட்டப் போயி உன் கடந்த கால வாழ்க்கையைச் சொல்லு! அவரே இதுக்கு ஒரு வழி யோசிக்கட்டும். அவர் உன்னை ஏத்துக்கிட்டார்னா உனக்கும் நல்ல வாழ்க்கை அமையும் இல்ல?"

"உளறாதே மாலு! என்னால யாரையும் கல்யாணம் செஞ்சுக்க முடியாதுன்னு உனக்குத் தெரியும் இல்ல? அப்புறம் எதுக்கு அவர்ட்ட நான் சொல்லணும்?"

யோசித்தாள் மாலினி. இப்போது குழப்பத்தில் இருக்கிறாள் கீதா! அதனால் தெளிவாக சிந்திக்க முடியவில்லை. எப்படியாவது அவளை சமாதானம் செய்து சேகரிடம் பேச வைத்தால் இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என நினைத்தாள்.

"இதைப் பாரு கீதா! நீ சேகரைக் கல்யாணம் செஞ்சிக்கோ செஞ்சிக்காம இப்படியே இரு அது உன் தலையெழுத்து! ஆனா அவரு உன்னைப் பத்தி இப்ப தப்பா நெனச்சுக்கிட்டு இருக்காரு. அந்த எண்ணத்தை மாத்துறது நல்லது இல்லியா? அதனால நீ அவர்ட்ட உண்மையை சொல்லு! அவரு ஒருவேளை இங்கயே இருக்கலாம்னு தீர்மானிக்கலாம். அது நல்லது தானே?" என்றாள்.

கீதாவுக்கும் சொல்வது சரிதான் எனப்பட்டது. நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

"சரி நீ சொல்றா மாதிரியே செய்யுறேன். ஆனா நீயும் கூட இரு" என்றாள்.

தலையாட்டி விட்டு சேகருக்கு ஃபோன் செய்தாள். மறுமுனையில் சேகர் எடுத்தான்.

"சொல்லுங்க மேடம்! நீங்க லீவு போட்டுருக்கீங்க இல்ல? வீட்டுல யாருக்கும் உடம்பு சரியில்லையா?"

"இல்ல இல்ல! நான் இப்ப கீதா வீட்டுல இருக்கேன். அவளுக்கு உங்க கிட்ட ஏதோ பேசணுமாம்"

"இப்ப என்ன மாலினி மேடம்? உங்க ஃபிரெண்டுக்கு என்ன வேணுமாம்?" என்றான். அவனது குரலில் கசப்பும் வேதனையும் இருந்தன.

"நீங்க தவறா நினைக்கலைன்னா ஒரு மணி நேரம் பெர்மிஷன் போட்டுட்டு வீட்டுக்கு வரீங்களா? அவளே எல்லா விஷயத்தையும் சொல்லுவா"

"இன்னும் என்ன சொல்லுறதுக்கு இருக்கு மேடம்! நான் எதையும் கேக்கத் தயாரா இல்ல!"

"அப்படி சொல்லாதீங்க சார்! அவளோட பக்க நியாயத்தையும் கேளுங்க! நீங்க நினைக்குறா மாதிரி அவ கெட்ட பொண்ணு கிடையாது. சந்தர்ப்பம் சூழ்நிலை அப்படி அமைஞ்சுட்டுது. அவ கதையை முழுக்க கேட்டுட்டு எங்கிட்ட பேசுங்க" என்றாள்.

அரை மனதாக சம்மதித்தான் சேகர். மாலை மதியம் மூன்று மணியளவில் தன் வீட்டுக்கு வந்தான். கீதாவிடமிம் சேகர் வீட்டு சாவி இருந்ததால் அவர்கள் ஏற்கனவே அங்கே அமர்ந்திருந்தார்கள். சேகரைக் கண்டதும் தலையைக் குனிந்து கொண்டாள் கீதா. அவனும் கீதா இருந்த பக்கம் கூடத் திரும்பாமல் அமர்ந்தான்.

"சொல்லுங்க மாலினி மேடம்! இன்னும் என்ன சொல்லப்போறாங்க?" என்றான் கோபத்தோடு.

"நீங்க கோபபப்டுறதுல நியாயம் இருக்கு சேகர் சார்! ஆனா மாலினி எதையும் திட்டம் போட்டு செய்யல்ல! எல்லாமே தானா நடந்தது. சொல்லேன் கீதா!" என்றாள்.

எழுந்து நின்றாள் கீதா.

"சேகர் சார்! இது வரைக்கும் யாருக்குமே சொல்லாத என்னோட கடந்த காலக் கதையை நான் உங்க கிட்ட சொல்லப் போறேன். அதை வெச்சு நீங்க என்னைக் கிண்டல் செஞ்சாலும் சரி பாவம்னு பரிதாப்பட்டாலும் சரி அதைப் பத்தி நான் கவலைப்படப்போறது இல்ல! நீங்க என்னைப் பத்தி தவறா நெனச்சுக்கிட்டு இருக்கீங்கன்னு மாலு சொன்னா! அதான் சொல்றேன்"

"நானும் மத்தவங்களோட கடந்த கால வாழ்க்கையைப் பத்தி கேலி செய்யுற அளவு தரம் தாழ்ந்தவன் கிடையாது."

சொல்ல ஆரம்பித்தாள் கீதா.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top