Maranathin Marmam - 3

How is the Story Going?

 • Good

  Votes: 4 100.0%
 • Bad

  Votes: 0 0.0%
 • Need Improvement

  Votes: 0 0.0%

 • Total voters
  4

MithraPrasath

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
மரணத்தின் மர்மம்​
அத்தியாயம் 3
நடப்பதும், நடந்ததும் புரியாமல் விளிக்கும் சௌந்தர்யா, கெளதமை பார்த்தும் குழம்புகிறாள். அவனது அமைதி அவளுக்கு புரியாத புதிராக இருந்தது. அதை அவனிடம் கேட்கவும் செய்தாள்.

“நீங்க கொலை செஞ்சீங்களா?..” கோவ பார்வயோடு கேட்டாள்.
“நீயும் என்ன நம்பலையா?..” என்றான் ஏமாற்றத்துடன்,
“நம்புறதால தான் கேக்குறேன்.. சொல்லுங்க..”
“பண்ணல.”
“அப்பறம் ஏன் அமைதியா இருக்கீங்க...?”

இன்ஸ்பெக்டர் எழுந்து வருகிறார் அவர்களுக்கு அருகில், “நீங்க ரெண்டு பேரும் போடுற ட்ராமா பாக்குறதுக்கு நாங்க இல்ல.” என்று கூறி நெருங்கி அவனை கன்னத்தில் அடித்தார். “சொல்லு உண்மைய?..”

“எதுக்கு சார் அவர அடிக்கிறீங்க..? இதெல்லாம் தப்பு.... வேணாம் ”
“என்னம்மா எனக்கே ஆர்டர் போடுறியா...? இதெல்லாம் சரிவராது. நீ கிளம்பு. கான்ஸ்டபில்...”
“எஸ் சார்...”
“இந்த பொண்ண அனுப்புங்க...”
“சார், நீங்க இப்டிலாம் பண்ண கூடாது. நீங்க அடிக்காதீங்கனு சொன்னா, என்னையே நீங்க தப்பு பண்ண மாதிரி

வெளில போக சொல்லுறீங்க. நான் போக மாட்டேன்.” என எதிர்த்து பேசியவளை கோபமாக முறைத்து பார்த்தார் இன்ஸ்பெக்டர்.

“என்னம்மா திமிரா பேசுற. பொண்ணுன்னு பாத்தா... இப்போ நீ கிளம்புறியா, இல்ல உன்ன இந்த கொலைக்கு உடந்தையா இருந்தனு உள்ள தள்ளவா.”
“சார், சார்.. அவள தப்பா நினைக்காதீங்க, அவ புரியாம பேசுறா.” இன்ஸ்பெக்டரிடம் கெஞ்சி கொண்டே சௌந்தர்யாவை பார்த்து, “போ, போ..” கையசைக்கிறான்.
அவள் ஏன் என்பது போல் தலை சாய்த்தும், “முடியாது.” என சாதரணமாக சொல்லினாள்.
“கான்ஸ்டபில்... என்ன பன்னுறீங்க.... சொன்னா எதுவும் கேக்கமாட்டீங்களா?”
“ஏம்மா!... கிளம்பு நீ... நிக்காத”
கம்பை வைத்து அவளை வெளியே தள்ள, அவளோ “கெளதம் நீங்க கவலைபடாதீங்க... நான் இருக்கேன்.” பேசி கொண்டே வெளியே சென்றாள்.
“இப்போவே போய் வக்கில் ஐயா பாக்கணும்.” தனக்கு மட்டும் கேக்குமாறு பேசி கொண்டாள்.

வக்கீல் நடராஜன் வீட்டிலே ஆபீஸ் வைத்து நடத்துகிறார். வயது ஐம்பதை தாண்டி, தலை முடி நரைத்து, பார்ப்பதற்கு இப்போதே பென்ஷன் வாங்கும் கிழவரை போல் தோற்றமளிப்பவர். கேஸ் நன்றாக நடத்தும் நல்ல வக்கீல் என்றாலும், காசே கடவுள் என்பவர். ஆனால் சில ஆண்டுகளாக கேஸ் வருவது குறைந்தும் விட்டது. அதனாலே அவர் உடம்பும் சரியில்லாமல் போய்விட, அவர் கோர்ட்டுக்கு செல்வதை குறைத்து விட்டார். இவரிடம் கேஸ் எடுத்து நடத்தி கொடுக்கும் படி சௌந்தர்யா உதவி கேட்க எண்ணியிருந்தாள்.

வழக்கத்திற்கு மாறாக இன்று நடராஜர் ஆபீஸிலே இருந்தார். காலையில் இருந்தே. வீட்டு வேலை செய்யும் சுந்தரி இதை கவனித்து, அவரிடம் சென்று சௌந்தர்யாவை பற்றி சொல்லலாம் என நினைத்தாள். ஆபீஸ்க்குள் வந்து நடராஜரை பார்க்கிறாள். அவர் புக் பார்த்து கொண்டிருந்தார்.

“அய்யா...”
“நிமிர்ந்து பார்த்த நடராஜர், “என்ன சுந்தரி சுத்தம் பண்ண போறியா...” என எழ,
“இல்ல அய்யா... நான் வந்து ஒரு உதவி கேட்டு வந்தேன்.”
“என்ன உதவி... அதுவும் உனக்கா?... சம்பளம் பத்தி கேக்கனுமா?.... சொல்லு...”
“இல்ல அய்யா எனக்கு இல்ல, எனக்கு தெரிஞ்சவுங்களுக்கு...”
“அய்யா..” அதற்குள் சௌந்தர்யாவே வந்து விட
“யாரு உள்ள வாங்க.”
சௌந்தர்யா உள்ளே வருவதை பார்த்த சுந்தரி, “நீயா.. உன்ன பத்தி தான் சொல்லிட்டு இருந்தேன். வா..” என கூறி அவளை உள்ளே வருமாறு தலையசைத்தாள்.
“யாரு இந்த பொண்ணு, உனக்கு தெரியுமா சுந்தரி?...”
“நான் ஒருத்தருக்கு உதவி கேட்டேன்ல அய்யா அது இவளுக்காக தான். இவ பேரு சௌந்தர்யா, எங்க பாக்கத்து வீட்டுல இருக்கா. ஒரு கேஸ் எடுத்துக்க சொல்லி...” அவள் புறம் திரும்பி, “சொல்லுடி..” என கைகளை பிடித்தாள்.
“அது வந்து அய்யா நான் நீலமேக கோவில் தெருவுல பூக்கடை நடத்தி வரேன். என் பக்கத்துக்கு கடைக்காரர போலீஸ் பிடிச்சுட்டு போய்ட்டாங்க.”
“எதுக்காக..? என்ன கேஸ்..?”
“கோகிலாபுரத்துக்கு பின்னாடி ஒரு ஆக்சிடென்ட் நடந்ததுல நேத்து அது தான் அய்யா கேஸ்.”
“நான் கூட நியூஸ் பேப்பர்ல பாத்தேன். என்ன நடந்ததுன்னு தெளிவா சொல்லு.”
“என் பக்கத்து கடைக்காரர் பேரு கெளதம் அய்யா. அந்த ஆக்சிடென்ட் கேஸ் ல இறந்தது அவரோட நண்பர் முருகன். முருகன் இவர தான் கடைசியா பாக்க வந்தாராம். அத சொல்லி அர்ரெஸ்ட் பண்ணிட்டு போய்ட்டாங்க.”
“முருகன் யாரு?..”
சுந்தரி இடைமறித்து, “சிவகுரு அய்யா தெரியும்ல அய்யா உங்களுக்கு. அவரோட பேரன் தான் இந்த முருகன்.”
“ஓ!... சிவா சுந்தரம் மகனா. தெரியும் தெரியும்.”
“அது மட்டும் இல்ல அய்யா, போலீஸ் ஸ்டேஷன்ல இப்போ என்னன்னா இது கொலைன்னு சொல்லுறாங்க. அவர் அப்டி பட்டவர் இல்ல அய்யா. நீங்க தான் எப்டியாது கௌதம வெளில கொண்டு வரணும். அதுக்கு தான் உங்கள தேடி வந்தேன் அய்யா.”

“அதெல்லாம் சரிம்மா. எனக்கு பீஸ் தரனும், அதெல்லாம் சரினா தான் நான் கேஸ் எடுப்பேன்.”
“சரிங்க அய்யா, நான் எப்பாடு பட்டாது தந்துருவேன். நீங்க கௌதம எப்டியாது வெளில எடுத்தா போதும்.”
“நீ கட்டிட்டா நல்லது. நீ கேஸ் பத்தி எல்லா விவரமும் எனக்கு சொல்லு. அதுவும் இது கொலைன்னு எப்டி சொல்லுறாங்க..? கெளதம் கொலை பண்ணலன்னு நீ எப்டி சொல்லுற..? இதெல்லாம் எனக்கு தெரியனும்.”
“அய்யா அவுங்க ஏதோ போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல கொலைன்னு இருக்குனு சொல்லுறாங்க... சாட்சி இருக்குனும் சொல்லுறாங்க. கெளதம் நான் கொலை பண்ணலன்னு சொல்லுறார். அவுங்க அடிக்க வேற செய்யுறாங்க. நான் கேட்டா என் மேலேயே கேஸ் போடுறத சொல்லி மிரட்டுறாங்க.” என்று வருத்தபட்டாள்.
“சரிம்மா. நாம போலீஸ் ஸ்டேஷன்க்கு போகலாம்... கேஸ் டீட்டைல்ஸ் வாங்கணும். நீ எதுவும் போய் பேசாத. நான் கேஸ் பைல் பண்ணிடுறேன். நாம ஈவ்னிங் போகலாம் போலீஸ் ஸ்டேஷன். இப்போ நீ கிளம்பு.”
“ம்ம்.. சரிங்கய்யா.”
“அப்பறம்... பீஸ்க்கு பணத்த ரெடி பண்ணிடு. கோர்ட்க்கு போகுறதுக்குல்ல பீஸ் கட்டிடு.”
“சரி அய்யா கட்டிடுறேன்.” திரும்பி சுந்தரியை பார்த்து, “ரொம்ப நல்ல உதவி பண்ணிருக்கீங்க அக்கா, இத எப்போவும் மறக்க மாட்டேன். ரொம்ப நன்றி அக்கா.”

“அதெல்லாம் எதுக்குடி... நீ கிளம்பு... எனக்கு வேலை இருக்கு... அம்மா பார்த்தா திட்டுவாங்க.”
“சரிக்கா, சரிக்கா... நீங்க போங்க... நான் கிளம்புறேன்.”
 

MithraPrasath

SM Exclusive
Author
SM Exclusive Author
#2
கெளதமை வெளியே கொண்டு வர வக்கீல் ஏற்றுகொண்டதயை எண்ணி நிம்மதி அடைந்தாள் சௌந்தர்யா. வீட்டிற்கு சென்று நிம்மதியாக சாப்பிட்டாள். அவளை கண்ட பாட்டி கெளதமை மறந்துவிட்டாள் என எண்ணி சந்தோசமடைந்தார்.

மாலை மணி ஐந்து பத்து. சௌந்தர்யா, வக்கீல் நடராஜருடன் போலீஸ் ஸ்டேஷன் வருகிறாள். உள்ளே நுழைந்து இன்ஸ்பெக்டர் அருகில் சென்றவுடன்,
“இன்ஸ்பெக்டர்...”
நிமிர்ந்து பார்த்தவர் அருகில் சௌந்தர்யாவை பார்த்தவுடன், விஷயம் புரிந்துவிட, “சொல்லுங்க...”
“நான் கோகிலபுரத்துல நடந்த ஆக்சிடென்ட் கேஸ் ல நீங்க அர்ரெஸ்ட் பண்ண கெளதம்க்கு ஆதரவ ஆஜர் ஆக போற வக்கீல். எனக்கு அந்த கேஸ் டீட்டைல்ஸ் வேணும்.”
“ம்ம்ம்... வெயிட் பண்ணுங்க...”
சௌந்தர்யாவின் கண்கள் கெளதமை தேடின. அவன் செல்லுக்குள் இருப்பது தெரியவில்லை. அவனும் அவர்கள் வந்ததை தெரிந்திருக்க வில்லை.
அப்போது சௌந்தர்யா நடராஜரிடம், “நான் கௌதம பாக்கலாம அய்யா...?”
“பொறு..”
“ம்ம்ம்... இது தான் அந்த கேஸ் பைல்...” என இன்ஸ்பெக்டர் பைலை வக்கீலிடம் நீட்டினார்.
“அப்பறம்.. நாங்க கெளதம் கிட்ட பேசணும்...”
“ஹ்ம்ம் ஓகே... அந்த செல்லுல இருக்கான் போய் பேசுங்க. கான்ஸ்டபில்... ம்ம்..” என கண்ணசைக்கிறார்.

கான்ஸ்டபில் செல்லுக்கு அருகில் சென்று கெளதமை தோளில் தட்டினார். அவன் திரும்பி பார்த்த போது சௌந்தர்யா அருகில் நின்றிருந்தாள். சௌந்தர்யா இங்கு அவனை பார்க்க வருவது ஒன்று தான் அவனுக்கு ஆறுதலாக உள்ளது.

“எப்டி இருக்கீங்க..?” அவனது முகத்தில் வெறுப்போடு புன்னகை வந்தது. “நான் உங்கள வெளில எடுக்க வக்கீல் ஏற்பாடு பண்ணிருக்கேன்.” என்று கூறி திரும்பி நடராஜரை பார்க்கிறாள்.
“என்ன...? நிஜமாவா...? நீ ஏன் கஷ்ட படுற... என் தலைல என்ன எழுதிருக்கோ... யாருக்கு தெரியும்...?”
“நீங்க ஏன் இவளோ விரக்தியா பேசுறீங்க... இப்போ ஒன்னும் இல்ல. நல்லதுக்கு தான் எதுவும் நடக்கும்னு எப்போவும் பேசுவீங்க, இப்போ என்னாச்சு உங்களுக்குத்தான்...?”
“நடக்குறது எல்லாம் எனக்கு சரியாவே படல..”
“நீங்க மனச போட்டு குழப்பிக்காதீங்க. நல்லதாவே தான் இப்போவும் நடக்கும்னு நம்புங்க, அது போதும்.”
“இதுக்கெல்லாம் காசு செலவாகும்ல என்ன பண்ண போற நீ...? அதுவும் இந்த வக்கீல் எப்போவும் அதிகமா தான் கேப்பாருனு சொல்லுவாங்க.”
“அது நான் எப்டினாளும் ரெடி பண்ணிடுவேன் நீங்க கவல படாதீங்க..”
வக்கீல் நடராஜர் அவர்களிடம் வந்தார், “நீ தான் கெளதமா...? சொல்லுப்பா.. கொலை நீ பண்ணுனியா, இல்ல கொலை பண்ணலையா, அதுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்... எல்லா டீடைல்ஸ் எனக்கு வேணும் அப்போ தான் நான் கேஸ் நடத்த முடியும். சொல்லு..”
“நான் கொலை எதுவும் பண்ணல அது தான் உண்மை.”
“முருகன் கடைசியா உன்னை தான் பாக்க போறதா சொல்லிட்டு வந்துருக்கான், அவன் உன் வீட்டுக்கு வந்தத பார்த்த சாட்சியும் இருக்கு. அதுவும் இல்லாம அவன யாரோ கத்தியால குத்தி கொன்னுருக்காங்க, அத ஆக்சிடென்ட்டா மாத்த பாத்துருக்காங்க. இதுனால கேஸ் ஸ்ட்ரோங்கா இருக்கு. நீ தெளிவா என்ன நடந்ததுன்னு சொன்ன தான் நான் உன்னை காப்பாத்த முடியும்.”
“சார் அன்னைக்கு முருகன் என்னை பாக்க வந்தான். ரொம்ப வருத்த பட்டு பேசினான். அவன் சொல்லி தான் தெரியும் சந்தோஷ் ஓடி போனது எனக்கு. அவன் கிளம்பவும் அவன சமாதான படுத்த பின்னாடி போனேன். அவன திடிர்னு காணோம். தேடினேன் காணோம், அப்பறம் நான் வீட்டுக்கு வந்துட்டேன். அவ்ளோ தான் அய்யா நடந்தது.”
“ஓகே.. ஓகே.. நான் பாத்துக்கிறேன். நாளைக்கு உன்னை கோர்ட்டுக்கு அனுப்பிடுவாங்க. நாளைக்கு கேஸ் டேட்.”
“ஓகே சார்.. ரொம்ப நன்றி.”
“நன்றி சொன்ன பத்தாது... பீஸ் கட்டுங்க அப்போ தான் நான் கோர்ட் ல கேஸ் நடத்த முடியும்.”
“சரிய்யா நான் கட்டிடுறேன்.” என சௌந்தர்யா கூற, உடனே வக்கீல் கிளம்புகிறார்.
அவர் சென்ற பின் கெளதம் சௌந்தர்யாவிடம், “இவர் இப்டி பணம் கேக்குறாரு, நீ எப்டி அதுக்குள்ள ரெடி பண்ணுவ..?”
“நீங்க கவலை படாதீங்கன்னு சொன்னேன்ல. விடுங்க நான் இருக்கேன்.”
“நீ ரொம்ப கஷ்ட படாத, அவ்ளோ தான்.”
“சரி நான் கிளம்புறேன்... பணத்துக்கு ரெடி பண்ணனும்... போயிட்டு வர்றேன்.”
“ம்ம்ம்...” என கூறி அவள் செல்லும் வரை வாசலை பார்த்து கொண்டிருந்தான். பின்பு மறுபடியும் சோகத்தில் அமர்ந்து விட்டான்.

மாலை கடந்து கொண்டிருந்தது. அவள் வக்கீலுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை ரெடி பண்ண வேண்டும் என்ற யோசனையில் நடந்து கொண்டிருந்தாள்.
‘ எப்டி கொடுக்க போறோம்....
நம்ம கிட்ட இப்போ காசு இல்ல....
யாருக்கிட்ட உதவி கேக்கலாம்....’

யோசனையில் அவள் வீட்டிற்கு போகும் தெருவை கடந்து வேறு ஒரு தெருவினுள் நடக்க ஆரம்பித்தால். பாதி துரம் சென்ற பின்னரே அவளுக்கு தெரிந்தது, தான் யோசனையில் வேறு தெருவினுள் நுழைந்தது. தன் தலையில் கையால் லேசாக தட்டினாள். திரும்பி செல்லும் போது வழியில் மார்வாடி கடை வருகிறது. அதை பார்த்தவுடன்,

“மார்வாடி கடை... நல்ல யோசனை... ஆனா நம்ம கிட்ட ரெண்டு பௌன் செயின் தான் இருக்கு... இத வச்சா அவ்ளோ அமௌன்ட் கிடைக்காதே...”
“ம்ம்ம்... அத வித்துருவோம். அப்பறம் ஆகுற செலவுக்கு கடன் வாங்குவோம்.”
“மோதல போய் நகய எடுத்துட்டு வருவோம், பாட்டிக்கு தெரிய கூடாது.”
வேக நடையுடன் வீட்டை அடைந்தாள். உள்ளே சென்று பார்த்தால், பாட்டி டிவியில் சீரியல் பார்த்து கொண்டிருந்தார். அவளை கண்டதும்,
“வாடி... என்ன கடைய திறக்கலையா நீ...? இங்க வந்துட்ட..?”
“இல்ல பாட்டி, சீட்டு கட்டுறோம்ல அதோட புக் மறந்துட்டேன்.”
“அது நீ ஏற்கனவே கட்டிடேல... அப்பறம் எதுக்கு இப்போ..?”
“கட்டிட்டேன். ஆனா புக்ல பதிய மறந்துட்டேன், அதான்.”

பேசி கொண்டே பீரோவில் இருந்து செயினை எடுத்தாள். பாட்டி டிவி பார்த்து கொண்டே பேசியதால், அவள் செயின் எடுத்ததை கவனிக்கவில்லை. கிளம்பி நேராக சென்று நகை விற்று பணத்தை கொண்டு போய் வக்கீலிடம் கட்டியும் விட்டாள். நிம்மதியோடு வீட்டிருக்கு வந்தவளை வாசலிலே அவளது பாட்டி வழிமறைத்தார்.

“என்ன பாட்டி...?”
“எங்கடி போன..?”
“என்னாச்சு..? ஏன் கேக்குற..?”
“அந்த கௌதம பாக்க போகாதனு சொன்னா... நீ அவனுக்காக வக்கீல் ஏற்பாடு பண்ணிருக்க, அதுவும் இல்லாம நகைய வித்து பணம் வாங்கி பீஸ் கட்டிருக்க... எவ்ளோ கொழுப்பு இருக்கணும் உனக்கு.” அவள் பாட்டியை மதிக்காமல் உள்ளே செல்ல, “நில்லுடி... பதில் சொல்லு..?”
கோவமாக திரும்பி, “இங்க பாரு பாட்டி, நான் கௌதம தான் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறேன். அவருக்காக உயிரே கொடுப்பேன். என்ன பிரச்சன வந்தாலும் நான் அவர விட்டு கொடுக்க மாட்டேன். என்ன புரிஞ்சுக்கோ பாட்டி.”
“எனத்தடி புரிஞ்சுக்கிறது... உனக்கு அறிவு இருக்கா இல்ல மழுங்கிடுச்சா...? நாம அந்த சிவசங்கர் அய்யா கடைய தான் வாடகைக்கு எடுத்து நடத்துறோம். அதுவும் இல்லாம நமக்கு உதவி தேவை படும் போது நமக்கு கடனும் குடுத்துருக்கார். அவரோட பையனையே அந்த கெளதம் கொன்னுருக்கான். அவனுக்கு நீ உதவி செஞ்சா அது நமக்கு கெடுதல அமையும்டி. உனக்கு ஏன் புரியவே மாட்டேங்குதோ... கடவுளே இவ இப்டி புத்தி தடுமாறி நிக்கிறாலே, நான் என்ன பண்ண..?”
“பாட்டி சும்மா புலம்பாத... கெளதம் கொலை எதுவும் பண்ணல. அப்டியே பண்ணினாலும் நான் அவர் பக்கம் தான் நிப்பேன். சிவசங்கர் அய்யா ஏதாது சொன்னா, செஞ்சா, இல்ல கடைய விடமுடியாதுன்னு சொன்னாலும் சரி எனக்கு கவலையே இல்ல. இத்தனை நாளா கஷ்ட பட்டது உழைச்சது எல்லாம் நாம தான், அந்த கடை இல்ல, அதுனால எங்க போனாலும் நம்ம உழைச்சு சம்பாதிக்கலாம். என்னானாலும் நான் கௌதம தான் கட்டிப்பேன்.”
“அடியே அவனே ஜெயிலுக்குள்ள போய்ட்டான். இனி அவன் வர மாட்டான். நீ அப்டியெல்லாம் கற்பனை பண்ணாத.”
“இன்னும் அவர் தான் கொலை பண்ணாருன்னு உறுதி ஆகல. அதுக்குள்ள அவர நீயே ஜெயிலுக்குள்ள அனுப்பிருவ போல.. போ பாட்டி. அப்டியெல்லாம் ஒன்னும் நடக்காது. எனக்கு நம்பிக்கையை இருக்கு. நல்லவுங்களுக்கு நல்லது தான் நடக்கும்.”
“அந்த சிவசங்கர் ஏதாது பண்ணிட போராருடி, வேணாம் விட்டுருடி..”
“இந்த விசியத்துல நான் உன் பேச்ச கேட்க மாட்டேன் பாட்டி. நீ என்ன விட்டுடு.” என கூறி விட்டு சென்றுவிட்டாள்.

பாட்டி இரவு முழுவதும் அவளுக்கு அறிவுரை கூறி கொண்டே தான் இருந்தார். ஆனால் அவள் அதை காதில் வாங்காமல், நாளை என்ன நடக்குமோ என்ற யோசனையிலே இருந்தாள்.
........
 

MithraPrasath

SM Exclusive
Author
SM Exclusive Author
#3
மறுநாள் காலை போலீஸ் ஸ்டேஷன்ல் இன்ஸ்பெக்டர் கோர்ட்க்கு கொண்டு செல்ல வேண்டிய பைல்களை எடுத்து சரி செய்து கொண்டிருந்தார். கான்ஸ்டபில் ஒருவர் கைதிகளுக்கு சாப்பாடு வாங்கி வந்து கொடுத்து கொண்டிருந்தார். கான்ஸ்டபில் முத்து இன்ஸ்பெக்டரிடம் எதோ காதில் சொல்ல அவர் தனது வேலைகளை அப்படியே விட்டுவிட்டு வெளியே சென்று போன் பேசுகிறார். பேசிவிட்டு உள்ளே வந்தவர் கான்ஸ்டபில் முத்துவை அழைத்தார். இருவரும் ஏதோ ரகசியம் பேசுவது போல் மெதுவாக யாருக்கும் கேகட்காமல் பேசினார்கள். பின் முத்து கெளதமை கூப்பிட்டு தனியாக சென்று பேசினார்.

“இங்க பாருப்பா, இன்னைக்கு கோர்ட்க்கு போகணும். உன்னோட கொலை கேஸ் இன்னைக்கு தான். போயிட்டு உண்மைய நீயா ஒத்துக்கிட்டா நல்லது.” என கூறி கொண்டே இன்ஸ்பெக்டரை பார்த்தார். அவர் பேசு பேசு என்பது போல் தலையை அசைக்கவும்,
“அப்படினா தான் உனக்கு தண்டனை குறையும். இல்லைனா கஷ்டம் தான் உனக்கு.”
“நான் தப்பே பண்ணாம எப்டி ஒத்துக்குறது...”
“நீ பண்ணத பாத்த சாட்சி இருக்கே..”
“ஆனா நான் பண்ணவே இல்ல சார்...”
“நான் உன் நல்லதுக்காக தான் சொன்னேன். அப்பறம் உன் இஷ்டம்.”
“நீங்களும் இன்ஸ்பெக்டர் மாதிரி தப்பாவே என்னை நினைச்சுட்டு இருக்கீங்க... நான் கொலை பண்ணல.”
“சரி போ... போய் சாப்பிட்டு ரெடி ஆகு... கோர்ட்க்கு போகணும்.”
அவன் சென்றதும் கான்ஸ்டபில் இன்ஸ்பெக்டரிடம் வந்தார்.
“என்ன சொன்னான்..?”
“போங்க சார்... எல்லாம் வேஸ்ட்... அவன் கொலை பண்ணலன்னு தான் இப்போவும் சொல்லுறான். அவன் கிட்ட இருந்து எதுவும் வாங்க முடியாது போல.”
“போகட்டும் விடு.. மாட்டாமலா போவான் என்கிட்ட... அப்போ பாத்துக்கேறேன்... நீ போ.. போய் கைதிகள வண்டியில ஏத்து, கிளம்புவோம்.”
“ஓகே சார்.”

கெளதம் மற்றும் இரண்டு கைதிகளை ஏற்றி கொண்டு இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபில் இருவரும் கோர்டிற்கு செல்கின்றனர். அங்கு சௌந்தர்யா மற்றும் நடராஜர் கோர்டிற்கு வந்து விட்டனர். கெளதமை எதிர் பார்த்து சௌந்தர்யா காத்து கிடந்தாள். ஒவ்வொரு வண்டி வரும் போதும் வந்து வந்து பார்த்தாள். ‘இன்னும் வரலையே’ என தனக்குள் புலம்பியும் கொண்டாள்.

போலீஸ் வண்டி கோர்ட்க்குள் நுழைந்தது. சௌந்தர்யா வண்டி வரும் சத்தம் கேட்டு வந்து பார்த்தால், இன்ஸ்பெக்டர் வெளியே வந்ததை பார்த்தவுடன் கெளதம் வந்து விட்டான் என்று அதிக ஆவலுடன் அவனை எதிர் பார்த்தாள். அவன் வண்டியில் இருந்து இறங்கியதும், அவன் முகம் சிறு கலக்கத்தோடு இருப்பதை உணர்த்தியது அவனது நடை. அவள் அவனருகில் சென்றாள். அவளை பார்த்தவுடன் அவனது முகம் மலர்ந்தது. இன்ஸ்பெக்டரிடம் சென்று,
“சார்..”
இன்ஸ்பெக்டர் திரும்பி பார்க்கவும், “சார், நான் அவுங்க கூட போய் பேசலாமா...?”
இருவரையும் ஒரு ஏளன பார்வை பார்த்து விட்டு, “ம்ம்ம்... போ... இங்க கிட்ட தான் இருக்கணும், உள்ள கூப்பிடவும் போகணும்..”
“சரி சார்.”
இருவரும் தனியாக பேச ஒரு ஓரமாக சென்றனர்.
“எப்டி இருக்கீங்க..? போலீஸ் உங்கள அடிச்சாங்களா..?”
“இல்ல, இல்ல.. நீ நினைக்கிற மாதிரி இல்ல. அவுங்க எதுவும் பண்ணல.”
“ம்ம்ம்... அது நம்ம வக்கீல் வச்சுட்டோம்ல அதான்,”
“ஏன் இப்டி சொல்லுற..? அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு..?”
“கேள்வி கேக்குறதுக்கு ஆளு இல்லன்னு தான் அடிப்பாங்க... இப்போ தான் கேள்வி கேக்க வக்கீல் கொண்டு வந்துட்டோம்ல அத தான் சொன்னேன்.”
“ம்கூம்... அப்டி நினைக்காத, அவுங்களுக்கு உண்மைய நம்ம கிட்ட இருந்து வரவழைக்கணும்ன்னு நினைச்சு தான் இப்டி பண்ணுறாங்க, அது தான் அவுங்க வேலையும் கூட..”
“நீங்க ஏன் இப்டி இருக்கீங்க..? அதனால தான் எல்லாரும் உங்கள இப்டி நடத்துறாங்க.. போங்க.. என்னத்த சொல்ல.. சொன்னாலும் ஏதேதோ சொல்லுவீங்க.. உங்கள மாத்தவே முடியாது” என சிலிப்பி கொண்டாள்.
“சரி அத விடு... ஆமா நம்ம வக்கீல் எங்க...?”
“அவரு உள்ள போயிருக்கார்... வரேன்னு சொன்னார்..” என திரும்பி தேட, நடராஜர் வருவது தெரிகிறது.
“அதோ...” என சௌந்தர்யா கை காட்ட, கெளதம் பார்ப்பதற்குள் அவர் அருகில் வந்து விடுகிறார்.
“இங்க பாருங்க அடுத்த ரெண்டு கேசுக்கு அப்பறம் தான் நம்ம கேஸ். வெயிட் பண்ணுங்க.. எப்டியும் அரைமணி நேரத்துல கூப்பிடுவாங்க..”
“சரி சார்...” என இருவரும் தலை அசைத்தனர்.
“நம்ம கேசுல ரெண்டு சாட்சி இருக்காங்க, ம்ம்ம்... பாப்போம்...”
“யாரு சார் அந்த சாட்சி..?” என சௌந்தர்யா கேக்க, அதற்குள் யாரோ நடராஜரை அழைக்க அவர் திரும்பி சென்றார்.
இங்கு ஒரு கான்ஸ்டபில் வந்து கெளதமை கூட்டி சென்றார். திரும்பி வந்த நடராஜர், “எங்க அவன கூட்டிட்டு போயிட்டாங்களா..?”
“ஆமாம் சார். நாமளும் இப்போ உள்ள போகலாமா..?”
“ம்ம்ம்.. போவோம். வாம்மா..”

இருவரும் உள்ளே சென்றனர். கெளதம் வேறு ஒரு புறம் நின்றிருந்தான். அங்கு உள்ளே வேறு கேஸ் நடந்து கொண்டிருக்கிறது. அங்கு வக்கீல் பேசுவதும், மக்கள் பேசுவதும் என சத்தமாக இருந்தது. கெளதம் முகம் மாற தொடங்கியது. அவன் பயப்படுவது கண்களும் முகமும் காட்டி கொடுத்தது. கெளதம் சௌந்தர்யாவை பார்த்தான். அவளும் கலக்கத்தோடு இருந்தாள், இருந்தும் அவனுக்கு ஆறுதலாக, கைகளை நெஞ்சில் வைத்து கண்களை முடி திறந்து நான் இருக்கிறேன் என சைகை செய்தாள். அப்போது சிறு நம்பிக்கை பிறந்தது கெளதமிற்கு.

நடந்து கொண்டிருந்த கேஸ் முடிந்து முருகன் கொலை கேஸ் விசாரணை தொடங்க இருந்தது. கெளதமை கான்ஸ்டபில் கூண்டில் நிற்க வைத்தார். ஆனால் கேஸ் சிறு இடைவேளைக்கு பிறகு தொடங்கும் என்று கூறப்பட்டது. நீதிபதி எழுந்து சென்று விட்டார். உடனே அனைவரும் பேசி கொண்டிருந்தனர். கோர்ட் முழுவதும் கசகச என இருந்தது.

அப்போது சௌந்தர்யா எதர்ச்சியாக திரும்பிய போது சைமன் நிற்ப்பதை கண்டாள். அவளுக்கு உள்ளுக்குள் எரிச்சலாக இருந்தது.
‘இவன் எதுக்கு இங்க வந்தான்...?
இத்தனை நாளா இல்லாத பாசம் இன்னைக்கு எங்க இருந்து வந்துச்சாம்,
பெஸ்ட் ப்ரெண்டு பெஸ்ட் ப்ரெண்டுன்னு சொல்லிட்டு கெளதம்க்கு ஒரு உதவி செய்ய கூட வரல.. இவனெல்லாம் ஒரு நண்பனா..?
ச்சி... எப்டி தான் இப்டி வந்து நிக்க முடியுதோ..?
அவரு கஷ்ட படுறத பாக்குறதுக்கு வந்துருப்பான் போல..
இவன பாக்கவே கூடாது...
இவன் கூட பழகாதீங்கன்னு எத்தன முறை சொல்லிருப்பேன்,
கேட்டாரா.. ம்கூம்...
அவருக்காக மட்டும்மாது பாக்க வந்துருக்கலாம் போலீஸ் ஸ்டேஷன்க்கு
இன்னைக்காது வந்தானே...
அவரு இவன இப்போ பாத்தா கொஞ்சமாது சந்தோஷ படுவாரு..
ஆனாலும் அவருக்கு இப்டி ஒரு சுயநலவாதி ப்ரெண்டு...
எல்லாம் அவர சொல்லணும்..
வந்தது தான் வந்தான் ஒரு வார்த்தை போய் பேசலாம்ல இப்போவாது...
இப்போ பேச விடமாட்டங்களோ,
ம்கூம்... இருந்தாலும் வெளில இருக்கும் போதே வந்து பேசிருக்கலாம்..
ஒரு வேல இப்போ தான் வந்துருப்பானோ..?
என்னம்மோ.. இருந்தாலும் இன்னைக்கோட மூணு நாள் ஆச்சு,
ஒரு நாள் கூட பாக்கவோ பேசவோ வரவே இல்ல..
அதுவும் அன்னைக்கு போலீஸ் ஸ்டேஷன் இருக்க தெருவுல ஒரு டீக்கடை வர தெரிஞ்ச அவனுக்கு அவர் கிட்ட வந்து பேசணும்னு தோணல..
என்ன புலம்பி என்ன பண்ண.. அவர தான் மாத்த முடியுமா...
அவருக்கெல்லாம் நம்ம சொன்னா புரியாது...
ப்ரெண்ட்ஸ் ப்ரெண்ட்ஸ்ன்னு இருந்ததுக்கு இப்போ ஒருத்தன் கூட அவர் கூட இல்ல.’
தன் மனதினுள் சைமனை திட்டி திட்டி தீர்த்தாள்.
 

MithraPrasath

SM Exclusive
Author
SM Exclusive Author
#4
சைமன் முகம் வாடி இருந்தது. அவனும் சோகத்தில் இருப்பது போன்று தான் இருந்தது. கைகளை பிசைந்து கொண்டிருந்தான். அவன் மிக டென்ஷன் ஆக இருப்பது தெளிவாக தெரிந்தது. நெற்றியில் வழிந்த வேர்வையை துடைக்க கூட அவனுக்கு தோன்ற வில்லை.

அரை மணி நேரம் கடந்திருக்கும், நீதிபதி வந்தார். அவரது சீட்டில் அமர்ந்தார். பின்பு நிமிர்ந்து பார்த்து ஸ்டார்ட் பண்ணுங்க என தவாளியிடம் கூறினார். அவர் கேஸ் நம்பர் கூறி விசாரணை தொடங்கும் என்றார்.

நடராஜர் வலது புறமாகவும், அரசு வக்கீல் இடது புறமாகவும் நின்றிருந்தனர். அரசு வக்கீல் வாதத்தை தொடங்கினார்.
“சார், இது ஒரு கொலை கேஸ்...
இறந்து போனது முருகன், அவனோட ப்ரெண்டு தான் இந்த கெளதம்...
கொலை நடந்த அன்று முருகன் கெளதமை தான் பாக்க போறதா சொல்லிட்டு போயிருக்கார்..
கெளதம் வீட்டிற்கு வந்த முருகனுக்கும், கெளதமிர்க்கும் ஏதோ தகராறு ஏற்பட்டிருக்கு சார்..
அதனால முருகன கொன்னுட்டு.. அத மறைக்க கெளதம் முருகனோட பொணத்தை ரோட்டில் எரிந்து ஆக்ஸிடென்ட் ஆக செய்து தப்பிக்க நினைச்சிருக்கிறான் சார்...”

நீதிபதி ஏதோ குறித்து வைக்கிறார்.. இப்போது நடராஜர் பேசுகிறார்,
“நோ சார்.. என்னோட கட்சிகாரர் எந்த கொலையும் செய்ய வில்லை..
ஆக்சிடென்ட் கேசை அவர்கள் கொலை கேசாக மாற்ற நினைக்கிறாங்க சார்..”

நீதிபதி அரசு வக்கீலை பார்த்து,
“அது கொலைன்னு எப்டி சொல்லுறீங்க..? எனிதிங்க் ப்ரூப்...?”
“எஸ் சார்... போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் இருக்கு...” என கூறி இன்ஸ்பெக்டர் பக்கம் திரும்ப, அவர் ரிப்போர்ட்டை தருகிறார். அதை வக்கீல் வாங்கி தந்த உடன் அதை பிரித்து பார்க்கிறார் நீதிபதி.
“போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் படி முருகன் ஆக்சிடென்ட்டால சாகல, அவன யாரோ கத்தியால குத்தி கொன்னுருக்காங்க. இறந்த பின்னாடி தான் ஆக்சிடென்ட் ஆகிருக்குன்னு ரிப்போர்ட் பார்த்தா உங்களுக்கே தெரியும் சார்..”
“எஸ்.. ஓகே கண்டின்யு..”
“சார் நான் இந்த கேஸ் விசாரிக்கிற இன்ஸ்பெக்டரை விசாரிக்கணும்..”
“ம்ம்ம்...”
இன்ஸ்பெக்டர் வந்து கூண்டில் நிற்கிறார். நடராஜர் அவரிடம் சென்று,
“இந்த கேஸ் நீங்க தான விசாரிக்கிறீங்க..?”
“ஆமாம்.”
“உங்களுக்கு அப்போவே தெரியுமா இது கொலை கேசுன்னு..?”
“இல்ல.. எங்களுக்கு ரிப்போர்ட் வந்த பின்னாடி தான் தெரியும்.”
“அப்பறமா எப்டி கெளதம அர்ரெஸ்ட் பண்ணுனீங்க..? ரிப்போர்ட் வர்ரதுக்கு முன்னாடியே..?”

“எங்களுக்கு அன்னைக்கு காலைல ஆக்சிடென்ட்ன்னு தான் கால் வந்தது.
போய் பார்த்தப்ப, அது தலை, கால் நசுங்கி யாருனே அடையாளம் பண்ண முடியாத மாதிரி இருந்துச்சு...
அதே நேரம் ஸ்டேஷன்ல முருகனோட சித்தப்பா முருகன காணோம்ன்னு கம்ப்ளைன்ட் பண்ணிருந்தார்..
மொத நாள் நைட் முருகன், கௌதம பாக்க போறதா சொல்லிட்டு போனவன் இன்னும் வரலன்னு கம்ப்ளைண்ட் பண்ணிருந்தார்...”

“உடனே நீங்க அது முருகன் தான்னு முடிவு பண்ணிட்டீங்களா..?”

“இல்ல இல்ல... டெட் பாடி கைல, முருகன்னு பச்சை குத்திருந்தது...
நாங்க டவுட்ல தான் அவுங்க சித்தப்பாவ வர சொல்லி கன்பார்ம் பண்ண சொன்னோம்..
அவர் தான் கன்பார்ம் பண்ணினார்.. அது தான் முருகன்னு...
அதுவும் கௌதம் வீட்டுக்கு பின்னாடி இருக்க தென்னந்தோப்பு ரோட்ல தான் பொணம் இருந்துச்சு..
அதுனால தான் நாங்க அவன அர்ரெஸ்ட் பண்ணோம்..”

“சரி நீங்க போங்க..” என்று நடராஜர் கூறினார்,

“ஓகே.. முகம் அடையாளம் தெரியலைன்னா, டீன்யே டெஸ்ட் எடுக்க வேண்டியது தான...” என்றார் நீதிபதி.
அரசு வக்கீல் எழுந்து, “இல்ல சார், முருகனுக்கு அப்பா, அம்மா, கூட பிறந்தவுங்கன்னு யாருமே உயிரோட இல்ல. அதான் டெஸ்ட் எடுக்க முடியல சார்.
அதுவும் இல்லாம முருகன் சின்ன வயசுல இருந்தே அவுங்க சித்தப்பா சிவசங்கர் கிட்ட தான் வளர்ந்தான்.
அதுனால அவர் வந்து பாத்து கன்பார்ம் பண்ணினார்.”

“ஓகே.. அப்போ அவர கூப்பிடுங்க.. விசாரிக்க..”

“சார்.. அது வந்து அவரு வந்துட்டு இருக்கார்.”

“இன்னுமா...?”

பேசாமல் நின்றார் அரசு வக்கீல்.
“வேற சாட்சி இருக்கா..?”

“சார்.. நான் முதல் சாட்சி குமாரவேல விசாரிக்கணும்...”
“ஓகே...”

குமாரவேல் கெளதம் வீட்டிற்கு பக்கத்து வீட்டுக்காரர். அவர் வந்து நின்றார்.
“நீங்க தான் குமாரவேலா..?”
“ஆமாங்கய்யா..”
“உங்களுக்கு கௌதம தெரியுமா..?”
“தெரியும்...”
“எப்டி தெரியும்..?”
“கெளதம் என் வீட்டுக்கு அடுத்த வீடு. அப்டி தான் தெரியும், மற்றபடி எனக்கு அவன பத்தி எதுவும் தெரியாது.”

“சரி... அன்னைக்கு என்ன நடந்தது...?”
“அய்யா அன்னைக்கு நைட் ரெண்டு மணிக்கு மேல இருக்கும், கெளதம் வீட்டுல இருந்து ஒரே சத்தமா இருந்துச்சு..”
“சத்தம்னா எப்டி..?”

“ஏதோ சண்ட போடுற மாதிரி இருந்துச்சு..
ஆனா எனக்கு என்னன்னு தெளிவா கேக்கல...
ரொம்ப நேரமா மாத்தி மாத்தி சத்தம் வந்த்துட்டே இருந்துச்சு,
குழந்தை துக்கத்துல இருந்து எழுந்து அழுக ஆரம்பிச்சுட்டா,
அதுனால தான் நான் போய் அவன் கிட்ட சொல்லலாம்ன்னு நினைச்சு வெளில வந்தேன்.
அவன் வீட்டுக்கிட்ட போனேன், அப்போ தான் உள்ள இருந்து முருகன் வேகமா வெளில வந்தான்.
அவன் பின்னாடியே தொடர்ந்து கெளதம் வந்தான்...”

“நைட்ல கூட அது முருகன் தான்ன்னு உங்களுக்கு எப்டி தெரிஞ்சது..?”
“கெளதம் வீட்டுல லைட் எறிஞ்சுட்டு இருந்தது, அதுல அவுங்க நல்லாவே தெரிஞ்சாங்க.
கெளதம் முருகன நில்லு, நில்லுன்னு சொல்லிட்டு இருந்தான்,
முருகன் என்ன விட்டுடு, விட்டுடுன்னு... அவன் வேகமாக பின்னாடி தென்னந்தோப்புக்குள்ள ஓடுனான்..
கெளதமும் ஓடினான்..
அவ்ளோ தான் அய்யா நான் பாத்தேன்.”

“சார்... இவர் சொன்னதுல இருந்தே முருகன் நைட் கௌதம பாக்க வந்துருக்கான், ரெண்டு பேருக்கும் சண்ட வந்ததும், முருகன கெளதம் தொறத்திட்டு போனதும் தெளிவா தெரியுது.
அதுவும் இல்லாம கொலை மூணு மணில இருந்து மூணு முப்பதுக்குள்ள நடந்திருக்கலாம்ன்னு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல இருக்கு.”

“ம்ம்ம்... நீங்க ஏதாது விசாரிக்கனுமா சாட்சிய..?” என்று நீதிபதி நடராஜரை கேக்கிறார்.

“எஸ் சார்...” என்று கூறி கூண்டிற்கு அருகில் சென்றார்.
“உங்களுக்கு முருகன தெரியுமா..?”
“தெரியும் அய்யா.”
“எப்டி..?”
“நான் சிவசங்கர் அய்யா கிட்ட தான் கொஞ்ச நாள் வேல பாத்தேன்.
அதுவும் இல்லாம கெளதம் வீட்டுக்கு முருகன் அடிக்கடி வர்றத பாத்துருக்கேன், அதனால எனக்கு தெரியும் முருகன..”
“ஓகே.. அவுங்க ரெண்டு பேரும் சண்ட தான் போட்டாங்கன்னு எப்டி சொல்லுற..?”
“அது அய்யா... ரொம்ப சத்தமா இருந்துச்சு..
ஏதோ ஏன் இப்டி பண்ண, சொல்லு சொல்லுன்னு பேசுற மாதிரி கேட்டுச்சு..”
“சரி. நீங்க போங்க.”
“சார், அடுத்த சாட்சி அதுவும், முக்கியமான சாட்சி விசாரிக்கணும்.”
“ம்ம்ம்.. கூப்பிடுங்க...”
தவாளி “ சைமன், சைமன்...”என்று கூப்பிட,

அது நம்ம சைமனா என குழப்பத்தோடு இருந்தான் கெளதம். சைமன் மெதுவாக எழுந்து வந்து கூண்டில் ஏறி நின்றான். அதிர்ச்சியில் உறைந்து விட்டான் கெளதம்....
 

Sponsored

Latest Episodes

Advertisements

New threads

Top