• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Madhumitha's Vallamai Thaaraayo 29

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Madhumitha

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
317
Location
Rajapalayam
வல்லமை தாராயோ 29 – மதுமிதா

துளி அமைப்பில் ஆரம்ப நாளிலிருந்து இணைந்து செயல்படுவதில் சுரேகாவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. அதிலும் தான் எழுதிய கதையிலிருந்து ராம்குமார் என்னும் அதே பெயருடன், அதே அபுதாபியிலிருந்து, தென்றல்நகரின் நீராதாரங்களை இயற்கை வளங்களைக் காக்கும் முயற்சியில் அத்தனை ஈடுபாட்டுடன் ஊர்ப் பாசத்துடன் நேரில் வந்து நின்றவனைப் பார்த்து, தான் எழுதிய கதாபாத்திரம் அப்படியே உயிருடன் முன்னால் வந்து நின்றதில் பெரிதும் உவப்படைந்தாள்.

கட்சி சார்பற்ற, இன, சாதி, மத பேதமில்லாத, தலைவர் தொண்டர் பேதமில்லாது, உறுப்பினர் ஒவ்வொருவருமே பொறுப்புடன் செயல்படும் அமைப்பாக துளி அமைப்பு இருந்தது.

Save Water Thendralnagar என்று ஆரம்பிக்கப்பட்ட சேவை அமைப்பு 'துளி' என்னும் பெயருடன் தென்றல்நகர் பகுதியில் உள்ள ஏரி, குளம், கண்மாய் போன்ற நீர் ஆதாரங்களில் தூர் வாரி சுத்தப்படுத்தவும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்னும் உயரிய நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த விதையினை அனைவரின் உள்ளங்களிலும் ஊன்றியவன் ராம்குமார்.

தென்றல்நகரின் இயற்கை வளத்தை பாதுகாக்கும் முனைப்பு இருந்த ஒவ்வொருவரும் இதில் மனமுவந்து கலந்து கொண்டனர். இன்னும் ஊருக்காக சேவைப் பணியாற்ற விரும்புவோரும் துளி அமைப்பில் இணைந்து வருகின்றனர்.

தென்றல் நகரில் இந்த அமைப்பின் முதல் கூட்டம் ஆரம்பித்த பின்பு முதல் சேவைப் பணியாக கடம்பன்குளம் கண்மாயில் தூர் வாரும்பணி நடைபெற்றது.

ஒற்றுமையுடன் இணைந்து இராஜபாளைய வளங்களை காப்போம். வருக.

என்று அப்போது பேஸ்புக்கில் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டனர்.

சுரேகாவும் தன்னுடைய முகநூலில் மகிழ்வுடன் அந்த செய்தியைப் பகிர்ந்துகொண்டாள்.

தென்றல் நகரில் துளி அமைப்பின் முதல் கூட்டம் ஆரம்பித்த பின்பு முதல் சேவைப் பணியாக கடம்பன்குளம் கண்மாயில் தூர் வாரும்பணி நடைபெற்றது.

அக்டோபர் 23 ஆம் நாள் நடந்த இந்தப் பணியில் தென்றல்நகர் கல்லூரி மாணவர்களும், பாய்ஸ் டவுன் பள்ளி மாணவர்களும், வாழும் கலை அமைப்பு உறுப்பினர்களும், தன்னார்வத்தொண்டர்களும், சேவை அமைப்புகளும் இணைந்து கடம்பன்குளம் கண்மாயில் இறங்கி தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.

அக்டோபர் 27 ஆம் நாள் தென்றல்நகரில் பாரதி நகர், ஆர். ஆர். நகர், அரசு மருத்துவமனை, திருவனந்தபுரம் தெரு ஆகிய இடங்களில் 'துளி' அமைப்பிலிருந்து இருநூறு மரக்கன்றுகள் நடப்பட்டன.

இது ஒரு இயக்கமாக சிறுதுளி பெருவெள்ளமாக வளர்ந்து வருகிறது.

திங்கள் கிழமை 7.11.2016 மாலை துளி அமைப்பின் கூட்டம் லட்சுமி மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. துளி உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் பலரும் கலந்து கொண்டு அவரவர் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

கூட்டத்தின் முக்கிய தீர்மானங்கள்:

1. சீமைக் கருவேல மரங்கள் முற்றிலும் ஒழிப்பு,

2. முக்கிய கண்மாய்களை தூர்வாரும் பணி,

3. தூய்மையான இராஜை என்ற இலக்கை அடைய அனைவரின் ஒத்துழைப்பு.

முதற்கட்டமாக சீமைக் கருவேல மரங்களை அழிக்க அரசுடன் இணைந்து துளி அமைப்பும், பள்ளி கல்லூரி மாணவர்களும், வாழும் கலை இயக்கத்தை சேர்ந்தவர்களும் ஒன்று கூடி பணியாற்றினோம். இது குறித்து நம் துளி அமைப்பினர் அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விரைவில் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்படும்.

இந்த அமைப்புடன் இணைந்து பணியாற்ற விரும்பும் பொதுமக்கள் துளி பேஸ்புக் பேஜின் இன்பாக்சில் தொடர்பு கொள்ளலாம்.

இணைந்து செயல்படுவோம் அனைவரும். நம்

தென்றல்நகரை வரும் சந்ததிகளுக்கு வளத்துடன் பாதுகாத்து அளிப்போம்.

துளி பேஜ் கவர் போட்டோவினை ஷேர் செய்துள்ளேன்.
லைக் செய்து இணைந்து கொள்ளுங்கள்.
இது வரையில் ஆரம்பத்திலிருந்து நடந்த பணிகளின் அனைத்து விபரங்களும் இங்கே படங்களுடன் அளித்துள்ளனர்.

துளி அமைப்பில் சேவைப் பணியில் இணைந்து செயல்படுவதில் பெருமிதம் கொள்கிறேன்.

சேவைப் பணி மென்மேலும் சிறக்கட்டும் துளி நிறுவனர் ராம்குமார் மற்றும் துளி குழுவினருக்கு உளங்கனிந்த வாழ்த்துகள்.

பெரண்டைக்குளம் கண்மாய் சீமைக்கருவேலமரம் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் இந்தப் புகைப்படம் அதற்கென நிகழ்ந்த சீரிய அர்ப்பணிப்புணர்வுடன் நிகழ்ந்த சேவைப்பணியை உங்களுக்கு உணர்த்தும்.
இனி வரும் ஒரு மழைக்காலத்தில் முன்பைப் போலவே இந்தக் கண்மாயில் நீர் நிறைந்திருக்க அதையும் இப்படி புகைப்படம் எடுத்து இங்கே அளிக்கும் நாள் தொலைவில் இல்லை.

இனி் தூர் வாருவதும் சாலையில் வேலி அமைப்பதும் அடுத்த கட்ட பணிகள்.
தென்றல்நகரில் துளி அமைப்பின் இந்த செயல்பாடுகளுக்கு பொருளாதார உதவிகள் செய்ய விரும்புபவர்கள் செய்யலாம். தன்னார்வத் தொண்டர்களாக உதவி செய்யலாம். இவை சாத்தியமில்லை என்பவர்களும் வாழ்த்தி moral support அளிக்கலாம்.

இப்படி எழுதி முகநூலில் பகிர்ந்துகொண்டு தன் மகிழ்வை வெளிப்படுத்தினாள்.

***

துளியின் அடுத்த நிகழ்வாக மேலே குறிப்பிடப்பட்ட பிரண்டைக் குளம் கண்மாயில் சீமைக்கருவேலமரங்களை அகற்றி தூர்வாரும் பணி செய்ய பேரணி நிகழ்ச்சி நிச்சயிக்கப்பட்ட நாளில் நூலகத்துக்கான அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவ வரும் நபரை சந்திக்க இருப்பதை முதலிலேயே எதுவும் குறிப்பாகவும் தெரிவித்திருக்கவில்லை.

தென்றல்நகர் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் அனைவருக்கும் அழைப்பு விடுத்து, அவர்களையும் அந்தப் பகுதி விவசாயிகள் மற்றும் ஊர் மக்களையும் சேர்ந்து பிளாஸ்டிக் பைகள் தண்ணீர் பாட்டில்கள் குப்பையாக சேரும் அவலத்தினை மாற்றும் விழிப்புணர்வுப் பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. துளி அமைப்பின் நிர்வாக உறுப்பினர்களும், உறுப்பினர்களும் இரண்டு இரண்டு பேராக ஒவ்வொரு பள்ளிக்கும், கல்லூரிக்கும் சென்று மாணவச் செல்வங்களை, குறிப்பிட்ட நாள் ஞாயிறு காலை எட்டு மணிக்குள் தாலுகா அலுவலகம் முன்பு ஒன்று கூட வேண்டும் பன்னிரண்டு மணிக்குள் திரும்பி விடலாம் என்று இந்த விபரங்கள் இருக்கும் அறிக்கையைக் கொடுத்து வந்தனர்.

பேரணியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் அவர்கள் பெயர்களில் சர்டிபிகேட் கொடுக்க முடிவு செய்து, நிகழ்வு முடிந்ததும், யார் யார் எந்தப் பள்ளியில் கல்லூரியில் அழைப்பு கொடுக்க சென்றார்களோ அவர்களே அந்தந்த பள்ளி கல்லூரிகளுக்குப்போய் கலந்துகொண்ட மாணவர்களுக்கு கொடுக்க ஒப்புக் கொண்டனர்.

சிலர் ரூபாவின் பள்ளியில் இரண்டு நாட்கள் நேரம் ஒதுக்கிச் சேர்ந்து, பேரணியில் செல்லும்போது எடுத்துச் செல்ல வாசகங்கள் பொறித்த அறிவிப்புப் பலகைகளைத் தயார் செய்தனர்.

சத்தாக சாப்பிடுவதற்கு சத்து மாவு உருண்டையும், குடிப்பதற்கு சுக்கு மல்லிக்காப்பியும் அரவிந்த் ஹெர்பலில் இருந்த தர ஒப்புக்கொண்டனர்.

சனிக்கிழமை மாலை மறுநாளுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்காக முக்கிய உறுப்பினர்களின் கூட்டம் நடந்தது. குழு பிரிக்கப்பட்டு யார் யார் எந்த குழுவில் இருக்க வேண்டும் என்ன செய்யவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு குழுவுக்கும் முன்னால் பாதுகாப்பாக சில மாணவர்கள் போக வேண்டும். துளி அமைப்பின் தன்னார்வத் தொண்டர்கள் ஒரு ஆண் ஒரு பெண் முன்னால் பக்கவாட்டில் இருக்க வேண்டும். பள்ளி மாணவிகள் நடுவில் இருக்க வேண்டும். உடன் வரும் ஆசிரியர்களும் இருக்கலாம். அதே போல் பின்னால் துளி உறுப்பினர்கள் இருவர் மற்றும் சில தன்னார்வத் தொண்டர்கள் இருக்கவேண்டும். பேரணியில் வாசகங்களை முன்னே இருப்பவர் சொன்னால், மற்றவர்கள் எல்லோரும் மீதி வாசகத்தைச் சொல்ல வேண்டும் என்று பல முன்னேற்பாடு மனத்தயாரிப்புகள் நடந்து முடிந்தன.

வழியில் யாராவது எதிர்மறையாகப் பேசினால் யாரும் உணர்வு வேகத்தில் பேசிடக்கூடாது. அமைதியாக பதில் அளிக்க வேண்டும். யாராவது கோபமாகப் பேசினால் எனக்கு போன் பண்ணுங்க என்றான் ராம்குமார்.

ஏன் ஏதாவது பிரச்சினை வரும்னு எதிர்பார்த்து பாதுகாப்பாக இருக்கணுமா ராம்குமார் என்றதும், பாபு அப்படி இல்லைம்மா. நமக்கு அனுமதி குடுத்துட்டாங்க. ஆனா எழுத்து மூலமான அனுமதி நம் கையில் இல்லை. அதனால தான். நிச்சயம் பிரச்சினை இருக்காது. கலெக்டர் அனுமதி குடுத்தாச்சு. அவர் ஊரில் இல்லைங்கறதால் வரல. எம் எல் ஏ விடமும் சொல்லி இருக்கிறோம். அவர் வர்றேன்னு சம்மதம் தெரிவிச்சிருக்கிறாங்க. நேரம் குடுத்தால் அவரை நேரில் அழைக்கணும். என்றான்

முத்துமணி அந்தப் பகுதி மக்கள் பிரண்டைக்குளத்தில் குப்பையைப் போடறாங்க. நாம இப்போ அங்கே தூர் வாருகிறோம்னா எதிர்ப்பு வரக்கூடாதில்லையா. எல்லோரும் ராம்குமார் பெயரைப் போட்டுக்குடத்துடலாம் என்றதும், ஆமா அதுதான் நல்லது முதலில் அடி விழுந்தாலும் என் மேல்தான் விழணும், யாரும் பிரச்சினையில் மாட்டக் கூடாது என்று ராம்குமார் சொல்ல, பிரச்சினை என்றால் எல்லோருக்கும்தான் உன்னை மட்டும் கைகாட்ட முடியாது என்று நெகிழ்வாகவும், உற்சாகமாகவும் மகிழ்வாகவும் பேசினார்கள்.

ஒவ்வொரு குழுவும் எந்தத் தெரு வழியாகப் போய் எந்தத் தெரு வழியாக வரணும் என்றும் வெயிலுக்கு முன்னால் மதிய உணவுக்கு முன்னால் கோஷங்களை முடித்துவிட்டு தாலுகா அலுவலகத்துக்கே வந்து விட வேண்டும் என்று முடிவு செய்தனர்.

கூட்டம் முடியும்போது போனில் ஏதோ தகவல் வந்ததும், சட்டென்று அனைவரும் இணைந்து வெளியில் கிளம்பினார்கள். சுரேகா மெதுவாக வந்து யாரைப் பார்க்க எங்கே போகிறார்கள் என்று புரியாமல் வெளியே வந்தாள். அப்போது ரூபாவும் அங்கே வந்து அக்கா எல்லோரும் தங்கபாண்டியன் எம் எல் ஏ வைப் பார்க்கப் போறாங்க. பத்து நிமிடத்தில் அவர் ஆபீசிலிருந்து போயிடுவார்னு எல்லோரும் போறாங்க. நீங்க போகணுமென்றால் அவங்களோடு போங்க. நான் வீட்டுக்குப் போறேன்மா என்றாள்.

அதற்குள் அனைவரும் பரபரப்பாக கிளம்பி விட்டிருந்தனர். சுரேகா வீட்டுக்கு இப்போது போனால் தான் மறுநாள் காலையில் சீக்கிரமாக பேரணி நிகழ்வுக்கு வர முடியுமென்று வீட்டுக்குப் போய்விட்டாள்…
 




Madhumitha

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
317
Location
Rajapalayam
ஞாயிறு காலை கஸ்தூரியின் டூ வீலரிலேயே கஸ்தூரியும் சுரேகாவும் தாலுக் ஆபீசுக்கு வந்தனர்.

துளி உறுப்பினர்கள், தன்னார்வத் தொண்டர்கள் என்று சேரும்போதே ஒவ்வொரு பள்ளியில்ருந்தும் கல்லூரியிலிருந்தும் மாணவர்களும் ஆசிரியர்களும் வந்து சேர்ந்தனர்.

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்

ப்ளாஸ்டிக்கைத் தவிர்ப்போம்

இயற்கையைப் பாதுகாப்போம் நீர்வளத்தைக் காப்போம்

மழைத்துளி உயிர்த்துளி
என்பது போன்ற பல பேனர்களை அறிவிப்புப் பலகைகளைப் தூக்கிக் கொண்டு கோஷம் எழுப்பியபடி உற்சாகமாகச் சென்றனர். இளைய தலைமுறையினரின் இந்த உற்சாகம் பெரும் நம்பிக்கையை அளித்தது. ஒவ்வொரு தெருவிலும் மக்களின் ஆதரவு இருந்தது. இருபது பேர் மக்கள் இருக்கும் இடத்தில் நின்று பிரண்டைக்குளத்தை தூர் வாரும் அவசியத்தை எடுத்துக்கூறி, குளத்தின் பகுதியில் குப்பைகளையும், ப்ளாஸ்டிக் கழிவுகளையும் போடவேண்டாம் என்று மாணவிகள் பேச மக்கள் உற்சாகத்துடன் ஒத்துழைப்பதாகக் கூறினார்கள். வெவ்வேறு தெருக்களில் சுற்றிய வேவ்வேறு குழுக்கள் அனைவரும் பேரணி முடிந்து பதினொரு மணிக்குள் தாலுக் ஆபீசிலேயே வந்து குழுமினர். அனைவருக்கும் சத்துமாவு லட்டு, பிஸ்கட், சுக்குமல்லி காப்பி அளிக்கப்பட்டது.

எழுநூறு பேருக்கு மேல் இருந்த கூட்டத்தின் முடிவில் சிறிய பரபரப்பு. ராம்குமார் போய் அழைத்து வந்தவர் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் மற்றும் சிலர். வெள்ளை வேட்டி சட்டை என்ற அரசியல்வாதிக்கான சீருடை இல்லாமல் பேண்ட் சட்டை அணிந்து வந்திருந்தார். பத்து நிமிடங்கள் வாழ்த்திப் பேசினார். தான் உடன் இருப்பதாகவும் உறுதி அளித்தார். ராம்குமார் பேசும்போது அவருக்கும் மாணவ செல்வங்களுக்கும் துளி அமைப்புக்காக பணிபுரிந்த அனைவருக்கும் நன்று கூறி Team work never fails என்று கூறி முடித்துக் கொண்டான்.

இப்போது அனைவரும் தங்களுக்குள் சிரித்துப் பேசிக்கொண்டும், போட்டோ எடுத்துக்கொண்டும் இருந்தனர். எம் எல் ஏவுடனும் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர். கஸ்தூரி வேகமாக சுரேகாவின் அருகில் வந்தாள். என்னம்மா அங்கே பாத்துட்டு இருக்கிறீங்க. ஒண்னுமில்லம்மா. நாம நம்ம லைப்ரரி பற்றி இவர்கிட்ட சொல்லலையே. இப்போ சொல்லிடலாமா.

வாங்கம்மா போகலாம் என்றாள் கஸ்தூரி.

இருவரும் அருகே போனதும் வணக்கம் என்றார். வணக்கம் என்று சொல்லி முடிக்கும்போதே போட்டோ எடுக்க கேமராவை இந்தப் பக்கம் திருப்பினர். அரசு லைப்ரரி விஷயமாக பேச வந்தேன். போட்டோ எடுக்க வரல. என்றாள் சுரேகா

என்ன விஷயம்மா. நான் என்ன செய்யணும் சொல்லுங்க. மனு ஏதாவது கொண்டு வந்தீங்களா

இல்லைங்க. மனு எதுவும் கொண்டு வரல. ஆனா அஞ்சு நிமிஷத்துல சொல்ல முடியாது. லைப்ரரிக்கு இடம் சம்பந்தமா பேசணும்னு மட்டும் இப்ப சொல்லிக்கிறேன். நீங்க உங்களுக்கான ஏதாவதொரு நேரத்தை ஒதுக்கி லைப்ரரிக்கு வர முடியுமா. அன்னிக்கு மனு கொடுத்துடறோம். இல்லைன்னா உங்களை எப்போ அலுவலகத்தில் சந்திக்கணும்னு சொல்லுங்க. முழு விபரமும் சொல்லறோம்.

அம்மா அவசியம் பாருங்க. சொல்லறதை செய்துடலாம். உங்களுக்கான பணிகள் செய்யறதுக்கு தான் நாங்க இருக்கிறோம். நாளைக்கு சென்னைக்குப் போகிறேன். வெள்ளிக்கிழமை காலையில் இங்கே வந்துடுவேன். அன்றைக்கு காலையில் போன் செய்யுங்க. மாலை சந்திக்கலாம். என்று விசிட்டிங் கார்டை எடுத்துக்கொடுத்தார்.

என்னங்க இது இந்த எண்ணில் போன் செய்தால் எடுப்பீங்களா

என்னம்மா இப்படி கேட்டுட்டீங்க அய்யா சொன்னதை செய்யாம இருக்க மாட்டாரு. என்றார் அருகில் இருந்த உதவியாளர்.

மன்னிச்சுக்கோங்க. இதுவரையிலும் இத்தனை வருடங்களாக நாங்க சந்திச்சவங்க யாருமே சொன்னதை செய்ததில்ல. எத்தனை மனுக்களை இந்த இருபத்தி ஐந்து வருடங்களில் குடுத்திருப்போம். எதுவுமே நடக்கல. அதனால் அப்படி பேசிட்டேன். லைப்ரரி வேலை நடந்தால் போதும். வெள்ளிக்கிழமை நான் இந்த எண்ணுக்கு அழைக்கிறேன்.

நீங்க பேசுங்க. வெள்ளிக்கிழமை நான் நூலகத்துக்கு அவசியம் வருவேன் என்றார்.

*

நூலகத்தில் நூலகருக்கும் உறுப்பினர்களுக்கும் இந்தத் தகவலைச் சொன்னதும் நூலகர் முத்துலட்சுமி சொன்னார்,“அக்கா நம்ம லைப்ரரிக்காக அவரைப் பார்க்கணும்னு உங்க கிட்ட சொல்லலாம்னு இருந்தேன். அவரு ஜனங்களுக்கு நல்லா உதவி செய்யறாராம். நல்லவேளை நீங்களே பேசிட்டீங்க. வெள்ளிக்கிழமை காலையில் வர்றேன்னு சொல்லிட்டாருன்னா, சாயந்திரம் நாம முன்னாடியே வந்து காத்திருக்கலாம்க்கா



வெள்ளிக்கிழமை நமக்கு லீவாச்சேம்மா

பரவால்லக்கா. நான் வந்துர்றேன். மத்தவங்க கிட்டயும் சொல்லிடலாம். சாயந்தரம்னா குழந்தைங்க ஸ்கூல்ல இருந்து வந்துடுவாங்கன்னு கொஞ்சம் கூட்டம் கம்மியா இருக்கும். ஆனாலாம் ஒரு இருபது பேர் மட்டுமாச்சும் இருக்கலாம்க்கா. என்றாள்.

*

வெள்ளிக்கிழமை காலையில் அந்த எண்ணுக்குப் பேசியதும் எம் எல் ஏவே போனை எடுத்தார். இப்போ தாம்மா ஊருக்கு வந்தேன். சாயந்திரம் ஆறரை மணிக்கு லைப்ரரியில் இருப்பேன். லைப்ரரி எங்கே இருக்கு. எப்படி வரணும்.

கோதண்டராமர் கோயிலுக்கு இந்தப் பக்கம் பெரியசாலை இருக்குதே

அந்த வழியா தான் தினமும் அலுவலகத்துக்குப் போகிறேன்மா. மாலையில் பார்க்கலாம் என்றார்.

மாலையில் நூலகர் மனுவுடன் தயாராக இருந்தார். நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் முப்பது பேர் நூலகத்தில் காத்திருந்தனர். ஆறரை மணிக்கு மேல் ஆனதும் வருகையைத் தெரிந்துகொள்ள சுரேகா அவருக்கு தொலைபேசினாள். போனை யாரும் எடுக்கவே இல்லை. எல்லோரும் காத்திருந்தனர். ஏழு மணிக்கு அங்கிருந்து சுரேகாவுக்கு அழைப்பு வந்தது.

நாடார் பள்ளி ஆண்டுவிழாவை ஆரம்பித்துவைத்துவிட்டு ஏழரைக்குள் வந்துவிடுவேன் என்றார்.

தங்கபாண்டியன் எம் எல் ஏவும் இன்னும் மூவரும் நூலகத்துக்கு வந்திருந்தனர். ராஜாராம் வந்திருந்தார். நூலகர் வரவேற்றதும் ராஜாராமைப் பார்த்த எம் எல் ஏ அய்யா நாம் ஏற்கனவே சந்தித்திருக்கிறோம் என்றதும், சுரேகா அப்பா என்று அறிமுகப் படுத்தினாள். ராஜாராம் இரண்டு நிமிடங்களில் நம் சட்ட மன்ற உறுப்பினர் பேசுவார் என்று முடித்துக் கொண்டார்.

மனுவை நூலகர் கொடுத்தார். புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.

எந்த இடம் கேக்கறீங்கம்மா

மாரியம்மன் கோயிலுக்கு எதிர்ப்புறமா இருக்கிற இடம்.

வரும்போது அதைப் பார்த்துட்டுதான் வந்தோம்மா

அந்த கல்யாணமண்டபங்கள் கட்டி இருக்கிறாங்களே. அதுக்கு பின்னாடி.

ஆமா பூக்குழி நடக்கும் இடத்துக்கு மேற்கே அந்தப் பக்கமா தானே.

ஆமாங்க.

எம் எல் ஏ பேச ஆரம்பித்தார். இவங்களை ஞாயிற்றுக்கிழமை தாலுகா அலுவலகத்தில் பேரணி நிகழ்ச்சியில் பார்த்தேன். லைப்ரரிக்காக இத்தனை வருட போராட்டங்கறதை இரண்டு நிமிஷத்தில் தெரியப்படுத்திட்டாங்க. இது வரை யாரும் உங்களுக்கு செய்யாமல் இருந்திருக்கலாம். இந்த நூலகத்துக்கு, இந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்ங்கிற முறையில நான் என்ன செய்யணும்னு கேட்டேன். லைப்ரரிக்கு இடம் வேணும்னு சொன்னாங்க. எந்த இடம் அப்படிங்கறதை இப்போ மனுவா குடுத்திட்டீங்க. திங்கள்கிழமை விருதுநகரில் கலெக்டரைப் பார்க்கப்போகும்போது இதை கொடுத்துட்டு அவர்ட்ட பேசறேன். இடம் கிடைத்ததும் என் Fund இல் இருந்து கட்டடம் கட்டித் தருகிறேன் என்றதும், கைதட்டலால் அமைதியான நூலகம் அதிர்ந்தது.

நிஜமாவே சொல்லறீங்களா என்று சுரேகா கேட்டாள்.

உதவியாளர் பக்கம் திரும்பியவர் தம்பி இவங்க போன் நம்பர் வாங்கி நம்ம வாட்ஸப் குரூப்பில் சேர்த்துடுங்க. அம்மா தினமும் என்ன என்ன பணிகள் செய்யறோம்னு போட்டோவுடன் இதில் செய்தியைத் தர்றோம். செய்யறதை மட்டும்தான் பேசுவோம். உங்களை கட்சி ஆபீசுக்கு அழைத்து பேசியிருக்கலாம். சொன்னதை செய்வோம்னு காட்டறதுக்காக தான் இங்கே வந்தோம். இப்போ நம்பறீங்களா என்றார்.

நம்பறோம். நீங்க சொன்னது மட்டும் நடந்ததென்றால் என் படைப்பில் உங்க பெயரைக்குறிப்பிட்டு எழுதுவேன் என்றாள் சுரேகா

என்னது நீங்க எழுதுவீங்களா

ஆமாங்க. எழுதறேன். இந்த பிப்ரவரி மாதம் சுதந்திர சிந்தனையில் இருந்து நம்ம ஊரில் ஒரு பாராட்டு விழா வைத்திருக்கிறாங்க. நீங்க வாங்க என்று அழைப்பிதழைக் கொடுத்தாள்.

சரிம்மா ஊரில் இருந்தால் வருவேன் என்று நன்றி தெரிவித்து விட்டு கிளம்பினார்.

சுதந்திரச்சிந்தனை அமைப்பில் இருந்து சுரேகாவின் எழுத்துப் பணியினைப் பாராட்டி பாராட்டுவிழா நடத்தினார்கள்.

அந்த நிகழ்வுக்கு மறக்காமல் வாழ்த்துக் கடிதம் அனுப்பி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன்.

இதையும் முகநூலில் புகைப்படத்துடன் பதிவு செய்தாள் சுரேகா.

4.4.2016. ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவரும்... அது அரசியல்வாதியோ அதிகாரியோ யாராக இருந்தாலும்... அவங்க அவங்க வேலையை அவங்க அவங்க சரியாக செய்தாலே போதும்.

போன வாரம் நம்ம ஊர் எம் எல் ஏ திரு. தங்கப்பாண்டியன் அவர்கள் நம் அரசு நூலகத்துக்கே வந்து மனுவினை வாங்கிக் கொண்டு ஆவன செய்வதாகச் சொல்லிச் சென்றார் என்று இங்கே சொல்லியிருந்தேன்.

அன்றைக்கு நூலகத்தில் வைத்து சுதந்திரச் சிந்தனை அமைப்பு நிகழ்வின் அழைப்பிதழை அவரிடம் கொடுத்திருந்தேன்.

நிகழ்வு நடந்த நாளான ஞாயிறு மாலை ஒரு வாழ்த்து மடலை அனுப்பி வைத்திருந்தார்.

நிகழ்ச்சியினை நடத்திய சுதந்திரச் சிந்தனை அமைப்பினருக்கும் எனக்கும் வாழ்த்து தெரிவித்து விட்டு அந்த வாழ்த்து மடலிலேயே கீழே இருக்கும் வரிகளும் தட்டச்சு செய்யப் பட்டிருந்தது....
"தென்றல்நகர் மகளிர்க்கென தனியாக நூலகம் வேண்டும் என என்னிடம் கோரிக்கை வைத்தீர்கள். அக்கோரிக்கையை நிறைவேற்ற, தாங்கள் எடுக்கும் முயற்சிக்கு நான் உறுதுணையாக இருந்து தென்றல்நகர் சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மகளிர்க்கென தனியாக நூலகம் கட்டித் தரப்படும் என்பதை இக்கடிதத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று கையெழுத்திட்டுக் கொடுத்திருக்கிறார்.
மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும் சட்ட மன்ற உறுப்பினர் திரு. தங்கப்பாண்டியன் அவர்களே. இயல்பாக இருக்கிறீங்க. சரியான பாதையில் பயணிக்கிறீங்க. மொத்த அரசியல் கட்சியினருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறீங்க.

26 வருட வரலாறில் இப்படியொருவரை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி.

இவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயத்தை பிற அரசியல்வாதிகள் கற்றுக்கொண்டால் மக்களின் வாழ்வு சுபிட்சமாக இருக்கும் என்று முழுமையாக நம்புகிறேன்.

இந்த இருபத்தி ஆறு வருட தென்றல்நகர் தமிழ்நாடு அரசு பெண்கள் சிறுவர் நூலக வரலாறில் ஒரு இனிய செய்தி. முதல் முறையாக தமிழக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் அவர்கள் நூலகத்துக்கே நேரில் வருகை தந்து நூலகரும் வாசகிகளும் அளித்த மனுவைப் பெற்றுக்கொண்டு ஆவன செய்வதாக உறுதி அளித்துவிட்டுச் சென்றிருக்கிறார். அவரது வருகையும் உரையும் மிகவும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. அனைத்து வாசகிகளும் அவருடன் உரையாடும் அளவில் அவர் நடந்து கொண்ட விதம் மிகவும் பாராட்டுதலுக்கு உரியதாக அமைந்தது. இப்படி எல்லா அரசியல்வாதிகளும் இருந்தால் இந்த தேசம் தான் எப்படி இருக்கும். இந்த மக்கள் எவ்வளவு மகிழ்வாக இருப்பார்கள்.

என்று முகநூலில் எழுதினாள்.

ராம்குமார் மற்றும் துளி உறுப்பினர்களிடம் தங்கபாண்டியன் எம் எல் ஏ நூலகத்துக்கு வந்து வாழ்த்து கூறிவிட்டு இடம் கிடைத்தால் கட்டடம் கட்டித் தருவதாக சென்ற விஷயத்தைத் தெரிவித்ததும், பேஸ்புக்கில் நீங்க எழுதியதைப் பார்த்தோம். நாங்களும் லைப்ரரி பணியில் உடன் இருக்கிறோம் என்றனர்.

இதற்கு முன்பு இத்தனை வருடங்களாக இந்தத் தொகுதியில் இருந்த எம் எல் ஏக்களுக்கு இதே பொறுப்புதானே இருந்தது. ஏன் ஒருவரும் இதைச் செய்யவில்லை.

சரி இப்போது எம் எல் ஏ இதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில் இப்போதைய இந்த கலெக்டராவது இதற்கு உடனடி முடிவெடுப்பாரா? முனிசிபல் அலுவலகத்தில் இதற்கு ஒப்புதல் கிடைக்குமா என்பது போன்ற கேள்விகள் எழாமல் இல்லை.
நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.

தொடர் மகிழ்ச்சி தொடருமா… பிரச்சினைகளை எதிர்கொள்ளச் செய்யுமா என்பதற்கு காலம் தான் பதிலைக் கண்டுபிடித்து எடுத்துச் சொல்ல வேண்டும்.
 




Last edited:

sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Arumaiyana epi sis. Thuli aamaipin seiyalpadukal nice...After 26 years minister vanthirukaru libraryku ini aavathu idam kidaikuma parpom
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
மதுமிதா மேடம் துளி அமைப்பு பற்றிய தகவல் சூப்பர் நீங்க எழுதறது நிஜக் கதையா? கரெக்டா தேதி சொல்றிங்க
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
மதுமிதா மேடம் துளி அமைப்பு பற்றிய தகவல் சூப்பர் நீங்க எழுதறது நிஜக் கதையா? கரெக்டா தேதி சொல்றிங்க
I too have the same feel sis
 




Madhumitha

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
317
Location
Rajapalayam
Arumaiyana epi sis. Thuli aamaipin seiyalpadukal nice...After 26 years minister vanthirukaru libraryku ini aavathu idam kidaikuma parpom
நன்றிம்மா Sridevi. அவர் MLA சட்டசபை உறுப்பினர். அமைச்சர் அல்ல.
 




Madhumitha

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
317
Location
Rajapalayam
மதுமிதா மேடம் துளி அமைப்பு பற்றிய தகவல் சூப்பர் நீங்க எழுதறது நிஜக் கதையா? கரெக்டா தேதி சொல்றிங்க
தேதியை எடுத்திருக்கணும் சக்திப்ரியா. உண்மையில் நடந்ததையே கொஞ்சம் புனைவு சேர்த்து எழுதுகிறேன்மா
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
தேதியை எடுத்திருக்கணும் சக்திப்ரியா. உண்மையில் நடந்ததையே கொஞ்சம் புனைவு சேர்த்து எழுதுகிறேன்மா
சரிம்மா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top