• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

kk 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
அத்தியாயம் 5

விழி பிதுங்கிப் போனாள் பாரதி. ‘ஐயய்யோ இந்த மைதிலி படுற அவஸ்தையைப் பார்த்து அவசரப்பட்டுடேனே. இப்ப என் நிலைமை அவஸ்தைப் படுற மாதிரி ஆயிடிச்சே. இவளுக்கு மட்டும் நான் உளறின விஷயம் தெரிஞ்சா என் நிலைமை என்ன ஆகும்?’

அத்தோடு அந்தப் பேச்சை விட்டாள் பாரதி. இப்போது மைதிலியும் கிளம்பிவிட்டாள். வீடு போய்ச் சேரும் வரையிலும் மைதிலிக்கு மனத்திரையில் முகிலிடம் பேசியதே ரிப்பீட் மோடில் ஓடிக்கொண்டிருந்தது.

அவனிடம் மறுபடியும் பேசிவிடவே கூடாது. தன் மனதுக்குப் பெரியதொரு திண்டுக்கல் பூட்டை போட்டுப் பூட்டி கட்டுப்படுத்தி வைத்தாலும், அது அவளாலே உடைந்தது விரைவில்.

அடுத்த நாள் கல்லூரி முடியும் சமயம்,

“மைதிலி எனக்கு அவசர வேலையிருக்கு. நீ மெதுவா வா, உனக்காக பஸ் ஸ்டாப்பில நிக்கிறேன்...” என்றபடி வேகமாக முன்னால் சென்றுவிட்டாள் பாரதி.

'நமக்குத் தெரியாம இவளுக்கு அப்படியென்ன வேலை?’ என்ற மைதிலிக்கு சந்தேகம்.

பேருந்து நிலையத்தின் பக்கம் உள்ள போனிலிருந்து முகிலுக்கு அழைத்த பாரதி, “அண்ணே, உங்க கையில்தான் என் வாழ்க்கையே இருக்கு...” என்றாள் மொட்டையாக.

“பாரதி என்ன சொல்றீங்க..?” சத்தியமாய் அவனுக்கு அவள் சொல்ல வந்தது புரியவில்லை.

“நான் உங்கக்கிட்ட ஃபோன் செஞ்ச விஷயத்தை மைதிலிக்கிட்ட சொல்லிடாதீங்க, நான் உங்கக்கிட்ட சொன்னதைப் பத்தி அவளுக்கு எதுவும் தெரியாது...”

‘அதான் அப்படி ஒரு பேச்சா?’ என்றெண்ணிக்கொண்டான் அவனும்.

“சரி சரி சொல்லமாட்டேன்...”

அவன் சொன்னப் பிறகு தான் பாரதிக்கு நிம்மதி. ஃபோனை வைத்துவிட்டு இவள் திரும்ப, மைதிலி இவள் தலையிலேயே ஒன்று போட்டாள்.

“ஏன்டி இத்தனை ஓட்டைவாயா நீ? மேல்மாடி சுத்தமா காலியா. இப்படியா அவன்கிட்ட உளறி வைப்பே..?” வாய் பேசினாலும், கை விடாமல் தோழியை மொத்திக் கொண்டிருந்தது.

“உன் நல்லதுக்கு தானே டி செஞ்சேன்? அடிக்காதே வலிக்கிது. அழுதுறுவேன்...” என்றவளை இவளும் விட்டுவிட்டு பஸ் ஸ்டாண்ட் பெஞ்சில் அமர்ந்தபடி,

“நான் அவன்கிட்ட எந்த முகத்தை வச்சிக்கிட்டு இனி பேசுவேன். என் மானத்தை மொத்தமா வாங்கிட்டே...” முகம் திருப்பிக் கொண்டாள். மைதிலி அப்படித்தான், அவளுக்குப் பிடிக்கவில்லை என்றால் ஒரு வழி செய்து விடுவாள், எவரையும்.

‘இன்னைக்கு இவக்கிட்ட நான் மாட்டினேனா?’ பாரதி நொந்துகொண்டாள்.

முகத்தை திருப்பிக்கொண்ட தோழியைச் சமாளித்து ஒரு வழியாக பஸ்ஸில் ஏற்றிவிட்டாள் பாரதி. இருவரும் ஒரே பேருந்து என்றாலும் இன்று அவள் பக்கம் இவள் செல்லவில்லை.

இன்னும் ஒரு வாரத்திற்கு கல்லூரியும் விடுமுறை, அதனால் கொஞ்சம் சமாதானம் ஆகலாம் என்றபடி விட்டுவிட்டாள், மைதிலியை பற்றி நன்கு அறிந்த பாரதியும். அவள் எண்ணியது போல் மைதிலிக்கும் நடந்தது. வீட்டில் முழுநேரமும் அவனைப் பற்றிய சிந்தனையில் மூழ்கியிருந்தவள், நீண்ட யோசனைக்குப் பிறகு அவனிடம் பேசிவிட எத்தனித்தாள்.

அதன்படி ஒரு நாள் காலை தந்தை வெளியேறும் வரை காத்திருந்தவள், “அம்மா நான் மாடியில போய் படிக்க போறேன், என்னை தொந்திரவு பண்ணாதீங்க...” என்று தாயிடம் உத்தரவிட்ட பிறகு, மாடி அறைக்குப் போய் உள் பக்கமாய் கதவைப் பூட்டிவிட்டு, அவன் எண்ணுக்கு அழைக்க, எடுத்தானில்லை.

‘இவனுக்கு வேற வேலையே இல்லை எடுக்குறானா பாரு. சரியான திமிர் பிடிச்சவன்...’ என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே,

‘சாரி ஐயம் இன் மீட்டிங்...’ என்ற குறுந்தகவல் வந்தது அவனிடமிருந்து.

‘இப்பதான் வேலையில சேர்ந்து நாலஞ்சு மாசமிருக்கும், அதுக்குள்ள என்ன மீட்டிங்? உண்மை தானா, இல்லை சும்மாவேணும் மீட்டிங்னு பந்தா காட்டுறானா?’

எரிச்சலாய் இருந்தது அவளுக்கு. சரிதான் போடா என்றெண்ணியவள், நிஜமாகவே படிப்பதில் மூழ்கிவிட்டாள். அரைமணி நேரத்தில் அவனிடமிருந்து கால் வந்தது. இப்போது இவள், இவளின் பங்குக்கு எடுக்கவில்லை.

‘ஹலோ ஃபோன் பண்ணேன், நீங்க எடுக்கலை...’ என்று வந்திருந்த மெசேஜுக்கு ‘ஐயம் பிஸி...’ என்று பதிலனுப்பி தன் பழிவாங்குதலை தீர்த்துக் கொண்டாள்.

வந்திருந்த பதிலை பார்த்து தனக்குள் நகைத்தவன், அவளிடம் பேசிவிட்டால் தேவலை என்று திட்டமிட்டபடி வெட்கம், மானம், ரோசம் எல்லாம் ஓரங்கட்டி வைத்து மறுபடியும் அவளை அழைத்தான்.

இம்முறை எடுத்தவள், “என்ன மிஸ்டர், எதுக்கு சும்மா சும்மா கூப்பிடுறிங்க.” என்ற அவள் கேள்வியில் ஜர்க் ஆனவன்,

“ஏங்க நீங்க தாங்க முதலில் கூப்பிட்டீங்க. என்ன தாங்க உங்க பிரச்சனை...” என்றான்.

எப்படி ஆரம்பிப்பது என்று அமைதியாக இருந்தாள் மைதிலி. இந்த சின்னப் பிள்ளைகள் விளையாட்டை மேலும் தொடராமல்,

“மைதிலி எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. என் வாழ்க்கையை உன் கூட வாழணும்னு ஆசைப்படுறேன்...” என்று அவளிடம் உடைத்துச் சொல்லிவிட்டான் முகில்.

இத்தனை நேரமும் வாயடித்துக் கொண்டிருந்தவளுக்கு இப்போது வார்த்தைகளுக்குப் பஞ்சமென்ற நிலை. பதில் சொல்லாமலே வெறுமனே ஃபோனைக் காதில் வைத்திருந்தாள்.

“உனக்கும் அப்படி ஒரு நினைப்பு இருக்குன்னு எனக்குத் தெரியும்..” என்று அவன் தொடர, அவளோ பதிலே பேசவில்லை.

“இருக்கா? இல்லை, இல்லையா?” அவன் மேலும் அழுத்திக் கேட்ட பிறகும், அவள் அமைதி காக்க,

“ஹலோ மைதிலி, லைனில இருக்கியா?” என்றான்.

“ம்ம், கேட்டுக்கிட்டு தானிருக்கேன்...”

“மைதிலி உன்கிட்ட இது பத்தி நிறைய பேசணும், இப்ப அவகாசமில்லை. எட்டு மணிக்கு மேல கூப்பிடுறியா? இப்ப வேலையிருக்கு, ப்ளீஸ்...” என்று இனிமையாய் அவன் சொன்னதற்கு மறுக்கவா முடியும்?

“ம்ம் சரி வச்சிடுறேன்..” என்று வைத்து விட்டாள்.

இருவருக்குமே, தாங்கள் மனதில் எண்ணியிருப்பதைச் சரியான தருணத்தில் சொல்லிவிட வேண்டும் என்ற உந்துதல் இருந்தது. இரவு இவன் சொன்ன நேரம் நெருங்குவதற்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள் மைதிலி.

ஃபோன் வந்தது. கார்த்தி தான்.

தன் பழைய சிந்தனையிலிருந்து வெளிவர முகிலுக்கு சற்று நேரம் பிடித்தது.

“சொல்லு கார்த்தி, என்ன இந்த நேரத்தில கூப்பிட்டிருக்கே?”

“முகில் ஆபிஸில் பேசிட்டியா...?”

“ம்ம் சொல்லியிருக்கேன், லீவ் இரண்டு வாரம் தான் முடியும்னு சொல்றாங்க...”

“அது ரொம்ப கம்மி டைம்டா, அதான் ஓவர்டைம் பார்த்து நிறைய லீவ் சேர்த்து வச்சிருக்கியே. இரண்டு மாசம் வேணும்னு கேளு, அப்பதான் ஒரு மாசமாவது கிடைக்கும்...”

“என்ன கார்த்தி விளையாடுறியா? இரண்டு மாசமெல்லாம் எடுக்க முடியாது...”

“அதெல்லாம் முடியும். ஒரு மாசம் லீவ் போடு, மீதி ஒரு மாசம் வொர்க் ஃப்ரம் ஹோம் மாதிரி போடு. உன் பாஸ் தானே, உனக்குன்ன கட்டாயம் கொடுப்பாரு.”

“கார்த்தி...”

“எதுவும் பேசாதே, அம்மா அப்பாவை நினைச்சு பாரு, அதுக்கப்புறம் உன் இஷ்டம்...”

“சரி, நான் பேசிட்டு சொல்றேன்...”

“உனக்காக தான் நானும் வெயிட்டிங், ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம். சீக்கிரம் சொன்னா டிக்கெட் போட்டிருவேன்...”

கார்த்தி சொன்னது போல் முகிலின் மேனேஜர் அவனுக்கு மிகவும் நெருக்கம். வேறு கம்பெனியிலிருந்தவனைச் சில பல கான்ஃபரன்ஸில் சந்தித்து அவனைப் பற்றி அறிந்து வைத்திருந்தவர், அவன் திறமைக்கேற்ப பெரும் சம்பளம் கொடுத்து இங்கு அழைத்ததோடு மட்டுமல்லாது, அவனின் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் உறுதுணையாய் இன்று வரையிலும் இருந்திருக்கிறார்.

மைதிலி தவறிய பொழுது, விரக்கிதியில் வேலையை விட்டு ஊர் திரும்புகிறேன் என்றவனை சமாளிக்கும் விதமாக நீண்டதொரு விடுப்பு போல் ஏற்றுக்கொண்டு அவனுக்குப் பிரச்சனை வராதவாறு பார்த்துக் கொண்டார்.

அவன் மனம் மாறும் வரை ஊரில் இருந்து வேலை செய்ய அனுமதிக்கவும் செய்தார். அவரால் முகிலுக்கு வேலை செய்யும் இடத்தில் இதுவரை பிரச்சனை எதுவும் வந்ததில்லை.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top