• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Maranathin Marmam - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

How is the Story Going?

  • Good

    Votes: 6 100.0%
  • Bad

    Votes: 0 0.0%
  • Need Improvement

    Votes: 0 0.0%

  • Total voters
    6

MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
மரணத்தின் மர்மம்​
அத்தியாயம் 2

போலீஸ் வண்டி கிளம்பியது. முகத்தில் அதிர்ச்சியுடன் வண்டியை பார்த்து கொண்டு நின்றிருந்தாள் சௌந்தர்யா. வண்டி தெருவை தாண்டி செல்லும் வரை அதை விட்டு கண் விலகவில்லை. தெரு முனை சென்று திரும்பியது போலீஸ் வண்டி. யோசனையோடு திரும்பினால் அப்போது கோவிலுக்கு அருகில் சைமன் நிற்பதை கவனிக்கிறாள். “சைமன்” என சௌந்தர்யா கூப்பிட, சைமன் திரும்பி விட்டான். அங்கிருந்து நகன்று சென்று விட்டான்.

போலீஸ் வண்டி கோவிலை தாண்டி மெயின் ரோட்டிற்கு வந்தது. சிறிது நேரத்தில் இன்ஸ்பெக்டரின் மொபைல் போனுக்கு கால் வந்தது. அவர் அதை எடுத்து பார்க்கிறார். கால் ஸ்டேஷன் நம்பர். எடுத்து பேசுகிறார்,

“ ஹலோ...”
“சார், நான் கான்ஸ்டபில் தங்கமுத்து பேசுறேன்”
“சொல்லுங்க முத்து.”
“சார், அந்த ஆக்சிடென்ட் கேஸ் போஸ்ட்-மார்ட்டம் ரிப்போர்ட் வந்திருக்கு”
“ஓகே. நான் ஸ்டேஷன் தான் வர்றேன். வந்து பாக்குறேன். வேற ஏதாவது கேஸ் வந்துச்சா?”
“இல்ல சார்”
“ஓகே, ஓகே. வச்சுருங்க. நான் இதோ வந்துட்டேன்.”
கெளதம் கலங்கிய கண்களோடு, குழப்பத்தில் அமர்ந்திருந்தான். வண்டி போலீஸ் ஸ்டேஷனுள் நுழைந்தது. இறங்கியவுடன் இன்ஸ்பெக்டர் உள்ளே செல்கிறார். கான்ஸ்டபில் கெளதமை இழுத்து கொண்டு வந்தார். “அவன அந்த ஓரத்துல ஒக்கார வைங்க. முத்து எங்க ரிப்போர்ட், எடுத்துட்டு வாங்க.” கான்ஸ்டபில் பைல் ஒன்றை எடுத்து வருகிறார். அதை இன்ஸ்பெக்டரிடம் தருகிறார். அதை பார்த்தவுடன் இன்ஸ்பெக்டர் முகத்தில் ஏதோ மாற்றம். “எவ்ளோ தைரியம்...” கோப பார்வையுடன் கெளதமை நோக்கி “கான்ஸ்டபில் அவன இழுத்துட்டு வாங்க” கான்ஸ்டபில் கெளதம் அருகில் சென்று
“டேய்! எழுந்திரி, என்ன அய்யா குப்பிடுறது கேக்கல? கைய பிடிச்சு கூட்டிட்டு போகனுமா.. எழுந்திரி எழுந்திரி.”
கெளதம் மெதுவாக எழுந்து இன்ஸ்பெக்டர் அருகில் சென்றான். அவன் முகம் கவலையோடும், கண்கள் கலங்கியும் இருந்தன. இறுகிய முகத்தோடு பேச கூட தெம்பில்லாதவன் போன்றும் இன்ஸ்பெக்டர் முன் வந்து நின்றான். நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.
இன்ஸ்பெக்டர் அவனை கூர்ந்து கவனித்து கொண்டு இருந்தார். கண்களில் ஏளனம் கோபம் எல்லாம் சேர்ந்து இருந்தது. அவன் நிமிர்ந்து கூட பார்க்காததால் அவர் டேபிள் மேல் இரு கைகளையும் ஒரு சேர தட்டினார். அவனை நோக்கி
“டேய்!.. இன்னும் எவ்ளோ நேரத்துக்கு நடிக்கபோற?”
அவனிடம் எந்த பதிலும் வரவில்லை. அவன் முகத்தில் சிறு சலனம் கூட இல்லை. அவன் நிமிர்ந்து பார்க்காததால் இன்ஸ்பெக்டர் கோபத்துடன் எழுந்து “ ஹே! என்ன திமிரா, இங்க பாரு”
அவன் நிமிர்ந்தான்.
“சொல்லு, எதுக்கு முருகன கொல பண்ண?”
அவனது முகம் அதிர்ச்சியினால் உறைந்தது. ஆனால் பேசமால் யோசனையோடு நின்றான்.
“நீயா சொல்லிட்டா நல்லது. நாங்க கண்டுபிடிச்சா உனக்கு தான் கெட்டது. சொல்லு வாய திறந்து”
“சார் நான் எதுவும் செய்யல. நீங்க ஏதோ தப்பா புரிஞ்சுக்கிட்டு என்ன கூட்டிட்டு வந்துட்டீங்க.”
“நாங்க எதுவும் தப்பா உன்ன அர்ரெஸ்ட் பண்ணல... உன் மேல கேஸ் பைல் ஆகிருக்கு. முருகன் மிஸ்ஸிங் கேசா தான் எங்களுக்கு பைல் ஆச்சு, அவன் லாஸ்ட்டா உன்னை தான் பாக்க வந்துருக்கான். பட் அந்த ஆக்சிடென்ட் கேஸ்ல இறந்தது முருகன் தான்னும், அது ஆக்சிடென்ட் இல்ல கொலன்னு கன்பார்ம் ஆகிருக்கு. இப்போ நீ தான் உண்மைய சொல்லணும், ஏன் முருகன கொலை பண்ண?”
“சார், நான் எந்த கொலையும் பண்ணல”
“ம்ம்ம்.... நீ எந்த பதிலும் சொல்ல மாட்ட போல, உன்ன மாதிரி ஆளுகளுக்குக்கெல்லாம் இப்டிலாம் கேட்டா பதில் வராது. அதுக்கு வேற வழி இருக்கு. கான்ஸ்டபில் இவன இழுத்துட்டு போங்க..” பதற்றமாகிய கெளதம்
“சார், சார்... நான் நிஜமாவே எதுவும் செய்யல.” அதற்குள் கான்ஸ்டபில் வந்து அவனது கையை இழுத்தார்.
“உனக்கு அரைமணி நேரம் தான் கொடுப்பேன். அதுக்குள்ள நீ உண்மையா சொல்லல... அப்பரமா நான் என்ன பண்ணுவேனு தெரியாது, போய் அந்த பெஞ்ச்ல உக்காரு.”
என இடதுபுற மூலையில் உள்ள கைதிகள் அமர்ந்திருக்கும் இடத்தை காட்டினார். அவன் மெதுவாக சென்று, அங்கு ஓரமாக நின்றான். இன்ஸ்பெக்டர் வேறு எதோ பைல் எடுத்து பார்த்து கொண்டிருந்தார். கால் மணிநேரம் சென்றிருக்கும், சௌந்தர்யா வருகிறாள். “அய்யா..” இன்ஸ்பெக்டர் திரும்பி பார்க்கின்றார்.
“யாருமா நீ?.. என்ன வேணும்? எதுவும் கம்ப்ளைன்ட் பண்ண வந்துருக்கியா?.... கான்ஸ்டபில்... ம்ம்ம்...” என கான்ஸ்டபில் கைகாட்டி, அவரை பார்க்குமாறு சொன்னார்.
“அய்யா நான் சௌந்தர்யா, கெளதம்” என அவனை கை காட்டி, “அவர பாக்க வந்தேன்.”
இன்ஸ்பெக்டர் சிரித்து கொண்டே “இன்னும் விசாரனையே ஸ்டார்ட் பண்ணல, அதுக்குள்ள வந்தாச்சு... சொல்லும்மா... எதுக்கு வந்த?”
“அய்யா, கெளதம் ரொம்ப நல்லவர். அந்த ஆக்சிடென்ட்க்கும் அவருக்கும் எந்த சமந்தமும் இருக்காது. அவர விட்டுருங்க”
“அப்பறம்...” என கேலியாக பேச,
“நிஜமாவே அவர் ரொம்ப நல்லவர். முருகனும், அவரும் ரொம்ப நல்ல ப்ரெண்ட்ஸ். முருகனோட ஆக்சிடென்ட்க்கும், இவருக்கும் எதுவும் சம்மதம் இல்ல.”
“என்னம்மா எங்கள பாத்தா எப்டி தெரியுது. நீ வந்து சொன்னா உடனே விட்டுறுவோமா?” முருகனோட போஸ்ட்- மார்ட்டம் ரிப்போர்ட் பைலை எடுத்து அவள் முன் காட்டுகிறார். “இங்க பாருமா இது போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட். முன்னாடி இது ஆக்சிடென்ட் கேஸா இருந்துச்சு. இப்போ கொலை கேஸ் ஆகிடுச்சு. முருகன் லாஸ்ட்டா இவன தான் பாக்க வந்துருக்கான். அதவும் முருகன் இவன பாக்க வந்ததுக்கு சாட்சி இருக்கு. சோ கேஸ் ஸ்ட்ரோங். இப்போ எதுவும் பண்ண முடியாது. நீ கிளம்புமா.”
சௌந்தர்யா பேசாமல் கெளதமை திரும்பி பார்த்தாள். அவன் முகம் எதுவும் தனக்கு தெரியாது என்பது போல் இருந்தது. அவள் இன்ஸ்பெக்டரை பார்த்து “சார், நான் அவர் கூட கொஞ்சம் பேசிக்கிறேன்.”
“உனக்கு அஞ்சு நிமிசம் தான்மா டைம், அதுக்கு மேல கிடையாது. அப்பறம் சார, ஒழுங்கா எதுக்கு கொலை பண்ணினானு சொல்ல சொல்லு. அது தான் அவனுக்கு நல்லது.”
என கூறிவிட்டு வேற பைலை எடுத்து பார்க்க ஆரம்பித்தார். இருவரும் ஓரமாக சென்று பேசினார்கள். அவர்களுக்கு தெரியாமல் இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிளை பார்த்து, அவர்களை கவனிக்குமாறு கண்ணசைத்தார்.
“கெளதம் என்ன இது... இப்டி சொல்றாங்க. என்ன நடந்தது.”
அவனது முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள். ஆனால் அவனது முகம் சோகத்தில் பேச எதுவும் முயற்சி கூட செய்ய தோன்றாமல், முருகனை இழந்த கவலையில் கண்களின் ஓரத்தில் கண்ணீருடன், எப்படி நடந்தது, என்ன செய்வது, எப்படி செய்வது என ஒன்றும் புரியாமல் பதற்றத்துடன் இருந்தான். சௌந்தர்யா அவனது கையை பரிவுடன் பிடித்தாள். அவன் நிமிர்ந்து பார்த்தான். அவன் கண்களில் பயம், சோகம், ஆதரவற்ற நிலையில் பரிதவிக்கும் சிறு குழந்தை போல் காணப்பட்டது. அவள் அவனை புரிந்தவள், அவளது ஆதரவு அவனுக்கு முக்கியம் என்பதை உணர்ந்தவள், மன தைரியம் அதிகம் கொண்டவளும் கூட, இந்த நிலையில் அவனை தாங்கும் கைகள் அவளுக்கு வேண்டும் என்பதை நன்கு அறிந்திருந்தாள்.
“நான் உங்கள நம்புறேன். உங்க கூட தான், நான் எப்போவும் இருப்பேன். எதுக்கும் கவலை படாதீங்க. நான் எப்டியாது உங்கள வெளில கொண்டு வருவேன். இப்போ கூட உங்கள கூட்டிட்டு வர்றதுக்கு, உதவிக்காக சந்தோஷ் கூப்பிட போனேன். அவர் இல்லன்னு சொல்லிட்டாங்க. என்ன பண்ணனு எனக்கு தெரியல.”
இன்ஸ்பெக்டர் அவர்களை பார்த்தார். அவன் என்ன பேசுகிறான் என கவனித்து கொண்டு இருந்தார். அப்போது டெலிபோன் ஒலித்தது. உடனே அவர் கான்ஸ்டபிளை நோக்கி அவர்களை கவனிக்குமாறு கண்ணசைத்தார். கான்ஸ்டபில் தலையசைத்த உடன், போன் பேச ஆரம்பித்தார். போன் பேசி முடித்த உடன் எழுந்தார்.
“கான்ஸ்டபில்.... எனக்கு வெளில வேலை இருக்கு. நான் கிளம்புறேன். ஸ்டேஷன் பாத்துக்கோங்க. எனி எமர்ஜென்சி... எனக்கு கால் பண்ணுங்க. நான் ஒரு ஒன் ஹவர் ல வந்துருவேன். அப்பறம்... அந்த எல்லா அக்கியூஸ்டயும் லாக் அப் ல வைங்க.” என கூறி விட்டு வெளியே சென்றார். வண்டி அருகே வந்தவுடன் ஏதோ தோன்றியது போல “ கான்ஸ்டபில்...”
“சார்... சொல்லுங்க.”
“அந்த பொண்ண அனுப்புங்க முதல்ல, நான் வர்ற வரைக்கும் பாத்துக்கோங்க.”
“ஓகே சார். நான் அந்த பொண்ண அனுப்பிடுறேன் இப்போவே.”
வண்டி கிளம்பியது. கான்ஸ்டபில் முத்து உள்ளே சென்றார். கெளதம், சௌந்தர்யா இருவரும் பேசி கொண்டு இருந்தனர்.
“ஏய்! பொண்ணே...” திரும்பவில்லை அவர்கள். “இந்தாமா... இங்க பாரு...” சௌந்தர்யா திரும்பினாள், அவர் ஏளனத்தோடு “கிளம்பு... போதும் பேசினது. போ.. போ...”
“அதான் அய்யா போய்ட்டாங்க, நீங்க கொஞ்ச நேரம் எங்கள பேச விடுங்க அண்ணா, நான் இன்னும் கொஞ்ச நேரம் இருக்கேன்”
“என்னம்மா... அதுக்கெல்லாம் அனுமதி கொடுக்க முடியாது, நீ விட்டா இங்கயே இருப்ப போல, கிளம்பு. சார் வந்தா எங்களுக்கு தான் திட்டு விழுகும். இன்ஸ்பெக்டர் போகும் போது சொல்லிட்டு போயிருக்கார். கிளம்புமா”
“ப்ளீஸ் அண்ணா...”
“போம்மா...” என அவர் கூறியவுடன், விளித்து கொண்டிருந்தாள். கெளதமை பார்த்தால், கிளம்பு என கண்ணசைத்தான். ஸ்டேஷன் விட்டு வெளியே சென்றவள், குழப்பத்தோடு நடக்க ஆரம்பித்தாள். இடையே மரத்தடி பிள்ளையார் கோவில் வந்தது. அங்கு வந்தவுடன் நின்று கண் மூடி வேண்டுகிறாள்.
‘உன்ன நம்பி தான நாங்க இருக்கோம். நீ இப்டி பண்ணலாமா கடவுளே?...
உனக்கு அவர பத்தி நல்லாவே தெரியும், அவருக்கு ஏன் இப்டி சோதனைய கொடுக்குற?....
நாங்க நல்லா இருக்குறது உனக்கு பிடிக்கலையா?....
இதுவரைக்கும் அவர் எவ்ளோ கஷ்டப்பட்டார், உன்ன வணங்காம எந்த வேலையும் தொடங்கமாட்டார், இருந்தும் அவருக்கு தான் கஷ்டம் எல்லாம். உன்ன கும்பிடுறதுக்கு அர்த்தமே இல்லாம போச்சு.
இப்போ அவர் எப்படி இதுல இருந்து வெளில வர போறாரோ?....
எனக்கு ஒண்ணுமே புரியல, என்ன பண்ண, எது பண்ணனு?...
ஆனாலும் உன் மேல வச்ச நம்பிக்கைய மட்டும் நாங்க விடல. கண்டிப்பா நீ காப்பாத்துவனு நாங்க நம்புறோம். கை விட்டுறாத பிள்ளையாரப்பா.’
மனதினுள் முறையிட்டு கொண்டவாறே, கண்களில் வழிந்த நீரை துடைத்து கொண்டு, சுற்றி பார்க்கிறாள். “திருநீர் எங்க காணோம்.” சிலைக்கு பின்புறம் திருநீர் கும்பா உள்ளதை பார்க்கிறாள். அதில் இருந்து திருநீரை எடுத்து நெற்றியில் பூசுகிறாள். பின்பு மெதுவாக திரும்பி கிளம்ப எத்தனித்த போது, தெரு முனையில் உள்ள டீக்கடை பெஞ்சில் சைமன் அமர்ந்திருப்பதை காண்கிறாள். அவனை கூப்பிட வாய் திறந்தாள். பின்பு அது ஒரு மக்கள் அதிகம் நடமாடும் சாலை, அவனை பேர் சொல்லி கூப்பிடுவது தேவை இல்லாதது என அவளுக்கு தோன்றியது. அருகில் சென்று கூப்பிட்டு பேசலாம் என நினைத்து கொண்டு அவன் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தாள்.
பாதி தூரம் சென்றிப்பாள். யாரோ அவனை இடித்து சென்றதில் கையில் வைத்திருந்த நியூஸ்பேப்பர் கீழே விழுந்தது. அதை எடுக்க எழுந்தவன், இவளை பார்த்தது போன்று தோன்றியது அவளுக்கு. அவன் பேப்பரை பெஞ்சில் வைத்துவிட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தான். அவன் நகர ஆரம்பிக்கவும், இவள் சைமனை அழைத்தாள். ஆனால் அவன் வேகமாக நடந்து, தெருவை கடந்து சென்று கொண்டிருந்தான். இவள் வேகமாக நடந்தும், இடையில் கார் ஒன்று வந்ததால் நின்று செல்வதற்குள் அவன் எங்கு சென்றான் என்பது அவளுக்கு தெரியவில்லை. அவன் எந்த பக்கம் சென்றிருப்பான் என தேடினாள். அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. பின் அங்கிருந்து சென்றுவிட்டாள்.
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
மெதுவாக நடந்து வந்தாள். அவள் அயர்ந்து போயிருந்தது அவளது முகத்தில் தெரிந்தது. வீட்டிற்கு வெளியே செருப்பை கழட்டிவிட்டு உள்ளே செல்கிறாள். வீட்டின் இடது முளையில் வயர் கட்டிலில் படுத்திருந்த, அவளது பாட்டி திரும்பி பார்க்கிறார். இவள் சோகமாக உள்ளதை புரிந்து கொள்கிறார். எப்போதும், எது நடந்தாலும், அவளாக சொல்லுவாள் என்பதால் அமைதியாக இருக்கிறார். அவள் சென்று சமலறையில் இருந்து சொம்பில் நீர் எடுத்து வருகிறாள். வந்து தரையில் உக்கார்ந்து சுவற்றில் சாய்ந்து யோசனை செய்கிறாள்.

“என்னடி, தண்ணி எடுத்துட்டு வந்துட்டு குடிக்காம யோசிச்சுட்டு இருக்க?..” என மெதுவாக கேட்கிறார். அவர் கூறியதை கேட்காமல், யோசனையிலே இருக்கிறாள்.
“அடியே, சௌந்து!...” என மறுபடியும் அவளை கூப்பிடுகிறார்.
“ம்ம்... சொல்லு பாட்டி.”
“தண்ணி குடிக்கலையா?...”
அவள் பேசாமல் எழுந்து, “ சாப்ட்டியா பாட்டி?...”
“இல்லடி, நீ வந்துருவேன்னு தான்...”
“என்ன பாட்டி... எத்தன முறை சொல்லுறது, சீக்கிரம் சாப்பிடுனு.... இப்போ தான் உடம்பு சரி ஆகிருக்கு...” என கூறி கொண்டே உள்ளே சென்று சாப்பாடை எடுத்து தட்டில் வைத்து கொண்டு வருகிறாள்.
“போன வாரம் எவ்ளோ கஷ்ட பட்ட?... சாப்ட்டா தான் என்ன?...”
சிறு அமைதி, பின் “நீயும் என்ன விட்டுட்டு போகணும்னு நினைக்கிறியா பாட்டி...” என கூறும் போதே கண்களின் ஓரம் நீர் வரவும், அதை பாட்டி கவனிக்க கூடாது என எழுந்து திரும்பி நின்றாள்.
“ஏண்டி இப்டி பேசுற, எப்போவும் ஒண்ணா தான சாப்பிடுவோம் அதான், நீ வர்ற வரைக்கும் சாப்பிடாம இருந்தேன்.”
“நான் வர சில நேரம் லேட் ஆகும், நீ டைம் ஆச்சுனா சாப்பிடு அப்டின்னு உனக்கு எத்தன முறை சொல்லுறது.”
“எனக்குனு இருக்குறது நீ, உனக்கு நான் இப்டி ரெண்டு பேர் மட்டும் தான இருக்கோம்.” பாட்டி பேசி கொண்டு இருக்கும் போதே, அதற்குமேல் அழுகையை அடக்க முடியாமல் வாய் விட்டு அழுதுவிட்டால் சௌந்தர்யா. ஒன்றும் புரியாமல் பாட்டி
“சௌந்து, சௌந்து...” என பதறி கொண்டு கட்டிலில் இருந்து எழுந்து கைகளை நீட்டி அவளை அருகே அழைக்கவும், இதுவரை தன் சோகத்தை வெளியே காட்டாத சௌந்தர்யா, பாட்டியின் அருகே சென்று மடியில் தலை சாய்த்து, ஒரு சிறு குழந்தையை போல் ஏங்கி, ஏங்கி அழுதாள். பாட்டியும் அவளது தலையை வருடி கொண்டே அழுதார்.
“ஏண்டி அழுகுற... அலுகாதம்மா.... பாட்டி இருக்கேண்டி உனக்கு எப்போவும், நீ என்ன நடந்ததுனு சொல்லுடி.”
அவள் அழுகையை நிறுத்தவில்லை, “ கவலைபடாத, என்ன கஷ்டம் வந்தாலும் அந்த பிள்ளையார் நம்மள காப்பாத்துவார். நீ அழுகாதம்மா... என் தங்கம்... அழுகாதம்மா...”
சிறிது நேரம் அழுதவள் நிமிர்ந்து, பாட்டியின் கையை பிடித்து, “பாட்டி கௌதம போலீஸ் பிடிச்சுட்டு போய்ட்டாங்க.” என கூறி மீண்டும் விம்மி விம்மி அழுதாள்.
பாட்டிக்கு எதுவும் புரியவில்லை. கண்களை துடைத்து கொண்டு, “என்ன சொல்லுற, எந்த கெளதம்?... நம்ம பக்கத்து கடை கெளதமா?”
“ஆமாம் பாட்டி, அதுவும் எதுக்காகனு தெரியுமா பாட்டி?... முருகன அவரு கொல பண்ணிட்டாராம், எப்டி இருக்கு பாருங்க... அவரு அப்டி பண்ணுவாரா?” என கோவமும் அழுகையுமாக பேசினாள்.
“என்னது? முருகன் இறந்துட்டானா? என்னடி சொல்லுற? ஒன்னும் புரியல? நீ அழுகைய நிப்பாட்டிட்டு ஒழுங்கா சொல்லு, என்ன நடந்தது?”
“இன்னைக்கு காலைல நான் கடை திறக்க போனேன், அப்போ கோகிலாபுரத்துக்கு பின்னாடி எதோ ஆக்சிடென்ட்னு சொன்னாங்க. அப்பறம் கொஞ்ச நேரத்துல போலீஸ் வந்து கௌதம அரெஸ்ட் பண்ணிட்டு போய்ட்டாங்க. போய் கேட்டா முருகன கொலை பண்ணிருக்கார், சாட்சி இருக்குனு சொல்றாங்க. ஒன்னும் புரியல எனக்கும்.”
“என்னடி சொல்ற, ஆக்சிடென்ட்ன்னு சொல்லுற, கொலைனும் சொல்லுற, ஒன்னும் புரியல?...”
“பாட்டி... உன்கிட்ட ஒன்னும் சொல்லி புரியவைக்க முடியாது. போ...”
“எதோ ஒன்னு போ... அதுக்கு எதுக்கு நீ அழுகுற?... நான் கூட வேற என்னமோ ஏதோனு பயந்துட்டேன். நீ எதுக்கு போலீஸ் ஸ்டேஷன்க்கு எல்லாம் போற?..”
‘பாட்டிக்கு நாம காதலிக்கிறது தெரியாது. தெரிஞ்சாலும் விடாது. நான் அவரு கூட பேசினாலே பசங்க கூட உனக்கு என்ன பேச்சுனு சத்தம் போடும். இது கிட்ட போய் சொன்னேன் பாரு.’ என தன் மனதில் நினைத்தாள்.
“ஏண்டி!... நாமளே யாரோட உதவியும் இல்லாம தனியா இருக்கோம். இதுல நீ இப்டி வேற ஏதாது பிரச்சனை கொண்டு வராத. அந்த கெளதம் ஏற்கனவே முருகன் கூட சண்ட போட்டுருந்தான். இதுல அவன கொன்னேபோட்டுடானா?.... ம்கூம்.... இதுல நீ அவனுக்கு ஆதரவா போலீஸ் க்கு போற. ஏய்!... நாம அந்த சிவசங்கர் அய்யா தயவுல தான் வாழுறோம். அவுங்க வீட்டு பையனையே இவன் கெளதம் கொன்னுருக்கான். இது சரி வராது. நீ அவன இனி பாக்கவோ, பேசவோ கூடாதுடி.... என்ன சரியா?...”
“போ பாட்டி! நீ ஏன் இப்டி பேசுற, கெளதம்க்கு நம்மள விட்டா யாரு இருக்கா?... நீ ஒன்னும் சொல்ல வேணாம். நான் பாத்துக்கிறேன். நீ மோதல சாப்பிடு”
“போடி, அப்டி நினைக்காத, நமக்கு தான் பிரச்சன அப்பறம்?”
“எது வந்தாலும் நான் பாத்துக்கிறேன். நீ கவலை படாத.”

மறுபடி மறுபடியும் பாட்டி அவளுக்கு அறிவுரை கூற, அதை அவள் கேட்காமல் எழுந்து உள்ளே சென்றாள். தனக்குள்ளே புலம்பியும் கொண்டாள்.
‘கெளதம்க்கு நான் உதவி செய்யாம யாரு செய்யுவா?
இந்த பாட்டிக்கு அறிவே இல்ல,
என்ன தான் பிரச்சன வந்தாலும், நான் இதுல இருந்து விலக மாட்டேன்.
ஆனா இந்த பிரச்சன எல்லாத்தையும் எப்டி இப்போ சமாளிக்கிறதுன்னு தான் ஒன்னும் புரியல.
இதுக்கு ஏதாது ஒரு தீர்வு கண்டுபிடிக்கணும்.’
“நான் சொல்லுறது எதையும் கேட்காத...”

பாட்டி அவளை திட்டி கொண்டே சாப்பிட்டு முடித்தார். அவள் தட்டை எடுத்து கொண்டு போய் தண்ணி பானை மேல் வைத்தாள். அவளது மனம் ஒரு நிலையில் இல்லை என்பது அவள் தட்டை வைத்ததில் இருந்தே தெரிந்தது. அவளுக்கு எந்த வேலையை செய்யவும் மனம் ஈடுபடவில்லை. நேரம் சென்று கொண்டு இருக்கிறது, அவர் அங்கு எவ்வளவு கஷ்ட படுகிறாரோ என எண்ணி எண்ணி அவள் அயர்ந்தே போய்விட்டாள்.

மாலை ஐந்து மணி போலீஸ் ஸ்டேஷன் அமைதியாக தான் இருந்தது. இன்ஸ்பெக்டர் இல்லாததால் அங்கு வேலை எதுவும் அவ்வளவாக நடக்க வில்லை. மாறாக சில போலீஸ் அதிகாரிகள் துங்கி கொண்டிருந்தனர். கைதிகள் பேசி கொண்டு இருந்தனர். கெளதம் மட்டும் எதோ பிரம்மை பிடித்தது போல் அமர்ந்திருந்தான். அவன் முகத்தில் ஒரு மாற்றமும் இல்லை. இயல்பாகவே எமொசனல் கேரக்டர் என்பதால், அவனுக்கு இந்த நிகழ்ச்சி பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியது. சிறு வயதிலே சொந்தங்களை இழந்து தனியாக வாழ்ந்தால், அவனுடைய உலகமே நண்பர்கள் தான். அதிலும் முருகன் தான் மிகவும் நெருக்கம். முருகனை தவிர எவரிடமும் தன்னுடைய எண்ணங்களை, ஆசைகளை வெளிப்படுத்த மாட்டான். முருகன் இவனை விட ஐந்து மாதங்கள் பெரியவன். இருவரும் பழகுவது கூட சகோதரர்களை போன்று தான் இருக்கும். முருகன் இவனிடம் பேசாமல் சென்றதே இவனுக்கு பெரிய சோகத்திருக்கு ஆளாக்கியது. இப்போது முருகன் இருந்துவிட்டான் என்பது பெரும் இழப்பு அவனுக்கு. இப்போது அவனால் முருகன் இறந்துவிட்டான் என்பதை ஏற்கவும் முடியாமல், தாங்கி கொள்ளவும் முடியாமல் மனதளவில் நொறுங்கி விட்டான். கெளதம் ஸ்டேஷன் வந்ததில் இருந்து இப்போது வரை எதுவும் சாப்பிடாமல், தண்ணீர் கூட அருந்தாமல் அப்டியே அமர்ந்துள்ளான்.

இன்ஸ்பெக்டர் வண்டி வரும் சத்தம் கேட்கிறது. எல்லாரும் வேகமாக எழுந்து அவரவர் வேலையே செய்ய தொடங்குகின்றனர். கைதிகள் அமைதியாகிவிட்டனர். கெளதம் அப்டியே தான் இருந்தான். அவனுக்கு இங்கு நடப்பது எதுவும் கேட்கவும் இல்லை, அதில் அவன் கவனமும் இல்லை. ஏதோ யோசனையில் இருந்தான். இன்ஸ்பெக்டர் உள்ளே வருகிறார். சுற்றிலும் அவரது கண் செல்கிறது. யார் யார் என்ன செய்கின்றனர் என்பதை தெரிந்து கொண்டார். அவரது சீட்டில் சென்று அமர்ந்தார்.
“முத்து...”
“சார்...”
“என்ன, அவன் கண்ண துறந்தே தூங்குறானா?...” என கெளதமை பார்த்து கொண்டே கேட்டார்.
“சார், அவன் நீங்க போனதுல இருந்தே அப்டி தான் உக்காந்த்ருக்கான். சாப்பாடு வேணுமானு கூட கேட்டேன் அதுக்கும் பதில் இல்ல.”
“நீங்க ஏதாது விசாரிச்சீங்களா அவன?...”
“இல்ல சார்.”
“என்ன சீனு போடுறானா? இந்த மாதிரி எத்தன கேஸ நாம பாத்துருப்போம். நம்ம கிட்டயேவா.... கூப்பிடுங்க அவன,”
“ஏய்!...” கெளதம் கவனிக்கவில்லை. “ஏய்!.. உன்னத்தான்டா...” அப்போதும் அவன் கவனம் இங்கு இல்லை. அருகில் இருந்த கைதி ஒருவன் அவனை தட்டினான். அப்போது தான் அவன் சுயநினைவுக்கே வந்தான். அவன் திரும்பி அந்த கைதியை பார்த்தான். அவன் கான்ஸ்டபில் பக்கம் திரும்பினான். “ஏய்!.. கூப்ட்டா காது கேக்காதா உனக்கு?... இன்ஸ்பெக்டர் கூப்பிடுறார், எழுந்துவா.” என கூறி லாக்கப்பை திறந்தார். மெதுவாக நடந்து வந்தான். “வேமா நட...” என அவனை கான்ஸ்டபில் தள்ளினார்.
இன்ஸ்பெக்டர் முன் வந்து நின்றான் கெளதம். இன்ஸ்பெக்டர் அவனை ஏளனமாக பார்த்தார்.
“என்ன சார், உண்மைய சொல்ல சொன்னா பயங்கரமா நடிச்சுட்டு உக்காந்துருக்கீங்க?... இப்டிலாம் பண்ண சார நல்லவர்னு நம்பி வெளில விட்டுருவோம்னு பாத்தியா? உண்மைய சொல்லுடா...”
“எனக்கு எதுவுமே தெரியாது. நீங்க சொன்ன அந்த கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை சார்.” என தளதளத்த குரலில் பேசினான்.
“ஏண்டா படிக்காத நீயெல்லாம் கொலை பண்ணிட்டு, அத மறச்சு ஆக்சின்டெட்டா மாத்துறனா, படிச்சு இப்டி ஒரு போஸ்ட்ல இருக்க எங்களுக்கு எவ்ளோ தெரியும். ஒழுங்கா உண்மைய சொல்லு, இல்ல உன்கிட்ட எப்டி உண்மைய வாங்கனும்னு எனக்கு தெரியும்.”
“சார் நீங்க நினைக்கிற மாதிரி நான் கொலை பண்ணல. நீங்க எத்தன முறை கேட்டாலும் சரி, எப்டி கேட்டாலும் சரி நான் கொலை பண்ணல, பண்ணல”
கோபமாக முறைத்து கொண்டே, “கான்ஸ்டபில், கான்ஸ்டபில்...” என சத்தமாக அழைத்தார்.
கான்ஸ்டபில் வேகமாக வந்து, “சொல்லுங்க சார்...”
“இவன இழுத்துட்டு போங்க... அவன அடிக்கிற அடியில அவன் உண்மைய தானா சொல்லணும்.” என அவனை முறைத்துக்கொண்டே பேசினார்.
“இப்போ பாருங்க சார், அவன் தானா உண்மைய சொல்ல போறான்.”
“ம்ம்ம்.”

கெளதம் முகம் பதற்றத்துடன் காணப்பட்டது. இருந்தும் அவன் அமைதியாக சென்றான். கான்ஸ்டபில் அவனை அடிப்பதும், அவன் அலறுவதுமாக சிறிது நேரம் சென்றது. அவன் நான் கொலை செய்யவில்லை என்றே கூறிகொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து இன்ஸ்பெக்டர் உள்ளே சென்றார்.
“என்ன முத்து, அவன் உண்மைய சொல்லிட்டானா?...”
“சார், என்ன அடிச்சாலும் ஒன்னும் சொல்ல மாட்டுறான்.”
எதோ யோசனை செய்தார் இன்ஸ்பெக்டர், பின், “சரி விடுங்க... அப்பறமா கவனிப்போம்.”

அவனை அங்கேயே விட்டுட்டு கான்ஸ்டபில் கையில் இருந்த கம்பை சுவற்றை நோக்கி எறிந்துவிட்டு சென்றார். சுற்றி இருந்த கைதிகளும் அவனை ஏளனமாக பார்த்தனர். சிலர் உண்மையிலே இவன் நல்லவன் தான் போல எனவும் பேசினர். கெளதம் முகம் வீங்கி, கன்னம் சிவந்து, உடம்பு முழுவதும் அங்குஅங்கு தடிப்புடன் காணப்பட்டது.
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
சௌந்தர்யா வீட்டில் பாட்டிக்கு சாப்பாடு குடுத்துட்டு எல்லாம் எடுத்து வைத்து தூங்க பாய் விரித்தாள். தலையணை எடுத்து வைத்து உக்கார்ந்தாள். படுக்க முடியவில்லை. கெளதம் என்ன செய்வாரோ என்ற யோசனை அவளை ஆட்கொண்டது. பாட்டி “படுடி” என அவளை பார்க்க, அவள் படுக்கிறாள். இருந்தும் தூக்கம் வரவில்லை. பாட்டி துங்கும் வரை படுத்தவள், பின் எழுந்து உக்கார்ந்தாள். அவளது மனம் காலையில் இருந்து நடந்ததை நினைத்து பார்த்து, தனக்குள் யோசனை செய்து குழம்பியது.
‘இப்டி ஒரு பிரச்சன வந்துருச்சே,
இப்போ எப்டி கெளதம நாம காப்பாத்துறது,
ஏதோ தைரியசாலி மாதிரி, அங்க அவருக்கு தைரியம் சொல்லிட்டு வந்தாச்சு,
ஆனாலும் மனசு ரொம்பவே குழம்புது.
இந்த சந்தோஷ் எங்க போனானே தெரியல்ல... அவன் இருந்தாவாது ஏதாது உதவி செய்வான்.
ம்ம்... இன்னைக்கு காலைலயும் மதியமும் சைமன பாத்தோம்,
ஒரு வாட்டி கூட அவன் நாம கூப்பிட்டதுக்கு திரும்பவே இல்ல,
ஏன், ஒரு வேல இந்த கொலைக்கும் அவனுக்கும் ஏதாது சம்பந்தம் இருக்குமோ,
ச்சீ, என் இப்டி தப்பு தப்பா யோசிக்கிறேனோ,
ஆனாலும் அவன் நம்மள கவனிச்சும் கவனிக்காத மாதிரி இருந்துச்சே,
இல்ல, இல்ல அவுங்க எல்லாரும் நல்ல ப்ரெண்ட்ஸ்... அவன் நம்மள நிஜமாவே பாத்துருக்க மாட்டான்.
நல்ல ப்ரெண்ட்ஸ் தான், இருந்தாலும் ஒரு ப்ரெண்ட இப்டி போலீஸ் அர்ரெஸ்ட் பண்ணிட்டு போறது பாத்துட்டு பேசாம இருக்குறது நல்ல ப்ரெண்ட்க்கு அடையாளமா,
அவன் ஏன் கௌதம பாக்க போலீஸ் ஸ்டேஷன்க்கு வரவே இல்ல,
ஒரு வேல நாம வந்த பின்னாடி வந்து பாத்துருப்பானா,
எதுவுமே புரியலையே,
தலையே சுத்துது சாமி
யாரு வந்தாலும் சரி, வரலைனாலும் சரி, இதுல இருந்து எப்டியாது கௌதம நாம காப்பாத்தனும்
நாளைக்கு போய் கௌதம பாத்து, ஏன் உங்க மேல பழி விழுந்துச்சு, அன்னைக்கு என்ன நடந்ததுன்னு கேக்கனும்.
நாளைக்கு இத பத்தி கேட்டு விசாரிச்சா தான் அவர வெளில கொண்டு வர ஏற்பாடு பண்ண முடியும்.
யார் கிட்ட உதவி கேக்கலாம்...
ம்ம்... நம்ம சுந்தரி அக்கா வேல பாக்குறாங்களே, அந்த வக்கீல் அய்யா, அவரு கிட்ட உதவி கேப்போம்.’
யோசித்து கொண்டே தூங்கியும் விட்டாள்.
.....

மறுநாள் காலை அனைத்து வேலைகளையும் வேகமாக முடித்து விட்டு, கெளதமை பார்ப்பதற்கு போலீஸ் ஸ்டேஷன் கிளம்புகிறாள். கையில் அவனுக்கு காலை சாப்பாடும் எடுத்து கொண்டு புறப்படுகிறாள். அவள் கூடையில் அவனுக்கு சாப்பாடு எடுத்து வைப்பதை பார்த்த அவளது பாட்டி,
“அடியே!... இங்க பாரு, நேர கடைக்கு போ, சும்மா அவன பாக்க போறேன்னு போலீஸ் ஸ்டேஷன்க்கு போகாத... என்ன சரியா?”
அவள் பாட்டி சொல்லுவதை கேட்காமல், “நான் கிளம்புறேன்... உனக்கு சாப்பாடு எடுத்து வச்சுருக்கேன், மறக்காம சாப்பிடு.” என வீட்டை விட்டு வெளியே வந்து செருப்பை மாட்டி கொண்டே பேசினாள்.

தெருவை கடந்து திரும்பியவள், எதோ தோன்றியது போல மீண்டும் தெருக்குள்ளே சென்றாள். வீட்டிற்கு அருகில் இருக்கும் சுந்தரி வீட்டிற்கு சென்று கதவை தட்டுகிறாள். கதவு திறக்கப்பட்டது. சுந்தரியின் மகன் வந்தான்.
“என்ன அக்கா?...”
“அம்மா இல்லையா?...”
“பொறுங்க...” என அவளிடம் கூறிவிட்டு உள்ளே சென்றான். சிறிது நேரத்தில் உள்ளிருந்து சுந்தரி வருகிறார்.
“நான் வேலைக்கு கிளம்பிட்டு இருந்தேன் அதான், சொல்லு... என்ன வேணும்?...”
“இல்ல அக்கா... நீங்க ஏதோ வக்கீல் வீட்டுல தான வேல பாக்குறதா சொன்னீங்க?..
“ஆமாம்... நீ எதுக்கு கேக்குற?...”
“இல்லக்கா அது வந்து, உங்களுக்கே தெரியும் கௌதம போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டு போய்ட்டாங்க. அவர வெளில கொண்டு வர தான் வக்கீல் கிட்ட போனும்.”
“ஓ!.. அதுக்காக தானா....”
“அவர எப்போ எப்டி பாக்கலாம்னு சொன்னீங்கனா எனக்கு வசதியா இருக்கும். அவர எனக்கும், கெளதம்க்கும் உதவி செய்ய சொன்னீங்கனா போதும். நானே பாத்துக்கிறேன் அப்பறம் எல்லாம். இந்த உதவி மட்டும் செஞ்சீங்கான நல்லா இருக்கும் அக்கா.”
“சரிடி, நீ ஈவுனீங்கா வா. சார் அப்போ தான் இருப்பார். நான் அவருகிட்ட உன்ன பத்தி சொல்றேன். ஆனா அவரு கேஸ எடுத்துபாரானு எனக்கு தெரியாது. அதெல்லாம் நீ தான் பாத்துக்கனும்.”
“சரிக்கா... எனக்கு அது போதும்க்கா. நான் முதல சந்தோஷ் கிட்ட தான் கேக்க போனேன், அவன் இல்லன்னு சொல்லிட்டாங்க. அதான் நானே இப்போ இதெல்லாம் பாக்குறேன்.”
“உனக்கு தெரியாதா அப்போ?... சந்தோஷ் ஓடி போய்ட்டான், அந்த சிவசங்கர் பொண்ண கூட்டிட்டு...”
சௌந்தர்யா முகத்தில் அதிர்ச்சி, குழப்பம் எல்லாம் தெரிந்தது. “நிஜமாவா அக்கா... எனக்கு தெரியாது.” சிறிது நேரம் பேசாமல் யோசனையில் இருந்தாள்.
“சரிடி... எனக்கு வேலைக்கு நேரம் ஆச்சு. நான் கிளம்புறேன். சாயங்காலமா வந்துருடி...” என கூறி கொண்டே திரும்பி நடக்க ஆரம்பித்தார்.
சௌந்தர்யா யோசனையோடு நடக்க ஆரம்பித்தாள்.
‘அவருக்கு இது தெரியுமா?...
ஒரு வேல இதுக்கு தான் நேத்து போய் பேசினாங்களா இவுங்க எல்லாம்...
ஒண்ணுமே புரியல்ல...
போய் அவர் கிட்ட இத பத்தி கேக்கணும்.’

போலீஸ் ஸ்டேஷன் அருகில் வந்தவுடன் பதற்றமும் சேர்ந்து கொண்டது சௌந்தர்யாவுக்கு. நேற்று வணங்கிய அந்த பிள்ளையார் கோவிலை கடக்கும் போது கடவுளை வணங்கி கொண்டே சென்றாள். ஸ்டேஷன் வாசல் வந்தவுடன், உள்ளே யாரையோ அடிப்பது போன்று சத்தம் கேட்கிறது. சௌந்தர்யா மிகவும் பயந்து போய்விட்டாள்.
“யார அடிக்கிறாங்க?... ஒரு வேல கௌதம தான் அடிக்கிறாங்களா?...”
வேகமாக உள்ளே வந்தவள், கெளதம் எங்கு இருக்கிறான் என தேடினாள். அங்கு வேறு யாரையோ அடித்து கொண்டு இருந்தார் கான்ஸ்டபில். அதை பார்த்த பின்பு தான் அவள் அமைதியகினாள். இருந்தும் கெளதமை காணவில்லை என தேடினாள். இன்ஸ்பெக்டர் அவளை பார்த்ததும்,
“என்னமா... இன்னைக்கும் வந்துட்டியா.”
“ஆமாம் சார், நான் அவர பாக்கணும்.”
“ம்ம்... அந்த செல்லுல இருக்கான் பாரு, போ..” அவள் நகன்று செல்லும் போது தான் கவனித்தார், அவள் கையில் இருந்த கூடையை, “நில்லுமா... என்ன கொண்டு போற?...” என கூர்ந்து பார்த்து கொண்டே “ கான்ஸ்டபில்... என்னனு செக் பண்ணி அனுப்புங்க...”
கான்ஸ்டபில் அருகில் சென்று கூடையை வாங்கி பார்த்தார், அவள் “இது சாப்பாடு தான் சார்.”
“யாருக்கு... அந்த சார்க்கா?... என்ன லவ்வா?....”
அவள் ஒன்றும் பேசாமல் நின்றிந்தாள்
“ம்கூம்... போ...” என எரிச்சலோடு திரும்பினார்,

உள்ளே சென்று அவனை பார்த்தாள், அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டாள். அவனது முகம் வீங்கி, கன்னம் சிவந்து, நிமிர்ந்து பார்க்க கூட முடியாமல் சோர்ந்து போய் அமர்ந்து இருந்தான். அவள் கண்கள் கலங்கிவிட்டது அவனது அந்த நிலை. அவள் மெதுவாக,
“கெளதம்...”
அவன் நிமிர்ந்து பார்த்தான். அவளை பார்த்தவுடன் ஏதோ புது தெம்பு வந்தது போல் அவன் எழுந்து நின்றான். அவள் அருகில் சென்று கைகளை பாசமாக பற்றினாள். போலீஸ் அடிசாங்களா...”
அவன் எதுவும் பேசவில்லை, “நீங்க கவலை படாதீங்க, நான் ஏனு கேக்குறேன்?...”
அவன் அவளது கையை பிடித்தான், “எதுவும் கேக்காத, அவுங்க வேலைய செய்யுறாங்க, நீ ஒன்னும் கேக்காத”
“அதுக்காக இப்டியா அடிக்கிறது, எப்டி இருக்கீங்க பாருங்க?...” என கலங்கிய கண்ணோடு கேட்டாள்,
“அதெல்லாம் ஒன்னும் இல்ல.”
“நீங்க சாப்டீங்களா?...”
“எதுக்கு, எனக்கு பசி இல்ல... நானே முருகன இப்டி இழந்துட்டேனேனு ரொம்ப கவலையா இருக்கேன். எனக்கு எதுவும் வேண்டாம்.”
“சாப்பிடாம இருந்தா எதுவும் மாறாது. நீங்க எனக்காக சாப்பிடுங்க... கொஞ்சமாது சாப்பிடுங்க”
“எனக்கு மனசே சரியில்ல... என்ன விட்டுறு.”
“நீங்க சாப்பிட்டே ஆகணும்,” என கூறி அவனை கை பிடித்து அமர்த்தி சாப்பிட வைத்தாள்.

சாப்பாடு சரியாக கூட சாப்பிட வில்லை கெளதம். இருந்தாலும் அவனை சௌந்தர்யா கட்டாய படுத்தவில்லை. இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபில் என எல்லாரும் இவர்களது பேச்சை கவனித்து கொண்டு இருந்தனர். கெளதம் அவளிடம் என்ன பேசுகிறான், கொலையை பற்றி எதுவும் கூறுகிறான என கவனித்து கொண்டே இருந்தனர். சௌந்தயாவை, கெளதமிடம் பேச விட்டது கூட அதற்காக தான். சாப்பிட்டு முடித்த பிறகு அவனிடம் சௌந்தர்யா பேசினாள்,
“ஏன் தான் இப்டியெல்லாம் நடக்குதோ?... உண்மையிலே என்ன தான் நடந்தது அன்னைக்கு, உங்களுக்கு ஏதாது தெரியுமா?...”
“எல்லாம் ஏதோ கனவு மாதிரி இருக்கு. எனக்கு எதுவும் தெரியாது.”
“ம்ம்... நான் நம்புறேன் உங்கள, நீங்க எதுக்கும் கவலை படாதீங்க.”
“எது நடக்கனும்னு இருக்கோ அது நடக்கும், நம்மளால எதுவும் மாத்த முடியாது. நீ எதுவும் கஷ்ட படாத?”
“என்ன நீங்க இப்டி பேசுறீங்க?... உங்களுக்காக நான் பண்ணாம யாரு பண்ணு வாங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, இப்டி பேசாதீங்க.”
“என்னால நீயும் கஷ்ட படுறத பாத்தா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.”
“நீங்க தான் என்னோட வாழ்க்கைன்னு நினச்சுட்டு இருக்கேன். இப்டி நினைக்காதீங்க இனி எப்போவும். நீங்க இப்டி பேசினா எனக்கு மனசே வலிக்குது.”
“என் வாழ்க்கை எப்டி அமைய போகுதோன்னு தெரியல்ல... நீ உன் வாழ்க்கைய பாரு.”
“நான் உங்க கூட தான் எப்போவும் இருப்பேன். என்ன நடந்தாலும் சரி.”
அவளது முடிவில் அவள் தீர்க்கமாக உள்ளதை உணர்ந்தும், அவன் முகத்தில் சந்தோசம் இல்லை. அவன் பேசமால் நிற்கவும்,
“உங்களுக்கு இத பத்தி தெரியுமா?... உங்கள வெளில எடுக்க வக்கீல் பாக்கனும்னு, சுந்தரி அக்கா கிட்ட உதவி கேக்க போனேன், அப்போ அவுங்க சொல்லி தான் தெரியும், சந்தோஷ் காதம்பரிய கூட்டிட்டு போய்ட்டான்னு. இருந்தாலும் உங்களுக்கு அத பத்தி தெரியாதுல?... நீங்க தான் இங்க வந்துடீங்க...”
இன்ஸ்பெக்டர் இங்கு கவனிக்கிறார்.
“எனக்கு தெரியும்.” என்றான் சாதாரணமாக,
“தெரியுமா... நேத்து பாக்க போனீங்களே அதுக்காக தானா?...”
இடை மறித்து, “தெரியும்டா... நீ எப்டியும் வாய திறப்பனு”
“சார்....” என ஒன்றும் சௌந்தர்யா புரியாமல் விழிக்க,
“உனக்கு எப்டி தெரியும்னு சொல்லுங்க சார்...”
குழப்பத்திற்கு மேல் குழப்பம் அடைந்தாள். கெளதமோ அமைதியாக ஒன்றும் பேசாமால் நின்றான்.
“சார் தான் சந்தோஷ அனுப்பி வச்சதே... அதுல தான் சார்க்கும், முருகனுக்கும் சண்ட வந்து, சார் முருகன கொன்னு, அத மறைக்க ஆக்சிடென்ட்டா மாத்திருக்கார். இப்போ என்னான ஒன்னுமே தனக்கு தெரியாதுனு நடிக்கிறார் சார்.”
விழிகள் அகல விளித்தவாறு கெளதமை நோக்கி திரும்பினாள்.
.....
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
arumaiyana pathivu sis.(y)(y)(y)(y)yaarai kappatra gowtham aamathiya irukan:unsure::unsure::unsure::unsure:simon oruvela kolai pannitana:unsure::unsure::unsure::unsure::unsure:suspense& interesting:rolleyes::rolleyes::rolleyes:epi(y)(y)(y)(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top