• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Reviews KVI என் பார்வையில்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
கனலை_விழுங்கும்_இரும்பு


விலைமாதராய் வாழும் பெண்ணின் மனஉணர்வுகளை தத்ரூபமாக விளக்கிய கற்புநிலை யாதெனில் பிறகு


உங்கள் படைப்பான கனலை விழுங்கும் இரும்பில் விசாரணை அதிகாரியாக வலம் வரும் நாயகியின் வாழ்வியிலை சிறப்பாக காட்டியயிருக்கீங்க Kathambari


வாழ்த்துக்கள்?


தனித்துவமான அழகான எழுத்து நடை...


கதை சொல்லும் பாணி மிகப் புதுமை...


உரையாடல்கள் எதார்த்தம்...


நல்ல படைப்பு...


ஆனால் Romance partல் கவனம் செலுத்திய அளவுக்கு Thriller part இல்லை. கொஞ்சம் தொய்வு...


Cid மூன்று பேரும் பெண்களாகவே இருப்பதாக காட்டியதில் எதார்த்தமில்லைனு தோணுச்சு. கனகா மேம் Head என்பதற்கான தகுதியில் கொஞ்சமும் பொருந்தவில்லை.


எளிதான தமிழாக இருந்தாலும் ரொம்பவும் வர்ணனையாக மற்றும் அதீத உவமைகளாக இருந்த காரணத்தால் கேஸ் விசாரணையில் தெளிவின்மை தென்பட்டது. சில இடங்கள் புரியாமல் இரண்டு முறை படிக்க நேரிட்டது.


உணர்வுகள் பேசும் கற்புநிலை யாதெனில் கதைகளில் கவிதைகள் வலம் வருவது அழகு...


சயனா மாதிரி இரும்பு மனுஷியை காட்டும் போதும் இவ்வளவு கவிதை தேவையான்னு தோணுச்சு...


கொஞ்சம் குறைச்சிருக்கலாம்...
(முழு கதையாக படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட உணர்வு.)


இதெல்லாம் தாண்டி புதுமையாக எழுதணும்கிற உங்க
ஆர்வமும் தேடலும் மற்றும் உங்க தனித்துவமான நடையும் எழுத்து துறையில் உங்களுக்கு தனி அங்கீகாரத்தை கொடுக்கும் என்பதில் மாற்று கருத்தே இல்லை. Kathambari


உங்கள் வெற்றி பயணம் தொடர ஒரு வாசகியாகவும் அதேநேரம் சகஎழுத்தாளினியாகவும் என் வாழ்த்துக்கள் ❤❤❤


-மோனிஷா
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,379
Reaction score
22,011
Location
Tamil Nadu
???????? மோனிஷா...
கனலை விழுங்கும் இரும்பு. ..
கதையைப் பற்றி அருமையா சொல்லிட்டிங்க. ..
என்னைப் போல் கவி... காதல். .. படைப்பை விரும்புவோரின் மனதில் நீங்காத இடம் பிடிச்சிடுச்சும்மா. ..
c751f1a94691b2fb307c963c32c82dc9.gif
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
மிக்க நன்றி மோனி அக்கா♥..

இந்தக் கதை எப்படி என்றால், 'ஒரு மாஸ் கதாநாயகி மூவி' எழுத்து வடிவில்… ஆதலால் நம்பகத்தன்மை வருவது இயல்பு… இது பரிசோதனை முயற்சிதான்…

உவமைகள் வர்ணனைகள் பற்றி…
இந்தக் கதையில்,
எழுத்தாளர் சொல்ல நினைக்கும் விடயங்களை, அந்தக் காட்சியில் இருக்கும், பேச முடியாத ஒரு பொருளைக் கொண்டு பேசுவது போல் காட்சிப்படுத்தப் பட்டிருக்கும்… ஆதலால் உங்களுக்கு, அத்தகைய உணர்வு வந்திருக்கலாம்… இதுவும் ஒரு முயற்சியே…

சுருக்கமாக இரும்பு மனிதிக்குள் இருக்கும் இதயம் பற்றிய கதைதான், இது …

எனினும் நீங்கள் கூறும் கருத்துக்களை நினைவில் கொள்கிறேன்..

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மோனி அக்கா ?
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,488
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
அருமையான விமர்சனம் மோனிமா. இன்னும் கொஞ்சம் எளிமையாக இருந்தால் அனைத்து வாசகர்களையும் கவரும் என்பதே என்னுடைய கருத்து. எனக்கு காதம்பரியின் எழுத்து நடை மிகவும் பிடிக்கும். அழகான எழுத்து நடையாக இருந்தாலும் அதை கொஞ்சம் எளிமையாக கொடுக்க வேண்டும் காதம்பரி. இது எனது விருப்பம்.
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
அருமையான விமர்சனம் மோனிமா. இன்னும் கொஞ்சம் எளிமையாக இருந்தால் அனைத்து வாசகர்களையும் கவரும் என்பதே என்னுடைய கருத்து. எனக்கு காதம்பரியின் எழுத்து நடை மிகவும் பிடிக்கும். அழகான எழுத்து நடையாக இருந்தாலும் அதை கொஞ்சம் எளிமையாக கொடுக்க வேண்டும் காதம்பரி. இது எனது விருப்பம்.
அதேதான் ம்மா என்னுடைய விருப்பமும்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top