• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kk 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
அத்தியாயம் 19


“எத்தனை தைரியம் உனக்கு? அவரையே நக்கல் பண்றியா?”
இப்போதைக்கு என்னால் செய்ய முடிந்தது அது ஒன்று தான். நினைத்ததை வெளியில் சொல்லிவிட்டால் திவ்யா பிடித்துக் கொள்வாளே.
“எனக்கு வர வர ரொம்ப போர் அடிக்குது திவ்யா, ஏதாவது வேலைக்கு போகலாமான்னு பார்க்குறேன்...” என்றாள்.
“பார்ட் டைம் தமிழ் டீச்சருக்கு ஆள் கேட்டுட்டு இருந்தாங்க, உனக்கு சொல்லி வைக்கவா? உனக்குத் தான் ஏற்கனவே ஊர்ல வேலை பார்த்த அனுபவம் வேற இருக்கே...”
“ம்ம்... நான் தமிழ் குட்டியை எங்க விடுவேன்?”
இத்தனை சின்னப் பிள்ளையை எங்க விட்டுச் செல்ல முடியும்? இங்கு வந்திருப்பதே அவளைப் பார்த்துக் கொள்ளத் தானே.
“வாரத்தில் இரண்டு மூணு நாள் தான் கிளாஸ் இருக்கும். நீ தமிழ் எடுக்கப் போ நான் வேணா உன் தமிழை பார்த்துக்கிறேன்...”
தான் சொன்னதுக்கு அவளே முந்திக் கொண்டு நகைக்க,
“அடடடா எங்கயோ போயிட்டே போ. கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பது போல, என்னோட சேர்ந்து கொஞ்சம் தேறிட்டே. சரி நான் மூங்கில் ச்சே முகில்கிட்ட கேட்டுட்டு சொல்றேன்...” என்றாள் சிரிப்பினூடே.
“ஹா ஹா... இப்படியே பேசிட்டு இரு கண்மணி, ஒரு நாள் அவர் கிட்டையே மூங்கில்னு சொல்லி வசமா மாட்டிக்கப் போறே...”
“ஏய் எனக்கென்ன பயமா? நான் அவரை நம்பி இல்லை. அவரும் அவர் பொண்ணும் தான் என்னை நம்பி இருக்காங்க, தெரிஞ்சிக்கோ...”
“இந்த வாய் பேச்சுக்கு மட்டும் குறைச்சலே இல்லை... இந்த ஜப்பான்ல அவர் இல்லாம நீ மட்டும் என்ன பண்ணுவியாம்?”
“சரிங்க மேடம்...”
சரண்டர் ஆவதைத் தவிர வேறு வழியில்லை.

முகில் கண்மணி இருவருக்குமான உறவு சின்னச் சின்னச் சண்டையோடும், கண்மணியின் அன்போடும் போய்க் கொண்டிருந்தது. அதற்கான முக்கியக் காரணம் அவர்கள் புதல்வி, தமிழினி.
அவன் கோப முகத்தைக் காட்டினாலும் அதைப் பெரியதாய் எடுத்துக்கொள்ள கண்மணி முயலவில்லை. ஏனோ அவளுக்கு முகிலிடம் கோபமும் வரவில்லை.

திவ்யா சொல்லிக் கொண்டிருந்ததைப் போல் கண்மணிக்கு அந்தப் பள்ளியில் கூடிய விரைவில் வேலை கிடைத்தது. வாரம் சில நாட்கள் மட்டுமே செல்ல வேண்டி இருந்தது. முகில் ஒத்துக் கொள்வானா? நேரடியாக கேட்டுவிட முடிவெடுத்தாள்.
“முகில், எனக்கு ஒரு வேலை கிடைச்சிருக்கு. நான் போகட்டுமா? நான் இல்லாத சமயம் தமிழினியை திவ்யா பார்த்துக்குறேன்னு சொல்றா...”
அவளை அவன் கேள்வியாகப் பார்த்த விதம், மறுக்கப் போகிறானோ என்று அவளுக்குத் தோன்ற, அவனோ வேறு சொன்னான்.
“நீயே வேலை தேடிக்கிட்டியா? நல்லது தான். கட்டாயம் போ. தமிழினியை வேணும்ன பிளே ஸ்கூலில் கூடப் போடலாம். இங்க ஒரு வயசில் இருந்து அதுக்கான வழியும் இருக்கு...”
அவளுக்கு அவனின் இந்தப் பதில் ஆச்சரியமாக இருந்தது. அவனுக்கு ஏன் இத்தனை சந்தோஷம்? அவள் வேறு மாதிரி எதிர்பார்த்திருக்க, நடந்து கொண்டிருப்பதுவோ வேறு.
“நீங்க நிஜமா தான் சொல்றீங்களா?”
“ஆமா கண்மணி. நீ வேலைக்குப் போ. அதுதான் உனக்கு என்னைக்குமே நல்லது. யாரையும் எதிர்பார்த்து நீ எப்போதுமே இருக்கத் தேவை இல்லை...”
'டேய் குழப்பாம தெளிவா சொல்லுடா’
அவள் அவனைக் கேள்வியாகப் பார்க்க, அவன் மேலும் விளக்கம் தந்தான்.
“தமிழுக்கு இன்னும் கொஞ்சம் வயசானதும், நாம இப்படிச் சேர்ந்து இருக்கத் தேவையில்லை. நானும் என் பொண்ணு மட்டுமே சமாளிச்சிப்போம். நீ சீக்கிரம் வேலை கிடைச்சு செட்டில் ஆகிட்டா, உன் வருங்கால வாழ்க்கைக்கு நல்லது தானே?”
அவன் சொன்னதைக் கேட்ட பிறகு அவள் நெஞ்சுக்கூட்டுக்குள் எதுவோ உடைந்தது போலிருந்தது. இவன் இன்னும் தன்னை விரட்டிவிடும் எண்ணத்தில் தான் இருக்கிறானா?
‘அவனால் தனியே இருக்க முடியும். என்னால் இனி முடியுமா?’
“முகில் தனியா போறதை பத்தி அப்புறம் பேசலாம். இப்ப நான் இந்த வேலைக்குப் போறது உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை தானே...?” என்றாள் பட்டென்று.
“அதைத் தான் நானும் சொல்றேன், நீ தாராளமா போ... அப்போதான்...” என்ற, அவன் விளக்கத்தைக் கேட்க இஷ்டமில்லாமல்,
“நான் தூங்க போறேன்...” என்று அந்த இடத்தைக் காலி செய்தாள்.
அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. ‘இவனுக்கு மனசாட்சியே இல்லையா? தனக்கு இருக்கும் எண்ணம், அவனுக்கு எப்படித் தோன்றாமல் போனது? நான் அளவுக்கு அதிகமாய் எதிர்பார்க்கிறேனோ?’ என்று ஆயிரம் கேள்விகள் அவளுள்.
அந்த இரவு அவளுக்குத் தூங்கா இரவாகிப் போனது. இது எல்லாமே ஆரம்பம் மட்டும் தான். தான் இன்னும் நிறையச் செய்ய வேண்டி இருக்கிறது என்பது போல் அதன் பின் அவனின் ஆட்டம் அதிகமாகி விட்டது.
அவளுக்கு வாழ்க்கை அமைத்துத் தருவதாக எண்ணிக் கொண்டு முகில் கண்டதும் செய்ய ஆரம்பித்தான். அவளுக்கு மறு திருமணத்திற்கென்று மாப்பிள்ளை பார்ப்பது உட்பட. வேலை அவளுக்குப் பிடிக்கிறதா என்று சில மாதங்கள் காத்திருந்தவன்,
அதன்பின் ஒரு நாள், “என் ஆபிஸ் சகா ஒருத்தன் நம்மல வீட்டுக்குக் கூப்பிட்டிருக்கான். நானும் வரோம்னு சொல்லிட்டேன்...” என்றதுமே, கண்மணியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
இத்தனை நாளில் அவனுடன் எங்கும் அதிகம் சென்றதில்லை. அவள் போவது எல்லாம் திவ்யாவுடன் மட்டுமே. இன்று அவன் சொல்லவும், ஒரே உற்சாகமாகி போனாள். விரைவாக எல்லாம் முடித்து அவனுக்கு முன் இவளும் தமிழும் கிளம்பியாயிற்று.
புதிதாய் திவ்யாவுடன் சென்று வாங்கிய ஜீன்ஸ் டாப்ஸில், அதற்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத தன் ஐந்தேகால் அடி முடியை பின்னலிட்டு போட்டிருந்தாள். எளிமையாய் ஒரு ஒப்பனை. சிரித்த முகம். அவளைக் கண்ணாடியில் பார்க்க அவளுக்கு முழு திருப்தி.
கிளம்பி வந்தவன் அவளைப் பார்த்த பார்வையில் ஏதோ மாறுதல். நல்லாயிருக்கு என்பது போல் அவளை அவன் பார்த்து வைக்க, அவளுக்கு மனம் துள்ள ஆரம்பித்தது.
‘இப்ப தான் மூங்கில் உனக்கு கண் தெரியுது...’ அவள் மனம் வேறு சும்மா இல்லாமல் அடிக்கடி எதையாவது சொல்லிக் கொண்டிருந்தது.
“போலாமா? தமிழ் அப்பாக்கிட்ட வாடா குட்டி...” என்று பிள்ளையைத் தூக்கிக் கொண்டவன் முன்னே நடக்க, இவள் வீட்டைப் பூட்டிவிட்டு அவர்களைத் தொடர்ந்தாள்.
காரில் மிகவும் ஜாலியாக ஊரை வேடிக்கை பார்த்தபடி வந்தாள். அந்த நண்பனின் வீடு அமைந்திருந்த பகுதி, யோகோஹமா. டோக்கியோவில் அவர்கள் வீட்டிலிருந்து தோராயமாய் நாற்பது கிலோமீட்டர்கள் இருக்கும்.
அந்த வழியெங்கும் இயற்கையின் எழிலோவியங்கள். நேரம் போனதே தெரியவில்லை கண்மணிக்கு. முகிலின் ஆபிஸ் நண்பன் தனி ஆள் போல.
கண்மணிக்கு அதுவே அங்குச் சென்ற பிறகு தான் தெரியும். நன்றாக அவர்களை உபசரித்தான். அதில் கண்மணியை அளவுக்கு அதிகமாக.
அவன் பார்வை முதலில் அவளுக்கு வித்தியாசமாகத் தெரியவில்லை. ஆனால் போகப் போக அது சரியில்லை என்று பட்டது. ஏதோ தனக்கு உரிமை இருக்கிறது என்பது போல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அதை உணர்ந்த பிறகு அவளுக்கு அத்தனை நேரமும் இருந்த உற்சாகம் எல்லாம் வடிந்து போனது. முகில் வேறு சந்தர்ப்பம் புரியாமல், ஃபோன் பேசுகிறேன் என்று அடிக்கடி ஒதுங்கிக் கொண்டான்.
அவன் இல்லாத சமயம், இவளுக்கு அவஸ்தையாகப் பட, எப்போதடா அவர்கள் வீட்டுக்குத் திரும்புவோம் என்றிருந்தது அவளுக்கு.
வீடு திரும்பும் வழியில் முகிலிடம், “ஏன் நாம் இன்னிக்கி அங்க போனோம்? அவர் மனைவி எங்க இருக்காங்க?” என்றாள்.
தன் மகள் உறங்கிவிட்டாளா என்று உறுதிப்படுத்திக் கொண்டவன், “நம்ம கல்யாணத்தால் உன் வாழ்க்கை வீணாகிடக் கூடாது... அதுக்காக...” என்றான் பார்வையை நேராய் பதித்து.
‘என்ன சொல்றான்?’ என்று புரியாது, “அதுக்காக...” என்றாள் கண்மணியும்.
“நமக்கு விவாகரத்து ஆனதும் உனக்குத் திருமணம் செய்ய...”
தணலை மேலே அள்ளிக் கொட்டியது போல் இருந்தது. அந்தத் துன்பத்தில் அவன் சொன்ன மீதி வாக்கியம் காதில் விழவே இல்லை. அவள் பதில் சொல்லவில்லை என்றதும்,
“ஒண்ணும் அவசரமில்லை... உனக்கும் அவரைப் பிடிச்சிருந்தா மட்டும் உன் சம்மதம் சொல்லு. இல்ல வேற யாரையும் பார்க்கலாம்...” என்றான் நிதானமாய்.
கண்மணிக்கு வந்த ஆத்திரம் அடங்க மாட்டேன் என்றது. வீடு வந்த பின்பும், தமிழினி தூக்கத்தில் இருந்து எழுந்த பாடில்லை. அவள் பக்கம் இருக்கும் சாக்கில் இவளும் அறைக்குள் முடங்கிக் கொண்டாள்.
‘மட சாம்பிராணி, மூங்கில் கட்டை. மாப்பிள்ளை பார்க்கிறானாம்... தடியன்...’ மனதில் அவனை வசைபாடியபடி இருக்க, எப்போதும் அவளை எதற்கும் தொந்தரவு செய்யாதவன், அன்று அடிவாங்குதற்கென்றே என்னென்னவோ செய்தான்.
“கண்மணி தூங்கிட்டியா?”
அவள் எழுவதைப் பார்த்து, “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்...” என்று மேலும் தொடர்ந்தான்.
‘நீ பேசின வரைக்கும் போதும்டா. என் வாயைத் தேவையில்லாம கிளறாதே...’ என்று கத்திவிட ஆசை தான். ஆனால் அதை அடக்கிக் கொண்டு அவனைப் பார்த்திருந்தாள்.
“கண்மணி அந்தப் பையன் ரொம்ப நல்ல மாதிரி, ஏதோ அவனுக்கும் அவன் மனைவிக்கும் ஒத்துவராம பிரிஞ்சிட்டாங்க... ஆனா...”
“முகில் இதைப் பத்தி பேசாதீங்க, எனக்கு இஷ்டமில்லை...”
“ஏன் கண்மணி? என்ன காரணம்?”
‘இந்த மாக்கானுக்கு நேரடியாக சொல்வதைத் தவிர வேறு வழியில்லை...’ என்றெண்ணி, “நான் ஒருத்தரை விரும்புறேன். அவரைத் தவிர யாரையும் என்னால் நினைச்சு கூடப் பார்க்க முடியாது...” என்றாள் உறுதியாய்.
அவள் இப்படிச் சொல்லவும், “வந்து, நீ விரும்புற ஆளுக்கும் உன் மேல் இஷ்டம் தானா?” என்றான் அவனும் விடாது.
“அதை நீங்க தான் சொல்லணும்.”
“...”
“நான் உங்களைத் தான் காதலிக்கிறேன் முகில்... எனக்கு நீங்களும் தமிழினியும் எப்பவும் என் வாழ்க்கைல வேணும்...”
‘நினைச்சேன்...’ என்றிருந்தது அவனுக்கு. ஆனாலும் மொத்த கோபத்தை வெளிக்காட்டி, “உளறாதே. அது எப்போதும் நடக்கவே நடக்காது...” என்று கத்தினான்.
“ஏன்?”
“ஏன்ன, எனக்கு என்னைக்குமே மைதிலி மட்டும்தான் மனைவி...” என்றவன், அவளைப் பார்க்காமல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டான்.
“எனக்கும் எப்பவுமே நீங்க மட்டும் தான் கணவர்... நீங்க கட்டின இந்தத் தாலியும், நான் வாழ்கிற இந்த வாழ்க்கையும் உண்மை...” அவள் உறுதியான குரலில் சொல்லிக் கொண்டிருக்க,
“கண்மணி... நடக்காததைப் பேசாதே...” என்று இவனும் பிடிவாதம் செய்தான்.
“நீங்களும் தான். நடக்காதக் கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கிறதை இன்னையோட நிறுத்துங்க.”
சொன்னவள் அறையினுள் சென்று கதவடைத்துக் கொண்டாள். முகிலுக்கு இந்த விஷயத்தை எப்படி இதற்கு மேல் அணுக என்று சத்தியமாகத் தெரியவில்லை.
 




shiyamala sothy

இணை அமைச்சர்
Joined
May 4, 2018
Messages
990
Reaction score
2,953
Age
51
Location
canada
முங்கிலுக்கு உலக்கையால் மண்டை மேல போடப்போறேன். போலீசாவது ஜெயிலாவது வர ஆத்திரத்துக்கு கெட்ட வார்த்தை தான் வருகுது. இப்பிடி பிபீ ஏத்துறான். சூப்பர் பதிவு.
1548858317743.png1548858383194.png1548858411672.png1548858489314.png
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top