• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

KK 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
எப்படி மைதிலியுடன் பேசுவது?
மனம் ஒரு மாயாவி. ஒன்று வேண்டும் என்று போராட்டமாய் போராடும், அது கிடைத்தால் அதை வைத்துத் திருப்தியடையாமல் அடுத்த ஆசைக்குத் தாவிவிடும். அதே நிலை முகிலுக்கும் இப்போது.
மைதிலியுடன் அடிக்கடி பேச என்ன செய்யலாம் என்று மனம் சிந்திக்கத் தொடங்கியது. இதற்கெல்லாம் ஐடியா தருவதற்கு கார்த்தி தான் சரியான ஆள், ஆனால் இப்போது அவனிடம் பேசும் நிலை இல்லை.
தன் விஷயத்தை அன்று மாலை ஜெய்யிடம் சொல்ல மகிழ்ந்து போனான் அவன்.
“என்னண்னே இப்படி சொல்லாம கொள்ளாம நிச்சயதார்த்தத்தை முடிச்சிட்டீங்க?” என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டவனிடம்,
“எனக்கே அங்கே போன பிறகு தான் தெரியும் ஜெய். ஆனா என் மாமனார் கடைசியில், மைதிலி கூட கல்யாணம் வரைக்கும் ஃபோனில் பேச கூடாதுன்னு சொல்லிட்டாரு...” என்றான் வருத்தமாய்.
“அவர் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டதே பெரிசு. இடத்தை கொடுத்தா மடத்தை கேப்பீங்களே. நம்ம சந்தோஷத்துக்கு தேவையான சாவியை யார்கிட்டையும் கொடுத்து வைக்காதேன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்கண்ணே...”
“அட போடா, உனக்கு என் கஷ்டம் புரியாது...”
‘எனக்கா? நான் படுற கஷ்டம் எனக்கு மட்டும் தான் தெரியும்..' என்று அவன் எண்ணிக்கொண்டது முகிலுக்கு கேட்க வாய்ப்பில்லை. அதன் பின் திருமண பேச்சு வந்தது.
“ஜப்பான் விசா சீக்கிரம் கிடைச்சிடுமா, மைதிலி அக்காவுக்கு?” ஜெய் தன் சந்தேகத்தை ஆரம்பித்தான்.
“ம்ம், ஒரு வாரத்தில் கிடைச்சிடும்...”
“அந்த விஷயத்தை மறைச்சிடுங்க..”
“எதுக்கு? ஏன்?”
“அட, இப்ப தானே மைதிலி அக்காக்கிட்ட பேசணும்னு சொன்னீங்க. அதுக்கு தான்.”
முகிலுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. “என்ன ஜெய் சொல்றே?” என்றான் புரியாது.
“விசா கிடைக்க நாளாகும்னு சொல்லி, ரெஜிஸ்டர் கல்யாணம் பண்ணிடுங்க. அஃபிசியலா பொண்டாட்டின்னு ஆயிடும்ல, அதுக்கப்புறம் எவர் தடுப்பது உங்களை...”
அவன் யோசனை நல்லதாகவே பட்டது. ஆனால் நடக்கும் சாத்தியக் கூறுகள் இருக்கிறதா தெரியாதே...
“எப்படி இதெல்லாம் சரியா யோசிக்கிறே?” என்று அப்போதும் ஆச்சர்யமாய் கேட்க,
“இப்ப அதுவா முக்கியம், காரியத்தை பாருங்கண்ணே. யாராவது ரொம்ப கேள்வி கேட்டா, ஜப்பான் விசாவுக்கு ரொம்ப டைம் எடுக்கும்னு சொல்லிடுங்க. இப்ப எல்லாம் நிறைய தடவை சொன்னா மட்டும் தான் உண்மைன்னு ஒத்துக்குறாங்க.” என்றான் அசால்ட்டாய்.
“நல்ல ஐடியாவா இருக்கு, முயற்சி பண்றேன். என் ஹெட்மாஸ்டர் மாமனார்க்கிட்ட இதெல்லாம் செல்லுபடியாகுமான்னு தெரியலை.”
“இப்படி செஞ்சா, மாமனார் ஃபோனில் பேச விடுவார்னு தான் நினைக்கிறேன். அப்படியே அதை சாக்கா வச்சி மைதிலி அக்காவையும் நீங்க அடிக்கடி பார்க்கலாம்...”
“ஆமாம் ஜெய்...” உற்சாகமாய் துள்ளியவன், ஜெய்யை கட்டிக் கொண்டான்.
“அடச்சே ஒரு ஆம்பளையை போய், என்ன வேலை செய்றீங்க? இதுக்கு மேல நிக்கிறது எனக்குப் பாதுகாப்பில்லை” என்றபடி ஓடியவனை இவன் துரத்திக் கொண்டு கீழே ஓட, வீட்டு வாசலில் அவன் ஓட்டம் நின்றது. வளர்மதி, அவன் அக்கா வந்தாள் அவர்கள் வீட்டினுள்.
வளர்மதிக்கு, சாரதா நடந்த விஷயங்களைப் ஃபோனில் சொல்லிவிட்டார். அப்போதே தாயிடம் குதித்தவள் இப்போது தம்பியை நேரில் பார்க்கவும், அதே வெறித்தப் பார்வை பார்த்து வைத்தாள். முகிலுக்குத் தெரியும், வளர்மதி வந்தது நல்ல மனநிலையில் இல்லை என்பது.
“வாக்கா...” என்றவன் அவள் பையை வாங்கிய படி உள்ளே அழைத்துச் சென்றான்.
“அக்கா ஞாபகம் உனக்கு இருக்கு, அம்மா அப்பா தான் மறந்துட்டாங்க போலிருக்கு. சொந்த தம்பியோட நிச்சயத்துக்குக் கூட என்னை அழைக்கலை...”
உள்ளே அவள் பெற்றவர்களைப் பார்த்தபடி அவள் சொல்ல, சாரதாவிற்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. மங்கம்மா ராணி வந்துட்டா, என்னவெல்லாம் பேச்சு பேசுவாளோ.?
அவள் நினைத்ததற்குச் சற்றும் மாறாமல், முகிலின் செயலையும் அதன் விளைவாய் பெற்றவர்கள் தன்னை நிராகரித்து நிச்சயத்தை நடத்தியதையும் சொல்லி ஆட்டமாய் ஆடினாள்.
முகில் தன் அறையில் ஒதுங்கிக் கொண்டாலும், ஹாலில் வளர்மதி பேசியது எல்லாம் நன்றாகவே கேட்டது. அவளும் இவன் கேட்க வேண்டும் என்றுதானே, பொரிந்து கொண்டிருந்தாள்.
வளர்மதி அவள் நாத்தனாரை இவன் தலையில் கட்டிவிட எண்ணியிருந்தது இப்போது நடக்காமல் போனதாம். அதில் அவளுக்கு ஏக வருத்தமாம்.
“அவளை இந்த வீட்டுக்கு மருமகளா கொண்டு வரணும்னு எவ்வளோ நினைச்சிருந்தேன், என் கனவெல்லாம் வீணா போச்சு...”
அவள் என்ன நல்ல நினைப்பிலா அப்படிச் செய்ய நினைக்கிறாள். தன் மாமியார் தன்னைப் படுத்துவதற்குப் பழிவாங்கும் விதமாய் அந்தப் பெண்ணை இவளும் செய்யலாம், தன் அன்னையுடன் கூட்டு சேர்ந்து என்ற நல்லெண்ணம்.
பெண்ணுக்கு பெண்ணே எதிரி, எத்தனை உண்மை. இவளை ஒரு வீட்டில் கொடுமைப்படுத்துவதே அவர்கள் செய்யும் பாவம் என்று முகில் எண்ணிக் கொண்டிருக்க அதே போல் ஒரு பாவத்தை அவனை வைத்துச் செய்துவிட எண்ணியிருந்தாளே வளர்மதி.
எத்தனை கீழ்தரமான எண்ணம்? சுயநலமும் கூட. எவன் வாழ்க்கை எப்படியானாலும் பரவாயில்லை, தனக்குப் பழிவாங்கிவிட வேண்டும். ஆனால் வளர்மதி கொடுக்கும் எக்ஸ்ட்ரா பில்டப் எல்லாம் முகிலிடமும், பத்மநாதனிடமும் எப்போதும் போல் இப்போதும் செல்லு படியாகவில்லை.
அவர்களுக்குத் தெரிந்தது, இவள் முரணாய் பேசுகிறாள் என்று. முகில் சற்று நேரம் அமைதியாய் இருந்து பார்த்தான், ஆனால் இப்போது வளர்மதியின் பேச்சு ஜாஸ்தியாகவும் அவள் அருகில் வந்தவன்,
“அக்கா நீயா ஒரு விஷயத்தைக் கற்பனை பண்ணிக்கிட்டு அது நடக்கலைன்னு வந்து புலம்பாதே. அப்படி வருத்தப்பட்டு என் கல்யாணத்துக்கும் நீ வரவும் தேவையில்லை... மாமா மட்டும் வந்து என்னை ஆசீர்வாதம் பண்ணா போதும்.” என்றான்..
“என்னடா தம்பி, இப்...” அவள் பதில் பேச ஆரம்பிக்கையில்,
“எத்தனை பிரச்சனைக்கு பிறகு இந்தக் கல்யாணம் முடிவாகியிருக்குன்னு உனக்குத் தெரியுமா? சும்மா வாய்க்கு வந்த மாதிரி எல்லாம் பேச கூடாது...” என்றான் எரிச்சலாய்.
 




anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
சாரதாவுக்கு வழக்கம் போல் தன் மகள் புத்திகெட்டு, இப்படி அவமானப்படுவது தாளவில்லை.
“முகில் விடுப்பா தெரியாம பேசிட்டா, வீட்டுக்கு வந்தவளை எப்படி அழ வைக்கிற பார்...” என்ற அன்னையை முறைத்தவன்,
“அவளை இந்த அளவுக்குப் பேச வைச்சதே நீங்க தான். எந்த இடத்தில் எப்படி பேசணும்னு ஏதாவது தெரியுதா? யாரும் அவளை எதுவும் சொல்லிடக்கூடாது அப்படிதானே?”
சுள்ளென்று அவன் கேட்டதும், சாரதாவின் முகம் வாடிவிட்டது. இந்தப் பையன் தன்னிடம் இன்னமும் ஒதுங்கியிருக்கிறானே என்று வருந்திக்கொண்டிருந்த அந்தத் தாய் மனம் இப்போது மேலும் அழுதது. அந்தக் கனத்தச் சூழலை பத்மநாதன் வந்து சமாளிக்க முயன்றார்.
“வளர்மதி, என்ன பேச்சு இது? நம்ம வீட்டில் ஒரு நல்ல காரியம் நடந்திருக்கு, இப்படி தான் வந்து கண்ணைக் கசக்கிறதா? அவன் வாழ்க்கை பத்தி அவன் மட்டும் தான் யோசிக்கணும், நாம பேசக்கூடாது. போ போய் சாப்பிடு, அம்மா உனக்கு பிடிச்சதை சமைச்சு வச்சிருக்கா பார்...” என்றவர்,
அவன் புறம் திரும்பி, “முகில், அவ தான் விவரம் புரியாம பேசுறா, நீ எத்தனைப் பேரை வெளியிடத்தில சமாளிக்கிற? உன்கூட பிறந்தவ, அவளையும் மனசு நோகாம சமாளிக்கப் பார்... எங்களுக்கு அப்புறம் அவ ஒருத்தி தான் உனக்கு.” என்று பேசவும், அப்போதைக்கு அந்த இடத்தை விட்டு அகன்றனர் அனைவரும்.
தந்தையிடம் தன் விசா கதையைச் சொல்லி நம்பவைத்தான். அதன் பின் மாமனாரையும். தந்தை அளவிற்கு எளிதாக அவர் நம்பிவிடவில்லை என்றாலும், கடைசியில் ஒத்துக் கொண்டார்.
எல்லாரையும் சரிக்கட்டி ஒரு வழியாய் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்ய ஏற்பாடானது. நிச்சய தேதியை வைத்து, பத்திரிக்கை எல்லாம் அடித்துப் பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்ததில், நிஜத் திருமணம் போல் தோன்றியது முகிலுக்கு.
தான் நினைத்தபடி இம்முறை ஊருக்கு வந்தான், திருமணத்தை முடித்துவிட்டான்.
‘நீ என்ன வேணா பண்ணு நான் இப்படித் தானிருப்பேன்’ என்று அப்போதும் பிடியை விட்டுத்தராமல் இருந்தார் அவன் மாமனார் மிஸ்டர். விடாக்கண்டன்.
ஊருக்குத் திரும்ப இன்னும் இரண்டு நாட்களே இருந்தன. இந்த நிலையில் எப்படியாவது அவளிடம் நித்தமும் பேச ஒரு செல்போனை வாங்கிக் கொடுத்துவிட்டுப் போகலாம் என்றால், அவன் மாமனார் போனை எடுப்பதாகவே இல்லை. ஃபோன் செய்து விட்டு மட்டுமே வீட்டுக்கு வர வேண்டும் என்று மிரட்டல் கட்டளையிட்டிருந்தார்.
அதை மீறும் தைரியம் அவனுக்கில்லை. அவன் எண்ணியதில் நடக்காதது ஏராளம் அதில் இந்த செல்போன் கதையும் சேர்த்துக் கொண்டான். ஊர் கிளம்பும் நாளில், ஜெய் மட்டும் சென்னைக்கு ரயிலேற்றி விட டாக்ஸியில் உடன் வர, முகிலின் புலம்பலுக்கு ஆள் கிடைத்தது.
“ஜெய் என்னவெல்லாம் பிளான் போட்டோம்? கடைசியில் என் மாமனார் அவர் சொன்னதையே சாதிச்சிட்டாரு. ஒரு ஃபோனை கூட மைதிலிக்கிட்ட கொடுக்க முடியலை...”
“ஏண்ணே, பழைய ஃபோன் என்ன ஆச்சு...?”
“அதான் பேச கூடாதுன்னு சொல்லிட்டாரு இல்ல, அதை வாங்கி வச்சிட்டாராம்.”
“என்ன ஒரு அநியாயம்ணே...” என்று சற்று யோசித்தவன், “என்கிட்ட கொடுங்க, நான் மைதிலி அக்காக்கிட்ட கொடுத்திடுறேன்...” என்றான்.
“நீ எப்படி அங்க போவே, மாப்பிள்ளை என்னையே உள்ள விட மாட்றாரு...”
“அதுக்கெல்லாம் ஆள் இருக்கண்ணே. குடுப்பீங்களா, சும்மா கேள்வி கேட்டுகிட்டு...”
ஜப்பான் போன பிறகு, மைதிலிக்கு ஃபோன் செய்து பார்த்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எப்போது செய்தாலும் அணைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் தந்தது. ஏமாற்றமாயிருந்தது. அவள் நினைவுகளுடன் நித்திரையில் ஆழ்ந்து விட்டான்.
கனவில் அவள், திருமணம் முடிந்து அவன் பக்கத்தில். இனிமையான தருணங்கள் பல கடந்து போயின. திடீரென்று ஒருநாள் தன் பக்கம் சிரித்துக் கொண்டிருந்தவள் காற்றோடு கரைந்து காணாமல் போனாள். அவன் எத்தனைத் தேடியும் கிடைக்கவில்லை.
மைதிலி என்று கத்தினான். பதிலில்லை. கண்களில் கண்ணீர் வழிய வழி தெரியாத இடத்தில் அங்கும் இங்குமாய் அவளைத் தேடிக் கொண்டிருந்தான். அவன் வாழும் உலகில் அவள் இல்லை.
தொலைந்து போன தன் மனைவியை எண்ணியபடி, “மைதிலி என்னை விட்டுவிட்டு எங்கே போயிட்டே, மைதிலி...” என்றவனை யாரோ உலுக்குவதை உணர்ந்தவன் கண் முழித்துப் பார்க்க, அது விமானப் பணிப்பெண்.
அவன் பக்கம் குனிந்திருந்தவள் பீதியாய் “ஆர் யூ ஆல்ரைட் சார்?” என்றாள்.
கார்த்தியும் ஒருபக்க கையைப் பிடித்தபடி, “முகில் என்னாச்சு, ஆர் யூ ஓகே..?” என்றான். நிகழ்காலத்துக்கு வந்திருந்தான் முகில்.
ஆம், மைதிலியின் அத்தியாயம் அவன் வாழ்க்கையில் முடிந்துவிட்டது. இப்போது உயிருடன் இருப்பது அவள் இல்லை, அவளின் நினைவுகள் மட்டுமே.
அவர்கள் இருவருக்கும் பொதுவாக, “யா ஐயம் ஓகே. சாரி ஃபார் திஸ்..” என்றபடி பிளைட்டின் ரெஸ்டரூமில் சென்றுக் கதவடைத்துக் கொண்டான்.
அவனை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தவளை அவன் நினைத்தாலும் இப்போது மறக்க முடியாமல் போனது.
சென்னையில் இறங்கி தஞ்சை கிளம்பினான். உடன் வருவதாகச் சொன்ன கார்த்தியிடம், நிரல்யாவை சாக்கிட்டு வரவேண்டாம் என்று தடுத்துவிட்டான். ஊர் வந்து சேர்ந்த அடுத்த நாளில் தன் பெற்றோருடன் திதி கொடுக்கவென்று அவன் இப்போது வந்திருந்தது திருவையாறு ஆற்றங்கரை.
அதிசயமாக ஆற்றில் நீர் வரத்து அதிகமாய் இருந்தது. மணல் மேடுகளில் லாரிகள் ஓடிக்கொண்டிருந்த காட்சி கடவுளுக்கே பொறுக்கவில்லை போலும். மழையை அதிகம் தந்து ஆசிர்வதித்திருந்தார்.
ஆனால் முகில் இதையெல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் இருக்கவில்லை. ஐயர் சொன்னதையெல்லாம் செய்தபடியிருந்தவனின் முகத்தில் டண் டண்னாக வருத்தம். பெற்றவர்கள் இருவருமே அவனுடன் வந்திருக்க சாரதா சற்று தள்ளி அமர்ந்து மகனின் இந்நிலைக்கு வருந்திக் கொண்டிருந்தார்.
“கையில் இருக்கிறதை எடுத்துண்டு போய் ஜலத்தில் கரச்சிட்டு வாங்கோ...”
அவன் இருந்த மனநிலையில் சுற்றத்தை எதுவும் பார்க்கவில்லை. அவன் எல்லாம் முடித்து மேலே வரவும், சாரதா அவன் பக்கம் ஓடிவந்து,
“ஐயோ முகில், அந்த பொண்ணு தண்ணிக்குள்ள...” மூச்சுவாங்கப் பாதி பாதி வார்த்தைளில், “விழுந்துட்டாப்பா... போய் பிடி... போ...” என்று தள்ளாடியபடி சொல்ல இவன் திரும்புவதற்குள், அந்தப் பெண் சில அடிகளாவது மூழ்கியிருப்பாள் நீருக்குள்.
சுயநினைவின்றித் தண்ணீரில் மூழ்கியிருந்தவளை, பற்றித் தூக்கினான். நெற்றியில் பாறை மோதி இரத்தம் வந்தது. சாரதாவின் உதவியுடன் அவளைப் படித்துறையில் கிடத்தியவன், முதலுதவியை ஆரம்பித்தான்.
சாரதா அந்தப் பெண்ணின் காயத்தில் முகிலின் துண்டை கிழித்துக் கட்டினார். அந்தத் துணியை தாண்டியும் இரத்தம் கசிந்தது. கன்னத்தைத் தட்டி அவளை நினைவுக்குக் கொண்டு வர முயன்று கொண்டிருந்தார்.
முகில் தன் அன்னையின் செயலைப் பார்த்து கொண்டிருக்க, அவரின் பதட்டம் அவனையும் தொற்றிக் கொண்டது.
“அம்மா, ஹாஸ்பிட்டல் கூப்பிட்டு போகலாம்.”
“பொண்ணு யாரு என்னன்னு தெரியலையே”
இருவர் பேசும் சமயம் அவள் கண் முழித்தாள். தன்னைப் பாவமாய் பார்த்துக் கொண்டிருந்தவனை கண்டு அவசர கதியில் எழ முயன்று, மயக்கத்தில் தடுமாறினாள். கீழே விழுந்துவிடாதவாறு அவளைப் பிடித்து நிறுத்தியவன், வெற்று மார்புடன் அவள் எதிரில் நிற்காமல் விலகிச் சென்றுவிட்டான்.
சாரதா, அவளை மறுபடியும் வசதியாக அமர வைத்துக் குடிக்க கொஞ்சம் நீரைக் கொடுத்தபின், “யார்ம்மா நீ? உன் பேர் என்ன?” என்று வினவினார்.
சாரதா அவள் கண்ணுக்குச் சாந்த சொரூபிணியாய் தோன்ற, அந்தப் பெண்ணும் தயங்காது, “கண்மணி...” என்றாள்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
அனி டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அனிசிவா டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top