• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Madhumitha's Vallamai Thaaraayo 25

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Madhumitha

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
317
Location
Rajapalayam
வல்லமை தாராயோ 25 – மதுமிதா

சுரேகாவின் மாமியாருக்கு உடல்நலமில்லையென்று அவரைப் பார்க்க ராதா வந்திருந்தாள்.

வயோதிகத்தின் காரணமாக நடக்கும்போது லேசான தடுமாற்றம் இருக்கிறது. லோ பிரஷருக்கான மாத்திரை மட்டும் தினமும் தொடர்ந்து மறந்து விடாமல் சாப்பிடணும். வேறு பிரச்சினை இல்லை என்று டாக்டர் சொல்லி இருந்தார்.

குசல விசாரிப்புகளுக்குப் பிறகு இப்போது என்ன எழுதுகிறாய் என்று ராதா சுரேகாவை கேட்டாள்.

வல்லமை தாராயோ ங்கிற தலைப்பில் 15 அத்தியாயங்கள் எழுதி இருக்கிறேன். பாரேன் என்று லேப்டாப்பைத் திறந்தாள்.

இதுல எப்ப நான் படிக்கிறது. படிக்கிற புத்தகமா இல்லையா

புத்தகமாவா… புத்தகமெல்லாம் எப்போ வருமோ… நம்ம லைப்ரரி விஷயத்தை கொஞ்சம் எழுதினேன் ராதா. அப்புறம் அதை எடுக்காம அப்படியே வெச்சுட்டேன். எப்படி வந்திருக்குதுன்னு பார்த்து சொல்லேன். நீ நான் நம்ம ப்ரெண்ட்ஸ் எல்லாரும் இதுல இருக்கிறோம்… நம்ம போராட்டம் எல்லாமும் இதுல வருது…

அசோக் உள்ளே வருவது தெரிந்ததும், லேப்டாப்பை மூடிவைத்தாள்.

பிரிண்ட் அவுட் எடுத்து வெச்சிருந்தேன். எங்கே வெச்சேன்னு தெரியல.

நாளைக்கு பிரிண்ட் அவுட் எங்கே இருக்குன்னு பாத்து தேடி எடுத்து குடுக்கிறேன் ராதா என்றாள்.

எழுந்து பின்வாசல் கதவைத் திறக்க வந்தவள் சட்டென நினைவு வந்து

நிலைக்கண்ணாடிக்கு அருகில் இருந்த செல்பில் இருந்த பிரிண்ட் அவுட்டை ராதாவிடம் கொடுத்தாள்.

மூக்குக்கண்ணாடிக்குள் இருக்கும் கண்கள் மின்ன அதை வாங்கிக்கொண்டு வீட்டின் பின் வாசல் வழியாக ராதா கிளம்பிப் போய்விட்டாள்.

என்னம்மா எழுதறே. ராதாட்ட சொல்லிட்டு இருந்தியே என்றார் அத்தை.

லைப்ரரி விஷயத்தை எழுதிட்டிருக்கேன் அத்தை. அதைச் சொன்னேன்.

இருங்க உங்க மகன் வந்தாச்சு. அவருக்கு சாப்பாடு வெச்சுட்டு வந்துடறேன்.

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உன்னோடது எங்கே வெச்சிருக்கிறே சுரேகா என்றபடி உள்ளே வந்தான் அசோக்.

நீங்க தாங்க பத்திரமா உங்க போட்டோவோட சேர்த்து எடுத்து வெச்சிருந்தீங்க

இதையெல்லாம் எப்படி பத்திரமா வெச்சுக்கணும்னு நினைவிருக்காது. மத்த வேலையெல்லாம் சரியா செய்வே

அமைதியாக எதுக்கு போட்டோ எப்போ வேணும் என்று கூட கேட்காமல் எதுவும் பேசாமல் உள்ளே போனாள்.

மறுநாள் மாலையில் ராதா வந்தாள்.

வா வா ராதா

முழுக்க படிச்சுட்டேன் சுரேகா. நல்லா இருக்கு.

நல்லா இருக்குங்கறது இருக்கட்டும். இதுல வாசிக்கிறப்போ இருக்குற குறைகள் எதுனா இருந்தா அதைப் பத்தி சொன்னீன்னா. சரி செய்ய தோதாக இருக்கும் ராதா. பத்தாவது அத்தியாயம் எழுத வர்றப்போ மூணாவது நாலாவது அத்தியாயத்தில் இப்படி வேற மாதிரி மாத்தி எழுதி இருக்கலாமேன்னு தோணுது. வாசக பார்வையில் வாசிக்கிறவங்களுக்கு வாசிக்கப் பிடிக்கிறது போல எழுதறது முக்கியமில்லையா…

ஆமா எனக்கும் சில இடங்கள்ல அப்படி இருக்குன்னு தோணுது. ஆனா நல்லா தான் எழுதி இருக்கிறே

எங்கே வாசிக்கும் போது இங்க சரி செய்தால் நல்லா இருக்குனு அப்படி தோணுது அதைத்தான் சொல்லேன் ராதா. அதை வெச்சு நான் சரி பண்ணிக்கிறேன்

எழுதுனது நல்லா இருக்கு. நிகழ்வுகள் எல்லாம் நல்லா இருக்கு. ஆனா எல்லாமே போராட்டம் கொலை மரணம்னு சோகமா இருக்கிறார் போலயே இருக்குது சுரேகா.

குழந்தை பொறந்தது, கல்யாண விஷயம்னு கலந்துதான் எல்லாம் எழுத நினைத்திருந்தேன் தான். சரி செஞ்சு எழுதறேன்.

வேற எனக்கு சொல்லத் தெரியல சுரேகா. எல்லாமே எனக்குத் தெரிஞ்ச நிகழ்வுகளா இருக்கிறதுனால, நானும் லைப்ரரி விஷயங்கள்ல கூடவே இருந்ததுனால, நம்ம லைப்ரரிக்குத் தொடர்பில்லாத வேற யாராவது இதை வாசிச்சுட்டு சொன்னால் தான் சரியா வரும்.

வேற யாருகிட்ட காட்டறதுன்னு தெரியலயே…

சரி எழுதி என்ன பண்ணப்போறே. எதுனா போட்டிக்கு அனுப்பப் போறியா

இப்ப எதுவும் முடிவு பண்ணல. நினைவில் இருக்கிறதை எழுதி வெச்சுடணும்னு மட்டும் தான் எழுதி இருக்கிறேன். எந்தப் போட்டிக்கும் அனுப்பற எண்ணம் இல்ல. ஆனா எழுத ஆரம்பிச்சதும் வருகிற ஒரு போதை இருக்கில்ல அது பிடிச்சிருக்கு.

போதையா பிடிச்சிருக்கா… அதென்ன போதை…

இல்ல ராதா எழுத உட்காரும் வரையில நான் வேறாக இருக்கிறேன். எழுத உட்கார்ந்துட்டா என்ன பண்ணறேன்னு எனக்கே தெரியல. எழுதி முடிச்ச பிறகு பார்க்கும்போது இத்தனையும் நானே எழுதினதான்னு தோணுது. அதனால தான் அப்படியே எழுதிடறேன். பின்னாடி சரி செஞ்சுக்கலாம். இந்த ஃப்ளோவை நிறுத்த வேணாம்னு. அதனால் தான் எங்கேயெல்லாம் சரி செய்யணும்னு கேக்கறேன்.

அப்போ நான் சொல்லறதைக் கேளு. நல்லா எழுதறே. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு கதை போல நல்லா இருக்கு. ஆனா தனித்தனியா இருக்கு. தினமலர் வாரமலர்லயும் கல்கியிலயும் சிறுகதைப் போட்டி இந்த வாரம் அறிவிச்சிருக்கிறாங்க. அதுக்கு எழுதி அனுப்பேன்.

சிறுகதைப் போட்டிக்கு எழுத நேரம் இருந்தா அப்போ பாத்துக்கலாம். அதுவும் இதுபோல தானா எழுதறது போல நடந்தா அப்போ அனுப்பிக்கலாம். இப்போ ஒவ்வொரு அத்தியாயத்திலயும் தனித்தனியா இருக்கிற மாதிரி தோணுற எல்லாத்தையும் எப்படி நாவல்ல இணைக்கலாம்னு கத்துக்கிட்டா சரி செஞ்சுடலாம். நாவல் எப்படி எழுதறதுன்னு தெரியாமலே தான் 15 அத்தியாயம் வரைக்கும் வந்திருக்கு. அதே மாதிரி எல்லாத்தையும் இணைச்சு நாவாலா ஆக்கறதையும் கத்துக்கிட்டா போச்சு.

அப்போ நாவல் எழுத கத்துக்க தான் எழுதினயா

இல்ல ராதா. இத்தனை வருட நூலக போராட்டமும் ஒரு ஆவணமா இருந்தா நல்லா இருக்குமேன்னு நினைச்சேன். அரசாங்கம் இந்த விஷயத்துல எப்படி நடந்துக்குது… உயிர்ப்போராட்ட விஷயங்களில் கவனம் செலுத்தாதது போல… கண் துடைப்பு போல செயல்படுகிற அரசைப் பத்தி எழுத நினைக்கிறேன். ஆனா அதை எப்படி எழுதணும்னு தெரியாததால தோணினபடி எழுதி வெச்சிருக்கிறேன்.

ஏன் சுரேகா இப்படியே இருக்கிறே. ஆரம்பத்தில் இருந்தது போலவே இப்பவும் இத்தனை வருஷத்துக்குப் பிறகும் இப்படியே இருக்கிறே. என்று தணியும் உன் நூலக மோகம்…

கையை நீட்டி நாடகபாணியில் என்று தணியும் உன் நூலக மோகம் என்று ராதா கூறியதும் விழுந்து விழுந்து சிரித்தாள் சுரேகா.

சட்டென முகம் மாறியது. தீவிரமான முகத்துடன் ராதாவை தீர்க்கமாகப் பார்த்தாள்.

இந்த உயிர் போகும் வரையிலும் இப்படிதான் இருக்க முடியும் ராதா.

இப்படி பேசாதே சுரேகா. இதென்ன பழக்கம்

சரி நம்ம நூலகத்துக்கு இடம் கிடைக்கிற வரையிலும்னு வெச்சுக்கோயேன்

ஒருவேளை கிடைக்கலைன்னா

ம் ஒரு வேளை நம்ம நூலகத்துக்கு சொந்தமா இடம் கிடைக்கலைன்னா… அது இந்த அரசாங்கத்துக்கான தோல்வி ராதா. நான் இப்போ எழுதறது அதுக்கு ஆதாரமா என்னிக்கும் இருக்கும்.
 




Madhumitha

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
317
Location
Rajapalayam
செல்வகுமார் கேட்டுக்கொண்டபடி சுரேகா அசோக் இருவரையும் கதாபாத்திரங்களாக வைத்து எழுதப்பட்ட அந்த வயல்வெளி காட்சியை மீண்டும் மீண்டும் வாசித்துப் பார்த்தாள் சுரேகா.

அந்த ரெண்டு கதாபாத்திரங்களும் நீங்க ரெண்டு பேரும் தானே என்று செல்வகுமார் சொன்னது நினைவுக்கு வந்தது.

பெயரை மாற்றாமல் எழுதி விட்டோமோ. சரி இருந்துவிட்டு போகட்டும். மறுபடியும் எழுதும் போது பெயர்களை மாற்றி விடலாம் என்று திரைப் படத்துக்கான ஒன் லைன் ஸ்டோரி என்ன அதை எப்படி எழுதி அனுப்ப வேண்டும் என்று யோசித்தாள்.

சரி அதை செல்வகுமாரிடமே கேட்டுவிடலாம் என்று மடல் எழுதினாள்.

கீழே கொடுத்திருக்கும் இது மாதிரியான அம்சங்கள் இருப்பது போல கதை இருக்கணும்னு நினைக்கிறேன்… நினைவில் வைத்திருக்க பாயிண்ட்டுகளாக எழுதி சேமித்து வைத்துக் கொள்கிறேன்.

படத்தின் பெயர் 52 வயதினிலே என்பதால் கதையின் நாயகியின் குணாம்சங்கள் இப்படி இருக்கணும்.

1. கூட்டுக்குடித்தனம் ..பிரிந்து தனிக்குடித்தனம்... ஆனாலும் பொறுப்புகள்...

2. படித்தாலும், உலக அனுபவம் இருந்தாலும்... குடும்ப பிணைப்பில்... தனித்துவம் இல்லாது… அடையாளம் அற்றுப்போவது...

3. மெனோபாஸ் வயதின்... சிரமங்களை கடக்கும் போராட்டம்..

4. குழந்தைகள் வளர்ந்து... வேலை திருமணம் என்று பிரிந்து செல்லும்போது… மறுபடியும் இருவர் மட்டுமே சேர்ந்திருந்து… முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டிய... எதிர்கொள்ள வேண்டிய வாழ்க்கை நிலை...

5. குடும்ப , உறவுகள் , நட்புகள், தெரு, ஊர், தேசம் என கடமைகள் ....

இதில் அரசு நூலகப் பணி தேவையெனில் சேர்க்கலாம் ... அதேசமயம் ஏறக்குறைய ஏற்க விரும்பும் தனிமையே வேண்டும் என்றும் வேண்டுமென்றும் டைலெம்மா... இருமை நிலை...

மொத்தத்தில் சம்சார சந்நியாசி ... இல்லற துறவி... அதேவேளையில் காதல் ரசம் ததும்பும்... தாம்பத்திய ரசனையில் தேர்ந்த பிணி நீக்கினி ...

இப்படி இருக்க வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது என்று எழுதினாள்.

அதை வாசித்த செல்வகுமாரிடமிருந்து எந்த மனத் தடையும் இல்லாம எழுதுங்க சுரேகா. நீங்க என்ன எழுதறீங்களோ எழுதினதை மட்டும் எனக்கு குடுங்க என்று பதில் மடல் வந்தது.

புரியுதுங்க செல்வா. ஆனாலும் ஆரம்பித்தல் என்னும் முதல் சிக்கல் இருக்குதே.

அதனால் முதலில் இப்படி எழுதிப் பார்த்துக்கிறேன்.

பெரு மலையின் சிகரத்தைத் தொட ஏறுவதற்கும் முதல் அடியை தரையிலிருந்தே தான் தொடங்க வேண்டும் :)

வாழ்வின் முக்கிய லட்சியம் பணம், புகழ், வெற்றிகளைக் கடந்த மன நிச்சலனம். இதை ஆரம்பத்தில் அறிய முடிவதில்லை. அனுபவங்கள் மாறி மாறி அறைந்து உணர்த்திய பிறகு கடைசியில் அந்த அமைதியை உணர்வதாக கொண்டு போகலாமா... தத்துவார்த்த சிந்தனை எந்த போதனை சொல்வதாகவோ, அறிவுரை போலோ இல்லாமல்... வாழ்வின் பயணத்தில் தன் போக்கில் வெளிப்படுவதாக…

இதை வாசித்துவிட்டு பதில் மடல் எழுதாமல் தொலைபேசியில் அழைத்தார் செல்வா.

சுரேகா நீங்க என்ன எழுதறீங்களோ அதுதான் கதை. நான் சொன்னதும் சொன்னதுதான். அதற்கான காலக்கட்டம் வரும்போது நாம அதைப் படமாக பண்ணப் போகிறோம். என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம். யோசிக்காம எழுத ஆரம்பிங்க. என்றதும்,

சரி என்று மட்டும் சொன்னாள் சுரேகா.

என்ன தலைப்பு வைக்க வேண்டும் என்பதில் சிக்கல். கதை நாயகனின் நாயகியின் பெயரை முடிவு செய்வதில் சிக்கல் என்று ஒரு வாரம் போனது.

ஒரு நாள் எழுத உட்கார்ந்ததும் பாதி எழுதும் போதே களைப்பு வந்து லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு படுத்தாள்.

தங்கை மித்ரா வீட்டுக்குள் வந்தவள் சுரேகா படுத்திருப்பதைப் பார்த்ததும் என்ன சுரேகா என்றாள்.

ஒண்னுமில்ல... ரொம்ப களைப்பா இருக்கு. படுத்திருக்கணும் போல இருந்தது. அதான். வேறொண்ணுமில்ல

லேப்டாப் பக்கத்தில் வெச்சிருக்கிறே. எதுனா எழுதணுமா

இல்ல நாளைக்கு எழுதிக்கிறேன்

சொல்லு சுரேகா. எழுதனும்னா நான் டைப் பண்ணறேன்.

அப்போ சரி நான் சொல்லச் சொல்ல டைப் செஞ்சு தர்றியா

சொல்லு. அதான் டைப் பண்ணறேன்னு சொல்லறேன்ல.

இது வரைக்கும் கதை எதுவரை எழுதி இருக்கிறேன்னு தெரியல. ஒரு தடவை வாசிச்சுப் பாரு. எங்கே இருந்து எப்படி தொடரலாம்னு பார்க்கலாம்.

என்ன கதைக்கு தலைப்பு ஏதும் வைக்கலையா.

இல்லை. கதையே இன்னும் எழுதல. கதையை எப்படி எழுதலாம்னு குறிப்புதான். இனிமே தான் தலைப்பு வைக்கணும். இந்தக் கதை சரியாக இருக்குன்னு சொன்னால் கதையை காட்சிகளாக விரித்து இனி எழுதணும்.

மித்ரா வாசிக்க ஆரம்பித்தாள்.

க்லிங்கென்ற சத்தம் கேட்டதும் பாடிக்கொண்டிருந்த பாட்டை நிறுத்திவிட்டு வாட்ஸப் மெசேஜை பார்த்தான் ராஜா. புதிதாக ஒரு எண்ணிலிருந்து மெசேஜ் வந்திருந்தது. திறந்து பார்த்தால் ”வாழ்த்துகள் ராஜா” என்று மெசேஜ் இருந்தது. அப்போதுதான் தெரிந்தது, நண்பர்கள் குழுமத்தில் தான் பாடிய பாட்டின் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தான். அது எழுத்தாளர்களும் கலைஞர்களும் சேர்ந்திருக்கும் குழுமம். அந்த குழுமத்தின் ஒரு எண்ணிலிருந்துதான் அந்த வீடியோ பாடல் மிகவும் நன்றாக இருந்தது என வாழ்த்தி மெசேஜ் வந்திருந்தது.

தனிமையில் புதிதாக கிரியேட்டிவாக செயல்பட முடியாமல் டல்லான மூடில் இருந்தபோது, இந்த வாழ்த்து ஒரு புத்துணர்வை அளித்து புதிய உற்சாகத்தை கொடுத்தது. மெசேஜை அனுப்பியது யாரென்று பார்த்தபோது பவித்ராம்மா என்று தெரிந்தது.

இன்னும் நித்யாவிடமிருந்து எந்த மெசேஜும் வரவில்லை… ஏன் அவளிடமிருந்து ஒரு மெசேஜும் வரவில்லை எனத் தெரியவில்லை. ஒரு மாதத்திற்கு மேலாகியும் ஒரு மெசேஜும் நித்யாவிடமிருந்து வரவில்லை என்பதே ஆச்சர்யமாக இருந்தது. எப்படி அவளால் அவனை தொடர்புகொள்ள முடியாமல் இருக்க முடிந்தது என நினைத்துப் பார்த்தான்.

சிறுவயதில் வேப்பங்குளத்தில் இருவரும் ஒன்றாக விளையாடியவர்கள். ஆனால் கல்லூரியில் படிக்கும்போது முதலில் காதலில் விழுந்த போது அது அவர்களுக்குத் தெரியவில்லை. ராஜா (ராம்குமார்) சிறுவயது நித்யாவையும், நித்யா (சித்ரா) சிறுவயது ராஜாவையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

சிறுவயதில் வேப்பங்குளத்தில் கண்மாயில் விழுந்த சித்ராவை (நித்யா), பாயும் நீரின் வேகத்துக்கிடையில் நீச்சலடித்துப் போய் காப்பாற்றிக் கரை சேர்த்தவன் ராம்குமார் (ராஜா). இருவரும் காலத்தின் போக்கில் பிரிந்து இப்போது கல்லூரியில் சேர்ந்த போது அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.

தங்களை அறியாமல் இப்போது இந்த வயதில் மனம் ஒன்றிணைந்தபோது சிறுவயது நட்பா, இந்தக் காதலா இதை எப்படி முடிவு செய்வது என்ற மனப் போராட்டத்தில் இருக்கின்றனர்.

பிறகு பல தடுமாற்றங்களுக்குப் பிறகு ராம்குமார் தான் ராஜா என்றும், சித்ரா தான் நித்யா என்றும் ஒரு தருணத்தில் தெரிந்து கொள்கிறார்கள். ராம்குமார் & ராஜா, சித்ரா & நித்யா இருவரும் ஒருவரே என்பது இருவருக்கும் தெரிய வருகிறது. மகிழ்ந்து போகிறார்கள்.

வேலைக்கு ராஜா அபுதாபிக்கு வந்த பிறகும் மொபைலில் இருவரும் பேசி கொண்டுதானிருந்தார்கள்.

ஆனால் ஏன் சில நாட்களாக அவளிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை என்பதும் அவளைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதும் அவனுக்கு ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

இத்துடன் கதை முடிந்திருந்தது.

நன்றாக வந்திருக்கு சுரேகா என்றாள் மித்ரா.

சுரேகா இப்போது சொல்ல ஆரம்பித்தாள்.

அவள் சொல்லச் சொல்ல மித்ரா டைப் செய்து கொண்டிருந்தாள்.

*

விவேக்கும் தனுஷும் நடித்த ஒரு படத்தில், பாக்கியராஜ் வரும் ஒரு காட்சியில் முழித்துக் கொண்டிருக்கும் விவேக்கிடம், நீங்க எழுதின கதாபாத்திரங்கள் தான் உங்க முன்னால் நிக்கிறாங்க என்று தனுஷ் சொல்வது போல, சுரேகா எழுதிய கதாபாத்திரம், இதை எழுதிய மூன்றே மாதங்களில் சுரேகாவின் முன்னால் வந்து நிற்பது நிகழ இருந்ததை அவள் அறியவில்லை.
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
nice epi sis. 52 vayathinile thalaipu nice athukana theme varisai pathuthi irupathu arumai sis
பெரு மலையின் சிகரத்தைத் தொட ஏறுவதற்கும் முதல் அடியை தரையிலிருந்தே தான் தொடங்க வேண்டும் :)

வாழ்வின் முக்கிய லட்சியம் பணம், புகழ், வெற்றிகளைக் கடந்த மன நிச்சலனம். இதை ஆரம்பத்தில் அறிய முடிவதில்லை. அனுபவங்கள் மாறி மாறி அறைந்து உணர்த்திய பிறகு கடைசியில் அந்த அமைதியை உணர்வதாக கொண்டு போகலாமா...
(y)(y)(y)(y)(y)
 




Madhumitha

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
317
Location
Rajapalayam
nice epi sis. 52 vayathinile thalaipu nice athukana theme varisai pathuthi irupathu arumai sis

(y)(y)(y)(y)(y)
தொடரந்து வாசித்து கமெண்ட் இடுவது உற்சாகத்தை அளிக்கிறதும்மா... இதே ஊக்கத்துடன் ஐந்து அத்தியாயங்களையும் எழுதி முடிக்கணும்
 




Sindu_rr

மண்டலாதிபதி
Joined
Jan 27, 2018
Messages
202
Reaction score
651
Location
Mum
Definitely need to appreciate Sureka
vaasikkum pothe indha librarykku good bye and governmentkku good bye endru sollum alavu piratchanai
vidai illa kelvi nokki payanam maathiri irrukku

23 varudam uyirpoda ninnu poradiyum saathikka innum mudiyalai...
nalladhu seiyanum endru ninaipavargalum thevai illadha suzhalil chikkiyadhai pola

Hamlet oda procastination pola thaan indha goverment oda seyal irrukku... don't know how many such effects ended in tragedy
oru visayam padikkum pothe kannai kattudhae
idhu pol innum eththanai kinatril potta kaallo???

eppo 5 rupee vaangittu kamarajarai veetukku anupinaangalo appo thodangiya sabam innum mudiyalai....
Makkal nermaiya illatha podhu aatchiyalargalidam eppadi nermaiyai ethir paarkka mudiyum
 




Madhumitha

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
317
Location
Rajapalayam
Definitely need to appreciate Sureka
vaasikkum pothe indha librarykku good bye and governmentkku good bye endru sollum alavu piratchanai
vidai illa kelvi nokki payanam maathiri irrukku

23 varudam uyirpoda ninnu poradiyum saathikka innum mudiyalai...
nalladhu seiyanum endru ninaipavargalum thevai illadha suzhalil chikkiyadhai pola

Hamlet oda procastination pola thaan indha goverment oda seyal irrukku... don't know how many such effects ended in tragedy
oru visayam padikkum pothe kannai kattudhae
idhu pol innum eththanai kinatril potta kaallo???

eppo 5 rupee vaangittu kamarajarai veetukku anupinaangalo appo thodangiya sabam innum mudiyalai....
Makkal nermaiya illatha podhu aatchiyalargalidam eppadi nermaiyai ethir paarkka mudiyum
அன்பு சிந்து அவ்வளவு நன்றிம்மா

விடை இல்லா கேள்வியை நோக்கிய பயணம் தானம்மா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top