• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Konjam vanjam kondenadi - 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
மிகவும் அருமையான பதிவு:):):)
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Intha pinchi nenju evloo adiyaa thaan thaangum.. poonga ka.. avanga novel padikka maatoom nu pechu athukaaga veembu pidichi pooi 1st episode padicha anga avanga santhiya akka kitta na brother nu sonnanga... Name ketathukku inbox poi paaru nu sollitaanga avangalukku... ??????

Sooo sad of mee..

Sollavae illa..??
Seri seri inime ushhaaaaaaar ah irukkanum
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,515
Reaction score
7,708
Location
Coimbatore
ஷிவானி சூப்பர்லா எப்படி அப்பா மனதை மாற்றினாய் குரு என்ன செய்ய போகிறான்
 




Premi

அமைச்சர்
Joined
Apr 1, 2018
Messages
1,011
Reaction score
2,292
Location
coimbatore
sema epi sis :love: ...shivani yu guruvu orey veetla ...sabari adha pathu apdiye gaandu aga poraru ....mog ku vayir eriya poguthu .... atlast vedha ku avanga amma veedu kedachirchu.... idhu therinja guru voda matha akka ponnungala poramaila pongirvangla ...waitng fr all family galattaas
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
மொக்க மோக்கிட்ட இருந்து எஸ்கேப் ஷிவானி.... ??????
ஷிவானி நீ கொடுத்த பாரு ஒரு அறை மீ மகிழ்ச்சி... ????
சிவா vs சிவா தான் சூப்பர்... ஆனால் அது அவ்வளவு சுலபம் இல்லை....???
அவலுடன் அடுத்த எபிக்காக காத்து இருக்கிறேன்
 




N.Palaniappan

மண்டலாதிபதி
Joined
May 22, 2018
Messages
164
Reaction score
277
Location
Coimbatore
"நீ வா மச்சான்... உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்" என்று அவர் சபரியை அழைத்து கொண்டு சென்றார்.

அதே நேரம் அறைக்குள் வேதா தன் மகளிடம் நடந்தவற்றை எல்லாம் கேட்டறிந்து கொள்ள, அவரின் விழியோரம் நீர் கசிந்தது.

"அப்போ தம்பி உன்கிட்ட கோபமா பேசலியா வாணிம்மா" என்று கேட்க,

"கோபமா எல்லாம் பேசல... ஆனா இமோஷன்லா பேசினாரு... பாவம்ல தாத்தா பாட்டி" என்றவள் வருத்தம் கொள்ள, "ஹ்ம்ம் ஆமா" என்று கண்கலங்கினார் வேதா.

அந்த நேரம் பார்த்து சபரி அறைக்குள் நுழைய வேதா தன் கண்ணீரை அவசரமாய் துடைத்து கொண்டு விட,

அவர் தன் மகளிடம், "உங்க அம்மாவை திங்ஸ் எல்லாம் பேக் பண்ண சொல்லு... சென்னைக்கு கிளம்பலாம்... அன் நெக்ஸ்ட் வீக் மலேசியாவுக்கு போறோம்" என்று சொல்ல ஷிவானி அதிர்ச்சியானாள்.

"அப்போ எங்கேஜ்மென்ட் டேட்?" என்றவள் கேட்க, தன் மகளை விழிஇடுங்க பார்த்தவர்

"செய்றதெல்லாம் செஞ்சிட்டு இதுல எங்கேஜ்மென்ட்னா கேட்கிற...

இரண்டு பேரும் எல்கேஜி புள்ளைங்க மாறி சண்டை போட்டுக்கிறீங்க... உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் வேற பண்ணா ஊரையே இரண்டாக்கிடுவீங்க" என்க, இதைத்தான் அரவிந்தன் அவரை தனியாக அழைத்து சென்று புரிய வைத்தார்.

"நானும் அப்பவே நினைச்சேன்... நீங்கதான்" என்று வேதா சொல்ல வர அவர் மனைவியை வெடுக்கென ஒரு பார்வை பார்த்தார்.

"அப்போ எங்கேஜ்மன்ட் கேன்ஸலாயிடுச்சா?" என்று ஷிவானி வருத்தமாய் கேட்க,

மகளை இருவரும் புரியாமல் பார்த்தனர்.

அவளின் கவலையே வேறு. சொந்தபந்தங்கள் எல்லோரையும் பார்க்க வேண்டுமென்ற அவளின் ஆசை நிராசையாய் போனதே!

தன் தந்தை புறப்பட சொன்னதை பற்றி யோசித்தவள் மெதுவாக தன் தந்தையை நெருங்கி, "டேட்... நான் ஒண்ணு கேட்கட்டுமா" என்று ஆரம்பிக்க

அவர் என்னவென்பது போல் பார்த்தார்.

"நாம நெக்ஸ்ட் வீக் தானே மலேசியா போறோம்... பேசாம இந்த ஓன் வீக் தாத்தா வீட்டில ஸ்டே பண்ணா என்ன?" என்றவள் கேட்டு வைக்க அவருக்கு தூக்கிவாரி போட்டது.

வேதாவிற்கு ஆனந்தம் கலந்த அதிர்ச்சி.

"யோசிச்சிதான் பேசிறியா வாணிம்மா" மகளை அவர் அதிர்ச்சியாய் பார்த்து கேட்க,

"வாட்ஸ் ராங் இன் இட்?" என்றாள்.

"இதெல்லாம் நீ போய் பார்த்துட்டு வந்தியே... அவன் சொல்லி கொடுத்தானா உனக்கு?" என்றவர் முறைக்க,

"நோ டேட்... நானேதான் சொல்றேன்... எனக்கு ரொம்ப ஈகரா இருக்கு... எல்லோரையும் பார்க்கனும்னு... ப்ளீஸ் போலாமே" என்றவள் கெஞ்சலாய் கேட்க,

"முடியாது வாணிம்மா" என்று தீர்க்கமாய் உரைத்தார்.

"டேட் டேட்... ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ஒகே சொல்லுங்க... ஐம் பெக்கிங் யூ... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்" என்று அவள் எந்தளவு முடியுமோ அந்தளவு இறங்கிய தொனியில் கேட்க,


வேதா தன் கணவனின் பதிலுக்காக ரொம்பவும் ஆர்வமாய் எதிர்பார்த்திருந்தார்.

என்றுமே மகளின் எந்த விருப்பத்திற்கும் மறுப்பு தெரிவிக்காத சபரிக்கு அவளின் அந்த வேண்டுதல் சங்கடத்தை தோற்றுவித்தது.
*****


குருவுக்கு காலை உணவை பரிமாறி கொண்டிருந்தார் தங்கம். அவர் முகத்திலோ அத்தனை இறுக்கம்.

"ம்மோவ்... இப்ப என்னாயிடுச்சுன்னு முகத்தை இப்படி தூக்கி வைச்சிட்டிருக்கீக"

"நான் எப்படி இருந்தா உனக்கு என்னவே... சாப்பிட்டிட்டு கிளம்பி போய் உன் சோலியை பாரும்" என்க,

"இப்ப என்னாயிடுச்சு" என்றவரை கோபமாய் பார்த்தான்.

"என்னாயிடுச்சுன்னா கேட்குதே... உங்க அக்காவும் ஐஸ்ஸும் வந்து சாமியாடிட்டாக... இவகளே இப்படின்னா.. உன் இரண்டாவது அக்காளுக்கும் ராகினிக்கும் மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சுது அவ்வளவுதான்... ஊரை உண்டுயில்லன்னு பண்ணிடுவாங்களாக்கும்" என்றவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

எழுந்து கை அலம்பிக் கொண்டவன்,"யார் என்ன சொன்னாலும் சரி... நான் ஷிவானியைதான் கட்டிக்கிடுவேன்" என்றான்.

"டே... உரக்க பேசாதே... உங்க ஐயன் உள்ளரதான் இருக்காக" என்றவர் குரலை தாழ்த்தி எச்சரிக்க,

"ஏன் எனக்கென்ன பயம்... ஷிவானியை கட்டி நான் அவளை இந்த வீட்டு மருமவளா கூட்டிட்டு வரத்தான் போறேன்" என்று உணர்ச்சிவசப்பட்டு சத்தமாய் சொல்ல முருகுவேல் வெளியே வந்து எட்டி பார்த்தார்.

குரு சட்டென்று பதறி கொண்டு, "ம்மா... நேரமாயிடுச்சு... நான் மெஸ்ஸுக்கு கிளம்பிடுதேன்" என்று விறுவிறுவென நழுவி கொண்டு வெளியேற தங்கம் மகனின் வீரதீரத்தை எண்ணி உள்ளூர சிரித்து கொண்டார்.

அவன் வேட்டியை மடித்து கட்டி கொண்டு யாரிடம் வம்புக்கு போனாலும் தன் தந்தையை கண்டால் அடக்கி வாசித்து கொள்வான்.

அவன் வாசல்புறம் வர வள்ளியம்மை அவனிடம்,

"எலகுரு... வரும் போது வெத்தலை வாங்கிட்டு வாவே" என்று அதிகாரமாய் சொல்ல,

"எதுக்கு? வெத்தலையை கொதப்பி கொதப்பி இங்கனயே துப்பி வைக்கவா?"

"வேற எங்கிட்டு துப்ப? உன் தலையிலயா"

"உனக்கு இருந்தாலும் கொஞ்சநஞ்சம் குசும்பில்ல கிழவி" என்று தன் பாட்டியை கோபமாய் அவன் கடிந்து கொண்டிருக்கும் போது,

வீட்டின் வாசலின் புறம் ஒரு கார் வந்து நின்றது. அவன் யாரென்று பார்க்க எதிரே வந்து நின்ற காரில் ஷிவானி வந்திறங்க அவன் அப்படியே திகைத்து நின்றுவிட்டான்.

"ஹாய் மாம்ஸ்" என்றவள் புன்னகையோடு குருவை பார்த்து கையசைக்க அவனும் பதிலுக்கு கையசைக்க யத்தனிக்கும் போது,

சபரி காரிலிருந்து கீழே இறங்கவும்,

தான் மேலுயர்த்திய கரத்தை சட்டென்று இறக்கி கொண்டான்.

ஹாய் ப்ரண்ட்ஸ்,
முந்தைய பதிவிற்கான உங்கள் எல்லோரின் கருத்தும் மிக அருமை. இந்த கதையில இனிதான் நிறைய கலட்டா காதல் எல்லாம் இருக்க போகிறது.


தொடர்ந்து படிச்சி என்ஜாய் பண்ணுங்க

Happy reading:love::love::love:

நாளைக்கு Ud தர முடியுமா தெரியல. பட் முடிஞ்சளவு முயற்சி பன்றேன். Bye
ஆகா
கணினி மரத்திலிருந்து கைகிட்டயே.
No some twist
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top