• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Maranathin Marmam - 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
அத்தியாயம் 15

அந்த கொலையாளி யார் என்ற எதிர் பார்ப்பு அதிகரித்து கொண்டே இருந்தது அங்கு இருந்த அனைவருக்கும். நீதிபதியும் ஆவலாக, “யாருன்னு சொல்லுப்பா..?” என்று கேட்கிறார். ஆனால் அதை சொல்ல சூர்யாவுக்கு தான் பயமாக இருந்தது. சொல்லவே அதிகம் நேரம் எடுத்தான், அனைவரின் ஆவலையும் கோபத்தையும் சேர்த்து கொண்டு. ஒரு வழியாக மூச்சை இழுத்து விட்டு தைரியத்தோடு சொல்கிறான்.

“அது வந்து சார்... அது... சிவசங்கர் ஐயா தான்.”

அனைவருக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது. சிலருக்கு அது நாம கணிச்சது சரியா தான் போச்சு என்று இருந்தது. ஆனால் காதம்பரி அதை எதிர் பார்க்கவில்லை. அவள் வேகமாக அருகில் திரும்ப அங்கு சிவசங்கர் இல்லை. தேடினாள், கொஞ்சம் தள்ளி நின்று எங்கையோ பார்த்தவாறு திமிராக இருந்தார். இப்படி நடக்கும் என்று ஏற்கனவே எதிர்பார்த்தவர் போல யாரையும் கண்டு கவலை கொள்ளாமல், முகத்தில் எந்த பதற்றமும் இன்றி இருந்தார்.

சைமன் சௌந்தர்யாவை பார்த்தான். அவள் ஆம் என்பது போல் தலை அசைத்தாள். சௌந்தர்யா முருகன் கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்ன்னு இதற்காக தான் சொல்லிருக்கா என்பது சைமனுக்கு அப்போது தான் புரிந்தது. அதுவும் சைமனுக்கு ஏற்கனவே கொலை இவர் தான் செய்திருப்பாரோ என்று சந்தேகம் இருந்தது. இன்று அது நிரூபணமானது.

கெளதமுக்கு இதை கேட்டதும் கோபமாக வந்தது. இப்போ முருகன் இங்க வராம இருக்குறதுக்கு இது தான் காரணம் போல என்று நினைத்து வருந்தினான். சிவசங்கர் மீது இருந்த மரியாதை போய்விட்டது.

காதம்பரியால் ஏற்க முடியவில்லை. அழுது கொண்டே அப்பாவுக்கு அருகில் எழுந்து செல்கிறாள். அதை கவனித்த வுடன், அங்கிருந்து நகர்ந்து முன் இருந்த போலீஸ் அருகில் சென்றார். யாராலும் அருகில் செல்ல முடியவில்லை.

நீதிபதி, “எங்க இருக்காரு சிவசங்கர்..?” என்றார். உடனே சிவசங்கரும், “நான் இங்க தான் இருக்கேன் சார்...” என்று தைரியமாக துணிச்சலாக கூறினார்.

நீதிபதி, “நீங்க இந்த குற்றசாற்ற ஒப்புகொள்றீங்களா..? இங்க கூண்டுல வந்து ஏறி சொல்லுங்க..” என்றார்.

சிவங்கர் கூண்டில் ஏறி நிற்கிறார்.

“ஆமாம் நான் தான் இந்த கொலைய பண்ணேன்.”

தேவன் அருகில் விசாரிக்க செல்கிறான்.

“அப்போ முருகன கடத்தினதும் நீங்க தானா..?”

“ஆமாம் நான் தான்...”

அதை கேட்டதும் அனைவருக்கும் அவர் மேல் கோபம் கொந்தளித்தது. இப்படி இரக்கமற்றவனா இவன் என்று வயதுக்கு மரியாதை குடுக்காமல் அவரை சிறியவர் முதல் பெரியார் வரை அனைவரும் திட்டினர். காதம்பரிக்கு அதற்கு மேல் அங்கு இருக்க முடியவில்லை. அழுது கொண்டே வெளியே சென்று விட்டாள்.

சந்தோஷ், சைமன், தேவன் அனைவரும் அவரை பார்த்த பார்வையே அவரை அழித்து விடும் அளவுக்கு இருந்தது. பார்வையிலே கோப கனல் தெறித்தது.

கெளதம் அவரை குழப்ப பார்வையோடு பார்த்தான். வாழ்வு தந்தவர்கள் என்றுமே கடவுள் தான் என்று எண்ணம் மனதில் தோன்றியது. நம்பிக்கை துரோகிகள் என்றுமே கடவுளும் இல்லை, நல்லவர்களும் இல்லை என்ற எண்ணமும் வந்தது. ஆனால் முருகனை கடத்தியது தான் அவனுக்கு தாங்க முடியாமல் இருந்தது.

தேவன் கோபமாக, “முருகன் உங்க கூட பிறந்த அண்ணனோட பையன். அதுவும் அவன அவுங்க அப்பா, தாத்தா எல்லாரும் இறந்த பின்னாடி இத்தனை வருசமா வளத்துருக்கீங்க.. அப்டி இருந்தும் உங்களால எப்டி இத பண்ண முடிஞ்சது. எதுக்கு இந்த கொலை, கடத்தல் எல்லாம் பண்ணுனீங்க..? சொல்லுங்க..”

“இது எல்லாம் எதிர்பாராம நடந்துருச்சு.”

“பிளான் பண்ணி கொலை பண்ணி அத மறைக்கவும் செஞ்சுருக்கீங்க, ஆனா இது எதிர்பாராம நடந்ததா..? இத நாங்க நம்புவோமா..? உண்மை தான் எங்களுக்கு தேவை.”

“நான் என்ன நடந்ததுன்னு சொல்லுறேன். என்னோட பணமும் சேர்ந்து தான் பாலு கிட்ட இருந்தது. அவனோட மறைமுகமா நானும் சேர்ந்து இந்த வட்டி விடுற வேலை பண்ணேன். என் கிட்ட வேலை பார்த்த அழகேந்திரனோட பையன் அப்டின்னு தான் அந்த தேவேந்திர முருகன பாலு கிட்ட வேலை க்கு சேர்த்தேன்.

அவுங்க அப்பா மாதிரி அவனும் நல்லவனா விசுவாசமா இருப்பான்னு தான் நினைச்சேன். ஆனா அவன் எங்களோட பணத்த எங்க கிட்ட இருந்து திருடினான், அதுவும் எங்களுக்கு தெரியாம.

அது தெரியவந்ததும் அதிக கோபம் வந்தது.

அந்த கோபத்துல தெரியாம நான் கொலை பண்ணிட்டேன். அப்போ அங்க முருகன் வந்ததுனால அவன் பார்த்துருப்பானோனு கடத்த சொன்னேன்.

மற்றபடி வேற எதுவும் இல்ல..”

“ஆனா ஆக்சிடென்டா நீங்க மாத்தினத பார்த்தா அவசரப்பட்டு செஞ்ச கொலை மாதிரி இல்லையே..?” என்று கேள்வியால் துளைத்தான் தேவன் சிவசங்கரை.

“நாங்க மாட்டிக்க கூடாதுன்னு நினைச்சு அப்டி பண்ணிட்டோம். மற்ற படி வேற எந்த நோக்கமும் இல்லை.”

“சரி, கொலை தான் எதிர்பாராம பண்ணிட்டீங்க.. முருகன் அந்த கொலையா பார்க்கலன்னு தெரிஞ்சும் ஏன் அவன வெளில விடல..? அதுவும் அவன கோர்ட்ல வச்சு கொலை பண்ணவும் ட்ரை பண்ணிருக்கீங்க.. இதுக்கு என்ன சொல்லுறீங்க..?”

“அப்போ இங்க கேஸ் நடந்துட்டு இருந்துச்சு. அதுவும் கெளதம் தான் கொலை பண்ணினதா கேஸ் இருந்தது. நாங்க தப்பிக்கனும்னு தான் முருகன் வெளில விடாம வச்சுருந்தோம். அன்னைக்கு கோர்ட்ல நாங்க முருகன கொலை பண்ணனும் ன்னு நினைக்கல. அவன் தப்பிச்சா உண்மை எல்லாம் வெளில கொண்டு வந்துருவானோ அப்டின்னு பயந்து அவன அடிச்சு கோர்ட்க்கு போய் சாட்சி சொல்ல விடாம பண்ண தான் நினைச்சோம்.”

“நீங்க சொல்லுறது எல்லாம் எப்டி நம்புறது..?”

“நாங்க தான் கொலை, கடத்தல் பண்ணினதா ஒத்துகிட்டோம்ல, அப்பறம் என்ன..?” என்று கொஞ்சம் திமிராக கேட்டார் சிவசங்கர்.

தேவன் பதிலுக்கு, எதுக்கு பண்ணுனீங்கன்னு உண்மைய நான் வரவழைக்கிறேன் என்று நினைத்து கொண்டே சூர்யா பக்கம் சென்று, “நீங்க அன்னைக்கு அவுங்க பேசினத எதையாது கேட்டீங்களா..?”

“இல்ல சார்.. எனக்கு அவுங்க பேசினது எதுவும் கேக்கல.”

சூர்யா எதுவும் கேக்கவில்லை என்று சொல்லவும் சிறிது ஏமாற்றமாய் தான் இருந்தது தேவனுக்கு. இருந்த போதிலும் உண்மையை வெளி கொண்டு வர வேண்டும் என்று மறுபடியும் சென்று பாலுவை விசாரித்தார்.

“நீங்க சொல்லுங்க பாலு.. எதுக்கு நீங்க கொலை பண்ணதா ஒத்துகிட்டீங்க..?”

பாலு பதில் பேசாமல் நின்றார். சிவசங்கரே அவருக்கு பதில் பேசினார்.

“நாங்க ரொம்ப நல்ல நண்பர்கள். அதான் நண்பன காட்டி குடுக்காம அப்டி பேசிட்டான்.”

“கொலை பண்ணுறவங்க எல்லாம் நட்பு பாசம்ன்னு பார்த்து, உண்மைய சொல்லாம இருப்பாங்களா..? இத நாங்க எப்டி சார் நம்புறது..? உண்மைலே நீங்க அதுக்கு தான் அப்டி பண்ணுணீங்களா..? இல்ல சிவசங்கர் எதுவும் உங்கள மிரட்டினாரா..?”

பாலு வேகமாக, “இல்ல சார் அவர் சொல்லுறது தான் உண்மை.”

“பாலு..! நீங்க அவருக்கு பினாமியா..?”

“இல்ல சார்...”

சிவசங்கர் கோபமாக, “என்ன சார் தேவை இல்லாம நிறையா கேக்குறீங்க..?

தேவனுக்கும் கோபமாக வர, “நீங்க செஞ்ச கொலைய எதுக்கு பன்னிருப்பீங்கன்னு வேறமாதிரி விசாரிக்கிறேன். அது எங்க வேலை..”

நீதிபதி, “இங்க பாருங்க நீங்க கேக்குற கேள்வி அதிகபடியா இருக்கு தேவன், நீங்க இத தவிர வேற என்ன காரணம் இருக்கும்ன்னு நினைகிறீங்க..?”

தேவன் பேசுவதற்குள் முந்தி கொண்டு சிவசங்கர், “நிஜமாவே நாங்க அவன திருடிட்டான் ன்னு தான் கொலை பண்ணிட்டோம்.. மற்றபடி வேற எந்த நோக்கமும் இல்ல...” என்று சத்தமாக சொல்லுகிறார்.

அப்போது திடீரென்று ஒரு குரல், “பொய், பொய் பொய்..! அந்த ஆளு சொல்லுறது எல்லாம் பொய்...” என்று சொல்ல அனைவரும் திரும்பி பார்க்கின்றனர். அங்கு முருகன் நிற்கிறான்.
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
கண்கள் சிவந்து முகம் வீங்கி போய் கோபத்தீயுடன் நின்றான்.

நீதிபதி, “என்ன சொல்லணுமோ, அத இங்க வந்து சொல்லுங்க...”

கெளதமுக்கு முருகனை பார்த்ததும் ‘ஏதோ பெரிய பிரச்சனை இருக்கு இந்த கொலைல, அதான் முருகன் இப்டி இருக்கான். அவன் ரொம்ப சோகமா தெரியுறான். அவனோட சித்தப்பா தான் காரணம் ன்னு அவனுக்கு ஏதுக்க முடியல போல...’ என்று எண்ணி கொண்டிருந்தான்.

முருகனை பார்த்ததும் வெளியே சென்ற காதம்பரி மறுபடியும் உள்ளே வந்தாள். அப்பாவுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு எதுவும் சொல்லி, அப்பாவ வெளில கொண்டு வர போறாரு அண்ணா என்று நினைத்து கொண்டு நம்பிக்கை வளர்த்தாள்.

முருகன் கூண்டில் ஏறி நின்றான். சிவசங்கரையே பார்த்து முறைத்தவாரே இருந்தான். அவனது பார்வை எதிர்கொள்ள முடியாமல் வேறு எங்கு எங்கோ பார்த்து கொண்டு பதற்றத்துடன் இருந்தார்.

தேவன் முருகன் அருகில் சென்று, “நீங்க எதுக்கு பொய் பொய்ன்னு சொன்னீங்க..? இந்த கொலைய அவரு பண்ணலன்னு சொல்லுறீங்களா..? இல்ல வேற எதுக்குமா..?”

“இந்த ஆளு கொலை பண்ணதா சொன்னது உண்மை.. இந்த ஆளு ரொம்ப கேவலமான ஜென்மம், இப்டி பட்ட ஜென்மத்துக்கூடா இத்தன நாளா நான் மதிச்சு, அப்பா ஸ்தானத்துல வச்சுருந்தேன்ல அது மிக பெரிய பாவம்.

இந்த ஜென்மத்த விட்டு வைக்கவே கூடாது.”

அவனது பேச்சே அவன் கோபத்தின் உச்சியில் இருப்பதை காட்டியது. அவன் முழுவதும் உடைந்து போய் இருக்கிறான் என்று நண்பர்கள் அனைவரும் கவலை கொண்டனர்.

நீதிபதி, “நீங்க என்ன சொல்லவர்றீங்கன்னு தெளிவா சொல்லுங்க..”

“கொலைக்கு இந்த ஆளு சொன்ன காரணம் தான் பொய்..”

காதம்பரி மறுபடியும் அழுகிறாள். ஆனால் எழுந்து செல்லாமல் அங்கேயே இருக்கிறாள். வேற என்ன காரணமா இருக்கும்..? என்று சந்தேகம் அனைவரிடமும் வந்தது.

“அப்போ அவரு கொலை எதுக்கு பண்ணினாருன்னு உங்களுக்கு தெரியுமா..?” என்று கேள்வி கேட்டான் தேவன்.

“ஆமாம். அந்த ஆளு கொலை பண்ணதுக்கு சொன்னா காரணம் பொய். அது மட்டும் இல்ல, நீங்க எல்லாரும் நினைக்கிற மாதிரி இந்த ஆளு ஒரு கொலை பண்ணல, பல கொலைகள பண்ணிருக்கு.”

“என்ன..?! பல கொலைகளா..?! யார கொன்னதா சொல்லுறீங்க..? தெளிவா சொல்லுங்க...”

அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. எந்த கொலைகளை பற்றி கூறுகிறான் என்று குழப்பம் வந்தது. இருந்த அனைவரும் குழப்பத்தோடு ஒருவருக்கு ஒருவர் கேட்டு கொண்டு இருந்தனர்.

“முதல் கொலையே என்னோட அப்பா தான்...” கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தான்.

கெளதமுக்கு ‘அது ஆக்சிடென்ட் ஆச்சே.. அத எப்டி கொலைன்னு சொல்லுறான்..?!’ என்ற யோசனை வந்தது.

தேவன், “அது ஆக்சிடென்ட் முருகன்.”

“நாம தான் அப்டி நினைச்சுட்டு சும்மா விட்டுட்டோம், அப்பாவ இந்த ஆளு கொலை பண்ண ஆளு அனுப்பிருக்கு. அவுங்க ஆக்சிடென்ட் பண்ணி என்னோட அப்பாவ கொலை பண்ணிருக்காங்க..

இவனோட கொலை வெறிக்கு என்னோட ப்ரெண்ட்ஸ் அப்பாவுங்களும் சேர்ந்து இறந்து போய்ட்டாங்க...”

தேவனுக்கும் கெளதமுக்கும் கேட்டவுடன் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. தாம் அநாதை ஆனதற்கு காரணமே இந்த சிவசங்கர் என்று அவர் மேல் கெளதமுக்கும், தேவனுக்கும் கோபம் வந்தது. தேவனால் அடுத்து எதுவும் விசாரிக்க முடியவில்லை. சோகம் அதிர்ச்சி எல்லாம் ஒருசேர வந்து அவனை தாக்கியது.

முருகனே மறுபடியும், “அப்பா மட்டும் இல்ல, தாத்தா, மாதவன், அப்பறம் இந்த கொலையான தேவேந்திர முருகனோட அப்பா, அப்பறம் இந்த கொலை எல்லாம் இந்த ஆளு தான் பண்ணிருக்கு.” என்றான்.

ஏற்க முடியாமல் இருந்தது. நீதிபதிக்கு தலையே சுற்றுவது போல் ஆகிவிட்டது.

அப்போது சிவசங்கர், “இவன் பொய் சொல்லுறான். அது எல்லாம் நான் பண்ணல. அது எல்லாம் எதற்சியா நடந்த மரணம் தான். இவன் தேவை இல்லாம எத எதையோ சொல்லி கோர்ட்ல இருக்க எல்லாரையும் குழப்ப பாக்குறான்.

அவன் சொல்லுறதுக்கு எல்லாம் என்ன ஆதாரம் இருக்கு..? கேளுங்க சார் ஒன்னும் இருக்காது, அதுல இருந்தே அவன் பொய் சொல்லுறான்னு உங்களுக்கு தெரியும். கேளுங்க சார்..”

நீதிபதியும், “அவர் இத்தனை கொலை பண்ணது எப்டி உங்களுக்கு தெரியும்..? உங்க கிட்ட ஏதாது ஆதாரம் இருக்கா..?

முருகன் நடந்தை விவரிக்கிறான்.

“நான் தப்பிச்சு வீட்டுக்கு வந்த அன்னைக்கே என்னோட போன் காணோம், அது என்னை கடத்தின இடத்துல இருந்துருக்கலாம்ன்னு போலீஸ் கிட்ட கேட்டப்போ, அந்த கொலை நடந்த இடத்துல எதுவும் கிடைக்கலன்னு சொன்னாரு இன்ஸ்பெக்டர். ஆனா இந்த ஆளு என் கிட்ட போன் செதறி கிடந்ததுன்னு சொல்லி கான்ஸ்டபில் குடுத்ததா சொல்லி கொடுத்துச்சு. நா அப்போ கூட இந்த ஆள நம்பினேன்.

ஆனா இந்த ஆளு என்னையே ஏமாதிருக்குன்னு எனக்கு நேத்து நைட் தான் தெரிஞ்சது.

நான் நேத்து நைட் தண்ணி குடிக்க கிட்சன் போனேன். அப்போ தண்ணீர் பாட்டில் கீழ உருண்டு போய் பக்கத்துல இருந்த கப்போர்டுக்கு அடில விழுந்துருச்சு. எடுக்க கை விட்டப்போ அங்க ஏதோ மெமரி கார்டு இருந்துச்சு. அது யார்தா இருக்கும்ன்னு தெரிஞ்சுக்க என்னோட போன்ல போட்டு பார்த்தேன்...

அது என்னோடது தான்... ஆனா இது எப்படி இங்க வந்துச்சுன்னு தெரியலயேன்னு நினைச்சு யோசிச்சேன். அதுல ஏதோ வீடியோ இருந்தது. அதுல எதுவும் தெரியல, ஆனா ஏதோ பேசுற சத்தம் மட்டும் கேட்டுச்சு.” என்று கூறி கொண்டே தன்னுடைய பாக்கெட்டில் இருந்து போனை எடுத்து குடுத்தான்.

அதை வாங்கி ஸ்பீக்கர் செட் செய்து வீடியோ வை பார்த்தனர்.

முருகன் கூறியது போல வீடியோ எதுவும் தெரியவில்லை. ஆனால் அதில் ஏதோ சத்தம் கேட்கிறது.

“ஏய்..! ஒழுங்கா பிடி... ம்ம்ம்... அந்த பக்கம் கொண்டு போ..” என்று யாரோ கூறும் சத்தம் கேட்கிறது. அடுத்து நான்கு ஐந்து பேர் நடக்கும் சத்தம் கேட்கிறது.

பிறகு சிறு அமைதி. பின், “முருகா..! முருகா..!” என்று கெளதம் சத்தமாக கூப்பிடுவது கேட்கிறது. மறுபடியும் கொஞ்ச நேரத்திற்கு அமைதி.

பின், “அவன் போய்ட்டான் அய்யா..

ம்ம்ம்.. சரி ஒரு மூணு இல்ல நாலு பேரு மட்டும் இங்க இருந்து இந்த இடத்த சுத்தம் பண்ணுங்க.. மற்றவங்க போய் இந்த முருகன அவன் கிட்ட போய் விட்டுட்டு வாங்க..

சரிய்யா..” என்று கூறி பின் நடக்கும் சத்தம் மட்டும் கேட்கிறது.

“சரி நீங்க கவலை படாதீங்க, இத யாரும் பார்க்கல. வந்தவனும் போய்ட்டான். இப்போவாது சொல்லுங்க இவன எதுக்கு கொலை பண்ண சொன்னீங்க..?”

“இவனோட அப்பாவ நாம கொன்னோம்ல அத எப்டியோ தெரிஞ்சுட்டு வந்து, நமக்கு எதிராவே இவன் வேலை பாத்துருக்கான்.”

“அச்சோ..! அப்டியா, இது தெரியாம இவன எல்லா விசயத்துக்கும் இழுத்துட்டோமே..?”

“அதன் இவன கொலை பண்ண சொன்னேன்.”

“ஆமாம் இவன் செத்துட்டான். இனி எந்த பிரச்சனையும் இல்ல. நீங்க எப்டி இத கண்டு பிடிச்சீங்க..?”

“எனக்கு எப்ப பார்த்தாலும் ஒரு கால் வரும்ல, அதான் என்ன ஒருத்தன் மிறட்டுவானே அந்த நம்பர் யாருதுன்னு கண்டு பிடிச்சேன். அப்போ தான் தெரிய வந்தது.”

“ஆமாம் இவனுக்கு நம்ம கொலை பண்ணது எப்டி தெரியும்..?”

“இவனோட பேக் செக் பண்ணப்போ தான் தெரிஞ்சது அவுங்க அப்பன் சாகுறதுக்கு முன்னாடி, இவனுக்கு எல்லாத்தையும் லெட்டர் ல எழுதி வச்சுருக்கான். அது அவன் பேக் ல இருந்துச்சு. அத நான் அன்னைக்கே எரிச்சுட்டேன். அப்பறம் தான் இவன நான் கொலை பண்ண சொன்னேன். இப்போ நமக்கு எதிர எதுவும் இல்ல. நீ கவலை படாத..”

“நல்லது. அப்பறம் இன்னொன்னு, நம்ம”

பேசி கொண்டிருக்கும் போதே வீடியோ கட் ஆகிறது.

பாலு மற்றும் சிவசங்கரின் முகம் பதற்றமாகியது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். சிவசங்கர் கண்களால் பாலுவை அமைதியாக இருக்குமாறு கூறி நான் பார்த்து கொள்கிறேன் என்று சைகை செய்கிறார்.
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
மற்றவர்கள் அனைவரும் வீடியோ பற்றி விவாதிக்க ஆரம்பித்தனர். நீதிபதி “அமைதி..!” என்று கூறி விட்டு ஏதோ எழுதி வைக்கிறார்.

சிவசங்கர், “இது ஏதோ பொய்யான வீடியோ. இதுல இருக்குறது போல அன்னைக்கு நடக்கல. இவன் எங்கள மாதிரி யாரயோ பேச வச்சு இந்த வீடியோவ பண்ணிருக்கான். இத நம்பாதீங்க சார்.. அதுல பேசுறது நாங்க இல்ல... நாங்க வேற எந்த கொலையும் பண்ணல...”

நீதிபதி, “என்ன முருகன் நீங்க சொல்லுற மாதிரி இவுங்க எதுவும் பேசல.. அவுங்க இறந்து போனவரோட அப்பாவ தான கொலை பண்ணதா சொல்லிருக்காங்க.. உங்க அப்பா, தாத்தா, மற்றவங்க எல்லாரையும் கொன்னதுக்கான வேற எந்த ஆதாரமும் இல்லையே.. உங்க கிட்ட வேற ஏதாது முக்கியமான ஆதாரம் இருக்கா, நீங்க சொல்றத நிரூபிக்க..?”

முருகன், “இருக்கு சார்..” என்று கூறி வாசல் பக்கம் திரும்பினான். அங்கு ஒருவர் உதவியோடு இறந்து போன தேவேந்திர முருகனின் அம்மா வருகிறார். அவர்கள் அருகில் வந்து ஒரு டைரியை தருகின்றனர்.

“இது இறந்து போன தேவேந்திர முருகனோட டைரி.. இதுல அவன் தன்னோட அப்பா பண்ண வேலைய பத்தியும், அவர் செய்த கொலை பத்தியும் எழுதிருக்கான்.” என்று கூறி கொண்டே டைரியில் ஏதோ எடுத்து காண்பிக்கிறான். அதை வாங்கி பார்த்த வுடன், நீதிபதி முகம் மாறுகிறது. அதை வாசிக்க சொல்கிறார்.

தேவன் வாங்கி வாசிக்கிறான்.

“என்னோட அப்பா ரொம்ப நல்லவரா தான் இருந்தாரு, ஆனா எப்போ அந்த சிவசங்கர் அய்யா அப்பாக்கு பணத்தாசைய தூண்டி விட்டாரோ அப்போ இருந்து கெட்டவரா மாறிட்டாரு. அதுவும் எங்க அப்பாக்கு அவுங்க முதலாளி கிட்ட இருந்து எப்போ எல்லாம் கால் வருமோ அப்போ எல்லாம் அப்பா ஏதாது தப்பு பண்ண போறாருன்னு எனக்கு தெரிஞ்சது.

ஆனா அவரு என்ன தப்பு பண்ணாருன்னு எனக்கு தெரியல, அம்மாக்கும் தெரியல. அப்டி ஒரு நாள் அப்பாவும் இறந்து போயிட்டாரு. கொஞ்ச நாள் கழிச்சு எனக்கு அப்பாவோட லெட்டர் கிடைச்சது.

அதுல அப்பா தான் பண்ண அத்தன தப்புகளையும் எழுதிருந்தாரு. சிவசங்கர் ஐயோ சொல்லி அவரோட தம்பி அப்பறம் அவுங்க வீட்டுல வேலை பார்த்தவர், கூட போன வக்கீல் எல்லாரையும் லாரி எத்தி கொலை பண்ணிருக்காரு அப்பா. அப்பறம் தனக்கு வேலை குடுத்து பாத்துகிட்ட சிவகுரு அய்யாவையே கொலை பண்ணிருக்காரு சிவசங்கர் சொன்னாருன்னு. அந்த கொலையா பாத்ததுக்காக ஒரு சின்ன பையனையும் கொன்னுருக்காரு.

அதுமட்டும் இல்லாம அப்பா அவுங்க கூட சேர்ந்து இன்னும் பணம் சம்பாதிக்க நெறையா குறுக்கு வழியில போயிருக்காரு. இத்தனை பேருக்கு செஞ்ச பாவம் சும்மா விடுமா, அதான் அப்பாவயும் அது பலி வாங்கிடுச்சு.

சிவசங்கர் தான் செய்த அத்தனை கொலைகளுக்கும் இருக்குற சாட்சி அப்பா மட்டும் தான்னு அப்பாவையே கொலை பண்ண ஏற்பாடு பண்ணிருக்காரு. அப்போ தான் அப்பாக்கும் அவுங்க உண்மையான சுயரூபம் தெரிஞ்சுருக்கு. அதான் அவுங்க பண்ண கொலைக்கு சாட்சியா இருக்கட்டும்ன்னு இந்த லெட்டர் எழுதி வச்சுருக்காரு.

இத பார்த்த பின்னாடி தான் எனக்கு அந்த சிவசங்கர் மேல அதிகமான கோபம் வந்தது. அவுங்க பலி வாங்க தான் இப்போ அவுங்க கிட்ட நான் வேலைக்கு சேர்ந்துருக்கேன். அங்க சேர்ந்த பின்னாடி தான் அவுங்க செய்யுற அனைத்தும் எனக்கு புரிஞ்சது. அந்த சிவசங்கர் இன்னும் கொலை பண்ணுறத நிறுத்தல. அவுங்க அண்ணன் பையன் முருகனை கொலை பண்ணவும் ஆள் ஏற்பாடு பண்ணிட்டு இருக்காரு. அந்த சிவசங்கர சும்மா விட கூடாதுன்னு தான், அவன் செய்த கொலைகள சொல்லி மறைமுகமா போன்ல அவன மிரட்டினேன். அந்த ஆள கூடிய சீக்கிரம் கொலை பண்ணிடுவேன். அது தான் என்னோட குறிக்கோள்.”

லெட்டர் படித்து முடித்தவுடன் தெளிவாக தெரிந்தது அனைவருக்கும் சிவசங்கர் தான் அனைத்திற்கும் காரணம் என்பது.

தேவன், “இந்த லெட்டர் எழுதினது தன்னோட பையன் தேவேந்திர முருகன் தான்னு அவுங்க அம்மாவே சொல்லுறாங்க, இதுக்கு மேலயும் இந்த கேஸ்ல வேற விசாரணை தேவை இல்லைன்னு தான் எனக்கு தோணுது சார். இவங்களுக்கு தகுந்த தண்டணைய வழங்கணும்.”

நீதிபதி, “சிவசங்கர் இப்போ ஒப்புகொள்றீங்களா இந்த கொலை எல்லாம் நீங்க தான் பண்ணுனீங்கன்னு..?”

சிவசங்கர் பதில் பேச வில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.

“அப்போ ஒதுக்குறீங்க... சரி, அப்போ எதுக்கு இந்த கொலைகள பண்ணுனீங்கன்னு சொல்லுங்க..”

“நான் அரசியல்ல சேர நினைச்சேன். அப்போ எனக்கு அதிக பணம் தேவை பட்டுச்சு. அத குடுக்க மாட்டேன்னு என்னோட அண்ணன் சொன்னான். அதுவும் அப்பாவையும் குடுக்க விடல. அதான் அவன கொலை பண்ணேன். அது அப்பாக்கு தெரிஞ்சு போச்சு. அதான் அப்பாவையும் கொலை பண்ணேன். அப்போ அங்க விளையாண்டுட்டு இருந்த அந்த சின்ன பையன் மாதவன் பாத்துட்டான். அவன வாய பொத்த மட்டும் தான் செஞ்சேன். ஆனா அவன் இறந்துட்டான்.

எனக்கு எல்லா கொலைக்கும் உதவியா இருந்த அழகேந்திரன் பணம் நானும் குடுக்குறேன், அதையும் வட்டிக்கு விட்டு எனக்கு குடுங்கன்னு சொன்னான். என் கிட்ட வேலை பாக்குறவன் எனக்கு சமமா வர நினைக்கிறான், நாளைக்கு பணத்துக்கு ஆசை பட்டு என்னையே காட்டி குடுப்பான்னு தான் அவனையும் கொலை பண்ணிட்டேன். அவனோட பையனையும் அதுக்கு தான் கொலை பண்ணினேன். சொத்து எல்லாம் எனக்கு மட்டும் வேணும் அப்டின்னு தான் முருகனையும் கொலை பண்ண ட்ரை பண்ணேன்.”

தான் செய்த அனைத்து கொலைகளையும் ஒப்பு கொண்ட சிவசங்கர் அமைதியாக தலை குனிந்து நின்றார். தன்னுடைய அனைத்து கர்வங்களும் போய்விட்டது என்பதை அவருடைய முகமே தெரிவித்தது.

நீதிபதி ஏதோ எழுதுகிறார். பின், “இந்த கேஸ் மூலமா பல கொலைகள் வெளி வந்துருக்கு. இத எல்லாத்தையும் கண்டு பிடிச்சதுக்காக முருகனுக்கு வாழ்த்துக்கள்.

இந்த கேஸ்ல கொலைகளுக்கு உதவியா இருந்து தேவேந்திர முருகன கொலை பண்ண குற்றத்துக்காக பாலுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறேன்.

மேலும் அனைத்து கொலைகளையும் ஒப்புக்கொண்ட சிவசங்கருக்கு பத்து ஆண்டு கடுங்காவல் தண்டனயும், தூக்கு தண்டனயும் விதிக்கிறேன்.”

என்று கூறி பேனாவினை உடைக்கிறார்.

கேஸ் முடிந்தது என்று அனைவரும் வெளியே வருகின்றனர். பல சோகங்கள் இருந்தாலும், கஷ்டங்கள் எல்லாம் இன்றோடு முடிந்த சந்தோசத்தில் இருந்தனர் அனைவரும்.

காதம்பரி முருகனுக்கு அருகில் சென்று அழுகிறாள். அவனும் அழுகிறான். தங்கையின் கைகளை பிடித்து, “அப்பாவ நான் மாட்டி விட்டுடேனு கோபமா இருக்கியா..? அண்ணாவ மன்னிச்சுடும்மா..”

காதம்பரி, “இல்ல அண்ணா, நான் தான் உங்க கிட்ட மன்னிப்பு கேக்கணும். இப்டி ஒரு அப்பாக்கு மகளா பிறந்ததுக்கு நான் ரொம்ப வருத்த படுறேன். என்னோட அப்பாவால நீங்க அதிக கஷ்ட பட்டத்துக்கு நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்.” என்று கூறி முருகனின் தோளில் சாய்ந்து அழுகிறாள்.

“நீ என்னம்மா பண்ணுவ அந்த ஆளு பண்ணதுக்கு. அவர் பண்ணதுக்கு உன்னை நான் எப்டி தப்பா நினைப்பேன். நான் எப்போவுமே உனக்கு அண்ணன் தான். நீ எனக்கு எப்போவுமே தங்கச்சி தான். இனி உனக்கு நான் இருக்கேன். நான் உன்னை நல்லா பாத்துப்பேன்.”

வெளியே வந்தவுடன் தேவன் சென்று முருகனை கட்டி தழுவி அழுகிறான். “நீ இல்லைனா இன்னைக்கு இத்தனை விஷயங்கள் தெரிய வந்துருக்காது. தன்னோட சித்தப்பா தான் காரணம் ன்னு தெரிஞ்சதும் அவர காப்பாத்தாம காட்டி கொடுத்து நல்லது பண்ணிருக்க.”

அழுது கொண்டே முருகன், “என்ன தேவ் இப்டி சொல்லுற, அந்த ஆளு என்னோட அப்பாவ கொன்னுருக்கு, தாத்தாவ கொன்னுருக்கு, அது மட்டுமா உன்னோட அப்பா, தம்பி, கெளதம் அப்பா, எல்லாரையும் கொலை பண்ணிருக்கு. அப்டி இருக்கும் போது அந்த ஆள எப்டி நான் காப்பாத்த நினைப்பேன்.”

சைமன், “அது மட்டுமா நம்ம முருகனையும் கொலை பண்ண முயற்ச்சி பண்ணிருக்கு.”

சந்தோஷ், “ஆனா அவரு இவ்ளோ பெரிய கெட்டவர்ன்னு நான் நினைக்கல.”

எல்லாரும் சோகமாக இருந்தனர். சௌந்தர்யா அருகில் வந்து,

“ஏன் எல்லாரும் இவ்ளோ கவலையா இருக்கீங்க...? நடந்தது எதையும் நாம மாத்தி அமைக்க முடியாது. எல்லாருக்கும் ஏதாது கஷ்டத்த அவரு பண்ணிருக்காரு. இன்னைக்கு அவருக்கு தண்டனை கிடைச்சு உள்ள போறத நினைச்சு சந்தோஷ படுங்க. அடுத்து நடக்க போறதா பாருங்க. யாரும் அழுகாதீங்க. கஷ்டங்கள எல்லாம் இன்னைக்கோட முடிஞ்சதுன்னு நினைச்சு சந்தோஷ படுங்க, இனி நல்ல காலம் தான் நம்ம எல்லாருக்கும்.”

சௌந்தர்யா சொன்னது அனைத்தும் சரியானது என்று அனைவரும் ஒப்பு கொண்டது போல சந்தோஷத்தில் சிரித்தனர். முருகன் கண்களை துடைத்து கொண்டு சிரித்தான்.

சைமன், “என்ன இன்னும் கெளதம காணோம்..?!” என்று தேடி கொண்டே கேட்கிறான்.
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
தேவன், “சில பார்மாலிடீஸ் இருக்கு. அத முடிச்சுட்டு கெளதம் சீக்கிரம் வந்துடுவான்.”

தேவன் கூறி கொண்டிருக்கும் போதே கெளதம் வெளியே வருகிறான். அவனை பார்த்ததும் அனைவரின் முகத்திலும் சந்தோசம். அவன் அருகில் வந்து முருகனை கட்டி தழுவி சந்தோஷ பட்டான்.

“இன்னைக்கு நீ இல்லைனா நான் வெளில வந்துருக்கவே மாட்டேன்... உனக்கு கஷ்டம் வந்தாலும் எனக்காக நீ இவ்ளோ பண்ணிருக்க. அத நினைக்கும் போது எனக்கு சந்தோசத்துல பறக்குற மாதிரி இருக்கு.

நீ மட்டும் இல்லாம தேவன், சைமன், சந்தோஷ் எல்லாரும் எனக்காக என்ன பண்ணிருக்கீங்கன்னு நினைக்கும் போதே எனக்கு சந்தோசமா இருக்கு.

இத்தன நாளா நான் எனக்கு சொந்தமே இல்லைன்னு நினைச்சு வருத்த பட்டேன். ஆனா நீங்க தான் என்னோட உறவுன்னு இன்னைக்கு எனக்கு புரிஞ்சது. நீங்க எல்லாருமே எனக்கு சொந்தம். உங்கள போல ப்ரெண்ட்ஸ் கிடைக்க நான் ரொம்ப குடுத்து வச்சுருக்கணும்.

இன்னைக்கு தான் என்னோட வாழ்க்கைல முக்கியமான நாள். இத நான் மறக்கவே மாட்டேன். ரொம்ப சந்தோசமா இருக்கு நீங்க எல்லாரும் என் கூட இருக்குறது.”

சந்தோசத்தில் அனைவரையும் கட்டி பிடித்து சந்தோஷ பட்டான் கெளதம்.

சைமன், “ வாங்க இந்த சந்தோசத்த கொண்டாட நாம எல்லாரும் வெளில எங்கயாது போகலாம்.”

சௌந்தர்யா, “எங்க..?!”

“கெளதம் இத்தனை நாளா நல்ல சாப்பாடு சாப்பிட்டு இருக்க மாட்டான். அதுனால நாம எல்லாரும் எங்கயாது வெளில போய் ஹோட்டல் ல சாப்பிடலாம்.”

“சரி. ஆனா எல்லாரும் மொதல்ல கோவிலுக்கு போவோம். சாமிக்கு நன்றி சொல்லிட்டு அப்பறம் ஹோட்டல் க்கு போவோம்.”

“ஹ்ம்ம்..!!” என்று எல்லாரும் ஆமோதித்தனர்.

அனைவரும் கிளம்பி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். அங்கேயே வைத்து அடுத்து சந்தோஷ், காதம்பரி கல்யாணம் எப்போ பண்ணலாம் என்று கலந்து ஆலோசித்தனர். அதை தொடர்ந்து கெளதம், சௌந்தர்யா கல்யாணம் செய்யவும் முடிவு செய்கின்றனர்.

பின்னர் அங்கிருந்து கிளம்பி ஹோட்டலுக்கு செல்கின்றனர். சாப்பிட்டு கொண்டே பேசி கொண்டு இருக்கின்றனர்.

சைமன், “என்னடா சந்தோஷ் இப்போ சந்தோசமா..?! அடுத்த முகூர்த்தத்திலே உனக்கும் காதம்பரிக்கும் கல்யாணம். உள்ளுக்குள்ள டான்ஸ் ஆடுதா உன்னோட மனசு..?!” சிரித்து கொண்டே கிண்டல் செய்தான்.

சந்தோஷ் எந்த கூச்சமும் இன்றி, “ஆமாம், பின்ன இருக்காதா..?!! சந்தோசத்தோட உச்சில இருக்கேன். ஆனா இப்போ டான்ஸ் ஆட முடியாது. கெளதம் கல்யாணத்துல எல்லார் முன்னாடியும் நாங்க ஜோடியா டான்ஸ் ஆடுறோம்.. எப்டி..?!!”

முருகன், “கற்பனை எல்லாம் பலமா இருக்கு. பண்ணிடலாம். நாங்களும் டான்ஸ் ஆடலாமா..?!!”

தேவன், “நீயும் ஒரு ஜோடி கூட்டிட்டு வந்து ஆட போறியா..? யார் அது முருகா..?”

“வேற யாரு, நம்ம சைமன் தான் எனக்கு ஜோடி.. என்ன சைமா ஜோடி சேருவியா என்கூட..?!!”

“இப்டி ஒருத்தன் கூட டான்ஸ் ஆட எனக்கு எந்த கஷ்டமும் இல்ல.. ஒரு வருத்தம் தான், நான் ஒரு பொண்ணா இருந்தா இப்போ நான் உன்னை கல்யாணம் பண்ணிருந்துருக்கலாம்...”

அனைவரின் சந்தோசத்தில் சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். வெகு நேரம் அங்கேயே இருந்து விட்டு பின்னர் கிளம்பினர்.

முருகன் காதம்பரியை கூட்டி கொண்டு கிளம்பினான். சந்தோஷ், சைமன், தேவன் எல்லாரும் சந்தோஷ் காரில் கிளம்பினர். சைமன் தனது வண்டியை கெளதமுக்கு கொடுத்தான். அதில் கெளதமும், சௌந்தர்யாவும் கிளம்பினர்.

வண்டியில் ஏறி கிளம்பி சென்று கொண்டிருக்கின்றனர்.

“என்ன அமைதியா வர்ற சௌந்தர்யா..?! பேச மாட்டியா..?”

“நான் எதுக்கு பேசணும்..? உங்களுக்கு நான் முக்கியமே கிடையாது. நான் எது பண்ணாலும் உங்களுக்கு பெருசாவும் தெரியாது. உங்களுக்கு உங்க ப்ரெண்ட்ஸ் தான் முக்கியம். கடைசி வரைக்கும் உங்களுக்கு நான் துணையா நான் இருந்தேன், ஆனா உங்களுக்கு உங்க ப்ரெண்ட்ஸ் தான் பெருசு..” என்று தனது மனதில் இருந்ததை சொல்லி போலி கோபம் காட்டினாள்.

கெளதம் வண்டியை ஓரமாக நிறுத்தி இறங்கி நின்று பேசினான்.

“என்ன நீ இப்டி நினைக்கிற. இதெல்லாம் ஒரு விசயமா..? நீ எனக்கு மனைவியாக போரவ அதுனால துணையா நின்ன. ஆனா அவுங்க எனக்கு ப்ரெண்ட்ஸ் தான். அப்டி இருந்தும் அவுங்க எனக்காக இவ்ளோ பண்ணிருக்காங்க. அது பெரிய விஷயம். அத தான் நான் சொன்னேன்.”

“ம்க்கூம்ம்.. போங்க என்னமோ சொல்லி சமாளிக்க பாக்குறீங்க..”

கெளதம் அவளது தோள்பட்டையில் கைவைத்து இழுத்து அவளை அருகில் கொண்டு வந்தான். அவள் நிமிர்ந்து பார்த்ததும்,

“நீ எனக்கு மனைவி. உனக்கு அப்பறம் தான் மற்ற எல்லாரும். என்ன சரியா..!”

வெட்கப்பட்டு சிரித்து கொண்டே கையை தள்ளிவிட்டு வண்டிக்கு அருகில் சென்று நின்றாள்.

“கிளம்புவோம் வாங்க..” என்று அவனது முகத்தை பார்க்க வெட்க பட்டு கொண்டே சொல்கிறாள்.

கெளதம் சிரித்து கொண்டே வண்டியை எடுத்தான்.

“நான் இன்னொன்னு சொல்லனும்ன்னு நினைச்சேன்..”

“என்ன..?”

“இந்த கொலை கேசுல வேற ஏதோ விசயம் இருக்குன்னு தோணுது. இப்போ அவர் சொன்னது எல்லாம் மாட்டி கிட்டதுக்காக சொன்னதோன்னு தோணுது. வேற ஏதோ காரணம் இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு எனக்கு.”

“என்ன நீங்க தேவை இல்லாம யோசிச்சுட்டு இருக்கீங்க... அப்டியெல்லாம் ஒன்னும் இருக்காது..”

“இல்ல, முருகன கடத்தினப்போவே கொலை செஞ்சுருக்கலாமே..? ஏன் பண்ணல..? அதுல தான் எனக்கு சந்தேகமே வந்துச்சு... வேற ஏதோ காரணம் இருக்குன்னு..”

“என்ன தான் கொலை பண்ணனும்ன்னு நினைச்சாலும் இத்தனை நாளா வளத்த பாசம் கொலை பண்ண தடையா இருந்துருக்கும். இத போய் யோசிச்சுட்டு இருக்கீங்க. அப்டியே காரணம் வேற இருந்தாலும் அவரு தான் ஜெயிலுக்கு போயிட்டாருல தண்டனை வாங்கி. அப்பறம் என்ன விடுங்க அத.”

“ம்ம்ம்.. அதுவும் சரி தான். நாம நம்ம வாழ்க்கைய யோசிப்போம் இனி.” என்று சந்தோசமாக சென்றனர்.

ஒரு இருட்டு அறையில் தொலைகாட்சியின் வெளிச்சத்தில் ஒருவர் சாய்வு நாற்காலியில் அமர்ந்து செய்திகளை கேட்டு கொண்டிருக்கிறார். தொலைகாட்சியில் கெளதம் கேஸ் நியூஸ் வருகிறது.

“தஞ்சையில் பெரிய பணக்காரர் சிவசங்கர் செய்த பல கொலைகள் வெளி வந்தது. தனது குடும்பத்தை சேர்ந்தவர்களையே கொலை செய்து அதை மறைக்க பல கொலைகள் செய்து உள்ளது தெரிய வந்துள்ளது. அதுவும் அவர் வளர்த்த அவரது அண்ணன் மகனே அனைத்து கொலைகளுக்கான ஆதாரத்தையும் வெளி கொண்டு வந்துள்ளார்.”

என்று நியூஸ் சேனல் சொல்லி கொண்டிருக்கிறது. அதை கேட்டு விட்டு டிவியை ஆப் செய்கிறார்.

“இவுங்கள உள்ள அனுப்பி நீங்க ஒரு காரணம் சொல்லி சந்தோஷ பட்டுட்டு இருக்கீங்க. ஆனா உங்களுக்கு உண்மையான காரணம் தெரியாது. தெரிஞ்சாலும் உங்களால ஒன்னும் பண்ணவும் முடியாது.” என்று கூறி கொண்டே அந்த நபர் சிரிக்கிறார்.

மரணத்தின் மர்மம் மர்மமே...!!

முற்றும்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top