• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

mannavan karam pidithen- 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அத்தியாயம் – 6

மும்பையில் அபிஜித் வீட்டின் பெரிய தோட்டத்தில், சின்ன அளவிளான மேடை அமைத்து, அதில் மணமகளான பவித்ரசெல்வியை அமர வைத்தனர். அவளை சுற்றி நான்கு பெண்கள் அமர்ந்து, அவள் கையிலும், காலிலும் மெஹெந்தி போட்டுக் கொண்டு இருந்தனர்.

அந்த காலை வேளையிலே, விருந்தினர் வருகையால் கல்யாண வீட்டிற்க்கான எல்லா அம்சமும் அங்கே காணப்பட்டது. இந்த மெஹெந்தி விழாவிற்கு, இவளின் வீட்டில் பாட்டி, அப்பா, அம்மா, தம்பி, அத்தை, அத்தை பெண்ணும், அவளின் கணவரும், பவித்ராவின் தோழிகளும் வந்து இருந்தனர்.

தினேஷுக்கும், அனுவுக்கும் போன வாரம் தான் திருமணம் முடிந்து இருந்தது. இருவரும் தேனிலவிற்கு, ஊட்டி சென்று இருந்தனர். நாளை திருமணத்திற்க்கு வருவதாக கூறி இருந்தனர்.

இவளை சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் ஹிந்தியில் பேசும் பொழுது, இவளுக்கு எரிச்சல் வந்தாலும் அதை மறைக்க அவள் பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டி இருந்தது.

பள்ளி படிக்கும் பொழுதே, ஹிந்தி கட்டாய பாடம் எட்டு வரைக்கும் என்று அறிவித்த பின்னர், முதலில் இவளுக்கு ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் அது அவளுக்கு, போக போக எரிச்சல் தரும் பாடமாகவே அமைந்து விட்டது.

ஹிந்தி ஆசிரியர் ஆத்தா ஹை என்று கூற சொன்னால், இவள் ஜாத்தா ஹை என்று கூறும் ரகம். இவளுக்கும் ஹிந்திக்கும் எப்பொழுதும், வேர்ல்ட் வார் யுத்தமே நடக்கும்.

அப்படிப்பட்டவள், இன்று அவளின் உயிரானவன் ஒரு ஹிந்தி பேசும் இனத்துக்குரியவன் என்று தெரிந்தும், அவனை கரம் பிடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறாள் என்றால், அது அவன் மேல் இவள் வைத்து இருக்கும் அன்பு மட்டும் காரணம் இல்லை.

அவன் இவளுக்கு வழங்கிய அன்பும், பாதுக்காப்பு உணர்வும் மட்டுமே இவளை சம்மதிக்க வைத்து இருக்கிறது. தந்தைக்கு பிறகு, அவள் ஒரு ஆணுடன் உணர்ந்த பாதுகாப்பு உணர்வை அபிஜித் அவளுக்கு கொடுத்தான்.

அது மட்டுமில்லாமல், முதல் முதலில் இவனை பார்த்த பிறகு அவள் உணர்ந்தது, ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் அவனுக்கும் தனக்கும் இருப்பதை உணர்ந்தது தான், இந்த கல்யாணம் வரை இன்று வந்து இருக்கிறது.

“பேட்டா, யஹா ஆயோ!(மகனே இங்க வா)” என்று அபிஜித் அன்னை அவனை அழைத்தார்.

“கியா மா! கியா கோல் கரேன்?(என்ன அம்மா! எதுக்கு கூப்பிடீங்க?)” என்று அபி அங்கே அவன் அன்னை அருகே வந்து கேட்டான்.

“லட்கி கே பாஸ் பைட்டோ(பொண்ணு பக்கத்துல போய் உட்காரு)” என்று கட்டளையிட்டார்.

அவனும் அவரின் சொல் பேச்சு கேட்டு, பவியின் அருகே சென்று அமர்ந்து, யாரும் அறியாமல் அவளை பார்த்து கண்ணடித்தான். அப்பொழுது தான் மெஹெந்தி போட்டு முடித்து இருந்தனர், அந்த பெண்கள்.

அவர்கள் போட்டு முடித்த பின்பு, அங்கு இருந்து சென்ற பின் தான் இவனின் அன்னை இவனை அழைத்து இங்கே அவள் அருகில் அமர சொன்னார். வந்தவன், அவளை சீண்ட கன்னடிக்கவும், இவள் முறைத்தாள்.

“என்ன பேபி, என்னை ஏன் முறைக்குற? உன்னை பார்த்து தான கண்ணடிச்சேன், அதுக்கு ஏன் என்னை முறைக்குற?” என்று ஒன்றும் தெரியாதவன் போல், சிரித்துக் கொண்டே கேட்டான்.

“ஏன்னு உங்களுக்கு தெரியாது? நான் என்ன சொன்னேன் உங்க கிட்ட, நல்லா ஹிந்தி பேச கத்துகிட்டு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம் சொன்னேனே. நீங்க அப்போ எல்லாம் சரி சொல்லிட்டு, அப்புறம் ஏன் இப்படி உடனே ஏற்பாடு செய்தீங்க?”.

“இப்போ பாருங்க, நானும் அத்தையும் தினம் மூன்றாம் பிறை கமல் மாதிரி, சைகையில் பேசிகிட்டு இருக்கோம். அதுல பாதி நேரம், அந்த கமல் மாதிரியே ஆகிடுது என் நிலைமை”.

“மேல குடத்தை தூக்கிட்டு, டான்ஸ் ஆடாதது ஒன்னு தான் குறை பார்த்துகோங்க” என்று பொரிந்து தள்ளிவிட்டாள்.

அவள் கூறிய பாவனையில், அவனுக்கு சிரிப்பு வந்தாலும் அதை அடக்கிக் கொண்டான். அவனுமே முதலில் அவள் கூறியது போல் இருந்தால், அவளுக்கும் தன் வீட்டினரோடு பழக வசதியாக இருக்கும் என்று நினைத்தான். ஆனால் அவளின் தந்தையும், தாயும் அவளின் ஹிந்தி புலமையை தெளிவாக விளக்கவும், அவன் உடனே அதை கை விட்டான்.

“நானும் அதை தான் யோசிச்சேன் டா, ஆனா பாரு என் மாமனாரும், மாமியாரும் உன் ஹிந்தி திறமை பற்றி எல்லாம் சொன்னதும், உடனே நான் பிளான் மாத்திட்டேன். உனக்கு நானே சொல்லி தரேன், நீ ஏன் கவலை படுற?” என்று அவன் கூறி முடிக்கவும், அவனிற்கு அடுத்து அவள் அருகிலே சில சம்ப்ரதாயங்கள் செய்து கொண்டு இருந்தனர்.

“எனக்கு எதிரி வேற எங்கேயும் இல்லை, என்னை பெத்த தெய்வங்களே போதும்” என்று சலித்து கொண்டாள்.

அதற்குள் அபிஜித்க்கு செய்ய வேண்டிய சடங்கு முறைய செய்துவிட்டு, அதன் பின் இருவருக்கும் சேர்ந்து ஆரத்தி சுற்றி எடுத்தனர். அதன் பின் இவளை அபிஜித்தின் உறவு பெண்கள் அழைத்து சென்று, அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் விட்டு சென்றனர்.

அவள் அடுத்து மாலை உடுத்த வேண்டிய திருமண நிச்சய புடவையை, அபிஜித்தின் அன்னை கொடுத்துவிட்டு சென்றார்.

“ஆண்டவா! நம்ம ஊர் பட்டு புடவையே தேவலை போல, இந்த புடவையை உடுத்திட்டு நிற்க முடியல. அவ்வளவு வெயிட், இதை சுமக்கவே நான் நிறைய சாப்பிடனும் போல” என்று நொந்து கொண்டு இருந்தாள்.

அறைக்குள் இவளின் அன்னை, அவளுக்கு அப்பொழுது மதிய உணவை கொடுக்க வந்தார். அவர் கையில் இருந்த தட்டையும், அதில் இருந்த வகையறாவையும் பார்த்து, பயந்து போனாள்.

“அம்மா! என்ன மா இது? நான் ஒருத்தி தான சாப்பிட போறேன், அதுக்கு ஏன் இவ்வளவு?” என்று அரண்டு போய் கேட்டாள்.

“எனக்கு என்ன டி தெரியும்? சம்மந்தி அம்மா தான் கொடுத்து விட்டாங்க, இதுவும் அவங்க இதுல ஒரு சம்ப்ரதாயம் போல டி”.

“சரி! சரி! கையை அசைக்காத, நல்லா மருதாணி காயட்டும்.நான் உனக்கு ஊட்டுறேன், முதல ஸ்வீட் சாப்பிடு” என்று கூறிவிட்டு அவளுக்கு ஒவ்வொன்றாக எடுத்து ஊட்ட தொடங்கினார்.

அவர் ஊட்ட ஊட்ட, இவள் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தாள். சரியாக இவள் சாப்பிட்டு முடித்த பிறகு, அங்கே அபிஜித்தின் அத்தை பெண் ஒருத்தி வந்து அவளிடம், இன்னும் அரை மணி நேரம் கழித்து மெஹெந்தி கையையும், காலையும் கழுவி கொள்ளலாம் என்று கூறிவிட்டு சென்றாள்.

அவளுக்கு அதன் பிறகு தான் ஷப்பா என்று இருந்தது, இதுவரை இவ்வளவு நேரம் அவள் இப்படி கையை, காலை அசைக்காமல் ஒரே இடத்தில் அமர்ந்தது இல்லை, அதனால் வந்த பெருமூச்சு தான் இது.

“சரி டி, நான் போய் கீழே அடுத்து என்ன ஏற்பாடு செய்யணும் என்னனு பார்க்கிறேன். நீ அந்த பொண்ணு சொன்ன மாதிரி, அரை மணி நேரம் கழிச்சு கழுவிட்டு கொஞ்ச நேரம் படுத்து தூங்கு, நான் வந்து எழுப்புறேன்” என்று கூறிவிட்டு சென்றார்.

அவர் சென்ற பின், இவள் யோசனையில் ஆழ்ந்தாள். சிறிது நேரத்தில் கதவு மீண்டும் தட்டப்படவும், தன் தாயாக தான் இருக்கும் என்று எண்ணி உள்ளே வர கூறினாள்.

ஆனால் உள்ளே வந்ததோ அவள் அன்னை இல்லை, அவளை கரம் பிடிக்க போகும் மணாளன் அபிஜித். அவனை அப்பொழுது அந்த நேரத்தில் எதிர்பார்க்காததால், அவள் சற்று திடுகிட்டாள்.

“எதுக்கு இந்த ஷாக் பேபி? நான் தான் சொன்னேனே, உன் கிட்ட தீர்க்க வேண்டிய கணக்கு ஒன்னு பாக்கி இருக்கு, அதை வசூல் செய்ய வருவேன்னு, மறந்துட்டியா பேபி!” என்று அபிஜித் கூறவும் தான், அவளுக்கு அன்றைக்கு தான் செய்த முட்டாள்தனம் உரைத்தது.

“ஆண்டவா! எப்படி எல்லாம், நியாபகம் வச்சு கேட்குறான் இவன். இவன் இதை மறந்து இருப்பான் நினைச்சேன், கடவுளே நீங்க தான் காப்பாத்தனும் என்னை இப்போ” என்று மனதிற்குள் கடவுளை துணைக்கு அழைத்துக் கொண்டு இருந்தாள், இதில் இருந்து தப்பிக்க.

“என்ன பேபி, இப்படி பயந்தாங்கோலியா இருக்க. நான் கூட உன்னை தைரியசாலின்னு நினைச்சேன், இப்படி பயப்புடுற!” என்று அவளை சீண்டினான்.

சீண்டியதோடு மட்டும் நிறுத்தாமல், அவளை நெருங்கி கொண்டு இருந்தான். அவளோ அவன் நெருங்கி வர வர, பின்னால் நகர்ந்து கொண்டு இருந்தாள்.

கையில் மருதாணியை வைத்துக் கொண்டு, அவனை தள்ளி விட கூட முடியாத சூழல். என்ன செய்யவென்று அவளுக்கு தெரியவில்லை, கண்களால் அவனிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தாள், நகர்ந்து செல்லுமாறு.

அவனோ, அது புரிந்தும் புரியாதது போல் அவளை நெருங்கியது மட்டும் இல்லாமல், அவளின் இடையை பிடித்து தன்னருகே நிற்க வைத்தான். அவள் அணிந்து இருந்த, நார்த் இந்தியன் லேஹெங்கா புடவையில், அவன் கை அவளின் வெற்றிடையை பற்றி இருந்தது.

சொல்லொண்ணா உணர்வுகள், அவளை பிடித்து ஆட்டிக் கொண்டு இருந்தது. உதடுகள் துடிக்க, கண்களை இறுக மூடிக் கொண்டு இருந்தவளை பார்த்து, அவன் தன் உணர்வுகளை கட்டுபடுத்த முடியாமல், தன் முதல் முத்திரையை அவள் மூடிய இமைகளில் பதித்தான்.

அதில் அவள் மேனி சிலிர்த்து, நிற்க முடியாமல் தள்ளாடினாள். அதை உணர்ந்தவன், அவளை மேலும் தன்னோடு இறுக்கி அணைத்து அவள் விழாமல் பார்த்துக் கொண்டான்.

விது பேபி என்று அவள் காதில் ரகசியமாக முணுமுணுத்துவிட்டு, அவன் உதட்டை அவள் காதோடு உரசி விட்டு மேலும் துடிதுடிக்கும் அந்த இமைகளுக்கு மீண்டும் தன் முத்திரையை பதித்தான். அவளால் அதற்க்கு மேல் தாங்க முடியவில்லை, கையில் இருந்த மேஹெந்தியை மறந்து அவனை தன்னையறியாமல் கட்டிக் கொண்டாள்.

அதை அவன் தனக்கு அவள் அனுமதி வழங்கியதாக கருதி, அவனின் உதட்டை அவளின் உதட்டோடு சேர்த்து கவி எழுத நினைக்கையில் அவளின் அறை கதவு தட்டப்பட்டது.

அதில் சுய உணர்விற்கு வந்தவள், அவனை தன்னிடம் இருந்து பிரிக்க அவனை தள்ளி விட்டாள். திடிரென்று அவள் தள்ளி விடுவாள், என்று நினைக்காததால் அவன் தடுமாறி விழ போனான். அதற்குள் இவளே, அவனின் கை பிடித்து நிறுத்தி விட்டாள்.

“ஏய் செல்வி! என்ன டி இவ்வளவு நேரம், தூங்கிட்டியா?” என்று இவளின் அன்னை வெளியே இன்னும் பலமாக கதவை தட்டவும், அபிஜித் வேகமாக சென்று கதவை திறந்தான்.

 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
மாப்பிள்ளை கதவை திறப்பார் என்று எதிர்பார்க்காத, அவளின் தாய் மீனாட்சி விழித்தார். அதற்குள் அவனே அவரை சகஜ நிலைக்கு கொண்டு வரும் பொருட்டு, அவரிடம் மன்னிப்பு கேட்டு இருவரும் பேசிக் கொண்டு இருந்ததாக கூறிவிட்டு அங்கு இருந்து சென்றான்.

உள்ளே வந்த மீனாட்சிக்கும், ஹம்சாவிற்க்கும் அவள் கன்னத்தில் பூத்து இருந்த சிவப்பு பூ வேறு கதை சொல்லியது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

“இப்போ எதுக்கு, ரெண்டு பேரும் சிரிக்குறீங்க?” என்று சிடுசிடுத்தாள்.

“இல்லை, மாப்பிள்ளை பேசிட்டு இருந்தோம் சொன்னாரே, என்ன பேசினார் பவி?” என்று கேட்டாள் ஹம்சா.

“சும்மா தான் அவங்க வீட்டு பழக்க வழக்கம் பத்தி, சொல்லிக்கிட்டு இருந்தாங்க. இனி நானும் தெரிஞ்சிக்கணும் தான, அதான் கேட்டுட்டு இருந்தேன் அண்ணி” என்று மழுப்பினாள்.

“ஒ! அப்படியா செல்வி! ஆமா உன் கை மெஹெந்தி பாதியை காணோம், என்ன செய்த?” என்று கேட்டார் அவளின் அன்னை.

“அதுவா அத்தை, அதுல பாதி மெஹெந்தி மாப்பிள்ளை சட்டையில் இவ பூசிட்டா போல, இல்லை பவி” என்று சிரித்துக் கொண்டே கேட்கவும், பவி அப்பொழுது அவன் சட்டையில் எப்படி ஒட்டி கொண்டது என்று நினைத்து பார்த்தவள், தன் சிவந்த முகத்தை மறைக்க மெஹெந்தி கழுவ செல்கிறேன் என்று கூறிவிட்டு உள்ளே சென்று மறைந்தாள்.

இருவரின் சிரிப்பொலியும் அவளை பின் தொடர்ந்து சென்றது, அதில் மேலும் வெட்கம் வந்து அவளை கனவுலகத்திற்கு அழைத்து சென்றது.

அவளின் அன்னை மீனாட்சிக்கு, இப்பொழுது தான் சற்று நிம்மதியாக இருந்தது. வேறு மொழி, வேறு பழக்கவழக்கங்கள் என்று மகள் எல்லாம் புதிதாக பழக வேண்டும், முதலில் இங்கே மாப்பிள்ளையுடன் அவள் ஒத்து செல்வாளா என்று குல்பி இருந்தார்.

ஏனெனில், மாப்பிள்ளை இவளை அழைத்துக் கொண்டு, பெண் கேட்டு வந்த அன்று இருவரும் எலியும், பூனையும் போல் அல்லவா சண்டை போட்டுக் கொண்டு இருந்தனர்.

இப்பொழுது, மகளின் முகத்தில் இருந்த வெட்கமும், மாப்பிள்ளை அசடு வலிந்து சென்றதையும் பார்த்து மனதில் இருந்த சிறிது பாரம் இறங்கியது.

மேஹெந்தியை அலசி விட்டு, வெளியே வந்தவள் அங்கே தன் அன்னையும், அண்ணியும் மாலை நிச்சயத்திற்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டு இருந்ததை பார்த்து, அவளும் அவர்களுக்கு சிறிது உதவினாள்.

சிறிது நேரம் ஓய்வெடுத்த பின், மாலை நிச்சய விழாவிற்கு அவளுக்கு அலங்கரிக்க, அழகு நிலைய பெண்கள் வந்து அவளுக்கு அலங்காரம் செய்ய துவங்கினர்.

கிளி பச்சையும், டார்க் பிங்க்கும் கலந்த பெரிய லஹெங்கா டைப் புடவை அவளுக்கு அந்த இரவு நேரத்தில் அழகியாக காட்டியது. வைர அட்டிகை, வளையல் என அவள் அணிந்து இருந்தது வேறு அந்த இடத்தில் அவளை பேரழகியாக காட்டியது.

அபிஜித் கூட அவள் புடவையின் நிறத்திற்கு ஏற்ப தான், அன்று அவன் ஷெர்வானி அணிந்து இருந்தான். மேடையில் ஏறிய இருவரும், பொருத்தமான ஜோடி என்று எல்லோரும் வாழ்த்து தெரிவித்தனர்.

நிச்சய சடங்கில், அபிஜித்தின் அன்னை அவளுக்கு அவர்களின் பாரம்பரிய வளையல் அணிவித்து அவளை தங்கள் வீட்டு மருமகளாக ஏற்றுக் கொண்டார்.

அதன் பின், வரிசையாக அவர்கள் வீட்டு பெரியவர்கள் எல்லோரும் அவளையும், அவனையும் ஆசிர்வதித்து சென்றனர். மேடையில் இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை என்றாலும், பார்வை பரிமாற்றங்கள் நடத்திக் கொண்டு இருந்தனர்.

இவர்களின் இந்த பார்வை பரிமாற்றத்தை கூட தாங்க முடியாத, யுவதி ஒருத்தி இவர்களை வாழ்த்த வந்தவள் போல் இவர்கள் அருகே சென்று நின்றாள்.

“ஹாய் டார்லி! இது அநியாயம் நான் இருக்க வேண்டிய இடத்தில், இவள் இருக்கிறாள். இரண்டு வருடமாக உங்கள் பின்னாடி சுற்றி வந்து இருக்கிறேன், அப்படி என்ன என்னிடம் இல்லாதது இவளிடம் இருக்கிறது” என்று சிறிது எரிச்சலுடன், முகத்தில் ஓட்ட வைத்த சிரிப்பில் அவனிடம் ஹிந்தியில் கேட்டாள்.

“அவ கிட்ட உண்மையான அன்பு இருக்கு, எல்லாத்துக்கும் மேல என்னை எனக்காக ஏத்துகிட்டு இருக்கிற பக்குவம் இருக்கு அவ கிட்ட. நீ என் பின்னாடி என்னோட ஸ்டேடஸ்காக, பணத்துக்காக மட்டும் தான் சுத்தின அதுவும் எனக்கு தெரியும்”.

“இன்னொரு தடவை என் கண் முன்னாடி வந்திடாத, அப்புறம் நான் என்ன செய்வேன்னு உனக்கு நல்லா தெரியும்” என்று அதே எரிச்சலுடன் கூறினான் ஹிந்தியில் அவளிடம்.

அவன் இவ்வாறு கூறிய பின்னரும் இருப்பாளா, தன் ஆசை நிறைவேறாத விரக்தியில் அவனை முறைத்துவிட்டு கீழே இறங்கினாள். அவள் இறங்கிய பின், அபிஜித் திரும்பி பவியை பார்த்தவன் அவள் இவனை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டு இருந்ததை பார்த்து என்னவென்று கேட்டான்.

“இல்லை, இப்படி தான அன்னைக்கு இந்த ஹை ஹீல்ஸ்காரியை வச்சு என்னை தெரிஞ்சிக்க முயற்சி பண்ணீங்க. இன்னைக்கு எவ்வளவு ஆசையா உங்க கிட்ட வந்தா, அவளை இப்படி ஓட வச்சதை நினைச்சு சிரிப்பு வந்துடுச்சு” என்று கூறி சிரிக்கவும், அவனுக்கும் அன்று பார்டியில் நடந்ததை நினைத்து சிரிப்பு வந்தது.

அதன் பிறகு ஸ்வீட் நத்திங்க்ஸ் என்பார்களே, அது போல் இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர். அதன் பின் இவர்களை சாப்பிட அழைத்து சென்றனர், ஒருவர் மற்றொருவருக்கு இனிப்பு ஊட்டிவிட்டு அந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றி அமைத்தனர்.

அதன் பின் மறுநாள் காலை, அந்த தோட்டத்தில் கல்யாண மேடை அமைத்து ஐயரை வைத்து சடங்குகள் செய்து கொண்டு இருந்தனர். மணவறையில் முக்காடு அணிந்து, அமர்ந்து இருந்த பவித்ரசெல்விக்கு வித்தியாசமான அனுபவமாக அது அமைந்தது.

ஐயர் தாலி எடுத்துக் கொடுக்க, அபிஜித் அவள் கழுத்தில் அந்த கருப்பு மணி மாலையை அணிவித்து தன் சரிபாதியாக ஏற்றுக் கொண்டான். அதன் பின் அந்த முக்காடை எடுத்துவிட்டு, அவன் அவள் நெற்றியில் குங்குமத்தை வைத்தான்.

அவளுக்கு நடக்குமா, நடக்காதா என்று நினைத்து இருந்த இந்த திருமணம், இப்பொழுது நடந்து முடிந்ததில் அவளுக்கு மகிழ்ச்சியில் கண்களில் அருவி கொட்டியது.

அதை உணர்ந்தவன், அவள் கண்களை துடைத்து விட்டான். பவித்ரசெல்விக்கு இரண்டு மாதத்திற்கு முன், இங்கே இவன் குடும்பத்தாரிடம் வந்து சண்டையிட்ட நாள் நினைவு வந்தது.

அவனுக்கோ, இவள் அன்னையிடம் உறுதி கொடுத்து அழைத்து வர தான் பட்ட பாட்டை நினைத்துக் கொண்டான். இருவரும் அப்பொழுது அந்த நாட்களுக்கே சென்று, அதை நினைக்க தொடங்கினர்.

தொடரும்...



 




Saru

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
2,196
Reaction score
1,920
Location
Hosur
Kalyanam mudinjiruchiii nice update uma
Waiting aavaludan next
 




Kayal muthu

மண்டலாதிபதி
Joined
Feb 6, 2018
Messages
219
Reaction score
263
Location
Thanjavur city
Nice uma sis marriage mudichitta,,nan ippo poi last 2ud read pannitu vanthu ippa continue panninen sismmm,,very nice unga writtinle pavi avbolo azhaga therincha,,so super
 




rathisrini

மண்டலாதிபதி
Joined
Jan 23, 2018
Messages
141
Reaction score
380
Location
Chennai
wow.. dum dum dum ivalvu seekiram mudichuduthu.. aduthathu enna.. suspense eppo theriyum
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top