• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

mannavan karam pidithen - 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அத்தியாயம் – 7

ஒரு வாரத்தில் வேலையை முடிக்க சொல்லிவிட்டு(கட்டளையிட்டு), சென்றவனை நினைத்து அவள் வாயடைத்து போனாள். அவனுக்கு தன்னை பிடித்து இருக்கிறது என்று தெரிந்தாலும், அவன் இன்னும் தன்னிடம் முழுதாக அதை பற்றி கூறவில்லையே என்று ஒரு மனம் விவாதித்தது.

“அட அறிவு கொழுந்தே! உன்னை பிடிக்காம தான் அவன் பொண்ணு கேட்க வரானா?” என்று மற்றொரு மனது அவளை குட்டியது.

இப்படி அவள் மனதே, இரண்டாக விவாதித்து அவளை குழப்பத்தில் ஆழ்த்தி இருந்தாலும், ஒரு வாரம் வேலை முடிந்து அவள் அவனுடன் சென்னை பயணித்தாள், பெற்றோரிடம் இவனை அறிமுகப்படுத்த.

தந்தையிடம், இவனை பற்றி கூறி இருந்தாலும், இப்பொழுது நேரில் எப்படி அறிமுகப்படுத்த என்ற தயக்கம் சிறிது இருந்தது அவளுக்கு. ஏனெனில், இன்னும் தாயிடம் விஷயத்தை கூறி இருக்கவில்லை அவள்.

மெதுவாக சொல்லிக் கொள்ளலாம் என்ற அவளின் நினைப்பில் தான், இப்பொழுது அபிஜித் மண் அள்ளி போட்டுவிட்டானே. தனக்கு தன் தாயிடம், வசை பூஜை காத்து ருக்கிறது என்பதை அறிந்து, மனதை அதற்க்கு தயார் செய்துவிட்டு தான் அவனை தன் வீட்டிற்கு அவனை அழைத்து சென்றாள்.

சென்னை வந்து இறங்கியவுடனே, அவன் ஏற்பாடு செய்து இருந்த காரில் தான் இருவரும் அவள் வீடு வந்து சேர்ந்தனர்.

வீட்டை சுற்றி இருந்த தோட்டத்தில் தான், அவளின் தந்தை செடிகளுக்கு ஹோஸ் பைப் மூலம் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு இருந்தார். தன் வருகையை, அவள் தன் தந்தைக்கு கூட சொல்லவில்லை.

தெரிந்தால் தானே சொல்வதற்கு, அந்த அளவிற்கு அவன் தீவீரமாக இருந்து இருக்கிறான் என்பதை இன்று காலை விமானம் ஏறிய பிறகு தான், அவளுக்கே உறைத்தது.

“ரொம்ப நல்லா பிளான் பண்ணி இருக்கான், என்னை எங்க வீட்டுல போட்டு கொடுக்க. மெதுவா சொல்ல வேண்டிய விஷயத்தை, இவன் பிடிவாதத்தில் இன்றைக்கு சொல்ல வேண்டிய கட்டாயத்தை என்ன சொல்ல?”.

“ ஆண்டவா! உள்ளே சேதாரம் ஆகாம காப்பாத்துங்க, உங்க பக்தை உங்களுக்கு நூத்தியெட்டு தேங்காய் உடைப்பா” என்ற வேண்டுதலுடன், கேட் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.

கதவு திறந்த சத்தத்தில், அவளின் தந்தை யாரென்று எட்டி பார்த்தார். அங்கே மகள், திரு திரு முழிப்புடன் ஒரு ஆடவனுடன் வந்து இருப்பதை பார்த்து, அந்த ஆடவனை ஆராய்ந்தார்.

வடகத்திய சாயலில் இருந்த அவனை, யோசனையுடன் பார்த்தார் சிறிது நேரம். அப்பொழுது மகள் அவனை முறைத்து பார்த்ததையும், அதை பார்த்து அவன் சிரித்ததையும் கவனித்து, ஒன்னும் ஒன்னும் ரெண்டு என்ற கணக்கிட்டு மகள் சொன்ன அபிஜித் இவன் தான் என்பதை தெரிந்து கொண்டார்.

வீட்டினுள் இருந்த மனைவி அதற்குள் வெளியே எட்டி பார்த்துவிட்டு, மகள் வந்து இருப்பதை அறிந்து அவளை அவர் பானியில் வரவேற்றார்.

“ஏண்டி! என்னது இது? இப்படியா சொல்லாம கொள்ளாம வந்து இருக்கிறது. வரன்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா, நாங்க உன்னை கூட்டிட்டு வந்து இருப்போம், வீட்டில் கூட கொஞ்சம் முதலிலே சமைச்சு வச்சு இருப்பேன் ல” என்று மகளை சில அர்ச்சனை செய்து கொண்டே, வெளி வாசல் வந்தார்.

“மம்மி! இன்னும் கொஞ்ச நேரத்துல நான் சொல்ல போற விஷயத்தை கேட்டு, நீங்க எப்படி ரியாக்ட் பண்ணுவீங்க? அவ்வ்வ்வ்.. இப்போவே கண்ணை கட்டுதே! ஆண்டவா! நீங்க தான் என்னை காப்பாத்தணும்” என்று மனதில் திக் திக் என்ற உணர்வோடு நின்று, என்ன பதில் சொல்ல அவருக்கு என்று தெரியாமல் முழித்தாள்.

“மீனாட்சி! அவ ஒரு முக்கியமான விஷயமா வந்து இருக்கா, பாரு அவ கூட இப்போ அவ ப்ராஜெக்ட் பண்ணிக்கிட்டு இருக்குற கம்பெனி m.d வந்து இருக்கார். வாசல் ல வச்சு பேசாம, உள்ள கூப்பிடு மா” என்று அப்பொழுது அவர் அந்த சூழ்நிலையை தன் கையில் எடுத்தார்.

அப்பொழுது தான் அவளின் அன்னை மீனாட்சி, அவளுடன் வந்தவனை பார்த்தார். மகளை முறைத்துவிட்டு, அவனை இன்முகமாக வரவேற்று, உள்ளே அழைத்து சென்றார்.

“என்னமா இது? இப்போவே எதுக்கு கூட்டிட்டு வந்து இருக்க? மெதுவா உங்க அம்மா கிட்ட சொல்லி சம்மதம் வாங்கின பிறகு தான, இவரை இங்க கூட்டிட்டு வரணும்ன்னு சொல்லிட்டு போன”.

“இப்போ என்ன திடிர்ன்னு கூட்டிட்டு வந்து இருக்க? நீ மும்பை போனதே, அவளுக்கு பிடிக்கல முதல, இப்போ என்ன சொல்ல போறாளோ?” என்று மேலும் பீதியை கிளப்பினார் அவளின் தந்தை.

“அப்பா! நீங்க வேற நான் கூட்டிட்டு வரல, அவர் தான் என்னை இங்க கூட்டிட்டு வந்து இருக்கார். வாங்க உள்ள போவோம், என்ன பிளான் ல வந்து இருக்கார்ன்னு தெரியல?” என்று சிறிது கலக்கத்துடன், தந்தையுடன் உள்ளே சென்றாள்.

உள்ளே அவன் இவளை பற்றிய புகழாரத்தை, மீனாட்சி அம்மாளிடம் எடுத்து விட்டு கொண்டு இருந்தான். இவளுக்கோ எதற்கு இம்புட்டு புகழாரம் என்று தெரியாமல், முழித்தாள். மெல்ல பூனை வெளியே வந்து விட்டது, அதை கேட்டு அதிர்ச்சி ஆகாமால் சம்மதம் கொடுத்தார் மீனாட்சி.

மகளும், தந்தையும் தான் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். முன்பே மனைவிக்கு விஷயம் தெரியும் போல், என்று அனுபவஸ்தரான அவளின் தந்தை கணித்தார்.

“அப்பா! அம்மா நிஜமாவே சம்மதம் தான் சொன்னாங்களா?” என்று இன்னும் நம்ப முடியாத அதிர்ச்சியில் கேட்டாள் மகள்.

அதற்க்கு அவர் ஒன்றும் சொல்லாமல், அவள் தலையை வருடிவிட்டு சென்றுவிட்டார். அவளுக்கு இப்பொழுது, இங்கே என்ன நடக்கிறது என்று புரியாமல் நின்று இருந்தாள்.

“தம்பி! வாங்க சாப்பிடலாம், செல்வி எடுத்து வை வா” என்று அழைத்தார்.

சாவி கொடுத்த பொம்மை போல், அவர் பின்னே சென்று அவர் சொன்னதை செய்தாள். மகளுக்கு இன்னும் அதிர்ச்சி தெளியவில்லை என்று உணர்ந்த அவளின் தந்தை, மனைவியிடம் அவளுடன் பேசுமாறு சைகை செய்து கூறினார்.

அவரோ முதலில் முறுக்கிக் கொண்டாலும், கணவர் அதன் பின் கெஞ்சிய கெஞ்சலில் எல்லோரும் சாப்பிட்டு முடித்த பின், மகளை அழைத்து அவரது அறைக்கு சென்றார்.

“உனக்கு இப்போ நான் எப்படி சம்மதம் கொடுத்தேன்னு தெரியனும், அதான?” என்று பளிச்சென்று கேட்டார் மீனாட்சி.

அவள் ஆம் என்று தலையாட்டவும், ஒரு பெருமூச்சு விட்டு அன்று அபிஜித் பற்றி தந்தையிடம் கூறிக் கொண்டு இருந்ததை கேட்டதாக கூறினார்.

“உனக்கு எப்போவும் அப்பா தான் க்ளோஸ், அது எனக்கு தெரியும். ஆனா வாழ்கையின் முக்கியமான விஷயம் கல்யாணம், அந்த கல்யாணத்துக்கு நீ கை பிடிக்க நினைக்குற மாப்பிள்ளை பத்தி கூட என் கிட்ட உனக்கு சொல்ல தோனல ல”.

“இப்போவும் அந்த தம்பி தான் வந்து கேட்டு இருக்கு, நீ என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லவும் இல்லை, கேட்கவும் இல்லை” என்று அவரின் மன குமுறல்களை எடுத்து கூறவும், பவித்ரா அப்பொழுது தான் தன் தாயின் மனதில் உள்ள வருத்தத்தை உணர்ந்தாள்.

“அம்மா! என்னை மனிச்சிருங்க மா, சத்தியமா உங்க கிட்ட விஷயத்தை சொல்லனும் தான் மா இருந்தேன். அதுக்குள்ள அவர் இப்போவே பேசணும் சொல்லி, உடனே கூட்டிட்டு வந்துட்டார்”.

“ இனி உன் கிட்ட நான் எதையும் மறைக்க மாட்டேன் மா, சாரி மா ” என்று வருத்தம் தெரிவித்தாள்.

பின்னர் சில பல திட்டு, அறிவுரை என்று மகளுக்கு நிறைய கொடுத்துவிட்டே ஓய்ந்தார் மீனாட்சி. மகளும், அன்னையை புரிந்தவளாக எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டாள்.

அதன் பின் அறையில் இருந்து வெளியே வந்த இருவரையும் பார்த்து, அபிஜித்தும், அவளின் தந்தையும் அவர்களை ஆராய்ந்தனர்.

 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
சற்று தெளிந்து வந்த மகளை பார்த்த பின் தான், அவருக்கு அப்பாட என்று மூச்சை இழுத்து வெளியே விட முடிந்தது. அவரின் மனைவி மீனாட்சிக்கு வருத்தமே தவிர, கோபம் கிடையாது என்பதை அறிந்து வைத்து இருந்தாலும், மகளின் கல்யாண விஷயம் என்று வரும் பொழுது அவர் எப்படி இதை எடுத்துக் கொள்ள போகிறார் என்று புரியாமல் தவித்தார்.

இப்பொழுது மகளின் முகத்தில் இருந்த தெளிவு, மனைவி முகத்தில் இருந்த சாந்தம் அவரின் தவிப்பிற்கு ஒரு முற்றுபுள்ளி வைத்தது.

“ஆர் யு ஆல்ரைட்? ஒரு பிரச்னையும் இல்லையே? அம்மா ஏதும் திட்டினாங்களா?” என்று பவியிடம் கேட்டுக் கொண்டு இருந்தான்.

“டேய் வேண்டாம்! செம கோபத்துல இருக்கேன் உன் மேல, பொறுமையா சொல்லலாம் சொல்லி சொன்னா, நீ இப்போவே சொல்லணும் சொல்லி கூட்டிகிட்டு வந்து, எனக்கு திட்டு வாங்கிக் கொடுத்துட்டு, இப்போ வந்து கூலா ஆர் யு ஆல்ரைட்ன்னு கேட்குற” என்று மனதிற்குள் அவனை பொரிந்து கொண்டு இருந்தாள்.

ஆனால் வெளியே அவள் அவனிடம் ஐ அம் பைன் என்று கூறிவிட்டு, அப்பொழுது அங்கே வந்த அவளின் தம்பி கோகுலை அறிமுகப்படுத்தினாள்.

அபிஜித் கோகுலை பார்த்து ஹாய் எனவும், அவனும் பதிலுக்கு ஹாய் கூறிவிட்டு அடுத்து என்ன பேச என்று தடுமாறினான். அபிஜித் அவனின் படிப்பு, பொழுதுபோக்கு, அவனின் விருப்பம் எல்லாம் கேட்டு அவனை பற்றி நன்கு தெரிந்து வைத்தான்.

அப்படி பேசிக் கொண்டு இருக்கும் பொழுது, இருவரின் ரசனையும், ஒன்று போல் இருக்கவும், இருவரும் மாமா, மாப்பிள்ளை என்று சகஜமாக பேசி ஒருவருக்கு ஒருவர் தட்டிக் கொடுத்தனர்.

இங்கே பவித்ரசெல்விக்கு, காதில் இருந்து புகை வராத குறை தான். தன் தம்பி வந்ததில் இருந்து, தன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல், அவனுடன் சிரித்து பேசியது தான் அந்த கடுப்புக்கு காரணம்.

“டேய் தம்பி! அக்கா கிட்ட வந்த உடனே எப்படி இருக்கணு கூட கேட்காம, அங்க அவர் கிட்ட மட்டும் போய் பேசிகிட்டு இருக்க” என்று அங்கே அவனிடம் வந்து சண்டை பிடித்தாள்.

“நீ யாரு? உனக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்?” என்று கேட்டுவிட்டு, அவளை முறைத்துவிட்டு சென்றான்.

அவளுக்கு தம்பியின் இந்த செய்கை அழுகையாக மாற்றியது, எல்லாம் இவன் ஒருவனால் தான் இன்றைக்கு தன் குடும்பத்தில் தான் அன்னியப்பட்டு இருக்கிறோம் என்று நினைத்து, அவனை முறைத்துவிட்டு, கண்கள் நீரில் மிதக்க மாடியில் இருக்கும் அவளின் அறைக்கு சென்றாள்.

அவனுக்கு தன்னால் தான், இன்று அவள் வீட்டாரிடம் வசவு வாங்கிக் கொண்டு இருக்கிறாள் என்று உறுத்தினாலும் இப்பொழுது அவளை சமாதானம் செய்ய அவன் நினைக்கவில்லை.

காரணம் இப்பொழுது சென்றால், அவள் எந்த அளவு தன்னை திட்டுவாள் என்பதை அறிந்து வைத்து இருந்தான். சிறிது நேரம் கழித்து, அவனே சென்று சமாதானம் செய்ய முடிவு எடுத்து இருந்தான்.

“இப்போ பின்னாடியே வருவான் ல, வந்த உடனே அப்படியே அவன் கழுத்தை பிடிச்சு இறுக்கி நல்லா திட்டிவிட்டு தான் மறு வேலை பார்ப்பேன். ராஸ்கல்! எத்தனை நாள் இப்படி பழி வாங்கனும்ன்னு நினைச்சானோ?” என்று அவன் எண்ணியதற்கு ஏற்ப அவள் அவன் மேல் கொலைவெறியில் இருந்தாள்.

அவனோ கீழே மச்சினன் கோகுலிடம், அக்காவை சமாதானப்படுத்துமாறு கூறிக் கொண்டு இருந்தான். அவளை இப்பொழுது சமாதானப்படுத்தினாள் தான், அவளை அடுத்து அழைத்துக் கொண்டு அவன் வீட்டிற்கு சென்று அவளை அறிமுகப்படுத்தி வைக்க முடியும்.

இல்லையென்றால், அவள் வரவே ஆயிரத்தெட்டு காரணம் கூறி மறுத்துவிடுவாளே. ஆகையால் அவன் அவள் தம்பியை சரி செய்து, அவளிடம் போய் சமாதனம் செய்து வைத்து அவளையும் அழைத்துக் கொண்டு மறுநாள் மும்பை பறந்தான்.

மும்பையில், அவன் முதலில் அழைத்து சென்றது அவன் பாட்டி வசிக்கும் ஒரு அப்பார்ட்மென்ட்டிற்கு தான். அவர் தான் குடும்பத்தின் ஆணிவேர், இவரிடம் சம்மதம் பெற்றால் மொத்த குடும்பத்தினரிடம் சம்மதம் வாங்கியது போல் ஆகிவிடும்.

ஆகையால் பவியை அவன் முதலில் பாட்டியிடம் அழைத்து சென்று, விவரத்தை கூறினான். அவரோ, அவளை ஏற இறங்க பார்த்து அவளை ஒரு வாரம் தன்னுடன் தங்க வைத்து அவளின் நடவடிக்கையை அறிந்த பிறகு தான் சம்மதம் தெரிவிப்பதாக கூறினார்.

“என்ன இந்த பாட்டி, இப்படி ஓவரா பண்ணுது. இந்த வயசுலயும், கெத்து காட்டி எல்லோரையும் ஆட்டி படைக்குது போல, எப்படி ஒரு வாரம் இருக்க போறேனோ” என்று சிறிது பயந்து தான் போனாள் பவித்ரசெல்வி.

அடுத்து ஒரு வாரம் கடந்து வந்து பார்த்த அபிஜித், பாட்டியுடன் ஜல்சா ஆடிக் கொண்டு இருந்த பவித்ரசெல்வியை கண்டு வாய் விட்டு சிரித்தான் அபிஜித்.
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
“என்ன இந்த பாட்டி, இப்படி ஓவரா பண்ணுது. இந்த வயசுலயும், கெத்து காட்டி எல்லோரையும் ஆட்டி படைக்குது போல, எப்படி ஒரு வாரம் இருக்க போறேனோ” என்று சிறிது பயந்து தான் போனாள் பவித்ரசெல்வி.

அடுத்து ஒரு வாரம் கடந்து வந்து பார்த்த அபிஜித், பாட்டியுடன் ஜல்சா ஆடிக் கொண்டு இருந்த பவித்ரசெல்வியை கண்டு வாய் விட்டு சிரித்தான் அபிஜித்.
pattiya kavithitalapavi:D:D:D:D:love::love::love::love:nice epi sis:):):)
டேய் வேண்டாம்! செம கோபத்துல இருக்கேன் உன் மேல, பொறுமையா சொல்லலாம் சொல்லி சொன்னா, நீ இப்போவே சொல்லணும் சொல்லி கூட்டிகிட்டு வந்து, எனக்கு திட்டு வாங்கிக் கொடுத்துட்டு, இப்போ வந்து கூலா ஆர் யு ஆல்ரைட்ன்னு கேட்குற” என்று மனதிற்குள் அவனை பொரிந்து கொண்டு இருந்தாள்.
mind voice nice sis.:D:D:Dpaviyai ammavitam sikka vachitu appaviya oru kelvi:D:D:D:cool::cool::cool:
 




Sameera

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,949
Reaction score
2,014
Location
Chennai
Patti ku tamil hatha naji....nammaluku hindi naji....yeppadi pocho one week....kamal sridevi thana???:D:D
 




sumiram

மண்டலாதிபதி
Joined
Jan 25, 2018
Messages
422
Reaction score
772
Location
doha
perana mattumillai,pattiyayum kavuthacha
 




Saru

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
2,200
Reaction score
1,926
Location
Hosur
Ha ha semma uma deaar
Paati kooda jalsava
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top