• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

mannavan karam pidithen - 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அத்தியாயம் – 8

அன்றைய இரவில், பவித்ரசெல்வியை அலங்கரித்து அபிஜித்தின் அறைக்குள் அனுப்பி வைத்தனர். பவியோ, வெட்கப்பட்டு அறைக்குள் நுழைந்து அவன் முகம் பார்க்க தயங்கி குனிந்து கொண்டு இருந்தாள்.

அவனோ, உள்ளே வந்தவளின் வெட்கத்தை எல்லாம் கவனிக்காமல், அவளை பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே சென்று கட்டிலில் அமர வைத்து அவளிடம் அன்று பாட்டி வீட்டில் என்ன நடந்தது என்று கேட்டுக் கொண்டு இருந்தான்.

“சொல்லு டா விது செல்லம், எப்படி பாட்டியை நீ சம்மதிக்க வச்ச?” என்று அவளை பார்த்து ஆவலுடன் கேட்டான்.

உள்ளே சிறிது பயமும், வெட்கமும் போட்டி போட வந்தவளை பிடித்து, இப்படி ஒரு கேள்வி கேட்டு வைப்பான் என்று எதிர்பார்க்காததால் அவளுக்கு சப்பென்றானது.

அவனோ, அவளின் பதிலை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்தானே தவிர வேறு பார்வை பார்க்கவில்லை. அதில் கடுப்பாகி, உடை மாற்றும் அறைக்கு சென்று இரவு உடையை உடுத்திக் கொண்டு வந்து அவனை முறைத்து விட்டு படுத்து விட்டாள்.

“ஏய் விது குட்டி, ப்ளீஸ் ப்ளீஸ் இப்படி எல்லாம் செய்யாத டா செல்லம். எத்தனை நாள் கேட்கணும் நினைச்சேன், இப்போ தான் சான்ஸ் கிடைச்சு இருக்கு சொல்லு டா குட்டி” என்று கெஞ்சிக் கொண்டு இருந்தான்.

“ஒரு வாரமும் ஜல்சா தான் ஆடிகிட்டு இருந்தோம், பேசாம படுத்து தூங்குங்க எனக்கு தூக்கம் வருது” என்று முறுக்கிக் கொண்டாள்.

“செல்லம் ப்ளீஸ், சொல்லு டா மாமா பாவம் ல செல்லாகுட்டி. நீ என்ன கேட்டாலும், மாமா தரேன் டா, இட்ஸ் எ டீல்” என்று அவன் கூறவும், அவனின் அந்த டீலில் யோசித்துவிட்டு, எழுந்து அமர்ந்தாள்.

“நீங்க டீல் போட்டதால நான் இப்போ உங்களுக்கு சொல்லுறேன், ஆனா நான் கேட்டதை நீ தரல அப்புறம் நான் உங்க பாட்டி வீட்டுல போய் தங்கிக்குவேன் சொல்லிட்டேன்” என்று பதில் டீல் போட்டுவிட்டு சொல்ல ஆரம்பித்தாள்.

“அரே லட்கி, யஹாங் ஆயோ” என்று சத்தம் போட்டு கூப்பிட்டார் பாட்டி அவளை.

வேலை செய்யும் பெண்ணை கூப்பிடுகிறார் என்று நினைத்து, பவித்ரா அவள் அதை கண்டுகொள்ளாமல் கொண்டு வந்து இருந்த கதை புக்கில் மூழ்கி இருந்தாள்.

அதற்குள் பாட்டி எழுந்து, அவளின் அருகே வந்து அவரின் கை தடியை வைத்து அவளை தட்டி கூப்பிட்டார். கதை புக்கில் மூழ்கி இருந்தவள், தன்னை தட்டி கூப்பிடுவது யார் என்று பார்த்தாள். அங்கே பாட்டி, அவளை தான் கோபமாக பார்த்துக் கொண்டு இருந்தார்.

“என்ன டா இது? இந்த பாட்டி ஏன் நம்மள முறைச்சு பார்க்குறாங்க? நாம என்ன தப்பு செய்தோம்?” என்று வாய் விட்டே புலம்பிக் கொண்டு இருந்தாள்.

“மெய்ன் தும்ஹேன் புலாதா ஹூன், தும் முஜே நஹின் சுனாதே?” (“நான் உன்னை கூப்பிடுறேன், உனக்கு காது கேட்கலையா”) என்று ஹிந்தியில் அவளை திட்டிக் கொண்டு இருந்தார்.

“என்ன டா இது? இவங்க என்ன பேசுறாங்கனே எனக்கு புரியல, எப்படி நான் பதில் சொல்லுறது” என்று முழித்தாள்.

“ஹே லட்கி! தும் இஸ் சே தக் க்யோன் ஹோ?” (“ஏய் பொண்ணு! ஏன் இப்படி முளிக்குற?”) என்று கேட்டார்.

“முஜே ஹிந்தி நஹி பதா!” (“எனக்கு ஹிந்தி பேச தெரியாது,”) என்று ஒருவாறு எப்பொழுதோ படித்ததை, நியாபகப்படுத்தி கூறிவிட்டாள்.

அதைக் கேட்ட பாட்டி தான், நொந்து போய் விட்டார். பேரனின் மனைவி எப்படி எல்லாம் இருக்க வேண்டும், என்று அவர் ஒரு கற்பனை வைத்து இருந்தார்.

இப்பொழுது ஹிந்தி பேச தெரியாத ஒருத்தியிடம், அவர் எப்படி பேசி பழகுவார், அவரின் கற்பனையை எப்படி அவளுக்கு புரிய வைப்பார்?. சோர்ந்து போய் அங்கே இருந்த ஈசி ஷேரில், அமர்ந்து கொண்டார்.

இதைப் பார்த்த பவித்ரசெல்வி, வரும் பொழுது இங்கே பார்த்த அவரின் கம்பீரத்தையும், இப்படி தளர்ந்து போய் அமர்ந்து இருப்பதையும் பார்த்து கலங்கி விட்டாள்.

அவளுக்கு அவர் இப்படி இருப்பது, அவரின் இயல்பு இல்லை என்று புரிந்து விட்டது. என்ன செய்வது என்று பலவாறாக யோசித்துவிட்டு, அதன் பிறகு ஒரு வழி கிடைத்து விட்ட மகிழ்ச்சியில், அவரின் முகத்தில் மலர்ச்சியை கொண்டு வர சிரித்துக் கொண்டே அவள் அவரருகே சென்று, அவரின் கால் அருகே அமர்ந்து கொண்டாள்.

ஆனால் அவரின் முகத்தை பார்த்தவள், ஏதோ சரியில்லை என்று எண்ணி அவரின் தோளில் ஆதரவாக, தன் கையை தூக்கி வைத்து அவருக்கு நான் இருக்கிறேன் என்று உணர்த்தினாள். என்னவென்று பார்த்தவரிடம், அங்கே பவித்ரசெல்வி பதற்றத்துடன் இருப்பதை கண்டு, புருவம் உயர்த்தி என்னவென்று கேட்டார்.

“தாதி க்யா ஹை? தும் டிக் ஹோ நா!”(“பாட்டி என்ன ஆச்சு? நல்லா தான இருந்தீங்க!”) என்று பதற்றம் குறையாமல் கேட்டாள்.

“நீ.... நீ.. இப்போ ஹிந்தி பேசுற நல்லா”என்று திக்கி திணறி கேட்டார்.

“கூகிள் இருக்க பயமேன் பாட்டி. இன்னும் ஒரு வாரம் எப்படி அப்புறம் உங்க கூட பேசாம இருக்க முடியும் என்னால” என்று ஹிந்தியில் அவள் கூறவும், அவர் சிரித்தார்.

அதன் பிறகு, அவர் சகஜமாக பவித்ராவிடம் உரையாட ஆரம்பித்தார். அவளோ பேசி பேசியே, பாட்டியை தன் பக்கம் இழுத்துக் கொண்டாள்.

அவருக்கு பேரன் அபிஜித் என்றால் மிகவும் பிடிக்கும், பிடிக்கும் என்பதை விட அவன் என்றால் உயிர். பேரனை கை பிடிக்க போகும் பெண், அவனை சந்தோஷமாக வைத்துக் கொள்வாளா என்று சிறு கவலை அவருள் எழுந்து கொண்டே இருந்தது.

இப்பொழுது பவித்ராவை பார்த்த பிறகு, அவளுடன் பழகிய பிறகு அவருக்கு அவளை பிடித்தது மட்டுமில்லாமல் தன் சொந்த பேத்தியாவே பாவித்து வந்தார். அவளோ, பாட்டியின் சந்தோசம் தான் முக்கியம் என்பது போல் அவரிடம் அவளுடைய வால்தனத்தை எல்லாம் காட்டிக் கொண்டு இருந்தாள்.

“பேட்டி! யஹாங் ஆத்தி ஹை!”(பேத்தி! இங்க வா கொஞ்சம்)

“தாதி ஆயோ”(வரேன் பாட்டி) என்று கூறிக் கொண்டே அவள் அங்கே வந்தாள்.

“ரொம்ப நாள் ஆகிடுச்சு, நான் டான்ஸ் ஆடி. என் காலேஜ் டேஸ் ல, நான் தான் நல்லா ஆடுவேன் தெரியுமா! இப்போ ஆடனும் போல இருக்கு, வரியா ஆடுவோம்” என்று அவர் அழைக்கவும், பவித்ராவிற்கு கேட்கவா வேண்டும், சேர்ந்து ஆட தொடங்கிவிட்டாள்.

அது மட்டுமில்லாமல், அவருக்கு தமிழ் குத்து பாட்டுக்கு நடனம் ஆட வேறு கற்றுக் கொடுத்தாள். எப்பொழுது எல்லாம் தோன்றுகிறதோ, அப்பொழுது எல்லாம் இருவரும் பாட்டை ஹை வால்யும் வைத்து, ஆட்டம் ஆடிக் கொண்டு இருப்பர்.

இங்கே அபிஜித்க்கு வேலை எதுவும் ஓடவே இல்லை, பாட்டிக்கு பிடிக்கவில்லை என்றால் அதன் பின் ஒன்றும் செய்ய முடியாது. வீட்டில் அவர் வைத்தது தான் சட்டம், அதை அவன் நன்கு அறிவான்.

அவன் பேஷன் டிசைன் எடுத்து படிக்க நினைக்க, அவனின் பாட்டியோ குடும்ப தொழிலை கவனிக்க management படிப்பை எடுக்க கூறினார். அவன் எவ்வளவு எடுத்துக் கூறியும், அவர் முடியாது என்று கூறி விட்டார்.

அதன் பிறகு, மனதை தேற்றிக் கொண்டு, அவன் முழு நேரமும் குடும்பத்திற்காக மட்டுமே உழைக்க ஆரம்பித்தான். படிப்பு கூட அவன் பாட்டி தேர்ந்தெடுக்க சொன்னதை தான் எடுத்து படித்தான்.

இப்பொழுது, அவனின் விதுவை அவர் ஏற்றுக் கொள்வாரா என்று மிகப் பெரிய குழப்பத்தில் இருந்தான். ஆகையால் ஒரு வாரம் முடியவும், அவனே சென்றான் அங்கே பாட்டிக்கு அவளை பிடித்து இருக்கிறதா என்று கேட்க.

 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அங்கே பாட்டியுடன் ஜல்சா ஆடிக் கொண்டு இருந்தவளை பார்த்து, ஆ என்று வாயை பிளந்தவன் தான். அடுத்து பாட்டிக்கு அவளை பிடித்து இருப்பதை கூறி, அவரே அவளின் பெற்றோரிடம் பேசி விட்டதாக கூறவும், அவனுக்கு மயக்கமே வந்தது.

அதன் பிறகு நடந்தது எல்லாமே, ஜெட் வேகம் தான். கண்ணை மூடி திறப்பதற்குள், இதோ கல்யாணம் முடிந்து இன்று அவளின் விது, அவனின் அறையில்.

“சரி சரி! நான் சொல்லிட்டேன், டீல் இப்போ என்னன்னா, நீங்க என் கிட்ட எனக்கு பிடிச்ச மாதிரி ப்ரொபோஸ் செய்யணும். அப்புறம் தான் மத்தது எல்லாம், இப்போவே சொன்னா கூட ஓகே” என்று கூறிவிட்டு அவன் முகத்தை பார்த்தவளுக்கு சிரிப்பு வந்தது.

முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு, அவளை பார்த்து முறைத்தான்.

“என்னது இது? நீ என்ன கேட்டாலும் வாங்கி தரேன் சொன்னேன், இப்படி நான் சொல்லல” என்று வாதாடினான்.

“அது அப்போ! நான் சொன்னது இப்போ! டீல் இஸ் எ டீல்” என்று கூறிவிட்டு போர்வையை இழுத்து மூடி படுத்துக் கொண்டாள்.

“ஹையோ! இவளை பத்தி தெரிஞ்சும் இப்படி வாய் விட்டுட்டேனே! கடவுளே! இனி என்ன எல்லாம் நடக்குமோ?” என்று புலம்பிக் கொண்டே மறு பக்கம் படுத்துக் கொண்டான்.

படுத்தானே தவிர அவனால் தூங்க முடியவில்லை, உருண்டு கொண்டே இருந்தான் கட்டிலில். அவனின் இம்சையை தாங்க முடியாத பவித்ரசெல்வி, அவன் எதிர்பார்க்காத நேரத்தில் அவனை கட்டி பிடித்து அவன் இதழில் தன் இதழால் கவி எழுதினாள்.

அதன் பின் அபிஜித், தனக்குள் சிரித்துக் கொண்டு அவள் எழுத நினைத்ததை இவன் எழுத தொடங்கி, அங்கே அழகிய காதல் கவி மலர்ந்தது.

மறுநாள் காலை எட்டு மணி போல் முழிப்பு தட்டி கண்ணை திறந்தவள், அங்கே நிலை கண்ணாடி முன் நின்று தலையை வாரிக் கொண்டு இருந்த கணவனை கண்டாள்.

“விது குட்டி! குட் மார்னிங், சீக்கிரம் ரெடியாகு, நாம இப்போ ஹனிமூன் போறோம்” என்று கூறிக் கொண்டே, அவளை கட்டிலில் இருந்து தூக்கினான்.

“ஹையோ என்னது இது! விடுங்கங்க, நானே எழுந்துப்பேன் ல” என்று சிணுங்கிக் கொண்டு இருந்தாள்.

“உன்னை பத்தி உங்க அம்மா என் கிட்ட சொல்லிட்டாங்க, அவ்வளவு சீக்கிரம் நீ கட்டிலை விட்டு இறங்க மாட்டியாமே?” என்று கூறியவனை பார்த்து முறைத்தாள்.

“எனக்கு வில்லி எங்க அம்மாவே போதும், எப்படி எல்லாம் சொல்லி வச்சு இருக்காங்க” என்று நொந்து கொண்டாள்.

அவளை குளியலறைக்குள் விட்டு, கதவை சாத்திக் கொண்டு அவளுக்காக காத்து இருக்க தொடங்கினான். குளித்து முடித்தவுடன் தான் கவனித்தாள், துண்டை தவிர வேறு எதுவும் இல்லை என்று.

“டேய் பக்கி! ஹையோ புருஷனை அப்படி எல்லாம் சொல்ல கூடாது, கன்னத்தில் போட்டுக்கோ. மங்கூஸ்! எனக்கு அப்படியே உள்ள டிரஸ் எடுத்து வைக்க வேண்டியது தான” என்று பொரிந்து கொண்டே கதவை மெதுவாக திறந்தாள், அங்கே தான் அவன் போனில் யாருடனோ பேசிக் கொண்டு இருந்தான்.

“அந்த பக்கம் தான் திரும்பி இருக்கார், நாம இப்படிக்கா போயிட்டு, அப்படிக்கா வந்திடலாம்” என்று எண்ணிக் கொண்டே வெளியே வந்து அவளுக்கான உடையை எடுத்தது தான் தாமதம், அவள் அவனின் கை வளைவுக்குள் இருந்தாள்.

“இந்த துண்டை கூட கட்டிக்காம, நீ வெளியே வர வேண்டியது தான பேபி” என்று சரசமாக கேட்டவனை பார்த்து முறைத்தாள்.

“இதுக்கு தான், வெறும் துண்டை மட்டும் உள்ளே வச்சீங்களா? ஆமா இங்கேயே ஹனிமூன் கொண்டாட பிளானாங்க” என்று மெதுவாக சிரித்துக் கொண்டே கேட்டவளை பார்த்து, அவளின் இதழை சிறை செய்து மீண்டும் அங்கே காதல் கவி எழுதி அரங்கேற்றினான் அபிஜித்.

அதன் பின் இருவரும் சேர்ந்து குளித்து முடித்து வெளியே வர, மதியம் பனிரெண்டு மணியானது.

அவளின் அன்னை மீனாட்சி, அங்கே இவளை பார்த்து முறைத்துக் கொண்டு இருந்தார். அபிஜித்தின் பாட்டியோ, இருவர் முகத்தில் இருந்த சந்தோஷத்தை பார்த்து, சந்தோசம் அடைந்தார்.

“ஏண்டி செல்வி! வீட்டுல தான் லேட்டா எழுந்துப்ப, இப்போ கல்யாணம் முடிஞ்ச பிறகாவது கொஞ்சம் பொறுப்பு வேண்டாம். இதான் எழுந்து வர நேரமா, எல்லோரும் என்ன நினைப்பாங்க?” என்று அவளை திட்டிக் கொண்டு இருந்தார்.

இவள் திட்டு வாங்குவதை பொறுக்காத பாட்டி, அவளின் அன்னையிடம் அவள் இஷ்டப்படி தான் இங்கே இருப்பாள். எங்கள் எல்லோரையும், அவள் நன்றாக பார்த்துக் கொள்வாள் என்று பவியை பற்றி புகழ்ந்து கொண்டு இருந்தார்.

“மம்மி உனக்கு தான், என் அருமை புரியல” என்று அன்னையை சீண்டிவிட்டு, சிட்டாக ஓடி சென்று கணவனுடன் ஒட்டிக் கொண்டு நின்றாள்.

“வாலு! எப்போ தான் பொறுப்பா இருக்க போறாளோ” என்று சலித்துக் கொண்டாலும், மகள் புகுந்த வீட்டில் நன்றாக இருப்பாள் என்ற திருப்தி ஒரு அன்னையாய் மகிழ்ந்து போனார்.

இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு, எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு தங்கள் பயணத்தை தொடங்கினர்.

“ஆமா, நாம எங்க போறோம்ன்னு சொல்லவே இல்லையே நீங்க. எங்க போறோம்?” என்று கேட்டாள் பவி.

“அது சஸ்பென்ஸ்! நீயே போன உடனே தெரிஞ்சிப்ப” என்று கூறிவிட்டு அவளை அழைத்துக் கொண்டு சென்னை செல்லும் விமானத்தில் ஏறினான்.

இங்கே இருக்குமோ, அங்கே இருக்குமோ என்று தலையை பிச்சிக் கொண்டு யோசித்தவளுக்கு இரவு அவன் கூட்டிக்கொண்டு வந்த இடத்தை பார்த்து, அவளுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

“இதை நீ எதிர்பார்க்கல ல விது பேபி” என்று கேட்டவனுக்கு, அவள் இல்லை என்று தலை ஆட்டினாள்.

ஓயாமல் பேசிக் கொண்டு இருந்தவள், வந்த இடத்தை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு அவனை கட்டிக் கொண்டு நன்றி கூறினாள். அப்படி அவள் இவ்வளவு தூரம் உணர்ச்சி வசப்பட காரணம், அவர்கள் வந்தது பாண்டிசேரியில் உள்ள ஒரு ஹோட்டலிற்கு.

முதன் முதலில் இருவரும் சந்தித்துக் கொண்ட, அதே ஹோட்டல். அவன் அப்பொழுது தங்கிய அதே அறையை தான், இப்பொழுதும் புக் செய்தான். காரணம், அந்த அறையில் உள்ள ஜன்னல் வழியாக தான் முதன் முதலில் இவளை பார்த்து மனதை பறிகொடுத்தான்.

தொடரும்..
 




rathisrini

மண்டலாதிபதி
Joined
Jan 23, 2018
Messages
141
Reaction score
380
Location
Chennai
pavi semma smart.. google correcta use panni pattiyai kavarthuta.. manavanai karam pidichachu aduthu enna...
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
patti& pavi chalsa atranga nice.......... pattiyin anbai score pannita nice epi sis:love::love::love::love::love::love:
 




Sameera

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,949
Reaction score
2,014
Location
Chennai
Nanm pondy a than irukum nu ninaichen....
Athenna vidhu?? Pavithraselvi ku nick name vidhu va??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top