• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Maranathin Marmam - 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
அத்தியாயம் 5

கான்ஸ்டபில் முத்து போன் பேசி முடித்து விட்டு உள்ளே செல்கிறார். ஏதோ யோசனையோடு இருந்தார். பின் மெதுவாக எழுந்து, சுற்றி சுற்றி பார்த்து கொண்டே, கையில் கம்பை எடுத்து கொண்டு கெளதமை நோக்கி செல்கிறார். அவன் அசதியில் கண்களை மூடி சுவற்றில் சாய்ந்திருந்தான். சாப்பிடாமல் இருந்ததால் பசி மயக்கம் கண்களை திறக்க முடியாமல் அவனை தூக்கத்திற்கு தள்ளியிருந்தது. கெளதமை நோக்கி கான்ஸ்டபில் வந்தார். அவன் அசதியில் இருந்ததால் கான்ஸ்டபில் வருவது தெரிய வில்லை. முத்து கெளதம் தோளை தொட சென்றார், அதற்குள் டெலிபோன் ஒலித்தது. முத்து திரும்பி பார்த்தார். கெளதம் அப்போதும் கண் திறக்க வில்லை. கான்ஸ்டபில் சென்று கால் அட்டென்ட் செய்கிறார்.

“ஹலோ...”

எதிர்முனையில் இன்ஸ்பெக்டர் பேசுகிறார், “முத்து நான் இன்ஸ்பெக்டர்... நீங்க இப்போ கலெக்டர் ஆபீஸ்க்கு வாங்க...”

“சார், இங்க ஸ்டேஷன்ல யாராது இருக்கணும்ல...”

“எனக்கு தெரியும். நான் கான்ஸ்டபில் ரகு அனுப்பியிருக்கேன், அவன் வரவும் நீங்க இங்க வந்துருங்க...”

“சார்.. அது வந்து...”

“அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம், நீங்க சீக்கிரம் வாங்க...”

இன்ஸ்பெக்டர் உடனே கால் கட் செய்து விட்டார். எரிச்சலுடன் திரும்பினார் முத்து. ‘ரகு வர்றதுக்குள்ள நம்ம போய் பண்ணிடலாம்’ என்று மனதினுள் நினைத்து கொண்டு கெளதம் நோக்கி சென்றார் முத்து. உள்ளே சென்று கெளதமை தட்டி எழுப்பினார். அவன் கண் விளித்து பார்க்கவும்,

“எழுந்திரு... உன் கிட்ட விசாரணை பண்ணனும்..”

எழுந்திருக்க முடியாமல் தட்டு தடு மாறி எழுந்தான், “ம்ம்ம்.. கேளுங்க சார்... என்ன..?”

அதற்குள் ஸ்டேஷனுள் நுழைந்த கான்ஸ்டபில் ரகு, இவர்கள் இருக்கும் செல்லுக்குள் வருகிறார். அவனை பார்த்ததும் முத்து திரும்பி பார்த்தார். உள்ளுக்குள் எரிச்சலடைந்தார். பின் கெளதமை பார்த்து,

“உன்ன அப்பறம் வந்து விசாரிக்கிறேன்.” என்று கூறி விட்டு வெளியே சென்றார்.

“சார் என்னாச்சு..? அவன் என்ன பண்ணான்..?” என்று ரகு கேக்க,

முத்து பதில் எதுவும் பேசாமல் அவரது இடத்திருக்கு சென்றார். அவரது தொப்பியையும், செல் போனையும் எடுத்து கொண்டு திரும்பினார். பின் ரகுவை பார்த்து,

“கவனமா பாத்துக்கோ..”

“ம்ம்ம்.. ஓகே சார்.” என்று ரகு பதிலளிக்கவும், முத்து வெளியேறி சென்றுவிட்டார்.

...

இரண்டு நாள் கழிந்தது. அன்று காலை வக்கீல் நடராஜர் கெளதமை பார்க்க வருகிறார். சௌந்தர்யா உடன் வரவில்லை. ஸ்டேஷன் வந்து இன்ஸ்பெக்டரிடம் பேசி விட்டு, கெளதமை பார்க்க வருகிறார். நேற்றே சௌந்தர்யா வக்கீல் வருவார் என்று கூறி இருந்ததால், வக்கீலை எதிர் பார்த்து கொண்டிருந்த கெளதம் அவரை பார்த்து எதிர் பார்ப்புடன், எழுந்து வந்து நின்றான். அவனுக்கு அருகில் வந்த நடராஜர்,

“உன் கிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம் கேக்கணும் அதான் வந்தேன். நான் வர போறது உனக்கு ஏற்கனவே தெரியுமா..?!”

“ஆமாம் சார்... சௌந்தர்யா சொன்னா. என்ன கேக்கணும் சார்... சொல்லுங்க.”

“அது வந்து... நீ நிஜமாவே கொலை பண்ணலைல..?” என்று தலையை சாய்த்து கண்களை சுருக்கி சந்தேகத்துடன் கேட்டார்.

“ஏன் சார், எப்போ பாரு இப்டியே கேக்குறீங்க..?”

“நீ சொல்லுப்பா..” என்று பிடிவாதமாக அவரது கேள்வியிலே இருந்தார்.

“இல்ல” என்று கூறி குனிந்து கொண்டான்.

“ம்ம்ம்... அது உண்மையா இருந்தா ஓகே தான். நீ அன்னைக்கு என்ன நடந்ததுன்னு தெளிவா சொன்னா நல்லது.”

“சார்.. முருகன் வந்து என்கிட்டே வருத்த பட்டு பேசினான். அப்பறம் போய்ட்டான். நான் அவன சமாதன படுத்த பின்னாடியே போனேன். அவன் ரோட கடந்து போய்ட்டான். நானும் போனேன். ஆனா அவன அங்க காணோம். திடீர்ன்னு ஏதோ சத்தம் கேட்டது. நான் போய் பார்த்தேன். ரோட்டுல யாரோ கிடந்தாங்க. நான் ஒருவேள முருகனோ அப்டின்னு நினைச்சு பயந்து வேகமா போய் பக்கத்துல உக்காந்து பார்த்தேன். ஆனா அது முகம் சிதைந்து போய் இருந்துச்சு. எனக்கு யாருன்னு தெரியல, ஒன்னும் புரியவும் இல்ல, நான் திரும்பி வந்துட்டேன். அவ்ளோ தான் சார் நடந்துச்சு.”

“ம்ம்ம்.... ஓகே, இப்போ புரியுது. இது போதும் நான் பாத்துக்கிறேன்.”

“சார்.. நான் அன்னைக்கு கொலை எதுவும் பண்ணல.”

கெளதம் சொன்னதை கேட்காமல் அவர் மேலும் கேள்வியை கேட்டார்.“ம்ம்ம்... அப்பறமா இன்னொன்னு கேக்கணும்... நீ அன்னைக்கு சைமன பாத்தியா..?”

“அது...” புருவங்கள் சுருங்கி பின் விரிந்து அவன் யோசிப்பதை காட்டியது. “இல்லையே சார்..”

“நீ நல்ல யோசிச்சு சொல்லு.”

“ம்ம்ம்..?!” மறுபடியும் யோசிக்கிறான். “பாத்த மாதிரி ஞாபகம் இல்ல சார்..”

“ஓகே... சைமன பத்தி நீ என்ன நினைக்கிற..?” கெளதம் புரியாமல் விழிக்க, “அது வந்து, அவன் உண்மைய தான் சொல்லுறானா.. இல்ல யாருக்கும் உதவி பண்ணுறானா?”

“சார்.. அவன் ரொம்ப நல்லவன்.”

“நல்லவன் எல்லாம் நல்லவனாவே இருக்க மாட்டான்பா எல்லா நேரத்துலையும்..”

“அப்டி பேசாதீங்க சார்.. அவன் நிஜமாவே எந்த தப்புக்கும் துணை போக மாட்டான்.”

“அது சரி, ஒரு வேல அவன் வேற யாருக்காது பயந்து இப்டி கூட பண்ணுறானோ என்னவோ..? நீ என்ன நினைக்கிற..? உனக்கு யார் மீதாது சந்தேகம் இருக்கா..?”

“சார்.. எனக்கு அத பத்தி எதுவும் தெரியல.. நீங்க சொன்ன மாதிரி சைமன் பயந்து இப்டி பண்ணுறானானு தெரியல..”

“உனக்கு எதிரி யாராது இருக்காங்களா?”

“இல்லையே சார்... எனக்கு எல்லாம் யார் எதிரியா இருக்க போறாங்க..?!”

“அப்போ முருகனுக்கு எதிரி யாரும் இருக்காங்களா..?”

“எனக்கு தெரிஞ்சு யாரும் இல்ல சார்..”

எரிச்சல் பட்டு கொண்டே, ‘ம்ம்... எத கேட்டாலும் தெரியாது.. எதுவும் புரியாது, இந்த மாதிரி ஏமாளியா இருந்தா யாரா இருந்தாலும் ஏமாத்து வாங்க... என்ன பண்ண, இவனுக்கு எல்லாம் நாம வாதாட வேண்டியதா இருக்கு.’ என்று மனதினுள் அவனை திட்டவும் செய்தார்.

“சரி போதும் நான் இப்போ கிளம்புறேன், வேற ஏதாது வேணும்ன்னா கேக்க வர்றேன்.. போயிட்டு வர்றேன்.”

“சரி சார்..”

திரும்பியவர் ஏதோ யோசித்து நிற்கிறார். மீண்டும் அவன் அருகில் வந்து, “அப்பறம் இன்னொன்னு, அந்த பொண்ண வந்து நீ பீஸ் கட்ட சொல்லு.. அப்போ தான் நான் கேஸ் நடத்த முடியும்.”

நடராஜர் பேசி விட்டு கிளம்பிவிட்டார். கெளதம் பேசாமல் நின்றான். அவனுக்கு கஷ்டமாக இருந்தது. சௌந்தர்யாவை நாம் இப்படி கஷ்ட படுத்துறோம், அவள் பீஸ் கட்ட என்ன செய்வாள், எங்கு கடன் வாங்கி எவ்ளோ கஷ்ட படுவாளோ என்று எண்ணி வருத்த பட்டான். பின் வக்கீல் சொன்னதை நினைத்து பார்த்தான். ‘சைமன் எப்போ அங்கு வந்திருப்பான், இல்ல ஒரு வேல அவர் சொல்லுற மாதிரி யாருக்காது பயந்து பண்ணுறானா..? ஒண்ணுமே புரியல... எல்லாம் நல்லதுக்கு தான் நடக்கும்... கடவுள் இருப்பார் நமக்கு... அது போதும்.’ மனதினுள் தனக்கு தானே சமாதனம் செய்து கொண்டான்.

வெளியே வந்த நடராஜர் நேராக சைமனை சந்திக்க செல்கிறார். அவனை பற்றி விசாரித்து தெரிந்து கொள்ள முடிவு எடுக்கிறார். சைமன் வீட்டிற்கு அருகில் சென்றவர் அவன் வீட்டை விட்டு அப்போது தான் வெளியேறுவதை பார்க்கிறார். சென்று அவனிடம் விசாரிக்க வேகமாக நடக்க, அதற்குள் சைமன் சென்று விட்டான். வயதான நடராஜரால் அவனது வேக நடைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. முச்சு வாங்க ஒரு இடத்தில் நின்று, யோசித்தார். சைமன் நாம் கேட்கும் கேள்விக்கு பதில் தருவானா, இல்லை மறைத்து பேசுவானா என்ற சந்தேகம் எழுந்தது. பின் அங்கு இருக்கும் மற்றவர்களிடம் விசாரித்து பார்க்கலாம் என்று எண்ணி, மெதுவாக நடந்து அவனது வீட்டிற்கு அருகில் இருக்கும் வீட்டிற்கு செல்கிறார்.

அந்த வீட்டின் கதவை தட்டுகிறார். கதவு வெகு நேரம் ஆகியும் திறக்கவில்லை. பின் எதிர் புறம் இருக்கும் வீட்டிற்கு சென்று கதவை தட்டுகிறார். கதவு திறக்க படுகிறது. உள்ளிருந்து ஒரு பெண் வருகிறார். அந்த பெண் நடராஜரை யார் என்று கேக்க, அவர் தன்னை பற்றி கூறி, பின் சைமனை பற்றி விசாரிக்கிறார். அந்த பெண் எனக்கு எதுவும் தெரியாது, நான் அவர்களுடன் பேசுவது இல்லை, நீங்கள் வேறு யார் கிட்டவாது சென்று விசாரிங்க என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார். பின் வேறு ஒரு வீட்டிற்கு சென்று விசாரிக்கிறார். அவர்களும் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூற, அவரது இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது என்று நினைத்து கொண்டு கிளம்பி விட்டார். ‘இன்னைக்கு நாளே வேஸ்ட்’ என்று தனக்குள்ளே கூறி கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

இரண்டு நாள் கழிந்தது. நடராஜர் சுந்தரியிடமும் சௌந்தர்யாவை பீஸ் வந்து கட்ட சொல்லி ஏற்கனவே அனுப்பியிருந்தார். எப்படி பீஸ் கட்டுவது என்று குழம்பி கொண்டிருந்தாள் அவள். கெளதமை இரண்டு நாளாக வேலை அதிகமாக இருந்தால் வந்து பார்க்கவில்லை என்றும் வருத்த பட்டு கொண்டிருந்தாள். இன்று கெளதமை சென்று பார்த்தே ஆக வேண்டும் என்று எண்ணியிருந்தாள். ஸ்டேஷன் வருகிறாள். அவள் ஸ்டேஷன் வரும் போது, இன்ஸ்பெக்டர் அங்கு இல்லை. கான்ஸ்டபில் முத்து மற்றும் ஒரு கான்ஸ்டபில் இருக்கின்றனர்.

கெளதம் சௌந்தர்யாவை பார்த்ததும் சந்தோசம் அடைந்தான். அவனுக்கு இருக்கும் ஒரு ஆறுதல் அவள் மட்டும் தான். அவளிடம் வக்கீல் நடராஜர் கூறியதை கூறுகிறான். சௌந்தர்யாவும் நடராஜர் சுந்தரியிடமும் பீஸ் கட்ட சொல்லி அனுப்பியதை கூறுகிறாள். இருவரும் பேசாமல் சிறிது நேரம் யோசனையில் அமைதியாக இருக்கின்றனர். பின் கெளதம்

“நீ எப்படி பீஸ் கட்ட போற..?!” என்று மெதுவாக சோகத்தோடு கேட்கிறான்.

“அத தான் யோசிச்சுட்டு இருக்கேன். நீங்க எதுக்கும் கவலை படாதீங்க.” என்று அவனை சமாதன படுத்த கூறுகிறாள், ஆனால் அவளது முகமே அவளது நிலைமையை காட்டி கொடுத்தது. அவள் பணத்திற்காக அலைவது, வேலைகள் அதிகமாக செய்வது என்று சோர்ந்து போய், கண்கள் சிவந்து சரியாக தூக்கமில்லாமல் இருப்பது தெரிந்தது. அவளது சௌந்தர்யமே காணாமல் போய் இருந்தது. கெளதமிற்கு சௌந்தர்யாவின் நிலை மனசில் சிறு சந்தேகத்தை ஏற்படுத்தியது. வக்கீல் பீஸ் அதிகமாக இருக்கு, அதை கட்ட அவள் வேலை அதிகமாக செய்து கஷ்ட படுகிறாள் என்பது புரிந்தது.

“நீ ரொம்பல்லாம் கஷ்டபடாத, எனக்கு தலை எழுத்து எப்டி இருக்கோ அப்டியே நடக்கட்டும், நீ விட்டுரு..,” என்று முகத்தை வேறு புறம் திருப்பி கொண்டு வருத்த பட்டு பேசினான்.

“இங்க பாருங்க...” என்று அவனை கூர்ந்து பார்த்தால்

அவன் பார்க்கவும், “நான் எந்த கஷ்டமும் படல, நீங்க என்ன நினைச்சு இப்டி வருத்த படாதீங்க...”

“இருந்தாலும் என்னால உனக்கு எவ்ளோ கஷ்டம்..?!” என்று அவன் வருத்த பட்டு பேச,

“உங்களுக்காக கஷ்ட படுறதுல நான் ரொம்ப சந்தோஷ படுறேன், உங்கள போல ஒருத்தர் கிடைச்சதுக்கு நான் ரொம்ப குடுத்து வச்சுருக்கனும். நீங்க எப்டி பட்ட நல்லவர்ன்னு எனக்கு நல்லாவே தெரியும். உங்கள நான் வாழ்கையில துணையா அடைய போறேன்னு நினைச்சாலே எனக்குள்ள ஏற்படுற சந்தோசத்துக்கு அளவே இல்ல.”

“நீ என்னதான் சொன்னாலும் நான் உனக்கு சந்தோசத்த கொடுக்கல, நான் அதுக்கு பதிலா கஷ்டத்த தான் கொடுத்துருக்கேன். என்ன கல்யாணம் பண்ணுறதுக்கு முன்னாடியே இப்டி கஷ்ட படுறியே நீ.. எனக்கு அது தான் கஷ்டமா இருக்கு... நான் இதுக்கு எல்லாம் என்ன கைமாறு பண்ணுறதோ... ”
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
“நீங்க ஏன் இப்டி பேசுறீங்க.. நான் உங்கள கல்யாணம் பண்ண பின்னாடி இப்டி பண்ண தான் நீங்க ஏத்துப்பீங்களா...?! நான் என்னைக்கு உங்கள மனசுல நினைச்சேனோ அப்போ இருந்தே நீங்க தான் என்னோட உலகமே, உங்களுக்கு ஒன்னுனா அது எனக்கும் தான்... கல்யாணம், உறவு அதெல்லாம் இந்த உலகத்துக்கு தெரியபடுத்துறதுக்காக தான் பண்ணுறது, மற்றபடி நீங்க என்னைக்கு என்னோட மனசுக்குல வந்தீங்களோ அப்போ இருந்தே நீங்க என்னோட கணவர் தான். என்னோட உயிரே இப்போ நீங்க தான்... உங்கள நான் பிரிஞ்சா அது என்னோட இறப்புல தான் நடக்கும். உங்களுக்காக நான் எதுவுமே செய்யுவேன்.”

இதுநாள் வரை சொல்லாத காதல், இந்த பிரச்சனை வந்த பின்னாடி தான் இவர்கள் இரண்டு பேரும் வெளிபடுத்தி உள்ளனர். இன்று சௌந்தர்யா கெளதமை தன்னை கணவன் என்று கூறியது அவனுக்கு அளவில்லாத மகிழ்ச்சியை தந்தது. அவன் அவளது கண்களை பார்த்தே நின்றிந்தான்.

‘ஆயிரம் கூடி ஜென்மம் எடுத்தாலும் உன்னோடு தான் நான் வாழ வேண்டும். இனி என்னோட வாழ்வும் உன்னோடு தான்... உன்னை நான் இனி எந்த கஷ்டமும் பட விடமாட்டேன்... உனக்காக நான் உயிரை கூட தருவேன்.., இல்ல நான் உன் கூட வாழ்ந்து உனக்கு எல்லா சந்தோசத்தையும் குடுப்பேன்.. இனி உனக்காக நான் வாழ்வேன்.’ என்று மனதினுள் நினைத்து கொண்டான்.

“நான் உனக்காகவாது இந்த கேஸ்ல இருந்து எந்த பிரச்சனயும் இல்லாம வெளில வரனும்... நீ என்னை பத்தி கவலை படாத... இனி நான் எதுக்காகவும் கவலை பட மாட்டேன். உனக்காக நான் வருவேன்...”

“ம்ம்ம்...” என்று முகம் முழுவதும் சிவக்க சிரித்தாள். அவளது கண்களில் சிரிப்பில், முகத்தில் அனைத்திலும் சந்தோசம் வெளிப்பட்டது. அவள் அழகு பதுமையை போல் ஜொலித்தாள். அவளை பார்த்த கெளதமின் கண்கள் காதல் நவரசத்தை பொழிந்தது. இருவரும் போலீஸ் ஸ்டேஷன் என்பதை மறந்து, அருகில் இருப்பவரை காணாமல் இவ்வுலகையே காதல் லோகமாக மாற்றினர்.

இன்ஸ்பெக்டர் இல்லாததால், அருகில் இருந்த கைதி ஒருவன் இவர்களை பார்த்து, மற்றவனிடம் “இவுங்க இரண்டு பேரையும் பாரேன்... நல்லாவே இருக்கு இதுக போடுற சீனு... என்ன இத்தன நாளா சோகமா இருந்துச்சு, இன்னைக்கு ஒரே ரொமான்சா இருக்கு... நல்லாவே இருக்கு இது எல்லாம் பாக்க...” என்று சிரித்து, கேலி செய்து பேசுகின்றனர்.

அவர்கள் பேசியது, கான்ஸ்டபில் முத்து காதில் விழ, அவர் என்ன என்று பார்க்க எழுந்து வருகிறார். அவர் வந்து பார்க்கும் போது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு, சுற்றி நடப்பதை அறியாமல் நிற்பதை பார்த்து கோபத்தின் உச்சத்திற்கு சென்றார். அவரது முகம் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் அளவிற்கு சூடாய் இருந்தது.

கம்பை எடுத்து செல் கம்பியில் ஒரு தட்டு தட்டினார். இருவரும் அதிர்ந்து போய் விட்டனர். அதிலும் சௌந்தர்யா மிகவும் பயந்தே போய் விட்டாள். அந்த மற்றொரு கான்ஸ்டபிலும் எழுந்து வந்து பார்த்தார். அவளது கண்கள் பயத்தில் கலங்கி போய் விட்டது. மறுபடியும் கம்பை ஓங்கினார் சௌந்தர்யாவை பார்த்து, அவள் வேகமாக விலகி சென்றாள். கெளதம் உடனே “சார்..?!” என சத்தமாக கத்த,

“ஏய்...!? என்ன...?” என்று கோபமாக கெளதமை நோக்கி கம்பை தூக்கி ஏறிய, அது செல் கம்பி மேல் பட்டு கீழே விழுகிறது.

இதுவரை கோபமே படாத கௌதம் இன்று முத்துவை பார்த்து கோபத்தில், “என்ன சார்... அடிக்க வர்றீங்க..? விட்ட அடிப்பீங்க போல.. என்ன அடிங்க..ஆனா அவள அடிச்சீங்க... அப்பறமா நான் என்ன பண்ணுவேன்னு...” என்று பேச வந்ததை பாதியில் நிறுத்த,

“சொல்லுடா... ஏன் நிறுத்தின...? திமிரெடுத்த நாயே..! உனக்கும் அவளுக்கும் எவ்ளோ திமிரு இருந்தா இப்டி பண்ணுவீங்க..? இது என்ன உன் வீடா இல்ல ஸ்டேஷனா, விட்டா இத லாட்ஜ் ஆக்கிருவீங்க போல..”

கான்ஸ்டபில் கூறிய வார்த்தை சௌந்தர்யாவை கத்தியை போன்ற கூர்மையான ஆயுதமாக, கொன்று விடும் அளவுக்கு குத்தியது. அவளது கண்கள் கண்ணீரை கொட்டியது. நிமிர்ந்து மற்றவரை பார்க்க முடியாமல் வெட்கி போனாள். தனது மானமே இன்று போய்விட்டது என்று எண்ணி அவளது மனம் உடைந்து தலை குனிந்து விட்டாள்.

முத்து கெளதமை திட்டி கொண்டு இருந்தார். ஆனால் அவன் சௌந்தர்யாவை பார்த்து கொண்டு வருந்தி கொண்டிருந்தான். அவளிடம் பேச முடியாமல் இந்த அவமானத்தை அவள் எப்டி எடுத்து கொள்ளுவாள் என்று நினைத்து வருந்தினான். அப்போது கான்ஸ்டபில் சௌந்தர்யா புறம் திரும்பி,

“இன்னுமா நீ நிக்கிற... உனக்கெல்லாம் அறிவேயில்லையா... என்ன பொண்ணு நீ, கிளம்பு... கொஞ்சம் விட்ட இங்கயே அசிங்கம் பண்ணுவீங்க போல... இனி நீ இங்க வந்த.., பாத்துக்கோ அப்பறம் என்ன பண்ணுவேன்னு தெரியாது.” என்று கூற, கெளதமை கூட பார்க்காமல் சௌந்தர்யா அழுது கொண்டே ஓடிவிட்டாள்.

சௌந்தர்யா அழுது கொண்டே சென்றதை பார்த்த கெளதம் மனம் கொந்தளித்தது. இப்போது தான் அவளுக்கு எந்த கஷ்டமும் வர விடமாட்டேன் என்று கூறிய சிறிது நேரத்தில் அவளுக்கு இப்படி ஒரு அவுமானத்தை நாமே தந்து விட்டோம் என்று எண்ணி தன்னையே நொந்து கொண்டான். அவளை இப்படி தரக்குறைவாக பேசி முத்து பெரிய வெறுப்பை சம்பாதித்தார் கெளதமிடம். இதுவரை போலீஸ் என்று அவன் மரியாதை கொடுத்து வந்தான் அது இன்றிலிருந்து மொத்தமாக மாறி போய் அவர் மேல் கோபம், வெறுப்பு எல்லாம் வந்தது.

கான்ஸ்டபில் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அவனை கோபத்தின் உச்சிக்கு செல்ல வைத்தது. முத்து சென்று அவரது சீட்டில் அமர்ந்தார். இருந்தும் கெளதமை திட்டி கொண்டு இருந்தார். இடைஇடையே சௌந்தர்யாவையும் திட்டினார். கோபம் பொறுக்க முடியாமல் கெளதம் எதிர்த்து பேச ஆரம்பித்தான்.

“அவ எல்லாம் என்ன பொண்ணோ... எப்ப பாரு இங்க வந்துட்டு...

ஒரு கொலைகாரன தேடி வர்றா... இவ எல்லாம் எப்டி நல்லவளா இருப்பா...?!”

“சார்... பாத்து பேசுங்க... இல்ல அப்பறம்...” என்று முறைத்து பார்த்தான்.

உடனே “என்ன...?!?! நானும் பாத்துட்டே இருக்கேன்... என்னையே நீ மிரட்டுறியா...” என்று வேகமாக முத்து எழுந்து சென்று கீழே கிடந்த கம்பை எடுத்து கெளதமை அடிக்க செல்லுகிறார். கெளதம் தைரியமாக நிற்கிறான். முத்து அடிக்க அடிக்க அவன் அடியை வாங்கி கொண்டு வலிக்காதது போன்று இருந்தான். அது முத்துவிற்கு கோபத்தை மேலும் தூண்ட, அடுத்து விழும் அடி எல்லாம் அவனை ரத்தம் வரும் அளவிற்கு காயபடுத்தியது. அப்போதும் கெளதம் “எப்படி அடிச்சாலும் எனக்கு வலிக்காது... நீங்க தான் அடிச்சு கஷ்ட பட போறீங்க..” என்று முத்துவை எதிர்த்து பேசி கொண்டிருந்தான்.

கெளதமிற்கு காலில் இருந்து ரத்தம் வருவதை பார்த்த அந்த மற்றொரு கான்ஸ்டபில் தடுமாறி நிக்க, அதற்குள் இன்ஸ்பெக்டர் வந்துவிடுகிறார். இன்ஸ்பெக்டர் ஸ்டேஷன் உள்ளே வந்ததும், முத்து கெளதமை முரட்டுத்தனமாக அடிப்பதையும், அதனால் அவனுக்கு ரத்தம் வருவதையும் பார்த்து திகைத்து விட்டார். முத்துவோ இன்ஸ்பெக்டர் வந்ததை கூட பார்க்காமல் அடித்து கொண்டே இருந்தார்.

“முத்து... முத்து...” என்று இன்ஸ்பெக்டர் சத்தமாக அழைப்பதை கேட்டதும், முத்து அடிப்பதை நிறுத்தி விட்டு திரும்பி பார்க்கிறார். இன்ஸ்பெக்டர் நிற்பதை பார்த்து அவரிடம் செல்லுகிறார்.

“என்ன...?! எதுக்கு அடிக்கிறீங்க..?” என்று கேக்க,

“சார்.. ரொம்ப அதிகமா பண்ணுறான் சார்..” என்றார் எரிச்சலோடு

“போதும், போதும்...” என்று கையசைக்கிறார். பின் அந்த மற்றொரு கான்ஸ்டபில் அவரது வேலையே சென்று பார்க்க தொடங்கினார். அவர் சென்ற பின் இன்ஸ்பெக்டர் முத்துவை நோக்கி வெளியே வருமாறு கண்ணசைக்கிறார். வெளியே சென்று இருவரும் பேசுகின்றனர்.

“என்ன முத்து...?! இப்படி பண்ணிட்டீங்க, அவனுக்கு ரத்தம் வர அளவுக்கா அடிக்கிறது..?” என்று அதிகார தோரணையில் மிரட்டி பேசினார்.

“சார்.. அவன் என்ன பண்ணிட்டு இருந்தான் தெரியுமா.. நீங்க மட்டும் அத பார்த்து இருந்தா நீங்களே அடிக்க சொல்லிருப்பீங்க..”

“என்ன தான் பண்ணான்..”

“அந்த பொண்ணு பாக்க வந்துச்சு சார், கொஞ்ச நேரத்துல பாத்தா ரெண்டும் ஸ்டேஷன்லையே லவ் பண்ணிட்டு இருக்கு ஏதோ லாட்ஜ்ன்னு நினைச்சுருச்சுக போல... அத தான் கேட்டு திட்டினேன், அதுக்கு என்னையே எதிர்க்கிறான். அதான் அடிச்சேன்...”

“அதெல்லாம் சரி, அதுக்காக நீ இப்டியா ரத்தம் வர்ற மாதிரி அடிக்கிறது... இதெல்லாம் சரி இல்ல... இது நமக்கு தான் எதிர போய் அமையும் அது கூட உனக்கு தெரியாதா..?! என்ன நீ..?” என்று வேறு புறம் திரும்பி முகம் சுளித்து கொண்டே முத்துவை இன்ஸ்பெக்டர் கண்டித்து பேசினார்.

“இல்ல அது வந்து... நான் இப்டி ஏதாவது பண்ணினாவாது அவன பேச வைக்கலாம்ன்னு நினைச்சேன்... ஆனா அவன் சரியான கல்லுரிமங்கணா இருக்கான்... என்ன பண்ணன்னு தெரியல...”

“நீ யாரு சொல்லி இத பண்ணின அப்டின்னு எனக்கு நல்லாவே தெரியும், நீ சும்மா நடிக்காத..” என்று இலக்காரமாக பேசினார். அதற்கு மேல் எதுவும் பேசி மழுப்பாமல், நேரடியாக பேசினார் முத்து.

“நான் அவரு சொன்னாருன்னு தான் சார் அப்டி பண்ணேன்... ஆனா இதுல இப்டி ஒரு பிரச்சன இருக்கும்ன்னு நினைக்கல... சாரி சார்.. இனி நான் கவனமா இருக்கேன்.”

“அவரு அப்டி தான் எதுனாலும் சொல்லுவாரு.. அதுக்கு நீ இப்டி பண்ணலாமா.. நீ என்கிட்டே எதுவும் கேக்க மாட்டியா... போ.. போய் வேலைய பாரு.. அவரு ஏதாது சொன்ன சரி, சரின்னு மண்டையா ஆட்டிட்டு பண்ணுறத கவனமா பாரு.. அது தான் நமக்கு நல்லது. இல்ல..! அப்பறம் ஏதாது பிரச்சனை ஆச்சுன்னா நான் உன்ன காப்பாத்த வர மாட்டேன்.”

“சாரி சார்.. இனி எதுனாலும் உங்க கிட்ட கேட்டுட்டு பண்ணுறேன். நான் போய் வேலைய பாக்குறேன் சார்...” என்று பேசி விட்டு அவர் பதிலுக்கு எதிர்பார்க்காமல் தப்பித்தது போல் உள்ளே சென்று விட்டார் முத்து.
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
இங்கே சௌந்தர்யா அழுது கொண்டே வீட்டிற்கு வந்தாள். பாட்டி தூங்கி கொண்டு இருந்ததால், தான் பட்ட அவமானத்தை மன வேதனையை கொட்டி ஆறுதல் தேடி அழுவதற்கு மடி கிடைக்காததால், மூலையில் சென்று உட்கார்ந்து கால்களுக்கு இடையே முகத்தை புதைத்து, சத்தம் வெளியே கேட்காதவாறு அழுதாள். சிறிது நேரம் அழுது கண்களில் கண்ணீர் வத்திய நிலையில் தன்னை அறியாமல் தூங்கி விட்டாள்.

கோவில் வாசல், சௌந்தர்யா நின்று ஒருவரிடம் பூக்களை விற்று கொண்டிருக்க, அவளுக்கு பின்னே யாரோ ஒருத்தர் ‘பாரேன் நடத்தை கெட்டவ, வந்துட்டாலுக நல்லவளுக மாதிரி’ என்று இழிவாக பேச கேக்கிறாள். அப்போது ‘நீ எப்போ வந்த’ என்று யாரோ கேட்கும் குரல் ஒன்று எங்கிருந்தோ கேட்கிறது. அவளை தோல் தட்டி யாரோ அழைக்க தூக்கத்திலிருந்து சட்டென விளிக்கிறாள். அருகில் பாட்டி நிற்கிறார். அப்போது தான் அவளுக்கு தான் பார்த்தது, கேட்டது எல்லாம் கனவு என்று புரிகிறது.

கனவில் கண்டது நிஜத்தில் நடக்குமோ என்று யோசிக்கிறாள். பின் ‘இல்ல நாம தேவை இல்லாம பயப்படுறோம்’ என்று தனக்கு தானே சொல்லி கொண்டாள்.

‘ஒரு வேல நம்ம கடைக்கு போகும் போது யாராது அது போல பேசினா...

என்ன பண்ணுறது நாம...

லூசு மாதிரி யோசிக்க கூடாது, அங்க நடந்தது வேற யாருக்கு தெரியும்..

இருந்தாலும் வேற யாருக்காது தெரிஞ்சா...’

யோசனையில் மூழ்கி இருந்ததால் பாட்டி பேசியது எதுவும் அவள் கவனிக்கவில்லை. மறுபடியும் அவளை பாட்டி தோளில் தட்டுகிறார். அவள் நிமிர்ந்து பார்த்தவுடன்,

“என்ன ஏதாது கெட்ட கனவா..” அவள் புரியாதது போன்று விழிக்க, “என்ன பகல் கனவா... என்னடி ஒண்ணுமே புரியாத மாதிரி இருக்க.. என்னாச்சு..? எதுவும் பேய் கனவா..?” விடாமல் அவளை கேள்வியாய் குடைய அவளோ அப்போதும் அப்படியே இருக்கிறாள்.

“கனவுல நடக்குறது கனவுலே முடிஞ்சு போச்சு... அது நிஜத்துல நடக்காது. இன்னும் நீ என்ன குழந்தையா..?! பெரியவளாகிட்ட... கொஞ்சம் தைரியமா இரு.. போயும் போயு ஒரு கனவுக்கு பயந்து இப்டி இடிஞ்சு போய் உட்காந்து இருக்க... எழுந்திரி... போ போய் முகத்த கழுவு... எல்லாம் மறந்து போய்டும்.”

எதற்காக அப்படி இருக்கா என்று புரியாமல் பாட்டி சௌந்தர்யாவிற்கு ஆறுதல் கூறினார். அவளும் எழுந்து போய் முகம் கழுவி வந்து டீ போட்டு பாட்டிக்கு குடுத்து தானும் குடிக்கிறாள். ஆனால் அவளது மனதில் அந்த நிகழ்ச்சி இன்னமும் நிழலாடி கொண்டிருந்தது. இப்படி நமக்கு ஒரு அவமானம் வந்து விட்டதே, இனி நாம் அங்கு அவரை பார்க்க சென்றாலே எல்லாரும் அது போன்று பார்ப்பாங்க, அத எப்படி நாம மாத்த முடியும் என்று எண்ணி கொண்டே இருந்தாள்.

இரவு சாப்பாடு முடித்து விட்டு படுக்க சென்றவள், தூக்கம் வராமல் படுக்கையில் திரும்பி திரும்பி படுத்தாள். கொஞ்ச நேரம் புரண்டு புரண்டு படுத்தவள், பின் எழுந்து அமர்ந்து யோசித்தாள்.

‘அந்த ஆளுக்கு எவ்ளோ திமிரு இருந்தா எங்கள அப்படி சொல்லிருப்பான்..’ நினைக்கும் போதே கண்களில் இருந்து நீர் வந்தது. துடைத்து கொண்டே,

‘அங்க இருத்த எல்லாரும் என்னை எப்படி நினைச்சுருப்பாங்க..

இனி அவர பாக்க அங்க போகும் போது எல்லாரும் எப்படி நம்மள நினைப்பாங்களோ..

அச்சோ.. நம்மலே இப்டின்னா அங்க அவர எப்படி நடத்துறாங்களோ..

அவரு அங்க எல்லாரையும் எப்டி பார்த்துட்டு அமைதியா இருப்பாரோ..

நினைச்சாலே பயமா இருக்கே..”

கெளதமை நினைத்து வருந்தினால். பின்,

‘ம்ம்ம்... இதுக்கு நாளைக்கு போய் நாம வக்கீல் ஐயாவ பார்த்தா அவரு ஏதாது பண்ணுவாரு...

நாளைக்கு போய் அவர பாக்கணும் முதல, அவரு ஏதாவது பண்ணினா தான் நமக்கும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.

அவரு கிட்ட சொல்லி அந்த ஆள ஏதாது பண்ணியே ஆகணும்.’

ஒரு முடிவு எடுத்த பின் தான் அவளுக்கு நிம்மதியாக தூக்கம் வந்தது.

மறுநாள் வக்கீல் நடராஜரை பார்க்க சௌந்தர்யா வருகிறாள். அவள் வந்தவுடன் வக்கீல் அய்யா உள்ளே ஏதோ வேலை பார்த்து கொண்டிருக்கிறார் என்று அவளை உள்ளே விடவில்லை. மனது படபடத்தது. ஏதோ பாரத்தை ஏற்றி வைத்தது போல் மனம் கனமாக இருந்தது அவளுக்கு. நடராஜரிடம் என்ன சொல்ல வேண்டும் என தனக்கு தானே கேட்டு கொண்டாள். எல்லாத்தையும் சொல்லுவோமா.. இல்ல என்ன விஷயம் அப்டின்னு சொல்லுவோமா என்று தனக்குள் குழம்பினாள். அவள் முடிவு எடுக்கும் முன் அவளை உள்ளே கூப்பிட அவள் எழுந்து போகிறாள்.

“வாம்மா... என்ன பணத்த ரெடி பண்ணிட்டயா..? ம்ம்ம்... நான் கூட எங்க நீ பணம் குடுக்க லேட் ஆக்குவியோன்னு நினைச்சேன்...”

சௌந்தர்யாவிற்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை. அவள் ஒன்று நினைத்து வர அவர் வேறு ஒன்று கேக்கவும் அவள் அப்படியே நின்றால் ஒன்றும் பேசாமல்.

“என்னம்மா ஏன் இப்படி நிக்கிற... பணத்த குடு..”

“இல்ல அய்யா நான் பணம் குடுக்க வரல.. இன்னும் நான் பணம் ரெடி பண்ணல... நான் வேற ஒரு விஷயமா வந்தேன். அது வந்து”

அவள் பேசி கொண்டிருக்கும் போதே நடராஜர் முகம் மாறியது. எரிச்சலோடு,

“என்னது பணம் இன்னும் ரெடி பண்ணலையா...”

“அது வந்து சார்.. நான் ரெடி பண்ணிடுவேன். நான் இப்போ வேற ஒன்னு சொல்ல வந்தேன்...”

“ம்ம்... சொல்லும்மா...” எரிச்சலும் அலட்சியமும் சேர கூறினார்.

“சார், நான் கௌதம பார்க்க போனேன்... அப்போ அங்க இருந்த கான்ஸ்டபில் எங்கள தப்ப பேசினாரு...”

“ஏம்மா! போலீஸ்னா அப்டி தான் பேசுவாங்க சில நேரம்... அதெல்லாம் ஒரு விஷயமா... போம்மா...”

“இல்ல சார், அவரு எங்கள அடிக்க கூட வந்தாரு. அதுவும் இல்லாம நாங்க ஸ்டேஷன லாட்ஜ் ஆக்குரோம்ன்னு தப்பு தப்பா பேசுறாரு.. ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு. நீங்க தான் சார் ஏதாவது பண்ணனும்..”

“என்னம்மா என்னை என்ன பண்ண சொல்லுற.. நான் தான் உன்ன அன்னைக்கே அங்க போகாத அப்டின்னு சொன்னேன்ல...”

அவள் பதில் பேசவில்லை. நடராஜருக்கு அது மிகவும் கோபமாக இருந்தது.

“அதுவும் இல்லாம இது ஒன்னும் பெரிய விஷயமே இல்ல.. நீ போய் பணத்த ரெடி பண்ண பாரு..”

சௌந்தர்யாவிற்கு அதிர்ச்சியாகவும் கோபமாகவும் இருந்தது. நடராஜர் இப்படி பேசியது அவளுக்கு ஏமாற்றத்தை தந்தது. மேலும் அப்போது தான் அவளுக்கு தனக்கு பெரிய விஷயமாக தெரிவது மற்றவருக்கும் பெரிதாக தெரியும் என்று எதிர் பார்க்க கூடாது, அதிலும் நடராஜர் மிகவும் சுயநல வாதி என்பதும் புரிந்தது.

“நான் ரெடி பண்ணிட்டு வர்றேன் சார்... நான் கிளம்புறேன்.” என்று இறுகிய முகத்தோடு கூறி விட்டு வெளியே வந்தவள்,

“நான் நேத்து இருந்து சரியா தூங்கல, சாப்பிடல, என்னோட மானமே போயிருச்சுன்னு நினைச்சுட்டு இருந்தேன், இவரு என்னனா அது ஒண்ணுமே இல்லன்னு சொல்லுறாரு... அப்பா நல்ல உலகம் தான்..

இவருக்கு பணம் தான் ஒரே குறிக்கோள்... இவர போய் தேடி பிடிச்சு வக்கீலா வச்சுருக்கேன் பாரு...” என்று புலம்பி கொண்டே நடந்தாள்.

மாலை நேரம் கடன் வாங்க கந்து வட்டி கடன் குடுக்கும் பாலுவை பார்க்க செல்கிறாள். கந்து வட்டி பாலு பத்துக்கு மேல் அடி ஆட்கள் வைத்து கொடுக்கல் வாங்கல் நடத்தும் ரௌடி. பணம் விசத்தில் மட்டும் மிகவும் கெடுபிடியான ஆள் என்று எல்லாராலும் சொல்லப்படும் கெட்டவர். அவரது இந்த அடிதடி தொழில் ஒரு குடோனில் நடத்தப்படும் அங்கு தான் பல பேரின் வாழ்வு முடிந்திருக்கிறது. பலருக்கு வாழ்வும் தந்திருக்கிறது.

சௌந்தர்யா குடோனிற்கு வருகிறாள். அவள் உள்ளே நுழையும் போதே அங்கு யாரோ ‘காப்பாத்துங்க’ என்று கத்தும் சத்தம் கேட்கிறது. அவளுக்கு பயம் வந்தது, எச்சிலை விழுங்கினால், மெதுவாக அடி எடுத்து வைத்து உள்ளே சென்றாள். அங்கு ஒரு டேபிள் போட்டு ஒருவர் அமர்ந்திருந்தார். அருகில் சென்று கேட்கிறாள். பாக்கு போட்டு கொண்டே திரும்பாமல் உள்ளே கையை மட்டும் காட்டினார். அவர் காட்டிய பக்கம் சௌந்தர்யா செல்ல, அங்கு ஒரு வெட்ட பட்ட மர கட்டை மேல் அமர்ந்து பாலு யாருடனோ போனில் பேசி கொண்டிருக்கிறார்.

சௌந்தர்யா அருகில் சென்று அமைதியாக நின்றாள். நெற்றியில் இருந்து வேர்வை வலிவதும் அதை துடைப்பதுமாக நின்றிருந்தாள். அவளை கவனித்தும் பாலு போன் பேசுவதிலே இருந்தார். பேசி விட்டு போனை சைடு டேபிள் மேல் வைத்து விட்டு திரும்பி சௌந்தர்யாவை பார்த்து “யாருமா நீ..? என்ன வேணும்..?”

“நான்... நீலமேக பெருமாள் கோவில் தெருவுல பூக்கடை நடத்திட்டு வர்றேன் அய்யா... என் பேரு சௌந்தர்யா..” பயத்தில் மெதுவாக பேசுகிறாள்.

“ம்ம்ம்... எதுக்கு வந்துருக்க..? கடன் வாங்கவா..?”

“ஆமாங்க அய்யா... நான் கொஞ்சம் பணம் கேட்டு வந்தேன், நான் அத கரெக்டா கட்டிடுவேன். நீங்க எனக்கு உதவி பண்ணினா நல்ல இருக்கும்.”

பக்கத்தில் இருந்தவன் பாலு காதில் ஏதோ சொல்ல, அவரது முகத்தில் மாற்றம் தெரிந்தது.

“ஆமாம் நீ எதுக்காக பணம் கேட்டு வந்துருக்க..?”

“எனக்கு தெரிஞ்சவுங்களுக்கு உதவிக்கு பணம் வேணும் அதுக்கு தானய்யா பணம் கேட்டு வந்தேன்.”

“எனக்கு தெரியும்மா, நீ எதுக்கு பணம் கேட்டு வந்துருக்கன்னு.. என்னால உனக்கு பணம் குடுக்க முடியாது. நீ போ..”

பதற்றத்துடன், “ஏன் அப்படி சொல்லுறீங்க அய்யா..?! நான் பணத்த கண்டிப்பா கொடுத்துருவேன்...”

“அதுக்கு சொல்லலம்மா... நீ அந்த சிவசங்கர் கடைல ஒன்னுல தான உன் கடைய வச்சுருக்க..”

“ஆமாம் அய்யா..”
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
“தெரியும். அந்த சிவசங்கர் பையன் முருகன் கொன்ன அவன் பேரு என்ன...” பக்கத்தில் இருந்தவன் “கெளதம்” என்று சொல்ல,

“ம்ம்.. அவனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு தான இருக்க.. நாளைக்கு சிவசங்கர் உன்ன கடைய காலி பண்ண சொன்னா அப்பறம் எப்டி நீ காச கட்டுவ.. இதெல்லாம் வேலைக்கு ஆகாது, நீ கிளம்பு...”

“அய்யா, அய்யா... நான் எப்டி நாளும் கட்டிடுவேன் அய்யா.., நீங்க மனசு வச்ச நல்லா இருக்கும்... உதவி பண்ணுங்க அய்யா..”

“இல்லம்மா என்னால உதவி எல்லாம் பண்ண முடியாது..

அதுவும் இல்லாமா சிவசங்கர் எனக்கு தெரிஞ்சவர், எனக்கு சில நேரம் உதவி பண்ணிருக்காரு...

உனக்கு உதவி செய்தா அது எனக்கே தேவை இல்லாத பிரச்சினை போம்மா..”

“இல்லையா..”

“நீ மொதல சிவசங்கர் கிட்ட போய் சொல்லு... அவரு உனக்கு உதவி செய்ய ஒத்துக்கிட்டா நானும் ஒத்துக்கிறேன். சரியா... போம்மா..” என்று கூறிவிட்டு எழுந்து போனார், பாதி தூரம் சென்ற பின் திரும்பி, “கிளம்பு...”

அவள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றாள். வக்கீலிடம் என்ன சொல்ல எப்படி பணம் ரெடி பண்ணுவது என்று திணறி கொண்டு இருந்தாள்.

நாட்கள் சென்றன. அடுத்த கியரிங் வந்தது. நடராஜரை சீக்கிரமாக சென்று சந்தித்தாள் சௌந்தர்யா. நடராஜர் அவளிடம் பீஸ் கட்ட சொல்லி கேட்டார். அவள் ‘ஏற்பாடு பண்ணி இருக்கேன், ஈவுனிங்கா தந்துருவாங்க, நான் கொடுத்துடுறேன் சார்.. நீங்க கோர்ட்க்கு வந்து அவர எப்டியாது வெளில எடுங்க சார்..’

நடராஜார் பணம் ஈவுனிங் வந்துரும் என்ற பின் கிளம்பி கோர்ட் சென்றார். அங்கு அவர்கள் வருவதற்கு முன்னே போலீஸ் வந்து விட்டனர். கேஸ் ஸ்டார்ட் செய்வதற்கு சிறிது நேரம் தான் உள்ளது என்று சொன்னதால், கெளதமை உள்ளே அழைத்து சென்று விட்டனர். சௌந்தர்யா அன்றைக்கு பின் ஸ்டேஷன் செல்லவேயில்லை. இன்று கெளதமை பார்க்க ஆவலாக இருந்தாள். அங்கு வேறு ஒரு கேஸ் நடந்து கொண்டிருந்ததாள், அவளால் உள்ளே செல்ல முடிய வில்லை. கண்களும் மனதும் கௌதமே நிறைந்து இருந்தான் சௌந்தர்யாவிற்கு.

சிறிது நேரத்தில் கெளதமின் கேஸ் வந்தது. எல்லாரும் உள்ளே சென்றனர். கெளதமை கூண்டில் ஏறி நிற்க வைத்தார் கான்ஸ்டபில். சைமனும் அங்கு வந்திருந்தான். ஆனால் முருகனின் சித்தப்பா சிவசங்கர் அங்கு இல்லை. கேஸ் விசாரணை ஆரம்பமானது.

அரசு வக்கீல் எழுந்து விசாரணையை தொடங்கினார். கேஸ் பற்றிய விவரத்தையும் லாஸ்ட் கேஸ் விசாரணையை பற்றியும் கூறி தொடங்கினார். முதலில் கெளதமை விசாரித்தார் வக்கீல்.

“சொல்லுங்க கெளதம் நீங்க எதுக்கு கொலை பண்ணுனீங்க..?”

“சார்.. நான் கொலை பண்ணல...”

“அன்னைக்கு முருகன் உங்கள எதுக்கு பார்க்க வந்தான்..? அன்னைக்கு என்ன பேசுனீங்க..?”

“சார், அன்னைக்கு முருகன் என்னை பார்க்க வந்த அப்போ வருத்த பட்டு பேசினான், அப்பறம் நான் போறேன் அப்டின்னு சொல்லிட்டு போனான்.. நான் அவன தொடர்ந்து போனேன், அவன் எங்க போனான்னு தெரியல.. அதுனால நான் திரும்பி வந்துட்டேன்... அவ்ளோ தான் சார் நடந்துச்சு.”

“இப்போ கூட நீங்க அன்னைக்கு என்ன பேசுனீங்கன்னு உண்மைய சொல்ல மாட்டுற... ஏன்..? ஏன்னா நீ தான் கொலை பண்ணிருக்க, அவன் என்ன சொன்னான்னு அதுக்கு தான் சொல்ல மாட்டுற..”

“அது வந்து அவன் என்கிட்டே எனக்குன்னு யாரும்மே இல்ல அப்பறம் நான் ஏன் இருக்கணும் அப்டின்னு சொன்னான். அதுக்கு தான் அவன் பின்னாடியே போனேன் ஆனா அவன அங்க காணோம்.”

“நீங்க ஏதோ சண்ட போட்டுட்டு இருந்ததா சாட்சி சொல்லுறாங்க... ஆனா நீ அவன் தற்கொலை தான் பண்ணிக்க போறதா சொல்லிட்டு போனதா சொல்லுற.. இத ஏன் போன விசாரணையிலே சொல்லல...

இப்போ தான் உனக்கு தோணுச்சா எப்டி சொல்லி தப்பிக்கலாம்ன்னு..”

“இல்ல சார்.. இது தான் உண்மை.”

“ம்ம்ம்.. ஓகே...” என்று கூறி நீதிபதியிடம் திரும்பினார்.

“சார்... நான் சாட்சி சைமன விசாரிக்கணும்.”

“ஓகே... பட் சிவசங்கர மோதல விசாரிப்போம்..” என்று நீதிபதி கூற,

“சாரி சார்... இன்னும் அவரு வரல...”

“என்ன சார்.. என்ன நினைச்சுட்டு இருக்கீங்க... விசாரணைன்னா வர வேண்டாமா..?

அதுவும் அவரு தான் அது முருகன்னு கன்பார்ம் பண்ணிருக்காரு... அவர விசாரிச்சுட்டு தான் அடுத்து விசாரிக்க முடியும்... இந்த விசாரணைய அடுத்து வேற டேட்க்கு மாத்தி”

அவர் பேசி கொண்டிருக்கும் போதே சிவசங்கர் கோர்ட்டுக்குள் வந்துவிட, அவரை பார்த்த வக்கீல், “சாரி சார்.. ஒரு நிமிஷம், இப்போ சிவசங்கர் வந்துட்டாரு. அவர விசாரிக்கலாம்.”

“வந்துட்டாரா... ஓகே.” என்று கூறி திரும்ப, அவரது பேர் சொல்லி அழைக்க படுகிறது. சிவசங்கர் சாட்சி கூண்டில் வந்து நிற்கிறார். அரசு வக்கீல் சென்று விசாரிக்கிறார்.

“சொல்லுங்க சார்... அன்னைக்கு என்ன நடந்தது...?”

“என் பொண்ண இந்த கெளதமோட ப்ரெண்ட் சந்தோஷ் கூட்டிட்டு ஓடி போயிட்டான் அன்னைக்கு மோதல் நாள் ராத்திரில...

நான் அவுங்கள தேடி போக இருந்தேன். அப்போ தான் முருகன் வீட்டுக்கு வந்தான். அவன் கிட்ட இத பத்தி சொன்னேன். அவன் உடனே நான் கௌதம பாத்துட்டு வர்றேன்னு சொல்லிட்டு போனான். நானும் என் பொண்ண தேடி போயிட்டேன்.

நான் அங்க இங்கன்னு தேடிட்டு இருந்ததால நான் முருகன எங்கன்னு பாக்கல... அப்பறம் மறுநாள் வரைக்கும் முருகனும் வீட்டுக்கு வரல... அதுநாள நான் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணேன்.

அப்பறம் காலைல பத்து மணிக்கு அப்பறம் போலீஸ் கால் பண்ணி டெட் பாடி ஒன்னுக்கு அடையாளம் பாக்க வர சொன்னாங்க..

நான் போய் பார்க்கும் போது அது முருகன் தான்னு தெரிஞ்சது...”

“அது எப்டி முருகன்னு தெளிவா சொல்லுறீங்க..?”

“முருகன் இடது கையில அவனோட பெயர பச்சை குத்திருப்பான். அத வச்சு தான் அடையாளம் பண்ணுனேன். அந்த டெட் பாடி கைளையும் அதே போல பச்சை குத்திருந்துச்சு...”

கெளதம் முகம் மாறியது. இதுவரை தைரியமாக இருந்த அவனது முகம் சோகமானது. கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

நடராஜர் எழுந்து, “சார்.. நான் சிவசங்கர விசாரிக்கணும்..”

“ம்ம்ம்...” நீதிபதி உத்தரவு தரவும், சிவசங்கர் அருகில் வந்து விசாரிக்கிறார்.

“அதெப்படி அது உங்க மகன் முருகன் தான்னு உறுதியா சொல்ல முடியும்.. ஏன் இந்த ஊருல முருகன்னு யாருமே இருக்க மாட்டாங்களா... இல்ல யாருமே அது போல பச்சை குத்த மாட்டாங்களா...?”

சிவசங்கர் பதில் சொல்லும் முன் அரசு வக்கீல் பேசுகிறார்.

“சார் இந்த ஊருல முருகன்னு யாருனாலும் இருக்கலாம். ஆனா முருகன் தான காணோம்... அவன அந்த இடத்துல கெளதமோட வைத்து பார்த்தாதா சாட்சி எல்லாரும் சொல்லுறாங்க... இன்னுமும் நீங்க ஒத்துக்க மாட்டுறீங்க...?!” அரசு வக்கீல் நடராஜரை நக்கல் செய்ய, நடராஜருக்கு கோபம் வந்தது.

“அப்போ அது முருகன் தான்னு நீங்க கன்பார்ம் பண்றீங்க, இல்லையா..?” என்று நீதிபதி கேட்க,

“ஆமாம் சார்..” என்று தெளிவாக சிவசங்கர் சொல்லவும், நீதிபதி குறித்து வைக்கிறார். பின் கெளதமிடம் திரும்பி,

“நீ என்ன சொல்லுறப்பா... நீ முருகன கொன்னத ஒத்துக்கிறியா..?”

“ஆமாம் சார்... நான் தான் காரணம்... என்னால தான் முருகன் இறந்தான்..”

சௌந்தர்யா, நடராஜர் எல்லாரும் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.

அரசு வக்கீல் உடனே “அவனே ஒத்துகிட்டான் சார்.. அவனுக்கு நீங்க தூக்கு தண்டணைய கொடுத்துருங்க சார்...”

நீதிபதி “ம்ம்ம்...” என்று எழுத ஆரம்பித்தார்.

தொடரும்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top