• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Konjam vanjam kondenadi - 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
நண்பர்கள் தின வாழ்த்துக்களோடு இந்த பதிவு.


6. மனச்சுமை


அந்த வீட்டின் முகப்பறையில் அரவிந்தன் தெளிவற்ற நிலையில் அமர்ந்திருக்க நளினி அவரிடம்,

"என்னங்க இது புது குழப்பம் ?" என்று மெலிதான குரலில் வினவினார்.

அரவிந்தன் பதில் பேசாமல் யோசனையோடு சபரியை பார்க்க, அவரோ அடங்கா கோபத்தோடு இப்படியும் அப்படியும் நடந்து கொண்டிருந்தார்.

யாருக்குமே இந்த பிரச்சனையை எப்படி எதிர்கொள்வதென்றே புரியவில்லை.

ரஞ்சன், சங்கீதா, மோகன் என்று மூவரும் அங்கேதான் இருந்தனர். அவர்களுக்கும் ஓரளவுக்கும் விஷயம் பிடிபட்டது.

இந்த விஷயம் மோகனுக்கு அதீத ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. அதுவும் குருவை பற்றி தான் மரியாதையின்றி பேசிய போது ஷிவாணிக்கு ஏற்பட்ட கோபம் இயல்பானதல்ல என்பது இப்போது புரிந்தது.

தான்ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே. அது எத்தனை உண்மை என்று எண்ணிமிட்டு கொண்டான்.

ஆனால் நடந்தேறிய நிகழ்வை பற்றி இந்த நொடிவரை அறியாதவள் ஷிவானிதான்.

சபரியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்திருக்க அரவிந்தன் அவரை பொறுமையோடு அணுகி,

"வேதாவை போய் சமாதானப்படுத்து சபரி" என்றார்.

தன் மாமனின் வார்த்தைக்கு மறுபேச்சே பேசமாட்டார் சபரி. அந்தளவுக்கு மரியாதை. விருப்பமில்லையெனினும் அவர் சொன்ன வார்த்தைக்காக தன் அறைக்கு சென்றார்.

"ஏன் மீ இப்படி அழுதிட்டிருக்கீங்க?... என்ன மீ ஆச்சு?" என்று ஷிவானி தன் அம்மாவிடம் கெஞ்சலாய் கேட்டு கொண்டிருக்க,

"நீ போ வாணிம்மா... நான் அம்மாகிட்ட பேசிக்கிறேன்" என்றார் சபரி இறுக்கமான பார்வையோடு!

ஷிவாணி குழப்பமுற தன் தந்தையை ஏறிட்டு, "என்னதான் நடந்துச்சு ? வந்துட்டு போனவர் யாரு டேட் ?" என்று கேள்வி எழுப்ப,

வேதா அந்த நொடியே தன் அழுகையை விழுங்கி கொண்டு, "பதில் சொல்லுங்க... உங்க பொண்ணு கேட்கிறா இல்ல" என்று கேட்டு தன் கணவனை உக்கிரமாய் நோக்கினார்.

அழுது சிவந்திருந்த அந்த விழிகளில் எவ்வளவு வலியும் வேதனை இருந்ததோ அந்தளவுக்கு கோபம் இருந்தது.

ஷிவானி இருவரையும் மாறி மாறி பார்க்க,

சபரிக்கும் கோபம் தலைதூக்கியது.

அவர் அதனை தன் மகள் முன்னிலையில் காட்டி கொள்ள விரும்பாமல், "வாணிம்மா நீ போ" என்றார்.

"நீ இங்கேயே இரு... எதுவாயிருந்தாலும் உன் டேட் உன் முன்னாடியே பேசட்டும்" என்று வேதா சொல்ல யார் சொல்வதை கேட்பதென்று புரியாமல் ஷிவானி ரொம்பவும் சங்கடமாய் உணர்ந்தாள்.

சபரி சிரமப்பட்டு தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவர், "வேண்டாம் வேதா... இந்த விஷயத்தை பத்தி பேசின்னா நமக்குள்ள தேவையில்லாம பிரச்சனைதான் வளரும்" என்று அமர்த்தலாகவே உரைக்க,

"முடியாது... எனக்கு இந்த விஷயத்தை பத்தி இப்பவே பேசனும்" என்று வேதா கோபமாய் உரைத்தார்.

"இரண்டு பேரும் எந்த விஷயத்தை பத்தி பேசிட்டிருக்கீங்க" என்று ஷிவானி இருவரிமும் பொதுப்படையாக கேள்வி எழுப்ப,

சபரிக்கு கோபம் பொங்கியது.

அவர் தன் மனைவியிடம், "வேதா விட்டுடு... அப்புறம் பேசிக்கலாம்" என்று பல்லை கடித்து கொண்டு சொல்ல,

"விட்டுடுவா... இது வரைக்கும் நான் உங்களுக்காக விட்டதெல்லாம் பத்தலயா? இன்னும் என்கிட்ட என்னங்க இருக்கு விடறதுக்கு" என்றவர் தாளமுடியாமல் முகத்தை புதைத்து கொண்டு கண்ணீர் வடிக்க, ஷிவானியின் மனம் ரொம்ப இளகியது.

"ப்ளீஸ் மீ... அழாதீங்க" என்றவளின்
விழியிலும் நீர் எட்டி பார்க்க, சபரிக்கு அந்த நொடி கோபத்தை விட்டொழித்தே தீர வேண்டிய கட்டாயம் நேரிட்டது.


"சரி... இப்போ என்னதான் பண்ணனும்ங்கிற" என்றவர் மனைவியிடம் இறங்க,கணவனை ஒரு சில நொடிகள் ஆச்சர்யமாய் பார்த்தவள் பின் சற்று தெளிவுபெற்று,

"நாம எல்லோருமா போய் சிவானி நிச்சியதார்த்தத்துக்கு எங்க குடும்பத்தில இருக்கிறவங்க மரியாதையா அழைக்கனும்" என்று அழுத்தமாய் வேதா சொல்லி முடித்த மறுகணம்,

சபரி அவரை எரிப்பது போல் பார்த்தார்.

அப்போது ஷிவானி,

"ஆமா ப்பா... நானே சொல்லனும்னு நினைச்சேன்... தாத்தா வீடு இங்கதானே இருக்கு... கூப்பிடுவோம்... எனக்கும் அவங்கள எல்லாம் பார்க்கனும் போல ஆசையா இருக்கு" என்றாள் ஆவல் ததும்பிய விழிகளோடு!

சபரி பொறுக்க முடியாமல், "என்ன பேசிற வாணி... அவங்க எல்லாம் சேர்ந்து அப்பாவை எப்படி அவமானப்படுத்தினாங்கன்னு உனக்கு நான் சொல்லி இருக்கேன் இல்ல... அதெல்லாம் நீ மறந்திட்டியா?" என்று கோபமாக கேட்கவும் ஷிவாணி குற்றவுணர்வோடு தலையை கவிழ்ந்து கொண்டாள்.

வேதா கணவனை பார்த்து, "என் பொண்ணுகிட்ட இப்படி சொல்லி சொல்லியே என் குடும்பத்தோடு ஓட்ட விடாம பண்ணிட்டீங்க இல்ல" என்றவர் சீற்றத்தோடு வினவ,

"ஆமான்டி ஓட்ட விடாம பண்ணிட்டேன்... எனக்கு உன் பொண்ணுக்கு அவங்க வேண்டாம்... நீ வேணா போய் ஓட்டிக்கோ" என்று வார்த்தைகளை கடித்து துப்பினார் சபரி.

பிரச்சனை தீவிரமாகி கொண்டே போவதை ஷிவானி கண்டுகொண்டாலும் கையறு நிலையில் அவள் என்ன செய்வதென்று புரியாமல் விழிக்க,

வேதா தன் கணவனை நோக்கி, "என் குடும்பம் வேண்டாம்னா நானும் வேண்டாம்... உங்க பொண்ணோட நிச்சியதார்த்தத்தை நீங்களே நடத்திக்கோங்க" என்று சொன்ன மறுகணம் சபரியும் ஷிவானியும் அதிர்ந்தனர்.

"என்ன மீ? இப்படியெல்லாம் சொல்றீங்க"

"வரலன்னா போடி... என் பொண்ணு நிச்சியதார்த்தத்தை எப்படி நடத்தனும்னு எனக்கு தெரியும்" என்று அசாதாரணமாய் சொல்லிவிட்டு அவர் அங்கிருந்து அகன்றுவிட,

வேதா விரக்தியுற தன் மகளை நோக்கி,

"பார்த்தியா வாணிம்மா... உங்க டேட் என்னை எவ்வளவு சுலபமா தூக்கி எறிஞ்சிட்டாருன்னு... அவருக்கு நான் முக்கியமே இல்லை... என் உணர்வுகளை பத்தி அவருக்கு கவலையே இல்லை... ஆனா நான் மட்டும் அவர் மானம் கௌரவம் எல்லாத்தை சாகிற வரைக்கும் தூக்கி சுமக்கனும்... சே... ஏன்டா பொம்பள ஜென்மமா பொறந்தோம்னு இருக்கு" என்று தலையில் அடித்து கொள்ள,

இவர்கள் இடையில் நிகழ்ந்த சம்பாஷணையில் அதிகமாய் காயப்பட்டு நின்றது ஷிவானிதான்.

வேதனையோடு அவள் அந்த அறையை விட்டு வெளியேற,

அப்போது சபரி நளினியிடமும் அரவிந்தனிடமும் தன் மனைவி சொன்னதை பாடமாய் படித்து கொண்டிருந்தார்.

ஷிவானி களையிழந்த முகத்தோடு அவர்கள் முன்னிலையில் வந்து நிற்க தன் மகள் கலங்கி நிற்பதை பார்த்தவர், "வாணிம்மா" என்றவர் அழைத்தபடி ஷிவானியின் அருகாமையில் செல்ல,

அவள் உடனே தன் தந்தையின் தோள் மீது சாய்ந்தபடி கண்ணீர் பெருக்க, அதனை பார்த்து அவர் உள்ளம் கலங்கி போனார்.

"என்ன வாணிம்மா?" வேதனையோடு அவர் கேட்க,

அவள் கண்ணீரோடு,

"ப்ளீஸ் டேட்... எனக்கு இந்த எங்கேஜ்மேன்ட் வேண்டாம்... இந்த விஷயத்துக்காக நீங்க இரண்டு பேரும் இப்படி சண்டை போட்டுகிறதை என்னால பார்க்க முடியல... ப்ளீஸ் நாம மலேசியாவுக்கே போயிடலாம்... " என்று தழுதழுத்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தவளை அணைத்து பிடித்து அவர் அமைதியடைய செய்ய,

அவள் வெகுநேரம் தன் தந்தையிடம் அழுது அழுது உணவு உண்ணாமல் கூட உறங்கி போயிருந்தாள்.

இன்னமும் குழந்தைத்தனம் மாறாமல் இருந்த ஷிவாணியின் அந்த கண்ணீர் சபரியின் மனதை கரைத்திருந்தது.

அதே நேரம் ஆரவிந்தனும் சபரியிடம், "நாமெல்லாம் போய் வேதா வீட்டில இன்விடேஷன் வைச்சிட்டு வந்திருவோமே... அதுதான் முறையும் கூட" என்க,

சபரி ஆழமான யோசனையோடு, "அது மரியாதை தெரியாத குடும்பம் மாமா... பார்த்தீங்க இல்ல... காலையில அவ தம்பி... நாமெல்லாம் இருக்கும்னு மட்டு மரியாதை இல்லாம பேசிட்டு போனத" என்றதும் நளினி முந்திக் கொண்டு,

"ஆமா ஆமா... கொஞ்சங் கூட மரியாதையே தெரியாதவன்" என்றார்.

"நீ வேற சும்மா ஏத்திவிடாதே" என்று அரவிந்தன் மனைவியை அடக்கிவிட்டு,

சபரியிடம் திரும்பி, "கொஞ்சம் அந்த தம்பி நிலைமையில இருந்து யோசிச்சி பாரு சபரி... அவன் இடத்தில நீயும் உன் இடத்தில நானும் இருந்தா உனக்கும் இதே கோபம் வந்திருக்கும்" என்றார்.

சபரி கர்ஜனையான பார்வையோடு திரும்பியவன், "அப்போ அவங்க பக்கம்தான் நியாயம் இருக்குன்னு சொல்றீங்களா? நான் என்னைக்காவது மரியாதை குறைவா உங்ககிட்ட நடந்திருப்பேனா மாமா... ஆனா அந்த குடும்பத்தில இருக்கையவங்க நான் அந்த வீட்டோட மூத்த மருமகன் கூட பார்க்காம என்னை அவமானப்படுத்தினாங்க...

அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேன்... பிஸ்னஸ் பண்ண கொஞ்சம் பணம் கம்மியாயிருந்ததுன்னு கேட்டேன்... அதுக்கு பணத்துக்காகதான் என் பொண்ணை கல்யாணம் பண்ணிங்களான்னு அவங்க அப்பாரு கேட்டுட்டாரு... போதாக் குறைக்கு அவளோட சித்தப்பன் சித்தப்பன் மகன் அயித்தன் மகன்னு எல்லாம் என்னை அடிக்க கை ஓங்கின்னு வந்தானுங்க... அதை எல்லாம் நான் எப்படி மறக்க...

வேதாவை நான் காதலிச்சி கல்யாணம் பண்ணிட்டேன் என் எல்லாம் சேர்ந்து ஒரு சின்ன விஷயத்தை ஊதி பெரிசாக்கி... எங்க உறவையே அத்துவிட்டுட்டு...

இப்ப வந்து அவன் தம்பி கேட்கிறான்... அப்படி என்ன அவங்க ஐயனும் ஆத்தாவும் செஞ்சிட்டாங்கன்னு... பொடி பையன்... நடந்ததெல்லாம் அவனுக்கு என்ன தெரியும்... வந்துட்டா பெரிசா தாய்மாமனாம் இல்ல" என்றுரைக்கும் போதே அவர் முகம் அத்தனை உக்கிரமாய் மாறியிருந்தது.

அரவிந்தன் அவன் தோளை தொட்டு, "அப்ப என்ன பண்ணலாம்னு சபரி... நிச்சயத்துக்கான ஏற்பாடெல்லாம் நிறுத்திடலாமா?" என்று கேட்க,

நளினி பதறி கொண்டு, "என்னங்க பேசிறீங்க?" என்று அதிர சபரி அப்போது,

"எதுக்கு நிறுத்தினும்? அதெல்லாம் வேண்டாம்... அவங்கள போய் கூப்பிடனும் அவ்வளவுதானே... கூப்பிட்டா போச்சு" என்றவர் சொல்ல அரவிந்தனுக்கும் நளினிக்கும் மனம் லேசாய் நிம்மதி பெற்றது.

இந்த விஷயத்தை குறித்து வேண்டா வெறுப்பாய் மனைவிடம் சபரி சொல்ல வேதாவின் ஆதங்கமும் லேசாய் அடங்கியிருந்தது.

அவர்கள் எல்லோரும் வேதாவின் குடும்பத்தை நிச்சயத்திற்கு அழைக்க புறப்பட்டனர்.

குரு அப்போதுதான் மெஸ்ஸிலிருந்து கிளம்பி தன் வீட்டை அடைந்திருந்தான்.

பழமையை அப்படியே பறைசாற்றும் மச்சு வீடு அது. மனசோர்வோடு அப்படியே வீட்டின் வெளிதிண்ணையில் அமர்ந்து கொண்டான் குரு.

சுப்புவும் அவன் உடனிருந்தான்.

"என்னல... நானும் காலையில இருந்து பார்க்குதேன்... என்னவோ போல இருக்க... ஏதாச்சும் பிரச்சனையா வே" என்று கேட்க,

"ஏன்ல இப்படி கேள்வி கேட்டு என்னை உசுரை எடுக்க... கிளம்பு வே" என்று கோபமாக தன் நண்பனிடம் எகிறினான் குரு.
 




Last edited:

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
அவன் மனமோ தன் தமக்கையை நேரில் பார்த்துவிட்டு வந்த நொடியிலிருந்து கொந்தளித்து கொண்டிருந்தது. அதுவும் ஓரே ஊரில் இருந்து கொண்டு அவர் தன் மகளுக்கு திருமண ஏற்பாடுகள் பண்ணுவதை அவனால் தாங்கவே முடியவல்லை. அவன் உள்ளமெல்லாம் பாரங்கல்லை வைத்தது போல் அத்தனை பாரமாய் இருக்க, இவற்றோடு சேர்ந்து ஷிவானியின் நினைப்பு வேறு அவன் மனச்சுமையை அதிகப்படுத்தியதென்றே சொல்ல வேண்டும்.

சுப்பு தன் நண்பனை விடாமல் "அப்படி என்னதான்ல யோசிக்கிடுதே... என்கிட்ட சொல்ல கூடாதா" என்று தாழ்ந்த குரலில் கேட்க,

திண்ணையில் அமர்ந்திருந்த குருவின் பாட்டி வள்ளியம்மை, "என்னல இரண்டு பேரும் பொட்ட புள்ளையகளாட்டும் குசுகுசுன்னு பேசிக்கிடுதீக" என்றார்.

"ஓ... சத்தமா பேசிட்டா மட்டும் உம்மை காதில கேட்டிடுமோ?!" என்றவன் எளக்காரமாய் உரைக்க வள்ளியம்மையின் கரத்திலிருந்த கொம்பு அவன் நெற்றிக்கு பாய, அவன் சாமர்த்தியமாய் விலகி தப்பி கொண்டான்.

"ஏ கிழவி... இப்ப என்ன சொல்லிபுட்டாகன்னு என்னை அடிக்க" என்று சுப்பு முறைத்து கொண்டு நிற்க,

குரு அப்போது நினைவுபற்றவன், "என்னவே எங்க அப்பத்தாகிட்ட சலம்புதுவே... உனக்கு வேற ஜோலிகீலி ஒண்ணும் இல்லையோ ?! அதான் அப்பவே கிளம்புன்னு சொன்னதோம்ல... கிளம்புவே" என்று மிரட்டலாய் உரைத்துவிட்டு அவன் உள்ளே விறுவிறுவென சென்றான்.

சுப்பு ஏக்க பார்வையொன்றை வாயிலின் புறம் வீசியபடி, போகலாமா வேண்டாமா என யோசித்திருக்க அவன் எதற்காக காத்திட்டிருந்தானோ அது நடந்தது.

ஐஸ்வர்யா பள்ளி சீருடையில் துள்ளி கொண்டு ஓடி வந்தவள் நேராக வீட்டிற்குள் செல்ல பார்க்க,

சுப்பு அவளை வழிமறித்து, "என்ன ஐஸ்... எங்களை எல்லாம் கண்டுகிட மாட்டியா?!"என்றான்.

அவனை மேலும் கீழும் பார்வையால் அளவெடுத்தவள், "கண்டுகிட்டோம் போதுமா?! இப்ப வழியை விட்டு நகரும்" என்று கேட்க,

"கொஞ்சம் நஞ்சம் திமிரில்லடி உனக்கு"

"இப்ப வழியை விடறீகளா... இல்ல மாமனை கூப்பிடட்டுமா"

சட்டென்று வழியை விட்டு ஓதுங்கியவன்,

"வேண்டாம் தாயி... ஏற்கனவே சிங்கம் சிலிப்பிட்டிருக்கு... நீ வேற கூப்பிட்டு... அப்புறம் அது என் மேல வந்து பாயறதுக்கா?" என்று சொல்லியவன் தன் பைக்கை எடுத்து கொண்டு படபடவென புறப்பட ஜஸ்வர்யா வீட்டிற்குள் ஆர்வமாய் ஓடினாள்.

அந்த வீடு அகலமாய் அல்லாமல் நீளமாய் உள்ளே உள்ளே சென்று கொண்டிருக்க,

ஓவ்வொரு நிலப்படிகளை கடந்து சென்றவள் சுற்று முற்றும் தேடலாய் பார்த்து தேடிவிட்டு கடைசியாய் அடுப்பங்கறைக்கு நுழைந்தாள்.

அங்கே குருவின் தாய் தங்கம் சாப்பிட்ட பாத்திரங்களை சுத்தம் செய்து கொண்டிருக்க,

"என்ன ஆச்சி ? மாமாவை எங்கன தேடியும் காணோம்... எங்க போனாக?" என்று வினவினாள்.

அவர் அவளை திரும்பி ஓரு பார்வை பார்த்துவிட்டு, "நான் எங்கல அவனை பார்த்தேன்... அவன் வந்ததையே நான் பார்க்கையிலயே... ஆமா அவன் வந்துட்டன்னு உனக்கு யாருவே சொன்னது ?" என்று கேட்க,

"மாமாவோட புல்ட் சத்தம்தான் ஊரையே கூட்டும்ல... அதை கேட்டுட்டுதான் ஓடியாரேன்" என்றாள்.

"உனக்கு படிக்கிற சோலியெல்லாம் ஓண்ணும் இல்லையோ ?"

"இப்ப படிச்சி கிழிச்சி என்னத்தை பண்ண... பேசாம எனக்கு மாமானை கட்டி வைச்சிரும்... நான் இங்கனயே இருந்து உனக்கு உதவியா எல்லா வேலையையும் பார்த்துகிடுவேன் இல்ல" என்று ஐஸ்வர்யா சமார்த்தியமாய் பேசி தன் பாட்டியின் தோளில் கட்டி கொள்ள,

"அடிபோடி... இப்படியே எத்தனை பேருடிதான் சொல்வீக... பெரியவ மகளும் இதேதான் சொல்றா... நீயும் இதேதான் சொல்ற... நான் என்னடி அவனை கூரு போட்டாடி தரமுடியும்?"

"அதெல்லாம் எனக்கு தெரியாது... மாமாவை எனக்குதான் கட்டி வைக்கனுமாக்கும்" என்றவள் பிடிவாதமாய் நிற்க,

குரு அப்போது அவள் பின்னோடு நின்று தலையிலேயே நங்கென்று கொட்டு வைக்க அவள் அதிர்ந்து திரும்பினாள்.

"வயசுக்கு ஏத்த பேச்சாடி பேசிட்டிருக்க... வகுந்திருவேன் வகுந்து... உனக்கு எனக்கும் பத்து வயசு வித்தியாசமாக்கும்... இன்னொரு தடவை கல்யாணம் அது இதுன்னு பேசி பாரு... உரிச்சி உப்பு கண்டம் போட்டுடிறேன்" என்று கோபம் பொங்க சொல்லியவன் அடுக்களையை விட்டு வெளியேறினான்.

அவள் தலையை தேய்த்து கொண்டே அவன் பின்னோடு வந்து,

"அப்போ என்னை கட்டிக்கிட மாட்டீகளா? அந்த ராகினியதான் கட்டுவீகளோ... அவளூக்கும் உங்களுக்கும் ஒன்பது வயசு வித்தியாசம் அது மட்டூம் பரவாயில்லையோ?!" என்றவள் பொறுமி கொண்டே கேட்க,

"நான் எப்போடி ராகனி கட்டிக்கிறேன்னு சொன்னேன்"

அவள் நிம்மதி பெருமூச்சுவிட்டு,

"அப்போ என் வயசுதான் உங்களை தடுக்குதோ" என்று கேட்க

"ஆமான்டி உன் வயசுதான் என்னை தடுக்குது" என்றான். அப்போது மகனுக்கு காபியோடு தங்கம் வந்து நிற்க,

ஐஸ்வர்யா அவரிடம், "ஏன் ஆச்சி... தாத்தாவுக்கும் உமக்கும் எம்புட்டு வயசு வித்தியாசம்" என்று கேட்க,

"அதென்னடி பத்து பன்னிரெண்டிரூக்கும்" என்று இயல்பாய் சொல்லியவர் காபியை வழங்கிவிட்டு உள்ளே செல்ல,

குருவும் காபியோடு வந்து முற்றத்தில் அமர்ந்து கொண்டு குடிக்கலானான்.

ஐஸ்வர்யா அவன் அருகில் வந்து அமர்ந்து கொண்டு, "ஏன் மாமா?... ஆச்சி சொன்னதை கேட்டுகீளா... அவையங்களுக்குள்ள பத்து பன்னிரெண்டி வயசு வித்தியாசமாம்" என்க,

"அதுக்கு" என்று கேட்டு முறைத்தான்.

"என்னை கட்டிக்கிறது" என்று அவனிடம் கெஞ்சலாய் அவள் கேட்க குரு தலையை பிடித்து கொண்டான். அவள் ஓயாமல் பேசி கொண்டிருக்க பொறுமையிழந்தவன்,

"யம்மோவ்... இங்கன கொஞ்சம் வாயேன்.. உன் பேத்தி என்னை பேசியே கொல்லுதா" என்று கத்தலாய் அழைக்க, தங்கம் பதறி கொண்டு அவர்கள் முன்னிலையில் வந்து நின்று,

"ஏன்டி வந்ததும் வராததுமே அவன்கிட்ட வம்பு வளர்த்திட்டிருக்கவே... உன் வீட்டுக்கு போடி" என்று அதட்டினார் தங்கம்.

"ஆ போறாங்க... போறாங்க... அம்மா சீனி கேட்டாக... கொடுங்க... வாங்கிட்டு போறேன்" என்று சொல்ல,

"உனக்கும் உங்க அம்மாவுக்கும் இதே பொழப்பா போச்சு" என்று அலுத்துக் கொண்டே தங்கம் சீனியை ஒரு குவளையில் எடுத்து வந்து பேத்தியின் கரத்தில் தினிக்க,

"போயிட்டு வர்றேன் மாமா" என்றாள்.

"வராதே... அப்படியே போயிடு" என்றவன் சொல்லி முடிக்கும் போதே ஜஸ்வர்யா மீண்டும் திரும்பி வந்தாள்.

"மாமா" என்றவள் அழைக்க,

"நீ இன்னும் போலயாவே"

"யாரோ கார்ல வந்திருக்காக மாமா" என்று மூச்சிறைத்து கொண்டபடி சொல்ல அவன் வெளியே எட்டி பார்த்தபடி நடந்து வாயிலுக்கு சென்றான்.
***********
ஹாய் தோழமைகளே,

நெல்லை தமிழ் கதையில மட்டுமில்ல... உங்க கமெண்ட்ல கூட தெறிக்குது.
ரொம்ப ஹேப்பியா அந்த பேச்சு வழக்கு நம்மல இந்தளவுக்கு ஈர்த்திருக்கிறது.

முந்தைய பதிவிற்கு ஏகப்பட்ட கமெண்ட்ஸ். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Superana epi sisஅம்மா வீட்டோடா ஒட்டு உறவு இல்லாம கணக்காபாத்துகிட்டாரு போல சபரி இந்த நளினி என்னமா தம்பிய ஏத்தி விடுது மகளுக்காக பத்திரிகை வைக்க போராகளா.n ice sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top