• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Maranathin Marmam - 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
அத்தியாயம் 14

உள்ளே சென்று இன்ஸ்பெக்டரிடம் “நான் கிளம்புறேன் சார்.. ரொம்ப தல வழியா இருக்கு.”

“நீ கிளம்பு முருகன். அதான் எல்லாம் முடிஞ்சதே. அடுத்து நாளைக்கு கெளதம் வெளில வந்துருவான் நீ ஆசை பட்ட மாதிரி. சந்தோஷமா போ..” என்று கூறிவிட்டு தேவேந்திரனின் அம்மாவிடம் வாக்குமூலம் வாங்கி கொண்டு அவர்களும் கிளம்புகின்றனர்.

முருகன் முகத்தில் ஏதோ மாற்றம் தெரிந்ததை இன்ஸ்பெக்டர் கவனிக்க வில்லை. முருகன் சௌந்தர்யா கூறியதை இன்ஸ்பெக்டரிடம் கூறாமலே சென்றான். அவன் மிகவும் குழப்பத்தில் இருந்தான்.

அங்கிருந்து கிளம்பி சௌந்தர்யாவை பார்க்க செல்கிறான். அவளை பார்த்ததும்,

“வாங்க..”

“நீ எதுக்கு அந்த விஷயத்த இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்ல கூடாதுன்னு சொன்ன..?!” என்று குழப்பத்தோடு கேட்டான்.

“அவன் ரொம்ப பயந்து போய் இருக்கான். அவனுக்கோ, அவனோட குடும்பத்துக்கோ ஏதாவது கெடுதல் வந்துடுமோ அப்டின்னு நினைச்சு ரொம்ப கவலை படுறான். அதான் வேணாம்ன்னு சொன்னேன்.”

“இதுக்கு எதுக்கு கவலை படனும். நாம போலீஸ் கிட்ட சொன்னா அவுங்களே அவனுக்கு பாதுகாப்பு கொடுப்பாங்க.. அப்பறம் என்ன..?”

“இல்ல வேண்டாம் இருக்கட்டும். இப்டி ஒரு சாட்சி இருக்குறது வெளில தெரிய வேண்டாம். யாருக்குமே சொல்லாத, சைமன் சந்தோஷ் கிட்ட கூட சொல்லாத. அப்போ தான் நல்லது. அது பாதுகாப்பா இருக்கும்.”

“சரி..” என்று யோசித்தவாறே கூறினான். “நீ யாரு சாட்சினே சொல்லவே இல்ல, ஏன்..?”

“நாளைக்கு சொல்லுறேன். எதுவுமே கேக்காத. நாளைக்கு எப்டியும் தெரிஞ்சுடும்ல..”

“நீ சொல்லுறது எனக்கு என்னம்மோ தப்பா படுது. அது யாருன்னும் சொல்ல மாட்டுற, சாட்சி இருக்குன்னும் யார் கிட்டயும் சொல்ல கூடாதுன்னும் சொல்லுற, நாளைக்கு நீ சொன்ன அவனுக்கு ஏதாவது பிரச்சனை வந்துச்சுன்னா..?!” குழப்பத்தோடு சந்தேகத்தோடு கேட்டான்.

“நான் சொல்லுறத கேளு.. நீ யார் கிட்டயும் சொல்லாத.. நாளைக்கு நானே அவன பத்திரமா கூட்டிட்டு வருவேன். இனி எந்த பிரச்சனையும் வராது. நம்பு.”

“நீ என்கிட்டே மட்டுமாது சொல்லு யாருன்னு..?” விடாபிடியாக கேட்டு கொண்டே இருந்தான். ஆனாலும் அவள் பிடிவாதமாக சொல்லவே இல்லை.

“அத விடு முருகன். நீ கிளம்பு, நேரம் ஆச்சு. மணி இப்போவே ஒன்பது ஆச்சு. நாளைக்கு சீக்கிரம் கோர்ட்க்கு போகணும்ல..”

“சரி நான் கிளம்புறேன். வேற ஏதாவது பிரச்சனைனா எனக்கு கண்டிப்பா கால் பண்ணு. நான் வர்றேன்.” அவன் கிளம்பினான்.

வண்டி ஓட்டி கொண்டே நடப்பதை நினைத்து பார்த்தவாறே சென்றான். சௌந்தர்யா ஏன் அப்டி சொல்லி இருப்பாள் என்று எண்ணி கொண்டே இருந்தான். அப்போது தான் அந்த தேவேந்திரனின் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. வீட்டிற்கு வேகமாக சென்றான்.

வீட்டிருக்குள் நுழைந்தான். அவனது சித்தப்பா டிவி பார்த்து கொண்டிருக்கிறார். அவன் சென்று அருகில் அமர்ந்தான்.

“வாப்பா முருகா.. காதம்பரி, உன் ப்ரெண்ட் வீட்டுலலாம் நான் சொன்னத சொல்லிட்டயா..?”

“சொல்லிட்டேன் சித்தப்பா..”

அவன் அருகில் அமர்ந்து யோசித்து கொண்டிருந்தான். ‘இத எப்டி கேக்குறது, தப்பா நினைச்சு கிட்டா..? கேக்காம இருக்கவும் முடியல..’

“நீ பாருப்பா, வெளில வேலை இருக்கு, நான் கிளம்புறேன்.”

“ஒரு நிமிஷம் சித்தப்பா.. ஒன்னு கேக்கணும்.”

“என்ன..? கேளு.”

“அது வந்து இந்த கெளதம் கேசுல கொலை பண்ணது யாருன்னு தெரிஞ்சுருச்சு.”

சிவசங்கர் முகம் மாறியது. வேகமாக, “யாரு..?” என்று கேட்டார்.

“கந்துவட்டி பாலு...”

சிவசங்கர் பேசவே இல்லை. ஏதோ யோசனையிலே நடந்து கொண்டு இருந்தார்.

“அது மட்டும் இல்ல சித்தப்பா.. இறந்து போனது நம்ம கிட்ட ரொம்ப வருசத்துக்கு முன்னாடி வேலை பார்த்த அழகேந்திரன், அவரோட பையன் தேவேந்திர முருகன்..”

வேகமாக திரும்பி, “என்ன சொல்லுற..? உனக்கு எப்டி தெரியும்..? அந்த பாலுவ பிடிச்சுட்டாங்களா..? அவன் தான் சொன்னானா..?”

“ஆமாம். அவரு பேரு மட்டும் தான் சொன்னாரு. நாங்க அவனோட வீட்டுல விசாரிக்க போனப்போ தான் எனக்கு இதெல்லாம் தெரிஞ்சது.” சித்தப்பா யோசனையில் அப்டியே நின்றார். “உங்களுக்கு அவன தெரியுமா சித்தப்பா..?”

யோசித்தார் எதுவும் பேசவில்லை.

“சித்தப்பா..?!” என்றான்.

“ம்ம்.. சொல்லுப்பா, என்ன கேட்ட..?”

“அந்த தேவேந்திர முருகன தெரியுமா..?”

“ம்ம்.. தெரியும்ப்பா.. அவன நான் தான் பாலு கிட்ட சேர்த்து விட்டேன். ரெண்டு வருசத்துக்கு முன்னாடி அவன் அவுங்க அப்பா பார்த்த வேலையவே எனக்கும் கொடுங்க அப்டின்னு என்கிட்ட வந்து கேட்டான்.

அப்போ இங்க யாரும் தேவை இல்லைன்னு நான் தான் அவன அங்க பாலு கிட்ட சேர்த்து விட்டேன். அதுக்கு அப்பறம் நான் அவன பார்க்கல..”

“அப்டியா சித்தப்பா..” என்றான். அவ்ளோ தான் எல்லாம் நல்லதா தான் போச்சு. அவன் நம்ம கிட்ட வேலை பார்த்து இப்டி பணத்த அடிச்சுருந்தா என்ன ஆகுறது..? என்று எண்ணி சந்தோஷ பட்டான்.

சித்தப்பா கிளம்பி வெளியே செல்கிறார். அவன் ரூமுக்கு சென்றான். நாளை நடக்க போறதை கற்பனை செய்து சந்தோஷத்தில் இருந்தான். அப்போது தான் கால் வந்தது. அட்டென்ட் செய்து பேசுகிறான்.

“ஹலோ முருகா..” சைமன் பேசுகிறான்.

“ஹ்ம்ம் சொல்லு...”

“என்னடா சவுண்ட் கம்மியா இருக்கு..?”

“அப்டி இல்ல. ரொம்ப டயர்டா இருக்கு, அதான். நீ என்னன்னு சொல்லு..”

“சௌந்தர்யா வீட்டுக்கு போனேன். நம்ம சூர்யாவ பார்த்தேன்.”

“யாரு..?!” என்று யோசித்து கொண்டே கேட்டான்.

“அதான்டா நம்ம கெளதம் கடைக்கு பூ கட்டி கொடுப்பாங்கல அவுங்க பையன் சூரிய பிரசாத்.. அவன் தான்.”

முருகனுக்கு தெரிய வந்ததும் “ம்ம்ம்... அவன் எதுக்கு அங்க வந்தான்..?”

“டேய்..! அவன் தான் கொலைய பார்த்த நேரடி சாட்சியாம்... சௌந்தர்யா சொல்லுறா..” ஓ..! அவன் தானா என்று மனதில் நினைத்து கொண்டான் முருகன். “அதுமட்டும் இல்ல.. அந்த கொலைய” என்று பேசி கொண்டிருக்கும் போதே சௌந்தர்யா வந்து சைமனிடம் இருந்து போனை பிடுங்கி கட் செய்தாள்.

போன் கட் ஆனதும் புரியாமல் குழப்பத்தில் மறுபடியும் கால் செய்தான். சுவிட்ச் ஆப் என்று வருகிறது. பின் அதை தான் சௌந்தர்யா நம்ம கிட்டயே சொன்னாலே... வேற எதுவும் இருக்காது என்று எண்ணி மனதை சமாதான படுத்தி கொண்டான்.

அங்கு சௌந்தர்யாவிடம் கோபமாக சைமன், “எதுக்கு இப்டி பண்ண..?” என்று கேட்டான். அவளிடம் பதில் வரவில்லை. முறைத்து கொண்டே நின்றாள்.

“என்ன சொல்லு..? எதுக்கு கட் பண்ணி சுவிட்ச் ஆப் பண்ண..?” என்று எரிச்சல் பட்டு கொண்டே கேட்டான்.

கோபத்தை குறைக்க கண்களை மூடி திறந்து பேரு மூச்சு விட்டாள், பின், “இத யார் கிட்டயும் சொல்லாதன்னு சொன்னேன்ல..?” என்று அமைதியாக கேட்டாள்.

சைமனுக்கு அவள் ஏன் அவ்வாறு சொல்லுகிறாள் என்று புரிய வில்லை.

“ஏன் நம்ம முருகனுக்கு தெரிஞ்சா என்ன..? அவன் எவ்ளோ நல்லவன், அவன் கெளதம் வெளில வரணும்ன்னு எவ்ளோ மெனகெடுறான் அத நீ புரிஞ்சுகாம இப்டி பண்ணாத..”
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
“முருகனுக்கு நேரடி சாட்சி இருக்குன்னு தெரியும், ஆனா அது யாருன்னும், இதுல இன்னொருத்தவங்க சம்மந்த பட்டுருக்காங்கன்னும் தெரியாது..”

“அப்டியா..?” நம்ம பேசுறப்போ அமைதியா கேட்டான் அதுனால தானா..? என்று யோசித்தான். “சரி. அந்த இன்னொருத்தர் யாருன்னு நீ சொல்ல மாட்டுற ஏன்..?”

“அது தான் நாளைக்கு எல்லாருக்கும் தெரிஞ்சுடும்ல.. அப்புறம் என்ன..?”

“ஏன் நீ அத சொல்ல இவ்ளோ தயங்குற..?” என்று புரியாமல் கேட்டான்.

“காரணம் இருக்கு. நாளைக்கு தெரிஞ்சுக்கோ.. இப்போ நீ கிளம்பு.” என்று அனுப்ப நினைத்தாள்.

“என்னமோ பண்ணு போ.. எனிவே கெளதம் வெளில வந்த அது போதும் எனக்கு.” என்று கூறி திரும்பியவன், மறுபடியும் அவளிடம், “அந்த சூர்யா தான் நேரடி சாட்சின்னு உனக்கு எப்டி தெரிஞ்சது..?”

“நான் இன்னைக்கு பூ வாங்கல, அதான் இவுங்க வீடு பக்கத்துல இருக்குல அங்க வாங்கலாம்ன்னு நினைச்சு போனேன். அப்போ சூரியா என்ன பார்த்ததும் பயந்து போய் ஓடி ஒழிஞ்சான்.

நான் என்ன, எதுக்கு இப்டி பண்ணுறான்னு கேட்ட அவுங்க ஒன்னும் இல்ல ஒன்னும் இல்லன்னு சம்மளிச்சாங்க. ஒருவேள இவனுக்கும் கொலைக்கும் ஏதாது சம்பந்தம் இருக்குமோன்னு நினைச்சு கேட்டேன், அப்புறமா தான் அவுங்க உண்மைய சொன்னாங்க.

அவன் ரொம்ப பயந்து போய் இருக்கான் அவன விட்டுறுங்க அப்டின்னே அழுதாங்க. நான் தான் சமாதன படுத்தி அவன நாளைக்கு கோர்ட்க்கு வர சொல்லிருக்கேன். இத வேற யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்னு சொன்னதுக்கு அப்புறம் தான் நாளைக்கு வர சம்மதிச்சுருக்கான்.

போலீஸுக்கு தெரிஞ்சாலோ எதிரிகளுக்கும் தெரிஞ்சு அவன ஏதாது பண்ணிடுவாங்கன்னு தான் பயப்புடுறாங்க. அதான் நான் யார் கிட்டயும் சொல்லாதன்னு சொன்னேன்.”

“ம்ம்.. புரியுது இப்போ. சரி நான் சொல்லல.”

“ஒன்னே ஒன்னு மட்டும் நீ பண்ணு..”

“என்ன பண்ண..?”

“நாளைக்கு சீக்கிரம் கோர்ட்க்கு போனதும், இத தேவன் கிட்ட சொல்லு. மற்றத அவன் பார்த்துப்பான்.”

“சரி. நான் சொல்லுறேன். இப்போ நான் கிளம்புறேன். நாளைக்கு நீ அவன பத்தரமா கூட்டிட்டு வந்துரு..”

“ம்ம்ம்.. கண்டிப்பா வருவேன்.”

மறுநாள், தஞ்சாவூர் கோர்ட். கெளதமை கோர்டிற்கு அழைத்து வந்தனர். கெளதம் அங்கு தேடி தேடி பார்த்தான், யாருமே அங்கு இல்லை. நேரம் சென்று கொண்டே இருந்தது ஒருவரும் வரவில்லை. சௌந்தர்யா கூட இன்னும் வரலையே என்று எண்ணி வருந்தி கொண்டிருந்தான்.

கேஸ் ஸ்டார்ட் ஆக போவதாக கூறி கெளதமை உள்ளே அழைத்து செல்கின்றனர். அப்போது தான் தேவன் அங்கு வருகிறான். அவனை பார்த்ததும் கெளதமுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. சிறிது நேரத்தில் சந்தோஷ், காதம்பரி, அவனது குடும்பத்தினர் அனைவரும் வருகின்றனர். அடுத்து சைமன் வருகிறான். சிவசங்கர் வருகிறார்.

ஆனால் கெளதம் எதிர் பார்க்கும் சௌந்தர்யாவோ, முருகனோ வரவில்லை. அவனுக்குள் ஏமாற்றமாக இருந்தது. ஆனாலும் அவர்களை பார்த்து சந்தோசத்தோடு பேசினான். சைமன் தேவனை தனியாக கூட்டி சென்று சௌந்தர்யா கூறினதை சொல்லவும், அவன் சென்று சாட்சி இருப்பதாக கூறி கோர்ட்டில் பதிகிறான்.

சைமன், சந்தோஷ், தேவன் கெளதம் அனைவரும் பேசி கொண்டு இருந்தனர். யாரும் உண்மையை சொல்லவில்லை. தேவன் கூட சொல்லவில்லை. கெளதம் தானே கேக்கவும் செய்கிறான்.

“எங்க சௌந்தர்யா, முருகன காணோம்..?” அவனது முகமும் அவன் சொல்லிய விதமுமே அவர்களுக்கு புரிந்தது.

சைமன் சிரித்து கொண்டே, “ஏன் நாங்க யாரும் வந்தது உனக்கு பிடிக்கலயா..? அவுங்க மட்டும் தான் உனக்கு முக்கியமா..? நாங்க எல்லாரும் வேணாமா போய்டவா..?” கிண்டல் செய்து கேட்டான்.

கெளதம், “அச்சோ..! ஏண்டா இப்டி பேசுற.. நீங்க எல்லாரும் எனக்கு முக்கியம் தான். நான் அப்டி சொல்லல..”

“வேற எப்டி..?” என்று விடாமல் நக்கலடித்தான்.

“போடா..!” அவனை சமாளிக்க முடியாமல் பேச தடுமாறினான்.

தேவன், “சரி, சரி... இந்த கிண்டல் எல்லாம் விடுங்க.. அவன் நேத்து என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கான்.”

சந்தோஷ், “எல்லாம் நல்லதா தான் நடந்துருக்கு கெளதம். எல்லா கெட்டதும் முடிஞ்சு நல்லது நடக்க போகுது இன்னைல இருந்து.”

“என்னாச்சு..?” ஆர்வமாக கேட்டான் கெளதம்.

“அது வந்து..” என்று சைமன் சொல்லி கொண்டிருக்கும் போதே கேஸ் நம்பர் சொல்லி அழைக்க படுகிறது. அனைவரும் செல்கின்றனர்.

கேஸ் ஸ்டார்ட் ஆகிறது. இன்று தேவன் கடைசியாக நடந்த அனைத்து விசாரணை கூறி ஸ்டார்ட் செய்தான்.

நீதிபதி, “ஸ்டார்ட் பண்ணுங்க..”

தேவன், “சார் இந்த கேசுல முருகன கடத்தினவன் கூறிய வாக்கு மூலத்தின் படி போலீஸ் கந்துவட்டி பாலுவை அர்ரெஸ்ட் செய்து இருக்கார்கள்.”

“சரி நீங்க அவன இப்போ கூப்பிடுங்க விசாரிக்க.”

அவனை கூண்டில் ஏற்றி நிற்க வைத்தனர் போலீஸ்.

தேவன் விசாரிக்கிறான். “சொல்லு நீ யார் சொல்லி முருகன கடத்தின..?”

“அது வந்து சார்.. கந்துவட்டி பாலு அவர் சொல்லி தான் பண்ணோம். அவரு எங்களுக்கு பணம் கொடுத்தாரு, பணத்துக்கு ஆசை பட்டு தான் இத பண்ணிட்டோம்.”

அவன் கூறியதை கேட்டு அதிர்ச்சியாகினான் கெளதம். பாலுவுக்கும் முருகனுக்கு எந்த சம்பந்தமும் இல்லையே என்று எண்ணி கொண்டிருந்தான்.

“சரி. அப்போ உங்களுக்கும் அந்த கொலைக்கும் சம்மந்தம் இருக்கு..? அப்டி தான..”

“இல்ல சார்... இல்ல எங்களுக்கு எங்க ஆளுகளுக்கும் இதுல சம்பந்தம் இல்ல.”

“முருகன கொலை நடந்த இடத்துல இருந்து கடத்திருக்கீங்க, அப்போ உங்களுக்கும் அதுக்கும் சம்பந்தம் இருக்கும் ல..?”

“இல்ல சார். அன்னைக்கு நாங்க கடத்தல. அன்னைக்கு நைட் அவரோட ஆளுக வந்து தான் முருகன எங்க கிட்ட ஒப்படைச்சாங்க..”

“சரி நீங்க கடத்தல. ஆனா அவங்க உங்க கிட்ட ஒப்படைக்கும் போது என்ன சொல்லி ஒப்படைச்சாங்க..?”

“முருகன பத்தி சொன்னாங்க. நான் சொல்லும் போது எதுனாலும் பண்ணுங்க. அவன கொல்லணுமா, இல்ல விட்டுரனுமான்னு நான் சொல்லுறேன்னு சொன்னாரு.”

“சரி அவரு கொலை பண்ண சொன்னாரா..?”

“இல்ல சார். இந்த கொலை கேஸ் முடிஞ்சா பின்னாடி தான் எதுனாலும் பண்ணனும்ன்னு சொன்னாங்க..”

“சரி.” என்று கூறிவிட்டு நீதிபதியை பார்த்து, “சார்.. அந்த பாலுவ விசாரிக்கணும்.”

“எஸ்..” நீதிபதி கூறியவுடன், பாலுவை அழைத்து வந்து கூண்டில் ஏற்றி நிற்க வைக்கின்றனர்.

இங்கு கெளதம் டென்ஷனாக இருந்தான். இன்னும் சௌந்தர்யா வர வில்லை என்று தெரிந்ததும் அவளுக்கு எதுவும் நடந்திருக்குமா என்று பயந்து கொண்டிருந்தான். முருகனும் இன்னும் வர வில்லை என்றதும் அவனது பயம் அதிகரித்தது.

“நீங்க தான கந்துவட்டி பாலு.”

“ஆமாங்க சார்.” என்று திமிராக கூறினார். அவரது பார்வையே தவறு செய்து இப்படி கோர்ட்டில் நிற்கிறோம் என்ற பயமோ கவலையோ இன்றி இருப்பதை காட்டியது.

“அவன் சொன்னது எல்லாம் உண்மையா..? நீங்க தான் முருகன கடத்த சொன்னீங்களா..? எதுக்கு பண்ண சொன்னீங்க..? நீங்க தான் இந்த கொலைய பண்ணீங்களா..?”

“நான் தான் அந்த கொலையும் பண்ணேன், முருகன கடத்தவும் சொன்னேன்.”

இவன் செய்த தப்புக்கு நாம இத்தனை நாளா கஷ்ட பட்டுருக்கோம். ஆனா அவன் தப்பு பண்ணிட்டோம் அப்டின்ற எண்ணமே இல்லாம வருத்தபடாம, எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாம திமிரா சொல்லிட்டு இருக்கான் என்று எண்ணி அவனை முறைத்து பார்த்து கொண்டு நின்றான்.

“எதுக்கு இதெல்லாம் பண்ணுனீங்க..? இறந்து போனது யாரு..?”

“இறந்து போனது என் கிட்ட வேலை பார்த்த தேவேந்திர முருகன்.

அவன் என்னோட பணத்த எனக்கு தெரியாம திருடினான். அந்த கோபத்துல தான் நான் அவன கொலை பண்ணிட்டேன்.
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
அத மறைக்க தான் ஆக்சிடென்ட் ஆனா மாதிரி பண்ணி வச்சேன். அப்போ தான் முருகன் அங்க வந்தான். நாங்க பொணத்த உடனே எடுத்துட்டு ஒளிஞ்சுகிட்டோம்.”

பாலு பேசுவதை இடைமறித்து, “நாங்கன்னு சொல்லுறீங்க..?! அப்போ உங்க கூட வேற யாரு இருந்தா..?!”

பாலு முகம் மாறியது. ஒரு நிமிடம் யோசித்தார்.

“சொல்லுங்க.. யாரு இருந்தா..?” என்று மறுபடியும் பாலுவை கூர்ந்து கவனித்து கொண்டே கேட்டான்.

“அது வந்து, அது என்னோட அடியாட்கள். என் கிட்ட வேல பாக்குறவங்க.. வேற யாரும் இல்ல..”என்று கூறிவிட்டு திரும்பி கொண்டார் பாலு தேவனை பார்க்க முடியாமல்.

“அப்போ உங்க கூட வேற யாரும் இல்லன்னு சொல்லுறீங்க.. சரி, நீங்க சொல்லுங்க.” என்று உன்னை பிடிக்க வேண்டிய இடத்துல பிடிக்கிறேன் மனதில் நினைத்து கொண்டே சொன்னான் தேவன்.

“முருகன் அங்க வந்து ஒரு தென்னை மரத்துக்கு கிட்ட நின்னு கிட்டு இருந்தான். ஏதோ குனிஞ்சு இருந்தான்.

அவன் கொலையா பாத்துட்டான் போல அப்டின்னு நினைச்சு அவன போய் தூக்கிட்டு வர சொன்னேன் என்னோட ஆளுகள விட்டு.

அப்போ திடிர்ன்னு அங்க கெளதம் வந்தான். இனி அங்க இருந்த நம்ம மாட்டிப்போம்ன்னு கிளம்பிட்டோம்.”

“அப்போ பொணத்த ரோடுல போட்டது யாரு..?”

“என்னோட ஆளு தான் போட்டான். அப்புறம் அந்த கெளதம் கிளம்புற வரைக்கும் அங்க மறைஞ்சு இருந்தோம். அதுக்கு அப்பறம் கிளம்பிட்டோம்.”

கெளதம் நிம்மதி பேரு மூச்சு விட்டான். கண்கள் கலங்கி கண்ணீரே வந்து விட்டது ஆனந்தத்தில். இதன்னை நாள் கஷ்டம் இன்றோடு முடிந்தது என்று சந்தோஷபட்டான்.

“சார், இப்போ நமக்கு எல்லா விஷயமும் நல்ல தெரிஞ்சுருச்சு. அன்னைக்கு கொலைய இந்த பாலு தான் பண்ணிருக்கான். பொணத்த தூக்கி போட்டது கூட கெளதம் இல்ல, இவனோட ஆளுக தான்.

என்னோட கட்சி காரர் கெளதம் எந்த கொலையும் பண்ணல, யாரையும் கடத்தவும் இல்ல. அதனால அவர நீங்க விடுதலை பண்ணனும்.” என்று கூறி தனது வாதத்தை நிறுத்தினான்.

நீதிபதி ஏதோ எழுதி வைத்து கொண்டிருந்தார். தேவன் திரும்பி பார்த்தான் சௌந்தர்யா இன்னும் வரவில்லை என்று சைமன் கையசைத்தான். என்ன செய்வது என்று எண்ணினான். எப்படியானாலும் இதை சாமாளித்து ஆக வேண்டும் என்று எண்ணி மறுபடியும் பேசினான்.

நீதிபதியை பார்த்து தேவன், “சார், இவர் சொல்லுறதுல பாதி உண்மை இருக்கு, பாதி பொய் இருக்கு.”

அனைவருக்கும் குழப்பமானது. கெளதம் என்ன என்று புரியாமல் விளித்து கொண்டிருந்தான்.

“என்ன சொல்லுறீங்க..? தெளிவா சொல்லுங்க..”

“அதுவந்து சார்.. இவர் மட்டும் இந்த கொலைய பண்ணல... இவரோட சேர்ந்து இன்னொருவரும் சேர்ந்து பண்ணிருக்காங்க.. அது யாருன்னு இவரு சொல்லவே இல்ல.”

“என்னது இன்னொருத்தரா..?” என்று கேள்வி எல்லாருக்குள்ளும் எழுந்தது.

சந்தோஷ் சைமனை பார்த்து, “என்னடா தேவன் என்னென்னமோ சொல்லுறான்..? நிஜமாவே இதுல வேற ஒருத்தரும் இருக்காங்களா..? இவன் நிஜமா தான் சொல்லுறானா..?” என்று கேள்வியாய் கேட்டு கொண்டிருந்தான் சந்தோஷ்.

அதற்க்கு மேல் அவனிடம் மறைக்க இஷ்டம் இன்றி சைமன், “ ஆமாம். இத எனக்கும் தெரியும். சௌந்தர்யா தான் கண்டு பிடிச்சுருக்கா.. அதுவும் அவ தான் என்னை யார் கிட்டயும் சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டா.. அதுனால தான் நான் உன்கிட்ட கூட சொல்லலடா.. மன்னிச்சுரு..” என்று வருத்தப்பட்டு பேசினான்.

“அதுக்கு எதுக்கு நீ வருத்த பட்டு சாரி லாம் சொல்லிட்டு, அத விடு. இப்போ அந்த இன்னொருத்தர் யாரு..?”

“எனக்கும் தெரியாதுடா.. நான் கேட்டேன். சௌந்தர்யா சொல்லவே இல்ல.”

“அண்ணாக்கு தெரியுமாணா..? அவர் ஏன் இன்னும் வரல..? அவுங்கள கூட்டிட்டு வர தான் போயிருக்காரா..?” என்று காதம்பரி கேட்டாள்.

“இல்ல தெரியலம்மா. முருகனுக்கு சாட்சி இருக்குன்னு தெரியும். ஆனா அவனுக்கு இன்னொருத்தரும் காரணம் அப்டின்னு கூட தெரியாது. இப்போ அவனும் எங்கன்னு தெரியல. ஒருவேள நீ சொன்ன மாதிரி கூட நடந்துருக்கலாம். என்னாச்சுன்னு ஒன்னுமே புரியல.”

காதம்பரி சிவசங்கரிடம், “அப்பா..! அண்ணா எங்கப்பா..? அவரு எங்க போயிருக்காரு..? உங்களுக்கு தெரியுமா..?” என்றால் சோகமாக.

“இல்லம்மா... அவன் காலைல நான் எழுந்திரிச்சு வரும் போதே வீட்டுல இல்ல. கிளம்பிட்டான். எங்க போனான்னு தெரியல.”என்றார்.

சைமன் அனைவரின் சோகத்தையும் மாற்ற எண்ணி, “ஏன் எல்லாரும் இவ்ளோ சோகமா ஆய்டீங்க.. அவுங்க சீக்கிரம் வந்துருவாங்க. கெளதம் வெளில வரப்போ அவுங்க ரெண்டு பேரும் இல்லாம இருப்பாங்களா..? நீங்க இதுக்கு போய் கவலை பட்டுட்டு இருக்கீங்க.. வந்துருவாங்க” தனக்குள் இருந்த பயத்தை வெளிகாட்டாமல் பேசினான்.

“இன்னொருத்தர் காரணமா..? யாரு..? எனிதிங் ப்ரூப்..?” என்று நீதிபதி கேக்கிறார்.

“எஸ் சார்.. நேரடியா கொலையா பார்த்த சாட்சி ஒருத்தர் இருக்கார்...”

“யாரு வர சொல்லுங்க..”

“சார் அது வந்து அவரு இன்னும் வரல. கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணா வந்துருவாங்க..”

“சாட்சி இருக்கா..? இல்ல..?” என்று நீதிபதி இழுத்தார்.

“நிஜமாவே இருக்கு சார்..” தேவன் கூறி கொண்டே திரும்பி பார்த்தான். அப்போது தான் சௌந்தர்யாவும், சூரியாவும் வந்து கொண்டிருந்தனர். நிம்மதி அடைந்தான் அவர்களை பார்த்ததும்.

“சார் சாட்சி வந்தாச்சு..” என்று தேவன் மகிழ்ச்சியோடு அந்த உண்மையை தானும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கூறினான்.

அனைவரும் திரும்பி பார்த்தனர். சௌந்தர்யா, சூர்யா இருவரும் நின்று கொண்டிருந்தனர். கெளதம் பார்த்து சௌந்தர்யா வந்துட்டா என்று எண்ணி சந்தோஷமடைந்தான். சூர்யா பேர் சொல்லி அழைக்க பட்டது. சூர்யா சென்று கூண்டில் ஏறி வாக்குமூலம் கொடுக்க தயாரானான்.

தேவன், “உங்க பேரு என்ன..? என்ன செய்றீங்க..?”

“என்னோட பேரு சூர்யா.. நான் அப்பா அம்மா கூட சேர்ந்து பூ விக்கிறேன்.”

“நீங்க அன்னைக்கு நடந்த கொலையா பார்த்தீங்களா..? என்ன நடந்தது..?”

“சார் அன்னைக்கு அம்மாக்கு உடம்பு சரி இல்லைன்னு நான் பூ கட்ட வேற அக்கா கிட்ட கொடுக்க போனேன். திரும்பி வரும் போது தான் நான் அந்த கொலைய பார்த்தேன்.”

“சரி நீங்க அந்த கொலையா பார்த்தீங்க, அப்புறம் ஏன் நீங்க இத போலீஸ்ல சொல்லல..? கேஸ் ரொம்ப நாளா நடக்குதுல..?!”

“சார் நான் கொலையா பார்க்கவும் ரொம்ப பயந்து போயிட்டேன். எனக்கு உடம்பு சரி இல்லாம போய்டுச்சு.

அம்மா எனக்கு அவுங்களால ஏதாவது பிரச்சனை வந்துரும்ன்னு பயந்து போய் என்னை வெளிலே விடல.”

“சரி அன்னைக்கு என்ன நடந்ததுன்னு சொல்லுறீங்களா..?”

“சொல்றேன் சார். அன்னைக்கு நான் திரும்பி வரும் போது ஒருத்தர நிறையா பேர் தொரத்திட்டு வந்துட்டு இருந்தாங்க.”

“அவுங்க யாருன்னு தெரியுமா..?”

“அவுங்க கந்துவட்டி பாலு அண்ணாவோட ஆட்கள்.”

“நல்லா தெரியுமா..? நீங்க பார்த்துருக்கீங்களா..?”

“நான் பார்த்துருக்கேன். அவுங்க தான், எனக்கு நல்ல தெரியும்.”

“சரி அப்பறம் என்னாச்சு..?”

“அவுங்க அவர தொரத்திட்டு போய் அந்த பக்கம் இருக்க தென்னந்தோப்புக்குள்ள போய்ட்டாங்க. நானும் என்னன்னு பார்க்க கொஞ்சம் கிட்ட போய் பார்த்தேன்.

அங்க அவர எல்லாரும் பிடிச்சு கைய கட்டி கீழ உட்கார வச்சாங்க. அப்போ அங்க கார்ல வந்து இறங்கினாங்க ரெண்டு பேரு.”

“யாரு..?”

“வெளிச்சம் இந்த சைடு ரோடு பக்கம் தான் இருந்துச்சு. கார் ஓட்டிட்டு வந்த பாலுவ மட்டும் தான் தெரிஞ்சது. அந்த பக்கம் யாரு இருந்தான்னு தெரியல.”

“அவுங்க ரெண்டு பெரும் உள்ள போனாங்க. அந்த ஆள அந்த இன்னொருத்தரு தான் கத்தி வச்சு குத்தினாரு. பாலு பக்கத்துல நின்னுட்டு இருந்தாரு.”

எல்லாருக்கும் அதிர்ச்சி.

“நீ உண்மை தான் சொல்லுறியா..? அந்த ஆள இந்த பாலு கொலை பண்ணலையா..? இல்ல நீ யாருக்காகவாது பொய் சொல்லுறியா..?” என்று சந்தேகத்தை கேட்டான்.

“இல்ல சார் நான் உண்மைய தான் சொல்லுறேன்.”

“ அந்த இன்னொருத்தர் யாருன்னு நீ பாக்கலையா..?” என்று மறுபடியும் கேட்டான் தேவன்.

“இல்ல நான் பார்த்தேன்.”

“யாரு..?” என்றான் ஆவலாக. எல்லொருக்கும் ஆவலாக இருந்தது உண்மையை கேக்க. கோபமாக காத்திருந்தான் கௌதம் அது யார் என்று தெரிந்து கொள்ள.

தொடரும்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top