• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kk 21

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
அத்தியாயம் 21

கண்மணி பற்றிச் சொல்ல ஆரம்பித்ததைத் திவ்யா தொடர கார்த்தி கேட்டுக் கொண்டிருந்தான்.

அந்தத் துயர நிகழ்வு முடிந்து ஒரு மாசத்துக்குள்ளேயே, அவ அக்கா மறுபடி இவ கல்யாண பேச்சை எடுக்க, கண்மணி அவங்க வீட்டுப் பத்திரத்தை எடுத்திட்டு வந்து அவ அக்கா மூஞ்சியில் வீசிட்டா.
‘இந்தச் சொத்துக்காகத் தானே என்னைப் பலி கொடுக்க நினைச்சே, அப்பாவோட இந்த வீட்டை நீயே வச்சிக்கோ. என் வாழ்கையில் இனி தலையிடாதே. என் முகத்திலையும் இனி முழிக்காதே’ன்னு சொல்லி அன்னைக்கே திருவையாறுல அவ பிரண்டு வீட்டுக்குப் போய் அவ மூலமா சென்னையில் வேலை தேடிக்கலாம்னு தன் வேலைக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக்கிட்டு கிளம்பியிருக்கா. அங்க தான் மயக்கமாகி ஆற்றில் விழுந்தவளை முகில் குடும்பம் காப்பாத்தியிருக்காங்க.
அவ அக்கா சொத்து கிடைச்சதேன்னு பேசாம இருக்காம, பாண்டியன்கிட்ட போட்டு கொடுத்திருக்கணும். இவளைச் சரியா அவன் பஸ் ஸ்டாப்ல மடக்கிட்டான். அதற்கப்புறம் தான், முகில் அவளைக் காப்பாத்த, அவளும் வேறு போக்கிடம் இல்லாம அவங்க வீட்ல போய்த் தங்க வேண்டிய நிர்பந்தம் வந்திருக்கு...” என்று நீளமாய் திவ்யா சொல்லி முடிக்க,
‘எத்தனைத் துயரம்? கூடப் பிறந்தவர்கள் பெற்றோருக்கு அடுத்தபடி என்பது போய் இப்போது அதில் சிலரே முதல் எதிரி என்றாகி விட்டது...’ என்ற, கார்த்தியின் எண்ணத்தைத் தடை செய்தன திவ்யா மேலும் பேசியவை.
“தன் குழந்தைக்காக முகிலும், தன் வாழ்க்கைக்காகக் கண்மணியும் கல்யாணம் செஞ்சாலும், அவ மனசு எப்போவோ முகில் பக்கம் போயிடுச்சு. ஆனா அவர் அவளை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை.
அவளுக்கோ அவரை விட்டுப் போக மனசில்லை. இப்ப இப்படி இன்னொரு சிக்கலில் மாட்டிக்கிட்டு முழிக்கிறா...” என்று திவ்யா சொல்லி முடிக்க, கார்த்தி சற்று நேரம் எதுவும் பேசவில்லை.
கண்மணியை நினைத்துக் கொஞ்சம் அவனுக்கும் கவலை வந்துவிட்டது.
“திவ்யா இவங்க விஷயத்தில் நாம எதுவும் செய்ய முடியுமா?” என்று கணவன் கேட்க, அவர்கள் இருவருக்குள்ளும் சில திட்டங்கள் தயாரானது.
இப்போதெல்லாம் முகிலுக்கு தன் இல்லத்துக்குப் போகவே பிடிக்கவில்லை. தனக்கு அவள் மனம் தெரியாதது போல் இருக்கும் போது கூடச் சமாளிக்க முடிந்தது. இப்போது காதலிக்கிறேன் என்று நேரடியாகச் சொல்லி விட்டாள். அவளுடன் தங்கியிருப்பதே மகா சிரமமாய்...
இன்று தெளிவாய் பேசி அவளைச் சரிக்கட்ட வேண்டும் என்ற முடிவில் வீடு சென்றான். என்றுமே கண்மணியைத் தொந்தரவு செய்யாமல் இவன் பாட்டுக்கு தன் சாவியை வைத்து வீட்டினுள் செல்வதும், காலையில் எல்லாருக்கும் முன் கிளம்பிவிடுவதுமாய் ஆட்டம் காட்டிக் கொண்டிருக்க, இன்று அவன் வைத்த இடத்தில் வீட்டுச் சாவி இல்லை.
வீட்டு வாசலுக்கு வந்து பாண்ட் பாக்கெட்டில் தேட ஒன்றும் அகப்பட வில்லை.
‘இங்க தானே வச்சேன்...’ என்று யோசித்தவனுக்கு, அதை நேற்றே கண்மணி அப்புறப்படுத்தியது அவனுக்குத் தெரியவில்லை.
வேறு வழியில்லாமல் வீட்டின் அழைப்பு மணி அடித்தான். சற்று நேரத்தில் அவள் வந்து கதவை திறக்க, அவளை நிமிர்ந்து பாராது உள்ளே வந்தான்.
இவன் தன் பைஜாமாவுக்கு மாறி வருவதற்குள், அவள் பள்ளி வேலை எதையோ செய்த படி, சோபாவில் நடுநாயகமாய் அமர்ந்திருந்தாள். அவளிடம் நிதானமாகப் பேசி தன் நிலையைப் புரிய வைக்க எண்ணியிருந்தவனுக்கு இதைப் பார்க்கவும் எரிச்சலானது. தூங்குவதற்கென்று அவனுக்காக இருந்த ஒரே இடம். அதையும் இப்போது ஆக்கிரமிப்பா?
“இந்த இடத்தை விட்டுப் போ, நான் தூங்கணும்.” என்றான் அவளிடம்.
“எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு, நீங்க தமிழினி ரூமில் போய்ப் படுங்க...” என்றாள் அவனைப் பாராதவாறு.
“இது என் வீடு, எனக்கு எங்கே படுக்கணும்னு தெரியும். நீ முதல்ல இடத்தைக் காலி பண்ணு...” என்று எரிந்து விழுந்தவனிடம் மேலும் வாதாடாமல்
‘அப்படியா, இந்தா வரேன்...’ என்று நினைத்தபடி அறையினுள் போனவள் தமிழினியின் இருந்த இடத்தில் லைட்டை போட்டுத் தன் பணியைச் செய்ய, சற்று நேரத்தில் அந்த வெளிச்சத்துக்குப் பிள்ளை எழுந்துகொண்டது.
“அப்பா வந்திருக்காரு பார் டி...” என்று அதன் காதில் இவள் ஓத, அது அவன் இருந்த இடம் தேடி ஓடி வந்து கட்டிக் கொண்டது.
“ஹேய் குட்டி, எந்திருச்சாச்சா?” தன் பிள்ளையைக் கொஞ்ச ஆரம்பித்தான் முகில்.
கண்மணிக்காக ஒதுங்க ஆரம்பித்தவன், பிள்ளையுடனும் அதிகம் நேரம் செலவழிக்க முடியவில்லை. அவளைப் பார்த்தே நீண்ட நாட்கள் ஆனது போலிருந்தது முகிலுக்கு.
நடு சாமம் வரை அவளைக் கொஞ்சியும், விளையாடியும் கொண்டிருந்தான். பின் அவள் தூக்கத்துக்கு அழுக, அவளைச் சோபாவில் வைத்துத் தட்டி விட்டுப் பார்த்தான்.
நம் இஷ்டத்துக்கு எந்தப் பிள்ளை கேட்கிறது இந்தக் காலத்தில்?
உள்ளே தன் அறையில் தான் படுக்க வேண்டும் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்து அவன் கைபற்றி உள்ளே இழுத்துக் கொண்டு போனது அந்தச் சின்னக் குட்டி.
இத்தனை சத்தங்கள் நடுவிலும் கண்மணி எட்டிக்கூட பார்க்கவில்லை. அனுபவி ராஜா என்று விட்டிருந்தாள். இப்போது பிள்ளையைத் தூங்க வைத்தால் போதும் என்று நினைத்த முகிலுக்கு வேறு வழியில்லை. தமிழை படுக்க வைக்க அவன் அவள் இருந்த இடம் வரக் கண்மணி மறுபடியும் வந்து அவனின் சோபாவை ஆக்கிரமித்துக் கொண்டாள்.
அதன் பின் அந்தச் சோபா ஒருநாளும் அவனுக்குக் கிடைக்காத வழி எல்லாமே அவள் செய்தாள்.
‘நிலவு பாட்டு நிலவுப் பட்டு
ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்...
நாளும் படித்தேன்...’
அடுத்த நாள் சமைத்தபடி பாடிக் கொண்டிருந்தவளின் முகத்தில் விழித்தான் முகில். ஒரு முக்கால் பேண்ட், மஞ்சள் நிற டாப்ஸிலும் கிளம்பியிருந்தாள். தமிழினியும் அதே போல் மஞ்சள் கலரில் ஒரு டிரஸ் போட்டிருந்தது.
இவன் வந்ததும் “அப்பாவுக்கு பை சொல்லு, ஸ்கூலுக்கு லேட் ஆயிடுச்சு பார்...” என்று அவள் சொல்ல பிள்ளையும் அதையே செய்துவிட்டு அவளுடன் கிளம்பியது.
மணியைப் பார்த்த முகிலோ அரண்டு போனான், ஒன்பதே முக்கால். இத்தனை நேரம் தூங்கிவிட்டேன், இதற்கு மேல் ஆபிஸ் போவது இயலாத காரியம் என்று, அன்று வீட்டிலிருந்து கொண்டான். சற்று நேரத்தில் கார்த்தி வந்தான் இவனைத் தேடி,
“டேய் வாடா, நீயும் இன்னிக்கி லீவா?” முகில் நண்பனிடம் கேட்க.
“காம்பென்சேஷன் லீவ். வீக்கெண்ட் ஆபிஸ் போனேன், அதுனால. நீ என்ன அதிசயமா வீட்டில் இருக்கே...?” என்றான் அவனும்.
“எல்லாம் தமிழ் செஞ்ச வேலை. நேத்து நைட் தூங்குறப்ப மணி இரண்டு. காலைல அவமட்டும் கரெக்டா கிளம்பிட்டா...”
“ஆமா எங்க வீட்டில் தான் இருக்கா. கண்மணி இப்ப தான் விட்டுவிட்டு வேலைக்கு போனாங்க...”
கண்மணி பேச்சு வந்ததும் முகில் அமைதியாகிவிட்டான். அவன் எண்ணம் புரிந்தவன் போல், கார்த்தியும்,
“ஜாகிங் போலாம்னு பார்த்தேன். உன்னைக் கூப்பிட தான் வந்தேன், வரியா?” என்று அழைக்க,
“ஓகே வரேன்..” என்றவன் சற்று நேரத்துக்கெல்லாம் கிளம்ப, இருவரும் எப்போதும் பதிவாய் போகும் நதிக்கரையோரம் ஓட ஆரம்பித்தனர்.
எதையும் பேசிக் கொள்ளாமல். செய்துகொண்டிருந்த பயிற்சியில் மட்டுமே முகில் மூழ்கியிருக்க, கார்த்தியோ எப்படி அவனிடம் ஆரம்பிப்பது என்ற யோசனையில் ஓடியபடி அவர்கள் இலக்கை அடைந்தான். ஆறு, கடலில் கலக்கும் இடம் அது.
'இயற்கையை ரசித்தபடி நீ என்ன வேண்டுமானாலும் செய்...’ என்பது போல் அந்நாட்டுச் சர்க்கார் சில வசதிகளைச் செய்து கொடுத்திருந்தது.
ரன்னிங் டிராக் போல் அமைத்துத் தந்த இடத்தில் ஆங்காங்கே அமர்வதற்கும் இருக்கைகள் இருந்தன. இவர்களைப் போல் சிலர் அங்கு ஓடியும் நடந்தும் சென்றுக்கொண்டிருந்தனர்.
காலியான இருக்கையில் சென்றமர்ந்த கார்த்தி, முகில் வந்து அவன் பக்கம் அமரவும், “புது வாழ்க்கை எப்படி போயிட்டிருக்கு முகில்?” என்று ஆரம்பித்தான்.
அவனா, அதே பழைய பார்வையைப் பார்த்து வைத்தான். கேட்கக் கூடாததைக் கேட்டது போல்.
“சொல்லு முகில்...” என்று விடாது கார்த்தி கேட்க,
“எனக்கு வாழ்க்கையே இல்லை. அதில் என்னடா புது வாழ்க்கை..?” சலித்துக் கொண்டவனைப் பார்த்து மானசீகமாய்த் தன் தலையில் அடித்துக் கொண்டான் கார்த்தி.
இத்தனை அட்டூழியம் ஒருவன் செய்தால், யாருக்குத் தான் தாங்க முடியும்?
“முகில், இந்த உலகத்திலேயே நீ ஒருத்தன் தான் பொண்டாட்டியை இழந்து தவிக்கிறியா?” என்றதும், இல்லை என்பது போல் தலையசைத்தான்.
“பின்ன என்னடா? ஏன் உனக்குன்னு இருக்கிறவங்களையும் கஷ்டப்படுத்துற?”
கார்த்தியை முறைக்க ஆரம்பித்தவன்,“மறுபடியும் ஆரம்பிக்காதே கார்த்தி, இப்படி எதை எதையோ சொல்லி என்னைக் குழப்பி ஊருக்கு அனுப்பி வைச்ச, இப்ப நான் எத்தனைப் பெரிய துன்பத்துக்க வந்து மாட்டிட்டிருக்கேன் தெரியுமா? அந்தப் பொண்ணு இப்ப நாங்க செய்துக்கிட்ட கல்யாணத்தை உண்மைன்னு நினைக்க ஆரம்பிச்சிட்டா...” என்று, அவனே எடுத்துக் கொடுக்க,
“ஆமா நினைக்கத் தானே செய்வாங்க. நீ தான் எல்லாம் தெரிந்த வல்லவனாச்சே, உனக்கு இப்படி ஆகும்னு தெரியாதா?” என்றான் நக்கலாய் கார்த்தி.
“கார்த்தி புரியாமல் பேசாதே. குழந்தைக்காக மட்டுமே இந்த திருமணம்னு சொன்னதே அவதான். இப்ப மாத்தி பேசுறா. அவளைச் சீக்கிரம் ஊருக்கு அனுப்பிடணும்...”
“பாவத்துக்கு மேல பாவம் சம்பாதிக்காதே முகில். அந்தப் பெண்ணை உன் இஷ்டத்துக்குக் கல்யாணம் பண்ணிட்டு, இப்ப போன்னு சொன்னா போயிடுவாளா?”
“அவ என்ன போறது, நானே...” என்று முகில் சொல்வதற்குள்,
“அநாதையா இருக்கிற பொண்ணை எங்கடா அனுப்புவ? ஏற்கனவே உன்னைக் கல்யாணம் செய்திட்டா. திரும்ப அவளுக்கு ஒரு வாழ்க்கை அமைய எத்தனைக் காலம் ஆகும்னு யோசிச்சையா?” என்றான் கார்த்திக்கும்.
“அநாதையா?!!!”
“ஆமா, அவளுக்கு யாரும் கிடையாதாம்.”
“உனக்கு எப்படித் தெரியும்? திவ்யா சொன்னாளா?”
“ம்ம். நேத்து தான் உன் அப்பாக் கிட்டயும் பேசினேன், அவரும் இப்பதான் உங்க இரண்டு பேரையும் நினைச்சு நிம்மதியா இருக்கார். அதைக் கெடுக்கவே உன் மனசுல இப்படில்லாம் தோணுது முகில்...”
அதன்பின் தனக்குக் கண்மணி பற்றித் தெரிந்த விஷயங்களை, முகிலிடம் சொன்னான். ஆர்வமில்லாமல் கேட்பது போல் முகில் கேட்டுக் கொண்டாலும், அவனுக்கும் மனதைச் சற்று அசைத்தது தான். இனி என்ன செய்வது என்பதும் அவனுக்குப் புரியவில்லை.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top