• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

kk12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
அத்தியாயம் 12

அந்த முதியவன் முகில் நினைத்திருந்ததை விட, வலிமையுடவனாக இருந்தான். சுற்றி இருந்த மக்கள் சண்டையை வேடிக்கை பார்த்தனரே ஒழிய, யாரும் முகிலின் உதவிக்கு வரவில்லை.

கண்மணியை அவனிடமிருந்து பிரிக்க முகில் போராடிக் கொண்டிருக்கையில், எங்கிருந்தோ அங்கு வந்தார் குணசீலன், முகிலின் மாமனார்.

“டேய் யாரடா நீ? என் மாப்பிள்ளை மேல் கையை வைக்கிறது...” என்று முகிலிடம் இருந்து அந்த ஆசாமியை கீழே தள்ளினார்.

அவர் சொன்ன ஒற்றைச் சொல்லுக்கு, அவருடன் வந்தவர்களும் மற்றவர்களும் சேர்ந்து அந்த முதியவனை நையப்புடைந்தனர். முகிலின் பின்னால் வந்தப் பெண்ணை பார்த்தபடி குணசீலன்,

“மாப்பிள்ளை நீங்க ஊரில் இருந்து வந்த விஷயமே எனக்குத் தெரியாது. எப்போ வந்தீங்க?”

“நேற்று தான்...”

குணசீலனுக்கு யார் இந்தப் பெண் என்று தெரிய வேண்டும். ஆனால் அதைத் தவிர்த்து முகிலிடம் பேசியபடி அவனின் வாகனம் நின்ற இடம் வரை வந்துவிட்டார்.

சாரதா கண்மணியை பார்த்ததும் வண்டியில் இருந்து இறங்க, குணசீலனைக் கண்டுவிட்டு பத்மநாதனும் இறங்கினார்.

“என்ன சம்மந்தி, இந்தப் பக்கம்...?” என்று பத்மநாதன் கேட்க,

“நம்ம பையன் மாதவன், சென்னை போறான், அதான் வழியனுப்பி விட வந்தேன். இங்க பார்த்தா பஸ் ஸ்டாண்டில் மாப்பிள்ளையோட எவனோ மல்லுக்கு இருக்கான்... யார் மாப்பிள்ளை அது?” என்றார் காரியமாய்.

பத்மநாதனும் பதறியபடி, “என்னப்பா ஆச்சு, யார் அது?” என்று கேட்க,

“எனக்கும் தெரியாது..” என்றவன் கண்மணியை பார்த்து வைத்தான், அவளிடம் மட்டும் பதில் உண்டு என்பது போல்.

கண்மணி சாரதாவை பார்த்தபடி, “அவர் என் மாமா. என் அக்கா கணவரோட அண்ணன். அவரைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு தொந்தரவு செஞ்சவர் கிட்ட இருந்து தப்பித்து தான் இங்க வந்தேன்...”

குணசீலனிடம் பத்மநாதன் இதுவரை நடந்தவற்றைச் சொல்ல, கேட்டு முடித்தவர், “இந்த பார் ம்மா கண்மணி, இந்த நிலையில் நீ தனியே எங்கயும் போறது சரியில்லை...” என்றுசொல்ல,

சாரதாவும் உடன்சேர்ந்து, “ஆமாங்க நீங்க சொன்னது சரிதான். பிரச்சனை சரியாகும் வரை எங்க வீட்டில் அவளை வச்சிக்கிறோம்...” என்றார் வேகமாய்.

குணசீலன் அனைவரிடமும் விடைப் பெற்றுக் கொண்டார். வீடு போனதும் அவளை ஒரு அறையில் தங்கவைத்துவிட்டு முகிலும் அவன் தந்தையும் இருந்த இடத்துக்கு வந்த சாரதாவை,

“அம்மா நீங்க யோசிக்காம என்ன காரியம் பண்றீங்க? யாரோ ஒரு பொண்ணை வீட்டுக்குள்ள சேர்க்குறது நல்லாவா இருக்கு? அதுலயும் நான் வேற இருக்கேன். இது சரியில்லைம்மா...” என்று கடிய,

தந்தை அவனுக்கு ஒத்து ஊதுவார் என்று எண்ணியிருக்க, அவரோ சாரதாவை கேள்வியாகப் பார்த்தபடி இருந்தார். அவரோ அவன் கொடுத்த அத்தனை திட்டுக்களையும் வாங்கிக் கொண்டு,

“இதை பார், அந்த பெண்ணோட செர்ட்டிபிகேட்ஸ். கட்டாய கல்யாணத்துல இருந்து தப்பிச்சு வந்திருக்கா. கொஞ்ச நாள் அடைக்கலம் கொடுப்போம். நமக்கு அவளால ஒரு கஷ்டமும் வராது. நான் உறுதியா சொல்றேன்...” என்று ஒரு முடிவோடு சொல்ல,

“அம்மா நீங்க என்ன சொன்னாலும் நம்ம வீட்டில் அந்த பொண்ணு தங்குறது எனக்கு சரியா படலை...” என்றான் பார்வையை எங்கோ பதித்து.

“இரண்டு நாள் இருக்கட்டும் முகில், அப்புறம் ஏதாவது வழி செய்வோம்...”

இரண்டு நாளும் கடந்தது. அவன் வீடே அவனுக்கு அன்னியமாகப் பட்டது. சம்பந்தமே இல்லாத ஒரு பெண்ணை வீட்டினுள் விட்டிருந்தனர். அவனால் நிம்மதியாக நடமாடக் கூட முடியவில்லை.

“அம்மா ஆபிஸ் வேலையா சென்னை போறேன், வர இரண்டு நாள் ஆகும்...”

“இத்தனை நாள் இல்லாத ஆபிஸ் வேலை என்ன திடீர்னு...?” என்று பத்மநாதன் சரியாய் கேட்க,

“இருக்குப்பா, அது சொன்னா உங்களுக்குப் புரியாது. நான் திரும்பி வரும் போது அந்த பொண்ணு இங்க இருக்க கூடாது...” என்று சொல்லி, அவர்கள் அவனைத் தடுக்கும் முன் வெளியேறிவிட்டான்.

அவன் சொன்னது போல் ஆபிஸ் வேலையெல்லாம் இல்லை. அவனுக்கு இடமாற்றம் வேண்டியிருந்தது. வெளியூரில் இருந்து ஃபோன் செய்தவன் சாரதாவிடம் மறுபடியும் கறாராக சொல்லி விட்டான்.

‘நான் வரும் போது அந்த பொண்ணு அங்க இருக்கக் கூடாது. ’ என்று.

சாரதா கேட்பாரா?

இரண்டு நாட்கள் சென்றிருக்க, ஒரு மதியம் ஊருக்குத் திரும்பினான். அம்மா அப்பா அந்தப் பெண்ணை அனுப்பியிருப்பார்கள் என்று நினைத்தபடி அவன் வர,

ஹாலில் நடுநாயகமாய் அவன் மாமனார் மாமியார் இருக்க, ‘வாங்க...’ என்று சொன்னதோடு அவன் அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.

எதற்காக வந்திருக்கிறார்கள்? மைதிலி விஷயம் எதையும் நினைவுபடுத்தி விடுவார்களோ என்று தான் அவன் ஒதுங்கிக்கொண்டதே. சிறிது நேரத்தில் அவர்கள் கிளம்பப் போவதாக சாரதா வந்து அழைக்க, அங்கு அவர்களிடம் சென்றான்.

குணசீலன் அவன் கைபற்றி, “போனவளையே நினைச்சு உங்க வாழ்க்கையை தொலைக்காதீங்க மாப்பிள்ளை. உங்க பிள்ளைக்காகவாது நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும்...” என்று அழுதார்.

அவரைத் தொடர்ந்து லட்சுமியும். இவர்களின் செய்கையால் அவனுக்கும் கண்ணில் நீர் எட்டி பார்த்தது.

“நாங்க எங்க மகனோட போய் கொஞ்ச நாள் இருக்கலாம்னு இருக்கோம். இனி உங்க குழந்தையை நாங்க பார்த்துகிறது கொஞ்சம் சிரமம். அதுவுமில்லாம அப்பாக் கூட இருக்கிறது தான் அவளுக்கு நல்லது.”

இவர்கள் பேசியிருந்த சமயம் பத்மநாபன் அவனின் பிள்ளையைத் தூக்கி வைத்திருந்ததைப் பார்த்தான். அவர் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.

“மாமா என்னால அவளை வளர்க்க முடியாது...” என்று சொல்லி முடிக்கையில் அவனருகில் வந்த சாரதா அப்பேச்சை இடைமறித்தார்.

“என்னடா பேசுற நீ? நாம தான் வளர்க்கணும். அவங்க இவ்வளவு நாளும் பார்த்துக்கிட்டதே பெரிய விஷயம்.”

அவர்கள் முன் வைத்து அன்னையிடம் வாதிட அவன் விரும்பவில்லை. ஆக மௌனமாய் நிற்க, மற்றவர்கள் மேலும் சற்று நேரம் பேசியிருந்துவிட்டு,

“போயிட்டு வரேன் ராஜாத்தி, இந்தத் தாத்தனை மறந்துடாதே...” என்று தன் பேத்தியை கடைசி முறை போல் கன்னம் கிள்ளிவிட்டு சென்றார் குணசீலன்.

வாசல் வரை உடன் சென்ற சாரதாவிடம், லட்சுமி எதையோ சொல்ல, இவரும் அதை ஆமோதிப்பது போல் தலையசைத்தார். பத்மநாதன் குழந்தையுடன் அவன் அருகில் வந்து,

“அப்பா பாரு குட்டி, அப்பா சொல்லு...” என்று, இவனை காட்டி சொல்ல அத்தனை எரிச்சலான முகத்தைக் காட்டினான் முகில்.

‘எல்லாம் இவளால் தான்’ தேவையில்லாமல் அந்தப் பிஞ்சின் மேல் அவன் ஆத்திரம் பாய்ந்தது.

முகம் இறுக, எவ்வித பதிலும் கூறாமல் இருந்தான். இவன் அறைக்குச் செல்லும் முன் பார்த்த கடைசி விஷயம், அம்மாவும் அப்பாவும் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தபடி அந்தப் பிள்ளையைக் கொஞ்சிக் கொண்டிருந்ததை.

முகில் அறையில் சென்று கதவடைத்துக் கொண்டான். எங்கெங்கோ சென்று சுற்றிவிட்டுச் சரி செய்த அவன் மனம் இப்போது குழந்தையைக் கண்டதும் அதே பழைய நிலைக்குச் சென்றது.

மைதிலியின் நினைவுகள் மறுபடியும் சுழல ஆரம்பித்தது. அவளை மறக்க முடியவில்லை.

‘ஏன் டி, இந்தப் பிள்ளைக்காக என்னை விட்டிட்டு போனே?’ என்று எண்ணியவனை,

“முகில் முகில்...” என்று சாரதா அழைத்தக் குரலுக்கு அங்குச் செல்ல,
 




anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
தூளி கட்டுவதற்காக முயன்று கொண்டிருந்தனர் இருவரும். அவன் தந்தை நாற்காலியில் ஏறியும் அவருக்கு எட்டவில்லை.

“அப்பா இறங்குங்கப்பா, பத்திரம்...” என்று அவரைத் கைதாங்கலாக இறங்கச் சொல்லி அந்த வேலையை இவன் தொடர. தூளி ரெடி ஆனது.

அதில் குழந்தையைக் கிடத்தி அம்மாவும் அப்பாவும் ஆட்டிவிட, அத்தனை பெருமிதம் அவர்களுக்கு. அந்தச் சிரிப்பை பார்த்து வருடம் ஆகியிருந்தது. அவர்களை ரசிக்க தெரிந்தவனுக்குக் குழந்தையை ரசிக்கும் மனநிலை இப்போதில்லை.

வொர்க் ஃப்ரம் ஹோம் போல வொர்க் ஃப்ரம் இந்தியா என்று அனுப்பிவைத்திருந்தார் அவனின் பாஸ். நாள் பூராவும் வீட்டிலிருந்தபடி ஜப்பான் கம்பெனி வேலை தொடர்ந்தது. முக்கால்வாசி நேரம் ஆபிஸ் மீட்டிங், கான்பிரன்ஸ் கால்.

இந்திய நேரப்படி காலை ஆறு மணிக்கு ஆரம்பித்தான் என்றால் மாலை நாலு, ஐந்து மணிவரை அது தொடரும். அதன் பிறகும் அறையில் அடைந்து கிடந்தான். சாப்பாடு எல்லாம் அவன் அறையில், மேஜையில் நேரத்துக்கு சாரதா வைத்துவிடுவார்.

இப்படியாகிப் போன நிலையில் வீட்டில் என்ன நிலவரம் என்பதை அவன் அறியவில்லை. அவன் கவனித்திடாத சமயம் கண்மணி, அவன் பெற்றோருக்கும் அந்தப் பிள்ளைக்கும் இன்றியமையாதவளாக மாறி விட்டிருந்தாள்.

ஆம் அவள் இன்னும் கிளம்பியிருக்கவில்லை. அந்த விஷயம் அவனுக்குத் தெரிய ஆரம்பித்ததே ஒரு வாரம் கழித்துத் தான். அன்று ஜப்பானில் விடுமுறை நாள். ஆபிஸ் பணியில்லாததால் முகில் மெதுவாகக் கண் முழித்து ஹாலுக்கு வந்திருந்தான், பேப்பர் படிக்கவென்று.

அமைதியாகவும் புதுமையாகவும் இருந்தது அந்தக் காலை பொழுது. நிம்மதியாய் நாளிதழைப் புரட்ட, இரண்டாம் பக்கம் வந்ததும் ஒரு சத்தம். சின்னக் குரலில் குழந்தை அழும் ஓசை.

‘இத்தனை நாளும் எப்படி இது கேட்காமல் இருந்தது...' என்று யோசனை போக, ‘பொழுதன்னைக்கும் ஹெட்செட்மாட்டியிருந்தா எப்படிக் கேட்குமாம்?’ என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டான்.

அவன் குழந்தை அந்த வீட்டில் இருப்பதையே மறந்திருந்தான். அவன் தந்தை ஓடோடி வந்தார், அந்தப் பிள்ளையைத் தொட்டிலிலிருந்து தூக்க.

அவ்வளவு தான், சற்று நேரத்தில் கலவர பூமி போல் காட்சி அளித்தது அந்த வீடு. அந்தப் பிள்ளைக்கு எண்ணைத் தேய்த்து விட்டு அது அங்கும் இங்கும் தவழ்ந்து கொண்டிருந்தது.

விரகடுப்பில் வெந்நீர் போட்டுக் கொண்டிருந்தனர், பின்கட்டில். என்றும் இல்லாமல் சாரதா, அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார். பத்மநாதன் ஒருபுறம் சாம்பிராணி போட ஆரம்பித்திருந்தார்.

முகில் நடக்கும் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தாலும், தினசரியில் மூழ்கியிருப்பதைப் போல் ஒரு பாவனைக் காட்டினான். அவனைப் பெற்றவர்களும் அவனைக் கண்டுகொள்ளவில்லை.

திடீரென்று, “கண்மணி இங்க வாம்மா...” என்றழைத்தார் சாரதா. அப்போது தான் அவனுக்குத் தெரியும் அவள் இன்னும் அங்கே இருப்பது.

‘நான் அத்தனை சொல்லியும் இவர்கள் இவளை அனுப்பவில்லையா?’ முகிலுக்கு கடுப்பாக இருந்தது.

“கண்மணி...” இரண்டாவது முறை சாரதா அழைக்கவும், முகிலின் பக்கத்து அறையிலிருந்து வெளிப்பட்டு சாரதாவிடம் ஓடினாள் கண்மணி.

“எனக்கு கீழே உட்காரக் கஷ்டம்மா, எப்போதும் போல நீயே குளிப்பாட்டி விட்டிடேன்...”

“சரி மா, நீங்க இருங்க...” என்றவள். மட மடவென்று அந்தப் பிள்ளையை குளிப்பாட்ட அது அழுது, அந்தச் சத்தத்தில் ஊரைக் கூட்டியது.

“சரிம்மா, அழக் கூடாது. என் தங்கமில்ல...” அதனிடம் பேசியபடி இவள் சமாதானம் செய்ய, ஒரு பலனும் இல்லை. சாரதா அவள் செய்கையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

சாம்பிராணி புகையை அவள் குழந்தைக்குப் போட்டதில், பத்மநாதனும் அவுட். முகிலுக்கு இதை எல்லாம் பார்க்க சகிக்கவில்லை... இரண்டு டிக்கெட்டுகளை இந்த வீட்டில் இருந்து அகற்றவேண்டும், உடனடியாக!

அன்று அவனுக்குப் பணியில்லை என்பதால் கோவில் போகலாம் என்று சாரதா நச்சரிக்கக் காரில் சாரதி இருக்கையில் அவர்களுக்காகக் காத்திருந்தான். பத்மநாபன் வந்து முன் சீட்டில் ஏறிக் கொள்ளவும்,

“எவ்வளோ நேரம் ப்பா, அம்மா எங்கே?” என்று வினவ,

“இருப்பா, குழந்தையோட என்ன பாடு தெரியுமா. எங்களுக்கும் வயசாகுது, அது உனக்கு ஞாபகம் இருக்கா?” என்றார் எரிச்சலாக.

“இப்ப ஏன் ப்பா இவ்ளோ கோபம்?”

“பின்ன என்னடா? நீ பாட்டுக்கு இருக்கே. உன் பிள்ளையை பத்தி கொஞ்சமும் உனக்கு அக்கறையிருக்கா? எட்டிக்கூட பார்க்க மாட்ற...” என்றவனிடம், அவனுக்குப் பதில் சொல்லத் தோன்றவில்லை.

“என்ன, நான் கேட்டுக்கிட்டே இருக்கேன், பேசாம இருக்கே?” பத்மநாதன் குரலில் அத்தனை எரிச்சல். இப்படி ஒரு கல் நெஞ்சுக்காறனா தன் மகன் என்று.

“என்னால அவளை வளர்க்க முடியாதுப்பா, மைதிலியை ஞாபகப்படுத்துது அந்தக் குழந்தை...”

இதைக் கேட்டதும் பொங்கிவிட்டார் அவர், “அறிவிருக்காடா உனக்கு, உன் பிள்ளையை நீ வளர்க்காம வேற யாரும் வளர்த்து தருவாங்களா? பொண்டாட்டி செத்துட்டான்னு துக்கத்தில இருக்கியேன்னு உன்னை எதுவும் சொல்லாம விட்டா, ரொம்ப ஜாஸ்தியா போறியா?” என்றதும்,

“அந்த குழந்தை மைதிலியை ஞாபகப்படுத்துது...” அவன் அதையே சொன்னான்.

“அப்படி தான் இருக்கும், உன் பிள்ளை உன்னை மாதிரி இல்லைன்ன உன் பொண்டாட்டி மாதிரி தானே இருக்கும்...”

சுருதி ஏறி விட்டது அவர் குரலில். அவரை இப்படி கத்த வைப்பது அவனுக்கே கஷ்டமாக இருந்தது.

“தயவுசெஞ்சு புரிஞ்சிக்கோங்கப்பா...”

“முதலில் நீ புரிஞ்சிக்கோ. உன் பிள்ளையை, உன்னை பெத்தவங்களை. உன் பொண்ணு அப்பன் இருந்தும் அநாதையா இருக்கணுமா? அவளுக்கு என்ன தலையெழுத்தா? இதுக்கெல்லாம் ஒரு நாளும் நான் ஒத்துக்க மாட்டேன்...”

கண் கலங்க ஸ்டியரிங்கில் தலைசாய்ந்துகொண்டான். எப்படிப் புரியவைப்பான்? அவன் நிலையைக் கண்டு மகனின் முதுகைத் தட்டி விட்டவர்,

“எல்லாம் சரியாகும். அது உன் பிள்ளை, எங்க வாரிசு... அவளை அநாதையாக்கிடாதே. மைதிலி ஞாபகத்தில் இருந்து வெளியே வர பார்...” என, அதற்குள் சாரதா வந்துவிட்டார்.

இவர்கள் பேச்சை நிறுத்திக் கொண்டனர். வியர்த்து விறுவிறுத்து காரில் ஏறியவரைப் பார்த்து “என்னம்மா, பாலை குடிச்சாளா இல்லையா?” என்று கேட்க,

“ஒருவழியாய் குடிச்சா, கண்மணி இல்லைன்னா என் நிலைமை என்னாகும். வாம்மா கண்மணி, வண்டியில் ஏறு...” என்று அவர் குரலை கேட்டதும் கண்மணி முகிலின் பிள்ளையுடன் வந்தாள்.

“அப்பா நம்ம மட்டும்தானே கோவில் போறோம்”... என்ற முகிலின் கேள்விக்கு பதில் சொல்லவில்லை அவர். ஏற்கனவே முடிவெடுத்திருந்தனர் போலும்.

மறுமுறையும், “அப்பா...” என்க,

“எல்லாரும் சீக்கிரம் ஏறுங்க, கண்மணி நீ அந்தப் பக்கம் சீட்டில் ஏறும்மா, குழந்தையை என்கிட்ட முன்னாடி குடு.” என்று அவன் பேச்சை சட்டைச் செய்யாமல் அவர் பாட்டுக்குக் கட்டளைகளைப் பிறப்பித்தார்.

பட்டுப்பாவாடை கட்டி, சின்ன முடியில் பூச்சூடி அழகாய் இருந்தாள் முகிலின் மகள். அவனைப் பார்த்து பொக்கை வாயில் சிரித்ததில் முன்பக்கம் இரண்டு பல் மட்டும் தெரிந்தது. அவளை ரசிக்க ஆரம்பித்த மனதைக் கட்டாயப்படுத்தி ரோட்டுக்கு திருப்பினான்.

தான் பெற்ற குழந்தையை வெறுக்கும் அளவிற்கு முகில் அத்தனை கொடூரமானவனா?
 




Nadarajan

முதலமைச்சர்
Joined
Apr 28, 2018
Messages
5,558
Reaction score
6,007
Location
Tamilnadu
Very Nice ud. முகிலன் பண்றது ரொம்ப அதிகம்தான் பாவம் அந்த பச்சபுள்ள என்ன தப்பு பண்ணியது???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top