• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kk epi 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
அத்தியாயம் 8
வேலையில் மனம் லயிக்கவில்லை. இந்தச் சமுதாயக் கோட்பாடுகளைச் சுட்டிக்காட்டி தன் காதலையும் பிரித்து விடுவார்களோ என்ற ஐயமே அவனை பாடாய் படுத்தியது. மைதிலியிடம் பேச எண்ணி, அவள் எண்ணிற்கு அழைக்க வழக்கம்போல் எடுக்கவில்லை. இந்தக் களேபரங்கள் நடந்த சமயத்தில் கார்த்தியும் ஜப்பானில் தான் இருந்தான். அவனுக்கு மைதிலி விஷயம் எதுவும் சொல்லியிருக்கவில்லை இதுவரை.
முகிலுக்கு மைதிலியிடம் பேசுவது இயலாத ஒன்றாய் ஆகிப்போனது. அவள் என்ன நிலையில் இருக்கிறாள் என்பது அவளாகப் ஃபோன் செய்யும் சமயங்களில் மட்டுமே அறிந்து கொண்டான். தன் தந்தை தனக்கு ஆதரவளிப்பார் என்று இருந்தவனுக்கு அவர் பேசியது நம்ப முடியவில்லை. ஒரு நாள் போனில் பிடித்தான் மைதிலியை.
“முகில் அப்பா சம்மதிக்கலைன்னா என்ன பண்ணட்டும்..?”
“மைதிலி அவசரப்படாதே, இன்னும் கொஞ்ச நாள் பொறு..”
“உங்களுக்குப் புரியுதா இல்லையா? எங்க வீட்டில் மாப்பிள்ளை பார்க்குறாங்க...” என்று அவள் சொன்னதற்கு,
“ம்ம், நான் என்ன பண்ணலாம்னு யோசிச்சு சொல்றேன்...” என்றான், எதுவும் தோன்றாமல்.
“யோசிக்க எல்லாம் அவகாசம் இல்லை...நான் சொல்றதை கேளுங்க, எப்படியாவது சென்னை வரை வந்திடுறேன், அங்க இருந்து என்னைக் கூப்பிட்டு போங்க”
“என்ன டி பேசுறே? சென்னை என்ன ஜப்பானுக்குப் பக்கத்திலா இருக்கு?”
“நான் சீரியஸா பேசிட்டிருக்கேன்...”
“மைதிலி கிவ் மீ சம் டைம்...”
அதன்பின் அவள் சொல்லை மீற வழி இல்லாமல் சில திட்டங்கள் போட்டுவைத்து, சென்னை வரை வந்து அவளை அழைத்துக் கொள்ளலாம் என்ற முடிவெடுத்தான்.
என்ன யோசித்து என்ன, அவள் கிளம்பிய சமயம் சரியாக தஞ்சாவூர் பேருந்து நிலையத்திலேயே தன் தந்தையிடம் வசமாக மாட்டினாள் மைதிலி. குணசீலன் என்ன இதை எல்லாம் அறியாதவரா? அவரைத் தாண்டி மைதிலி செல்ல முடியாதே.
இதுவரை தன் மகளை அடித்திடாதவர் அவளின் இந்தச் செய்கையால் ஆத்திரமாகி கை நீட்டிவிட்டார். கன்னம் பழுத்திடும் என்ற வாசகம் கேள்விப்பட்டிருக்கிறான் மாதவன் ஆனால் இம்முறை அக்காள் தம்பி இருவருக்குமே அது நடந்தது.
அவள் சென்னை கிளம்பிவிட்டாளா என்று அறிந்து கொள்ள அவள் எண்ணிற்கு அழைக்க, முகில் பேசியது சாட்சாத் குணசீலனோடு தான்.
“ஹலோ மைதிலி...” என்று ஆரம்பித்தவனை,
“ஒழுங்கா உயிர் பிழைக்கிற வழியைப் பார்...” என்று கோபமாய் பேசிவிட்டு அவன் பதில் பேசுவதற்குள் ஃபோனை வைத்துவிட்டார்.
முகில் தன் காதலியின் பிரச்சனையில் ஏற்கனவே உழன்று கொண்டிருக்கும் சமயம், கார்த்தியின் போக்கும் சரி இல்லாமல் போனது. சதாசர்வ காலமும் கொண்டாட்டங்களில் ஊறிப் போயிருந்தவனை கண்டிக்காமலிருக்க அவனால் முடியவில்லை. இதன் காரணமாய் கார்த்தியிடம் தன் எரிச்சலைக் காட்ட, அது பிடிக்காமல் கார்த்தி முகிலிடமிருந்து விலகிப் போக ஆரம்பித்தான்.
நண்பர்கள் இருவருக்குமான பேச்சுவார்த்தையும் நின்றுவிட்ட நிலையில்,
“முகில் நான் என் மத்த பிரண்ட்ஸோட போய்த் தங்கிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்...” என்று தன் துணிகளை எடுத்து வைத்தபடி சொன்னான்.
தனக்கென்று இருந்த ஒற்றை நண்பன், அவனும் செல்கிறான். ‘நீ தானே வேறு வீடு பார்த்து போ என்றாய்?’ மனசாட்சி அழகாய் ஞாபகப்படுத்தியது. நன்மைக்குச் சொன்னதை தவறாக எண்ணிக்கொண்டானே. எல்லாப் பக்கமும் சோதனையாக இருந்தது முகிலுக்கு.
விட்டு விலகவேண்டும் என்று எண்ணிவிட்டவனைப் பிடித்து வைக்கவா முடியும்?
“ஓகே கார்த்தி...” என்றவன், தனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பது போல் தான் செய்துகொண்டிருந்தப் பணியைத் தொடர்ந்தான்.
தன் பிரச்சனையே தலைக்கு மேல் இருக்க, கார்த்தி விஷயத்தை மேலும் ஆராயவில்லை.
 




anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
அவளை அழைக்க வரவேண்டியிருக்கும் என்று பதிவு செய்திருந்த டிக்கெட்டில் சென்னை வந்தவன், அதன்பின் தஞ்சாவூருக்கு எந்த முன்னறிவிப்புமின்றி வந்தாயிற்று. வந்தவனை வரவேற்கத் தான் ஆள் இல்லை.
அவன் தந்தையால் இத்தனை களேபரத்தில் மகன் வந்து நிற்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் வந்ததோடு நில்லாமல்,
“மைதிலியோட வீட்டுக்குப் போகணும் ப்பா. அவ அப்பாவை பார்த்துப் பேசணும்...” என்று அவரிடமே சொல்ல,
“உன் மேல கை வைக்க மாட்டேன்னு இஷ்டத்துக்குப் பேசாதே முகில். அந்தப் பொண்ணை மறந்திடுன்னு சொல்றேன், என்னையும் சேர்த்து அங்க கூப்பிடுறே...” என்று கத்தினார்.
“அப்பா நான் தனியா போறது அவ்ளோ மரியாதையா இருக்காதுப்பா, ப்ளீஸ்...”
“நீ போகவேண்டாம் முகில், அவர் அவ்வளவு தூரம் சொல்லியும் நீ போறது சரி இல்லை...”
முற்போக்குவாதி என்று நினைத்து வைத்திருந்த முகிலின் தந்தைக்கூட தன் மகனின் திருமணம் என்று வந்ததும் தன் ஜாதி பற்றைப் பிடித்து வைத்துக் கொண்டிருந்தார்.
ஊரில் இருந்து வந்த அலைச்சல் வேறு ஒருபக்கம் அவனை வாட்ட அவன் தந்தை செய்வது அட்டூழியமாய்த் தெரிந்தது. நெருப்பு மேல் இருக்கும் நிலை தான். தன் கணவரைத் தனியே பேச அழைத்த சாரதா,
“நாம அவரை நேரப் பார்த்தோம், அவன் பார்க்கலை. அதான் அந்தப் பயம் தெரியாம பேசுறான். நேர்ல போனா தான் இது நடக்குமா நடக்காதான்னு அவனுக்கே புரியும். கொஞ்சம் அவன் வழியில் போய் புரிய வைங்க. அவன் என்ன சின்ன பிள்ளையா, அதட்டி சொல்றதுக்கு...” என்றுசொல்ல,
“அவனுக்கு புரியணும்னு இந்த அளவுக்கு போறது எனக்கு சரின்னு தோணலை சாரதா. அடியாளுங்க எல்லாம் வச்சிருக்கார்...” என்றார் கறாராய்.
“எனக்கு என்னவோ இப்படி செய்தா சரி வரும்னு இருக்கு. அதுக்குமேல உங்க முடிவு தான்..” என்றதும், யோசித்துப் பார்த்தவர் அதன்படியே முகிலோடு குணசீலன் வீட்டுக்குப் புறப்பட்டுப் போனார், மகன் மனம் மாறுவான் என்ற நம்பிக்கையில்லை.
அவர்கள் வீட்டில் முன்னறையில் அமர வைத்திருந்தார் குணசீலன், அவ்விருவரையும்.
“என்ன பத்மநாதன், நான் அத்தினை சொல்லியும் இன்னிக்கி பையனோட வந்து நிக்கிறீங்க. பொறுமையா சொன்னா ஒத்துக்க மாட்டீங்களா? அடிதடியில் இறங்க எனக்கு இஷ்டமில்லை. என் பொண்ணு பேர்லையும் தப்பிருக்கு என்பதால்...”
அவர் பேச்சில் பத்மநாதன் இவனை முறைக்க, “எனக்கு உங்கக்கிட்ட பேசியாகணும் அதான் அப்பாவைக் கூப்பிட்டு வந்தேன். உங்க பொண்ணு மைதிலியை நான் கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன்...” என்றான் திடமாய் முகில்..
அவன் அதை சொன்னதில் கடுப்பானவரின் கை முஷ்டி இறுகியது, அவன் அதற்கெல்லாம் அசரவில்லை. தன் பிரச்சனையை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்ற முனைப்பில் இருந்தான்.
“இதில் என்னை பத்தின எல்லா விவரமும் இருக்கு நீங்க பாருங்க...” என்று, அவர் முன் ஒரு ஃபைலை வைத்தவன்,
“ஜாதி வேற என்பதை தவிர வேற எந்த வேறுபாடும் எங்களுக்கில்லை. தயவுசெய்து எங்களை பிரிச்சிடாதீங்க...” என்று கையெடுத்துக் கும்பிட்டான்.

“சென்னையில் வைச்சு உங்களுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சது தப்புதான். ஆனா அதை வைத்து நான் தப்பானவன்னு முடிவு கட்டிடாதீங்க.”
குணசீலன் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, “மைதிலி என் உயிர், அவ இல்லாத ஒரு வாழ்க்கை என்னால எப்பவும் வாழ முடியாது.” என்று முகில் உணர்ந்து சொல்ல,
பத்மநாதன் கண் கலங்கிய தன் மகனை பார்த்துக் கொண்டிருந்தார். இப்படி வந்து யாசிக்கும் அளவிற்கு அப்படி என்ன காதலோ என்றுதான் தோன்றியது அவருக்கு.
“யோசிச்சு சொல்லுங்க சார். இதுக்குமேல என்ன சொல்றதுன்னு எனக்குத் தெரியலை. நாங்க கிளம்புறோம்...” என்று எழுந்தவன், தந்தையுடன் அடுத்த நொடி வெளியேறி விட்டான்.
இவர்கள் பேசிக்கொண்டிருந்த அறைக்குப் பக்கத்து அறையிலிருந்து மைதிலி அனைத்தையும் கேட்டபடியிருந்தாள்.
தன் தந்தை பதில் சொல்லாமல் இருந்ததன் மூலம், அவர் ஒருநாளும் இந்தத் திருமணத்துக்கு ஒத்துக் கொள்ளப் போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. அந்த அறையில் இருந்து வெளிப்பட்டவள் மின்னல் வேகத்தில் வாசல் புறம் ஓடினாள்.
முகிலை இழந்து விடக்கூடாதென்று அத்தனை வேகம். குணசீலன் தடுத்தும் நிற்கவில்லை. வெளியே தன் காரில் ஏறப்போனவனைத் தன் அழைப்பால் நிறுத்தியவள், அவன் பக்கம் சென்று, “முகில் என்னையும் உங்கக்கூட கூப்பிட்டு போங்க...” என்று கண்கள் கலங்க நின்றாள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் காதலியின் நிலையை பார்த்த முகிலுக்கும் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பெற்றவர்கள் இருக்கிறார்கள் என்ற சிந்தனையில்லாமல் அவளைக் கட்டிக்கொண்டான்.
அவனிடமிருந்து விலகியவள், “நானும் உங்கக்கூட வரேன் முகில்...” என்று மறுபடியும் சொல்ல, இப்போது குணசீலன் இவள் பக்கம் நெருங்கிவிட்டார்.
“மைதிலி, என்ன நடந்தாலும் பெரியவங்க சம்மதத்தோட தான். இன்னொரு தடவை எந்தத் தப்பும் செய்ய என் மனசாட்சி இடம் தரலை...”
“டேய் முகில், நீ இல்லாம என்னால வாழ முடியாது டா...” அவன் சொன்னதில் கோபமாகி சட்டையை பற்றி உலுக்கினாள் மைதிலி. அவள் கையை தன்னிடமிருந்து பிரித்தவன்.
“என்னாலையும் தான் மைதிலி, ஆனா உங்க அப்பா முடிவெடுக்கட்டும்...” என்று, பற்றியிருந்த அவள் கையை விட்டவன், கண்கள் கலங்க தன் காரில் சென்று அமர்ந்துகொண்டான்.
அவனுக்குத் தாளவில்லை, அழுகின்ற தன் காதலியை விட்டு விலகியவனுக்கு நெஞ்சு கனத்துப் போனது. ஏற்கனவே தன் மகளின் இந்நிலையில் கலக்கமடைந்திருந்த குணசீலனை மேலும் கலங்கடித்தது பத்மநாதன் அவரைப் பார்த்து வைத்த அர்த்தப் பார்வை.
அவன் சென்றுவிட்ட திசையைப் பார்த்தவள், பொங்கிய கண்ணீரை அடக்க மாட்டாமல், அழுகையுடன் வீட்டினுள் ஓடினாள். இத்தனை நேரமும் மாறாத தன் பிடிவாதமும், வரட்டு கௌரவமும் தன் பெண்ணின் கண்ணீர் முன் காணாமல் போயிருந்தது குணசீலனுக்கு
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
அனி டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அனிசிவா டியர்
 




Last edited:

Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
உணர்ச்சி பூர்வமான பதிவு சகோ
????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top