Maranathin Marmam - 7

MithraPrasath

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
அத்தியாயம் 7

கௌதமை வெளியே கொண்டு வந்து விடலாம் என்று நடராஜர் கூறியவுடன் மிகவும் மகிழ்ச்சியுடன் கோர்ட்டிற்கு கிளம்பினால் சௌந்தர்யா. அப்படி என்ன தான் ஆதாரம் கிடைச்சிருக்கும் என்று அவளுக்குள் கேள்வியும் எழும்பியது. ஆனால் அதை நடராஜரிடம் கேட்க நினைத்த மறுநிமிடமே அவள் ‘அத கொஞ்ச நேரத்துல தான் தெரிஞ்சுக்க போறோமே அப்பறம் எதுக்கு, நாம கெளதம் வெளில வந்த உடனே என்ன பண்ணனும் அப்டின்னு தான் யோசிக்கணும்...’ மனதில் நினைத்து கொண்டிருந்தாள். சந்தோஷத்தில் கற்பனை கனவில் மிதந்து கொண்டிருந்தாள்.

கோர்ட் வந்த உடன் கெளதமை தேடினாள். கான்ஸ்டபில் முத்து வெளியே நிற்பதை பார்த்த பின் வேகமாக அவனை தேடினால், அவனை உள்ளே அழைத்து கொண்டு சென்று கொண்டிருந்தனர். அவனிடம் பேச வாய்ப்பு கிடைக்க வில்லை. அவனுக்கு இன்று தாம் வெளியே வந்து விடுவோம் என்று தெரியாமலே இருக்கட்டும், அவருக்கு அப்போ தான் அது நடக்கும் போது இன்ப அதிர்ச்சியா இருக்கும்.

நடராஜரை பார்த்த பலரும் ‘எதுக்கு உடம்பு சரி இல்லாதப்போ வந்தீங்க..?’ என்று கேட்டு கொண்டிருந்தனர். அவரோ எல்லாவற்றையும் கேட்டு விட்டு சிரித்தே மழுப்பினார், எவருக்கும் பதில் தரவில்லை. முருகன் கொலை கேஸ் ஸ்டார்ட் ஆனது. எல்லாரும் வந்தனர். நடராஜரை பார்த்த அரசு வக்கீல் அதிர்ச்சி ஆனார். தனது அருகில் இருந்த மற்றொரு வக்கீலிடம்,

“என்னையா... நீ ஏதோ நடராஜருக்கு உடம்பு சரி இல்லைன்னு சொன்ன... ஆனா அவரு வந்து நிக்கிறாரு..?!” என்று காதுக்குள் குசு குசு என்று பேசினார்.

“எனக்கு தெரிஞ்சு அவரு நேத்து தான் ஹாஸ்பிட்டல இருந்து வீட்டுக்கு வந்துருக்காறரு... அதான் நான் அவரு வர மாட்டாருன்னு சொன்னேன்...”

அரசு வக்கீல் நடராஜரை பார்த்து, “என்ன சார்... நீங்க எதுக்கு வந்தீங்க..? உங்களுக்கு தான் உடம்பு சரி இல்லையே...”

நடராஜர் பதில் பேசாமல் சிரிக்கவே செய்தார். அரசு வக்கீல் விடாமல்,

“கேஸ் முக்கியம் தான்.. அதுக்காக இப்டி உடம்பு சரி இல்லாதப்போ கூட வந்து கேஸ் நடத்தனுமா...? என்ன சார்...?!”

“எனக்கு உடம்பு சரி இல்ல தான்... இருந்தாலும் நான் கேஸ முடிக்காம இதுல இருந்து விலக மாட்டேன்...”

நடராஜரது பதில் அரசு வக்கிலுக்கு கோபத்தை தந்தது, ‘எதிர் கட்சி வக்கீலாக இருந்தாலும் இப்படி அக்கறையோடு நலம் விசாரித்தால் இப்டி சிடு சிடுன்னு பேசுறாரு... இவரு என்ன ஆளோ’ என்று நினைத்து எரிச்சல் பட்டார். நீதிபதி வருவதை பார்த்ததும் எல்லாரும் எழுந்து நிற்கின்றனர். நீதிபதி அமர்ந்ததும் எல்லாரும் அமர்கின்றனர். நீதிபதியும் நடராஜரை பார்த்ததும் அதிர்ச்சியானார். பின் அவரும் எல்லோரை போலும்,

“என்ன நடராஜர் உடம்பு சரி ஆகிடுச்சா...? நேத்து தான் ஹாஸ்பிட்டல இருந்து வந்தீங்கன்னு கேள்வி பட்டேன்...?!” என்று அக்கறையோடு கேக்க,

“எனக்கு இப்போ ஓகே சார்... பரவா இல்லை...” என்று நடராஜர் பதில் கூறினார், இருந்தும் அவருக்கு அங்கு நிற்பதே ஏதோ போல் இருந்தது. களைப்பு அவரது முகத்தில் தெளிவாக தெரிந்தது. நிற்க முடியாமல் சிறிது நேரத்திற்கு ஒரு முறை பெரு மூச்சு விட்டு கொண்டு ஷேரில் அமர்வதும் எழுவதும் என்று அன்கம்பர்ட்டாக உணர்ந்தார்.

“ஓகே பாத்துக்கோங்க...” என்று கூறிவிட்டு கேசை தொடங்க சொல்லுகிறார். கேஸ் ஸ்டார்ட் ஆனதும் அரசு வக்கீல் எழுந்து லாஸ்ட் கேஸ் விசாரணை பற்றி கூறி தொடங்கினார். அப்போது நீதிபதி,

“சந்தோஷ கண்டு பிடிச்சுட்டீங்களா..? இன்ஸ்பெக்டர கூப்பிடுங்க விசாரிக்க..” என்று சொல்லவும், இன்ஸ்பெக்டர் முரளி வந்து கூண்டில் ஏறி நிற்கிறார். அரசு வக்கீல் அவரிடம் கேள்வி கேட்கிறார்.

“என்ன முரளி நீங்க சந்தோஷ் எங்க இருக்கான்னு கண்டு பிடிச்சாச்சா..?”

“இல்ல சார்... நாங்க நியரஸ்ட் டிஸ்ட்ரிக்ல எல்லாத்துலயும் தேடிட்டு இருக்கோம்... இன்னும் எந்த ஒரு இன்பர்மேசனும் கிடைக்கல... அதுவும் இல்லாம நாங்க அவனோட காலேஜ் ப்ரெண்ட்ஸ் எல்லாரையும் விசாரிச்சுருக்கோம்... எந்த இம்ப்ருவுமென்ட்டும் இல்ல...”

“எந்த முன்னேற்றமும் இல்ல அப்டினா என்ன சொல்ல வர்றீங்க...? எந்த வகையிலையும் தகவல் கிடைக்கலயா..? சந்தோஷ் பேமிலி கிட்ட விசாரிச்சீங்களா..? அவுங்க வந்துருக்காங்களா..?”

“நாங்க சந்தோஷ் பேமிலி கிட்டயும் விசாரிச்சோம்... அவுங்க வீட்டு போன் நம்பர்க்கு வர்ற கால் ட்ரேஸ் பண்ணோம்... அப்டியும் எதுவும் கிடைக்கல... அவனோட ப்ரெண்ட்ஸ்க்கும் எந்த தகவலும் தெரியல...

எப்டியும் அவனுக்கு பணம் தேவை படும், அதுனால ஏடிம் யூஸ் பண்ணுவான்னு செக் பண்ணினோம்... அவன் ஓடி போன அன்னைக்கு இங்க பஸ் ஸ்டாண்ட்ல வச்சு பணம் எடுத்ததுக்கு அப்பறம் எங்கயும் அவன் யூஸ் பண்ணவும் இல்ல, எந்த ட்ரான்ஸாக்சனும் பண்ணல...”

நீதிபதி, “நீங்க நைட் நம்ம ஊருல ஏடிம் யூஸ் பண்ணதா சொன்னீங்க... அப்போ என்ன டைம்..?”

“சார் அப்போ டைம் ரெண்டரை இருக்கும்...” என்று இன்ஸ்பெக்டர் தயங்கி யோசித்து கொண்டே சொல்ல,

“கரெக்டான டைம் தெரியாதா அப்போ...” எரிச்சலோடு முகம் சுருங்கியது. பின், “கேஸ்க்கு இது இம்பார்டென்ட் அப்டின்னு தெரியாதா... போலீஸ் ஆபீசர்க்கு அதெல்லாம் தெரிஞ்சுருக்கனும்... என்ன நீங்க வேலை பாக்குறீங்க..?”

இன்ஸ்பெக்டர் பதில் பேசாததால் எரிச்சலுடன் மீண்டும் கேள்வி கேக்கிறார் நீதிபதி.

“அட்லீஸ்ட் அவன் எந்த பஸ் ஏறினான்னு செக் பண்ணுணீங்களா..?”

“சார்... அவன் பஸ் ஸ்டாண்ட்ல இருந்து ஊருக்குள போற பஸ்ல தான் ஏறி போனான்.”

“அப்போ ஊருக்குள்ள நல்லா தேடி பாத்தீங்களா..?”

“எஸ் சார்... அவன் இங்க இல்லை. அதுவும் இல்லாம அவன் 3 மணிக்கு மேல ஊருக்கு வெளில போய் மதுரைக்கு பஸ் ஏறி போயிருக்கான். மதுரைல தேடிட்டு தான் சார் இருக்கோம்...”

நீதிபதி எதோ குறித்து வைத்து கொண்டு இருக்கவும் அரசு வக்கீல்

“ம்ம்ம்... ஓகே நீங்க போங்க...” என்று இன்ஸ்பெக்டரை போக சொல்லுகிறார்.

நடராஜர் அமர்ந்தே இருக்கிறார், எழுந்து எதுவும் விசாரிக்க வில்லை. அவர் முகம் வாடி இருந்தது. நடராஜரை பார்த்த சௌந்தர்யா விற்கு கோபம் வந்தது. ‘நாம வேற ஒருத்தர கூட வர சொல்லி நடத்த சொன்னோம், அவரு அப்டி கூட பண்ணாம இப்டி உடம்பு சரி இல்லாதப்ப வந்து இப்போ கஷ்ட பட்டுட்டு, நம்மளையும் கஷ்ட படுத்துறாரு. ஏதோ ஆதாரம் கிடைச்சுருக்குன்னு சொன்னாரு, அதையும் சொல்ல மாட்டுறாரு...’ என்று மனதில் திட்டி, வருந்தி கொண்டிருந்தாள்.

அரசு வக்கீல் நீதிபதியிடம் சந்தோஷ் பேமிலிய விசாரிக்கணும் என்று சொல்ல, நீதிபதி வேண்டாம் தேவை இல்லை என்று மறுத்து விடுகிறார். பின் சைமனை விசாரிக்க வேண்டும் என்று கூறுகிறார். பர்மிசன் கொடுக்கவும், சைமனை அழைக்க அவன் கூண்டில் வந்து ஏறுகிறான். இன்று வரை சைமன் கௌதமை நேராக பார்க்கவில்லை. அது கெளதமுக்கு சந்தேகத்தை கொஞ்சமும் ஏற்படுத்த வில்லை. இன்றும் அவனை நம்பி கொண்டிருந்தான், அவன் ஒரு முறையாவது நம்மை பார்ப்பான் என்று. ஆனால் சைமனோ கெளதமை நிமிர்ந்தே பாராமல் மற்றவர்களை பார்த்தே பேசினான்.

“சைமன் நீங்க அன்னைக்கு கௌதம் முருகன் பொணத்த ரோட்டுல எறிஞ்சத பார்த்தா சொன்னீங்க... அப்போ வேற யாரெல்லாம் இருந்தாங்க...”

“இல்ல சார்... அன்னைக்கு அங்க வேற யாரும் இல்லை...”

“வேற ஏதாவது வண்டி இருந்துச்சா..?”

“வண்டி எதுவும் நான் பார்க்கல சார்...”

“சரி வண்டி எதுவுமே இல்ல.., அப்போ நீங்க கிட்ட போய் பாத்தீங்களா முருகன..?”

“இல்ல சார்...”

“ஏன் நீங்க போய் பார்க்கல..?”

“எனக்கு அப்போ போய் பார்க்க தோனல சார்... அதுவும் கெளதம் முருகன எதுக்கு இப்டி தூக்கி போடுறான்னு தெரியலையே அப்டின்னு குழம்பி இருந்தேன், அதுனால நான் அப்டியே திரும்பி போயிட்டேன்.”

நடராஜர் உடனே எழுந்து வந்து, “அதெப்புடி நீங்க கெளதம் தான் தூக்கி எறிஞ்சான்னு சொல்லுறீங்க..? நீங்க தூக்கி போடும் போது முகத்தை பாத்தீங்களா..?”

“இல்ல சார்... ரோட்டுக்கு அந்த பக்கம் மரத்துக்கு பக்கத்துல வெளிச்சம் இல்ல அதுனால முகம் தெரியல, அதுவும் நானும் இந்த பக்கம் செடிக்கு பின்னாடி நின்னு பார்த்ததாள தெளிவா தெரியல.. நான் கிட்ட போய் பாக்க போனப்போ அங்க கெளதம் தான் சார் உட்காந்து இருந்தான். அதுவும் அங்க வேற யாருமே இல்ல சார்...”
 

MithraPrasath

SM Exclusive
Author
SM Exclusive Author
#2
“சரி நீங்க பாக்காம அங்க வேற யாராது நின்னுட்டு இருந்துருக்கலாம்ல..?!”

“எனக்கு தெரியல சார்..”

அரசு வக்கீல் இடையே வந்து, “சாட்சிய குழப்பாதீங்க சார்...” என்று சொல்லவும், நடராஜர் கோபமாக “நான் குழப்ப பார்க்கல... உண்மைய வெளி கொண்டு வர பாக்குறேன்...” என்று கூறி மறுபடியும் கேள்வி கேக்க சைமன் பக்கம் திரும்பிய அடுத்த நொடி அவருக்கு தலை சுற்றுவது போல் உணர, கையை தலை மேல் வைத்து கண்களை மூடினார். அதை பார்த்ததும் அரசு வக்கீல் அருகில் சென்று “என்னாச்சு சார்...” என்றார்.

பதில் பேச முடியாமல் அவருக்கு மேலும் தலை சுற்றி அவர் கீழே விழ, சுற்றி இருந்த அனைவரும் அதிர்ச்சியில் வேகமாக வந்து அவரை பிடித்து ஷேரில் அமர வைத்தனர். நீதிபதி டாக்டரை வரவழைத்தார். அவர் பார்த்து விட்டு உடனடியாக ஹாஸ்பிட்டலில் சேர்க்க வேண்டும் என்று கூறி அவரை வெளியே அழைத்து சென்றார். பின் ஆம்புலன்ஸ் வரவழைக்கபட்டு நடராஜர் ஹாஸ்பிட்டல் கொண்டு செல்ல பட்டார்.

கோர்ட் சிறிது நேரம் கலைக்க பட்டது. அப்போது கெளதமை சௌந்தர்யா பார்க்க சென்றாள். அவன் மிகவும் பதற்றத்தோடு இருந்தது. அவளிடம் கெளதம்,

“என்னாச்சு நம்ம வக்கீல் சார்க்கு..? எல்லாரும் உடம்பு சரி இல்லைன்னு சொல்லுறாங்க, அதுவும் அவர் இப்போ மயங்கி விழுந்துட்டாறு... எனக்கு ஒண்ணுமே புரியல.. என்னன்னு உனக்கு ஏதாவது தெரியுமா...?”

“ஆமாம்... நம்ம அய்யாக்கு ஏதோ லோ பிபியாம், ஏற்கனவே அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துருக்காம்... அதுனால இன்னைக்கு அவர வர வேண்டாம்ன்னு கூட சொன்னேன்... ஆனா அவர் தான் எனக்கு நல்ல இருக்கு நான் வர்றேன்னு சொன்னாரு... இப்போ இப்டி...”என்று சோகமாக வருத்த பட்டு பேச,

“அச்சோ அவருக்கு என்ன ஆச்சோ..? நமக்காக வந்து இப்டி ஆச்சே... எனக்கு ரொம்ப கஷ்டம் இருக்கு... நீ அவர போய் பாரு... என்னன்னு வந்து எனக்கு சொல்லு..”

“சரிங்க.. நானே போய் இன்னைக்கு பாக்கணும்... அவருக்கு எதுவும் ஆக கூடாதுன்னு கடவுள் கிட்ட வேண்டிட்டு போய் பாக்கணும்...”

“அதுவும் சரி தான்...”

“அப்பறம் அவரு ஏதோ இன்னைக்கு உங்கள வெளில கொண்டு வந்துடலாம்ன்னு சொன்னாரு... ஏதோ ஆதாரம் கிடைச்சுருக்கு... அப்டின்னும் சொன்னாரு... ஆனா அவருக்கு இப்டி நடந்த்ருச்சு... அதுனால அது என்னன்னே தெரியாம போச்சு...” அவர் பேசுவது புரியாமல் கெளதம் விழித்தான்.

“என்ன சொல்லுற..? என்ன ஆதாரம்..?”

“எனக்கு தெரியல... இப்டி நடக்கும்ன்னு தெரிஞ்சு இருந்தா நான் அப்போவே கேட்டுருப்பேன்...”

இருவரும் குழப்பமும் கவலையுமாக பேசி கொண்டிருந்தனர். அப்போது கான்ஸ்டபில் முத்து வருகிறார். அவரை பார்த்ததும் சௌந்தர்யாவின் முகம் மாறியது. தலை குனித்து கொண்டு கெளதமின் மறைவில் நின்றாள். கெளதம் அதை கவனிக்க வில்லை. முத்து தூரத்தில் இருந்தவாறே அவனை அழைக்க, அவன் திரும்பி பார்த்தான்.

“ஏய்..! கேஸ் ஸ்டார்ட் ஆக போகுது... வர்றியா, இல்ல...” என்று கேக்கவும், கெளதம் “வர்றேன் சார்...” என்று கூறிவிட்டு, சௌந்தர்யாவை பார்க்கிறான். அவளது முகம் பதற்றத்தோடு நிமிர்ந்து கூட பார்க்காமல் பயந்து போய் நிற்கவும் அவனுக்கு புரியவில்லை. கெளதம் அவளை தலை நிமிர்த்தி என்ன என்று கண்ணசைவில் கேட்டான். அதற்குள் மறுபடியும் முத்து அழைக்கவும், சௌந்தர்யா பதற்றத்தோடு, “நீங்க போங்க... அப்பறம் அவர் வேற மாதிரி பேச போறாரு...” என்று முத்துவை பார்த்து பயந்து போய் சொல்லவும், இவனுக்கு அதிர்ச்சியாகவும் கவலையாகவும் இருந்தது. கெளதம் சௌந்தர்யாவின் கைகளை இறுக பற்றினான். அவள் நிமிர்ந்து அவனை பார்க்கவும், “பயப்படாத... உலகம் என்னைக்கும் நமக்காக மாறாது... நாம நமக்காக தான் வாழனும்...” என்று கூறி விட்டு சென்று விட்டான். அவளுக்கு அவன் கூறியது புரியவில்லை. பின் கோர்ட்க்குல் செல்கிறாள். விசாரணை ஸ்டார்ட் ஆகிறது.

அரசு வக்கீல் வந்து கெளதமை விசாரிக்கிறார்.

“நீங்க அன்னைக்கு முருகன கொலை பண்ணி ரோட்டுல போட்டீங்களா..?”

“இல்ல சார்... நான் போடல, எனக்கு சவுண்ட் கேட்டுச்சுன்னு தான் பாக்க போனேன்.. அங்க ரோட்டுல இருந்தது யாருன்னு தான் நான் பக்கத்துல போய் பார்த்தேன்... அங்க யாருக்கோ ஆக்சிடென்ட் ஆகிருந்தது... அப்பறம் நான் வந்துட்டேன்... அவ்ளோ தான் சார் நடந்துச்சு...”

“சரி... அப்போ ஏன் நீங்க அங்க ஒரு ஆக்சிடென்ட் நடந்துருக்குன்னு போலீஸ்க்கு தகவல் சொல்லல...?”

“சார்... அதுவந்து நான் முருகன காணோம்ன்னு பதற்றத்தோடு இருந்தேன்... அதுனால நான் அத பத்தி யோசிக்கவே இல்ல..”

“இல்ல சார்... இவர் பொய் சொல்லுரார்... அன்னைக்கு இவர் முருகன கொலை பண்ணி தூக்கி போட்டுருக்கார்... அப்பறம் கன்பார்ம் பண்ண கிட்ட போய் பாத்துருக்கார்... முகம் நசுங்கி அடையாளம் பண்ண முடியாதுன்னு தெரிஞ்ச பின்னாடி சந்தேகம் வர கூடாதுன்னு வீட்டுக்கு போயிருக்கார். இது தான் நடந்துருக்கு..”

“இல்ல சார்... நான் கொலை பண்ணல...” கெளதம் சத்தமாக பதறி கொண்டு கூறவும்,

நீதிபதி அவனிடம், “அப்பறம் நீ எதுக்கு முருகன ரோட்டுல தூக்கி எரிஞ்ச..? அதுக்கு ஆதாரம் இருக்குறப்போ ஏன் நீ மறுபடியும் மறுபடியும் பொய் சொல்லுற..?”

“நான் பொய் சொல்லல சார்... நிஜமாவே நான் எதுவுமே பண்ணல...” என்று சோகத்தோடும் ஏமாற்றத்தோடும் கூறவும்,

“நீ பண்ணலைனா அப்போ வேற யாருக்கும் உதவியா இருந்தியா..?” என்று நீதிபதி கேக்கிறார்.

“இல்ல சார்... நான் எதுவும் பண்ணல, பண்ணல...”

அரசு வக்கீல் உடனே, “சார்... இவன் ஒரு சைக்கோ... ஒரு நேரம் கொலை பண்ணேன்னு சொல்லுறான்... ஒரு நேரம் பண்ணலைன்னு சொல்லுறான்... நாம எல்லாரையும் முட்டாள ஆக்க பாக்குறான் சார்...”

கெளதமை அரசு வக்கீல் முட்டாள் என்று கூறியது அவனுக்கு தாங்க முடியவில்லை. அவனது கண்களில் இருந்து கண்ணீர் வர தொடங்கியது. அதை பார்த்து மீண்டும் அரசு வக்கீல் அவனை,

“பாருங்க சார்... நாம ஏதாது சொல்லிட்டா இப்டி அழுது நடிப்பான்...”

நீதிபதியும் கெளதம் அழுவதை பார்த்து எரிச்சல் பட்டார். பின் ஏதோ எழுதி வைத்தார். அதை பார்த்து அரசு வக்கீல் ஆனந்த மாகினார். கெளதம் மேல் இன்னும் அதிக பழிகளை சுமத்தினார்.

“இந்த கெளதம் ஒரு சைக்கோ தான் சார் நிஜமாவே... இவன் ஏற்கனவே ஒரு கொலை பண்ணிருக்கான்... அதுக்காக இவன் மேல கேஸ் பைல் ஆகிருக்கு... அதுக்கான புல் டீடைல்ஸ் இதுல இருக்கு சார்...” என்றுகூறி எதோ பைல் ஒன்றை காண்பிக்கிறார். அதை வாங்கி நீதிபதியிடம் தரவும், அவர் அதை பார்க்கிறார்.

கெளதம் அதிர்ச்சியில் நின்றான். சௌந்தர்யாவுக்கும் எதுவும் புரிய வில்லை. கெளதம் நல்லவன் என்று அவள் நினைத்து இருந்தாள். இன்று வக்கீல் அவன் ஏற்கனவே ஒரு கொலை பண்ணிருக்கான் என்று கூறி அதற்கு ஆதாரத்தையும் குடுக்கிறாரே என்று அவளுக்கு குழப்பமாக இருந்தது. அரசு வக்கீல் கெளதம் மேல் பழி போடுவதற்காக இப்டி பொய் கூறுகிறாரா..? என்று சந்தேகமும் பட்டாள். ஆனா அவரு இப்டி ஒரு பைல் வேற குடுக்குறாரு அப்டினா எப்டி..?! என்று எண்ணி மேலும் மேலும் குழம்பி கொண்டிருக்கிறாள்.

நீதிபதி பார்த்து விட்டு நிமிர்ந்தார். அரசு வக்கீல் பேசுகிறார்.

“இந்த கெளதம் தன்னோட சின்ன வயசுலே அம்மாவை இழந்துருக்காறு... அப்பறம் தன்னோட அப்பா கூட முருகனோட தாத்தா கிட்ட வேலை பாத்துருக்காங்க... அப்போ கொஞ்ச நாள்ல அவுங்க அப்பாவும், முருகனோட அப்பாவும், அப்பறம் வக்கீல் வேதராஜ் அவுங்க எல்லாரும் வெளியூர் போயிட்டு வரும் போது கார் ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க...

அதுக்கு அப்பறம் தான் கெளதம் முருகன், சைமன், சந்தோஷ் எல்லாரும் ப்ரெண்ட்ஸ் ஆகிருக்காங்க...

இறந்து போன வக்கீல் வேதராஜ் அவர்களுக்கு இரண்டு மகன்கள். ஒருவன் பேரு தேவ், இன்னொருத்தன் மாதவ். அவுங்களும் இவுங்க கூட நண்பர்களா இருந்துருக்காங்க...

ஒரு நாள் எல்லாரும் விளையாடும் போது மாதவ் கெளதம் கிட்ட, உன்னோட அப்பா சரியா வண்டி ஓட்டாததால தான் எங்க அப்பா இறந்து போயிட்டாரு, அப்டின்னு சொல்லி சண்ட போட்டுருக்கான்...

அத கேட்ட கெளதமும் அவன அடிச்சு ரத்தம் வர்ற அளவுக்கு காய படுத்திருக்கான்...

மாதவ் சொன்னத மனசுல வச்சுக்கிட்டு, மறுநாள் விளையாடும் போது, அவனுக்கு பிக்ஸ் வரும் போது அவனுக்கு வாயில தண்ணி ஊத்தி மூச்சு விட முடியாம செஞ்சு அவன கொன்னுருக்கான்...
 

MithraPrasath

SM Exclusive
Author
SM Exclusive Author
#3
கெளதம் சிறு வயதுலே மாதவ் தன்னோட நண்பன்னு கூட பார்க்காம இப்டி சாதரணமா கொலை பண்ணவன்...

அது போல இப்போ முருகன் தன்னை தப்பு சொல்லுறான்னு தாங்க முடியாம முருகனையும் கொலை பண்ணிருக்கான் சார்...

பாக்குறதுக்கு அப்பாவி மாதிரி இருந்தாலும் தன்னை ஒருத்தர் தப்பா பேசுறத தாங்க முடியாம கொலை பண்ணும் சைக்கோ சார் இவன்...”

அரசு வக்கீல் கூறியதை கேட்டு அதிர்ச்சியில் அப்டியே நின்று விட்டான். தான் ஒரு சைக்கோ என்று ஒருவர் கூறுவதை கேட்டு யாருக்கா இருந்தாலும் கஷ்டமாக இருக்கும். அதிலும் கெளதம் மிகவும் எமோசனல் டைப் என்பதால் அவன் பிரம்மை பிடித்தது போல் ஆகி விட்டான். எங்கோ பார்த்து கொண்டு அப்டியே நின்றிருந்தான். அவனை பார்த்து சௌந்தர்யா பயந்தாள். அடி மேல் அடி விழுந்து கொண்டே இருக்கிறதே என்று கவலை பட்டால், கடவுள் மேல் கோப பட்டாள். நாங்க நல்லா இருக்குறது அந்த கடவுளுக்கே பிடிக்கல போல, அதான் இப்டியெல்லாம் நடக்குது என்று எண்ணி அழுதாள்.

கெளதம் பற்றி அந்த வக்கீல் கூறுவது உண்மையா இல்லை பொய்யா என்று குழம்பினாள். நாம அவரோட பழகினது கொஞ்ச வருஷம் தான்... ஆனா அவரு பழகுறதா வச்சே யாரா இருந்தாலும் அவரு நல்லவர்ன்னு தான் சொல்லுவாங்க... சொல்லுறது என்ன அவரு நல்லவர் தான். இந்த வக்கீல் தேவை இல்லாம அவரு மேல பழி போடுறாரு. கடவுள் நல்லவருக்கு கஷ்டம் குடுத்தாலும் கடைசில கை விட மாட்டாருன்னு தான் நம்பிட்டு இருக்கேன். ஒரு வேல நீயே கடவுளே அவர கைவிட்டுடா நான் உன்ன எப்போவுமே கும்பிட மாட்டேன் என்று அவள் நினைத்து கொண்டிருக்கும் போதே, நீதிபதி

“ஆனா இந்த கெளதம்க்கு எந்த ஒரு தண்டனையும் கிடைக்கல... அதுவும் இல்லாம கேஸ் வித்ட்ரா பண்ணிருகாங்க... கேஸ் அவன் மேல எதுவும் இல்லையே...” கூறவும் அரசு வக்கீல் தடுமாறி கொண்டே,

“அது வந்து சார்... இல்ல நான் எதுக்கு அத சொன்னேன்னா...” பேச தெரியாமல் இழுக்கவும்,

“நீங்க தேவை இல்லாம கோர்ட் டைம் வேஸ்ட் பண்ணுறீங்க...”

“இல்ல சார்... நான் அவன் சைக்கோ அப்டின்னு சொல்ல தான் அத சொன்னேன். அதுவும் இல்லாம அந்த கேசுல அவன் சின்ன பையன்னு பாவம் பாத்து விட்டுட்டாங்க... மற்றபடி அது எல்லாம் உண்மை தான் சார்...”

“உண்மைலே அது கொலையா..? இல்ல ஆக்சிடென்ட் டெத்தான்னு யாருக்கு தெரியும்..? கேஸ் நடக்கலையே... அதுவும் இல்லாம வேதராஜ் பேமிலி யாராது வந்துருக்காங்களா..?”

“இல்ல சார் யாரும் வரல... நான் அடுத்த கியரிங்க்கு வர சொல்லுறேன்...”

“சரி அது இருக்கட்டும், அதுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே...”

“இருக்கு சார்... அவன் ஒரு சைக்கோ அப்டிங்குறதுக்காக தான் நான் இந்த கேச சொன்னேன். அப்பறம் இன்னும் சில பேர விசாரிக்கணும்...”

“யார..?”

“கான்ஸ்டபில் முத்து சார்...”

“ம்ம்ம்... விசாரிங்க..” நீதிபதி அனுமதி குடுக்கவும் முத்து வந்து கூண்டில் ஏறி நிற்கிறார்.

“சொல்லுங்க முத்து, கெளதம் ஸ்டேஷன்ல எப்டி நடந்துப்பாறு..?”

“சார்... கெளதம் ஸ்டேஷன்லயும் இப்டி தான் இருப்பான்... சில நேரம் நல்லா இருப்பான்... சில நேரம் சோகமா இருப்பான்.. சில நேரம் அழுவான்... ஒரு முறை அவன நான் உனக்கு எல்லாம் எதுக்கு மரியாத நான் குடுக்கணும் அப்டின்னு நான் சொல்லவும், அவனுக்கு ரொம்ப கோபம் வந்தது. நான் உங்கள அப்பறம் என்ன பண்ணுவேன்னு தெரியாது அப்டின்னு மிரட்டுவான் சார்...”

“ம்ம்ம்... கேளுங்க சார் அவரு என்ன சொன்னாருன்னு... அவன் ஒரு சைக்கோன்னு அவர் சொல்லுறதுல இருந்து நமக்கு நல்லாவே தெரியுது...

இந்த மாதிரியான சைக்கோவ தூக்குல போடணும் சார்...”

“ஒரு சில நாள் பேசினத வச்சோ, இல்ல அவரோட இந்த கேச வச்சோ அவர சைக்கோன்னு சொல்ல முடியாது...

உங்க கிட்ட மெடிக்கல் ரிப்போர்ட் இருக்கா..?” நீதிபதி கேட்கவும்

“இல்ல சார்...” என்று சோகத்தோடு அவரது முயற்சி வீண் என புரிந்து சொன்னார்.

“நீங்க இந்த கேஸ்க்கு வேற ஏதாவது முக்கியமான எவிடன்ஸ் வச்சுருக்கீங்களா..?”

“சைமன் மட்டும் தான் சார் சாட்சி... வேற எவிடன்ஸ் இல்ல சார்...”

“இந்த கேஸ்க்கு முக்கியமான சாட்சி சைமன் தான்... இருந்தாலும் இன்னும் வேணும் ஆதாரம்...

அப்பறம் சந்தோஷ்க்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இருக்கான்னு தெரியனும்...

சோ! இன்ஸ்பெக்டர்... நீங்க நெக்ஸ்ட் கியரிங்க்குல சந்தோஷ், காதம்பரிய கண்டு பிடிக்கணும்...

அடுத்து கியரிங் விசாரணைக்கு வேதராஜ் பேமிலி மெம்பெர்ஸ் வரணும்...

அடுத்த விசாரனைய பத்து நாட்களுக்கு ஒத்திவைக்கிறேன்...”

கேஸ் முடிந்து அனைவரும் வெளியே வருகின்றனர். சௌந்தர்யா கெளதமை நோக்கி வேகமாக செல்கிறாள், ஆனால் இன்ஸ்பெக்டர் அவனை வண்டியில் ஏற்றி கொண்டு கிளம்பி விட்டார். சௌந்தர்யாவிற்கு கெளதமை பார்த்து ஆறுதல் கூற வேண்டும் என்று இருந்தது, ஆனால் அது நடக்க வில்லை. கெளதமை ஜெயிலில் ஒப்படைத்து விட்டனர். அங்கு சென்ற பின் அவனுக்கு நாம் எப்படியும் கேசில் இருந்து விடுபட்டு விடலாம் என்று இருந்த கொஞ்ச நம்பிக்கையும் போய்விட்டது.

சௌந்தர்யா அங்கிருந்து கிளம்பி நடராஜரை பார்த்த பின் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தாள். அது போல் அவள் ஹாஸ்பிட்டலுக்கு செல்கிறாள். அங்கு நடராஜரை ஐசியுவில் வைத்திருந்தனர். மிகவும் சீரியஸ் கண்டிஷன் என்று டாக்டர் சொல்லி கொண்டிருந்தனர். அங்கிருத்த அவரது குடும்பத்தினருக்கு அவளை பார்த்ததும் கோபம் அதிகமாக வந்தது. இருந்தாலும் அது ஹாஸ்பிட்டல் என்று எண்ணி அமைதியாக இருந்தனர். அதுமட்டும் இன்றி நடராஜர் மீதும் தவறு உள்ளது என்பதாலும் அமைதியாக இருந்தனர். வெகு நேரம் அங்கேயே இருந்தாள், ஆனால் நடராஜர் உடல் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்பதால் அவள் வீட்டிற்கு கிளம்பி விட்டாள்.

வீட்டிற்கு சென்றவள் யோசனையில் மூழ்கி இருந்தாள். இன்று கோர்ட்டில் சொன்னது அத்தனையும் உண்மையா இல்லை அவருக்கு தண்டனை வாங்கி தர வேண்டும் என்பதற்காக சொல்ல பட்ட பொய்யா என்று யோசித்து கொண்டே இருந்தாள். எந்த ஒரு செயலிலும் அவளது கவனம் இல்லை. பாட்டி அதை கவனித்து விட்டு “கெளதம் ஜெயிலுக்கு போனாலும் போனான்.. அத நினைச்சு உன்னை நீயே கெடுத்துட்டு இருக்க.. இப்டியே இருந்தா உன் வாழ்க்கை மொத்தமா போய்டும்... மறந்துடு அவன...” அவளை கடிந்தாள். அவளுக்கு அது எதுவும் கேட்கவும் இல்லை, அப்படி கேட்டாலும் அதை அவள் ஏற்று கொண்டு கெளதமை விட்டு விலக போவதும் இல்லை. ஆனாலும் பாட்டி தன்னுடைய பேத்தி என்றாவது ஒரு நாள் நாம் சொல்வதை கேட்பாள் என்ற நம்பிக்கையில் விடாமல் சொல்லி கொண்டே இருந்தாள்.

அவள் மறுநாளும் நடராஜரை பார்க்க ஹாஸ்பிட்டலுக்கு சென்றாள். அடுத்த நாள், அடுத்த நாள் என்று எல்லா நாட்களும் சென்று பார்த்தால், இருந்தும் நடராஜரது உடல் நிலையில் மாற்றம் இல்லை. நடராஜர் இல்லாமல் எப்படி கெளதமை வெளியே கொண்டு வருவது என்று எண்ணினால், அவள் நம்பிக்கையை கைவிட வில்லை. அவளுக்கு ஒரு யோசனை பிறந்தது.

கந்துவட்டி பாலுவை பார்க்க சென்றாள். அவர் அவளை பார்த்ததும் பணம் தர முடியாது, அவளுக்கு என்று ஏற்பாடு செய்த பணத்தை வேற ஒரு நபருக்கு கொடுத்து விட்டதாக கூறி அவளை அனுப்பினார். அவளுக்கு நன்றாக தெரியும் பாலுவுக்கு இந்த பணம் ரெடி பண்ணுவது என்பது சாதரணமான ஒன்று. இருந்த போதிலும் அவர் கூறும் காரணம் தன்னை சாமளிக்கவும் பணம் தராமல் ஏமாற்றவும் கூறிய பொய் என்று புரிந்தது.

அவள் நம்பிக்கையோடு இருந்தாள். வேறு ஒருவரிடம் சென்று பணம் வாங்க முயற்சி செய்தால், எல்லாம் தோல்வியில் முடிந்தது. பின் வேறு ஒரு வக்கீலை பார்க்க சென்றாள். அவர் அனைவருக்கும் ப்ரீயாக கேஸ் நடத்தி தருவதாக ஊரில் சிலர் கூற கேட்டு பார்க்க சென்றாள். அவரும் ஒருவருக்கு கேஸ் நடத்தி தர சென்னை சென்று உள்ளார். அவர் எப்போது வருவார் என்பதும் தெரியாத ஒன்றாக இருந்தது. நடப்பவை எல்லாம் ஏதோ தடங்கலாக உணர்ந்தாள்.

மறுநாள் சௌந்தர்யாவை பார்க்க சுந்தரி வருகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு மறுபடியும் ஒரு நல்ல செய்தி. நடராஜர் ஐசியு ல இருந்து நார்மல் வார்டுக்கு மாற்ற பட்டதாக சொல்லுகிறார். அது மட்டும் இல்லாமல் நடராஜர் சௌந்தர்யாவை பார்க்க வர சொன்னதாகவும் கூறுகிறார்.

சௌந்தர்யாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. நம்பிக்கை மறுபடியும் அதிகரித்தது. அவர் நமக்கு கேஸ் நடத்தி தருவாரா என்ற சந்தேகமும் எழுந்தது. இருந்தாலும் கடவுள் இதற்கு மேலும் நம்மை சோதிக்க மாட்டார் என்று நம்பி அவரை பார்க்க சென்றாள்.

ஹாஸ்பிட்டல் சென்றதும் நடராஜரை டாக்டர் செக் பண்ணுவதாக கூறி அவளை வெளியே நிற்க சொல்லுகிறார் அவரது மனைவி. டாக்டர் சென்ற பின் சௌந்தர்யாவும், நடராஜரின் மனைவியும் உள்ளே செல்கின்றனர். நடராஜரை பார்த்து சௌந்தர்யா நலம் விசாரிக்கிறாள்.

நடராஜருக்கு எழுந்து அமர கூட ஒருவரது உதவி தேவை பட்டது. அதை பார்த்ததும் சௌந்தர்யாவிற்கு கொஞ்சம் கவலையாக இருந்தது, அவருடைய இந்த நிலைக்கு நாமும் காரணம் என்று. நடராஜர் பேசுவது கூட மெதுவாக, அருகில் சென்று கேட்டால் மட்டுமே கேட்கும் அளவுக்கு இருந்தது.

நடராஜர் சௌந்தர்யாவை அருகில் அழைத்தார். அவள் அருகில் சென்று அவரிடம் மீண்டும் “உடம்புக்கு இப்போ எப்டி இருக்கு அய்யா..?” என்று கேக்கவும், அவர் “பரவா இல்ல..” என்று கூறி விட்டு அவரது மனைவி பக்கம் திரும்பி ஏதோ கையசைத்தார். அதை புரிந்து கொண்டு அவரது மனைவி சைடு டேபிளில் இருந்து ஒரு கவர் எடுக்கிறார். அதை நடராஜரிடம் குடுக்கிறார். அதை வாங்கியவர் சௌந்தர்யாவை பார்த்து,

“இத வாங்கிக்கோ... நான் உன் கேஸ் விசாரனைய நடத்துறதுக்கு வேற ஒருத்தர ஏற்பாடு பண்ணிருக்கேன். இத அவர் கிட்ட போய் குடு...

அப்பறம் அவரே மற்றத பாத்துப்பாரு...

இந்தா...” என்று கூறி அந்த கவரை சௌந்தர்யாவிடம் கொடுக்கிறார். அதை வாங்கி கொண்டு சந்தோசமாக அவள் அவரிடம்

“ரொம்ப நன்றி ஐயா... உங்களுக்கு கோர்ட்ல வச்சு அப்டி ஆகவும், உங்கள இப்டி ஒரு நிலைமைக்கு கொண்டு வந்துட்டேனே அப்டின்னு நான் ரொம்ப கவலை பட்டுட்டு இருந்தேன்... உங்களுக்கு இப்போ பரவா இல்லைன்னு தெரிஞ்ச பிறகு தான் கொஞ்சம் நிம்மதியா இருக்குயா...

ஆனாலும் நீங்க இந்த நேரத்துலயும் இப்டி எங்களுக்காக யோசிக்குறத பார்க்கும் போது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு... உங்களுக்கு அந்த கடவுள் துணை இருந்து நல்லபடியா குணமாக்குவாரு... நீங்க நல்ல இருப்பீங்க அய்யா.. உங்களோட இந்த உதவிக்கு ரொம்ப நன்றி அய்யா..” உணர்ச்சிவச பட்டு அவள் பேச, அதை கேட்டு நடராஜரின் மனைவி கண்கள் கலங்கியது.

“இன்னும் ரெண்டு நாள்ல கேஸ் விசாரணை வர போகுதுல... அதான் இத வேற ஒரு வக்கீல் கிட்ட அனுப்பி வச்சுருக்கேன்... இல்லைனா நானே வருவேன்...

நான் இதுவரைக்கும் எந்த கேசையும் பாதில விட்டுட்டு வந்தது இல்ல... எனக்கு அது பிடிக்காது...

சரி அத விடு... நீ இத அந்த வக்கீல் கிட்ட போய் கொடுத்தாலே அவர் ஹெல்ப் பண்ணுவாரு... நான் அவர் கிட்ட ஏற்கனவே பேசிட்டேன்...

நீ கிளம்பு...”

“சரி அய்யா... நீங்க உடம்ப பார்த்துகோங்க... நான் வர்றேன்...”

அங்கிருந்து கிளம்பி நேராக நடராஜர் கூறிய அந்த வக்கீலை பார்க்க செல்கிறாள். அவர் சௌந்தர்யா கொடுத்த கவரை வாங்கி படித்துவிட்டு, “நான் இந்த கேஸ எடுத்துக்குறேன்...” என்று கூறவும் நிம்மதி சந்தோசம் எல்லாம் வந்தது. பின் அவரிடம் சௌந்தர்யா,

“அய்யா... நான் ஒன்னு சொல்லணும்...”

“சொல்லும்மா..”

“நடராஜர் அய்யா அன்னைக்கு கோர்ட் போகும் போது கௌதம வெளில எடுக்க ஆதாரம் கிடைச்சுருக்கு அப்டின்னு சொன்னாரு...”

“ம்ம்ம்... சொன்னாரு என் கிட்டயும்...”

ஆவலாக, “அது என்ன ஆதாரம் அய்யா..?”

“அத அவர் சொல்லல.... டீட்டைல்ஸ் அனுப்புறேன் நீ பாரு புரியும் அப்டின்னு தான் சொன்னாரு... நான் இன்னும் பார்க்கல...

இனி தான் பாக்கணும்... நான் படிச்சுட்டு சொல்லுறேன்மா..”
 

MithraPrasath

SM Exclusive
Author
SM Exclusive Author
#4
ஏமாற்றத்தோடு, “சரி அய்யா... அப்போ நான் கிளம்புறேன் அய்யா..” என்று கூறிவிட்டு கிளம்பி விட்டாள்.

சந்தோசமான விசயத்தை கெளதமிடம் சொல்ல வேண்டும் என்று சௌந்தர்யாவுக்கு ஆசையாக இருந்தது. ஆனால் அவனை சென்று பார்க்க முடியாது. நாளை மறுநாள் நாம் எப்படியும் கெளதமை பார்த்து விடலாம் என்று தன்னையே சமாதான படுத்தி கொண்டாள். நாட்கள் வேகமாக சென்றன. பத்து நாட்களும் கடந்தன. கேஸ் விசாரனைக்காக கோர்ட்க்கு செல்ல புறப்பட்டாள்.

அவள் நேராக வக்கீலை பார்க்க சென்றாள். ஆனால் அவர் அதற்க்கு முன்னரே கோர்ட்க்கு கிளம்பிவிட்டார் என்று தெரிய வந்து வேகமாக செல்கிறாள். கோர்ட் சென்ற பின்னர் அங்கு அவர் வெளியே எங்கயும் இல்லை. கெளதம் வந்து விட்டானா என்று பார்த்தால் அவனையும் காணோம் என்று எண்ணி வருந்தினாள். கேஸ் ஸ்டார்ட் ஆகிருக்குமோ என்று பதறி வேகமாக உள்ளே சென்று பார்த்தாள். அங்கே வேறு ஒரு கேஸ் நடந்து கொண்டிருந்தது.

யோசனையோடு வெளியே வருகிறாள். அங்கு கெளதம் நிற்கிறான். அவனை பார்த்ததும் சந்தோசமாக அவனருகில் செல்கிறாள். அவனது கண்கள் கலங்கி இருந்தது. அவனிடம் அன்று கேஸ் முடிந்த பிறகு பேச முடியவில்லை. அதுவும் அவனை அன்று அரசு வக்கீல் சைக்கோ என்று கூறி ஒரு கதையையும் கூறினார். அதை கேட்ட பிறகு அவனுக்கு எவ்வளவு மன கஷ்டங்கள் வந்ததோ, அதனால் அவன் மிகுந்த துயரம் அடைந்து இருப்பான். அவனை சமாதான படுத்த கூட முடியவில்லை. மேலும் அரசு வக்கீல் கூறியது எல்லாம் உண்மையா..? இல்லை பொய்யா..? என்று கேட்காததால் குழம்பியும் கொண்டிருந்தாள்.

இன்று அவனது முகம் சோர்ந்து கலங்கி இருந்தது. ‘அவருக்கு அன்று ஆறுதல் கூறி இருந்தால் ஓரளவுக்கு அவர் மனசங்கடத்தை குறைத்து இருக்கலாம். அவரும் எவ்வளவு பழியை தான் ஏற்பார், மனசு வலிக்க தானே செய்யும். அவரது நண்பர்கள் அவருக்கே துரோகம் செய்ததை அவர் வெளியே சொல்லி அழ வில்லை என்றாலும் மனதில் குமுறி கொண்டு தான் இருப்பார். ஆனால் அவரை எதிரியாய் நினைக்கும் அந்த ஆள் யார் என்று தெரியல.’ மனதில் அவளும் வருந்தி கொண்டு இருந்தாள். ஆனால் கெளதம் தான் கஷ்டங்களை அனுபவிக்கிறான், அவனுக்கு மனம் எந்த அளவுக்கு பாடு படும் என்பது வரையறுக்க முடியாத நிலைமை.

அவனுக்கு அருகில் சென்று பேசுகிறாள்.

“ஏங்க.. நீங்க ஏன் இவ்ளோ கவலைல இருக்கீங்க..? தெரிஞ்சே இப்டி எல்லாம் கேட்குறது தப்பா இருக்கலாம்...

ஆனா உங்களுக்கு வாதாட வக்கீல் இருக்கார்... எப்டியும் இன்னைக்கு நீங்க வெளில வந்துருவீங்க..

நீங்க கவலை பட வேண்டிய அவசிய மில்லை..”

“என்ன சொல்லுற...? நடராஜர் சார் வந்துட்டாரா..? உடம்பு சரி ஆகிடுச்சா..?”

“இல்லங்க... நடராஜர் அய்யா வரல... வேற ஒரு வக்கீல் ஐயா சொன்னாரு, அவரு தான் வந்துருக்காரு...”

“ஓ... சரி நம்ம வக்கீல் சார்க்கு எப்டி இருக்கு...?” அவனது சங்கடங்களே அவனுக்கு தலைக்கு மேல் இருக்கிறது, இந்த நிலைமையிலும் மற்றவரை பற்றி எண்ணுகிறான். தன்னால் ஒருவர்க்கு இப்படி என்று எண்ணி விசாரிக்கிறான்.

“ம்ம்ம்... இப்போ பரவா இல்ல... இன்னும் ஹாஸ்பிட்டல்ல தான் இருக்காரு... ஆனா நார்மல் வார்டுக்கு மாத்திட்டாங்க...”

“ம்ம்ம்... இப்போ தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு... அவருக்கு எப்டி இருக்கோன்னு நினைச்சு ஒரே கவலையாவே இருந்துச்சு...”

தனக்கு கவலை என்றாலும் மற்றவரது நலத்தை பற்றி எண்ணுகிறார், இவருக்கு இப்படி ஒரு கஷ்டம் என்று எண்ணினாள்.

“நீங்க அத பத்தி கவலை படாதீங்க... அப்பறம் அன்னைக்கு பேசவே முடியல, அந்த வக்கீல் என்னன்னம்மோ பேசுறாரு...

பலி போடணும் அப்டின்னு நல்ல கதையா சொல்லுறாரு... அது போய்யுன்னு நல்லாவே தெரியுது..

அதுவும் இல்லாம அது போய்ன்னு நீதிபதி அய்யாக்கே தெரிஞ்சுருக்கு, அதான் அவரு அத கேக்கவே இல்ல...

நல்லாவே பொய் பேசுறாரு அந்த வக்கீல்... நீங்க அதுக்கு எல்லாம் வருத்தபடாதீங்க... பொய் என்னைக்கு ஜெயிக்காது...”

“நீ பொய்ன்னு நினைக்குறது உண்மை...

நான் தான் அந்த மாதவ கொன்னேன்...”

தொடரும்...
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top